Archive for the ‘பிறந்தமேனியத்துவம்’ Category

பெரியாருடைய நிர்வாணம்: படங்கள், விளக்கங்கள், விவாதங்கள்!

திசெம்பர் 9, 2009

பெரியாருடைய நிர்வாணம்: படங்கள், விளக்கங்கள், விவாதங்கள்!

மின்-தளங்களில் பெரியாரின் நிர்வானத்தை பற்றிய விவாதம்: சமீபத்தில் சில அறிஞர்களிடையே, மின்-தளக் குழுக்களில் பெரியாருடய நிர்வாணத்தைப் பற்றி மிகவும் ஆன்மிக, தத்துவ, சித்தாந்த ரீதிகளில் விவாதங்கள் நடக்கின்றன.

பெரியார் ஜெர்மனியில் நிர்வாணமாக நின்றது ஒரு மிகப்பெரும் துறவுநிலை: “பெரியார் நிர்வாணமாக ஜெர்மனியில் நின்றது என்பது ஒரு மிகப்பெரும் துறவுநிலை. அது பாலிச்சை விழைவு அல்ல. மகாவீரருக்குப் பிறகு இந்தியத் துணைக்கண்டத்தில் தனது பிறப்புறப்பை மறைக்காமல் நின்ற சமூக ஆளுமை பெரியார் மட்டுமே. அந்த புகைப்படத்தை வெளியிடும் துணிவு பெரியாரியவாதிகளுக்கு இருந்தது. ஏனெனில் பெரியாரை முழுமையாக உள்வாங்கியவர்கள் எல்லாவித சமூக மதிப்பீடுகளுக்கும் அப்பாற்பட்டவர்கள். தோழர் ஆனைமுத்துவைப் போல.”

எல்லொரும், மேற்கண்ட பத்தியைத் திரும்பத் திரும்ப எடுத்துக்காட்டுகின்றனர்!

http://groups.google.com/group/mintamil/browse_thread/thread/c3b8c66db6835dfb#

http://dravidatamils.blogspot.com/2006/09/blog-post_21.html

http://www.keetru.com/literature/essays/ramesh_prem.php

http://holyox.blogspot.com/2006/09/165.html

நான் இணைத்தளங்களில் தேடிவிட்டேன். பெரியாரின் அத்தகைய புகைப்படம் காணப்படவில்லை. பெரியார்

சாருநிவேதா, சொல்லியதாக, “வெளிநாடு சென்றிருந்த போது-நிர்வாணிகளாக இருந்த குழுவினரைச் சந்தித்திருக்கிறார். அப்போது பெரியாரும் நிர்வாணமாக புகைப்படம் எடுத்துக் கொண்டிருக்கிறார்“.

http://www.charuonline.com/Nov2009/WebulagamInt2.html

என்றுதான் உள்ளதேத் தவிர, அப்படம் எங்குயிருக்கிறது குறிப்பெதுவும் காணோம்!

நிர்வாண உறுப்பினர்களுடன் ஈவேரா

நிர்வாண உறுப்பினர்களுடன் ஈவேரா

இப்பொழுது (மே.2015) ஒருவர் இப்படத்தை பேஸ்புக்கில் போட்டிருக்கிறார். அதனை இங்கே சேர்த்துள்ளேன்.

ஆனால், அதே நேரத்தில் ஜைன திகம்பர சமிகளைத் தாக்குவது, அவைகளைக் கொச்சைப் படுத்தி பேசுவது, எழுதுவது, வீடியோ எடுத்துப் பரப்புவது எந்த நோக்கில் என்று தெரியவில்லை?

http://files.periyar.org.in/unmaionline/2008/20080702/page07.html

கிடைத்த பெரியாரின் நிர்வாணப் படங்கள்!: தேடிப்பார்த்ததில், பெரியாரின் நிர்வாணப்படங்கள் சம்பந்தப்பட்டவை, கீழ்கண்டவாறுதான் உள்ளன.

E. V. Ramaswamy Naicker with the members of Nude Society, Germany as claimed in their books

Periyar with the members of Nude Club, Germany

E. V. Ramaswamy Naicker, Erode in the Nude society, Germany

Periyar with the members of Nude Club, Germany

Periyar with Germany - Nude Society members

உள்ள படங்கள் எல்லாம், இவ்வாறுதான் உள்ளது. அதாவது, பெரியார் நன்றாக உடைகளை அணிந்து கொண்டுதான் இருக்கிறார்.

திக மற்றும் அத்தைகையவர் வெளியிட்டுள்ள மேற்காணும் படங்கள் புத்தகங்களிலேயே தெளிவாக இல்லை. அதனால் அதன் பிரதி-புகைப்படங்கள் இவ்வாறு காணப்படுகின்றன.

உண்மையில் அத்தகைய பெரியாரின் நிர்வாண புகைப்படங்கள் இருந்தால் வெளியிடுங்கள், நாமும் அத்தகைய தத்துவங்களை, சித்தாந்தங்களை, புலனடக்கு முறைகளை, இந்திரியங்களை அடக்கி “இந்திரன்” ஆகும் வித்தைகளை அறியலாம்!

நிர்வாண சாமியாருக்கு ‘ஜட்டி’http://files.periyar.org.in/unmaionline/2008/20080702/page07.html


ஈரோட்டில் கிரி அய்யர் பெண்ணிடம் அடிவாங்கியது நிர்வாணம் தந்த நிவாரணம் என்று கொண்டால், சென்னையில் மக்களின் இன்னல்களுக்கு நிவாரணம் தனது நிர்வாணம் தான் என்று ஊருக்கு தங்களது நிர்வாணம் மூலமே காட்டிக் (?) கொண்டு இருக்கும் திகம்பர சமண சாமியார்கள்.

சமீபத்தில் அருவருப்பில் அதிர்ந்து போன இன்னொரு நிகழ்வு. திண்டிவனத்தில் நிர்வாண சாமியாரின் மீது பெண்கள் பாலை ஊற்றி அது அவரது ஆண்குறியில் வழிந்த-போது அதைப் பிடித்து குடித்தார்கள் என்ற செய்திதான். மேலே சொன்ன சாமியார்கள் சென்னையில் உள்ள கொண்டித்தோப்பு பகுதியில் பொன்னிவளவன் தெருவில் உள்ள ஜெயின் மடத்தில் தங்கி நாள்தோறும் ஆண், பெண் என்ற பேதமில்லாமல் நிர்வாண தரி-சனமும், ஆசியும் வழங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

பெண்கள் தலையிலிருந்து பாதம் வரையில் வெண்மை நிறத்தில் கவுன் ஒன்றை மாட்டிக் கொண்டு நிர்வாண சாமியாருக்கு எடுபிடியாக இருக்-கிறார்கள். நல்ல வாய்ப்பாக, ஆணாதிக்கமோ, எதுவோ, திகம்பர சமண சாமியார்களில் பெண்கள் நிர்வாணமாக இல்லை. என்ன சாதிக்க நினைக்கிறாகள் இந்த நிர்வாணக் கோலத்தில்? இதனை கண்டித்து தி.க. இளைஞரணியினர் திரண்டு சென்று அந்த மடத்தின் முன் நிர்வாண சாமியார்-களுக்கு ஜட்டி (உள்ளாடை) கொடுக்க முயன்ற ஆர்ப்பாட்டத்தில் அனைவரும் கைதானார்கள்.

பெரியார்
பெரியார்
பெரியார்

விவாதம்: பெரியாரின் நிர்வாணப் படங்கள் இருந்தால், ஏன் தைரியமாக வெளியிடக்கூடாது?

பெரியார் நிர்வாணமாக ஜெர்மானியில் நின்றது என்பது ஒரு மிகப்பெரும் துறவுநிலை: இங்கு துறவு, துறவுநிலை, நிர்வாணம், நிர்வாணமாக நின்றது என்பதெல்லாம், நாத்திகவாதிகள் / பகுத்தறிவுவாதிகள் / பெரியாரியவாதிகள் தாம் விளக்க வேண்டும். ஏனெனில், அவர் எதைத் துறந்தார் என்று ஒன்றும் தெரியவில்லை. ஏனெனில் அவர்களது அகராதியில் அந்த வார்த்தைகளுக்கு வேறு அர்த்தங்கள் இருக்கும்.
அது பாலிச்சை விழைவு அல்ல: “அது பாலிச்சை விழைவு அல்ல”, எனும்போது, எங்கு வேறுபடுத்தி கோடு கிழிப்பார்கள் என்று தெரியவில்லை. ஆணும் பெண்ணும் விருப்பம் இருந்தால் சேர்ந்து வாழலாம், இல்லையென்றால் பிரிந்துவிடலாம் என்றெல்லாம் பேச ஆரம்பித்துவிட்டார்கள். அதுமட்டுமா, ஆண்-ஆண், பெண்-பெண் கூட சேர்ந்து வாழலாம் என்று ஓரின-சமதர்மமும் வந்துவிட்டது! பிறகு, பெரியார், அவரது தொண்டர்கள் முதலியோர் மணம் புரிந்து கொண்டனர்,………………..என்பதெல்லாம் தெரியவில்லை!
மகாவீரருக்குப் பிறகு இந்தியத் துணைக்கண்டத்தில் தனது பிறப்புறப்பை மறைக்காமல் நின்ற ஆளுமை பெரியார் மட்டுமே: “மகாவீரருக்குப் பிறகு இந்தியத் துணைக்கண்டத்தில் தனது பிறப்புறப்பை மறைக்காமல் நின்ற சமூக ஆளுமை பெரியார் மட்டுமே”, என்று சொல்லிவிட்டுதான், மஹாவீரரைப் பின்பற்றும் சீடர்களைக் கேவலப்படுத்துகிறார்கள், தாக்குகிறார்கள்…………………இதுதான் “சமூக ஆளுமை”யா? அவர்களுக்கு இன்றளவும் பிறப்புறுப்பை மறைக்காமல் இந்தியா முழுவதும் சுற்றிவர தைரியம் இருந்தது. ஆனால், பெரியாருக்கு அவ்வாறு இல்லை, அவரது தொண்டர்களுக்கும் இல்லை!
அந்த புகைப்படத்தை வெளியிடும் துணிவு பெரியாரியவாதிகளுக்கு இருந்தது: ஏஏகெனவேக் குறிப்பிட்டது மாதிரி, இருப்பதெல்லாம், உடையோடு இருக்கும் படங்கள்தாம். அவையே தெளிவில்லாமல் இருக்கின்றன. அந்த புகைப்படத்தை வெளியிடும் துணிவு பெரியாரியவாதிகளுக்கு இருந்தால், இன்றும் தாராளமாக வெளியிடலாம்.

ஏனெனில் பெரியாரை முழுமையாக உள்வாங்கியவர்கள் எல்லாவித சமூக மதிப்பீடுகளுக்கும் அப்பாற்பட்டவர்கள். தோழர் ஆனைமுத்துவைப் போல: பெரியாரின் கொள்கைகளை உள்வாங்கியவர்கள் எல்லாவித சமூக மதிப்பீடுகளுக்கும் அப்பாற்பட்டவர்கள் என்றால், ஏன் அவர்கள் தயங்கவேன்தும்?