Archive for the ‘தூஷணம்’ Category

ஆனைமுகத்தோனுக்கு ஆனைவெடி வைத்து உடைத்தேன் என்று ஆண்டிப்பட்டி ராஜா, ஆனைமுத்து இழவு விழாவில் பேசி ஒப்பாரி வைத்தது! ஈவேராவை பின்பற்றி மாலிகாபூராக மாறியது (2)

ஜனவரி 6, 2022

ஆனைமுகத்தோனுக்கு ஆனைவெடி வைத்து உடைத்தேன் என்று ஆண்டிப்பட்டி ராஜா, ஆனைமுத்து இழவு விழாவில் பேசி ஒப்பாரி வைத்தது! ஈவேராவை பின்பற்றி மாலிகாபூராக மாறியது (2)

அம்மா கொடுத்த விபூதிகளை முதலில் பூசிக் கொண்டேன், பிறகு தூக்கி எறிந்தேன்: “1973 இல் நான் ஆறாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோது, பெரியார் குடில் நடத்தினார் ஆனைமுத்து, அதில் நான் படித்தேன், அப்போது நான் விடுதிக்கு கிளம்பும்போதே என் அம்மா, இது முருகன் கோயில் விபூதி… காலையில் எழுந்ததும் இந்த விபூதிகளை வச்சுக்கோ,  இருட்டில் போனால் இந்த விபூதி வச்சுக்கோ என்று தருவாங்க. நானும் வச்சிட்டு இருந்தேன். அப்போதுதான் பெரியாரின் கடைசி உரையை நான் கேட்டேன்.. …….அதற்கு பிறகு மதம் ஏன் ஒழிய வேண்டும் என்பது போன்ற சின்ன சின்ன புத்தகங்களைப் படித்தேன்.  அதன்பிறகுதான் அந்த விபூதிகளை எல்லாம் தூக்கிப் போட்டேன். தூக்கிப் போட்டதும் இல்லாமல் எங்க ஊரில் ஒரு பிள்ளையார் சிலை இருந்தது, அந்த சிலைக்கு கீழே ஒரு ஆனைவெடி வச்சுட்டேன்.. அது உடைந்து சிதறியது, பின் அது பெரிய பிரச்சனை ஆயிடுச்சு. அதெல்லாம் ஒரு காலம்.. …” சிறுவயதில் அத்தகைய எண்ண உருவானது, என்பது, மனோதத்துவ ரீதியில் அலசவேண்டியுள்ளது. ஆனைமுத்து வீட்டில் எல்லோரும் கடவுள் நம்பிக்கைக் கொண்டவர்கள் தான். ராசாவைப் போல யாரும் அம்மாவின் பேச்சைக் கேட்காமல், மனம் புண்படும் படி நடந்து கொள்ளவில்லை.

நானே நினைத்தாலும் இந்துவாக இருந்து என்னால் வெளியேற முடியாது: ஏ.ராசா பேசியது, “என் வாழ்வில் நான் மாற்றியதற்கு காரணம் பெரியார் பேசிய அந்த கடைசி பேச்சு தான். தொடர்ந்து பேசிய அவர் நானே நினைத்தாலும் இந்துவாக இருந்து என்னால் வெளியேற முடியாது[1]. ஏன் என்றால் இந்து அமைப்பு சட்டத்தில் யார் கிறிஸ்துவர்கள், யார் இஸ்லாமியன், யார் யூதன் இல்லையோ மற்ற அனைவரும் இந்து என்றுதான் சட்டம் உள்ளது. எனவே நானே நினைத்தாலும் வெளியேற முடியவில்லை அப்படி வெளியேறினால் அந்த நாள் வந்தால் அதுதான் ஆனைமுத்துவிற்கு மரியாதை செய்யும் நாளாக இருக்கும்,” என தெரிவித்த அவர் காவியை அழிக்க அனைத்து கருப்பு சிவப்பு நீலமும் ஒன்று சேர வேண்டும் என கூறினார்[2]. இங்கு, அம்பேத்கர் அரசியல் சாசனம் சரியில்லை என்கிறாரா அல்லது இந்துசார்புடையது என்கிறாரா என்பதை கவிக்க வேண்டும். அம்பேத்கர் இந்துவிரோதி, இந்துமதத்தை வெறுப்பவர், தோஷிப்பவர்….. அதனால் தான், அவரது பேச்சுகளும், புத்தகங்களும் அவ்வாறே இருந்தன. பிறகு, அவரது அரசியல் சாசனம், நிர்ணய சட்டத்தைக் குறை சொல்வது ஏன் என்று தெரியவில்லை.

ராசா கொடுக்கும் விளக்கம்[3]: ‘இந்து’ என்றழைக்கப்படும் மக்களில் 95% சதவீதமாகவுள்ள இந்த பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களுக்கு உரிமைக்கோரி தி.மு.க போராடியபோதெல்லாம் அவற்றை எதிர்த்தவர்கள் கிறிஸ்தவர்களா? இஸ்லாமியர்களா? இல்லையே!  அதை செய்தவர்கள் பிராமணர்களும் அவர்களோடு சேர்ந்த முன்னேறிய சாதியை சார்ந்த இந்துக்களும்தான்.  வேறு மொழியில் சொன்னால், பாஜகவும் அதன் பரிவாரங்களுமே இன்றுவரை இடஒதுக்கீட்டை எதிர்த்து வருகின்றன. எனவே, தி.மு.க இந்து விரோத கட்சியல்ல.  யார் ‘இந்து’ என்பதில் பிரச்சனை இருக்கிறது.‘இந்து’ என்று தங்களை ஏற்கும் பிற்படுத்தப்பட்ட சூத்திரர்களுக்கும், தாழ்த்தப்பட்ட பஞ்சமர்களுக்கும், அந்த மதத்தில் சொல்லப்பட்டுள்ள வரையறைகளும், வரம்புகளும், கடமைகளும், கட்டுப்பாடுகளும் ஏற்புடையதா என்பதில் எங்களுக்கு கருத்து வேறுபாடு உண்டு.  அதனால்தான், பேரறிஞர் அண்ணா அவர்களே ‘இந்து’ எனும் அடையாளத்தை ஏற்க மறுத்தார்.  இந்த கருத்துப் போராட்டம் கடந்த நூறு ஆண்டுகளுக்கு மேலாக, குறிப்பாக 1916-ல் வெளிவந்த பிராமணர் அல்லாதோர் அறிக்கை (Non-Brahmin Manifesto) வந்ததில் இருந்தே தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது.  அந்த கருத்துப் போராட்டத்தில் நாங்கள் எப்போதும் தோற்றதில்லை.  தி.மு.க.வின் அரசியல்-சமூகப்பார்வை தமிழர்களை இனத்தால், மொழியால் இனணப்பதேயன்றி; மதத்தால், சாதியால் பிரிப்பதல்ல!.: என்றெல்லாம் விளக்கம் கொடுத்தது விசித்திரமாக இருந்தது[4].

இந்துவிரோதம் மற்றும் எங்க கட்சியில் இந்துக்கள் உள்ளார்கள் என்ற முரண்பாடு தொடரும்: ஆ. ராசா என்கின்ற ஆண்டிப்பட்டி ராஜா இந்து-துவேசம் பேசுவது புதியதல்ல. அவரது வீடியோ பேச்சுகள் ஏற்கெனவே அந்த இதுவிடரோதத் தன்மையினை வெளிக்கட்டியுள்ளது. ஸ்டாலின் விபூதியை அழித்தது போல, இவரும் தனது பராக்கிரமத்தைக் காட்டுகிறார் போலும். தாயின் மத உணர்வுகளைக் கூட மதிக்காதவர்களை மக்கள் புரிந்து கொள்வர்கள். அதே போலத்தான், துர்கா ஸ்டாலின், தனது கணவனுக்கு நேர்த்திக் கடன் செய்வது, விரதம் மேற்கொள்வது, பூஜைகள் செய்வது, சமஸ்கிருத சுலோகங்கள் சொல்லி பாராயணம் செய்வது போன்ற காரியங்கள். தனது மாமனாருக்கும் காசிக்குச் சென்று காரியங்களை செய்து வந்துள்ளார். ஆனைவெடி வைத்து ஆனைமுகத்தோனை உடைப்பேன். ஆனால், தீபாவளிக்கு வாழ்த்து சொல்ல மாட்டேன், திமுகவினரும் சொல்ல மாட்டார்கள்! ஆக, திமுகவின் இரு வேடங்கள் தெரிந்த விசயமே. இதனை சாதாரண மக்கள் புரிந்து கொள்ளும் வரை, தொடர்ந்து கொண்டே இருக்கும். பிரச்சாரம், விளம்பரங்கள் அதிகமாகும்.

ஆ.ராசாவின் சித்தாந்தம் என்ன?: சிறுவயதிலிருந்து வெடி வைகத்தேன், உடைத்தேன் போன்ற மனப் பாங்கு, வன்முறையினைத் தான் காட்டுகிறது. அத்தகைய உணர்சுகள் அவர் முகத்திலும்வெளிப்படுவது, புகைப்படங்களில் காணலாம்.

  • ஈவேரா உடைத்தார், அதனால் நானும் உடைத்தேன் என்பது அந்த துலுக்க விக்கிரங்களை உடைக்கும் தீவிரவாதத்தை தான் காட்டுகிறது.
  • ஏனெனில், மொஹம்மதைப் போலத்தான், தானும் மொஹம்மது என்று சொல்லிக் கொண்டு, இந்தியாவில் கஜினி-கோரி மொஹம்மதுகள் தீவிரவாதத்துடன் கோவில்களை இடித்தார்கள், விக்கிரங்களை உடைத்தார்கள், செல்வங்களைக் கொள்ளையடித்துச் சென்றாற்கள்.
  • தென்னகத்தில்மாலிக்காபூர் இடைக்காலத்தில் அவ்வாறு செய்தான். இப்பொழுது, நவீன காலத்தில் திராவிடத்துவ வாதிகள் செய்து வருகின்றனர்.
  • சிலை உடைப்பு சித்தாந்தம், நியாயப் படுத்துத்தல், பெருமைப் பேச்சிக் கொள்வது எல்லாம் ஒன்றாகத்தான் இருக்கின்றன.
  • அண்ணா சொல்லியபடி, “இனம் இனத்தோடு சேர்கிறது,” கோவில் இடிப்புகள். விக்கிர உடைப்புகளும் அவ்வாறே உள்ளன.
  • அம்மாவின் உணர்வுகளையும் மீறி, மதிக்காமல், அவர் கொடுத்த விபூதிகளை எறிந்தேன் என்பதெல்லாம், ஸ்டாலினை திருதிப் படுத்தவா, அல்லது அவரையும் விஞ்சிய திராவிடத்துவத் தலைவர் என்பதை எடுத்துக் காட்டாவா என்று தெரியவில்லை.
  • எஸ்.சி என்ற நிலையில் எல்லாவற்றையும் அனுபவித்து, “நானே நினைத்தாலும் இந்துவாக இருந்து என்னால் வெளியேற முடியாது,” என்று பேசியிருப்பதெல்லாம், எப்படி இந்து என்று சொல்லிக் கொண்டு, இந்திய அரசியல் நிர்ணயச்சட்டத்தின் படியே ஏமாற்றுகிறார் என்பதும் தெரிகிறது.

© வேதபிரகாஷ்

06-01-2022


[1] தினசரி, பிள்ளையார் சிலைக்கு வெடி வைத்தேன்: இந்து மதத்தை அவமதித்து ராசா சர்ச்சை பேச்சு, ஜனவரி.5, 2022 11.30 AM.

[2] https://dhinasari.com/latest-news/236281-i-bombed-the-pillaiyar-statue-a-rasa-controversy-speech-insulting-hinduism.html

[3] புதியதலைமுறை, திமுக இந்து விரோத கட்சியல்ல. யார்இந்து என்பதில்தான் பிரச்சனை.ராசா சிறப்பு பேட்டி, சிறப்புச் செய்திகள், puthiyathalaimurai.com   sharpana Published :21,Jul 2020 04:07 PM

[4] https://www.puthiyathalaimurai.com/newsview/74315/The-DMK-is-not-an-anti-Hindu-party–The-problem-is-who-is-a—-Hindu—–A-Rasa-Special-Interview

கந்த சஷ்டி கவசம் முதல், கந்த புராணம் வரை: கருப்பு, கருப்பு-சிவப்புக் கூட்டத்தாரின் தாக்குதல்கள் – தேர்தல் நேரத்திலும் தொடர்ந்து இந்துவிரோத திமுக இவ்வாறு ஈடுபடுவது.

ஜனவரி 5, 2021

கந்த சஷ்டி கவசம் முதல், கந்த புராணம் வரை: கருப்பு, கருப்புசிவப்புக் கூட்டத்தாரின் தாக்குதல்கள் –  தேர்தல் நேரத்திலும் தொடர்ந்து இந்துவிரோத திமுக இவ்வாறு ஈடுபடுவது.

நாகர்கோவிலில் கூட்டத்தில்ஹிந்துக்களை வஞ்சிக்கும் கட்சிகளை ஆட்சிக்கு வரவிடாமல் தடுக்க வேண்டும்என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது (03-01-2021): நாகர்கோவிலில் திருத்தொண்டர்கள் சபை நிறுவனர் ராதாகிருஷ்ணன் தலைமையில் நடந்த சிவனடியார்கள் கூட்டமைப்பு கூட்டத்தில் ”ஹிந்துக்களை வஞ்சிக்கும் கட்சிகளை ஆட்சிக்கு வரவிடாமல் தடுக்க வேண்டும்” என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது[1]. இந்த கூட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிவனடியார்கள் கலந்து கொண்டனர். ஆக்கிரமிக்கப்பட்டுள்ள கோயில் சொத்துகளை ஒரு சதுர அடி கூட விடாமல் மீட்டு கோயில்கள் வசம் ஒப்படைப்பது. அடியார்கள் மற்றும் அவர்களின் குடும்பங்களுக்கு மருத்துவம், கல்வி உதவி வழங்க வேண்டும். சைவ மதத்துக்கு எதிராக தவறான கருத்து சொல்பவர்களை மாநிலம் முழுவதும் ஒரே குரலில் எதிர்க்க வேண்டும். ஹிந்துக்களை வஞ்சிக்கும் அரசியல் கட்சிகளை ஆட்சிக்கு வரவிடாமல் தடுப்பது உள்ளிட்ட 13 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன[2]. இது விழிப்புணர்ச்சி ஏற்படுத்தும் வகையில் சிறப்பாகத் தெரிகிறது. இத்தகைய கூட்டங்கள் நிறைய நடத்தப் படவேண்டும். அத்தகைய செய்திகள் மக்களைச் சென்றட்டைய வேண்டும். குறிப்பாக, இன்றும் திக-திமுக திராவிடக் கட்சிகளை விசுவாசமாக ஆதரித்து வரும், சில சைவ சமூகத்தினர், இதுவரை நடந்துள்ள, நடந்து வரும் தீமைகளைக் கருத்திற்க் கொண்டு மாற வேண்டும்.

நெல்லையில் எதிர்ப்பு தெரிவித்த இந்து அமைப்பினர்: கந்தபுராண பாடலை திமுக கட்சி பாடல் போல் மாற்றி இழிவு படுத்தியதைக் கண்டித்து நெல்லை டவுனில் இந்து முன்னணியினர்,  சிவனடியார்கள், பாரதிய ஜனதா கட்சி உள்ளிட்ட இந்து அமைப்புகள் இணைந்து திருமுறைகள் பாடி பெருந்திரல் பிரார்த்தனையில் ஈடுபட்டனர்[3]. வான்முகில் வழாது பெய்க என்ற கந்தபுராண வாழ்த்து பாடலை இழிவுபடுத்தும் விதமாக சமூக வலைதளங்களில் திமுக தேர்தல் பிரச்சார பாடல் போல மாற்றி பதிவேற்றம் செய்த நபர்களையும் இறை வழிபாட்டு பாடல் கட்சி பாடல் போல் உருவாக்கிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் நெல்லை டவுன் வாகையடி முனையில் இந்து முன்னணி சார்பில் பெருந்திரல் பிரார்த்தனை கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்த பிரார்த்தனை கூட்டத்தில் பாரதிய ஜனதா கட்சி உள்ளிட்ட இந்து அமைப்புகள் மற்றும் சிவனடியார்கள் திருக்கூட்டம் இணைந்து தேவார திருவாசக திருமுறை பாடல்கள் பாடி இறைவனை வழிபட்டு பெருந்திரள் பிரார்த்தனையில் ஈடுபட்டனர் அதனைத் தொடர்ந்து கட்சி பாடலாக  மாற்றம் செய்து கந்தபுராண வாழ்த்துப் பாடலை இழிவுபடுத்திய நபர்கள் மீதும் சமூக வலைதளங்களில் அதை பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது[4].

2020ல் காமாட்சிபுரி ஆதீனம் சிவலிங்கேஸ்வர சுவாமிகள் கருப்பர் கூட்டத்தைக் கண்டித்தது: இந்து கடவுள்களை அவமதித்தால் நாக்கை துண்டிக்க பயப்பட தேவையில்லை என காமாட்சிபுரி ஆதீனம் சிவலிங்கேஸ்வர சுவாமிகள் 22-07-2020 அன்று தெரிவித்துள்ளார்[5]. கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கறுப்பர் கூட்ட யூ ட்யூப் சேனலுக்கு கண்டனம் தெரிவித்தார்.  தமிழகத்தில் இது போன்ற பேச்சுகள் நிறுத்தப்பட வேண்டும் என்றும் இந்து மதத்தை இது போன்று இழிவுபடுத்தும் செயல்களில் யாராவது செயல்பட்டால் அவர்களின் நாக்கை துண்டிப்பதற்கும் கூட பயப்பட தேவையில்லை எனவும் ஆதீனம் பேசினார்[6].  உண்மையில், அவர் ஆதங்கத்துடன், பேசியுள்ளதை நினைவு கூறவேண்டும். தெய்வநம்பிக்கை ஆழமாக-உறுதியாக இருப்பது நல்லது தான், ஆனால், எல்லாவற்றையும் கடவுள் பார்த்துக் கொள்வார் என்று சும்மா இருக்க முடியாது. தேர்தல், ஓட்டு, ஓட்டுவங்கி, ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில், இத்தகைய இந்துமத-தூஷணங்களை செய்து வருவதால், நிச்சயமாக, இந்துக்கள் அதே முறையில், சரியான பதிலை சொல்லியாக வேண்டும். அவர்களுக்கு இந்து-ஆதரவு ஆட்சித் தேவையா அல்லது இந்து-விரோத ஆட்சி வேண்டுமா என்று இந்துக்கள் தான் தீர்மானிக்க வேண்டிய நிலையுள்ளது. “ஆவணன் ஆண்டால் என்ன, ராமன் ஆண்டால் என்ன” என்று இருந்தால், இதே இந்துவிரோத நிலைத் தான் தொடரும்.

2019ல் சில மடாதிபதிகள் பேசியது: சென்னை சேப்பாக்கத்தில் 12-04-2019 அன்று ஆதீனங்கள், துறவிகள், மடாதிபதிகள் என 11 பேர், தங்களது தேர்தல் நிலைப்பாட்டை அறிவித்தனர். அப்போது பேசிய பேரூர் ஆதினம் சாந்தலிங்க மருதாசல அடிகள், இந்து மதத்திற்கு எதிராக செயல்படுபவர்களுக்கு பாடம் புகட்டும் வகையில், மக்கள் வாக்களிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்[7]. யார் இந்து மத தொண்டர்கள் என தங்களை அறிவிக்கிறார்களோ, குங்குமம் வைக்கிறார்களோ, அவர்களுக்கே ஆதரவளிக்க வேண்டும் எனவும், அவர் குறிப்பிட்டார்[8]. பின்னர் பேசிய கோவை காமாட்சிபுரி ஆதீனம் சாக்தஸ்ரீ சிவலிங்கேஸ்வரர், தெய்வபக்தி நிறைந்த தமிழகத்தில் ஆன்மிகத்திற்கு எதிராக தலைவர்கள் பேசுவதற்கு கண்டனம் தெரிவித்தார். இதே நிலை, இப்பொழுது 2021லும் தொடர வேண்டும். இந்து அமைப்புகள் மறுபடியும் இத்தகைய கூட்டங்களைக் கூட்ட வேண்டும், இணதள பிரச்சாரங்களும் நடந்து வருவதால், அத்தகைய முறைகளையும் கையாள வேண்டும். சைவ மடங்கள், உழவாரப் பணி குழுக்கள் முதலியவற்றையும், அதில் ஈடுபடுத்தப் படவேண்டும்.

இந்துக்கள் கவனிக்க வேண்டியது, செய்ய வேண்டியது முதலியன: மேற்குறிப்பிட்ட நிகழ்வுகள், பின்னணி. அரசியல், அதிகாரம் போன்ற காரணிகளை உன்னிப்பாக அலசிய பின்னர் கீழ்காணும் அம்சங்கள் கொடுக்கப் படுக்கின்றன:

  1. முன்பு ஆண்டாள், இப்பொழுது முருகன் என்று திட்டம் போட்டு, இந்துக்களின் மங்களைப் புண்படுத்தி வருவது தெரிகிறது.
  2. உண்மையான நாத்திகம் என்றால், கடவுள் இல்லை என்பதும் உண்மையான கொள்கையாக இருக்க வேண்டும். ஆனால், நாத்திகர் என்று பிரகடனப் படுத்திக் கொண்டு, இந்து-அல்லாத கடவுளர்களை விமர்சிப்பது, தூஷிப்பது கிடையாது. எனவே, அவர்களது நாத்திகம், இந்துவிரோத நாத்திகம் ஆகிறது.
  3. அதனால், தான் கிறிஸ்தவ-முஸ்லிம் கோஷ்டிகள் இவர்களது மேடைகளில் பிரசங்கம் செய்கிறார்கள் மற்றும் கிறிஸ்தவ-முஸ்லிம் மேடைகளில், இந்துவிரோத நாத்திகர்-திராவிடத்துவ துவேசிகள் பேசி வருகிறார்கள்.
  4. கஞ்சி குடித்தும், கேக்-வெட்டி நக்கி சாப்பிட்டும், கிறிஸ்தவ-முஸ்லிம்களுக்கு ஜால்றா போட்டு வருகிறார்கள், பாராட்டி பேசுகிறார்கள்.
  5. புகார் கொடுத்தாலும், எப்.ஐ.ஆர் போட்டாலும், சட்டப் படி, இவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. அவையெல்லாம் அப்படியே காலாவதியாகின்றன,
  6. அதனால் தான், செய்த குற்றங்களையே, திரும்பச் செய்து வருகிறார்கள். சட்டப் படி, தங்களை ஒன்றும் செய்ய முடியாது என்ற ரீதியில் அதே தூஷணங்களை செய்து வருகிறார்கள்.
  7. ஆகவே, சட்டப் படி நடவடிக்கை எடுக்க வைத்து, ஒருவனையாவது, தண்டனைக்கு உட்பத்த வைத்து, தண்டிக்கப் பட்டால், மற்றவர்களுக்கு பாடமாக்க இருக்கும், அச்சம் ஏற்படும்.
  8. இல்லையென்றால், பயமில்லாமல் போகும், “காலையில் கைது, மாலையில் விடுதலை,” போன்ற விளையாட்டாகி ஆகிவிடும்.
  9. தேர்தல் நேரத்தில் இவ்வாறு செய்யும் போது, அத்தகைய தேர்தல் சட்டங்கள் பிரிவுகளின் கீழ், உரிய சட்டமீறல்களை குறிப்பிட்டு, ஆதாரங்களுடன் புகார் கொடுத்தால், தேர்தலில் நிற்கமுடியாத நிலையையும் உண்டாக்கலாம்.
  10. தமிழகத்தில் இருக்கும் சுமார் 300 இந்து மடங்கள், அமைப்புகள் முதலியவை, இதில் ஒன்று பட்டு செயல்படவேண்டும்.

© வேதபிரகாஷ்

05-01-2021


[1] தினமலர், ஹிந்துக்களை வஞ்சிக்கும்கட்சிகளை ஆட்சிக்கு வரவிடக்கூடாது: சிவனடியார்கள் தீர்மானம், Added : ஜன 04, 2021 01:34

[2] https://www.dinamalar.com/news_detail.asp?id=2683101

[3] தினமலர், நெல்லை டவுணில் திமுகவைக் கண்டித்து இந்து அமைப்பினர் போராட்டம், பதிவு செய்த நாள் : 03 ஜனவரி 2021 18:44.

[4] http://www.dinamalarnellai.com/web/districtnews/52654

[5] தினத்தந்தி, இந்து கடவுள்களை அவமதித்தால் நாக்கை துண்டியுங்கள்காமாட்சிபுரி ஆதீனம், பதிவு : ஜூலை 23, 2020, 10:40 PM

[6] https://www.thanthitv.com/News/TamilNadu/2020/07/23224038/1543722/Hindu-Gods-Kamtchi-aadenam.vpf.vpf

[7] நியூஸ்.7.செனல், இந்து மதத்திற்கு விரோதமாக இருக்கும் சக்திகளுக்கு மக்கள் வாக்களிக்க கூடாது” : தமிழக இந்து துறவிகள் குழு, April 13, 2019 1 view Posted By : manoj.b, Authors. https://ns7.tv/ta/q7bcv9

[8]  https://ns7.tv/ta/q7bcv9  [now snapshot view is available accessed on 05-01-2021]

பகவத் கீதை, கிருஷ்ண தூஷணம், திரிபு விளக்கம், இந்துவிரோதக் கூட்டங்களின் தொடரும் சட்டமீறல்கள், வன்முறைத் தூண்டும் பிரச்சாரம், நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்! [3]

ஜூலை 29, 2020

பகவத் கீதை, கிருஷ்ண தூஷணம், திரிபு விளக்கம், இந்துவிரோதக் கூட்டங்களின் தொடரும் சட்டமீறல்கள், வன்முறைத் தூண்டும் பிரச்சாரம், நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்! [3]

DK arheist discourse on Bhagawat Gita.his book

உண்மையில் விற்கப்பட்டதா, இலவசமாகக் கொடுக்க பட்டதா?: இக்காலத்தில் புத்தகத்தின் விற்பனையை எப்படி கணக்கில் காட்டுகிறார்கள் என்று நன்றாகவே தெரியும். தமிழக வரலாற்றுப் பேரவையில் திக-புத்தகங்கள் இலவசமாக 300 பேராளர்களுக்குக் கொடுக்கப்பட்டன என்று முன்னர் எடுத்துக் காட்டப்பட்டது. அப்படியென்றால், அந்த 10 புத்தக்கங்கள், 300 வீதம் விற்றதாகக் கணக்குக் காட்டிக் கொள்ளலாம். ஆக டஜன் கணக்கில் பிரைவேட் லிமிடெட் கம்பெனிகள் நடத்தும் வீரமணிக்கு ஒரு லட்சம் பிரதிகள் விற்பது என்பது என்ன முடியாத காரியமா? அதற்கு ஒரு வரி மறுப்பு கிடையாது என்பதில்லை, அதாவது லட்சம் பிரதிகள் விற்று யாரிடம் போய் சேர்ந்தன என்று தெரியவில்லை. மேலும், அரைகுறையாக, அரைவேக்காட்டுத்தனமான, அரைத்த மாவையே அரைத்துக் கொண்டிருக்கும், இத்தகைய சித்தாந்திகளை மற்றவர்கள் ஒரு பொருட்டாக எடுத்துக் கொண்டு, தங்களது நேரத்தை விரயமாக்க மாட்டார்கள் என்பதனையும் நோக்க வேண்டும்.

DK arheist discourse on Bhagawat Gita.his book.english
பகவத் கீதையை புனித நூலாக சைவர்கள் ஏற்கமாட்டார்கள்: கி.வீரமணி பேட்டி: தஞ்சையில் திராவிட கழகம் சார்பில் இந்தியாவின் தேசியப் புனித நூலாக பகவத் கீதையை அறிவிப்பதற்குக் கண்டனம் தெரிவித்து நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக தஞ்சை வந்த திராவிட கழகதலைவர் கி.வீரமணி நிரூபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது[1]: “பகவத் கீதை முழுமையான இந்து நூலாக கருதப்படுவதில்லை. இந்து மதம் என்பது பல பிரிவுகளை கொண்டது. அந்த வகையில் வைணவர்கள் தான் பகவத் கீதையை இந்து மதத்தை சார்ந்தது எனக் கூறுகின்றனர். சைவர்கள் பகவத் கீதையை ஏற்கமாட்டார்கள். அதேபோல மற்ற பிரிவுகளை சார்ந்தவர்களும் இதை ஏற்று கொள்வதில்லை. எனவே இந்து மதத்தை இந்நூல் முழுமையாக உரிமை கொண்டாட முடியாது. ஆனால் மத்திய அரசு தேசிய புனித நூலாக பகவத் கீதையை திணிக்க முயற்சிக்கிறது. இந்தியை எப்படி அதிகாரம் படைத்த மொழியாக திணிக்கின்றனரோ அதேபோல சமஸ்கிருதத்தையும் திணிக்க ஆசைப்படுகின்றனர். அது போல இதையும் நிறைவேற்ற முயற்சி செய்கின்றனர். நம் நாட்டில் பல கலாசாரங்கள், பல்வேறு மதங்கள் பல மொழிகள் இருக்கின்றன. இந்த நாட்டின் என் மதம் மட்டும்தான் ஆள வேண்டும் எனச் சொல்லக் கூடிய பாசிச முறையிலான இந்த செயல்பாட்டை இந்தியாவே எதிர்க்கிறது”, இவ்வாறு அவர் கூறினார்[2]. பேட்டியின்போது தி.மு.க. தேர்தல் பணிக்குழு செயலாளர் எல்.கணேசன், இந்திய கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலாளர் ரா. திருஞானம், தமிழர் தேசிய முன்னணி பொதுச்செயலாளர் அய்யனாபுரம் சி.முருகேசன் ஆகியோர் உடன் இருந்தனர். ஆகா, சைவர்கள் மீதுதான், வீரமணிக்கு எத்தனை பற்றுதல்! சிண்டு முடித்து விடுகிறார்கள். சோழன் குடுமி சும்மா ஆடாது என்றெல்லாம் இவர்கள் கிண்டல் செய்வார்களே, இப்பொழுது வீரமணி அதே வேலையைத்தான் செய்துள்ளார்.

DK arheist discourse on Bhagawat Gita.1

பகவத் கீதை ஒரு இந்து பயங்கரவாத நூல், கிருஷ்ணன் ஒரு இந்து பயங்கரவாதி: வினவு போன்ற தீவிர-கம்யூனிஸ்ட் ஊடகங்களும், “அதன்படி பகவத் கீதை ஒரு இந்து பயங்கரவாத நூல், கிருஷ்ணன் ஒரு இந்து பயங்கரவாதி என்பதற்கும் எண்ணிறந்த சான்றுகளை அடுக்க முடியும்,” என்று ஊளையிடுகின்றன[3]. சம்புகன் என்ற பெயரில் உதிர்த்துள்ள துவேசங்கள்[4]:

  1. மற்ற மதங்களின் கடவுளுக்குரிய தன்மை கிஞ்சித்தும் இல்லாத பாத்திரம் தான் கிருஷ்ணன்.
  2. தன்னை ஒருவன் ஆராதிக்க முன்வந்தால் அவனை ஏற்றுக்கொள்வேன் என்று சொல்லும் கிருஷ்ணன், நேர்மையான வாழ்க்கையை ஒழுகுவதை அதற்கு நிபந்தனையாக சொல்லவில்லை.
  3. அதனால்தான் ஊழல் பேர்வழிகளும், கொலைகாரர்களும் கொண்ட பாஜக கிருஷ்ணனை தூக்கிபிடிக்கிறது. திருப்பதி உண்டியிலில் விழும் எண்ணிறந்த கருப்புப் பணமும் அதையே காட்டுகிறது.
  4. எந்த வகையிலும் தகுதியற்ற கீதையை தேசியப் புனித நூலாக்குவோம் என்பது கயமை நிறைந்தது.
  5. அதன்படி பகவத் கீதை ஒரு இந்து பயங்கரவாத நூல், கிருஷ்ணன் ஒரு இந்து பயங்கரவாதி என்பதற்கும் எண்ணிறந்த சான்றுகளை அடுக்க முடியும்.

ஆக, இவர்களிடமிருந்து தான், உண்மையினை எல்லோரும் அறிய முடியும், என்ற ரீதியில், பொய்களை அள்ளிவிட்டிருக்கிறார்கள். இந்துவிரோத கூட்டங்கள் இதைப் படித்து சந்தோசம் அடையலாம்!

DK Veeramani, Gita a book of terrorism, Krishna - a terrorist

முடிவுரை: மேலே உள்ள அனைத்தையும் கவனமாகப் படித்து, விவாதித்தப் பிறகு, குறிப்பாக, கீழ்கண்ட அம்சங்கள் கவனத்திற்குக் கொடுக்கப் படுகின்றன:

  1. வீரமணி போன்ற இந்துவிரோத கும்பல்கள், உருப்படியாக, படித்து உண்மைகளை அறிந்து கொள்ளவில்லை. இந்துவிரோத குப்பைகளைத் திரட்டி, பேசி-எழுதி வருவடுதான் புலப்படுகிறது. இதிலிருந்தே, அவர்களது தகுதியும் வெளிப்படுகிறது. அதனால் தான் கண்டுகொள்ளாமல் இருக்கிறாற்கள். ஆனால், செய்யும் குற்றத்தைத் திரும்பத்திரும்ப செய்தால், ஒரு நிலையில் கட்டுப்படுத்த வேண்டிய, நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலை உண்டாகிறது. நிச்சயமாக 2020களில், இவர்கள் 1960கள் போன்று வன்முறாஇ செயல்களில் ஈடுபட்டு, இந்துக்களை மிரட்ட முடியாது.
  1. ஆங்கிலேயர் காலம் முதல் 2020 வரை நடந்துள்ள நிகழ்வுகளை கவனித்தால், இக்கூட்டங்கள் திட்டமிட்டு தூஷணம் செய்து கொண்டிருக்கின்றன என்பதனை அறிந்து கொள்ளலாம். ஈவேரா சொன்னதைத் தான், நான் சொன்னேன் – எழுதினேம் என்று தப்பித்துக் கொள்ள முடியாது. “அவன் தான் கொலை செய் என்றான், நான் செய்தேன்,” என்று தப்பித்துக் கொள்ள முடியாது.
  1. பகவத் கீதை உறவினர்கள், அன்பர்கள் எல்லோரையும் கொல் என்பது உருவகமாகச் சொல்லப் பட்டிருக்கிறது. வாழ்க்கை நிலையாம்மைவிளக்கப் பட்டிருக்கிறது. அதனால், கீதை படிப்பவன் எல்லோரும் கொலை செய்வான் என்று விளக்கம் கொடுப்பது மடத்தனமானது. அதனால் தான், மக்கள் இத்தகைய விளக்கங்களை கண்டுகொள்வதில்லை.
  1. வாழ்க்கை நிலையின்மையை, மக்கள் அன்றாகப் புரிந்து கொண்டுள்ளார்கள். கடந்த ஆண்டுகளில் பூகம்பங்கள், புயல்கள், வெள்ளங்கள், சுனாமி, இப்பொழுது கொரோனா போன்ற தொற்று வியாதிகள் என்று மக்கள் அனுபவித்து, உண்மையினை அறிந்து கொண்டுள்ளனர்.
  1. சுருக்கமாக சொல்வதானல், கிருஷ்ணர் அர்ச்சுனனுக்கு குருக்ஷேத்திரத்தில் சொன்னது. இப்பொழுது, யாரும் குருக்ஷேத்திரத்தில் இல்லை. சண்டைப் போட்டுக் கொள்ளவும் தயாராக இல்லை.
  1. வர்ண சங்கிரமம், miscegenation, என்று இக்காலத்தில் விஞ்ஞான ரீதியில் சொல்லப் படுகிறது. அதனால், வீரியம் குறைகிறதா, பிறக்கும் குழந்தைகள் புதிய நோய்களுக்கு, அங்கஹீனங்களுக்கு உட்படுகிறார்களா இல்லையா என்பது, அனுபவிப்பவர்களுக்குத் தெரியும். அரசியல் செய்பவர்களுக்குப் புரியாது.
  1. மக்கள் எவ்வாறு பிறக்கின்றனர் என்று, இப்பொழுதைய விஞ்ஞான காலத்தில் அனைவரும் அறிந்து கொண்டுள்ளனர். 60-100 ஆண்டுகளுக்கு முன்னர் வேண்டுமானால், அடுத்தவர் சொல்லித் தெரிந்து கொள்ளவேண்டிய நிலை இருந்திருக்கலாம்.
  1. இப்பொழுது பெண்கள் எல்லா துறைகளிலும் சிறந்து விளங்குகிறார்கள், ஆண்களுக்கு நிகராக, ஏன், மேலும் சிறந்துள்ளார்கள் என்பது தெரிந்த விசயமாகிஅ உள்ளது. ஆகவே, இன்னும், பழமையைச் சொல்லி மிரட்டினால், யாருன் கண்டுகொள்ளப் போவதில்லை.
  1. எல்லாவற்றையும் விட குறிப்பாக, ஜாதிகளை ஒழிப்போம் என்று சொன்ன, சொல்கின்ற எவனும் ஜாதியை ஒழிப்பதாக இல்லை, மாறாக, ஜாதிகளை வைத்துக் கொண்டு அரசியல் செய்கிறான், பிழைத்துக் கொண்டிருக்கிறான்.
  1. எல்லோரும், எல்லாவற்றையும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதைத் தடுப்பதே இவர்கள் தாம். குண்டுசட்டியில் குதிரையை ஓட்டிக் கொண்டிருப்பதால், அதையும் மீறி தெரிந்து கொள்ள விடுவதில்லை.

© வேதபிரகாஷ்

29-07-2020

Propaganda that Gita as a book of violene-English

[1] மாலைமலர், பகவத் கீதையை புனித நூலாக சைவர்கள் ஏற்கமாட்டார்கள்: கி.வீரமணி பேட்டி, பதிவு செய்த நாள் : ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 21, 5:01 PM IST.

[2] http://www.maalaimalar.com/2014/12/21170111/Vegetarians-will-accept-the-Bh.html

[3] வினவு, பகவத் கீதையை தடை செய் !, By – சம்புகன்-வினவு, December 9, 2014.

[4] https://www.vinavu.com/2014/12/09/sushma-swaraj-wants-bhagavad-gita-to-be-national-scripture/

Krishna killing a Demon and trying to attack Bhisma