பருப்பு, விலை, கருணாநிதி!
அதிசயம் ஆனால், உண்மை! கருணாநிதிக்கு திடீரென்று பருப்பு ஞாபகம் வந்துவிட்டது! ரொம்ப நாளாக நடிகைகள், குடும்பம், செந்தமிழ் மாநாடு என்று இருந்து வந்த இவருக்கு, திடீரென்று பருப்பு பற்றி ஞாபகம் வந்தது ஆச்சரியம்தான்!
இப்படி கொழுப்பான கேள்வி கேடகப்படுகிறது!: கேள்வி:பருப்பு விலை சரிந்துள்ளதாக இன்று ஏடுகளில் செய்தி வந்துள்ளதே? விலைவாசி உயர்வை பற்றி வீண் ஆர்ப்பாட்டம் செய்பவர்களால் இந்த செய்தியை தாங்கிக் கொள்ள முடியாதே?. இவருக்கு ஓஸியிலேயே பருப்பு சப்ளை வர்ம்போல இருக்கிறது!
கருணாநிதின் பதில்: கடந்த மாத தொடக்கத்தில் 100 கிலோ துவரம் பருப்பு மூட்டை ஒன்று 9 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்டதற்கு மாறாக, 23-1-2010 அன்று இதன் விலை 7 ஆயிரமாக குறைந்துள்ளது. மூட்டை ஒன்றுக்கு இரண்டாயிரம் ரூபாய் விலை சரிந்துள்ளது.
இதுபோலவே இரண்டாம் ரக துவரம் பருப்பு விலை மூட்டை 7 ஆயிரம் ரூபாயில் இருந்து 6,500 ரூபாயாக குறைந்துள்ளது. தான்சானியா துவரம் பருப்பு 6,700 ரூபாயில் இருந்து 5,500 ரூபாயாக குறைந்துள்ளது. மியான்மர் துவரம் பருப்பு 6 ஆயிரம் ரூபாயில் இருந்து 5,500 ரூபாயாக விலை குறைந்துள்ளது.
உளுத்தம் பருப்பு விலை மூட்டை ஒன்றுக்கு 7 ஆயிரம் ரூபாயில் இருந்து 6,800 ரூபாயாக விலை குறைந்துள்ளது. முதல் ரக பாசிப்பருப்பு 8 ஆயிரம் ரூபாயில் இருந்து 7,800 ரூபாயாக விலை குறைந்துள்ளது. மொத்த விலை இந்த அளவிற்கு குறைந்தபோதிலும், சில்லரை விற்பனையில் விலை குறையவில்லை என்றும் கூறப்படுகின்றது. மொத்த விலையை தொடர்ந்து சில்லரை விலையையும் குறைக்க உணவுத்துறை; உடனடியாக கவனம் செலுத்திடும் என்று கூறியுள்ளார் முதல்வர். அதாவது, உயர்ந்தால், மறுபடியும் உயர்த்திவிடுவர் என்பதுபோல பேசுல்கிறார்!
பருப்பு வியாபாரிகள் சங்கம் ஞாபகம் இருக்கிறதா? இல்லையா? தமிழகத்தில் இப்படி ஒரு சங்கம் ஆரம்பிக்கப்பட்டு, கருணநிதிக்கு நன்றி தெரிவித்து பத்திரிக்கைகளில் முதல் பக்கத்தில் விளம்பரம் கொடுத்தனர்! அன்றிலிருந்துதான், விலையே ஏற ஆரம்பித்தது!
ரூ. 20/- சாப்பாடு இல்லை!: தமிழகத்தில் அரிசி, காய்கறி விலைகள் தொடர்ந்து விலை உயர்ந்தாலும் 20 ரூபாய் சாப்பாடு தொடர்ந்து வழங்கப்படும் என்று தமிழ்நாடு ஓட்டல்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அச்சங்கத் தலைவர் எம்.ரவி, செயலர் ஆர்.சீனிவாசன் ஆகியோர் கூட்டாக விடுத்துள்ள அறிக்கையில், உணவகங்களில் வழங்கப்படும் அனைத்து வகை சாப்பாடுகளுடன் மலிவு விலை சாப்பாடு ரூபாய் 20க்கு தமிழ்நாடு முழுவதும் அனைத்து ஓட்டல்களிலும் தொடர்ந்து வழங்கப்படுகிறது. இதை அந்தந்த பகுதிகளில் வாழும் மக்கள் அவர்களின் வசதிக்கேற்ப பயன்படுத்திக் கொள்கிறார்கள். இப்பொழுது இந்த சாப்பாடைக் காணோம்!