தமிழகத்தில் வெடிகுண்டு தயாரிப்பு, வெடிப்பொருட்கள் உபயோகம், வெடிகுண்டு கலாச்சாரம் (1)
தமிழகத்தில் வெடிகுண்டு கலாச்சாரம் பெருகி வருவது: 1984 சென்னை / 1998 கோவை வெடிகுண்டு வெடிப்புகளுக்குப் பிறகு, தமிழகத்தில் அவ்வப்போது வெடிகுண்டு வெடிப்பது உண்மையாகி விட்டது[1]. அல்-உம்மா, சிமி[2] முதலிய இயக்கங்கள் தடை செய்யப்பட்டாலும் பல உருவங்களில் செயல்பட்டு வருகின்றன. தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் அயல்நாட்டில் தீவிரவாதத்தில் ஈடுபடும் வழக்குகளும் வெளிவருகின்றன[3]. பணப்புழக்கம், கள்ளநோட்டுப் புழக்கம் அவற்றுடன் தீவிரவாதிகளின் இணைப்பு முதலியன தெரியவருகின்றன[4]. வழக்குகள் தாமதம், அரசியல் தலையீடு என்றெல்லாம் இருந்தாலும் குண்டுகள் வெடித்ததை மறைக்க முடியாது, ரத்தம் சிந்தியது, உடல்கள் சிதறியது, அடையாளமே தெரியாமல் போனது, கை-கால்கள் துண்டானது, அப்பாவி மக்கள் கொல்லப்பட்டது பொய்யாகாது, காயமடைந்தது முதலியன மறக்க முடியாது. குண்டு வெடிப்புகள் தமிழ் குழுமங்களிலிருந்து முஸ்லீம் அமைப்புகளுக்கு மாறியுள்ளது என்பதில்லை, ஆனால் அத்தகைய தொழிற்நுட்பம், குண்டுகள் தயாரிப்பு, அதற்குண்டான ஆதரவு, பணபலம், எல்லாவற்றிற்கும் மேலாக அவ்வாறு செய்யவேண்டும் என்ற மனப்பாங்கு முதலியன உள்ளன / நடந்து கொண்டு வந்துள்ளன என்பது நிதர்சனமாகத்தான் உள்ளது.
![]() |
![]() |
குறிப்பாக நவீன யுக்திகளை கையாலுவது, குறிப்பிட்ட தொழிழ்நுட்பத்தை உபயோகப்படுத்துவது, அதை சிறிதே மாற்றியமைப்பது, ஆனால், அதனால் பெருத்த யிர்சேதம், நாசம் குறிப்பாக பீதியை உண்டாக்குவது என குறிப்பிட்ட இயக்கங்கள் செயல்பட்டுவருகின்றன. இருப்பினும் வெடிகுண்டு புரளி செய்தி வருவது, அதைப் பற்றி கவலையில்லாமல் கிண்டலாக, நக்கலாக, பேசுவது, எழுதுவது, சினிமாக்களில் அதிகமாக “ஜோக்குகளாக” தயாரித்து வெளியிடுவது, செனல்கள் அவற்றை பலதடவை ஒலி-ஒளிபரப்பி கேலிக்கூத்தாக்கிவிட்டது முதலியன அதனை மறக்க-மரக்கச் செய்துவிட்டன போலும். இப்பொழுது மறுபடியும் ஞாபகப்படுத்துகிறது. மதுரை ஜிஹாதி ஒருவன் பிரான்ஸில் கைது செய்யப்பட்டான்[5]. தமிழகத்தில் நடந்து வந்துள்ள குண்டுவெடிப்புகள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன[6].
தேதி |
இடம் |
இறந்தவர் |
காயமடைந்தவர் |
சம்பந்தப்பட்ட / பொறுப்பேற்ற இயக்கம் |
02-08-1984 | சென்னை விமான நிலையம் |
30 |
37 |
தமீழீழப் போராளிகள் |
15-03-1987 | மலைக்கோட்டை விரைவு ரெயில், மருதையாறு பாலம், அரியலூர் |
26 |
140 |
தமிழ்நாடு விடுதலைப் படை[7] |
11-05-1988 | TNLA carries out a bomb explosion on the carpet bed map of India in the Government Botanical Garden in Ooty. | தமிழ்நாடு விடுதலைப் படை | ||
21-05-1991 | திருப்பெரும்புதூர் |
18 |
விடுதலை புலிகள் | |
20-04-1992 | சுருளிப்பட்டி, தேனி மாவட்டம் |
1 |
தமிழக மக்கள் விடுதலைப்படை | |
08-08-1993 | ஆர்.எஸ்.எஸ். அலுவலகம், சென்னை |
11 |
முஸ்லீம் அமைப்பு | |
18-11-1993 | குள்ளஞ்சாவடி, கடலூர் மாவட்டம் |
1 |
தமிழ்நாடு விடுதலைப் படை | |
29-03-1994 | TNLA leader Lenin is killed during a bomb blast while he was on his way to plant a bomb at the Muhtandikuppam police station near Cuddalore. | தமிழ்நாடு விடுதலைப் படை | ||
25-05-1994 | அம்மாப்பேட்டை, தஞ்சாவூர் மாவட்டம் |
1 |
7 |
விடுதலைப்புலி |
14-04-1995 | இந்து முன்னணி அலுவலகம், சென்னை |
2 |
4 |
முஸ்லீம் அமைப்பு |
22-09-1993 | சங்கரராமன் மீது குண்டு வீச்சு | |||
18-05-1996 | மீனாட்சி கோவில், மதுரை | முஸ்லீம் அமைப்பு | ||
10-07-1997 | மணிரத்னம் வீட்டின் மீது குண்டு வீசப்பட்டது | முஸ்லீம் அமைப்பு | ||
1997 | பூபாலன் மீது குண்டு வீசப்பட்டது, கோயம்புத்தூர் ஜெயில் | முஸ்லீம் அமைப்பு | ||
13-08-1997 | கொடுங்கையூர், சென்னை |
80 குண்டுகள், 30,000 ஜிலேடின் குச்சிகள் பறிமுதல், சிலர் கைது |
முஸ்லீம் அமைப்பு | |
01-12-1997 | உடுமலைப்பேட்டை, கோயம்புத்தூர் மாவட்டம் |
3 |
முஸ்லீம் அமைப்பு | |
03-07-1995 | இந்து முன்னணி, நாகப்பட்டணம் |
1 |
முஸ்லீம் அமைப்பு | |
06-02-1998 | சாலியமங்கலம், தஞ்சாவூர் மாவட்டம் |
3 |
முஸ்லீம் அமைப்பு | |
14-02-1998 | கோயம்புத்தூர் |
16 |
44 |
முஸ்லீம் அமைப்பு |
04-1999 | The TNLA blasts television towers at Tuticorin. | தமிழ்நாடு விடுதலைப் படை | ||
03-2000 | The TNLA blast a railway track at Thiruppapuliyur in the Cuddalore district[8] | தமிழ்நாடு விடுதலைப் படை | ||
14-04-2001 | Country-made bombs, guns seized in Tamilnadu, four arrested – On April 14, police claimed to have arrested four persons and seized two country-made guns and nine country-made bombs from them at Palayamkottai. | |||
16-05-2001 | Nine Al-Umma men sentenced to life in Coimbatore, Tamilnadu. Nine of the 12 activists of the Islamic fundamentalist organization Al-Umma accused in the Udumalpet bomb blast case were sentenced to life imprisonment by a special court in Coimbatore, on May 15. Three persons were killed and four others injured in the blast triggered in Udumalpet, earlier on December 12, 1997[9]. |
குண்டு தயாரிப்பு விவரம்[10]: உள்ளுக்குள்ளே வெடித்து நாசத்தை உண்டாக்கும் குண்டுகளை (IED = Internally explosive Devices) உருவாக்குதல், தயாரித்தல் (Ammonium Nitrate / RDX),”டைமர்” முதலிய மின்னணு கருவிகளை உபயோகித்தல் முதலிய முறைகளைப் பயன்படுத்தலில், குறிப்பிட்ட இஸ்லாமிய தீவிரவாதிக் குழுக்கள் வல்லுனர்களக இருக்கிறார்கள்[11]. கடந்த குண்டவெடிப்புகளில், இத்தகைய முறை கையாளப்பட்டுள்ளது. மும்பையிலும் அதே முறை கையாளப்பட்டுள்ளது. மொத்தம் டிபன்-பாக்ஸுகளில் வைக்கப்பட்ட ஏழு குண்டுகள் உபயோகப்படுத்தப்பட்டுள்ளது[12]. வழக்கம் போல அவை துணிபைகளில் வைக்கப்பட்டு வெடிக்கப்பட்டுள்ளன. இந்த குண்டுவெடிப்புகள் பீதியை உண்டாக்கவில்லை, மாறாக அழிவை உண்டாக்கவே செய்துள்ளன[13]. லஸ்கர்-இ-தொய்பா, இந்திய-முஜாஹித்தீன் மற்றும் தடை செய்யப்பட்டுள்ள சிமி (இந்திய இஸ்லாமிய இளைஞர் கூட்டமைப்பு) முதலியோர்களின் கைவேலை தெரிகிறது என்று வெடிகுண்டு வெடிக்கப்பட்ட இடங்களினின்று பெற்ற ஆதாரங்களை வைத்து எடித்துக்காட்டியுள்ளனர்[14]. அவர்களை கண்காணித்து வருவதாக புலன் விசாரணை செய்யும் குழுக்கள் கூறுகின்றன[15]. மும்பையில் இஸ்லாமிய தீவிரவாதிகள் குண்டுவெடிப்புகள் நடத்தியுள்ளது ஒன்றும் புதியதல்ல. புனாய்வுத்துறை மும்பை மறுபடியும் தாக்குதலுக்குள்ளாகும் என்று தெளிவாக எச்சரித்தது[16]. ஆனல் உள்துறை அமைச்சகம் இதை மறுத்தது. ஆனால், குண்டுகள் வெடிக்கத்தான் செய்தான், மக்கள் இறக்கத்தான் செய்தனர், கொன்ற குரூரக் கொலையாளிகள் இன்னும் தண்டிக்கப்படவில்லை.
பா.ஜ., தலைவர் அத்வானி செல்லும் பாதையில் பயங்கர சதி[17]: அத்வானியைக் கொல்லவேண்டும் என்பதில் தீவிரவாதிகள் குறியாகத்தான் உள்ளனர். குறிப்பாக தமிழகத்தில் வரும்போது கொல்ல வேண்டும் என்ற எண்ணம் வலுவாகவே இருக்கின்றது. இந்த தடவையும் அத்தகைய முயற்சி நடந்துள்ளதா என்று ஆராய வேண்டியுள்ளது. ஏற்கெனெவே ஐ.பி அவர்மீதான தீவிரவாத தாக்குதல் உள்ளது என்று எச்சரித்துள்ளது[18]. “லால் கிருஷ்ண அத்வானி இந்தியாவின் மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவர். பல தீவிரவாத தாக்குதல் பட்டியிலில் அவர் பெயர் முதலில் உள்ளதால், அவருக்கு இஜெஇ-பிளஸ் என்ற பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளாது. அவர் 20 மாநிலங்களில் 38 நாட்கள் பிரயணம் மேற்கொண்டிருப்பதமால் அந்த எச்சரிக்கை விடப்பட்டுள்ளது”. அதாவது இந்த நாட்டில் வெளிப்படையாகவே தீவிரவாதிகள் அத்வானியைக் கொல்வோம் என்று கொக்க்ரித்துக் கொண்டலையும் கூட்டம் உள்ளது என்று இந்திய ரகசிய அமைப்பே ஒப்புக் கொள்கிறது. பிறக் அத்தகைய இயக்கத்தை அல்லது அவ்வாறு அறிந்த மனிதர்களை எப்படி சுதந்திரமாக விட்டு வைத்திருக்கிறது என்று தெரியவில்லை. மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே, பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி ரத யாத்திரை செல்லவிருந்த பாதையில், ஓடைப் பாலத்தின் அடியில் சக்தி வாய்ந்த பைப் வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து, மாற்றுப் பாதையில் அத்வானியின் வண்டி சென்றது. செல்லும் பாதையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. அத்வானியின் உயிருக்கு குறி வைத்து, இந்த குண்டுகளை வைத்தது யார்? என, போலீசார் விசாரித்து வருகின்றனர். சில ஆண்டுகளுக்கு முன், கோவையில் தேர்தல் பிரசாரத்துக்கு வந்த அத்வானியை குறிவைத்து வெடிகுண்டுகள் வெடிக்கப்பட்டன. இப்போது மதுரையிலும் அத்வானிக்கு குறி வைத்து குண்டு வைத்துள்ள சம்பவம், நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது[19].
பிரச்சினை வேறு என்றாலும் குறிக்கோள் ஒன்றாகத்தான் உள்ளது: அரசியல் ரீதியில் கட்சிகள் தங்களது பிரச்சினைகளை மாற்றிக் கொண்டு பிரச்சாரம் செய்யலாம். ஆனால், சித்தாந்த ரீதியிலான போராட்டங்கள், ஈடுபட்ட குழுமங்களுக்கு ஒன்தாகத்தான் உள்ளது. எதிரிகளும் மாறுவதில்லை. ஊழலை எதிர்த்து அத்வானி மேற்கொண்டுள்ள மக்கள் விழிப்புணர்வு யாத்திரை, நேற்று காலை 10 மணிக்கு மதுரையில் இருந்து புறப்பட்டது. திருமங்கலம் வழியாகச் சென்று ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம் பொதுக்கூட்டத்தில், அத்வானி பேச ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.திருமங்கலத்தில் இருந்து 5 கி.மீ., தொலைவில் உள்ள ஆலம்பட்டியில் ஓடைப் பாலத்தின் அருகே, அதே கிராமத்தைச் சேர்ந்த செல்வராஜ், 40, என்பவர் நேற்று காலை 7.30 மணிக்கு விறகு வெட்டச் சென்றார். அப்போது, பச்சை நிற ஒயர்கள் அவரது காலில் பட்டது. அந்த ஒயர்களை பின்தொடர்ந்து சென்று பார்த்தபோது, பாலத்தின் அடியில், மடை உள்ளே செடி, கொடிகளை மறைத்து ஏதோ பொருள் இருந்தது தெரிய வந்தது. அதை அகற்றிப் பார்த்தபோது, உள்ளே 5 அடி நீளமுள்ள 2.5 அங்குலம் விட்டம் கொண்ட இரு பி.வி.சி., பைப்புகள் இருந்தன[20]. இருபக்கங்களும் மூடியிருந்து, இணைக்கப் பட்ட வயர் 50 மீட்டர் தொலைவு வரை நீண்டிருந்தது. அங்கு போட்டார் சைக்கிள்களில் உயோகப்படுத்தப் படும் 12-வோல்ட் பேட்டரியும் காணப்பட்டது. ஜெல் எனப்படுகின்ற ரசாயன வகை வெடிப்பொருள் எளிதாக வெடிக்கக் கூடியவை. பாறைகளை பிளக்க குவாரிகளில் உபயோகப்படுத்தி வருகின்றனர்[21].
பேட்டரியுடன் குண்டு இணைப்பு: போலீசாருக்கு உடனே தகவல் தெரிவிக்கப்பட்டது. டி.எஸ்.பி., ரவிச்சந்திரன் தலைமையில் போலீசார் குவிந்தனர். அந்த பைப்புகளை சோதனை செய்தபோது, அது பைப் வெடிகுண்டுகள் என தெரிய வந்தது. மதுரை வெடிகுண்டு தடுப்பு போலீசார், கயிற்றின் உதவியோடு வெடிகுண்டுகளை வெளியில் இழுத்தனர். அப்போது, வெற்று பைப் மட்டும் வெளியே வந்தது. பின், அதனுடன் இணைக்கப்பட்டிருந்த 4 அடி நீள பைப் வெடிகுண்டை வெளியே எடுத்தனர். அந்த குண்டு, ஒயர் மூலம் 100 மீட்டர் தொலைவில் 12 வோல்ட் மின்சக்தி கொண்ட பேட்டரியுடன் இணைக்கப்பட்டிருந்தது[22].
வேதபிரகாஷ்
28-10-2011
[1] வேதபிரகாஷ், ஜோசப் பாஸ்கரன், அம்மோனியம்நைட்ரேட், குண்டுவெடிப்பு, http://atrocitiesonindians.wordpress.com/2010/11/06/ammonium-nitrate-bomb-manufacture-joseph-tamilnadu/
[3] Union Home Minister P. Chidambaram said that Mohammad Niaz Abdul Rashid, the Indian engineer who was arrested by French Police for alleged links with al Qaida, had been involved with the affiliates of the outlawed SIMI in Tamil Nadu.
[4] FICNs sourced from Pakistan via Bangladesh, with a total face value of .2 million INR was seized and five persons arrestedin Chennai in Tamil Nadu.
[5] வேதபிரகாஷ், தமிழகத்துஜிஹாதிதீவிரவாதிபிரான்ஸில்பிடிபட்டான்: உள்ளூரில்வளரும்தீவிரவாதத்தின்அபாயம்அதிகரித்துவருகிறது!, http://islamindia.wordpress.com/2011/05/25/1443-indian-home-grown-jihadi-tamil-grown/
[6] மேலும் விவரங்கள் கிடைக்கும் போது மாற்றப்படும், சேர்ந்துக் கொள்ளப்படும்.
[10] http://islamindia.wordpress.com/category/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/
[11] இவர்கள் எல்லாமே முஸ்லீம்களாக இருப்பதனால், புலன் விசாரணைக் குழுக்கள், போலீஸ் முதலியோர் அரசியல் நிர்பந்தங்களினால், முரணான செய்திகளை ஊடகங்களுக்கு கொடுத்து, அதன் மூலம் வழக்கில் தீவிரவாதிகளுக்கு சந்தேகத்தின் அடைப்படையில் அல்லது போதிய ஆதாரங்கள் இல்லை என்று விடுதலை அடைகிறார்கள். பிறகு மற்ற வழக்குகளில் அவர்களை சிறையில் வைத்துள்ளார்கள். அல்லது பைலில் வெளியில் வந்ததும் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் வளைகுடா நாடுகளில் (துபாய், கடார்..) சென்று மறைந்து வாழ்கிறார்கள் மற்றும் தொடர்ந்து இத்தகைய தீவிரவாத செயல்களை செய்து வருகிறார்கள்.
[15] http://www.rediff.com/news/report/mumbai-bomb-blasts-simi-im-men-under-the-scanner/20110715.htm
[17] தினமலர், பா.ஜ., தலைவர்அத்வானிசெல்லும்பாதையில்பயங்கரசதி, http://www.dinamalar.com/News_Detail.asp?Id=339525; இப்பத்திரிக்கை இப்படி தலைப்பிட்டு செய்தி வெளியிட்டுள்ளது. இது உண்மையா அல்லது சாத்தியக்குறுகள் என்ன, பின்னணி என்ன என்பதை இக்கட்டுரையில் அலசப்படுகிறது.
[18] Lal Krishna Advani is one of the senior most political leaders in the country. He has a Z+ security cover and is on the target lists of several terror groups. And as Advani continues his 38-day Rath Yatra across 20 states, the Intelligence Bureau (IB) has sounded a warning over his security cover.
http://www.timesnow.tv/IB-warns-of-threat-to-Advanis-yatra/videoshow/4387027.cms
[21] Two pipe bombs, one of which was packed with “Gell-19” explosives usually used in granite quarrying, were found in one of the culvert tunnels at Alampatti.
[22] The PVC pipe, with 12 cm diameter, was in two sections, and closed with lids on both ends. A wire was connected to a detonator for a distance of about 50 metres. The 12-volt battery, used in two-wheelers, was found under a Palmyra tree at a distance. The explosive was defused at a place away from the causeway and removed to an undisclosed place for analysis. The wire was found concealed under heaps of grass and a sari. ‘Power gel’ is referred to as a “power-sensitive, high explosive” used for blasting rocks.