Archive for the ‘நாடா’ Category

திராவிட இயக்கம், கூடா ஒழுக்கம், அரசியல் நாகரிகம், புலம்பும் பகுத்தறிவு, ஆரியத்தை விரும்பும் திராவிடத்தின் தந்திரம் என்னவோ? (2)

பிப்ரவரி 25, 2015

திராவிட இயக்கம், கூடா ஒழுக்கம், அரசியல் நாகரிகம், புலம்பும் பகுத்தறிவு, ஆரியத்தை விரும்பும் திராவிடத்தின் தந்திரம் என்னவோ? (2)

Anna 1967_The Hindu Photo

Anna 1967_The Hindu Photo

வேதனைக்கும், வெட்கத்திற்கும் உரிய கூடா ஒழுக்கம்: வீரமணி இன்று ஏதோ திராவிட கலாச்சாரத்தில் இத்தகைய “கூடா ஒழுக்கம்” வந்துவிட்டது போல புலம்பியுள்ளார். ஆனால், கடந்த 70-90 வருடங்களில் வருடங்களில் திராவிடத்தின் பெயரால் என்னென்னவெல்லாம் அரங்கேறியுள்ளன என்பதையும் பெரியாரின் “……….பையன்கள்”, அண்ணாவின் “உடன் பிறப்புகள்”, கருணாநிதியின் “கழகக் கண்மணிகள்”, எம்ஜியாரின் “ரத்தத்தின் ரத்தங்கள்”……..முதலியோர் நினைத்துப் பார்க்க வேண்டும். 1940களில் ஜின்னாவின் கூட்டு வைத்துக் கொண்ட போது, அவர் ஏதோ திராவிடர்களுக்கு உதவுவார் என்று கனவு கண்ட போது, பெரியாரை உதாசீனப் படுத்தி, ஜின்னா தூக்கியெறிந்தார்[1]. தான் முகமதியர்களுக்கு மட்டும் தான் பாடுபட முடியும் என்று துரத்தி விட்டார். 1950களில் அம்பேத்கரைத் தொடர்ந்த போதும், பெரியார் விரட்டப்பட்டார்[2]. அதாவது, பெரியாரைப் பற்றி அந்த அளவுக்கு எடை போட்டு வைத்திருந்தனர். அப்பொழுது அண்ணா கூட இருந்ததால், பெரியாரின் பலவீனங்களையும் நன்றாக அறிந்து கொண்டிருந்தார். அதனால் தான், மணியம்மையை கல்யாணம் செய்து கொண்டதும், பிரிந்து விட்டார். “கண்ணீர் துளிகளே” அந்த கூடா திருமணத்தினால் தானே உண்டாகியது. அப்பொழுது ஒழுக்கத்தைப் பற்றிக் கவலைப்பட்டவர்கள், பிறகு சுயமரியாதை / சீர்திருத்தத் திருமணங்களுக்கும் வருத்தப்பட வேண்டியதாயிற்று[3]. 1970களில் பதவிக்கு வந்ததும், சட்டத்திருத்தத்தின் மூலம் தான் மானத்தைக் காப்பாற்றிக் கொள்ள முடிந்தது. பகுத்தறிவினாலோ, பகுத்தறிவு பகலவன்களின் மூலமோ முடியவில்லை.

February 26, 1973- CM. Karunanidhi presents the budget for the year 1973-74

February 26, 1973- C .M. Karunanidhi presents the budget for the year 1973-74 – The Hindu photo

தலைவர்களே, வடநாட்டைப் பாருங்கள்!: ஆஹா, வீரமணி தா ஏதோ அண்ணா மாதிரி நினைத்துக் கொண்டு விட்டார் போலும். “வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது”, என்று சொல்லியே அப்பொழுது திராவிட அரசியல்வாதிகள் ஏமாற்ற ஆரம்பித்தனர். “வடநாட்டைப் பார்த்து தமிழ்நாட்டவர் கற்றுக் கொள்ளும் நிலை இன்று ஏற்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் எவ்வளவு கடுமையாக கட்சித் தலைவர்களோ, நாடாளுமன்ற உறுப்பினர்களோ, அமைச்சர்களோ பேசித் தாக்கிக் கொண்டாலும் மத்திய அரங்கம் (Central Hall Parliament) என்ற நாடாளுமன்ற அரங்கில் நுழையும்போது, தோள் மேல் கைபோட்டு, நட்புறவும் நயத்தக்க நனி நாகரிகமும் பொங்கி வழிவது போல் பேசிக் கொள்ளும் நடைமுறை வெகு சர்வ சாதாரணம் ஆனால்தமிழ்நாட்டில்….?”, இப்படி புலம்ப வேண்டிய அவசியமே இல்லை. திராவிடம் பேசியே, தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்ன்டகாரர்களை மிரட்டினர். பிராமணர்-அல்லாத இயக்கத்தில் ஒன்றாக வந்தபோது, நாத்திகம் பேசி அவர்களை விரட்டினர். தமிழ்-பெருமை பாராட்டி, அவர்களது உணர்வுகளை போட்டு மிதித்தனர். இதனால், அவர்கள் ஒருவரொருவராக விலகிச் செல்ல ஆரம்பித்தனர்[4].

June 17, 1967- C.N. Annadurai, Chief Minister is seen presenting the budget for the year 1967-68 on the floor of the Legislative Assembly.

June 17, 1967- C.N. Annadurai, Chief Minister is seen presenting the budget for the year 1967-68 on the floor of the Legislative Assembly- The Hindu photo

தமிழ்நாட்டில் நடப்பது என்ன?: ஆரியம்-திராவிடம், ஆரியர்-திராவிடர், பிராமணர்-பிராமணர்-அல்லாதோர், சமஸ்கிருதம்-தமிழ் என்றெல்லாம் பேசி தமிழர்களைப் பிரித்தனர். ஜெயலலிதா முதலமைச்சர் ஆகியதும், இனிமேல் அது செல்லாது என்றவுடன், ஜாதி சங்களை உண்டாக்கி, ஜாதிவெறியை ஊட்டி, கலவரங்களை ஏற்படுத்தி மக்களைப் பிரித்து வந்தனர். கூட கம்யூனிஸ்டுகள், கிருத்துவர், முகமதியர்கள் உதவியோடு, “மாநில சுயயாட்சி”[5], “தமிழ்நாடு தனிநாடு”, “தமிழ் தேசியம்” போன்ற பிரிவினைவாதிகளோடு[6] மக்களை இன்னும் வெறியேற்றி, தீவிரவாதிகளாக்கினர். ஈழப்பிரச்சினை இவர்களுக்கு அல்வா மாதிரி ஆயிற்று. இந்த குழப்பங்களில் கிருத்துவர், முகமதியர்கள் மக்களை மதம் மாற்ற ஆரம்பித்தனர். மேலும் பிரச்சினைகள் ஏற்பட்டன. தென் மாநிலங்களில் கலவரங்கள் ஏற்பட்டன. அண்ணா 1970களில்“மாநில சுயயாட்சி”யைக் கைவிட்டார்; கருணாநிதி பிறகு “தமிழ்நாடு தனிநாடு” கோரிக்க்லையை மறந்தார்; “தமிழ் தேசியம்” போன்ற பிரிவினைவாதிகளை கருணாநிதி, எம்ஜியார் மற்றும் ஜெயலலிதாவே அடக்க வேண்டியதாயிற்று. இருப்பினும், குணா, தியாகு, நெடுமாறன் கோஷ்டிகள் அவ்வப்போது கலாட்டா செய்து கொண்டு வருகிறார்கள்.

June 19, 1980- M.G. Ramachandran being sworn in as Member of the Tamil Nadu Assembly.

June 19, 1980- M.G. Ramachandran being sworn in as Member of the Tamil Nadu Assembly- The Hindu photo

பிறந்த நாளிலாவது வாழ்த்து கூறக் கூடாதா?: “திராவிடர் இயக்கத்தின் பிறப்புக்குப் பின் இந்நிலை என்பது கசப்பான உண்மையாகும். இதனை நாம் வெட்கத்தோடும், வேதனையோடும் ஒப்புக் கொண்டே ஆக வேண்டும்”, என்றால், அந்நிலை எப்படி உருவாயிற்று என்று உண்மையினை ஒப்புக் கொள்ள வேண்டும். மற்றவர்களுக்கு மரியாதை கொடுக்கக் கூடாது என்ற கலாச்சாரத்தை உண்டாக்கியது திராவிட அரசியல். குறிப்பாக மற்றவர்களை ஏகவசனத்தில் விளிப்பது, அசிங்கமாக மெட்ராஸ் பாசையில் திட்டுவது, ஆபாசமான வார்த்தைகளுடன் பொது இடங்களில், ஏன் மேடைகளிலேயே பேசுவது முதலிய நாகரிகத்தை உண்டாக்கியது அவர்கள் தாம்.  வடநாட்டுத் தலைவர்கள் பலரிடமும் நான் பழகியுள்ளேன்எந்தவித பந்தாவும் இல்லாமல் பழகுபவர்கள் அவர்கள். தமிழ்நாட்டில் தான் இப்படி ஒரு வெறுக்கத்தக்க நோய் எப்படியோ கடந்த 30 ஆண்டுகளாகப் பரவி விட்டது. யார்மீதும் குற்றம் சுமத்தி புண்ணைக்குடைய விரும்பவில்லை நாம்”, என்று நொந்து போய் கூறியபிறகு, புண்ணிற்கு மருந்து போட்டால்தானே ஆறச்செய்யும்! இல்லையென்றால், இனும் புரையேறி சாவில் முடித்து விடாதா?

February 6, 1989- Jayalalithaa taking oath . Karunanidhi, looks on.

February 6, 1989- Jayalalithaa taking oath . Karunanidhi, looks on – The Hindu photo

வடக்கத்திய ஆரியர்கள் எப்படி பண்புள்ளவர்களாக இருக்கிறார்கள்?: “வடநாட்டுத் தலைவர்கள் பலரிடமும் நான் பழகியுள்ளேன்எந்தவித பந்தாவும் இல்லாமல் பழகுபவர்கள் அவர்கள்.”, இப்படி சொல்லியிருப்பது ஆர்.எஸ்.எஸ்காரர்களோ, பிஜேபிக்காரர்களோ இல்லை. இனமான தலைவர், தமிழர் தலைவர் திருவாளார் கி. வீரமணி தான். அவர்கள் ஆரியர்கள், இந்தி மொழி பேசுபவர்கள், இந்து மதத்தைப் பின்பற்றுபவர்கள், கடவுளை நம்புகிறாவர்கள்………………என்று அடுக்கிக் கொண்டே போகலாம். ஆனால், தெற்கத்தையத் தலைவர்களோ, திராவிடர்கள், தமிழ் மொழி பேசிபவர்கள், இந்துமதவிரோதிகள், கடவுளை-குறிப்பாக இந்து கடவுளை நம்ப மாட்டார்கள் என்று அடுக்கிக் கொண்டே போகலாம். அப்படியென்றால், எது வடத்தையத் தலைவர்களை, பண்புடன், பாசத்துடன், பந்தா இல்லாமல் பழகச் செய்கிறது?  ஒழுக்கம், கட்டுப்பாடு, நாகரிகம், மற்றவர்களை மதிக்கும் குணம் முதலியவை எப்படி வருகின்றன? பெரியார் முதல் மற்ற திராவிடத் தலைவர்கள் ஏன் அத்தகைய ஒழுக்கத்தைக் கற்றுக் கொடுக்கவில்லை? “கடமை, கண்ணியம், கட்டுப்பாடு” பேசியவர்கள் ஏன் அவற்றை காற்றில் விட்டு, இன்று புண்ணோடு சுற்றுகின்றனர்?

வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது - மதி கார்ட்டூன்

வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது – மதி கார்ட்டூன்

பெண்களை, பெண்மையை, பெண்ணியத்தை மதிக்காத திராவிடம்: பொதுவாக திராவிடத் தலைவர்கள் எல்லோருமே ஒன்றிற்கு மேற்பட்ட மனைவி-துணைவி வைத்திருப்பவர்கள் தாம்[7]. இத்தகைய இல்லறப் பிரச்சினையே, பெரும்பிரச்சினையாக இருந்து வந்துள்ளது. பொது கூட்டங்களில், ஏன் சட்டசபையிலேயே, சிலேடையாக பேசுவது என்ற பாணியில் அசிங்கமாக, ஆபாசமாக அண்ணாதுரை, கருணாநிதி, மற்ற அமைச்சர்கள் பலமுறை பேசியுள்ளனர். கெட்ட வார்த்தை பிரயோகங்கள் சாதாரணமாக கையாளப்பட்டு வந்துள்ளன. ஜெயலலிதா பிறந்த நாள் அன்று இவர் இதை வெளியிட்டிருப்பது அரசியல் நோக்கம் கொண்டது என்பது தெரிந்த விசயமே. முன்பு ஜெயலலிதா பதவிக்கு வந்த போது, “ஆரிய-திராவிட யுத்தம் தொடர்கிறது!” என்று புத்தகத்தை வெளியிட்டார். ஜெயலலிதா பாப்பாத்தி என்ற வசைகளை, தூஷணங்களை தாராளமாக வெளியிட்டார். போதாகுறைக்கு சட்டசபையிலேயே ஜெயலலிதாவின் ஜாக்கெட்டைக் கிழித்து[8], புடவையை உருவ முயன்ற நாகரிகமான திராவிடர்கள் இவர்கள்[9]. கருணாநிதியோ, வழக்கம் போல துளிக்கூட நாகரிகம் இல்லாமல், சோபன் பாபுவுடன் இருந்த போட்டோக்களை “முரசொலி”யில் போட்டு மகிழ்ந்தார். 1960களில் அனந்தநாயகியைப் பற்றி பேசியதெல்லாம் இவர்கள் மறந்து விட்டார்கள் போலும்[10].

© வேதபிரகாஷ்

25-02-2015


 

[1] ஜின்னா பெரியாருக்கு எழுதியுள்ள கடிதங்களைப் பார்க்கவும். அக்கடிதங்களில் பெரியார் ஒரு நிலையற்ற மணிதர் என்று சாடியுள்ளார்.

[2] பெரியார் பௌத்தத்தை ஏற்க வந்தபோது, அம்பேத்கர் வேண்டாம் என்று சொல்லி திருப்பி அனுப்பினார்.

[3] திமுக ஆட்சிக்கு வந்தவுடன் தனது திராவிட குழப்பங்களை முரண்பாடுகளைச் சரிசெய்து கொள்ள ஆரம்பித்தது. “தமிழ்-தமிழ்” என்று தமிழ் கலாச்சாரம், பண்பாடு, பாரம்பரியங்களுக்கு எதிராக போகும் நோக்கு பல பிரச்சினைகளை சமுதாயத்தில் ஏற்படுத்தியதை திராவிட சித்தாந்திகள் கண்டு, அதற்கான வழிமுறைகளையும் ஆய்ந்தனர். 1969ல் அண்ணாதுரை தலைமையில் ஆட்சிக்கு வந்ததும், முதலில் அத்திருமணபங்களை செல்லுபடியாக்க சுயமரியாதை திருமணம் சட்ட வடிவம் (28.11.1967) மசோதாவை அறிமுகப்படுத்தினர். “சுயமரியாதை திருமணம்” கிளப்பிய அவலத்தை இந்து திருமண சட்டத்தில் (The Hindu Marriage Act, 1956) பிரிவு 7A என்றதை நுழைத்து மானத்தைக் காப்பாற்றிக் கொண்டனர்

[4] பனகல் ராஜா, நாயர் முதலியோர் விலகிய காரணங்களை யோசித்துப் பார்க்கலாம். ஒரு நிலையில், எதுவும் கிடைக்கவில்லை என்ற போது, அவர்களை “ஆங்கிலேயர்களின் கைகூலிகள்” என்று ஏசப்பட்டனர்.

[5] கருணாநிதி மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி என்பதுடன் அடைந்தால் திராவிட நாடு இல்லையேல் சுடுகாடு பேசி ஏமாற்றினார். அரசியல் நிர்ணய சட்டத்தில் அதை அடக்கும் பிரிவு ஏற்படுத்தப் பட்டவுடன் அடங்கி விட்டார். துக்ளாக்கில் “இது மாநில சுயயாட்சிக்கு ஒதுக்கப்பட்ட இடம்” என்று கிண்டலடித்தது ஞாபகம் இருக்கலாம்!

[6] இவையெல்லாம் மார்க்சிஸ்டு, லெனினிஸ்டு, உதிரிகள், வகையறாக்கள் செய்து வந்த கலாட்டாக்கள்; ஒரு நிலையில் பாமக கூட இக்கோரிக்கையை வைத்து, பிறகு அடங்கி விட்டது.

[7] பெரிய்சாருக்கு இரண்டு – நாகம்மை, மணியம்மை; கருணாநிதிக்கு மூன்று- பத்மாவதி, தயாளு அம்மாள், ராசாத்தி அம்மாள், என்ற விவரங்களை சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.

[8] http://yessveeramani.livejournal.com/84131.html

[9] JAYALALITHA loyalists have a pet theory about her hatred towards Karunanidhi and the DMK. They point to an incident which occurred in the Tamil Nadu assembly on March 25, 1989, when a DMKMLA tugged at Jayalalitha’s cape. She was quick to reap political mileage and the AIADMK drew a parallel with the disrobing of Draupadi. Karunanidhi was compared to Duryodhan. In fact, Jayalalitha kept harping on the incident in her 1991 election campaign.

 http://www.outlookindia.com/article/The-Revenge-Of-Draupadi/205451

[10] நாடாவை அவிழ்த்து பார்த்தால் தெரியும்” சட்டசபையில் சொல்லி, எதிர்ப்பு எழுந்தபோது, ” நான் சொன்னது கோப்பு நாடாவை”, என்று மாற்றி சொல்லித் தப்பித்துக் கொண்டார்.