Archive for the ‘நெற்றியில் குங்குமம்’ Category

கருணாநிதி, ஸ்டாலின், உதயநிதி: இவர்கள் விபூதி வைத்தால் என்ன, துடைத்தால் என்ன? அவர்களுக்கு அதெல்லாம் சகஜம் ஆனால், திராவிடத்துவவாதிகளின் வழிகளை இந்துத்துவவாதிகள் பின்பற்றுவது ஏன்? (2)

நவம்பர் 23, 2020

கருணாநிதி, ஸ்டாலின், உதயநிதி: இவர்கள் விபூதி வைத்தால் என்ன, துடைத்தால் என்ன? அவர்களுக்கு அதெல்லாம் சகஜம் ஆனால், திராவிடத்துவவாதிகளின் வழிகளை இந்துத்துவவாதிகள் பின்பற்றுவது ஏன்? (2)

தந்தை விபூதி அழித்தான், தனயன் வைத்துக் கொண்டான்: மயிலாடுதுறை உள்ள தனியார் திருமண மண்டபத்தில் கல்லூரி மாணவிகளிடம் உதயநிதி ஸ்டாலின் கலந்துரையாடினார்[1]. அதனைத்தொடர்ந்து கல்லூரி மாணவிகள் உதயநிதி ஸ்டாலினுடன் ஆர்வமுடன் செல்பி எடுத்துக்கொண்டனர். 22-11-2020 அன்று மூன்றாவது நாளாக கும்பகோணத்தில் பிரசாரம் மேற்கொள்ளும் உதயநிதி ஸ்டாலின் கும்பகோணம் பள்ளி தீவிபத்தில் பலியான குழந்தைகளின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துகினார். பின்னர் திருபுவனத்தில் நெசவாளர்களின் குறைகளை கேட்டறிந்தார். மேலும் கும்பகோணத்தில் பல்வேறு இடங்களுக்கு சென்று பிரசாரம் மேற்கொண்டார். தேவர் குருபூஜைக்கு சென்ற திமுக தலைவர் ஸ்டாலின் அங்கு அவருக்கு வழங்கப்பட்ட திருநீற்றை நெற்றியில் இருந்து அழித்த விவகாரம் இன்னும் முடிந்தபாடில்லை[2]. ஆனால் ஸ்டாலின் மகனான உதயநிதி தருமபுரம் ஆதீனத்திடம் ஆசி பெற்று திருநீறு பூசியிருக்கிறார்.இது கட்சித் தொண்டர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது[3], என்று ஊடகங்கள் குறிப்பிட்டாலும், தந்தையும்-தனயனும் திட்டத்துடன் தான் செயல்படுகின்றனர் என்பது நன்றாகவே தெரிகின்றது.

21-11-2020 அன்றே, தருமபுரி ஆதீனம் புகைப்படங்களைப் போட்டு, சந்திப்பை பதிவு செய்தது:  முதலில், இச்சந்திப்பு, பல கேள்விகளை எழுப்பின.

  1. இரவு பத்து மணிக்கு மேலே மடத்தில், இப்படி நாத்திகவாதியை வரவழைத்து, ஆசிர்வதித்து, பிரசாதம் கொடுக்கும் படலம் நடக்குமா?
  2. “பெண்டாட்டியை வைத்து சாமி கும்பிடற ஆட்கள்,” அரசியலில் வெற்றி என்றால், தானே வந்து கும்பிடுவதில் எந்த ஆச்சரியமும் இல்லை!
  3. ‘தமிழ் கடவுள் சேயோன்’ என்ற ஆன்மிக நூலை சந்நிதானம் வெளியிட, முதல் பிரதியை உதயநிதி பெறுவதில் என்ன வியப்பு, ஞான பழத்தையா கொடுத்தார்?
  4. “இரவு எத்தனை மணி ஆனாலும் தருமபுரம் குருமகா சந்நிதானத்தைச் சந்தித்து ஆசி பெறுவேன்,” என்று உதயநிதி கூறினார் என்றால், என்ன நாடகம் இது?
  5. வேலை வைத்து இந்துதுவவாதிகள் வேலை செய்யும் போது, நாத்திகரும், “தமிழ் கடவுள் சேயோன்’ என்று வினை செய்தால், அம்மை-அப்பனே வரவேண்டும்!

போன்ற கேள்விகள் எழுந்தன. ஆனால், “திமுக இளைஞர்அணிசெயலர் உதயநிதிஸ்டாலின் தருமையாதீன குருமணிகளிடம் ஆசிபெற்றார்,” என்றும், “தாத்தாவும் பேரனும் தருமையாதீனத்தில்,” தலைப்பிட்டு, 21-11-2020 அன்றே, தருமபுரி ஆதீனம் புகைப்படங்களைப் போட்டு, சந்திப்பை பதிவு செய்தது. அதனால், திமுக மற்றும் மடம் இதனை, ரகசியமாக வைத்துக் கொள்ளவில்லை அல்லது சதிப்பு அத்தகையதல்ல, வெளிப்படையானது அல்லது வெளிப்படுத்த வேண்டிடியது என்று தீர்மானத்துடன் இருந்தது தெரிகிறது. ஊடகங்களிலும் அப்புகைப்படங்கள் வெளிவந்துவிட்டன. கருணாநிதி மற்றும் முந்தைய மடாதிபதி இருக்கும் புகைபடத்தை, பிரேம்-அலங்காரத்துடன் நினைவுப் பரிசாக கொடுத்தது, இது ஒரு தீர்மானிக்கப் பட்ட சந்திப்பு என்பதனை உறுதி செய்கிறது.  சைவர்களோ, பக்தர்களோ, இவ்வாறு முறைகள் மீறப் படுகின்றன என்று கண்டிக்கவில்லை.

தாத்தாவும் பேரனும் தருமையாதீனத்தில், என்று நினைவு பரிசு அளித்தது !
தாத்தா முதல் பேரன் வரை தருமபுர ஆதீன தொடர்புகள்!

இந்துத்துவ வாதிகளின் தமாஷாக்கள்: “தேர்தல் நாடகத்தை ஆரம்பித்துவிட்டனர். இந்துக்களுக்கு மீண்டும் சொல்கிறேன் முருகனுக்குக் காவடி தூக்கினாலும் ஒரு பொழுதும் திமுகவை நம்பிவிட வேண்டாம். பதவிக்காக அனைத்து நாடகத்தையும் வெக்கமே இல்லாமல் இந்த குடும்பம் நடத்தும். கறுப்பர் கூட்டம் நடத்தியதே திமுக ஆதரவாளர்கள், நிர்வாகிகள் தான்.

  1. கறுப்பர் கூட்டத்தை ஏன் திமுக ஸ்டாலின் கண்டிக்கவில்லை?
  2. இந்துகளை பண்டிகைக்கு மட்டும் ஏன் ஸ்டாலின் வாழ்த்து தெரிவிப்பது இல்லை?
  3. திக அமைக்கும் மேடைகளில் ஏன் இந்து கடவுள்களை அருவருப்பாக திட்ட திமுக ஆதரவாளர்க்ள் அனுமதிக்கிறார்கள்?
  4. இதே இஸ்லாமிய கிருஸ்தவரை ஏன் பேசுவது கூட இல்லை?

இந்த நான்கு கேள்வி கேளுங்கள் எங்கே உதய நிதி வந்தாலும். (ஆம இந்த பெரியாரியவாதிகளை உதயநிதி தன் வீட்டு நாய் என்று நினைக்கிறாரா? சுயமரியாதை சுயமரியாதை என்று உதயநிதிக்கு சொம்பு தூக்கும் அளவுக்கு வந்துவிட்டார் சுபவீ. இதெல்லாம் ஒரு வாழ்க்கை!),” என்று பெரிய வீராப்பாக மாரிதாஸ் பதிவு செய்வது தமாஷாக இருக்கிறது. இதில் ஒன்றும் விசயமே இல்லை. 1960களிலிருந்து, நேரிடையாக தமிழக அரசியலை கவனித்து வருபவர்களுக்கு இது ஒரு ஜோக்! “இந்துக்களுக்கு மீண்டும் சொல்கிறேன் முருகனுக்குக் காவடி தூக்கினாலும் ஒரு பொழுதும் திமுகவை நம்பிவிட வேண்டாம்,” என்று சொல்வது தமாஷ். ஏதோ ஒட்டு மொத்த இந்துக்களுக்கு அறிவுரை சொல்கிறேன் என்ற ஆணவம் தான் உள்ளது. கமலாலயத்தில் 12-11-2020 அன்று கிருத்துவ பாஸ்டர்கள் ஜெபம் செய்த போது, இவரைக் காணோம், இப்பொழுது இதற்கெல்லாம் குதிக்கிறார்[4]. ஆக, இதெல்லாம் தேர்தல் வரை உச்சக்கட்டத்தில் இருக்கும்.

இந்த நடத்தை ஆதரித்து போற்றும் இந்துத்துவவாதிகள்!

பெண்டாட்டியை வைத்து சாமி கும்பிடற ஆட்கள்,”  அரசியலில் வெற்றி என்றால், தானே வந்து கும்பிடுவதில் எந்த ஆச்சரியமும் இல்லை: தினமலர், “தேர்தல் வருகிறது., புறப்படுவோம் கோவிலுக்கும், மடத்திற்கும்,“ என்று செய்தி வெளியிட்டுள்ளது[5]. ஆகவே, பெண்டாட்டியை வைத்து சாமி கும்பிடற ஆட்கள்,”  அரசியலில் வெற்றி என்றால், தானே வந்து கும்பிடுவதில் எந்த ஆச்சரியமும் இல்லை,” என்பது தான் நிதர்சனம். ஶ்ரீ ராமகோபாலன் முன்னரே, “பெண்டாட்டியை வைத்து சாமி கும்பிடற ஆட்கள்,” என்று திராவிட நாத்திக- இந்துவிரோதிகளைக் குறிப்பிட்டுள்ளார். ஆகவே, 2020ல் அதைப் பற்றி கண்டுபிடித்து, பெரிய ஆராய்ச்சி செய்ய வேண்டியதில்லை! இந்துக்கள், குறிப்பாக இந்துத்துவ வாதிகள் மாறுவதை கவனிக்க வேண்டும். அரசியல், அதிகாரம், பணம், பதவி……….என்றால் மாறும், மாறி விடும் போக்கைக் கவனிக்க வேண்டும். கருத்து-பதில் கருத்து என்ற உரையாடலைக் கூட சகித்துக் கொள்ளாமல் இருக்கும், இந்துத்துவ பண்டிதர்கள் இருப்பது திகைப்பாக இருக்கிறது! ஓட்டுவங்கி என்ற ரீதியில், மக்களை ஜாதி, மதம் என்று பார்க்கும் போது, எல்லா கட்சிகளும் ஒன்றாகத்தான் ஆகின்றனர். இந்துக்களுக்கு என்று, உண்மையான இந்துத்துவம் பேசும் சித்தாநந்தவாதிகளே, மாறும் போது, திராவிடத்துவவாதிகளை குறைச் சொல்வது எந்த பிரயோஜனும் இல்லை. “திருவாரூர் தேரை நாங்கள் தான் ஓட வைத்தோம்,” என்றெல்லாம் கூறிக்கொண்டதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்.

வேல் யாத்திரையில், பெண்கள் தெருவில் ஆட்டம் போட்டது. இந்த நடத்தை ஆதரித்து போற்றும் இந்துத்துவவாதிகள்!
இந்துத்துவப் பண்டிதர் ஆதரித்து பெரிய விளக்கம் கொடுத்தது!

வேல் யாத்திரையில் பெண்களை வைத்து நடனம்: வேல் யாத்திரையின் போது, நடுத்தெருவில், பெண்கள் சினிமா பாணியில் ஆடுவதாக ஒரு வீடியோ சுற்றில் உள்ளது. திராவிடத்துவவாதிகள் பாணியில், இதுக்கள் செல்ல வேண்டிய அவசியல் இல்லை. தெரிந்தும், அதனை ஆதரிக்க வேண்டும், நியாயப் படுத்த வேண்டும் என்று வலுக்கட்டாயமாக இந்துத்துவவாதிகள் ஆதரித்து வருகின்றனர். இந்துத்துவம் ஏன் இப்படி நீர்க்கப் படுகிறது, என்ற கோணத்தில் கவலைப் படவில்லை. மாறாக, ஸ்டான்லி ராஜன் (Stanely Rajan) என்ற இந்துத்தவ வாதி, வலதுசாரி பண்டிதர் ஒரு பெரிய விளக்கம் கொடுத்துள்ளது திகைப்பாக இருக்கிறது. அவர் “தேவதாசி” என்றெல்லாம் விளக்கம் கொடுத்துள்ளார். முன்பு, சொர்ணமால்யா “தேவதாசி” சிஸ்டத்தை ஏதோ ஒரு கூட்டத்தில் (பரத நாட்டியம் வாழவேண்டும், வார வேண்டும் என்ற ரீதியில்) ஆதரித்த போது, என்ன நடந்தது என்பதை ஞாபகத்தில் கொள்ளவில்லை. அரசியல் என்ற போதை-மயக்கத்தில் இருப்பதால், மற்றவையெல்லாம் இவர்கள் கண்களுக்கு, மனங்களுக்கு தெரியாமல் போகிறது என்று தெரிகிறது. மனசாட்சி இல்லாமல் வாத-விவாதங்களை செய்து கொண்டிருக்கிறார்கள். இந்துவிரோதிகளை வெல்ல, அவர்களது வழிகளையே நாங்கள் பின்பற்றுவோம் என்பது போல இந்துத்துவாதிகள் நடந்து கொள்வது சரியில்லை.

©வேதபிரகாஷ்

23-11-2020


[1] https://www.hindutamil.in/news/todays-paper/tnadu/604361-.html

[2] தமிழ்.ஏசியன்.நெட்.நியூஸ், அப்பா நாத்தீகவாதியாம்.! மகன் ஆன்மீகவாதியாம். திமுக கொள்கையை கிழித்து தொங்கவிடும் நெட்டிசன்கள்..!, By T Balamurukan, Mayiladuthurai, First Published 23, Nov 2020, 7:43 AM

[3] https://tamil.asianetnews.com/politics/dad-is-an-atheist-the-son-is-a-spiritualist-netizens-tore-up-dmk-policy-and-hung-up–qk8cbj

[4]  பதில் சொல்ல முடியாமல் தடுத்துள்ளார். கருத்து-பதில் கருத்து என்ற  உரையாடலைக் கூட சகித்துக் கொள்ளாமல் இருக்கும், இந்துத்துவ பண்டிதர்கள் இருப்பது திகைப்பாக இருக்கிறது!

[5] தினமலர், தேர்தல் வருகிறது., புறப்படுவோம் கோவிலுக்கும், மடத்திற்கும்., Updated: நவ 22, 2020 15:44 | Added : நவ 22, 2020 14:38.

ஸ்டாலினை பசு முட்ட வந்ததும், மாட்டுக்கறிக்கு ஆதரித்ததும், குங்குமத்தை அழித்ததும் தமிழ்நாட்டவர் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் – இப்பொழுது சனியைப் பற்றி பேசும் ஸ்டாலின் (2)

ஜனவரி 16, 2018

ஸ்டாலினை பசு முட்ட வந்ததும், மாட்டுக்கறிக்கு ஆதரித்ததும், குங்குமத்தை அழித்ததும் தமிழ்நாட்டவர் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்இப்பொழுது சனியைப் பற்றி பேசும் ஸ்டாலின் (2)

Blood pongal - as Kru compared kumkum with blood

போகி திருநாளும், பிடித்துள்ள சனியும்: ஸ்டாலின் பேசியது, “இன்று போகி திருநாள். போகி என்றால் பழையன கழிதலும், புதிய புகுதலும் என்ற நிலையில், நம்மை பிடித்துள்ள சனி இன்றோடு ஒழிந்திட வேண்டும். வீட்டிலிருக்கும் பழையனவற்றை மட்டுமல்ல, இந்த நாட்டிலிருக்கும் பழையனவற்றையும் அப்புறப்படுத்த வேண்டிய கட்டாயம் நமக்கு உருவாகியிருக்கிறது[1]. அந்தளவுக்கு, ஏறக்குறைய 20 ஆண்டுகள் பின்தங்கி, மோசமான நிலையில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கும் தமிழகத்திற்கு, நாளைய தினம் தை பிறக்கின்ற நேரத்தில் ஒரு நல்ல விடிவுகாலம் பிறக்கும் என்ற நம்பிக்கை நமக்கெல்லாம் உருவாகி இருக்கிறது. எனவே, நம்முடைய தமிழகத்தை காப்பாற்ற, தமிழகத்துக்கு ஒரு விடிவுகாலத்தை உருவாக்கிட, தமிழக மக்களுக்குத் தேவையான திட்டங்களை உருவாக்கிட வேண்டுமென்று, இந்த தமிழ்ப் புத்தாண்டு மற்றும் பொங்கல் விழாவில் உறுதியெடுத்துக் கொள்ள வேண்டும். அந்த நம்பிக்கையோடு உங்கள் அனைவருக்கும் தமிழ்ப் புத்தாண்டும் மற்றும் பொங்கல் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்,” என்று கூறினார்[2]. இனி தளபதியை மாடு முட்ட வந்த விவகாரத்தை கவனிப்போம்.

Cow marched towards Stalin - 14-01-2018, twitter

மாடு முட்ட வந்த சமாசாரம்: வேடிக்கை என்னவென்றால், தளபதியை மாடு முட்ட வந்த விவகாரத்தை “தினமலர்” மட்டுமே வெளியிட்டதாகத் தெரிகிறது. ஒரு வீடியூ 15-01-2018 காலையில் தேடியபோது காணப்பட்டது. மதியம் காணப்படவில்லை. கொளத்துாரில், ஸ்டாலினை மாடு முட்ட வந்ததால், மாட்டிற்காக செய்யவிருந்த பூஜையை, ஸ்டாலின் ரத்து செய்தார்.தமிழக எதிர்க்கட்சி தலைவரும், தி.மு.க., செயல் தலைவருமான ஸ்டாலினின் சொந்த தொகுதி கொளத்துார். இந்த தொகுதிக்கு உட்பட்ட, பெரவள்ளூர், பெரியார் நகர் பகுதிக்கு வந்தார். கொளத்துார் வீதிநகர் பகுதியில், நடந்த பொங்கல் விழாவிற்கு நலத்திட்ட உதவிகள் வழங்க ஸ்டாலின், 9:00 மணிக்கே வரவிருப்பதாக தெரிவிக்கப்பட்டது.ஆனால், 12:௦௦ மணிக்கு வந்த ஸ்டாலின், பொங்கல் விழா நடைபெறும் இடத்தில் இருந்த பசுமாட்டிற்கு மாலை போட சென்றார்.ஆனால், அந்த மாடு முட்ட வரவே, கோபமடைந்த ஸ்டாலின், மாலையை கட்சி தொண்டர் ஒருவரிடம் கொடுத்து மாட்டிற்கு போடச் சொன்னார்[3]. மேலும், பசு மாட்டிற்கு செய்யவிருந்த பூஜையையும் வேண்டாம் என்று கூறி மறுத்து விட்டார்[4]. சென்ற ஜூன் 2017ல் மாட்டுக்கறியை ஆதரித்துப் பேசியதை நினைவு கொள்ளலாம்[5]. இப்படி இரட்டை வேடும் போடும் இவர், பொங்கல் வாழ்த்து என்று இணைதளத்தில் படம் போடும் போது, மாட்டை சேர்த்துக் கொள்கிறார்.

Cow and stalin - DM-14_01_2018_016_026

மிருகம் போலி நாத்திகனின் முகமூடியைக் கிழித்து விட்டது: ஸ்டாலினை மாடு முட்ட வந்தது, மாலை போட மறுத்தது, போலி நாத்திகத்தை தோலுரித்திக் காட்டுகிறது. குங்குமத்தை அழித்த ஸ்டாலினை மாடு முட்ட வந்தது, திராவிட நாத்திகத்திற்கு சரியான அடி! பகுத்தறிவால் எந்த விளக்கமும் கொடுக்க முடியாது! முன்னர் கருணாநிதி, திமுக தொண்டர் குங்குமத்துடன் வந்தபோது, நக்கலாக, “என்ன நெற்றியில் ரத்தமா?”, என்ற கேட்ட வயதான தந்தை கருணாநிதியின் வக்கிரம் தான், தனயன், நெற்றியில் இட்ட குங்குமத்தை அழித்தபோது புலப்பட்டது. பிறகு தனது தாயார், துணைவியார், சகோதரி என்று எல்லோரும் ஏன் குங்குமம் வைக்கின்றனர், அவற்றை அழிக்காமல் இருக்கும் இவரது யோக்கியதை என்ன என்பதனை கவனிக்க வேண்டும். ஸ்டாலின் – மாடு முட்ட வந்தால் வீரத்தமிழா, கோபம் வரக்கூடாது, கொம்புகளைப் பிடித்து அடலேறு போல அடக்கி வீரத்தைக் காட்ட வேண்டும்! ஜல்லைக் கட்டுக்கு வீரம் பேசிய இந்த தளபதி கோழை போல ஓடி போனது, கேவலமானது. வயதாகி விட்டது என்று சொல்லலாம், அப்பொழுது, வயதிற்கு வேண்டிய நாகரிகம் அப்பனுக்கும், மகனுக்கும் இல்லாத்தும் கேவலம் தான். நம்பிக்கையில்லாத ஸ்டாலின் சனி பற்றி பேசுவது, அவரது பொலித்தனத்தின் உச்சம்! பிறகு ராகு-கேது எல்லாம் வரும் போல!

Cow marched towards Stalin - 14-01-2018, Chennai.Karu enquires

போகி பண்டிகையில், பழையது கலைந்து, புதியதை உருவாக்குவோம். தமிழகத்தை சனிபிடித்து ஆட்சி செய்கிறது.தை பிறந்தால் வழிபிறக்கும், பெரியாரா இப்படி சொல்லிக் கொடுத்தார்? பண்டிகைகளைக் கேவலப்படுத்திய ஈவேரா மற்றும் திக முதலியவற்றை தமிழக மக்கள் அறிந்து, புரிந்து கொண்டு விட்டனர். ஹேமமாலினியையும், ஸ்டாலினையும் மாடு முட்ட வந்ததில் உள்ள ஒற்றுமை, வேற்றுமை என்ன என்று பார்த்தால், முன்னவர் பிராமண்ராக இருந்தாலும், தான் கடமையை செய்யும் போது முட்ட வந்தது. ஆனால், இங்கோ, பொங்கல் வைத்து, பசுக்கு மாலை போட வந்த போது முட்டப் பார்த்தது. ஆக, அந்த ஜீவனுக்கு, இந்த மனிதனின் போலித் தனம் தெரிந்திருக்கிறது.

Stalin, atheist visiting temples- 13-01-2018

இந்து மதம் மட்டுமல்ல எந்த மதத்தை இழிவுபடுத்தினாலும் தி.மு.. அதை ஏற்காது: வைரமுத்து-ராஜா விவகாரத்தில், ஸ்டாலின் கூறிய இரு வரியை பெரியதாக எடுத்துக் கொள்ள முடியாது[6]. இந்து மதம் மட்டுமல்ல எந்த மதத்தை இழிவுபடுத்தினாலும் தி.மு.க. அதை ஏற்காது ஊக்கப்படுத்தாது, உடன்படாது. என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்[7]. ஆனால், அவர் அவ்வாறு செய்துள்ளாரா என்று பார்த்தால் ஒன்றும் கிடையாது. ஊடகங்களும் பதிலுக்கு எந்த கேள்வியையும் கேட்கவில்லை[8]. திமுக உடன்படாது என்றால், தான் உடன் படுவேன், ஊக்குவிப்பேன், ஏற்பேன் என்றாகிறது[9]. இது பேட்டியில் ஏதோ குறிப்பிட்டிருக்கிறார், அவ்வளவுதான், ஏனெனில், இதுவரை, இந்து மதம் தாக்கப் பட்டபோது, இவர் வாயை மூடிக் கொண்டுதான் இருந்தார். இப்பொழுது கூட கனிமொழி பேசியதற்கு ஒன்றையும் சொல்லக் காணோம். அதென்ன அப்பேச்சு இழிவு படுத்தியதாக ஆகாதா? அவ்வளவு ஏன், இவரது தந்தை பேசியது எல்லாம் ஞாபகப் படுத்திக் கொண்டால், இவரது மனதுக்கு, மனசாட்சிக்குத் தெரியாமலா போய் விட்டது? வைத்த குங்குனத்தை அழித்தபோது, இவர் என்ன செய்ததாக அர்த்தம்? ஆகவே, இந்த ஒரு வரியை வைத்து, இவரது குணத்தை ஒன்றும் எடை போட முடியாது. மேலும், ஊடகங்கள், பசு முட்ட வந்ததை மறைத்ததிலிருந்தே, அவகளது வழக்கமான, செக்யூலரிஸத்தைக் காட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

Karunanidhi meeting DNK 13-01-2018

பொங்கல் அன்று கனிமொழி வீட்டிற்கு சென்ற கருணாநிதி: ஆழ்வார்பேட்டை இல்லத்தில் திமுக செயல்தலைவர் ஸ்டாலினை சந்தித்து கனிமொழி பொங்கல் வாழ்த்து தெரிவித்தார்[10]. இதேபோல் திமுக தொண்டர்களும் ஸ்டாலினை நேரில் சந்தித்து தங்களது பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்தனர். தமிழக மக்களுக்கு கனி மொழி பொங்கல் வாழ்த்து தெரிவித்து உள்ளார்[11]. இந்த ஆண்டாவது தமிழக மக்களுக்கு விடிவுகாலம் பிறக்க வேண்டும் என கூறி உள்ளார். வழக்கமாக பொங்கல் அன்று கருணாநிதி வீடு களை கட்டும். இந்த ஆண்டும், சி.ஐ.டி காலணி வீட்டில் தடபுடல் ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. பொங்கல் அன்று கோபாலபுரம் வீட்டில் தொண்டர்களைப் பார்த்து கையசைத்து பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார்.

Stalin, atheist visiting temples-duplicity- 60th marriage

கோபாலபுரம் வீட்டில் இருக்கும் கருணாநிதி, பொங்கல் அன்று தொண்டர்களைச் சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. தனித்தனியாக தொண்டர்களை பார்க்க மருத்துவர்கள் அனுமதி தரவில்லை. நோய் தொற்று ஏற்பட்டு விடக்கூடாது என்று தடை போட்டுவிட்டனர். இந்நிலையில், 15 மாதங்களுக்கு பிறகு சென்னை சி.ஐ.டி காலணி வீட்டிற்கு ஜனவரி 15-ம் தேதி இரவு 9 மணிக்கு சென்றார் கருணாநிதி[12]. வீட்டுக்கு வந்த கருணாநிதியை அவரது மகள் கனிமொழி வரவேற்றார். ராஜாத்தி அம்மாள், அரவிந்தன் ஆகியோர் கருணாநிதியை வீட்டுக்குள் அழைத்து சென்றனர். ”வீட்டுக்கு அப்பா வந்தது மகிழ்சி அளிக்கிறது’ என்றார் கனிமொழி[13]. ஆக அப்பனை, அண்னனை மகள் சந்தித்தாள், என்று சொல்லாமல், ஏதோ ஒரு தலைவர், இன்னொருவரஇப் பார்த்தார் என்று செய்தி போட்டிருப்பது, நிருபர்கள், செய்தியாளர்களின் அடிமைத் தனத்தைக் காட்டுகிறது. “பொங்கல் இனாம்” கனமாக இருந்தது போலும். இதை ஏன் குறிப்பிட்டுகின்றேன் என்றால், மாடு முட்டிய விசயத்தை மறைத்ததால், அதனைப் பற்றி, பகுத்தறிவோடு செய்தி வெளியிட்டு விவாதிக்காமல் இருந்ததால் தான்.

© வேதபிரகாஷ்

16-01-2018

Stalin, atheist visiting temples-duplicity- 13-01-2018

[1] பாலிமர்.நியூஸ், கொளத்தூர் தொகுதி பொங்கல் விழாக்களில் மு..ஸ்டாலின் பங்கேற்பு, 13-ஜன-2018 12:43

[2]https://www.polimernews.com/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D/

[3] தினமலர், முட்ட வந்தது பசு மாடு பூஜையை நிராகரித்த ஸ்டாலின், Added : ஜன 14, 2018 04:39.

[4] http://www.dinamalar.com/news_detail.asp?id=1938542

[5] http://www.timesnownews.com/india/video/beef-ban-dmk-protest-mk-stalin-iit-madras-assault/62078

 

[6] பாலிமர்.நியூஸ், எந்த மதத்தை இழிவுபடுத்தினாலும் தி.மு.. அதை ஏற்காதுமு..ஸ்டாலின், 13-ஜன-2018 15:04

[7]https://www.polimernews.com/%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5/

[8] தி.இந்து, அதிமுக ஆட்சி அகலவேண்ண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு: ஸ்டா;இன் பேட்டி, Published :  13 Jan 2018  15:50 IST; Updated :  13 Jan 2018  15:50 IST

[9] http://tamil.thehindu.com/tamilnadu/article22436018.ece

[10] தினத்தந்தி, தமிழக மக்களுக்கு கனிமொழி பொங்கல் வாழ்த்து தெரிவித்தார், ஜனவரி 14, 2018, 10:23 AM

[11] http://www.dailythanthi.com/News/TopNews/2018/01/14102338/Kanimozhi-for-Tamil-people-Pongal-greeted.vpf

[12] விகடன், கனிமொழி வீட்டில் கருணாநிதி….!, எஸ். முத்துகிருஷ்ணன், Posted Date : 01:15 (16/01/2018); Last updated : 01:15 (16/01/2018)

[13] https://www.vikatan.com/news/tamilnadu/113646-karunanidhi-went-to-kanimozhis-cit-colony-house-after-15-months.html – vuukle_div