கருணாநிதி பிறந்தநாள் கொண்டாட்டம்: அப்பொழுதும் இப்பொழுதும்!
கருணாநிதி 87வது பிறந்தநாள் கொண்டாடுவது சந்தோஷமான விஷயம்தான். நிச்சயமாக ஒரு சிறந்த ராஜதந்திரம் மிக்க அரசியல்வாதி உள்ளதும் மகிழ்ச்சிதான். ஆனால், வாழ்நாள் முழுவதும், மக்களிடையே வெறுப்பை அதிகமாகச் சம்பாதித்துக் கொண்டதாகத்தான் தெரிகிறது. இந்த முதிந்த வயதில் கூட, இந்திய இறையாண்மை எதிர்ப்பு……….., இந்தி எதிர்ப்பு……….., இந்துமத விரோதம்…………, பிராமண துவேஷம், ……………, ஆரிய-திராவிட இனவாதம்………….என்றுதான் இருந்திருக்கிறார். இதனால், இந்தியா-இந்திய.விரோதம், வடக்கு-தெற்கு, தமிழ்-இந்தி, ………………போன்ற வேற்றுமைகளை ஏற்படுத்தியுள்ளார். |
2008: கருணாநிதி பிறந்தநாளை குதூகலமாக கொண்டாட தொண்டர்களுக்கு தி.மு.க., பொதுசெயலர் அன்பழகன் அழைப்பு விடுத்துள்ளார். உடல் நலம் காரணமாக ஓய்வு எடுக்க விரும்புவதாக தமது பிறந்த நாளை கொண்டாட வேண்டாம் , அந்நாளில் ( ஜூன் 3 2008) என்னை சந்திக்க தொண்டர்கள் வர வேண்டாம் என கருணாநிதி தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார்.
ஆனால் அவரது பிறந்த நாளை கொண்டாடாமல் இருக்க முடியாது என பிறந்த நாள் கொண்டாடும் போது தலைவருக்கு ஊக்கமும், புது உணர்ச்சியும் ஏற்படும் எனவே இந்நாளை கொண்டாட தொண்டர்கள் தயாராக வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
2010: அமர்க்களமாகக் கொண்டாடப்பட்டது.
கேக் வெட்டியாகிவிட்டது.
குஷ்பு சேர்ந்தாகிவிட்டது.
குஷ்பு பேசியாகிவிட்டது.
குஷ்பு சின்னத்தைக் காட்டியாகிவிட்டது.