Archive for the ‘மணியம்மை’ Category

சிலை உடைத்த நாத்திகர்களுக்கு சிலை வைக்கும் கலாச்சாரத்தை உண்டாக்கிய திராவிடத்துவம்! ஸ்டாலின் – அண்ணாசாலையில் கருணாநிதி சிலை நிச்சயம் அமைக்கப்படும் (2)

செப்ரெம்பர் 2, 2021

சிலை உடைத்த நாத்திகர்களுக்கு சிலை வைக்கும் கலாச்சாரத்தை உண்டாக்கிய திராவிடத்துவம்! ஸ்டாலின்அண்ணாசாலையில் கருணாநிதி சிலை நிச்சயம் அமைக்கப்படும் (2)

ஸ்டாலின்அண்ணாசாலையில் கருணாநிதி சிலை நிச்சயம் அமைக்கப்படும்: அப்போது எழுந்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அண்மையில் திராவிடர் கழகத் தலைவர் கி வீரமணி தன்னை சந்தித்த போது இந்த கோரிக்கை தொடர்பாக தன்னிடம் வலியுறுத்துயதாக தெரிவித்தார்[1]. பெரியார் கட்டளையிட்டு திராவிடர் கழகம் வைத்த சிலையை மீண்டும் நிறுவ வேண்டுமென கி.வீரமணி கோரிக்கை வைத்ததையும் முதலமைச்சர் சுட்டிக்காட்டினார்[2]. பொதுவான இடங்களில் போக்குவரத்திற்கு இடையூறாக சிலை வைக்க கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதை தான் சுட்டிக் காட்டியதாக கூறிய முதல்வர், ஏற்கனவே நீதிமன்றத்தில் அனுமதி பெற்றுத்தான் சிலை வைக்கப்பட்டதாகவும் எனவே மீண்டும் அந்த இடத்தில் சிலை நிறுவ எந்த பிரச்சினையும் இல்லை என கி.வீரமணி கூறியதாகவும் முதல்வர் தெரிவித்தார்[3]. அண்ணா சாலையில் பெரியார், அண்ணா, எம்ஜிஆர் ஆகியோருக்கு சிலைகள் இருப்பதை போன்று கருணாநிதி சிலையை அதே இடத்தில் நிறுவ வேண்டுமென கி.வீரமணி மீண்டும் தன்னிடம் வலியுறுத்தியதாக கூறிய முதலமைச்சர், இது தொடர்பாக சட்ட வல்லுநர்களுடன் கலந்தாலோசித்து, அண்ணாசாலையில் கருணாநிதி சிலை நிச்சயம் அமைக்கப்படும் என கூறினார்[4].

மேற்காணும் பேச்சுகளில் உள்ள போலித் தனம், உண்மையற்ற நிலைகளுக்கு விளக்கம்:

  1. பலர் கருணாநிதியிடம், அவ்வாறு சிலை வைக்க வேண்டாம், நல்லதல்ல என்று அறிவுரை கூறினர்.
  2. ஒருநிலையில், குன்றக்குடியும் எடுத்துக் காட்டினார், ஒப்புக் கொள்ளவில்லை, ஆனால், சிலை திறப்பு விழாவில், அவரையே உபயோகப் படுத்திக் கொண்டனர்.
  3. வீரமணி பிடிவாதமாக இருந்தார். எல்லா வாதங்களையும் எதிர்க்க வேண்டுமானால், சிலை வைத்தே ஆகவேண்டும் என்று உசுப்பினார்.
  4. மவுண்ட் ரோடில் பெரியார், அண்ணா என்று சிலைகள் வரிசையாக இருக்கும் போது, அடுத்தது, கருணாநிதி சிலை இருக்க வேண்டும், என்று பகுத்தறிவுடன் எடுத்துக் காட்டினார்.
  5. கருணாநிதியின் எம்ஜிஆரின் மீதான வன்மப் பேச்சுகள் தான், அவரது ரசிகர்கள், தொண்டர்கள், முதலியோரை எதிர்மறை விளைவுக்குத் தள்ளியது.
  6. கருணாநிதியின் இத்தகைய செயல்களால் தான், 31-01-1976ல் ஜனாதிபதியா ஆட்சி நீக்க செய்யப் பட்டு, 31-01-1976 முதல் 30-06-1977 வரை ஜனாதிபதி ஆட்சி நடந்தது.
  7. 30-06-1977 அன்று எம்ஜிஅர் ஆட்சிக்கு வந்தார். நடந்த தேர்தலில் கருணாநிதி-திமுக படுதோல்வி அடைந்தது.
  8. 24-12-1987 அன்று எம்ஜிஆர் இறந்தாலும், 12-05-1996 வரை திமுக ஆட்சி நடந்தது.
  9. அதாவது, 17-02-1980 முதல் 13-05-1996 வரை, கருணாநிதி ஆட்சியில் இல்லை. 16 ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சியில்லாமல் தான் இருந்தார். இவரது “பெரியார் விக்கிரகம்,” பெரியார் அருள், ஆசீர்வாதம், மகிமை முதலியவை வேலை செய்யவில்லை.
  10. அதை அவர், “அஞ்ஞான வாசம்” என்றாலும், அ. கணேசன் போன்ற ஜோதிடர்கள் உண்மையினை சொல்வர். இவர் நடத்திய பரிகார ஹோமங்கள், பூஜைகள் அவர் வீட்டிலிருப்பவர்களுக்குத் தெரியும்.

2018 – பெரியார் இருந்திருந்தால் ஏன் சிலை வைக்கிறீர்கள் எனக் கேட்டிருப்பார்கமல் ஹஸன்: தமிழகத்தில் பெரியார் வாழ்ந்த காலத்தில் அவரின் சிந்தனை, கருத்துக்களுக்கு எதிராக இருந்தவர்களின் செயல்பாடுகள் இன்றும் தொடர்கிறது என்று சொல்வதில்லை தவறொன்றும் இல்லை. சிலை வழிபாடுகளுக்கு எதிராக பேசிய பெரியாருக்கு எதற்காக சிலைகள் என்ற கேள்விகள் எப்பொழுதும் முன்வைக்கப்படும். அதற்கான பதிலை பெரியாரே அவர் வாழ்ந்த காலத்தில் கூறி விட்டு சென்றுள்ளார். என்றெல்லாம், பெரியாரிஸ்டுகள் வாதம் செய்து வருகிறார்கள். 2018-ல் பெரியார் சிலை உடைப்பு பற்றி பாஜகவின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா கருத்து தெரிவித்த போது தமிழகத்தில் அவருக்கு எதிராக கண்டனங்கள் எழுந்தன. அந்நேரத்தில், நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரான கமல்ஹாசன் “சிலைகள் வைப்பதில் வித்தியாசமான கருத்துடையவன் நான். ஆனால், அதை  உடைப்பது கேவலமான செயல். பெரியார் இருந்திருந்தால் ஏன் சிலை வைக்கிறீர்கள் எனக் கேட்டிருப்பார்,” என ஈரோட்டில் பேசி இருந்தார். இது திராவிடத்துவவாதிகளின் முகத்திரைகளைக் கிழித்து விட்டது. இதனால், மறுபடியும், அதற்கு விளக்கம் கொடுத்தனர்.

விடுதலை ஆதாரம் என்று பழையக் கதையை சொன்னது: 29-07-1944 அன்று கடலூரில் பெரியாரின் மீது ஒன்றை செருப்பு வீசப்பட்ட சம்பவம் நிகழ்ந்தது. தன் மீது விழுந்த ஒற்றை செருப்பு தனக்கும் பயன்படாது, வீசியவருக்கும் பயன்பாடாது என்பதால் அதன் மற்றொரு ஜோடி செருப்பையும் பெற்றுக் கொண்டார் பெரியார் என்ற தகவல் விடுதலை நாளிலில் இடம்பெற்று இருக்கிறது. இதற்கு பின், அதே இடத்தில் 28 ஆண்டுகளுக்கு பிறகு திமுக ஆட்சியைக் கைப்பற்றிய பிறகு 1972-ல்  கருணாநிதி ஆட்சியில் கடலூர் மக்களால் பெரியாருக்கு சிலை திறக்கப்படுகிறது. கருணாநிதி திறந்து வைத்த சிலை திறப்பு நிகழ்சிக்கு முன்னிலை வகித்தார் ஈ.வெ.ரா.பெரியார். சிலைகள் வைப்பதற்கு பெரியாரே எதிர்ப்பார் என கமல்ஹாசன் கூறியது தவறான தகவல். சிலைகள் வைப்பதற்கு பெரியார் எதிர்ப்பு தெரிவித்து இருக்கமாட்டார். அதேபோன்று, ஏன் உயிருடன் இருந்தவர் தனக்கு தானே சிலை வைத்துக் கொண்டார் என சிலரும் கேள்வி கேட்பதுண்டு. ஏ.ஆர். வெங்கடாசலபதி போன்ற சரித்திராசிரியர்களும், இதைப் பற்றியெல்லாம் ஆராய்ச்சி செய்வதில்லை. கருணாந்தம், எங்கேயாவது உட்கார்ந்து, தூங்கிக் கொண்டிருப்பார். சுப.வீரப் பாண்டியனும் கண்டுகொள்ளமட்டார். விடுதலை ராஜேந்திரன், கொளத்தூர் மணி பற்றி சொல்லவேண்டிய அவசியம் இல்லை.

உயிரோடு இருப்பவர்களுக்கு சிலை வைக்கலாம் என்று நியாயப் படுத்தி வாதித்தது: பெரியார் தனக்கு தானே சிலை வைத்துக் கொள்ளவில்லை. சிலைகள் மக்கள் மத்தியில் பகுத்தறிவு சிந்தனையை பிரச்சாரமாக மாற்றுவதாக இருக்க வேண்டும் என்பதே பெரியாரின் நோக்கம். சிலை என்பது வழிபாட்டுக்குரியது அல்ல. பயன்பாட்டுக்கு உரியது என்று கூறியுள்ளார். சிலைகளே பகுத்தறிவு பிரச்சாரத்தை செய்யும் என அவர் நினைத்தார். “பிற்காலத்தில் ராமசாமினு ஒருத்தன் இருந்தான். அவன் பகுத்தறிவு பிரச்சாரம் பண்ணிக்கிட்டு இருந்தானு பேசுவாங்க. அதுக்காக தான் இந்த சிலை,” என பெரியார் சிலை திறப்பு நிகழ்ச்சியில் பேசியதாக மின்னம்பலம் செய்தியில் வெளியாகி இருக்கிறது. விடுதலை நாளிதழில், உயிருடன் இருப்பவருக்கு சிலை வைப்பது தவறில்லை என்றே வெளிப்படுத்தி உள்ளனர். சென்னை சர்வகலாசாலை வைஸ் சான்ஸ்லர் டாக்டர் லட்சுமணசாமி, ஓய்வு பெற்ற சென்னை பிரதம நீதிபதி டாக்டர் ராஜாமன்னார், கர்மவீரர் காமராஜர் என பலருக்கும் உயிருடன் இருக்கும் போதே சிலை வைக்கப்பட்டது என விடுதலை நாளிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது. பெரியார் தன் பிறந்தநாள், சிலை திறப்பு, படத்திறப்பு போன்றவற்றை இயக்கத்தின் பிரச்சார கருவியாக பயன்படுத்தினார். அண்ணாவிற்கும் அவர் வாழ்ந்த காலத்தில் படத்திறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்று உள்ளன என்கிறார்கள் இயக்கத்தை சேர்ந்தவர்கள்.

திகதிமுகவினரின் சமீபத்தைய சரித்திர உரிமை கோரிக்கைகள் சரிபார்க்கவேண்டும்: மேற்காணும் வாதங்கள், அவ்வாதங்களுக்கான ஆதாரங்கள், அவர்களுடைது தான். விடுதலையில் வந்த-வரும் செய்திகளை சரிபார்க்க, வேறொரு ஆவணம் அல்லது மூலத்தை வைத்து பரிசோதிக்க முயற்சிகளை செய்வது கிடையாது. ஒருதலைப் பட்சமாகவே, இத்தகைய வாத-விவாதங்கள், செய்திகளை வெளியிடுதல், ஏன் புத்தகங்கள் எழுதுவது, ஆராய்ச்சி செய்வது என்று நடந்து வருகின்றன. ஒரு சிலரே, ஈரோடு, பவானி, திருச்சி, கடலூர் என்று சென்று, அங்கிருக்கும் 60-90 வயதான முதியவர்களிடம் பேசி, விவரங்களை சேகரித்து வருகின்றனர். அவற்றில், இவர்களின் கூற்று, எந்த அளவுக்கு ஒருதலைப் பட்சமாக இருக்கிறது, ஏன் உண்மைக்குப் புறம்பாகவும் இருக்கிறது என்பது தெரிகிறது. அதனால் தான், ஈவேரா பிள்ளையார் உடைப்பு, ஜின்னாவுடனான சகவாசம், ஆங்கிலேயரிடம் சரண்டர் ஆனது, உனெஸ்கோ விருது போன்றவை எடுத்தும் காட்டி வருகின்றன.

அண்ணாசாலையில் கருணாநிதி சிலை நிச்சயம் அமைக்கப்படும் என கூறினார்: ஸ்டாலின், கருணாநிதியில் மகன், முதலமைச்சர் இவ்வாறு கூறியப் பிறகு, யார் எதிர்க்கப் போகிறார்கள், எதிர்க்க முடியும். எந்த நீதிபதியும் மாறாக, தீர்ப்பும் கொடுக்க முடியாது. முதலமைச்சர் தீர்மானமாக, உறுதியாக சொல்லியாகி விட்டது, “அண்ணாசாலையில் கருணாநிதி சிலை நிச்சயம் அமைக்கப்படும்.” எனவே, இனி, வீரமணி வேகமாக வேலை செய்ய ஆரம்பித்து விடுவார். 2024 பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பாக, சோனியா காந்தி போன்றோரை வரவழைத்து, சிலைத் திறப்பு விழா பிரம்மாண்டமாக நடத்தப் படும். மற்ற எதிர்கட்சி தலைவர்களும் இருப்பார்கள். கடற்கரையில், கூட்டணி தேர்தல் பிரச்சாரக் கூட்டமும் நடைபெறும். அதிமுக-பாஜக எதிர்ப்பு முழுமையாக வெளிப்படும்.

© வேதபிரகாஷ்

02-09-2021


[1] மாலைமலர், அண்ணா சாலையில் கருணாநிதிக்கு சிலைமு..ஸ்டாலின் அறிவிப்பு, பதிவு: செப்டம்பர் 01, 2021 13:05 ISTமாற்றம்: செப்டம்பர் 01, 2021 15:20 IST.

[2] https://www.maalaimalar.com/news/topnews/2021/09/01130550/2973854/Tamil-News-MK-Stalin-announced-Karunanidhi-statue.vpf

[3] தினமலர், அண்ணாசாலையில் கருணாநிதிக்கு சிலை: முதல்வர் அறிவிப்பு, Updated : செப் 01, 2021  13:41 |  Added : செப் 01, 2021  13:39.

[4] https://www.dinamalar.com/news_detail.asp?id=2835053

சிலை உடைத்த நாத்திகர்களுக்கு சிலை வைக்கும் கலாச்சாரத்தை உண்டாக்கிய திராவிடத்துவம்! சிலை உடைத்த அதே இடத்தில் சிலை வைக்கப் படும்! (1)

செப்ரெம்பர் 2, 2021

சிலை உடைத்த நாத்திகர்களுக்கு சிலை வைக்கும் கலாச்சாரத்தை உண்டாக்கிய திராவிடத்துவம்! சிலை உடைத்த அதே இடத்தில் சிலை வைக்கப் படும்! (1)

சிலை உடைத்த நாத்திகஇந்துவிரோதிகளுக்கு சிலை வைத்தல்: ஈவேரா பிள்ளையார் சிலைகளை உடைத்தது, உச்சநீதி மன்றத்தில் வாங்கிக் கட்டிக் கொண்டது, நிறைய தமிழக மக்களுக்கு, ஏன் பெரியார்/ஈவேரா பற்றி ஆராய்ச்சி செய்பவர்களுக்கேத் தெரியாது. ஈவேரா தனக்குத் தானே சிலை வைத்துக் கொண்டதற்கு நியாயம் கற்பிக்கும் வாதங்கள் எல்லாமே, அவர்களிடத்திலிருந்து தான் வந்துள்ளன. ஆனால், மற்றவர்கள் மறுத்துள்ளது, மறைக்கப் படுகிறது. சிலை வைத்து, கொடிக்கம்பம் நட்டு இடங்களை ஆக்கிரமித்துக் கொள்வது, கம்யூனிஸ்டுகளுக்கு திராவிடக் கட்சிகளுக்கு கைவந்த கலையாக இருந்து வருகிறது. உயிரோடிருக்கும் மனிதர்களுக்கு சிலை வைக்கும் வழக்கம் கிடையாது, அவ்வாறு யாரும் நினைத்தும் பார்க்க முடியாது, ஏனெனில், அது அமங்கலமாகக் கருதப் பட்டு வருகிறது. எனவே, 1972ல் ஈவேராவுக்கு கடலூரில் மற்றும் 1975ல் கருணாநிதிக்கு மவுண்ட் ரோடில் சிலைகள் வைத்து, விழா கொண்டாடியது, நிச்சயமாக, பகுத்தறிவுக்கு மட்டுமல்லாது, சாதாரண மனோதத்துவ ரீதியில் நோக்கும் போதும் ஒவ்வாதது, முரண்பாடானது.

சிலை உருவாக்கும் தன்மை (Iconogenesis) மற்றும் சிலைகளை உடைக்கும் வன்மம் (Iconoclasm): சிலை உருவாக்கும் தன்மை (Iconogenesis) மற்றும் சிலைகளை உடைக்கும் வன்மம் (Iconoclasm) இரண்டையும் எளிதாகப் புரிந்து கொள்ளலாம். இந்த நாட்டில் துலுக்கர் பெரும்பாலாக அதனை மெய்ப்பித்துள்ளனர். பிறகு போர்ச்சுகீசியர், டச்சு, டேனிஸ், பிரெஞ்சு மற்றும் ஆங்கிலேய அடிப்படைவாத கிருத்துவர்களும் பால இடங்களில் வெளிப்படையாகவும், மறைமுகமாகவும் சிலையுடைப்பு-கோவில் இடிப்பு வேலைகளை செய்துள்ளனர். இப்பொழுது, திராவிடத்துவவாதிகள் செய்து வருகின்றனர். ஆகவே, திராவிடத்துவ வாதிகள், நாத்திகத்துடன் நடத்திக் காட்டிய சிலையுடைப்புகள், ஆபாச ஊர்வலங்கள் அவர்களது, கொடிய-குரூர-அசிங்கமான-ஆபாசமான மனப் பாங்குகளைத் தான் எடுத்துக் காட்டியுள்ளன. மறுபடியும் அவற்றை உயிர்ப்பித்து, சிலைகளை வைத்து, கொண்டாடும் பட்சத்தில், இக்காலத்திலும் அதே வன்மத்துடன், கொடிய சிந்தனைகளுடன், திய-முரண்பாடுகளுடன், வாழ்ந்து வருகிறாற்கள் என்பது புலப் படுத்துகிறது. இவர்களால், சமூகத்திற்கு என்றுமே ஆபத்துதான். தாலிபான், ஐசிஸ், போன்ற தீவிரவாதிகளுக்கும், இந்த திராவிடத்துவ அடிப்படை-தீவிரவாதிகளுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை.

ஈவேரா கருணாநிதிக்கு சிலை வைக்க விரும்பியது (1971): அண்ணா மறைவுக்குப் பின்னர் முதல்வர் பதவியேற்றார், பின்னர் 1971-ம் ஆண்டு சட்டமன்றத்தை கலைத்துவிட்டு நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்ந்து தேர்தலை திமுக சந்தித்தது. மிகப்பெரிய வெற்றியை திமுக இந்த தேர்தலில் பெற்றது. ஆகஸ்டு 14, 1971 அன்று பெரியார் திடலில் நடைபெற்ற பாராட்டுக் கூட்டத்தில், பெரியார் ஏற்கெனவே தான் வைத்த கோரிக்கையை மீண்டும் அப்போதைய முதல்வர் கருணாநிதியை அருகில் வைத்துக்கொண்டே வைத்தார். செயற்கரிய சாதனை செய்தவர் என்பதால் சென்னை தலைநகரில் கருணாநிதிக்குச் சிலை வைக்கவேண்டும் என்று தம் விருப்பத்தை பெரியார் தெரிவித்தார்[1]. அதை மேடையில் இருந்த குன்றக்குடி அடிகளார் போன்றவர்கள் ஆமோதித்தனர்[2]. அதே மேடையில் கருணாநிதி சிலை அமைப்புக் குழுவையும் பெரியார் அறிவித்தார்[3]. அப்போது கூட்டத்தில் பேசிய கருணாநிதி திமுக சார்பில் பெரியாருக்கு ஒரு சிலை திறக்கிறோம், அதன் பின்னர் எனக்கு சிலை திறக்கலாம் என்று அதைத் தட்டிக்கழித்தார்[4]. அதாவது, உயிருடன் இருக்கும் போது, சிலை வைக்கக் கூடாது என்று அவருக்குச் சொல்லப் பட்டதால் மறுத்தார்[5].

1973, ஈவேராவுக்கு சிலை வைத்த போது, மறுபடியும் கருணாநிதி சிலை பேச்சு எழுந்தது: அதன் பின்னர் 1973-ம் ஆண்டு பெரியார் மறைவுக்குப் பின்னர் திமுக சார்பில், சென்னை அண்ணா சாலையில் (சிம்சன் அருகில்) பேராசிரியர் க.அன்பழகன், தலைமையில்,  மணியம்மை முன்னிலையில், பெரியார் சிலையை அப்போதைய முதல்வர் கருணாநிதி திறந்து வைத்தார். சிலை திறப்பு விழாவில் பேசிய அப்போதைய தி.க.தலைவர் மணியம்மை, “சொன்னபடி பெரியாருக்கு சிலை வைத்துவிட்டீர்கள். பெரியாருக்கு சிலை திறந்த பின்னர் எனக்கு சிலை வைக்கலாம் என்று பேசிய நீங்கள் இனியும் சாக்குப்போக்கு சொல்ல முடியாது தி.க.சார்பில் உங்களுக்குச் சிலை அமைக்க அனுமதி தரவேண்டும் என்று மேடையிலேயே கோரிக்கை வைத்தார். திராவிடர் கழகம் சார்பில் அண்ணா சாலையில் முழு உருவ வெண்கலைச் சிலை அமைக்க உள்ளோம், இதற்கு மறுப்பு கூறக்கூடாது,” என்று பேசினார்[6].

சிலை விவகாரத்தில் திமுகஅதிமுக மோதல்: சிலைத் திறப்பை எதிர்த்து அதிமுக சார்பில் வழக்கு தொடுக்கப்பட்டது. துலுக்கர் எதிர்க்காதது ஆச்சரியமே! ஒருவேளை, அப்பொழுது தர்கா தான் இருந்தது என்று இப்பொழுது வாதிக்கலாம்! முதலமைச்சர் கலைஞர் வெளியூர் பயணத்தில் இருந்தபோது, இடையில் அ.தி.மு.க.வினால் ஏற்பட்ட சட்டப் போராட்டத்தையும் திராவிடர் கழகம் எதிர் கொண்டு வென்று, அண்ணாசாலை- ஜெனரல் பேட்டர்ஸ் சாலை சந்திப்பில் முறைப்படி அரசாணை பெற்று, 21.9.1975 அன்று பெரியதோர் திருவிழாவாக நடத்தினோம். (G.O. MS.No.877 Dated 21.5.1975, Rural Development and Local Administration Department). அந்த வழக்கை திராவிடர் கழகம் வென்று அண்ணாசாலை தர்கா அருகே 1975-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 21-ம் தேதி கருணாநிதியின் வெண்கலச்சிலை திறக்கப்பட்டது.

1975ல் வைக்கப் பட்ட கருணாநிதி சிலை 1987ல் தகர்க்கப் பட்டது: 01-09-2021 அன்று, தமிழக சட்டப்பேரவையில் வீட்டுவசதித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய தஞ்சாவூர் திமுக உறுப்பினர் நீலமேகம், மவுண்ட் ரோடில் இருந்த கருணாநிதி சிலை பற்றி பேசியது, செய்தியாக வந்துள்ளது[7]. 1971 ஆம் ஆண்டு சென்னையில் கருணாநிதிக்கு சிலை வைக்க வேண்டும் என்று பெரியார் முடிவு செய்தார்[8]. அதன் பின்னர் 1975 ஆம் ஆண்டு அப்போதைய திராவிடர் கழகத் தலைவர் மணியம்மை, சென்னை அண்ணாசாலையில் கருணாநிதியின் சிலையை நிறுவி குன்றக்குடி அடிகளாரால் அந்த சிலை திறந்து வைக்கப்பட்டதாகவும் நீலமேகம் குறிப்பிட்டார்[9]. அதன் பின்னர், 1987 ஆம் ஆண்டு டிசம்பர் 24ஆம் தேதி நடைபெற்ற சம்பவத்தில் சில விஷமிகள் கருணாநிதி சிலையை சேதப்படுத்தியதாகவும், அதே இடத்தில் மீண்டும் கருணாநிதி சிலை வைக்க, கருணாநிதி வேண்டாம் என தடுத்துவிட்டதாக கூறினார்[10]. அப்போது ‘சின்ன தம்பி என் நெஞ்சில்தான் குத்தினான். முதுகில் குத்தவில்லை’ என்று கருணாநிதி கூறினார்[11]. எனவே பெரியார் நினைத்ததை மணியம்மை செய்து காட்டியதின் அடிப்படையில் மீண்டும் அண்ணாசாலையில் கருணாநிதியின் சிலையரரசின் சார்பில் நிறுவ வேண்டுமென நீலமேகம் கேட்டுக்கொண்டார்[12].

© வேதபிரகாஷ்

02-09-2021


[1] வேதபிரகாஷ், கருணாநிதி சிலை திறப்புசிலை வைத்தல், எடுத்தல், கடத்தல், உடைத்தல் எல்லாமே திராவிட கலாச்சாரம், பண்பாடு, நாகரிகம் தான்! [1], டிசம்பர் 17, 2018.

[2] https://dravidianatheism2.wordpress.com/2018/12/17/politics-of-karunanidhi-statue-unveiled-by-sonia-and-rahul-dravidian-myth/

[3] வேதபிரகாஷ், கருணாநிதி சிலை திறப்புசிலை வைத்தல், எடுத்தல், கடத்தல், உடைத்தல் எல்லாமே திராவிட கலாச்சாரம், பண்பாடு, நாகரிகம் தான்! [2], டிசம்பர் 17, 2018

[4].https://dravidianatheism2.wordpress.com/2018/12/17/karunanidhi-statue-unveiled-by-sonia-arya-dravidian-politics-or-corruption/

[5]  ஜோதிடர்களிடம் தயாளு அம்மாள் விசாரித்ததும், அதனால் மறுத்ததும் சிலருக்கேத் தெரிந்த விசயமாக இருந்தது. இப்பொழுது துர்கா கோவிலுக்குச் செல்வது எல்லாம், ஊடகங்களில் வருவது போல, அப்பொழுது, ஊடகங்களில் செய்திகள் வெளியிடுவது இல்லை.

[6]  நாத்திகம், பகுத்தறிவு என்ற கொள்கைகள் கொண்ட கருணாநிதி, வீரமையிடன் ஏன் மறுத்தார் என்பதையும், “இனியும் சாக்குப்போக்கு சொல்ல முடியாது……… இதற்கு மறுப்பு கூறக்கூடாது,” என்பதிலிருந்தும், பின்னணியை அறிந்து கொள்ளலாம்.

[7] தமிழ்.ஏ.பி.பி.லைவ்.நியூஸ், அண்ணா சாலையில் முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு சிலைமுதல்வர் அறிவிப்பு, By: ராஜேஷ். எஸ் | Updated : 01 Sep 2021 12:53 PM (IST).

[8] https://tamil.abplive.com/news/tamil-nadu/kalaignar-karunanidhi-statue-in-anna-salai-says-cm-mk-stalin-in-tn-assembly-15249

[9] நியூஸ்.18.தமிழ், அண்ணா சாலையில் கருணாநிதி சிலை அமைக்கப்படும்முதல்வர் மு..ஸ்டாலின் உறுதி, Published by: Karthick S, First published:September 01, 2021, 17:07 IST.

[10] https://tamil.news18.com/amp/news/tamil-nadu/mkstalin-said-karunanidhi-statue-will-be-made-in-anna-road-skd-550141.html

[11] தினமணி, அண்ணாசாலையில் கருணாநிதிக்கு மீண்டும் சிலை அமைக்கப்படும்: முதல்வா் மு..ஸ்டாலின், By DIN  |   Published on : 02nd September 2021 03:01 AM.

[12] https://www.dinamani.com/all-editions/edition-chennai/chennai/2021/sep/02/statue-of-karunanidhi-will-be-erected-again-in-anna-salai-3691334.html

ஸ்டாலினை பசு முட்ட வந்ததும், மாட்டுக்கறிக்கு ஆதரித்ததும், குங்குமத்தை அழித்ததும் தமிழ்நாட்டவர் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் – இப்பொழுது சனியைப் பற்றி பேசும் ஸ்டாலின் (2)

ஜனவரி 16, 2018

ஸ்டாலினை பசு முட்ட வந்ததும், மாட்டுக்கறிக்கு ஆதரித்ததும், குங்குமத்தை அழித்ததும் தமிழ்நாட்டவர் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்இப்பொழுது சனியைப் பற்றி பேசும் ஸ்டாலின் (2)

Blood pongal - as Kru compared kumkum with blood

போகி திருநாளும், பிடித்துள்ள சனியும்: ஸ்டாலின் பேசியது, “இன்று போகி திருநாள். போகி என்றால் பழையன கழிதலும், புதிய புகுதலும் என்ற நிலையில், நம்மை பிடித்துள்ள சனி இன்றோடு ஒழிந்திட வேண்டும். வீட்டிலிருக்கும் பழையனவற்றை மட்டுமல்ல, இந்த நாட்டிலிருக்கும் பழையனவற்றையும் அப்புறப்படுத்த வேண்டிய கட்டாயம் நமக்கு உருவாகியிருக்கிறது[1]. அந்தளவுக்கு, ஏறக்குறைய 20 ஆண்டுகள் பின்தங்கி, மோசமான நிலையில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கும் தமிழகத்திற்கு, நாளைய தினம் தை பிறக்கின்ற நேரத்தில் ஒரு நல்ல விடிவுகாலம் பிறக்கும் என்ற நம்பிக்கை நமக்கெல்லாம் உருவாகி இருக்கிறது. எனவே, நம்முடைய தமிழகத்தை காப்பாற்ற, தமிழகத்துக்கு ஒரு விடிவுகாலத்தை உருவாக்கிட, தமிழக மக்களுக்குத் தேவையான திட்டங்களை உருவாக்கிட வேண்டுமென்று, இந்த தமிழ்ப் புத்தாண்டு மற்றும் பொங்கல் விழாவில் உறுதியெடுத்துக் கொள்ள வேண்டும். அந்த நம்பிக்கையோடு உங்கள் அனைவருக்கும் தமிழ்ப் புத்தாண்டும் மற்றும் பொங்கல் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்,” என்று கூறினார்[2]. இனி தளபதியை மாடு முட்ட வந்த விவகாரத்தை கவனிப்போம்.

Cow marched towards Stalin - 14-01-2018, twitter

மாடு முட்ட வந்த சமாசாரம்: வேடிக்கை என்னவென்றால், தளபதியை மாடு முட்ட வந்த விவகாரத்தை “தினமலர்” மட்டுமே வெளியிட்டதாகத் தெரிகிறது. ஒரு வீடியூ 15-01-2018 காலையில் தேடியபோது காணப்பட்டது. மதியம் காணப்படவில்லை. கொளத்துாரில், ஸ்டாலினை மாடு முட்ட வந்ததால், மாட்டிற்காக செய்யவிருந்த பூஜையை, ஸ்டாலின் ரத்து செய்தார்.தமிழக எதிர்க்கட்சி தலைவரும், தி.மு.க., செயல் தலைவருமான ஸ்டாலினின் சொந்த தொகுதி கொளத்துார். இந்த தொகுதிக்கு உட்பட்ட, பெரவள்ளூர், பெரியார் நகர் பகுதிக்கு வந்தார். கொளத்துார் வீதிநகர் பகுதியில், நடந்த பொங்கல் விழாவிற்கு நலத்திட்ட உதவிகள் வழங்க ஸ்டாலின், 9:00 மணிக்கே வரவிருப்பதாக தெரிவிக்கப்பட்டது.ஆனால், 12:௦௦ மணிக்கு வந்த ஸ்டாலின், பொங்கல் விழா நடைபெறும் இடத்தில் இருந்த பசுமாட்டிற்கு மாலை போட சென்றார்.ஆனால், அந்த மாடு முட்ட வரவே, கோபமடைந்த ஸ்டாலின், மாலையை கட்சி தொண்டர் ஒருவரிடம் கொடுத்து மாட்டிற்கு போடச் சொன்னார்[3]. மேலும், பசு மாட்டிற்கு செய்யவிருந்த பூஜையையும் வேண்டாம் என்று கூறி மறுத்து விட்டார்[4]. சென்ற ஜூன் 2017ல் மாட்டுக்கறியை ஆதரித்துப் பேசியதை நினைவு கொள்ளலாம்[5]. இப்படி இரட்டை வேடும் போடும் இவர், பொங்கல் வாழ்த்து என்று இணைதளத்தில் படம் போடும் போது, மாட்டை சேர்த்துக் கொள்கிறார்.

Cow and stalin - DM-14_01_2018_016_026

மிருகம் போலி நாத்திகனின் முகமூடியைக் கிழித்து விட்டது: ஸ்டாலினை மாடு முட்ட வந்தது, மாலை போட மறுத்தது, போலி நாத்திகத்தை தோலுரித்திக் காட்டுகிறது. குங்குமத்தை அழித்த ஸ்டாலினை மாடு முட்ட வந்தது, திராவிட நாத்திகத்திற்கு சரியான அடி! பகுத்தறிவால் எந்த விளக்கமும் கொடுக்க முடியாது! முன்னர் கருணாநிதி, திமுக தொண்டர் குங்குமத்துடன் வந்தபோது, நக்கலாக, “என்ன நெற்றியில் ரத்தமா?”, என்ற கேட்ட வயதான தந்தை கருணாநிதியின் வக்கிரம் தான், தனயன், நெற்றியில் இட்ட குங்குமத்தை அழித்தபோது புலப்பட்டது. பிறகு தனது தாயார், துணைவியார், சகோதரி என்று எல்லோரும் ஏன் குங்குமம் வைக்கின்றனர், அவற்றை அழிக்காமல் இருக்கும் இவரது யோக்கியதை என்ன என்பதனை கவனிக்க வேண்டும். ஸ்டாலின் – மாடு முட்ட வந்தால் வீரத்தமிழா, கோபம் வரக்கூடாது, கொம்புகளைப் பிடித்து அடலேறு போல அடக்கி வீரத்தைக் காட்ட வேண்டும்! ஜல்லைக் கட்டுக்கு வீரம் பேசிய இந்த தளபதி கோழை போல ஓடி போனது, கேவலமானது. வயதாகி விட்டது என்று சொல்லலாம், அப்பொழுது, வயதிற்கு வேண்டிய நாகரிகம் அப்பனுக்கும், மகனுக்கும் இல்லாத்தும் கேவலம் தான். நம்பிக்கையில்லாத ஸ்டாலின் சனி பற்றி பேசுவது, அவரது பொலித்தனத்தின் உச்சம்! பிறகு ராகு-கேது எல்லாம் வரும் போல!

Cow marched towards Stalin - 14-01-2018, Chennai.Karu enquires

போகி பண்டிகையில், பழையது கலைந்து, புதியதை உருவாக்குவோம். தமிழகத்தை சனிபிடித்து ஆட்சி செய்கிறது.தை பிறந்தால் வழிபிறக்கும், பெரியாரா இப்படி சொல்லிக் கொடுத்தார்? பண்டிகைகளைக் கேவலப்படுத்திய ஈவேரா மற்றும் திக முதலியவற்றை தமிழக மக்கள் அறிந்து, புரிந்து கொண்டு விட்டனர். ஹேமமாலினியையும், ஸ்டாலினையும் மாடு முட்ட வந்ததில் உள்ள ஒற்றுமை, வேற்றுமை என்ன என்று பார்த்தால், முன்னவர் பிராமண்ராக இருந்தாலும், தான் கடமையை செய்யும் போது முட்ட வந்தது. ஆனால், இங்கோ, பொங்கல் வைத்து, பசுக்கு மாலை போட வந்த போது முட்டப் பார்த்தது. ஆக, அந்த ஜீவனுக்கு, இந்த மனிதனின் போலித் தனம் தெரிந்திருக்கிறது.

Stalin, atheist visiting temples- 13-01-2018

இந்து மதம் மட்டுமல்ல எந்த மதத்தை இழிவுபடுத்தினாலும் தி.மு.. அதை ஏற்காது: வைரமுத்து-ராஜா விவகாரத்தில், ஸ்டாலின் கூறிய இரு வரியை பெரியதாக எடுத்துக் கொள்ள முடியாது[6]. இந்து மதம் மட்டுமல்ல எந்த மதத்தை இழிவுபடுத்தினாலும் தி.மு.க. அதை ஏற்காது ஊக்கப்படுத்தாது, உடன்படாது. என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்[7]. ஆனால், அவர் அவ்வாறு செய்துள்ளாரா என்று பார்த்தால் ஒன்றும் கிடையாது. ஊடகங்களும் பதிலுக்கு எந்த கேள்வியையும் கேட்கவில்லை[8]. திமுக உடன்படாது என்றால், தான் உடன் படுவேன், ஊக்குவிப்பேன், ஏற்பேன் என்றாகிறது[9]. இது பேட்டியில் ஏதோ குறிப்பிட்டிருக்கிறார், அவ்வளவுதான், ஏனெனில், இதுவரை, இந்து மதம் தாக்கப் பட்டபோது, இவர் வாயை மூடிக் கொண்டுதான் இருந்தார். இப்பொழுது கூட கனிமொழி பேசியதற்கு ஒன்றையும் சொல்லக் காணோம். அதென்ன அப்பேச்சு இழிவு படுத்தியதாக ஆகாதா? அவ்வளவு ஏன், இவரது தந்தை பேசியது எல்லாம் ஞாபகப் படுத்திக் கொண்டால், இவரது மனதுக்கு, மனசாட்சிக்குத் தெரியாமலா போய் விட்டது? வைத்த குங்குனத்தை அழித்தபோது, இவர் என்ன செய்ததாக அர்த்தம்? ஆகவே, இந்த ஒரு வரியை வைத்து, இவரது குணத்தை ஒன்றும் எடை போட முடியாது. மேலும், ஊடகங்கள், பசு முட்ட வந்ததை மறைத்ததிலிருந்தே, அவகளது வழக்கமான, செக்யூலரிஸத்தைக் காட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

Karunanidhi meeting DNK 13-01-2018

பொங்கல் அன்று கனிமொழி வீட்டிற்கு சென்ற கருணாநிதி: ஆழ்வார்பேட்டை இல்லத்தில் திமுக செயல்தலைவர் ஸ்டாலினை சந்தித்து கனிமொழி பொங்கல் வாழ்த்து தெரிவித்தார்[10]. இதேபோல் திமுக தொண்டர்களும் ஸ்டாலினை நேரில் சந்தித்து தங்களது பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்தனர். தமிழக மக்களுக்கு கனி மொழி பொங்கல் வாழ்த்து தெரிவித்து உள்ளார்[11]. இந்த ஆண்டாவது தமிழக மக்களுக்கு விடிவுகாலம் பிறக்க வேண்டும் என கூறி உள்ளார். வழக்கமாக பொங்கல் அன்று கருணாநிதி வீடு களை கட்டும். இந்த ஆண்டும், சி.ஐ.டி காலணி வீட்டில் தடபுடல் ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. பொங்கல் அன்று கோபாலபுரம் வீட்டில் தொண்டர்களைப் பார்த்து கையசைத்து பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார்.

Stalin, atheist visiting temples-duplicity- 60th marriage

கோபாலபுரம் வீட்டில் இருக்கும் கருணாநிதி, பொங்கல் அன்று தொண்டர்களைச் சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. தனித்தனியாக தொண்டர்களை பார்க்க மருத்துவர்கள் அனுமதி தரவில்லை. நோய் தொற்று ஏற்பட்டு விடக்கூடாது என்று தடை போட்டுவிட்டனர். இந்நிலையில், 15 மாதங்களுக்கு பிறகு சென்னை சி.ஐ.டி காலணி வீட்டிற்கு ஜனவரி 15-ம் தேதி இரவு 9 மணிக்கு சென்றார் கருணாநிதி[12]. வீட்டுக்கு வந்த கருணாநிதியை அவரது மகள் கனிமொழி வரவேற்றார். ராஜாத்தி அம்மாள், அரவிந்தன் ஆகியோர் கருணாநிதியை வீட்டுக்குள் அழைத்து சென்றனர். ”வீட்டுக்கு அப்பா வந்தது மகிழ்சி அளிக்கிறது’ என்றார் கனிமொழி[13]. ஆக அப்பனை, அண்னனை மகள் சந்தித்தாள், என்று சொல்லாமல், ஏதோ ஒரு தலைவர், இன்னொருவரஇப் பார்த்தார் என்று செய்தி போட்டிருப்பது, நிருபர்கள், செய்தியாளர்களின் அடிமைத் தனத்தைக் காட்டுகிறது. “பொங்கல் இனாம்” கனமாக இருந்தது போலும். இதை ஏன் குறிப்பிட்டுகின்றேன் என்றால், மாடு முட்டிய விசயத்தை மறைத்ததால், அதனைப் பற்றி, பகுத்தறிவோடு செய்தி வெளியிட்டு விவாதிக்காமல் இருந்ததால் தான்.

© வேதபிரகாஷ்

16-01-2018

Stalin, atheist visiting temples-duplicity- 13-01-2018

[1] பாலிமர்.நியூஸ், கொளத்தூர் தொகுதி பொங்கல் விழாக்களில் மு..ஸ்டாலின் பங்கேற்பு, 13-ஜன-2018 12:43

[2]https://www.polimernews.com/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D/

[3] தினமலர், முட்ட வந்தது பசு மாடு பூஜையை நிராகரித்த ஸ்டாலின், Added : ஜன 14, 2018 04:39.

[4] http://www.dinamalar.com/news_detail.asp?id=1938542

[5] http://www.timesnownews.com/india/video/beef-ban-dmk-protest-mk-stalin-iit-madras-assault/62078

 

[6] பாலிமர்.நியூஸ், எந்த மதத்தை இழிவுபடுத்தினாலும் தி.மு.. அதை ஏற்காதுமு..ஸ்டாலின், 13-ஜன-2018 15:04

[7]https://www.polimernews.com/%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5/

[8] தி.இந்து, அதிமுக ஆட்சி அகலவேண்ண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு: ஸ்டா;இன் பேட்டி, Published :  13 Jan 2018  15:50 IST; Updated :  13 Jan 2018  15:50 IST

[9] http://tamil.thehindu.com/tamilnadu/article22436018.ece

[10] தினத்தந்தி, தமிழக மக்களுக்கு கனிமொழி பொங்கல் வாழ்த்து தெரிவித்தார், ஜனவரி 14, 2018, 10:23 AM

[11] http://www.dailythanthi.com/News/TopNews/2018/01/14102338/Kanimozhi-for-Tamil-people-Pongal-greeted.vpf

[12] விகடன், கனிமொழி வீட்டில் கருணாநிதி….!, எஸ். முத்துகிருஷ்ணன், Posted Date : 01:15 (16/01/2018); Last updated : 01:15 (16/01/2018)

[13] https://www.vikatan.com/news/tamilnadu/113646-karunanidhi-went-to-kanimozhis-cit-colony-house-after-15-months.html – vuukle_div

அய்யப்பன் பிறப்பு வளர்ப்பு தெரிந்தால் மாலை போடுவீர்களா?

நவம்பர் 29, 2009

அய்யப்பன் பிறப்பு வளர்ப்பு தெரிந்தால் மாலை போடுவீர்களா?

இது “விடுதலை” என்கின்ற திராவிட கழகத்தினரின் நாளிதழில் “ஓடும் நதி” என்ற பெயரில் மறைந்து கொண்டு யாரோ ஒரு இந்து-விரோதி எழுதி வெளிவந்த சிறு கட்டுரையாகும். இன்றும் (டிசம்பர் 2013) கீழ்கண்ட தளத்தில் இருக்கின்றது:

http://viduthalai.periyar.org.in/20091129/news22.html

அதனால் தான், கீழ் கண்ட குறிப்பையும் நவம்பர் 2009லேயே செர்த்திருந்தேன்.

இதோ, ஐயப்பன் பக்தர்களையும் விட்டுவைப்பதில்லை.வருடா வருடம் இதே மாதிரியான தூஷணங்கள்! ஆனால், யாரும் நடவடிக்கை எடுக்காததால், இப்படியே அச்சடித்து இப்பத்திரக்கை நடதத்தப் படுகிறது.இதன் ஆசிரியர் கே. வீரமணியோ ஒரு நிகர்-பல்கலைக் கழகம் வைத்து நடத்துகிறார்.அதில் வேலை செய்யும் பலர் மாலை அணிந்துள்ளனர். அவர்கள் என்ன செய்வார்கள்?

அவர்கள் என்ன நினைப்பார்கள்?

அங்கு படிக்கும் மாணவர்கள் என்ன நினைப்பார்கள்?

ஏனெனில் மாணவர்களில் பலரும் மாலை போட்டுக் கொண்டிருக்கிறார்கள்!!

குறிப்பு: ஐய்யப்பப் பக்தர்களைப் புண்படுத்த இப்பதிவு செய்யப்படவில்லை. உண்மையில் நாத்திகவாதிகளின் மனப்பாங்கை எடுத்துக் காட்டி, அவர்களைன் போலித்தனத்தை எடுத்துக் காட்டவே நான் இப்பதிவை செய்துள்ளேன்.     

                                                                                                                  சென்னை, நவ. 29_ கேரளம் _ கேர என்ற மலையாள சொல்-லுக்கு தென்னை என்று பெயர். கேரளம் என்றால் தேங்காய் விளைகிற இடம் என்று பெயர். சந்தேகமாக இருந்-தால், உங்களுக்குத் தெரிந்த மலையாள சேட்டான், சேச்சியிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். கேரளாவிலிருந்து வந்த தேங்காயை, தமிழ்நாட்-டுத் தமிழன் விலைக்கு வாங்கி, தலையில் இரு-முடிகட்டி திரும்பவும் எங்கிருந்து வந்ததோ, அங்கேயே பக்தியின் பெயரால் கொண்டு போய் சேர்கிறான். அந்த தேங்காய்களை சபரிமலை கோவில் நிர்-வா-கமும் ஏதாவது எண்-ணைய் எடுக்கிற நிறுவனத்-திற்கு மொத்த விலைக்கு விற்று விடுகிறது. அந்த நிறுவனங்கள் தமிழ்-நாட்-டில் சிறு சிறு பாக்கெட், பாட்டில்களில் தேங்காய் எண்ணையை அடைத்து வந்து விற்கிறது. தேங்-காயை விலைக்கு வாங்-கிய தமிழன்,அதே தேங்-காயை, எண்ணைய் என்ற வடிவத்தில் திரும்ப-வும் விலைக்கு வாங்கு-கிறான். அதாவது புரிகிற மாதிரி சொல்வது என்-றால், ஒரு பொருளை இரண்டு முறை விலைக்கு வாங்குகிறான். கேரளக்காரன் தமிழ-னின் தலையில் இப்படித்-தான் மிளகாய் அரைக்-கிறான்! அய்யப்பனுக்கு மாலையணிந்து கோவி-லுக்கு போய் திரும்பும் வரை மிகவும் ஒழுக்கமாக நடந்து கொள்ள வேண்-டும் சரியாகச் சொன்-னால், கோயிலுக்குப் போய் திரும்பும் வரைக்கு-மாவது நல்லவர்களைப் போல நடியுங்கள் என்-கிறார்கள்! கேரள அய்யப்பனுக்கு மாலை போட்டுப் போகிற தமிழர்கள் தயவு செய்து அய்யப்பனின் பிறப்பு, வளர்ப்பு கதையை படித்த பிறகு,தைரியம் இருந்தால் அதற்கு பிறகு மாலை போடுங்கள்! எவ்வளவுக் எவ்வளவு அசிங்கங்-கமாக, கேவலமாக இருக்க வேண்டுமோ, அவ்வள-வுக்கு அவ்வளவு ஆபாச-மாக இருக்கிறது, அய்யப்-பனின் பிறப்பு வளர்ப்பு வரலாறு! அவைகளை படித்தால் ஒழுக்கக் கேடு-கள் தான் நாடெங்கும் தலை விரித்தாடும்..! கேரளா கிறித்தவர்கள் அதிகம் நிறைந்த மாநிலம்.

அதாவது அய்யப்பன் பிறந்து வளர்ந்து கிழித்த-தாக கூறப்படும் கேரளத்-தில், கேரள மக்கள் அய்யப்-பன விட இயேசு கிறிஸ்துவைத் தான் அதிகம் பின்பற்று-கிறார்-கள்! இது ஒன்று போதாதா? அய்யப்பன் வெறும் பொய்யப்பன் என்று புரிந்து கொள்ள… அதா-வது தன்னை சிலுவை-யில் உயிரோடு அறைந்த போது தன்னையே காப்-பாற்றிக் கொள்ளாத இயேசு தான் இவர்களை காப்பாற்றும், சக்தி வாய்ந்த கடவுளாம்! கொடுமைடா சாமி! நீங்கள் சொல்வதெல்-லாம் சரிதான்ங்க, ஆனால் நம்மை மீறிய சக்தி ஒன்னு இருக்கு, அதுக்கு பெயர் தான் கடவுள் என்பர்களே! கடவுளின் பெயரால் இந்த கேணத் தனங்கள், எதற்கு? கடைசியாக உங்களிடம் வேண்டிக் கொள்வ-தெல்-லாம், ஒன்றே ஒன்று தான்! தமிழர்களே! தமிழர்-களாக இருங்கள்!!

நன்றி: ஓடும் நதி

பின்குறிப்பு: இந்த இடுகை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இடப்பட்டது. நாத்திகம் என்ற போர்வையில், வீரமணி எப்படி தூஷணம் செய்கிறார் என்பதைத்தான் எடுத்துக் காட் ட அவ்வாறு செய்யப்பட்டது. கோடிக்கணக்கான பக்தர்களின் உணர்வுகளைப் புண்படுத்தக் கூடாது என்ற எண்ணம் அந்த மெத்த “படித்த” மேதாவிக்கு, நிகர்நிலை பல்கலைக்கழக வேந்தருக்குத் தெரியாமல் இருப்பதையும் எடுத்துக் காட்டப்பட்டது. இப்பொழுதும் இதற்கு பதில்கள் வருவதால், இக்குறிப்பு சேர்க்கப்பட்டுள்ளது.

 2009லிருந்து 2013 வரை படிப்பவர்கள் இதனை முழுவது படிக்காமலேயே, என்னை திட்டி பதில்களை பதிவு செய்து வருகிறார்கள்.

ஆகவே, தயவு செய்து முழுமையாக படித்து விட்டு பதிலை இடுங்கள் .

வேதபிரகாஷ்

04-12-2013