தமிழகத்தில்இரண்டாவதாகஅதிகதேசதுரோகவழக்குகள்பதிவுசெய்யப்பட்டுள்ளன: தமிழகத்தில் கடந்த 2010 முதல் 2020ம் ஆண்டு வரையிலான அதிமுக ஆட்சியில் அதிகளவு தேச துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டதால், நாட்டிலேயே 2வது இடத்தை பெற்றுள்ளது[1]. இவ்விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றம் விசாரணை நடத்தி வரும் நிலையில் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது[2] என்று தினகரன் கூறுவது வேடிக்கைதான். தேச துரோகம் தொடர்பான இந்திய தண்டனைச் சட்டத்தின் 124ஏ பிரிவு குறித்து உச்ச நீதிமன்றம் விசாரித்து வருகிறது. இந்தச் சட்டத்தை மறுபரிசீலனை செய்யத் தேவையில்லை என்று உச்ச நீதிமன்றத்தில் ஒன்றிய அரசு தரப்பு வாதாடி வந்தது. ஆனால், இந்தச் சட்டம் தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க முடியும் என்று ஒன்றிய அரசின் தரப்பில் கூறப்பட்டது. அதனால், தற்போது நிலுவையில் இருக்கும் தேசதுரோக வழக்குகளையும், இடைப்பட்ட காலத்தில் பதிவு செய்யப்பட்ட தேசதுரோக வழக்குகளையும் எவ்வாறு கையாள்வது என்பது தொடர்பான விபரங்கள் உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசால் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில்பிரிவினைவாதம்பேசப்படுவதுபுதியதல்ல: அதிமுக ஆட்சியில் அதிகம், திமுக ஆட்சியில் அதிகம் / குறைவு என்பதெல்லாம் விசயமே இல்லை, ஏனெனில், தமிழ்-தமிழ்நாடு-தமிழ்தேசம்-தமிழ்தேசியம் என்றெல்லாம் பேசி பிரிவினைவாதத்தில், பிரிவினையில் ஈடுபட்டவர்கள், ஈடுபட்டு வருபவர்கள் அதிகமாக இருக்கின்றனர். கருணாநிதி முதலமைச்சராக இருந்த பொழுது அத்தகையோரின் மாநாடுகளுக்கு தடை விதித்துள்ளனர். கொடைக்கானல் டிவி நிலையத்தில் குண்டுவெடிப்பு, மீன்சுருட்டியில் இந்தியன் வங்கி கொள்ளை-கொலை……போன்றவை ஞாபகத்தில் கொள்ளலாம். தமிழீழம் போர்வையிலும், பல குழுக்கள் செயல் பட்டு வந்தது-வருபவை அறியப் பட்டவையே. இப்பொழுது கிலாபா போர்வையில் முஸ்லிம் குழுக்கள் வேலை செய்து வருகின்றன. ஆகவே, தமிழகத்தில் “ஒன்றிய” போர்வையில் நடந்து வரும் பேச்சுகளும் கவனிக்கப் பட்டு வருகின்றன. “மாநில சுயயாட்சி,” “திராவிடியன் ஸ்டாக்,” “திராவியன் மாடல்” என்பவை எல்லாம் அவற்றின் முகமூடிகளே. ஏனெனில், இப்பொழுது இனம், இனவாதம் எல்லாம் யாரும், எந்நாடிலும் பேசுவதில்லை.
ஐபிசி–யின்பிரிவு 124ஏ–ன்கீழ்தேசத்துரோகவழக்குபதிவு: தேசதுரோக வழக்கின்படி, எந்தவொரு நபரும் அரசுக்கு எதிரான கருத்துக்களை எழுதினாலோ அல்லது பேசினாலோ அல்லது அத்தகைய உள்ளடக்கத்தை ஆதரித்தாலோ அல்லது தேசிய சின்னங்கள் மூலம் அரசியலமைப்பை இழிவுபடுத்த முயன்றால், அவர் மீது ஐபிசி-யின் பிரிவு 124ஏ-ன் கீழ் தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்படலாம். மேலும், தேச விரோத அமைப்போடு தொடர்புடையவராகவோ அல்லது அவர்களுக்கு உடந்தையாக செயல்பட்டால் அவருக்கு எதிராகவும் தேசத்துரோக வழக்கு பதிய முடியும். இந்நிலையில், தேசத் துரோகச் சட்டம் குறித்த விவாதங்களுக்கு மத்தியில் அதிர்ச்சித் தகவல் ஒன்று வெளியாகி உள்ளது என்று தினகரன் குறிப்பிடுவது தமாஷான விசயம் தான். எல்லாவற்றையும் அதிமுக ஆட்சியின் மீது பழி போட்டு தப்பித்துக் கொள்ள முடியாது. இந்த ஐந்தாண்டுகள் பற்றி, பிறகு தான் எடைபோட முடியும். தங்களுக்குத் தானே சான்றிதழ் கொடுத்துக் கொள்ளலாம், ஆனால், மக்களை ஏமாற்ற முடியாது.
2010-2022 ஆண்டுகளில்பதிவானவழக்குகள்எண்ணிக்கை: நாடு முழுவதும் கடந்த 2010ம் ஆண்டு முதல் 2020ம் ஆண்டு வரை அதிகளவு தேசத்துரோக வழக்குகளை பதிவு செய்த மாநிலமாக பீகார் உள்ளது. அதற்கு அடுத்த இடத்தில் தமிழ்நாடு உள்ளது. தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்ட அறிக்கையின்படி, கடந்த 2010ம் ஆண்டு முதல் 2020ம் ஆண்டு வரை, பீகாரில் மட்டும் 168 தேசதுரோக வழக்குகள் பதிவாகியுள்ளன. தொடர்ந்து –
தமிழ்நாட்டில் – 139, உத்தரப் பிரதேசத்தில் – 115, ஜார்கண்ட்டில் -62, கர்நாடகாவில் – 50, ஒடிசாவில் – 30, அரியானாவில் – 29, ஜம்மு காஷ்மீரில் – 26,
என்ற வரிசையில் வழக்குகள் பதிவாகி உள்ளன. இதில் திமுக அரசு பெருமைப் பட்டுக் கொள்வதில் ஒன்றும் இல்லை. இந்த ஒரு வருடத்தில், இந்துவிரோத செயல்கள் எவ்வளவு நடந்துள்ளன என்பதை கவனிக்கலாம். அவையெல்லாம் பெருமை சேர்ப்பவை அல்ல. ஒரு நிலையில் அவையும் தேசவிரோதம் ஆகும்.
வழக்குகள்அதிகம், ஆனால், குற்றம்நிரூபிக்கப்படுவதுகுறைஆகஉள்ளது: மேலும், கடந்த 2016 மற்றும் 2019 ஆண்டுக்கு இடையில், தேசத்துரோக வழக்குகளின் எண்ணிக்கை 160 சதவீதம் (93 வழக்குகள்) அதிகரித்துள்ளது. ஆனால் 2019ம் ஆண்டில் தண்டனை விகிதம் என்று பார்த்தால் 3.3 சதவீதமாக உள்ளது. குற்றம் சாட்டப்பட்ட 93 பேரில் இருவர் மட்டுமே குற்றவாளிகள் என்று அறிவிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழகத்தை பொருத்தமட்டில் 2010ம் ஆண்டு முதல் 2020ம் ஆண்டு வரை அதிகளவு தேசத்துரோக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அந்த காலக் கட்டத்தில் தமிழகத்தில் அதிமுக ஆட்சி நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது, என்று தினகரன் குறிப்பிட்டு சந்தோசப்படுகிறது. ஆனால், திமுகவின் பிரிவினைவாதம் உலகம் அறிந்தது. இப்பொழுதைய “ஒன்றிய” நிலை தொடர்ந்து, கவர்னர் தாக்கப் பட்டால், த்ஹிராவிடியன் மாடல் தகர்ந்து விடும். சடம்-ஒழுங்கு சீரழிந்து கொண்டிருந்தால், முடிவு வேறு மாதிரி சென்று விடும்..
152 ஆண்டுகள்பழமையானதேசவிரோதசட்டத்தைதற்காலிகமாகநிறுத்திவைத்தது: 152 ஆண்டுகள் பழமையான தேசவிரோத சட்டத்தை தற்காலிகமாக நிறுத்திவைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது[3]. 124 ஏ சட்டத்தின் கீழ் வழக்கு பதியவும் தடை விதித்துள்ள உச்ச நீதிமன்றம், தேச துரோக சட்டத்தின் கீழ் சிறையில் உள்ளவர்கள் ஜாமீன் பெற விண்ணப்பிக்கலாம் எனவும் கூறியுள்ளது[4]. ஆங்கிலேயே காலனிய ஆட்சியின்போது அரசுக்கு எதிராக விடுதலைப் போராட்டத்தில் ஈடுபடுபவர்களை ஒடுக்கும் விதமாக தேசத்துரோக வழக்குகள் பதியப்பட்டன. நாடு விடுதலை பெற்ற பின்னரும் காலனிய சட்டமான தேசத் துரோக வழக்கு பதியப்பட்டு வருகிறது.இந்நிலையில், அரசுக்கு எதிராக குரல் எழுப்பும் சமூக ஆர்வலர்கள், அரசியல் தலைவர்கள், பத்திரிக்கையாளர்கள் மீது 124A சட்டப்பிரிவின் கீழ் தேசத் துரோக வழக்குப் பதியப்பட்டு வருவதாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டு வருகிறது. எனவே, காலனியத்துவ தேசத்துரோக வழக்கு சட்டப்பிரிவான 124A-ஐ ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை எழுப்பப்பட்டது.
பத்திரிக்கைசங்கங்கள்வழக்குதொடர்ந்தன: தேச துரோக சட்டத்துக்கு தடைகோரி எடிட்டர்ஸ் கில்டு, பத்திரிக்கையாளர் அருண் சோரி, எம்பி மௌவா மைத்ரா, பி.யு.சி.எல் உள்ளிட்டோர் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணா, நீதிபதிகள் சூர்ய காந்த் மற்றும் ஹிமா கோஹ்லி ஆகியோர் அடங்கிய மூன்று நீதிபதிகள் அமர்வு இந்த வழக்கை விசாரித்து வருகிறது. வழக்கு 11-05-2022 அன்று விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசும் மாநில அரசுகளும் தேச விரோத சட்டத்தை பயன்படுத்த இடைக்கால தடை விதித்தது[5]. தலைமை நீதிபதி அமர்வு, அதனையும் மீறி ஏதேனும் வழக்குகள் எங்காவது பதிவு செய்யப்பட்டால் நீதிமன்றத்தை நாட உத்தரவிட்டது[6]. இதுதொடர்புடைய வழக்குகளை நீதிமன்றங்கள் விரைந்து முடிக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. இந்த சட்டத்தை பயன்படுத்தாமல் இருக்க மத்திய அரசு மாநிலங்களுக்கு கூடுதல் ஆலோசனைகளை வழங்கலாம் எனவும் உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. ஏற்கனவே கைது செய்யப்பட்ட 13 ஆயிரம் பேர் நீதிமன்றங்கள் மூலம் ஜாமின் பெற்றுக்கொள்ளவும் உச்சநீதிமனறம் அனுமதி அளித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
[3] NEWS18 TAMIL, தேசதுரோகவழக்குபதியஉச்சநீதிமன்றம்தடை.. சட்டம்தற்காலிகமாகநிறுத்திவைப்பு, Published by:Murugesh M, LAST UPDATED : MAY 11, 2022, 13:41 IST. First published: May 11, 2022, 13:40 IST.
[5] தமிழ்.இந்தியன்.இக்ஸ்பிரஸ், அரசுமறுபரிசீலனைசெய்யும்வரைதேசதுரோகவிசாரணையைநிறுத்திவைத்தஉச்சநீதிமன்றம்!, Written by WebDesk, Updated: May 11, 2022 10:05:24 pm
பொங்கல்பற்றிதிராவிடநாத்திகர்களின்குழப்பமானநிலைப்பாடு: 1940களிலிருந்து ஈவேராவின் “ஆரிய-திராவிட” திரிபுவாதங்களால், பொங்கல் பண்டிகைக்கும் மாற்று விளக்கம் கொடுக்கப் பட்டு, திராவிடத்துவவாதிகள் பொங்கல் கொண்டாட்டங்களை எதிர்த்து வந்தது தெரிந்த விசயம். பிராமணர் அல்லாத உயர்ஜாதி இந்துக்கள் ஆதிக்கம் பெறுவதற்காக, சைவமும் திரிபுவாதங்களுக்கு உட்படுத்தப் பட்டு, “இந்து-விரோத” ரீதியில் எடுத்துச் செல்லப்பட்டது[1]. அந்நிலையில், திமுக ஆட்சியைப் பிடித்ததும், அரசு ஆதிக்கத்துடன், தமிழ கலாச்சாரம், நாகரிகம், பண்பாட்டு முதலிய காரணிகளை சிதைக்க “இந்து அறநிலையத் துறை” உபயோகப் படுத்தப் பட்டது. அண்ணாதுரை பொங்கல் பண்டிகையை எதிர்க்கவில்லை, அதனை “புனித பொங்கல்” என்றார்[2]. கருணாநிதி ஆரம்பத்தில் எதிர்த்தாலும், பிறகு வியாபார ரீதியில் “சமத்துவ பொங்கல்” ஆக்கினார்[3]. “சங்க இலக்கிய சரித்திர ஆதாரங்களுக்கு” முரண்பட்ட, விரோத கருத்துகளைப் புகுத்தி கெடுக்கப்பட்டது தான் “தமிழர் (பொங்கல்) விழா”. இருப்பினும் பெரும்பான்மையான மக்கள் பாரம்பரிய முறையில் கொண்டாடி வருவதால், பேச்சுடன் வைத்துக் கொண்டு, மற்ற சின்னங்களை அப்படியே திராவிடத்துவத்தில் அடக்கிக் கொண்டு மக்களை ஏமாற்றி வருகின்றனர். ஏனெனில், அதில் முக்கியமாக இருப்பது கோடிக் கணக்கான வியாபாரம், லாபங்கள்!
சென்னைசங்கமும், ஊழல்பொங்கல்கொண்டாட்டங்களும்: “சென்னை சங்கமம்,” கிறிஸ்தவ பாதிரி ஜகத் காஸ்பரின் “தமிழ் மையம்” மற்றும் தமிழக அரசு பண்பாடு மற்றும் சுற்றுலாத் துறை சேர்ந்து, கனிமொழி நடத்த ஆரம்பித்தார். இலக்கிய ரீதியிலும் தேசவிரோத கருத்துகளை பரப்பினர். ஸ்பெக்ட்ரம் ஊழலில் தொடர்புடைய கிரீன் ஹவுஸ் பிரமோட்டர்ஸிடமிருந்து தமிழ் மையத்திற்கு பெரிய நிதி வழங்கப்பட்டது குறித்தும், சி.பி.ஐ. விசாரணை நடந்தது. தமிழக அரசின் ஆதரவுடன் 2007ல் தொடங்கி, இதன் நான்காவது நிகழ்வு ஜனவரி 10 முதல் 16. 2010 வரை நடைபெற்று, பிறகு கோடிக்ககணக்கானா ஊழல் புகாரினால் முடங்கியது[4]. இவ்வாறு சித்தாந்தம் மற்றும் பணம் சம்பாதிக்கும் பின்னணியில் தான், திராவிட நாத்திக அரசியல்வாதிகளின் பொங்கல் பண்டிகை கொண்டாட்டம் இருந்தது. ரேசன் கார்ட் உள்ளவர்களுக்கு “இனாம்” கொடுக்கும் முறையும் தொடர்ந்து நடந்து வருகிறது. ஆக, 2018ல் கனிமொழி இந்துமதத்தை நாத்திக மாநாட்டில் கேவலப் படுத்திய நிலையில், சகோதரர் ஸ்டாலின், இவ்வாறு பொங்கல் கொண்டாடுவதை கவனிக்கலாம்.
பொங்கல்விழாவில்கலந்துகொண்டஸ்டாலின்: திமுக சார்பில் சென்னை அயனாவரம், கொளத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் பொங்கல் கொண்டாட்டங்கள் நடைபெற்றது. வீதிகள் தோறும் தோரணம் கட்டியும், மேடைகள் அமைத்தும் நாட்டுப்புற கலைகள் நிகழ்த்தப்பட்டதை, அக்கட்சியின் செயல்தலைவர் ஸ்டாலின் பார்வையிட்டார். தொடர்ந்து துறையூரில் நடைபெற்ற பொங்கல் நிகழ்ச்சியில் பங்கேற்று உரையாற்றிய ஸ்டாலின், தமிழகம் 20 ஆண்டுகளுக்கு பின்னால் போய்க்கொண்டிருப்பதாக கூறினார்[5]. திமுக ஆட்சிக்கு வந்தால் தை முதல் நாள் தமிழ் புத்தாண்டாக கொண்டாடப்படும் என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார். சென்னை கொளத்தூரில் பொங்கல் பண்டிகை கொண்டாட்டத்தை தொடக்கி வைத்த ஸ்டாலின், நலத்திட்ட உதவிகளையும் பொங்கல் பொருட்களையும் வழங்கினார். தை முதல் தமிழ் புத்தாண்டாக கொண்டாடப்பட்டு வந்தது. திமுக ஆட்சி காலத்தில் தை முதல்நாள் தமிழ் புத்தாண்டாக கொண்டாடப்படும் என்றும் கூறினார். தை பிறக்கும் காலத்தில் நல்ல விடிவுகாலம் பிறக்கப்போகிறது என குறிப்பிட்ட ஸ்டாலின், அரசியல் ரீதியாக நாட்டைப்பிடித்துக் கொண்டிருக்கும் சனி இன்றோடு ஒழிய வேண்டும் என்றும் கூறினார்[6]. ஆண்டாள் பற்றிய கருத்துக்கு வைரமுத்து மன்னிப்பு கேட்ட பின்னரும் அதனை பூதாகரமாக்கி வளரவிடுவது நியாயமல்ல என்றும் கூறினார்[7]. கருணாநிதி, அறிஞர் அண்ணா பற்றி எச். ராஜா எழுதி பெரிய ஆளாக வேண்டும் என்று நினைக்கிறார். அவரது கருத்துக்கு நான் பதில் கூற விரும்பவில்லை என்றும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்[8].
ஸ்டாலின்முழுபேச்சு: நான் முதல்வராக வருகிறேனோ, இல்லையோ.. உங்களைப் பொறுத்தவரையில், உங்களுடைய காவலனாக, சிறந்த சேவகனாக என்றைக்கும் இருப்பேன் என உறுதியுடன் சொல்ல விரும்புகிறேன் என்று திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார். திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயல் தலைவரும், தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று கொளத்தூர் தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாக்களில் பங்கேற்றார். அப்போது பொதுமக்கள் மத்தியில் பேசிய ஸ்டாலின், ஒவ்வொரு ஆண்டும் நமது கொளத்தூர் தொகுதியில் தமிழ்ப் புத்தாண்டு மற்றும் பொங்கல் விழாக்களை நாம் தொடர்ந்து கொண்டாடி, அனைவருக்கும் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகளையும், பொங்கல் திருநாள் வாழ்த்துகளையும் தெரிவிக்கும் வாய்ப்பு உங்களில் ஒருவனாக இருக்கின்ற எனக்கு கிடைத்து வருகிறது. கொளத்தூர் தொகுதியை சேர்ந்த உங்களோடு நான் எப்போதும் இருப்பதால், இந்த நேரத்தில் உங்களிடம் நான் அதிக நேரம் பேச வேண்டியதில்லை.
காரணம், இது எனது தொகுதி என்று சொல்வதை விட, என்னுடைய இல்லம், வீடு என்று சொல்லக்கூடிய அளவுக்கு, என்னை நீங்கள் தேர்ந்தெடுத்து இருக்கின்றீர்கள் என்று சொல்வதை விட, என்னை உங்களோடு இணைத்துக் கொண்டு இருக்கிறீர்கள் என்று சொல்லும் நிலை இருக்கின்றது. எனவே, இந்த நிகழ்ச்சியில் ஒரு குடும்ப உணர்வோடு, பாசத்துடன் பங்கேற்று இருக்கிறீர்கள். இன்னும் சொல்ல வேண்டுமென்றால், உங்களுக்கு வாழ்த்து சொல்ல நான் வந்திருக்கிறேன் என்பதைவிட, உங்களிடம் நான் வாழ்த்துபெற வந்திருக்கிறேன் என்பதுதான் பொருத்தமாக இருக்கும். ஏனென்றால், நான் உங்கள் வீட்டுப் பிள்ளை. காரணம், இந்தத் தொகுதியில் என்னை கடந்த முறை பெற்ற வாக்குகளை விட அதிகமான வாக்குகள் அளித்து, இரண்டாவது முறையாக வெற்றி பெற வைத்து இருக்கின்றீர்கள். இங்கு ஜவகர் அவர்கள் பேசியபோது, முதலமைச்சராக வரப்போகிறார் என்று எண்ணி எனக்கு வாக்களித்தீர்கள் என்றார்[9]. நான் அவருக்கும், உங்களுக்கும் சொல்ல விரும்புவது, நான் முதலமைச்சராக வருகிறேனோ, இல்லையோ ஆனால் இந்தத் தொகுதியைப் பொறுத்தவரையில், நான் என்றைக்கும் உங்களுடைய முதல் குடிமகனாக, உங்களுடைய முதல் காவலனாக, இந்தத் தொகுதிக்குப் பணியாற்றும் சிறந்த சேவகனாக நான் என்றைக்கும் இருப்பேன் என உறுதியுடன் சொல்ல விரும்புகிறேன்[10].
[3] திகவின் வீரமணி “விடுதலை,” கருணாநிதியின் “முரசொலி,” நாத்திக-திராவிட சித்தாந்திகள் அத்தகைய கருத்துகளை பிரச்சாரம் செய்து, இளைஞர்களை ஏமாற்றி வந்தனர்.
[4] The searches were conducted at Tamil Maiyam, an NGO founded by Jegath Gasper Raj, in Mylapore. Tamil Nadu Chief Minister M. Karunanidhi’s daughter Kanimozhi, a DMK Member of Parliament, is a trustee of Tamil Maiyam, the key organisation behind Chennai Sangamam, a high-profile cultural event held since 2007.
The CBI recorded the statement of an employee of Green House Promoters Pvt Ltd whose Managing Director Batcha had fired over 40 employees on the recommendation of Balwa. Batcha, who was interrogated by the CBI, was found dead under mysterious circumstances in Chennai in March 2016. ….one company of DB Group, Eterna Developers Pvt Ltd had some business transactions with Green House Promoters Pvt Ltd. It (Eterna Developers) transferred around Rs 1.25 crore to Green House Promoters and after some time, this amount was paid back by Green House Promoters to Eterna Developers…..
பெரியார்தாசன் என்கின்ற அப்துல்லா காலமானார்: பாரதிராஜாவின் `கருத்தம்மா’, `காதலர் தினம்’ உள்பட பல்வேறு தமிழ் திரைப் படங்களில் நடித்தவர் பெரியார்தாசன். இவர் சென்னை பச்சையப்பா கல்லூரியில் 38 ஆண்டுகள் பேராசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். 15-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த இவர் பட்டிமன்றம், கருத்தரங்குகளில் பங்கேற்று வந்தார். ம.தி.மு.க. நிர்வாகியான இவர் அந்த கட்சியின் உயர் நிலைக்குழு உறுப்பினராக இருந்தார். பெரியார்தாசன் வீடு திருவேற்காடு மகாலட்சுமி நகர் 6-வது தெருவில் உள்ளது. கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். கல்லீரல் கோளாறு காரணமாக குளோபல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று நள்ளிரவு 1.25 மணிக்கு மரணம் அடைந்தார். அவருக்கு வயது 63. அவரது உடல் திருவேற்காட்டில் உள்ள அவரது வீட்டில் பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது[1]. பெரியார்தாசனுக்கு வசந்தா (62) என்ற மனைவியும், வளவன் (35), சுரதா (35) என்ற 2 மகன்களும் உள்ளனர்[2].
அவருடையஆன்மாசாந்தியடையபிரார்த்தனை: “அவருடைய ஆன்மா சாந்தியடைய பிரார்த்தனை” என்று செய்யலாமா, கூடாதா என்று தெரியவில்லை. இருப்பினும், இந்தியப் பாரம்பரியப்படி, “அவருடைய ஆன்மா சாந்தியடையடைவதாக” என்று சொல்லிக் கொண்டு, அவரது குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்ளலாம். இணைதளங்களில் தேடியபோது, நக்கீரனில் வெளிவந்த கீழ்கண்ட செய்தி கண்களில் பட்டது. அது அப்படியே கொடுக்கப்படுகிறது. கதிரவன் என்பவர் அச்செய்தியைக் கொடுத்திருக்கிறார்.
என்னநடந்ததுஇவர்கள் (பெரியார்தாசன்மற்றும்மணிவண்ணன்) வாழ்க்கையில்?: அவ்வப்போது சினிமாவில் நடித்து வந்த பெரியார்தாசன் அண்மையில் (2010) ஆத்திகரானார். அதுமட்டுமில்ல – இஸ்லாம் மதத்திற்கு மாறினார் (11-03-2010). இவர் மாதிரியே பெரியாரின் தீவிர பற்றாளர் மணிவண்ணன். இவர் இப்போது சாய்பாபா பக்கம் சாய்ந்திருக்கிறார். சென்னை பச்சையப்பன் கல்லூரியில் தத்துவ இயல்[3] பேராசிரியராக பணிபுரிந்த பெரியார்தாசனை பாரதிராஜா சினிமாவுக்கு கொண்டு வந்தார். நடிப்போடு ரியல் எஸ்டேட், மல்டி லெவல் மார்க்கெட்டிங்கிலும் கால் பதித்தார். கடந்த 2004ம் ஆண்டு அன்பு பாலா நடித்த அம்மா, அப்பா, செல்லம் படத்தின் படப்பிடிப்பு புதுச்சேரியில் நடந்தது. இதற்காக சென்னையில் இருந்து நான், (பேட்டி எடுக்க) பெரியார்தாசன், நடிகை சபீதா ஆனந்த் (நடிக்க) மூவரும் ஒரு காரில் புதுச்சேரி சென்றோம். அப்போது பெரியார்தாசன், தனது மகன் வ.சி.வளவன் திருமணம் அழைப்பிதழ் கொடுத்தார். அது ஒரு புத்தகமாகவே இருந்தது. அந்த திருமண அழைப்பிதழில் பெரியாரின் படம் அச்சிடப்பட்டிருந்தது. உள்ளே திருக்குறள் இன்பத்து பாலுக்கு பெரியார்தாசன் எழுதிய விளக்கவுரை.
ஏன்பெரியாரின்படத்தைதிருமணஅழைப்பிதழில்அச்சிட்டுள்ளேன்: ஏன் பெரியாரின் படத்தை திருமண அழைப்பிதழில் அச்சிட்டுள்ளேன் என்று நினைப்பீர்கள்? என்று அவராகவே கேட்டு அவராக விளக்கம் சொல்லிக்கொண்டு வந்தார். சேசாசலம் என்கிற என் பெயரையே பெரியார்தாசன்னு மாத்திக்கிட்டேன்னா பார்த்துக்குங்க…….என்று பெரியார் மீது தான் கொண்ட பற்று பற்றி, கிழக்கு கடற்கரை சாலை நீலாங்கரையில் ஆரம்பித்து மரக்காணம் வரை சொல்லிக்கொண்டு வந்தார். நொங்கு கடை, இளநீர் கடைகளில் கார் நின்ற போது மட்டும் இடைவேளை. ஐந்து வருடங்களில் (2005-2010) அவர் வாழ்க்கையில் என்ன மாற்றம் நிகழ்ந்ததோ….தற்போது இறைவன் மீது நாட்டம் கொண்டிருக்கிறார். இஸ்லாம் மதத்திற்கு மாறியுள்ளார். இதே போல் பெரியாரின் தீவிர பற்றாளர் மணிவண்ணன். இதனால்தான் இவருக்கும் நடிகர் சத்யராஜூக்கும் நெருக்கம் அதிகமானது. இவர் இப்போது பெரியார் தொண்டர்களுக்கு அடுத்த அதிர்ச்சி கொடுத்திருக்கிறார். கடந்த சில வாரங்களுக்கு முன் மஹாராஷ்டிராவில் இருக்கும் சீரடி சாய்பாபா சன்னதிக்கு சென்று வந்திருக்கிறார்[4]. கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்யும் அளவிற்கு என்ன நடந்தது இவர்கள் வாழ்க்கையில்?
2013ல்பெரியார்தாசன், மணிமண்ணன்காலமானது:ஜூன் 2013ல் தான் நாத்திகரான மணிவண்ணன் (31-07-1954 – 15-06-2013) காலமானார். கதிரவன் நக்கிரனில் எடுத்துக் காட்டியுள்ளபடி, மணிவண்ணன் “கடந்த சில வாரங்களுக்கு முன் மஹாராஷ்டிராவில் இருக்கும் சீரடி சாய்பாபா சன்னதிக்கு சென்று வந்திருக்கிறார்[5]” என்றிருந்தால், இந்த மூன்று ஆண்டுகளில் மணிவண்ணன் ஆதிகரானாரா, கடவுளை நம்ப ஆரம்பித்தாரா, என்பதெல்லாம் நமக்கு தெரியாது. ஆனால், அவரது நண்பர் இந்த மூன்று ஆண்டுகளாக முஸ்லிமாக இருந்திருக்கிறார். (பகுத்தறிவு, நாத்திகம் இவற்றையெல்லாம் மூட்டைக் கட்டிவிட்டு, பெரியாரையும் ஒதுக்கி விட்டு) கடவுளை நம்பியிருக்கிறார். திராவிடர்களுக்குக் குழப்பமாகத்தான் இருக்கும். ஊடகங்களும்[6] “பெரியார்தாசன் மரணம்” என்றுதான்[7] செய்திகளை[8] வெளியிட்டிருக்கிறார்கள்[9].
இதயத்தில்விழுந்தஇடி – பெரியார்தாசன்மறைவுக்குவைகோஇரங்கல்: இதயத்தில் விழுந்த இடி என்று பேராசிரியர் பெரியார்தாசன் மறைவுக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்[10]. அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், திராவிட இயக்கத்தின் கருத்துக் களஞ்சியக் கருவூலமான, என் ஆருயிர்ச் சகோதரர் அப்துல்லாஹ் பெரியார்தாசன், என்னையும், இயக்கத்தோழர்களையும் கண்ணீரில் துடிக்க வைத்து மறைந்து விட்டார். தந்தை பெரியாரை, மாணவப் பருவத்தில் தலைவராக ஏற்றுக்கொண்டு, சுயமரியாதை வீரராக, பகுத்தறிவு நெறியை மக்களிடம் பரப்ப, எழுத்தாலும், பேச்சாலும் அவர் ஆற்றிய பணிகள் ஈடு இணையற்றவை.
பொருளியல், தத்துவஇயல், உளவியல்பயின்றது: பச்சையப்பன் கல்லூரியில், பொருளியல் இளங்கலை, தத்துவ இயல் முதுகலை பட்டங்களைப் பெற்று, இலண்டன் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் உளவியல் பயின்று, முனைவர் பட்டம் பெற்று, அமெரிக்காவின் கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தில் ஆறு ஆண்டுகள் பேராசிரியராகப் பணி ஆற்றி, 34 ஆண்டுகள் பச்சையப்பன் கல்லூரியில், மெய்ப்பொருள் இயல் பேராசிரியராகப் பணி ஆற்றினார். அண்ணல் டாக்டர் அம்பேத்கருடைய, அனைத்து நூல்களையும் பழுதறக் கற்று, ஆய்ந்து அறிந்து, அதில் அவர் பெற்ற பாண்டித்யத்துக்கு நிகராக இன்னொருவரைச் சொல்ல முடியாது. அதைப்போலவே, தந்தை பெரியாரின் எழுத்துகளையும், உரைகளையும், முழுமையாகக் கற்று உணர்ந்தவர்; அறிவாசானின் நம்பிக்கையையும், அன்பையும் பெற்று, திராவிடர் கழகத்தில் கொள்கை பரப்புச் செயலாளராகவும் இயங்கியவர்.
தமிழ்ஈழவிடுதலை, பௌத்தம், பாலிமொழிகற்றல்முதலியன: தமிழ் ஈழ விடுதலைக்காக அரும்பாடுபட்டவர். மூன்று தமிழர்களின் உயிர்களை, தூக்குக் கயிற்றில் இருந்து விடுவிக்க, நான் போராடிய காலத்தில், தாமாக முன்வந்து, தன்னை மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைத்துக் கொண்டு, கடந்த இரண்டு ஆண்டுகளாக, கழகத்தை மக்கள் மன்றத்தில் வலுப்படுத்திட, மேடை முழக்கத்தின் மூலமாக, அவர் ஆற்றி உள்ள பணிகள் அளப்பரியதாகும். புத்தரின் போதனைகளைப் பயில்வதற்காக, இலங்கைக்குச் சென்று, பாலி மொழியைக் கற்றுத் தேர்ச்சி பெற்றார். 56 நூல்களைத் தந்து உள்ள பெரியார்தாசன், அம்பேத்கர் தொகுத்த புத்தரும் அவர் தம்மமும் என்ற நூலை, தமிழில் மொழி ஆக்கம் செய்தார். அந்தநூல், தைவான் நாட்டில் மூன்று இலட்சம் படிகள் அச்சிடப்பட்டு, உலகெங்கும் பரப்பப்பட்டன.
உடலைஎரியூட்டவும்வேண்டாம்; புதைக்கவும்வேண்டாம்: அவர் உடல் நலம் குன்றியபோது, ஜூலைத் திங்களில் அவரது இல்லம் சென்று சந்தித்து, பல மணி நேரம் உரையாடிக் கொண்டு இருந்தேன். இரண்டு நாள்களுக்கு முன்பு, ஆகஸ்ட் 16 ஆம் நாள், குளோபல் மருத்துவமனையில் அவரைச் சந்தித்தேன். மூன்று மணி நேரம் அவர் என்னிடம் மனம்விட்டுப் பேசிக்கொண்டு இருந்தார். அதுதான், அவர் கடைசியாகப் பேசியது என்று, அவரது பிள்ளைகள், நேற்று என்னிடம் தெரிவித்தனர். பேரறிஞர் அண்ணாவைக் கொத்திச் சென்ற புற்று நோய்தான், பெரியார்தாசனையும் நம்மிடம் இருந்து பறித்து விட்டது. ‘தான் இறந்தபிறகு, விழிகளை சங்கர நேத்ராலயா மருத்துவமனைக்குத் தந்து விடுங்கள்; உடலை எரியூட்டவும் வேண்டாம்; புதைக்கவும் வேண்டாம்; உடலை சென்னை மருத்துவக் கல்லூரி மாணவர்களது ஆராய்ச்சி படிப்புக்காகக் கொடுத்து விடுங்கள்’ என்று குடும்பத்தாரிடம் கூறியதற்கு ஏற்ப, அவ்விதமே அவரது உடல், சென்னை மருத்துவக் கல்லூரிக்கு வழங்கப்படுகிறது. இன்னும் பல ஆண்டுகள் வாழ்ந்து, திராவிட இயக்கத்துக்கும், தமிழ் இனத்துக்கும் அருந்தொண்டு ஆற்ற இருந்த, எங்கள் கொள்கை வைரத்தை, சாவு கொடூரமாகக் கொண்டு போய் விட்டதே என்ற வேதனையில் தவிக்கிறேன். அவரை இழந்து ஆற்றொணாத் துயரத்தில் வாடும், அவரது குடும்பத்தினருக்கும், உற்றார் உறவினர்க்கும் எனது கண்ணீர் அஞ்சலியைத் தெரிவித்துக் கொள்கின்றேன் என்று தெரிவித்துள்ளார்[11].
வாழ்க்கைக்குறிப்பு: சேசாசலம் 1950ம் ஆண்டு வட ஆற்காடு மாவட்டத்தில் உள்ள அகரம் என்ற கிராமத்தில், சைவவேளாளர் குடும்பத்தில் பிறந்தார். சேசாசல முதலியாராக, இந்துமத நம்பிக்கையாளராக இருந்தார். 1980ல் பெரியாரின் தொடர்பினால், “பெரியார்தாசன்” ஆனார். திராவிட சித்தாந்தத்தில் ஊறியிருந்தாலும், பல நம்பிக்கைகளை ஆராய்ந்து கொண்டிருந்ததால், சில காலத்திற்கு கிருத்துவராகக் கூட இருந்தார் என்று சொல்லப்படுறது. பிறகு பௌத்தராகி, “சித்தார்த்” என்ற பெயரை வைத்திருந்தார். 2010ல் முஸ்லிம் ஆனார்.
காலம்
பெயர்
மதம் / நம்பிக்கை
c.1950-70
சேசாசல முதலியார்
சைவம்/ இந்து
c.1970-80
சேசாசலம்
பகுத்தறிவுவாதி
c.1980-2008
பெரியார்தாசன்
நாத்திகம் / இந்துவிரோதம்
c.2008-10
சித்தார்த்
பௌத்தம் / இந்துவிரோதம்
c.2010-13
அப்துல்லா
இஸ்லாம் / கடவுள்-மதம் நம்பிக்கையாளர்
C = circa = approximately = நம்பிக்கை, மதநம்பிக்கை, கடவுள் நம்பிக்கையைப் பொறுத்த வரையிலும் நிலைமை மாறியுள்ளதால், இப்படி குறிப்பிடப் பட்டுள்ளது.
யார் மறைந்தது, எது கடந்தது, எது நின்றது?: சித்தாந்த கலவைகளினால், குழப்பங்களினால், நம்பிக்கைச் சிதறல்கள், மோதல்கள் இவற்றினால் உருவானவ போலிருந்தார் என்று அவரது வாழ்க்கைக் குறிப்புகள் காட்டுகிறது. ‘தான் இறந்தபிறகு, விழிகளை சங்கர நேத்ராலயா மருத்துவமனைக்குத் தந்து விடுங்கள்; உடலை எரியூட்டவும் வேண்டாம்; புதைக்கவும் வேண்டாம்; உடலை சென்னை மருத்துவக் கல்லூரி மாணவர்களது ஆராய்ச்சி படிப்புக்காகக் கொடுத்து விடுங்கள்’ என்று குடும்பத்தாரிடம் கூறியதிலிருந்து அத்தகைய போராட்டங்கள் வெளிப்படுகின்றன. 11-03-2010 முதல் 18/19-08-2013 அன்று வரை முஸ்லிமாக இருந்த அப்துல்லா இறந்தால், யார் இறந்தது என்று உலகம் சொல்லும்?
இந்துவாக இருந்த சேஷாசல முதலியார் இறந்தாரா?
நாத்திகன் சேஷாசலம்இறந்தாரா?
பெரியார்தாசன் இறந்தாரா?
“……….” –இறந்தாரா?
சித்தார்த்தா என்ற பௌத்தர் –இறந்தாரா?
அப்துல்லாஹ் என்ற முஸ்லிம் இறந்தாரா?
இந்தியன் இந்தியனாக இருந்தாலே போதும் – மதம் மாறவேண்டிய அவசியம் இல்லை.
அதிரடியாக, பரபரப்புடன், அந்த ஆளை ரியாத்திற்கு அழைத்து வந்து சுன்னத் செய்து “முஸ்லீம்” என்று சொல்லி, மெக்கா-மெதினா தரிசனத்திற்கு அழைத்துச் சென்று………………….படங்கள் எல்லாம் எடுத்து காட்டி, இப்பொழுது “கண்காணிக்கப் படுவார்” என்றால் என்ன?
பெரியார்தாசனை கண்காணிக்கும் அதென்ன புதிய நிலைபாடு?
பெரியார்தாசன் என்ன நோக்கில் இஸ்லாத்தை ஏற்றார் எனத் தெரியவில்லை! நாங்கள் அவரை கண்காணித்துக் கொண்டு இருக்கிறோம் என்ற தனி நபர் ஜமாஅத்தின் நிலைப்பாடு பற்றி மார்க்க அடிப்படையில் சரியா என்பதை அறிந்து கொள்ளும் முன் இதுபோன்ற விஷயங்களில் ஏற்கனவே அந்த ஜமாஅத்தின் நிலைப் பாடு என்ன? என்பதை பார்ப்போம்!
முதலாவதாக, இதுவரை இஸ்லாத்தை ஏற்ற அனைவருக்கும் இதே நிலைதான் எடுக்கப்பட்டதா?
தங்கள் ஜமாஅத்தில் வந்து இஸ்லாத்தை ஏற்றால் இந்த அளவு கோலைக் கொண்டுதான் அவர்களை அளந்தார்களா? கண்காணித்த பிறகுதான் அவர்கள் அறிமுகப்படுத்தப்பட்டர்களா?
அய்யம்பேட்டை சகோதரிகளை இப்படித்தான் கண்காணித்து அனைத்து ஊடகங்களில் எல்லாம் முன்னிலைப்படுத்தினார்களா? தவ்ஹீத் எழுச்சி மாநாட்டில் மேடை ஏறி உரை நிகழ்த்த அனுமதிக்கப்பட் டார்களா?
ஏ.ஆர். ரஹ்மானை மேடையேற்ற முடியுமா? என்றெல்லாம் கேட்கிறார்களே! ஏ.ஆர். ரஹ்மான் இன்றுதான் இஸ்லாத்தை ஏற்றார் என்றால் அவரையும் இதே நிலைபாடு கொண்டுதான் வரவேற்று அதன் பின் அவருக்கு மார்க்கத்தை எடுத் துச் சொல்ல வேண்டும்.
அவரது நிலை என்ன என்பது பற்றி நம்மிடத்தில் கேள்வி இல்லை. “அவர்களுக்காக நீர் விசாரிக்கப்பட மாட்டீர்” -(அல்குர்ஆன்) என அல்லாஹ் கூறுவதாலும், வந்தவர்களுக்கு நேர்வழியை எடுத்துச் சொல்லாமல் எட்டி நின்று கண்காணித்து “விழுந்த பின் தான் சுட்டிக் காட்டுவோம்’ என்பது என்ன நிலைபாடு?
மார்க்க அடிப்படையில் இஸ்லாத்தை ஏற்றவர்களின் உள்ளத்தைப் பிளந்து பார்க்கும் செயலைச் செய்யக் கூடாது என்பதை காலீத் பின் வலீத் (ரலீ) சம்பவத்திலும், உஸôமா (ரலி) சம்பவத்திலும் நாம் காண்கிறோம்.
நாளை அவர் வழிகெட்டு விட்டால்… என்ற கேள்வியே முதலில் தவறாகும். நபி (ஸல்) அவர்கள் காலத்தில் அவர்களிடத்திலே கலிமா சொல்லி இஸ்லாத்தை ஏற்ற எத்தனையோ பேர் இஸ்லாத்தை விட்டு வெளியேறிய சம்பவத்தை மிஃராஜின் போதும், பொய்த் தூதரை பின்பற்றிச் சென்ற சம்பவத்திலும் நாம் அறிந்திருக் கின்றோம்.
நபி (ஸல்) அவர்களின் காலத்திற் குப் பின்னும், அபுபக்கர் (ரலி) ஆட்சிக் காலத்தில் ஜகாத்தை மறுத்து ஒரு கூட்டமும், பொய்த் தூதர்களைப் பின்பற்றி ஒரு கூட்டமும் வழி தவறிச் சென்றது. உஸ்மான் (ரலி) காலத்தில் கார்ஜியாக்கள் என்று ஒரு பிரிவினர் வழிகெட்டுப் போனதை அறிந்திருக்கிறோம். இப்படி நபி (ஸல்) அவர்களால் உறுதிமொழி எடுத்த எத்தனையோ பேர் வழிகேட்டில் வீழ்ந்திருப்பதை அறிந்திருக்கிறோம்.
வழிகேடும், நேர்வழியும் நம் கையில் இல்லை. ஒருவர் சொர்கத்துக்குரிய காரியத்தை செய்து கொண்டே இருப்பார், இறுதி நேரத்தில் நரகத்திற்குரிய காரியத்தைச் செய்ய வைத்து அவரை அல்லாஹ் நரகத்திற்குரியவராக்குவான். ஒருவர் நரகத்திற்குரிய காரியத்தை செய்து கொண் டே இருப்பார், இறுதி நேரத்தில் சொர்க்கத்துக்குரிய காரியத்தை செய்ய வைத்து அவரை சொர்க் கத்திற்கு உரியவராக ஆக்குவான். (-புஹாரி)
நம்மில் எத்தனையோ பேர் வழிகேட்டில் இருந்து நேர்வழிக்கும், நேர்வழியில் இருந்து வழிகேட்டிற்கும் சென்றுள்ளதாக நீங்கள் கூறுகின்றீர்கள். ஏன்? ஆலிமான நீங்களே கூட இறை மறுப்புக் கொள்கைக்குச் சென்று நேர்வழிக்கு திரும்பி வந்ததாகக் கூறியுள்ளீர்கள்! இவ்வாறு இருக்கையில் இஸ்லாத்தை ஏற்ற ஒருவரின் உள்ளத்தை ஆராய மல் அவர்களை வரவேற்பதும், முக்கியத்துவம் அளிப்பதும் மார்க்க அடிப்படையில் தவறில்லையே!
புதிதாக இஸ்லாத்தை ஏற்ற முஹாஜிர்களுக்கு, அன்சாரிகளுக்கு இல்லாத முக்கியத்துவத்தை நபி (ஸல்) அளித்ததை நாம் ஹதீஸ்களில் பார்க்கிறோம். எந்த அளவுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது என்றால், “நீங்கள் நீதமாக நடக்கவில்லை, புதிதாக இஸ்லாத்தை ஏற்றவர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து எங்களை புறக்கணிக்கின்றீர்கள் என அன்சாரிகள் நபி (ஸல்) அவர்களைப் பார்த்து கேட்கும் அளவிற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.
மக்கா வெற்றியின்போது “அபூஸுஃப்யான் வீட்டில் தஞ்சமடைபவர்களுக்கு பாதுகாப்பு உத்தரவாதம்” வழங்குமளவுக்கு இஸ்லாத்தை ஏற்றவர்களுக்கு சிறப்பும், கனிமத்து பொருட்களில் கூடுதல் பங்கும் வழங்கப்பட்டிருக்கும்போது நாம் ஏன் இதிலிருந்து படிப்பினை பெறாமல் மற்றவர்கள் மேடையில் பேசியபின் நமது மேடையில் ஏறுவதா? என்றும், இது நமது ஜமாஅத் நிலைப்பாடு! என்றும் கூறி நபி (ஸல்) நிலைப்பாட்டை புறந்தள்ளுவது சரியாகுமா?
நாத்திகரான கோவை ராம கிருஷ்ணனும், இணை வைப்பாள ரான இந்து மக்கள் கட்சி அர்ஜுன் சம்பத்தும், தாங்களும் இந்த விஷயத்தில் ஒரே நேர்கோட்டில் இணைந்து “”அவரை கண்காணிக்கிறோம்” என ஒரே வார்த்தைகளை வெளிப்படுத்தி இருப்பதன் மூலம், உங்கள் சிந்தனை காவியாகவோ, கருப்பாகவோ மாறிவிடாமல் இறைவனிடம் பிரார்த்திக்கிறோம்.
ஆக இஸ்லாத்திற்கு மாறியவர்கள் பற்றி இந்த அளவிற்கு ஆராய்ச்சி நடத்துகிறார்கள் என்றால், “மாற்றப்பட்டவர்களின் நிலை” பற்றி முஸ்லீம்கள் ஆராய்ச்சி செய்தது / செய்யாதது என்ன? நன்றாக படித்து, ஒருநிலையில் தாங்கள் ஏதோ ஒரு காரணத்திற்காகத் தான் மதம் மாற்றப்பட்டுள்ளோம் என அறிந்தால், அவர்களும் தங்களது நிலைப்பாடு பற்றி சிந்திக்க ஆரம்பித்து விடுவார்களே?
இப்படி எல்லா மதம் மாறிய முஸ்லீம்களும் கண்காணிக்கப் படுவார்களா?
நம்பிக்கையின் மீது ஆதாரமாக மதம் மாறினாரா அல்லது மாற்றப் பட்டரா என்ற கேள்வியும் அதற்கான பதிலும் பெரியார்தாசன் நண்பர்களிடையே ஏற்கெனவே உள்ளன, அவை தாராளாமாகவே பேசப் பட்டன. “பணத்திற்காகத்தான்” மாறினார் என்பது முதல் குற்றச்சாட்டு. அந்நிலையில் “நம்பிக்கை” போய்விடுகிறது.
மனிதன் தான் எப்படியாவது விளக்கம் அளித்து தன்னுடைய செயலை நியாயப் படுத்திக் கொள்ளலாம். அந்நிலையில் படித்த சேஷாசலத்திற்கு /பெரியார்தாசனுக்கு / ……………க்கு/ சித்தார்தா……னந்தாவிற்கு / அப்துல்லாவிற்கு எந்த பிரச்சினையும் இல்லை.
அதுமட்டுமல்ல, சிலர் அப்துல்லாவிற்கே அறிவுரை அளிக்க ஆரம்பித்து விட்டனர்:
ஐயா , பேராசிரியர் அவர்களே!
நீங்கள் இஸ்லாத்தில் இணந்தது எங்களுக்கு பெருமைதான் என்றாலும் என் மனதுக்குள் ஒரு பயம் நிலவி வருகிறது. இது சுன்னத், அது ஹராம், இதைச் செய்யவேண்டும், அதைச் செய்யக்கூடாது என்று இலவச அறிவுரை சொல்ல சில அரைகுறை ஆலிம்கள் வருவார்கள். உங்களுக்கே தெரியாமல் உங்களை மூளைச்சலவை செய்வார்கள். நீங்கள் மனோவியல் பேராசிரியர் மட்டுமல்ல சிகிச்சையாளரும்கூட, எனவே குர்ஆனையும் ஹதீஸையும் ஆராய்ந்ததுபோல் அவர்கள் சொல்வதையும் ஆய்ந்து ஆராய்ந்து ஏற்றுக்கொள்ளுங்கள். இது ஒன்று.
மற்றொன்று, ‘இறைவன் ஒருவன்தான், அவனுக்கு இணைவைக்கக்கூடாது, அவனுக்கு இணையாக எதுவுமில்லை’ என்ற செய்தி நபிகளாருக்குப் பிறகு இந்திய துணைக்கண்டம் முதல் எல்லா நாடுகளுக்கும் பரப்பியவர்கள் ஒரு சிலர். அவர்கள் தங்கள் வாழ்நாள் முழுவதையும் இறை தியானத்தில் மூழ்கி மக்களின் வாழ்க்கை முறை, உணவு, நாகரீகம், பண்பாட்டுமுறை இவைகள் அனைத்தையும் மாற்றி நேர்வழிப் படுத்தியவர்கள். சுருக்கமாகச் சொன்னால் இறைவன் சொன்னதை, நபிகளார் சொன்னதை மக்களின் அறிவுக்குத் தகுந்தவாறு போதனை புரிந்தவர்கள். சூஃபிகள் என்றழைக்கப்படும் இவர்களை சிலர் தவறாகச் சித்தரிக்கிறார்கள் என்பதை உங்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறேன்.
அம்பேத்காரை அப்துல்லாஹ்-பெரியார்தாசன் பிறகு ஏமாற்றும் கருணாநிதி
அம்பேத்கார் தனது சட்டக்கூர்மையுடன் தான் பிரிவு 25ல், “இந்து” என்றால் அதில் ஜைன, பௌத்த, சீக்கியர்கள் அடங்குவர் என்று விளக்கங்கொடுத்து சேர்த்தார்.
Explanation-II: In sub-clause (b) of clause (2), the reference to hindus shall be construed as including a reference to persons professing he Sikh, Jaina or Buddha religion, and the reference to Hindu religious institututions shall be contstrued accordingly.
The Constitution (Scheduled Caste) Order 1950ன் படி “இந்துக்கள்” அதாவது சீக்கிய, பௌத்த மதத்தவர்களுக்கும் கொடுக்கப் பட்டது.
இங்குதான், உச்சநீதி மன்றம் தனது – சூசை எதிர் இந்தியா – AIR 1986 SC 733 என்றதில் SC என்றாலே இந்துமத்தைத் தான் குறிக்கும் என்று தீர்ப்பளித்தது!
——————————————————–
The Hon’ble Supreme Court in the case of Soosai vs Union of India (AIR 1986 SC 733) categorically held that SCs converted to Christianity cannot have SC status:“…………..it cannot be disputed that the caste system is a feature of the Hindu social structure. It is a social phenomenon peculiar to Hindu society. The division of the Hindu social order by reference at one time to professional or vocational occupation was moulded into a structural hierarchy which over the centuries crystallized into a stratification where the place of the individual was determined by birth” (para.7).
“During the framing of the Constitution, the Constituent Assembly recognized “that the Scheduled Castes were a backward section of the Hindu community who were handicapped by the practice of untouchability”, and that “this evil practice of untouchability was not recognized by any other religion and the question of any Scheduled caste belonging to a religion other than Hinduism did not therefore arise” B. Shivaji Rao: the Framing of India’s Constitution: A study, p.771” (Ibid).
“It must be remembered that the declaration incorporated in paragraph 3 (of the Constitution (Scheduled Caste) Order, 1950) deeming them to be members of the Scheduled Castes was a declaration made for the purposes of the Constitution. It was a declaration enjoined by clause (1) of Article 341 of the Constitution (para.8).
“To establish that paragraph 3 of the Constitutional (Scheduled Castes) Order, 1950 discriminates against Christian members of the enumerated castes, it must be shown that they suffer from comparable depth of social and economic disabilities and cultural and educational backwardness and similar levels of degradation within the Christian community necessitating intervention by the State under the provisions of the Constitution (Ibid).
“It is not sufficient to show that the same caste continues after conversion. It is necessary to establish further that the disabilities and handicaps suffered from such caste membership in the social order of its origin-Hinduism-continue in their oppressive severity in the new environment of a different community (Ibid).
“It is therefore, not possible to say that the President acted arbitrarily in the exercise of his judgment in enacting paragraph 3 of the Constitution (Scheduled Caste) Order, 1950” (Ibid)
—————————————————-
ஆகவே, இப்பொழுது கிருத்துவர்களோ, கருணநிதியோ அம்பேத்காரை ஏமாற்ற வேந்தும் என்று துடிக்கிறார்கள் போலும்.
அம்பேத்கார் பெயரைச் சொல்லிக் கொண்டே, ஏசுவையும், புத்தரையும் ஏமாற்றிய பெரியார்தாசன் / சித்தார்த்தா………………..னந்தா, முஸ்லீமாக மாறி “அப்துல்லாஹ்” என்று சொல்லிக் கொள்கிறார்!
அதே மாதிரி, கருணாநிதியும் தப்பான வழியைத் தான் கிருத்துவர்களுக்குச் சொல்லிக் கொடுக்கிறார்.
ஏற்கெனெவே, கிருத்துவ மதம், அதன் நம்பிக்கை, நம்பிக்கையாளர்கள் முதலியன உலகமெங்கும் குறைந்து வருகின்றன. இப்பொழுது கருணாநிதியைப் பின்பற்றினால், போதும், அதனை வேகமாக செய்து விடலாம். இல்லை, நாங்கள் அப்படித்தான் செய்வோம் என்றால், அது அவர்களுடைய சுதந்திரம்!
சேஷாசல முதலியார் என்றிருந்த சேஷாசலம்: சேஸாசல முதலியார் என்றிருந்த சேஸாசலம் பச்சையப்பன் கல்லூரியில் தமிழ்துறையில் விரிவுரையாளராக இருந்தார். அவர் வேலைக்கு வந்ததே சாதி அடிப்படையில்தான். அவ்வப்போது தெலுங்கில் பேசிக் கொண்டும் இருப்பார்.
பெரியார்தாசன்: திகவினர் தொடர்பு ஏற்பட்டபோது, அதைப் பயன்படுத்திக் கொண்டு முன்னேரலாம் என்று அவர்கள் மேடையிலே பேச்சாளராக இடம் பிடித்தார். “பெரியார்தாசன்” ஆனார்.
கிருத்துவர் ஆனாரா? சினிமாவில் சந்தர்ப்பம் கிடைத்ததும் வேறு பாதையில் செல்ல ஆரம்பித்தார். அப்பொழுது ஒரு கிருத்துவ தொடர்பால், கிருத்துவராகி விட்டார் என்ற பேச்சும் அடிபட்டது. குறிப்பாக மாலைநேர குடிபார்ட்டி தொடர்ந்ததால் ஏற்பட்ட விளைவு.
சித்தர்த்தா: இடையில் புத்தரைப் பற்றிய புத்தகத்தை மொழிபெயர்த்தபோது கிடைத்த சந்தர்பத்தைப் பயன் படுத்திக் கொண்டார். “சித்தார்தா …………………னந்தா.” ஆனார்.
அப்துல்லாஹ்: இப்பொழுது ரியாத்தில் தாவா சென்டரில் சென்றவுடன், ஏற்கெனவே தீர்மானித்தப்படி 11-03-2010 (வியாழக்கிழமை) மதம் மாறி அப்துல்லாஹ் ஆனார்!
இப்படியாக இந்துவான சேஷாசலம், நாத்திக பெரியார்தாசனாகி, “………………..” கிருத்துவராகி (?), பௌத்த மதத்தில் சித்தார்த்த……..னந்தாவாகி, இப்பொழுது அப்துல்லாஹ் ஆகியிருக்கிறாராம்!
கடவுளர்கள் பாவம்! இத்தனைக் கடவுளர்களைத் தூற்றி, ஏமாற்றி, போற்றி………………..தூற்றி, ஏமாற்றி, போற்றி…………..எப்படித்தான் மனம் வருகிறதோ. மதம் மாற்றத்தில் மனம் மாறுதல்தான் முக்கியம். அப்படியிருக்கும்போது, இப்படி மனம் மாறுவது கண்டு வேடிக்கையாகத்தான் இருக்கிறது! இதை பகுத்தறிவு புரட்சி என்பதா, ஆன்மீக அபச்சாரம் என்பதா, தெய்வீக விபச்சாரமென்று சொல்வதா,……………..”சேஷுவின்” விளையாடல்……………யா அல்லாஹ்…………….!
வேலூர் (20-01-2010): வேலூர் கோட்டை மசூதிக்குள் தடையை மீறி நுழைய முயன்ற திருமாவளவன் உள்ளிட்ட 700 பேரை, போலீசார் கைது செய்தனர். வேலூர் கோட்டையில் இஸ்லாமியர்களுக்கு வழிபாட்டு உரிமையை வழங்கக்கோரி, விடுதலைச் சிறுத்தைகள் சார்பில், வேலூர் கலெக்டர் அலுவலகம் முன் நேற்று ஆர்ப்பாட்டமும், கோட்டை மசூதியில் நுழையும் போராட்டமும் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆர்ப்பாட்டம் நடத்த மட்டும் அனுமதி அளித்த போலீசார் கோட்டை மசூதிக்குள் நுழைய அனுமதி அளிக்கவில்லை. தடையைமீறி மசூதிக்குள் நுழையப் போவதாக திருமாவளவன் அறிவித்ததால் வேலூரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.வேலூர் கோட்டைக்கு சீல் வைக்கப்பட்டது. கோட்டை நுழைவாயில் மூடப்பட்டது. கோட்டைக்குள் இருக்கும் அரசு அலுவலகங்களில் பணிபுரியும் ஊழியர்கள் மட்டும் கோட்டைக்குள் அனுமதிக்கப்பட்டனர். பொதுமக்களுக்கு அனுமதிமறுக்கப்பட்டது. கோட்டைக்குள் இருந்தகடைகள் மூடப்பட்டன. கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோவிலில் சாமி கும்பிட சென்ற பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.ஆர்ப்பாட்டம் நடந்த சத்துவாச்சாரி கலெக்டர் அலுவலகத்தில் இருந்து கோட்டை வரை வழியெங்கும் சாலைகளில் தடைகள் அமைத்து பொதுமக்கள் செல்ல அனுமதிக்கப்படவில்லை. அந்த வழியாக சென்ற பஸ்கள் வேறு வழியாக திருப்பி விடப்பட்டன. வேலூர் டி.ஐ.ஜி., தாமரைக்கண்ணன் தலைமையில் 500 அதிரடிப்படை போலீசார், 1,000 ஆயுதப்படை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.வேலூரின் இயல்பு நிலை பாதிக்கப் பட்டது. சாலைகள் வெறிச்சோடிகிடந்தது. பெறும்பாலான கடைகள், வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டன. பிற்பகல் 12.20 மணிக்கு சத்துவாச்சாரி கலெக்டர் அலுவலகம் முன் விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.ஆர்ப்பாட்டம் முடிந்ததும், கோட்டை மசூதிக்குள் நுழையப் போவதாக அறிவித்து விட்டு, 1.30 மணிக்கு கோட்டை நோக்கி புறப்பட்ட திருமாவளவன் உள்ளிட்ட 700 பேரை, போலீசார் கைது செய்தனர்.
வேலூர் கோட்டைக்கு உள்ளே இந்திய தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள மசூதியில் முஸ்லிம்கள் தொழுகை நடத்த அனுமதிக்கவேண்டும் என வலியுறுத்தி 20-01-2010 அன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் கைது செய்யப்பட்டார். மாலையில் விடுவிக்கப்பட்டார். திருமாவளவனுக்கும் இதற்கும் என்ன சம்பந்தம் என்று தெரியவில்லை. முஸ்லிம்களைப் பொறுத்த வரைக்கும் அவர்கள் நூல்களான குரான், ஹதிஸ், ஷரீயத் என்னசொல்கின்றனவோ அதன்படி நடப்பர். பலகாலமாக தொழுகை நடக்கவில்லை என்றால், அவ்விடத்தை மசூதியாகக் கருதப்படமாட்டாது. அதேமாதிரி, அவர்கள் சொல்லும் இடத்தில் சுதந்திரத்துக்குப் பின் தொழுகையே நடக்கவில்லை.
ஆனாலும் கோட்டைக்குள் உள்ள தெற்கு காவல் நிலையத்துக்கு எதிரே ஒதுக்கப்பட்டுள்ள தனி இடத்தில் இப்போது தொழுகை நடந்து வருகிறது.
வேலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பு இன்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் திருமாவளவனுடன் அக்கட்சித் தொண்டர்களும் ஏராளமானோரை போலீசார் கைது செய்துள்ளனர். கைது நடவடிக்கையால், அசம்பாவிதங்கள் நிகழாமல் தடுக்கும் வகையில் கலெக்டர் அலுவலகம் மற்றும் கோட்டையைச் சுற்றிய பகுதிகளிலும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
முன்பு முஸ்லிம்கள் இதே மாதிரியான கோரிக்கைவைத்தனர். ஆனால் ASI மறுத்துவிட்டது. ஆகவே முஸ்லிம் அல்லாத திருமாவளவன் இதனைப் பிரச்சியாக்கி “போராட்டம்” நடத்துகிறேன் என்றும், முஸ்லிம் அதற்கு துணை போவதும் ஆச்சரியமாகத்தான் உள்ளது!
2008ல் நடந்த நிகழ்ச்சிகள்: வேலூர், மார்ச் 4, 2008: வேலூர் கோட்டை மசூதியில் தடையை மீறி தொழுகை நடத்துவோம் என்று தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் அறிவித்ததைக் கண்டு சில முஸ்லிம் அமைப்புகளே கவலை தெரிவித்துள்ளன. வேலூர் கோட்டையின் பராமரிப்புப் பணியை இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறை 1921-ல் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது. கோட்டைக்குள் இருந்த ஸ்ரீ ஜலகண்டேஸ்வரர் கோயில், மசூதி ஆகியவற்றில் அப்போது வழிபாடு நடைபெறவில்லை. ஆனால் சி.எஸ்.ஐ. தேவாலயத்தில் மட்டும் வழிபாடு தொடர்ந்து நடந்து வந்தது.
முஸ்லிம்கள் தொழுகை வேண்டாம் என்று ஒப்புக்கொண்டது: இந்நிலையில் ஜலகண்டேஸ்வரர் கோயிலை மக்கள் வழிபாட்டுக்கு திறந்துவிட பல்வேறு போராட்டத்தை வேலூர் மக்கள் நடத்தி வந்தனர். ஒருகட்டத்தில் இதனால் சட்டம் – ஒழுங்கு பிரச்னை ஏற்படும் நிலைக்கு மக்களின் போராட்டம் தீவிரமடைந்தது. அப்போதைய மாவட்ட ஆட்சியர் கங்கப்பா இதற்கு சுமுக தீர்வுகாண நடவடிக்கை மேற்கொண்டார். இதன் அடிப்படையில் 1981-ம் ஆண்டு கோயிலை வழிபாட்டுக்கு திறந்துவிட முடிவு செய்ததைத் தொடர்ந்து, கோட்டை வளாகத்திலேயே 1750-ம் ஆண்டில் கட்டப்பட்ட மசூதியையும் வழிபாட்டுக்கு திறந்து விடலாம் என்ற முடிவில் முஸ்லிம் அமைப்புகளைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்களை அழைத்து ஆலோசனை நடத்தினார் ஆட்சியர். இதில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் ஏ.கே. அப்துல் சமது, ஆடிட்டர் ஷெரீப் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் அந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டனர். அப்போது அவர்கள், அருகிலேயே ஹிந்து கோயில் உள்ளதால், மசூதியில் 5 வேளை தொழுகை நடத்தும்போது தேவையில்லாத பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே மசூதியில் வழிபாடு வேண்டாம் என்று கையொப்பமிட்டு கொடுத்துள்ளனர். எனவே 1981 மார்ச் 16-ம் தேதி சத்துவாச்சாரியில் இருந்த சிவலிங்கத்தை ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஊர்வலமாக எடுத்துச் சென்று ஜலகண்டேஸ்வரர் கோயிலில் பிரதிட்சை செய்து வழிபடத் தொடங்கினர்.
த.மு.மு.க பிரச்சினையைக் கிளப்பியது: மசூதியை இஸ்லாமியர்களின் தொழுகைக்கு திறந்துவிட வேண்டும் என்று முதலில் கோரிக்கை விடுத்த திராவிட முஸ்லிம் முன்னேற்றக்கழக பொதுச் செயலாளர் இக்பால் இதுகுறித்து கூறியதாவது: எங்கள் அமைப்பின் சார்பில் கோரிக்கை விடுத்தபோது, அப்போது மாவட்ட ஆட்சியராக இருந்த சிவக்குமார், மசூதி தொடர்பான ஆவணங்களைக் காட்டி, இங்கு தொழுகை வேண்டாம் என்று முஸ்லிம் பெரியவர்களே எழுதிக் கொடுத்த கடிதத்தைப் பார்த்தவுடன், காரணம் இல்லாமல் பெரியவர்கள் செய்திருக்கமாட்டார்கள் என்று அந்த கோரிக்கையை வலியுறுத்துவதை நிறுத்திவிட்டோம். தற்போது தடையை மீறி தொழுகை நடத்துவோம் என்று தெரிவித்துள்ள ஜவாஹிருல்லா தி.மு.க. கூட்டணியில் இருக்கிறார். அவர் நேரடியாக முதல்வரிடம் பேசி மசூதியை தொழுகைக்கு சுமுகமாக திறந்து விடட்டும். அல்லது தனது பதவியை ராஜிநாமா செய்யட்டும். அதைவிடுத்து பொதுமக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தும் செயல்களில் ஈடுபடுவது நல்லதல்ல என்றார். இவ்வளவு நாள்கள் அமைதியாக இருந்துவிட்டு, முஸ்லிம் பெரியவர்களே பிரச்னை கூடாது என்று முடிவு செய்துள்ள நிலையில் த.மு.மு.க. இப்பிரச்னையை கையிலெடுத்துள்ளது அனைவரிடமும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே முன்னதாகவே இப்பிரச்னையில் சுமுகத் தீர்வு காண மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
“பகுத்தறிவு” என்ற வார்த்தையினை உபயோகித்துவிட்டால், எல்லாமே தமக்குத் தான் சொந்தம் என்ற அஹங்கார-ஆணவத்திமிர் சிததாந்தத்தில் செயல்படுகின்றனர் திராவிட நாத்திகர், இந்து-விரோதவாதிகள்!
உண்மையில் அத்தகைய மனப்பாங்குதான் “பாஸிஸம்” என்பது, ஆனால் அவர்கள் வசதியாக மற்றவர்களைக் குறிப்பாக தமது சித்தாந்தத்தை விமர்சிக்கும் அல்லது அவர்களது போலித்தனத்தை எடுத்துக் காட்டுபவர்களின் மீது அந்த வார்த்தையை உபயோகிப்பர்!
‘‘மனமே ரிலாக்ஸ் ப்ளீஸ்’’ போன்ற நூல்களை மதவாதிகளே எழுதுவதிலிருந்து கடவுள் நம்பிக்கை யோடு, தனி மனித மனப் பயிற்சியும் அவசியம் என்று அவர்களே நம்புவதாகத் தெரிகிறது. அப்படியெனில் பகுத்தறிவுவாதிகளும் தங்கள் கண்ணோட்டத் திலிருந்து இத்தகைய நூல்களை எழுதுவது நல்லது. தி.க.தலைவர் வீரமணி அவர்கள் இந்த வகையில் ஒரு நல்ல தொடக்கத்தைத் தந்திருக்கிறார். வாழ்வியல் சிந்தனைகள் என்கிற அவரின் நூல், வாழ்வை எதிர்கொள்ளும் மனத் தெம்பையும் உளவியல் நுணுக்கங்களையும் கூறுகிறது.’’ (‘செம்மலர்’, ஏப்ரல் 2004)
நாத்திகர்கள் மனித சமூகத்திற்கு எத்தகைய நல் வழிகளைக் காட்டுகின்றனர், – உலகில் ஒவ்வொரு நாளும் பூக்கும் பல்வேறு மலர்களின் மணங்களைக் கொண்டு வந்து கொடுக்கிறார்கள் என்பது மிகவும் முக்கியம். கடவுளை மற_மனிதனை நினை என்றார் தந்தை பெரியார். மனிதனை நினைக்கும்போது, அவன் மகத்தான-வனாக உருவாவதற்குத் தேவையான தன்னம்பிக்கை, பகுத்தறிவு இவற்றுடன் நாட்டில் நிறைந்து நிற்கும் தகவல்கள், பொருள்களும் அவன் கவனத்திற்குக் கொண்டு வரப்படுவது அவசியமாகும். பல்லாயிரக்கணக்கான மக்கள் தெரிந்து கொள்ள, ஏன் கடைப்பிடிக்க, ஒரு மனிதன் பல நூல்களைப் படிக்க வேண்டி-யிருக்கிறது; படித்தவற்றை அசை போட்டு சாறு பிழிந்து கொடுக்க வேண்டியுள்ளது. அந்த மகத்தான தொண்டற அறிவுப் பணியைத்தான் திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் செய்திருக்கிறார்.
‘செம்மலர்’ சொல்லுவது போல பகுத்தறிவுவாதிகளின் பணிகளில் இதுவும் முக்கியமான கூறே! வாழ்வியல் சிந்தனைகள் வரிசையில் இதுவரை அய்ந்து தொகுதிகள் வெளிவந்துள்ளன. மிகப் பெரிய அளவில் இவ்வரிசைக்கு வரவேற்பு கிடைத்தது. எல்லைகளைத் தாண்டி தமிழ் படிக்கத் தெரிந்த பன்னாட்டு மக்கள் மத்தியில் பரிமளம் வீசுகிறது. இப்பொழுது ஆறாவது தொகுப்பு தந்தை பெரியார் நினைவு நாளில் வெளிவர இருக்கிறது. அதையும் சேர்த்தால் இவ்வரிசையில் 500 கட்டுரைகள் அணிசெய்கின்றன.
இந்த ஆறாவது தொகுதியைப் பொறுத்தவரை இதன் உள்ளடக்கம் இவ்வாறு அமையும்.
மனிதம்_2; உழைப்பு-_4; திறமை_1; தொண்டறம்_5; தன்னம்பிக்கை_9; தலைமைத் தத்துவம்_-1; சமூக சீர்திருத்தம்_1; சிந்தனைக்கு_10; மூடநம்பிக்கை_-1; வாசிப்பு_5; சுற்றுச்சூழல்_1; தொலைக்காட்சி_1; பண்பாடு_-6; சுயநலம்_1; குழந்தைகள்_4; பெற்றோர்_3; முதுமை_1; ஆசிரியர்_2; உடல்நலம்_13; உணவு முறை_-3; அண்ணா (மனிதநேயம்)_-1
திராவிட இயக்க எழுத்தாளர்களில் இத்-திசையில் தன் எழுதுகோலை ஓடவிட்டவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்களே! பெரியார் என்றாலே கடவுள் மறுப்பாளர் என்ற ஓர் எண்ணத்தில் மருண்டோடுபவர்கள் இந்த வாழ்வியல் சிந்தனைகள் மூலம் நெருங்கி வருகிறார்கள் என்பதுதான் உண்மை.
‘ஆனந்தவிகடன்’ மதிப்புரையில் கூறியிருந்தது போல மூடநம்பிக்கைகளை எதிர்த்து எழுதியவர் இப்பொழுது தன்னம்பிக்கை பற்றியும் எழுதுகிறார் என்பது கவனிக்கத் தக்கதாகும். நமது கருத்துக்குத் தொடர்பேயில்லாத வாசகர் ஒருவர் எழுதியுள்ளார். ‘‘நான் பெரியாரைப் பார்த்ததில்லை. இந்தக் கொள்கை-யைப் பற்றி நிறைய விடுதலை மூலமாகப் படிக்கிறேன். இப்பொழுது தமிழர் தலைவர் அய்யா எழுதிவரும் வாழ்வியல் சிந்தனை என்ற பகுதி நமக்காகவே எழுதப்-பட்டதாகும். பாதிப்பு இல்லாதவர் யாருமே இருக்க முடியாது. நமக்காகவே எழுதப்பட்டது போல் இருக்கும். விடுதலை நாளிதழைப் படித்தால் நிறைய கருத்துகள் தெரிந்து கொள்ள முடிகிறது’’- _ விஜயா.
விடுதலைக்குள் நுழைய தந்தை பெரியார் கொள்-கைக்குள் கால் பதிக்க தமிழர் தலைவரின் வாழ்வியல் சிந்தனை நுழைவு வாயிலாக இருந்து வருகிறது. குழந்தை வளர்ப்புக்குத் தாய்ப்பாலையும், முதுமைக்கு ஊன்றுகோலையும் தரும் கட்டுரைகள் உண்டு. குழந்தைகள் நலம், குடும்ப நலம், பெண்ணுரிமை, பொது சமையற்கூடம், ஆண்களுக்கு நிகராக பெண்-களுக்கும் அனைத்து உரிமைகள், பெண்கள் உடையில் மாற்றம், பெண்கள் கிராப் வெட்டிக் கொள்ளுதல் என்ற தந்தை பெரியார் தெரிவித்த கருத்துகள் வாழ்வியல் சிந்தனையின் தடத்தில் பதிக்கப்பட்ட மைல் கற்கள். அந்த அடிப்படையின் விரிவாக்கச் சிந்தனைகளே இவை! கால ஓட்டம், அறிவியல் வளர்ச்சி, ஊடகப் புரட்சி இவற்றையெல்லாம் வயப்படுத்தி, உள்வாங்கி, நாத்திகச் சிந்தனையின் செழுமையை முப்போகமாக விளைவித்துத் தந்துள்ளார் கருத்துக் கனலாம் விடுதலை ஆசிரியர்.
பகவானை சரணடைக!- பரம மண்டலம் போகலாம்;- சடங்குகளைச் செய்க! சொர்க்க சாம்ராஜ்ஜியம் கிடைக்கும்; நேர்த்திக் கடனாற்று, நினைத்தவை நடக்கும் என்ற மூடயிருள் சூழ்ந்த சமூக அமைப்பில் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் சிந்தனைகளின் அடிப்படையில் புத்துலகுக்கு அழைத்துச் செல்லும் மகிழ்ச்சிக்கான திறவு கோல்தான் இந்த வாழ்வியல் சிந்தனை. தந்தை பெரியார் நினைவு நாளில் (டிசம்பர் 24) தலைநகரில் வெளியிடப்படுகிறது.
மனித வாழ்வு மாயையல்ல; -மகத்தானது_ – மகிழ்ச்-சிக்குரியது! அடுத்த ஜென்மம் என்பது முடிச்சுமாறிகளின் பேச்சு! – பிறந்த இந்த வாழ்வைச் சுவைத்துப்பார்! உலகில் எத்தனை எத்தனைச் செல்வங்கள், இன்பங்கள் – உனக்காகக் காத்துக் கிடக்கின்றன! உழைப்பாய் _- உண்பாய்_- உனக்கும் அதில் உரிமையுண்டு என்று கூறிக் கைப்பிடித்து அழைத்துச் செல்லும் தன்னம்பிக்கையின் தூண்டா விளக்கு இது! திருமணத்திற்குப் பரிசளியுங்கள்; உங்கள் உறவினர்களுக்குத் தாருங்கள். நண்பர்களுக்குக் கொடுத்துப் படிக்கச் செய்யுங்கள். மிரண்டு ஓடியவர்கள் நெருங்கி வருவார்கள். தந்தை பெரியார் படைக்க விரும்பிய அந்தத் திரண்ட_ மகிழ்ச்சி பூத்துக் குலுங்கும் அறிவியல் உலகைத் தெரிந்து கொள்வார்கள்.