திராவிட ஆட்சிகளில் தேசத் துரோக வழக்குகளும், அவற்றின் பின்னணியும் – தேசிய அளவில் உள்ள வழக்குகளுடன் அவற்றை ஒப்பிட முடியாது (1)
தமிழகத்தில் இரண்டாவதாக அதிக தேசதுரோக வழக்குகள் பதிவு செய்யப் பட்டுள்ளன: தமிழகத்தில் கடந்த 2010 முதல் 2020ம் ஆண்டு வரையிலான அதிமுக ஆட்சியில் அதிகளவு தேச துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டதால், நாட்டிலேயே 2வது இடத்தை பெற்றுள்ளது[1]. இவ்விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றம் விசாரணை நடத்தி வரும் நிலையில் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது[2] என்று தினகரன் கூறுவது வேடிக்கைதான். தேச துரோகம் தொடர்பான இந்திய தண்டனைச் சட்டத்தின் 124ஏ பிரிவு குறித்து உச்ச நீதிமன்றம் விசாரித்து வருகிறது. இந்தச் சட்டத்தை மறுபரிசீலனை செய்யத் தேவையில்லை என்று உச்ச நீதிமன்றத்தில் ஒன்றிய அரசு தரப்பு வாதாடி வந்தது. ஆனால், இந்தச் சட்டம் தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க முடியும் என்று ஒன்றிய அரசின் தரப்பில் கூறப்பட்டது. அதனால், தற்போது நிலுவையில் இருக்கும் தேசதுரோக வழக்குகளையும், இடைப்பட்ட காலத்தில் பதிவு செய்யப்பட்ட தேசதுரோக வழக்குகளையும் எவ்வாறு கையாள்வது என்பது தொடர்பான விபரங்கள் உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசால் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பிரிவினைவாதம் பேசப் படுவது புதியதல்ல: அதிமுக ஆட்சியில் அதிகம், திமுக ஆட்சியில் அதிகம் / குறைவு என்பதெல்லாம் விசயமே இல்லை, ஏனெனில், தமிழ்-தமிழ்நாடு-தமிழ்தேசம்-தமிழ்தேசியம் என்றெல்லாம் பேசி பிரிவினைவாதத்தில், பிரிவினையில் ஈடுபட்டவர்கள், ஈடுபட்டு வருபவர்கள் அதிகமாக இருக்கின்றனர். கருணாநிதி முதலமைச்சராக இருந்த பொழுது அத்தகையோரின் மாநாடுகளுக்கு தடை விதித்துள்ளனர். கொடைக்கானல் டிவி நிலையத்தில் குண்டுவெடிப்பு, மீன்சுருட்டியில் இந்தியன் வங்கி கொள்ளை-கொலை……போன்றவை ஞாபகத்தில் கொள்ளலாம். தமிழீழம் போர்வையிலும், பல குழுக்கள் செயல் பட்டு வந்தது-வருபவை அறியப் பட்டவையே. இப்பொழுது கிலாபா போர்வையில் முஸ்லிம் குழுக்கள் வேலை செய்து வருகின்றன. ஆகவே, தமிழகத்தில் “ஒன்றிய” போர்வையில் நடந்து வரும் பேச்சுகளும் கவனிக்கப் பட்டு வருகின்றன. “மாநில சுயயாட்சி,” “திராவிடியன் ஸ்டாக்,” “திராவியன் மாடல்” என்பவை எல்லாம் அவற்றின் முகமூடிகளே. ஏனெனில், இப்பொழுது இனம், இனவாதம் எல்லாம் யாரும், எந்நாடிலும் பேசுவதில்லை.
ஐபிசி–யின் பிரிவு 124ஏ–ன் கீழ் தேசத்துரோக வழக்கு பதிவு: தேசதுரோக வழக்கின்படி, எந்தவொரு நபரும் அரசுக்கு எதிரான கருத்துக்களை எழுதினாலோ அல்லது பேசினாலோ அல்லது அத்தகைய உள்ளடக்கத்தை ஆதரித்தாலோ அல்லது தேசிய சின்னங்கள் மூலம் அரசியலமைப்பை இழிவுபடுத்த முயன்றால், அவர் மீது ஐபிசி-யின் பிரிவு 124ஏ-ன் கீழ் தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்படலாம். மேலும், தேச விரோத அமைப்போடு தொடர்புடையவராகவோ அல்லது அவர்களுக்கு உடந்தையாக செயல்பட்டால் அவருக்கு எதிராகவும் தேசத்துரோக வழக்கு பதிய முடியும். இந்நிலையில், தேசத் துரோகச் சட்டம் குறித்த விவாதங்களுக்கு மத்தியில் அதிர்ச்சித் தகவல் ஒன்று வெளியாகி உள்ளது என்று தினகரன் குறிப்பிடுவது தமாஷான விசயம் தான். எல்லாவற்றையும் அதிமுக ஆட்சியின் மீது பழி போட்டு தப்பித்துக் கொள்ள முடியாது. இந்த ஐந்தாண்டுகள் பற்றி, பிறகு தான் எடைபோட முடியும். தங்களுக்குத் தானே சான்றிதழ் கொடுத்துக் கொள்ளலாம், ஆனால், மக்களை ஏமாற்ற முடியாது.
2010-2022 ஆண்டுகளில் பதிவான வழக்குகள் எண்ணிக்கை: நாடு முழுவதும் கடந்த 2010ம் ஆண்டு முதல் 2020ம் ஆண்டு வரை அதிகளவு தேசத்துரோக வழக்குகளை பதிவு செய்த மாநிலமாக பீகார் உள்ளது. அதற்கு அடுத்த இடத்தில் தமிழ்நாடு உள்ளது. தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்ட அறிக்கையின்படி, கடந்த 2010ம் ஆண்டு முதல் 2020ம் ஆண்டு வரை, பீகாரில் மட்டும் 168 தேசதுரோக வழக்குகள் பதிவாகியுள்ளன. தொடர்ந்து –
தமிழ்நாட்டில் – 139, உத்தரப் பிரதேசத்தில் – 115, ஜார்கண்ட்டில் -62, கர்நாடகாவில் – 50, ஒடிசாவில் – 30, அரியானாவில் – 29, ஜம்மு காஷ்மீரில் – 26, | மேற்குவங்கத்தில் – 22, பஞ்சாப்பில் – 21, குஜராத்தில் – 17, இமாச்சல் பிரதேசத்தில் – 15, டெல்லியில் – 14, லட்சத்தீவில் – 14, கேரளாவில் – 14 |
என்ற வரிசையில் வழக்குகள் பதிவாகி உள்ளன. இதில் திமுக அரசு பெருமைப் பட்டுக் கொள்வதில் ஒன்றும் இல்லை. இந்த ஒரு வருடத்தில், இந்துவிரோத செயல்கள் எவ்வளவு நடந்துள்ளன என்பதை கவனிக்கலாம். அவையெல்லாம் பெருமை சேர்ப்பவை அல்ல. ஒரு நிலையில் அவையும் தேசவிரோதம் ஆகும்.
வழக்குகள் அதிகம், ஆனால், குற்றம் நிரூபிக்கப் படுவது குறைஆக உள்ளது: மேலும், கடந்த 2016 மற்றும் 2019 ஆண்டுக்கு இடையில், தேசத்துரோக வழக்குகளின் எண்ணிக்கை 160 சதவீதம் (93 வழக்குகள்) அதிகரித்துள்ளது. ஆனால் 2019ம் ஆண்டில் தண்டனை விகிதம் என்று பார்த்தால் 3.3 சதவீதமாக உள்ளது. குற்றம் சாட்டப்பட்ட 93 பேரில் இருவர் மட்டுமே குற்றவாளிகள் என்று அறிவிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழகத்தை பொருத்தமட்டில் 2010ம் ஆண்டு முதல் 2020ம் ஆண்டு வரை அதிகளவு தேசத்துரோக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அந்த காலக் கட்டத்தில் தமிழகத்தில் அதிமுக ஆட்சி நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது, என்று தினகரன் குறிப்பிட்டு சந்தோசப்படுகிறது. ஆனால், திமுகவின் பிரிவினைவாதம் உலகம் அறிந்தது. இப்பொழுதைய “ஒன்றிய” நிலை தொடர்ந்து, கவர்னர் தாக்கப் பட்டால், த்ஹிராவிடியன் மாடல் தகர்ந்து விடும். சடம்-ஒழுங்கு சீரழிந்து கொண்டிருந்தால், முடிவு வேறு மாதிரி சென்று விடும்..
152 ஆண்டுகள் பழமையான தேசவிரோத சட்டத்தை தற்காலிகமாக நிறுத்திவைத்தது: 152 ஆண்டுகள் பழமையான தேசவிரோத சட்டத்தை தற்காலிகமாக நிறுத்திவைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது[3]. 124 ஏ சட்டத்தின் கீழ் வழக்கு பதியவும் தடை விதித்துள்ள உச்ச நீதிமன்றம், தேச துரோக சட்டத்தின் கீழ் சிறையில் உள்ளவர்கள் ஜாமீன் பெற விண்ணப்பிக்கலாம் எனவும் கூறியுள்ளது[4]. ஆங்கிலேயே காலனிய ஆட்சியின்போது அரசுக்கு எதிராக விடுதலைப் போராட்டத்தில் ஈடுபடுபவர்களை ஒடுக்கும் விதமாக தேசத்துரோக வழக்குகள் பதியப்பட்டன. நாடு விடுதலை பெற்ற பின்னரும் காலனிய சட்டமான தேசத் துரோக வழக்கு பதியப்பட்டு வருகிறது.இந்நிலையில், அரசுக்கு எதிராக குரல் எழுப்பும் சமூக ஆர்வலர்கள், அரசியல் தலைவர்கள், பத்திரிக்கையாளர்கள் மீது 124A சட்டப்பிரிவின் கீழ் தேசத் துரோக வழக்குப் பதியப்பட்டு வருவதாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டு வருகிறது. எனவே, காலனியத்துவ தேசத்துரோக வழக்கு சட்டப்பிரிவான 124A-ஐ ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை எழுப்பப்பட்டது.
பத்திரிக்கை சங்கங்கள் வழக்கு தொடர்ந்தன: தேச துரோக சட்டத்துக்கு தடைகோரி எடிட்டர்ஸ் கில்டு, பத்திரிக்கையாளர் அருண் சோரி, எம்பி மௌவா மைத்ரா, பி.யு.சி.எல் உள்ளிட்டோர் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணா, நீதிபதிகள் சூர்ய காந்த் மற்றும் ஹிமா கோஹ்லி ஆகியோர் அடங்கிய மூன்று நீதிபதிகள் அமர்வு இந்த வழக்கை விசாரித்து வருகிறது. வழக்கு 11-05-2022 அன்று விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசும் மாநில அரசுகளும் தேச விரோத சட்டத்தை பயன்படுத்த இடைக்கால தடை விதித்தது[5]. தலைமை நீதிபதி அமர்வு, அதனையும் மீறி ஏதேனும் வழக்குகள் எங்காவது பதிவு செய்யப்பட்டால் நீதிமன்றத்தை நாட உத்தரவிட்டது[6]. இதுதொடர்புடைய வழக்குகளை நீதிமன்றங்கள் விரைந்து முடிக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. இந்த சட்டத்தை பயன்படுத்தாமல் இருக்க மத்திய அரசு மாநிலங்களுக்கு கூடுதல் ஆலோசனைகளை வழங்கலாம் எனவும் உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. ஏற்கனவே கைது செய்யப்பட்ட 13 ஆயிரம் பேர் நீதிமன்றங்கள் மூலம் ஜாமின் பெற்றுக்கொள்ளவும் உச்சநீதிமனறம் அனுமதி அளித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
© வேதபிரகாஷ்
15-05-2022
[1] தினகரன், 2010 முதல் 2020ம் ஆண்டு வரையிலான அதிமுக ஆட்சியில் தேச துரோக வழக்கு பதிந்ததில் தமிழ்நாடு 2வது இடம்: சுப்ரீம் கோர்ட் விசாரணைக்கு மத்தியில் அதிர்ச்சி தகவல், 2022-05-11@ 15:05:14.
[2] https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=764520
[3] NEWS18 TAMIL, தேச துரோக வழக்கு பதிய உச்ச நீதிமன்றம் தடை.. சட்டம் தற்காலிகமாக நிறுத்திவைப்பு, Published by:Murugesh M, LAST UPDATED : MAY 11, 2022, 13:41 IST. First published: May 11, 2022, 13:40 IST.
[4] https://tamil.news18.com/news/national/breaking-sedition-law-in-abeyance-supreme-court-urges-centre-states-not-to-file-firs-invoking-section-124a-mur-743986.html
[5] தமிழ்.இந்தியன்.இக்ஸ்பிரஸ், அரசு மறுபரிசீலனை செய்யும் வரை தேச துரோக விசாரணையை நிறுத்தி வைத்த உச்ச நீதிமன்றம்!, Written by WebDesk, Updated: May 11, 2022 10:05:24 pm
[6] https://tamil.indianexpress.com/india/supreme-court-interim-order-on-sedition-section-124a-centre-452724/