ஸ்டாலினை பசு முட்ட வந்ததும், தளபதி கோபத்துடன் பின் வாங்கியதும், மாட்டுக்கறிக்கு ஆதரித்ததும், குங்குமத்தை அழித்ததும் தமிழ்நாட்டவர் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் (1)
பொங்கல் பற்றி திராவிட நாத்திகர்களின் குழப்பமான நிலைப்பாடு: 1940களிலிருந்து ஈவேராவின் “ஆரிய-திராவிட” திரிபுவாதங்களால், பொங்கல் பண்டிகைக்கும் மாற்று விளக்கம் கொடுக்கப் பட்டு, திராவிடத்துவவாதிகள் பொங்கல் கொண்டாட்டங்களை எதிர்த்து வந்தது தெரிந்த விசயம். பிராமணர் அல்லாத உயர்ஜாதி இந்துக்கள் ஆதிக்கம் பெறுவதற்காக, சைவமும் திரிபுவாதங்களுக்கு உட்படுத்தப் பட்டு, “இந்து-விரோத” ரீதியில் எடுத்துச் செல்லப்பட்டது[1]. அந்நிலையில், திமுக ஆட்சியைப் பிடித்ததும், அரசு ஆதிக்கத்துடன், தமிழ கலாச்சாரம், நாகரிகம், பண்பாட்டு முதலிய காரணிகளை சிதைக்க “இந்து அறநிலையத் துறை” உபயோகப் படுத்தப் பட்டது. அண்ணாதுரை பொங்கல் பண்டிகையை எதிர்க்கவில்லை, அதனை “புனித பொங்கல்” என்றார்[2]. கருணாநிதி ஆரம்பத்தில் எதிர்த்தாலும், பிறகு வியாபார ரீதியில் “சமத்துவ பொங்கல்” ஆக்கினார்[3]. “சங்க இலக்கிய சரித்திர ஆதாரங்களுக்கு” முரண்பட்ட, விரோத கருத்துகளைப் புகுத்தி கெடுக்கப்பட்டது தான் “தமிழர் (பொங்கல்) விழா”. இருப்பினும் பெரும்பான்மையான மக்கள் பாரம்பரிய முறையில் கொண்டாடி வருவதால், பேச்சுடன் வைத்துக் கொண்டு, மற்ற சின்னங்களை அப்படியே திராவிடத்துவத்தில் அடக்கிக் கொண்டு மக்களை ஏமாற்றி வருகின்றனர். ஏனெனில், அதில் முக்கியமாக இருப்பது கோடிக் கணக்கான வியாபாரம், லாபங்கள்!
சென்னை சங்கமும், ஊழல் பொங்கல் கொண்டாட்டங்களும்: “சென்னை சங்கமம்,” கிறிஸ்தவ பாதிரி ஜகத் காஸ்பரின் “தமிழ் மையம்” மற்றும் தமிழக அரசு பண்பாடு மற்றும் சுற்றுலாத் துறை சேர்ந்து, கனிமொழி நடத்த ஆரம்பித்தார். இலக்கிய ரீதியிலும் தேசவிரோத கருத்துகளை பரப்பினர். ஸ்பெக்ட்ரம் ஊழலில் தொடர்புடைய கிரீன் ஹவுஸ் பிரமோட்டர்ஸிடமிருந்து தமிழ் மையத்திற்கு பெரிய நிதி வழங்கப்பட்டது குறித்தும், சி.பி.ஐ. விசாரணை நடந்தது. தமிழக அரசின் ஆதரவுடன் 2007ல் தொடங்கி, இதன் நான்காவது நிகழ்வு ஜனவரி 10 முதல் 16. 2010 வரை நடைபெற்று, பிறகு கோடிக்ககணக்கானா ஊழல் புகாரினால் முடங்கியது[4]. இவ்வாறு சித்தாந்தம் மற்றும் பணம் சம்பாதிக்கும் பின்னணியில் தான், திராவிட நாத்திக அரசியல்வாதிகளின் பொங்கல் பண்டிகை கொண்டாட்டம் இருந்தது. ரேசன் கார்ட் உள்ளவர்களுக்கு “இனாம்” கொடுக்கும் முறையும் தொடர்ந்து நடந்து வருகிறது. ஆக, 2018ல் கனிமொழி இந்துமதத்தை நாத்திக மாநாட்டில் கேவலப் படுத்திய நிலையில், சகோதரர் ஸ்டாலின், இவ்வாறு பொங்கல் கொண்டாடுவதை கவனிக்கலாம்.
பொங்கல் விழாவில் கலந்து கொண்ட ஸ்டாலின்: திமுக சார்பில் சென்னை அயனாவரம், கொளத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் பொங்கல் கொண்டாட்டங்கள் நடைபெற்றது. வீதிகள் தோறும் தோரணம் கட்டியும், மேடைகள் அமைத்தும் நாட்டுப்புற கலைகள் நிகழ்த்தப்பட்டதை, அக்கட்சியின் செயல்தலைவர் ஸ்டாலின் பார்வையிட்டார். தொடர்ந்து துறையூரில் நடைபெற்ற பொங்கல் நிகழ்ச்சியில் பங்கேற்று உரையாற்றிய ஸ்டாலின், தமிழகம் 20 ஆண்டுகளுக்கு பின்னால் போய்க்கொண்டிருப்பதாக கூறினார்[5]. திமுக ஆட்சிக்கு வந்தால் தை முதல் நாள் தமிழ் புத்தாண்டாக கொண்டாடப்படும் என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார். சென்னை கொளத்தூரில் பொங்கல் பண்டிகை கொண்டாட்டத்தை தொடக்கி வைத்த ஸ்டாலின், நலத்திட்ட உதவிகளையும் பொங்கல் பொருட்களையும் வழங்கினார். தை முதல் தமிழ் புத்தாண்டாக கொண்டாடப்பட்டு வந்தது. திமுக ஆட்சி காலத்தில் தை முதல்நாள் தமிழ் புத்தாண்டாக கொண்டாடப்படும் என்றும் கூறினார். தை பிறக்கும் காலத்தில் நல்ல விடிவுகாலம் பிறக்கப்போகிறது என குறிப்பிட்ட ஸ்டாலின், அரசியல் ரீதியாக நாட்டைப்பிடித்துக் கொண்டிருக்கும் சனி இன்றோடு ஒழிய வேண்டும் என்றும் கூறினார்[6]. ஆண்டாள் பற்றிய கருத்துக்கு வைரமுத்து மன்னிப்பு கேட்ட பின்னரும் அதனை பூதாகரமாக்கி வளரவிடுவது நியாயமல்ல என்றும் கூறினார்[7]. கருணாநிதி, அறிஞர் அண்ணா பற்றி எச். ராஜா எழுதி பெரிய ஆளாக வேண்டும் என்று நினைக்கிறார். அவரது கருத்துக்கு நான் பதில் கூற விரும்பவில்லை என்றும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்[8].
ஸ்டாலின் முழு பேச்சு: நான் முதல்வராக வருகிறேனோ, இல்லையோ.. உங்களைப் பொறுத்தவரையில், உங்களுடைய காவலனாக, சிறந்த சேவகனாக என்றைக்கும் இருப்பேன் என உறுதியுடன் சொல்ல விரும்புகிறேன் என்று திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார். திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயல் தலைவரும், தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று கொளத்தூர் தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாக்களில் பங்கேற்றார். அப்போது பொதுமக்கள் மத்தியில் பேசிய ஸ்டாலின், ஒவ்வொரு ஆண்டும் நமது கொளத்தூர் தொகுதியில் தமிழ்ப் புத்தாண்டு மற்றும் பொங்கல் விழாக்களை நாம் தொடர்ந்து கொண்டாடி, அனைவருக்கும் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகளையும், பொங்கல் திருநாள் வாழ்த்துகளையும் தெரிவிக்கும் வாய்ப்பு உங்களில் ஒருவனாக இருக்கின்ற எனக்கு கிடைத்து வருகிறது. கொளத்தூர் தொகுதியை சேர்ந்த உங்களோடு நான் எப்போதும் இருப்பதால், இந்த நேரத்தில் உங்களிடம் நான் அதிக நேரம் பேச வேண்டியதில்லை.
காரணம், இது எனது தொகுதி என்று சொல்வதை விட, என்னுடைய இல்லம், வீடு என்று சொல்லக்கூடிய அளவுக்கு, என்னை நீங்கள் தேர்ந்தெடுத்து இருக்கின்றீர்கள் என்று சொல்வதை விட, என்னை உங்களோடு இணைத்துக் கொண்டு இருக்கிறீர்கள் என்று சொல்லும் நிலை இருக்கின்றது. எனவே, இந்த நிகழ்ச்சியில் ஒரு குடும்ப உணர்வோடு, பாசத்துடன் பங்கேற்று இருக்கிறீர்கள். இன்னும் சொல்ல வேண்டுமென்றால், உங்களுக்கு வாழ்த்து சொல்ல நான் வந்திருக்கிறேன் என்பதைவிட, உங்களிடம் நான் வாழ்த்துபெற வந்திருக்கிறேன் என்பதுதான் பொருத்தமாக இருக்கும். ஏனென்றால், நான் உங்கள் வீட்டுப் பிள்ளை. காரணம், இந்தத் தொகுதியில் என்னை கடந்த முறை பெற்ற வாக்குகளை விட அதிகமான வாக்குகள் அளித்து, இரண்டாவது முறையாக வெற்றி பெற வைத்து இருக்கின்றீர்கள். இங்கு ஜவகர் அவர்கள் பேசியபோது, முதலமைச்சராக வரப்போகிறார் என்று எண்ணி எனக்கு வாக்களித்தீர்கள் என்றார்[9]. நான் அவருக்கும், உங்களுக்கும் சொல்ல விரும்புவது, நான் முதலமைச்சராக வருகிறேனோ, இல்லையோ ஆனால் இந்தத் தொகுதியைப் பொறுத்தவரையில், நான் என்றைக்கும் உங்களுடைய முதல் குடிமகனாக, உங்களுடைய முதல் காவலனாக, இந்தத் தொகுதிக்குப் பணியாற்றும் சிறந்த சேவகனாக நான் என்றைக்கும் இருப்பேன் என உறுதியுடன் சொல்ல விரும்புகிறேன்[10].
© வேதபிரகாஷ்
16-01-2018
[1] மறைமலைகள் போறோரே இதற்கு காரணமாக இருந்தார்கள், பிறகு புரிந்து கொண்ட நிலையில் எல்லை மீறி போய் விட்டது.
[2] “புனிதமான பொங்கல் நாள்” என்று பெருமையாக பேசினார் – நாத்திகத்தில் “புனிதம்” எப்படி வந்தது என்று “அறிஞர்” விளக்கவில்லை — http://www.annavinpadaippugal.info/sorpozhivugal/punithamana_pongal.htm
[3] திகவின் வீரமணி “விடுதலை,” கருணாநிதியின் “முரசொலி,” நாத்திக-திராவிட சித்தாந்திகள் அத்தகைய கருத்துகளை பிரச்சாரம் செய்து, இளைஞர்களை ஏமாற்றி வந்தனர்.
[4] The searches were conducted at Tamil Maiyam, an NGO founded by Jegath Gasper Raj, in Mylapore. Tamil Nadu Chief Minister M. Karunanidhi’s daughter Kanimozhi, a DMK Member of Parliament, is a trustee of Tamil Maiyam, the key organisation behind Chennai Sangamam, a high-profile cultural event held since 2007.
The CBI recorded the statement of an employee of Green House Promoters Pvt Ltd whose Managing Director Batcha had fired over 40 employees on the recommendation of Balwa. Batcha, who was interrogated by the CBI, was found dead under mysterious circumstances in Chennai in March 2016. ….one company of DB Group, Eterna Developers Pvt Ltd had some business transactions with Green House Promoters Pvt Ltd. It (Eterna Developers) transferred around Rs 1.25 crore to Green House Promoters and after some time, this amount was paid back by Green House Promoters to Eterna Developers…..
[5] நியூஸ்.7.செய்தி, “அரசியல் ரீதியில் நாட்டைப் பிடித்திருக்கும் சனி இன்றோடு ஒழிய வேண்டும்” : ஸ்டாலின், January 13, 2018.
http://ns7.tv/ta/tamil-news/tamilnadu/13/1/2018/mk-stalin-allegation-against-tamilnadu-government
[6] http://ns7.tv/ta/tamil-news/tamilnadu/13/1/2018/mk-stalin-allegation-against-tamilnadu-government
[7] தமிழ்.ஒன்.இந்தியா, தை பிறந்தால் வழி பிறக்கும்… தமிழகத்தை பிடித்த சனி ஒழியும் – ஸ்டாலின், Posted By: Mayura Akilan, Published: Saturday, January 13, 2018, 14:23 [IST]
[8] https://tamil.oneindia.com/news/tamilnadu/new-government-on-thai-month-says-stalin-308363.html
[9] தினமணி, நான் முதல்வராக வருகிறேனோ, இல்லையோ..உங்கள் சேவகன் தான்: மு.க.ஸ்டாலின், Published on : 13th January 2018 04:23 PM .
[10]http://www.dinamani.com/tamilnadu/2018/jan/13/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8B-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%8B-%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-2844287.html