தமிழ், தமிழகம், தமிழ்நாடு: நீட் தேர்வு, காவிரிப் பிரச்சினை, ஐபிஎல்–எதிர்ப்பு முதலியவை, போலீஸ் தாக்குதலில் முடிந்த விதம் [4]
“தமிழ்.ஒன்.இந்தியா,” சீமான் ஆள் ஏன் போலீஸாரை அடித்தார். என்று விளக்கியது[1]: “அந்த இளைஞர் ஏன் போலீசாரைத் தாக்கினார் என்ற விவரம் கிடைத்துள்ளது. 10-04-2018 அன்று, போராட்டத்தின்போது நாம் தமிழர் தலைவர் சீமானும் களத்தில் இருந்தார். அண்ணா சாலையில் அவர் பெரும் இளைஞர் கூட்டத்துடன் ஆர்ப்பாட்டம் செய்து கொண்டிருந்தபோதுதான், போலீசார் தடியடியில் இறங்கினர். ஒரு கட்டத்தில் சீமானை அடிக்க முயன்றனர் இரண்டு போலீசார். சீமானை அடிக்க வந்தவர்களில் ஒரு போலீசைத்தான் அந்த இளைஞர் தள்ளிவிட்டார். “எங்க அண்ணன் மேலயே கை வைப்பியா நீ..?” என்று கேட்டபடி அந்த போலீஸ் முகத்தில் குத்த முயன்றார் இளைஞர். அதன் பிறகு சீமான் ஓடி வந்து, கைகலப்பை விலக்க, அந்த இளைஞர் போராடும் கூட்டத்தில் கலந்துவிட்டார். நடந்த சம்பவம் இதுதான்.”[2] ஆனால், ஒரு போலீஸ்காரர் அடி-அடி என்று அடித்து கீழே தள்ளியது வீடியோவில் நன்றாகவே தெரிந்தது. ஆனால், பிறகு பல்டி அடித்ததும் நல்ல கூத்துதான்.
10-04-2018 மேட்சை நடத்த விடமாட்டோம் அடுத்து, ஏப்ரல் 20ம் தேதி சென்னையில் நடைபெறும் ஐபிஎல் போட்டியை நடத்த விடமாட்டோம் என்றது: ஏப்ரல் 20ம் தேதி சென்னையில் நடைபெறும் ஐபிஎல் போட்டியை நடத்த விடமாட்டோம் என்று சீமான் தெரிவித்தார்[3] என்பது தான் தலைசிறந்த தமாஷா. ஒரு வேளை பூனாவிற்கு சென்று செய்வார் போலும். 10-04-2018 மேட்சை நடத்த விடமாட்டோம் என்று கலாட்டா செய்து, பிறகு ஷூ எரிந்து கேவலப் படுத்தி, கைதாகிய சீமான் இவ்வாறு பேசியது திகைப்பாக இருந்தது[4]. ஏற்கெனவே, இனி சென்னையில் ஐபிஎல் போட்டிகள் நடக்காது என்று அறிவிக்கப் பட்டதுன், பூனாவிற்கு மாற்றப் பட்டது அறிவிக்கப்பட்டது. 11-04-2018 அன்று, காவிரிக்கான போராட்டத்துக்கு மத்தியில் சென்னையில் ஐபிஎல் நடத்தக் கூடாது என்று பாரதிராஜா, அமீர், மணியரசன், சீமான், தனியரசு, தமிமுன் அன்சாரி உள்ளிட்டோர் செய்தியாளர்களை சந்தித்தனர்[5].
இனி மேலும், இக்கால இளைஞர்கள் இந்த போலிகளை நம்ப மாட்டார்கள். சென்னை அண்ணாநகர் மேற்கு பகுதியை சேர்ந்தவர் நர்மதாநந்தகுமார். சமூக ஆர்வலரான இவர் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி 16-04-2018 அன்று சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்தார்[6]. அந்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது: “நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானும், அவரது தொண்டர்களும் வன்முறையை தூண்டும் வகையில் பேசி போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதனால் பெண்கள் மிகுந்த அளவில் பாதிப்புக்குள்ளாகிறார்கள். சமீபத்தில் கூட ஒரு தனியார் தொலைக்காட்சி நடத்திய விவாத நிகழ்ச்சியில் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் சிலர், பாஜக தலைவர் தமிழசை சவுந்தரராஜனை கிண்டல் அடித்து பேசி அவரை அழ வைத்தார்கள். தொடர்ந்து வன்முறை தூண்டும் வகையில் பேசிய வரும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளரையும், அவரது தொண்டர்களை காவல் துறையினர் ஒடுக்க வேண்டும். முடிந்தால் கட்சியை தடை செய்வது இந்த தேசத்திற்கு நல்லது”. இவ்வாறு கூறப்பட்டிருந்தது[7].
திமுக கர்நாடகத்தை ஆண்டாலும் காவிரி நீர் வராது: அப்போது சீமான் கூறுகையில் கர்நாடகத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால் காவிரி தமிழகத்தில் பாய்ந்தோடும் என்கிறார்கள். ஆனால் பாஜக ஆட்சியின்போதும் தமிழகத்திற்கு முறையாக நீர் திறக்கவில்லை[8]. சென்னையில் 10-01-2018 அன்று போராட்டத்தின் போது போலீசார் தாக்கப்பட்டதற்கு நடிகர் ரஜினிகாந்த் ட்விட்டரில் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்[9]. காவல்துறையினரைத் தாக்கியதாக சீமான் மீது பொய் வழக்குப் போடப்பட்டுள்ளது. அதில் சீமானை நாங்கள் கைது செய்யவிடமாட்டோம் என்று பெ.மணியரசன், தெரிவித்துள்ளார்[10]. அதாவது, இவர் தான் சட்ட அமைச்சர், நீதிபதி என்ற தோரணை. சென்னையை அடுத்த திருவிடந்தையில் நடக்கும் ராணுவக் கண்காட்சியில் பங்கேற்க வந்த பிரதமர் மோடிக்கு எதிராக கறுப்புக்கொடி காட்டும் போராட்டத்தை தமிழக எதிர்க்கட்சிகள் 12-04-2018 அன்று மேற்கொண்டன[11]. தமிழர்கள் தொடர்ந்து பிரச்னையில் சிக்கித் தவிக்கும்போது, எந்த விதத்திலும் காப்பாற்ற முன் வராத ராணுவத்திற்கு எதற்காக கண்காட்சி நடத்தப்பட வேண்டும் என்று சீமான் கேள்வி எழுப்பினார்[12]. மோடிக்கு கருப்பு கொடி காண்பித்து, இன்று காலை போராட்டம் நடத்திய சீமான் கைது செய்யப்பட்டு பல்லாவரம் ஸ்ரீகிருஷ்ணா கல்யாண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்[13]. இதேபோல மோடிக்கு கருப்பு கொடி காண்பித்து போராட்டம் நடத்தியதற்காக இன்று கைது செய்யப்பட்ட மணியரசன், தமிமுன் அன்சாரி, கருணாஸ், தனியரசு, இயக்குநர்கள் பாரதிராஜா, கவுதமன், அமீர் ஆகியோரும் சிட்லபாக்கத்திலுள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.
இதனையடுத்து சீமான் மற்றும் தமிமுன் அன்சாரியை விடுதலை செய்யக்கோரி நாம் தமிழர் கட்சி மற்றும் மனிதநேய ஜனநாயகக் கட்சித் தொண்டர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்[14]. இதனால், ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தடியடி நடத்திய காவல்துறை அவர்களை வலுக்கட்டாயமாக கைது செய்து வேனில் ஏற்றி வருகிறது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது[15]. பல்லாவரம் ஸ்டேஷன் சாலையே பரபரப்பாக போர்க்களம் போல காணப்படுகிறது. சாலையோர வியாபாரிகள் கடைகளை எடுத்து விட்டனர். சீமானை விடுவிக்கக் கோரி பாரதிராஜாவும் வெளியேற மறுத்து வருவதால் பதட்டம் தொடர்கிறது[16]. இந்த நிலையில், 12-04-2018 அன்று இரவு 9 மணியளவில் சீமான், தமிமுன் அன்சாரி உள்ளிட்டோர் விடுதலை செய்யப்பட்டனர்[17]. இதன்பிறகு பாரதிராஜா விடுதலைக்கு சம்மதித்து வெளியே வந்தார்[18].
தொடர்ந்து “தமிழ்.ஒன்.இந்தியா,” சீமான் புராணம் பாடி வருவது, நிச்சயமாக, இரண்டிற்கும் உள்ள தொடர்பை வெளிப்படுத்துகிறது. ஒரே செய்தியை பது முறை விதவிதமாக போட்டுள்ளதே தமாஷாக உள்ளது. அவற்றையெல்லாம் தொகுத்தது தான், இப்பதிவு. “தமிழர் நலனுக்காக பல முறை சிறைக்கு சென்ற போராளி சீமான்” என்று தலைப்பிட்டு போட்ட செய்த்யில், சீமான் புராணத்தைக் காணலாம்[19]. ஐபிஎல் போட்டிக்கு எதிரான போராட்டத்தின் நடத்தப்பட்ட தாக்குதலை தொடர்ந்து சீமான் மீது கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகளை பதிவு செய்தது காவல்துறை. இந்நிலையில் சீமானை கொலை முயற்சி வழக்கில் கைது செய்ய காவல்துறை திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது[20].
போராட்டத்தின் போது போலீஸ்காரர் 3 பேர் மீது கையில் ஒரு கொடியை [நாம் தமிழர்] ஏந்தி கொண்டு ஒரு கும்பல் தாக்குதல் நடத்தியது[21]. இந்த வீடியோ வைரலாகியது. இதைத் தொடர்ந்து காவலர்கள் புகாரின் பேரில் சீமான் உள்ளிட்ட 8 பேர் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது. “ஐபிஎல் போட்டிக்கு எதிரான போராட்டத்தின்போது போலீஸாரை தாக்கியவர்கள் நாம் தமிழர் கட்சியினர் அல்ல. நாம் தமிழர் கட்சி வன்முறை கட்சி அல்ல. போலீஸாரை தாக்குவதற்குத்தான் கட்சி நடத்திக் கொண்டிருக்கிறோமா. போலீஸாரை நாம் தமிழர்தான் தாக்கினார்கள் என்பதை எப்படி முடிவு செய்தீர்கள். முறையாக விசாரணை நடத்தி கைது செய்யுங்கள். தேவையில்லாமல் நாம் தமிழர் கட்சியினரை கைது செய்யாதீர், ” என்றெல்லாம் கேட்டுக் கொண்டது வேடிக்கையாக இருந்தது[22].
© வேதபிரகாஷ்
19-04-2018
[1] தமிழ்.ஒன்.இந்தியா, அந்த இளைஞர் போலீசைத் தாக்கியது ஏன் தெரியுமா?, Posted By: Shankar Published: Wednesday, April 11, 2018, 11:50 [IST]
[2] https://tamil.oneindia.com/news/tamilnadu/why-police-attacked-during-ipl-protest-316894.html
[3] தமிழ்.ஒன்.இந்தியா, ஏப். 20ல் சென்னையில் ஐபிஎல் நடக்காது, நடத்த விட மாட்டோம்… சீமான் அதிரடி, Posted By: Gajalakshmi Updated: Wednesday, April 11, 2018, 15:06 [IST]
[4] https://tamil.oneindia.com/news/tamilnadu/seeman-says-ipl-match-will-not-happen-on-april-20-316922.html
[5] தமிழ்.ஒன்.இந்தியா, கர்நாடகத்தில் பாஜக ஆட்சியின்போதும் தமிழகத்துக்கு முறையாக காவிரி நீர் கிடைக்கவில்லை– சீமான், Posted By: Lakshmi Priya Updated: Wednesday, April 11, 2018, 15:32 [IST].
[6] தினகரன், நாம் தமிழர் கட்சியை தடை செய்யவேண்டும், 2018-04-17@ 00:45:11
[7] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=394117
[8] https://tamil.oneindia.com/news/tamilnadu/seeman-accuses-we-never-gets-cauvery-water-though-bjp-was-power-316927.html
[9] தமிழ்.ஒன்.இந்தியா, பொய் வழக்குப் போட்டு சீமானைக் கைது செய்ய நாங்கள் விடமாட்டோம் – பெ.மணியரசன், Posted By: Mohan Prabhaharan Published: Wednesday, April 11, 2018, 15:42 [IST].
[10] https://tamil.oneindia.com/news/tamilnadu/we-wont-let-arrest-seeman-says-maniyarasan-316930.html
[11] தமிழ்.ஒன்.இந்தியா, தமிழர்களை எந்த விதத்திலும் காப்பாற்றாத ராணுவத்துக்கு சென்னையில் கண்காட்சி எதற்கு? : சீமான் கேள்வி, Posted By: Mohan Prabhaharan Published: Thursday, April 12, 2018, 10:44 [IST].
[12] https://tamil.oneindia.com/news/tamilnadu/why-defence-ministry-doing-expo-chennai-questions-seeman-317002.html
[13] தமிழ்.ஒன்.இந்தியா, கைது பரபரப்புகளுக்கு முற்றுப்புள்ளி.. சீமான், தமிமுன் அன்சாரியை இரவில் விடுதலை செய்தது காவல்துறை!, Posted By: Veera Kumar Updated: Thursday, April 12, 2018, 21:04 [IST].
[14] தமிழ்.ஒன்.இந்தியா, சீமானை கைது செய்வதை எதிர்த்து போராட்டத்தில் குதித்த தொண்டர்கள்.. பல்லாவரத்தில் பரபரப்பு, Posted By: Mohan Prabhaharan Updated: Thursday, April 12, 2018, 18:50 [IST].
[15] https://tamil.oneindia.com/news/tamilnadu/police-arrests-seeman-thameemun-ansari-party-cadres-317071.html
[16] தமிழ்.ஒன்.இந்தியா, சீமான், அன்சாரி விடுதலை செய்யப்படும்வரை மண்டபத்திலேயே உள்ளிருப்பு போராட்டம் நடத்திய பாரதிராஜா, Posted By: Aravamudhan Updated: Thursday, April 12, 2018, 21:05 [IST].
[17] https://tamil.oneindia.com/news/tamilnadu/seeman-may-be-get-arrested-317054.html
[18] https://tamil.oneindia.com/news/tamilnadu/bharathiraja-refused-go-317069.html
[19] தமிழ்.ஒன்.இந்தியா, தமிழர் நலனுக்காக பல முறை சிறைக்கு சென்ற போராளி சீமான்!, Posted By: Kalai Mathi Updated: Friday, April 13, 2018, 10:29 [IST]
[20] https://tamil.oneindia.com/news/tamilnadu/seeman-went-jail-many-times-tamil-benefit-317076.html
[21] தமிழ்.ஒன்.இந்தியா, போலீஸாரை தாக்கியது நாங்கள் அல்ல: அதற்காகவா கட்சி நடத்துகிறோம்– சீமான் சீறல், Posted By: Lakshmi Priya Published: Saturday, April 14, 2018, 17:28 [IST]
[22] https://tamil.oneindia.com/news/tamilnadu/seeman-says-that-his-party-is-not-violence-party/articlecontent-pf304675-317244.html