Archive for the ‘பிரஹூய்’ Category

திராவிட மொழி பேசும் திராவிட இனத்தவர் பலூச்சிஸ்தான் மக்கள் ஜின்னா சிலையைத் தகர்த்துள்ளனர் – தமிழகத்தில் இருக்கும் இனமானத் தலைவர்கள், திராவிடியன் ஸ்டாக் வகையறாக்கள் என்ன செய்வார்கள்?

செப்ரெம்பர் 28, 2021

திராவிட மொழி பேசும் திராவிட இனத்தவர் பலூச்சிஸ்தான் மக்கள் ஜின்னா சிலையைத் தகர்த்துள்ளனர் – தமிழகத்தில் இருக்கும் இனமானத் தலைவர்கள், திராவிடியன் ஸ்டாக் வகையறாக்கள் என்ன செய்வார்கள்?

ஜின்னா சிலை தகர்க்கப் பட்டது
இந்த தாக்குதலுக்கு பலுாச் பயங்கரவாதிகள் பொறுப்பேற்றுள்ளனர்

பாகிஸ்தானின் அடக்குமுறைகளை பலூச்சிஸ்தான் எதிர்த்து வருகின்றது: நம் அண்டை நாடான பாகிஸ்தான் நிறுவனரான முகமது அலி ஜின்னா, அந்த நாட்டின் முதல் கவர்னர் ஜெனரலாக பதவி ஏற்றார். காசநோயால் பாதிக்கப்பட்டிருந்த இவர், 1948ல் காலமானார். இவர் தன் கடைசி நாட்களில் வசித்து வந்த குடியிருப்பு கட்டடம், தேசிய நினைவுச் சின்னமாக அறிவிக்கப்பட்டது. 121 ஆண்டுகள் பழமையான இந்த கட்டடம், பலுாசிஸ்தான் மாகாணத்தின் ஜியாரத் பகுதியில் இருந்தது. எனினும் 2013ல் பலுாச் பயங்கரவாதிகளால் அந்த கட்டடம் தகர்க்கப்பட்டு, தீ வைக்கப்பட்டது. இதில், அந்த கட்டடம் முழுதும் சேதமடைந்தது. பாகிஸ்தானின் நான்கு மாநிலங்களில் பலூச்சிஸ்தானும் ஒன்று. இம்மாநிலத்தவர் தனிநாடு கேட்டுப் போராடி வருகிறனர்[1]. இதனால், அவ்வப்பொழுது, தீவிரவாத தாக்குதல்கள் நடத்தப் பட்டு வருகின்றன[2]. பலுசிஸ்தானின் துறைமுக நகரான குவாதரில் பாதுகாப்பு மிகுந்த மெரைன் டிரைவ் பகுதியில் கடந்த ஜூன் மாதம் முகமது அலி ஜின்னாவின் சிலை நிறுவப்பட்டது[3]. கடற்கரை பகுதியான இங்கு, சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம். விடுமுறை நாட்களில் உள்ளூர் மக்களின் கூட்டமும் இருக்கும். இந்நிலையில் 26-09-2021 காலையில் சிலைக்கு அடியில் குண்டு வெடித்ததில் சிலை வெடித்து சிதறியது[4].

சிலை அடியில் குண்டு வைத்துத் தகர்த்தார்கள்
ஜூன் 2021ல் தான் அச்சிலை நிறுவப்பட்டது

ஞாயிற்றுக் கிழமை விடுமுறை தினத்தில் குண்டு வைத்து தகர்க்கப் பட்டது: பலூச்சிஸ்தான் மாகாணத்தின் குவாடர் பகுதியில் முகமது அலி ஜின்னாவின் சிலை வைத்தது அங்குள்ள மக்களுக்குப் பிடிக்கவில்லை. ஏனெனில், பாகிஸ்தான் வலுக்கட்டாயமாக, தங்களது பகுதியை பகிஸ்தானுடான் இணைத்து விட்டதாக அவர்கள் கருதுகிறார்கள். இதனால், 26-09-2021 அன்று குண்டு வைத்து தகர்க்கப் பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது[5]. இந்த தாக்குதலுக்கு பலுாச் பயங்கரவாதிகள் பொறுப்பேற்றுள்ளனர்[6]. சுற்றுலா பயணியர் அதிகம் கூடும் கடற்கரை நகரமான இங்கு, சமீபத்தில் தான் இந்த சிலை நிறுவப்பட்டது[7]. இதுகுறித்து குவாதர் துணை ஆணையரான ஓய்வுபெற்ற ராணுவ மேஜர் அப்துல் கபீர் கான் கூறும்போது, “சுற்றுலாப் பயணிகளை போல அப்பகுதிக்குள் நுழைந்த தீவிரவாதிகள், ஜின்னாவின் சிலையை குண்டு வைத்து தகர்த்துள்ளனர். இது தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை[8]. இந்த சம்பவத்தை அனைத்து கோணங்களிலும் விசாரிக்க விரும்புகிறோம்[9]. குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படு வார்கள்,” என்றார்[10]. இந்த சிலை தகர்ப்பு சம்பவம் குறித்து, உயர்மட்ட விசாரணை நடத்தப்பட்டு வருவதாக, பாக்., ராணுவம் தரப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது[11]. வழக்கம் போல, உண்மையினை வெளியிடாமல், “தீவிரவாதிகள் கைவரிசை: பாகிஸ்தானில் ஜின்னா சிலை தகர்ப்பு,” என்றெல்லாம் செய்திகள் வெளியிடப் பட்டுள்ளது[12].

உலக சுற்றுலா தினம் கொண்டாடும் நேரத்தில் உடைக்கப் பட்டது.
பலூச்சிஸ்தான் என்பது, பாகிஸ்தானை விட பெரிய பிரதேசம் ஆகும். அது கிழக்கில் பாகிஸ்தான், வடக்கில் ஆப்கானிஸ்தான், மேற்கில் ஈரான், தெற்கில் அரபிக் கடல் என்று பெரிய பிரதேசமாக இருக்கிறது.
பராஹவி மொழி (Brahui language, بروہی) அல்லது பிராவி மொழி (براوِ) பராஹவி இனத்தவரால் பேசப்படுகிறது. இது சிறிய அளவில் ஆப்கானிஸ்தான், ஈரான் போன்ற நாடுகளிலும் காணப்படுகிறது ஆயினும், பாகிஸ்தானின், பலூச்சிஸ்தான் மாகாணத்திலேயே பெருமளவில் புழங்கி வருகிறது. 2005 ஆம் ஆண்டில் எத்னோலாக் பதிப்பில் 22 லட்சம் எனக் கணிக்கப்பட்டுள்ள இதன் பேசுவோர் தொகையில் 90 வீதமானோர் பாகிஸ்தானிலேயே உள்ளனர்.

26—09-2021 ஞாயிற்றுக் கிழமை, 27-09-2021 உலக சுற்றுநாள் தினம்: பாகிஸ்தானியர் உலக சுற்றுலா தினத்தை வித்தியாசமாகக் கொண்டாடி இருக்கின்றனர் போலிருக்கிறது. சுற்றுலா பயணிகள் என்று, குவாதர் என்ற கடற்கரை நகரத்தில், மரைன் டிரைவ் இடத்திற்கு வந்துள்ளனர். அங்கிருக்கும் மொஹம்மது அலி ஜின்னாவின் சிலைக்குக் கீழ் குண்டை வைத்துத் தகர்த்துள்ளனர்! ஜின்னா சிலை ஜூன் 2021ல் தான் மரைன் டிரைவ் கடற்கரையில் நிறுவப் பட்டது. இதனை, பலோக் / பலூச்சி மக்கள் விரும்பவில்லை. இதனால் பலூச்சிஸ்தான் லிபரேஷன் பார்ட்டி / பலூச்சிஸ்தான் விடுதலை வேண்டி போராடும் கட்சி குண்டு வைத்துத் தகர்த்துள்ளது. தாங்கள் தான் அவ்வாறு செய்தோம் என்றும் ஒப்புக் கொண்டுள்ளது! பலூச்சிஸ்தான் என்பது, பாகிஸ்தானை விட பெரிய பிரதேசம் ஆகும். அது கிழக்கில் பாகிஸ்தான், வடக்கில் ஆப்கானிஸ்தான், மேற்கில் ஈரான், தெற்கில் அரபிக் கடல் என்று பெரிய பிரதேசமாக இருக்கிறது. சர்ப்ராஸ் பகுடி என்ற பலூச்சிஸ்தான் செனேடர், இது பாகிஸ்தானின் சித்தாந்தத்திற்கு எதிரான தாக்குதல்! ஜின்னாவின் வீட்டைத் தாக்கியவர்கள் எவ்வாறு தண்டிக்கப் பட்டனரோ, அதே போல, இவர்களும் (ஜின்னா சிலையைத் தகர்தவர்களும்) தண்டிக்கப் பட வேண்டும் என்று கொதித்து, டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்!

ஈவேரா நாயக்கரை ஜின்னா நன்றாக ஏமாற்றினார், அண்ணா ஒத்து ஊதினார் ஆனால், திராவிடஸ்தானம் செய்த்து விட்டது: 1940ல் ஜின்னா வீட்டில், ஜின்னா, ஈவேரா, அம்பேத்கார் கூடி பேசி, இந்தியாவைத் துண்டாட திட்டம் போட்டனர். அப்பொழுது அண்ணாதுரை முதலியோரும் கூட இருந்தனர். அம்பேத்கர், இது நமக்கு உதவாது என்று ஒதுங்கி விட்டார். ஆங்கிலேயர் அமைச்சர் பதவி கொடுத்தது. ஜின்னா, ஈவேராவுக்கு நோஸ்-கட் கொடுத்தார், அதாவது, தான் முஸ்லிம் என்பதால், முஸ்லிம்களுக்குத் தான் பாடுபடுவேன் என்று எழுத்து மூலமே தெரிவித்து சாடினார். அண்ணாவே இனம் இனத்தோடு சேரும் என்றெல்லாம் வாய்-சவடால் மூலம் பாட்டுப் பாடிக் கொண்டிருந்தார். கடைசியில் ஜின்னாவுக்கு பகிஸ்தான் கிடைத்தது. அன்ணா பிரிந்து போன போது, ஈவேராவோ, அண்ணாவோ திராவிட உணர்வுடன், திராவிட மொழி பேசும் பலூச்சிஸ்தான் மக்களுக்குக் குரல் கொடுக்கவில்லை. “அடைந்தால் திராவிட நாடு, இல்லையென்றால் சுடுகாடு,” என்றெல்லாம் வசனம் பேசிக் கொண்டிருந்தார். பெரியாரான, ஈவேராவும் அவ்வப்பொழுது கலாட்டா செய்து கொண்டிருந்தார். யாரும் கண்டுகொள்ளவில்லை. நேரு மிரட்டியதில், பயந்து போன அண்ணா, திராவிட நாடு கொள்கையில் குப்பைத் தொட்டியில் போட்டு, தேர்தலில் போட்டியிட்டு முதலமைச்சர் ஆனார்.

திராவிடத்துவத்தில் ஊறிய கருணாநிதியும் கண்டுகொள்ளவில்லை: கருணாநிதி எப்படியாவது ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற திட்டத்தில் இருந்ததால், முகமது இஸ்மாயிலுடன் தாஜா செய்து, முஸ்லிம் ஓட்டைத் தாக்க வைத்துக் கொண்டார். நெடுஞ்செழியன் முதலியாரை ஓரங்கட்டினார். மாநில சுயயாட்சி என்று அவ்வப்பொழுது ஊதிக் கொண்டிருந்தார். ஆனால், திராவிட மொழி பேசும் பலூச்சிஸ்தான் மக்களுக்குக் குரல் கொடுக்கவில்லை. அப்படி செய்தால் முஸ்லிம் லீக் கழட்டி விடும் என்று நன்றாகத் தெரியும். ஆக, திராவிடப் பாட்டைப் பாடிக் கொண்டு, துலுக்கருடன் ஆட்டம் போட்டு வந்தார். அது கோயம்புத்தூர் குண்டுவெடிப்புகளிலும், கைதிகளை விடுதலை செய்ததிலிருந்தும் நன்றாகவே வெளிப்பட்டது. தமிழே, தமிழின் உயிரே, உயிரின் மூச்சே, மூச்சின் வாசமே, வாசத்தின் இருப்பிடமே என்றெல்லாம் அடுக்கிக் கொண்டு போவார்கள். திராவிட நாடு அம்போ தான்.

2021ல் ஸ்டாலின், திராவிடியன் ஸ்டாக் என்று கிளம்பியுள்ளார்: முத்துவேலர் கருணாநிதி ஸ்டாலின் என்கின்ற நான் என்று பதவியேற்று, தான் திராவிடியன் ஸ்டாக் என்று குறிப்பிட்டுக் கொண்டாலும், விளம்பர அரசியல் நடத்திக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் தான், திராவிட மொழி பேசும், தனிநாடு கேட்கும், திராவிட இனத்தவரான பலூச்சிஸ்தான் மக்கள் ஜின்னாவில் சிலையை தகர்த்துள்ளனர். இங்கு, கருணாநிதிக்கும், பெரியாருக்கும் சிலைகள் வைப்போம் என்று கிளம்பியுள்ளனர். பிரஹூயி, பிரோஹி, பிரஹூய், என்றெல்லாம் குறிப்பிடப் படுகின்ற மொழி திராவிடக் குடும்ப மொழி என்று திராவிடத்துவ வாதிகள் தம்பட்டம் அடித்துக் கொள்கிறார்கள், இன்றும் மேடைகளில் டமாரம் அடிக்கிறார்கள்! பிறகு, அம்மொழி பேசும் மக்களைக் கொடுமைப் படுத்தும் பாகிஸ்தானை ஏன் திராவிடத்துவ வாதிகள் கண்டு கொள்வதில்லை?

ஸ்டாலின் திராவிட மொழிபேசும் திராவிட இனமக்களை ஆதரிப்பாரா, எதிர்ப்பாரா?: பராஹவி மொழி (Brahui language, بروہی) அல்லது பிராவி மொழி (براوِ) பராஹவி இனத்தவரால் பேசப்படுகிறது. இது சிறிய அளவில் ஆப்கானிஸ்தான், ஈரான் போன்ற நாடுகளிலும் காணப்படுகிறது ஆயினும், பாகிஸ்தானின், பலூச்சிஸ்தான் மாகாணத்திலேயே பெருமளவில் புழங்கி வருகிறது. 2005 ஆம் ஆண்டில் எத்னோலாக் பதிப்பில் 22 லட்சம் எனக் கணிக்கப்பட்டுள்ள இதன் பேசுவோர் தொகையில் 90 வீதமானோர் பாகிஸ்தானிலேயே உள்ளனர். சிந்து, பலூச்சிஸ்தான் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த முப்பதுக்கு மேற்பட்ட இனக்குழுக்களைச் சேர்ந்தவர்கள் இம்மொழியைப் பேசுகின்றனர். பிரஹூ / பிராகுவி மொழி பேசும் மக்களைக் கொடுமைப் படுத்தும் பாகிஸ்தானை ஏன் திராவிடத்துவ வாதிகள் கண்டு கொள்வதில்லை? நான் திராவிட இனத்தைச் சேர்ந்தவன் என்று பெருமை பேசிய, ஸ்டாலின், ஜின்னா சிலை தகர்த்த திராவிட மொழி பேசுபவர்களை எதிர்ப்பாரா, ஆதரிப்பாரா? இனமான திராவிடத் தலைவர் வீரமணி இதையெல்லாம் கண்டு கொள்வதே இல்லை. நாகநாதன், ஜகதீசன், கருணானந்தன், சுப.வீரப்பாண்டியன், கலி.பூங்குன்றன், விடுதலை ராஜேந்திரன் முதலியோர் என்ன செய்வார்கள் என்று பார்ப்போம்!

© வேதபிரகாஷ்

28-09-2021


[1] தினத்தந்தி, பாகிஸ்தானை தோற்றுவித்த முகமது அலி ஜின்னாவின் சிலை வெடிகுண்டு வைத்து தகர்ப்பு, பதிவு: செப்டம்பர் 27,  2021 15:08 PM

[2] https://www.dailythanthi.com/News/World/2021/09/27150825/Bomb-blast-at-the-statue-of-Muhammad-Ali-Jinnah-the.vpf

[3] தமிழ்.இந்து, பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் ஜின்னா சிலை தகர்ப்பு: தீவிரவாதிகள் அட்டூழியம், செய்திப்பிரிவு, Published : 28 Sep 2021 03:17 AM; Last Updated : 28 Sep 2021 05:50 AM.

[4] https://www.hindutamil.in/news/world/720754-jinnah-statue-in-gwadar-blown-up-using-explosives.html

[5] தினமலர், ஜின்னா சிலை பாக்.,கில் தகர்ப்பு, Added : செப் 28, 2021  02:04

[6] https://www.dinamalar.com/news_detail.asp?id=2855012

[7] நியூஸ்7தமிழ், முகமது அலி ஜின்னா சிலை தகர்ப்பு: தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்பு, by EzhilarasanSeptember 28, 2021

[8] https://news7tamil.live/jinnahs-statue-destroyed-in-blast-in-pakistans-balochistan-bla-claims-responsibility.html

[9] மாலைமுரசு,முகமது அலி ஜின்னா சிலை குண்டு வைத்து தகர்ப்பு…  தாக்குதலுக்கு பலுாச் பயங்கரவாதிகள் பொறுப்பேற்பு.., webteamSep 28, 2021 – 07:23Updated: Sep 28, 2021 – 07:24.

[10] https://www.malaimurasu.com/posts/worldnews/Mohammed-Ali-Jinnah-statue-bombed

[11] தினகரன், தீவிரவாதிகள் கைவரிசை: பாகிஸ்தானில் ஜின்னா சிலை தகர்ப்பு, 2021-09-28@ 00:02:47

[12] https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=708283