பத்ரி சேஷாத்ரி, அண்ணாவை முட்டாள் எனக் குறிப்பிட்டது, பூணூலை அறுப்பேன் என்று சுப.வீரபாண்டியன் பேசிது, தமிழ் இணைய கல்விக் கழக ஆலோசனை குழுவிலிருந்து நீக்கப் பட்டது! (1)

பத்ரி சேஷாத்ரி, அறிஞர் அண்ணாவை முட்டாள் எனக் குறிப்பிட்டு 17-10-2022 அன்று ட்விட்டரில் பதிவு செய்தது: குறிப்பிட்ட சாதியினரை அவதூறு செய்து, மிரட்டல் விடுத்து வன்முறையை தூண்டும் வகையில் பேசியுள்ள சுப.வீரபாண்டியனை கைது செய்ய தமிழக காவல்துறைக்கு முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிடுவாரா என பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி கேள்வி எழுப்பியுள்ளார்[1]. பத்ரி சேஷாத்ரி, அறிஞர் அண்ணாவை முட்டாள் எனக் குறிப்பிட்டு ட்விட்டரில் பதிவு செய்தது கடும் கண்டனங்களைக் கிளப்பிய நிலையில், அவர் தமிழ் இணைய கல்விக் கழக ஆலோசனை குழுவில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்[2]. இந்நிலையில், சுப.வீரபாண்டியன் பத்ரி சேஷாத்ரிக்கு கண்டனம் தெரிவித்துப் பேசுகையில், அவர் சார்ந்துள்ள சாதியினரை மிரட்டும் வகையில் பேசியதாக பாஜக நாராயணன் திருப்பதி கண்டனம் தெரிவித்துள்ளார்[3]. சிறுபான்மையினரான பிராமணர்களை மிரட்டும் வகையில் பேசிய சுப.வீரபாண்டியன் மீது முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்[4].

19-10-2022 அன்று தமிழ் இணைய கல்விக் கழக ஆலோசனை குழுவிலிருந்து நீக்கப் பட்டது: பதிப்பாளர் பத்ரி சேஷாத்திரி இடம்பெற்ற தமிழ் இணைய கல்விக் கழக ஆலோசனை குழு மாற்றியமைக்கப்பட்டிருக்கிறது[5]. இது தொடர்பான அரசாணை அக்டோபர் 19ஆம் தேதி வெளியான நிலையில், அதற்கு ஒருநாள் முன்பாகத்தான் 18-10-2022 அன்று பத்ரி சேஷாத்ரி அண்ணா தொடர்பாக சர்ச்சைக்குரிய கருத்துக்களை தமது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்[6]. பத்ரி சேஷாத்திரி கிழக்குப்பதிப்பகம் மூலம் பல புத்தகங்களை வெளியிட்டிருக்கிறார். தொலைக்காட்சி விவாதங்களில் அவர் அரசியல் ஆய்வாளராகவும் பங்கேற்று வருகிறார். வலதுசாரி சிந்தனை கொண்டவராக பொதுவெளியில் அறியப்படும் அவர், தமது ட்விட்டர் பக்கத்தில், அறிஞர் அண்ணாவின் இந்தி எதிர்ப்பு தொடர்பான கருத்துக்கள் அடங்கிய இடுகையை சமீபத்தில் வெளியிட்டிருந்தார். அதில் இடம்பெற்ற சில கருத்துக்கள் சர்ச்சையாக ஆளும் திமுகவினரால் கருதப்பட்டன.

டுவிட்டர் பதிவுகளும், செய்தி உருவாக்கமும்: பத்ரி சேஷாத்ரி நீக்கம் முன்னாள் தமிழக முதல்வர் அறிஞர் அண்ணாவை ட்விட்டரில் தரக்குறைவாக விமர்சித்த கிழக்கு பதிப்பக உரிமையாளர் பத்ரி சேஷாத்ரியை, தமிழ் இணைய கல்விக் கழக ஆலோசனை குழுவில் இருந்து நீக்கவேண்டும் என திமுகவினர் பலரும் கோரிக்கை விடுத்தனர்[7]. அதைத் தொடர்ந்து, தமிழ் இணைய கல்விக் கழக ஆலோசனைக் குழுவில் இருந்து பத்ரி சேஷாத்ரி நீக்கப்பட்டு, அக்குழுவை தமிழக அரசு மாற்றி அமைத்தது[8]. எனினும், திமுக எம்.பிக்கள் vs பத்ரி சேஷாத்ரி கருத்துகள் என சமூக வலைதளத்தில் அனல் பறந்தது. இன்றைக்கு, சமூக ஊடகப் பதிவுகள் செய்திகளாக மாற்றப் படுவதை கவனிக்கலாம். இவ்வாறு கிளப்பிவிடும் “செய்தி” ஓரிரு நாள், ஏதோ முக்கியமான விசயம் போல பேசுவார்கள், அலசுவார்கள், பிறகு அமைதியாகி விடுவார்கள். அதை மறந்தும் விடுவர்.

சுப.வீரபாண்டியனின் வெறுப்புப் பேச்சு: சுப.வீ கொதிப்பு இந்நிலையில், திமுக மேடை ஒன்றில் பேசிய திராவிட இயக்க தமிழர் பேரவை தலைவர் சுப.வீரபாண்டியன், பத்ரி சேஷாத்ரியின் கருத்தைக் கண்டித்திருந்தார்[9]. தமிழகத்தில் ஒருபோதும் ஆரிய மாடலை நுழையவிடமாட்டோம், அண்ணா, கருணாநிதி பற்றி எவன் ஒருவன் தவறாக பேசினாலும் மரியாதை கொடுக்க முடியாது எனப் பேசியிருந்தார் சுப.வீரபாண்டியன்[10]. இந்த நிலையில், ‘பத்ரி சேஷாத்ரி என்பவன் அண்ணாதுரையை முட்டாள் என விமர்சிக்கிறான். இனிமேலும் அமைதியாக இருக்க முடியாது. ‘இதுநாள் வரை சட்டைக்குள் இருந்த பூணுால் மெல்ல மெல்ல வெளியே வருகிறது. கத்தரித்து விடுவோம் என்பதை மனதில் வைத்து கொள்ளுங்கள்.’வழக்கமாக யாரையும் அவன் என்று விமர்சிப்பதில்லை. இனிமேல், மரியாதை கொடுக்க முடியாது‘ என, பதிப்பாளர் பத்ரி சேஷாத்ரிக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்[11], திராவிட இயக்க தமிழர் பேரவை பொதுச் செயலர் சுப.வீரபாண்டியன். தி.மு.க., ஆதரவாளராக செயல்படும் இவர், தமிழக அரசு அமைத்துள்ள சமூக நீதி குழு உறுப்பினராகவும் உள்ளார்[12]. தமிழ் இணைய கல்விக் கழக ஆலோசனை குழுவில் இவரும் உறுப்பினராக உள்ளார் என்பது நோக்கத் தக்கது.

சுப்வீரபாண்டியனின் தாக்கம்: திராவிடத்துவவாதியாக, பெரியாரிஸவாதியாக, உலா வரும் இவர், திகவிலிருந்து, திமுக வரை, சென்னை பல்கலைக் கழக மேடைகளில் பேசுவது வழக்கமாக இருக்கிறது. இம்மாதத்தில் சென்னை பல்கலைக்கழகத்தில், சரித்திரத் துறை சார்பில் நடந்த செமினாருக்கு கனிமொழி, மற்றும் இவரும் வந்திருந்தார்கள். கருணானந்தம் ஏற்கெனவே திகவில் இருந்து கொண்டு, சரித்திரத் துறையில், கௌரவ விரிவுரையாளராகவும் பணியாற்றி வந்தார். ஜகதீசன், நாகநாதன் போன்றோரின் நண்பரும் ஆவார். ஆக, இவர்கள் எல்லோரும் பல்லாண்டுகளாக, தமது சித்தாந்தத்தில் ஊறி ஒன்றாக சேர்ந்து வேலை செய்து வருகின்றனர். தமிழக கல்வி, பாடதிட்டம், பாடமுறை, புத்தகங்கள் முதலியவற்றை வடிவமைத்தல், உருவாக்குதல் பள்ளி-கல்லூரிகளில் பாடம் எடுப்பது, விளக்குவது போன்றவற்றிலும் ஈடுபட்டு வருகிறார்கள். அந்நிலையில் தங்களது விசுவாசத்திற்கு ஏற்றபடி தான் பேசுவார்கள், வேலை செய்வார்கள். அத்தகைய ஒற்றுமை இந்துத்துவவாதிகளிடம், குறிப்பாக அரசியல் இந்துத்துவவாதிகளிடம் இல்லை.

பத்ரி சேஷாத்ரியை விமர்சிக்க சாதியை இழுத்து மிரட்டல் விடுத்துள்ள சுப.வீரபாண்டியனை கைது செய்வாரா முதல்வர்?: என பாஜக நாராயணன் திருப்பதி கேள்வி எழுப்பியுள்ளார். உங்களுக்கு உரிமை உண்டு இதுகுறித்து பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள அறிக்கையில், “பத்ரி சேஷாத்திரியை அரசு பொறுப்பில் நியமிப்பதும், நீக்குவதும் அரசின் உரிமை. அவர் யாரையாவது அநாகரீகமாகவோ, தரக்குறைவாகவோ பேசியிருந்தால் அவர் மீது நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு அதிகாரமும், கடமையும் உள்ளது. நேரு, இந்திரா காந்தி, இராஜாஜி, காமராஜர், எம்ஜிஆர், ஜெயலலிதா மற்றும் எண்ணற்ற தலைவர்களை அச்சில் ஏற்ற முடியாத தரக்குறைவான வார்த்தைகளால் விமர்சித்த கூட்டம் தான் இந்த திராவிடர் கழக கூட்டம். பிராமண சமுதாயத்தை இழிவாக அதே போல், தற்போதும் ஹிந்து மத கடவுள்களை, மத நம்பிக்கைகளை அநாகரீகமாக, தரக்குறைவாக, இழிவாக பேசிய, பேசிக்கொண்டிருக்கின்ற திராவிடர் கழக மற்றும் அதன் தோழமை கும்பல் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டிய பொறுப்பும், கடமையும் மாநில அரசுக்கு உள்ளது. ஆனால், பத்ரி சேஷாத்ரியை கண்டிக்கும் போர்வையில், திராவிடர் இயக்க தமிழர் பேரவையின் சுப.வீரபாண்டியன், பிராமண சமுதாயத்தை இழிவுபடுத்தும் வகையில் பேசியுள்ளதோடு, பூணூலை கத்தரித்து விடுவோம் என்று மிரட்டும் தொனியில் பேசியிருப்பது சிறுபான்மை சமூகமான பிராமண சமூகத்திற்கு விடப்பட்டு இருக்கும் அப்பட்டமான மிரட்டல்.
© வேதபிரகாஷ்
23-10-2022.

[1] தமிழ்.ஒன்.இந்தியா, பூணூலை அறுப்பேன் என்று பேசிய சுப.வீரபாண்டியனை கைது செய்வாரா முதல்வர்? – கொந்தளித்த பாஜக நாராயணன்!, By Vignesh Selvaraj, Updated: Saturday, October 22, 2022, 17:12 IST.
[2] https://tamil.oneindia.com/news/chennai/bjp-narayanan-thirupathy-has-questioned-whether-cm-stalin-will-arrest-suba-veerapandian-who-has-defa-481781.html
[3] தமிழ்.ஏசியாநெட்.நியூஸ், பூணூலை அறுப்பேன்.! கொந்தளித்த சுப.வீரபாண்டியன்.. கடுப்பான பாஜக , நாராயணன் திருப்பதி,Raghupati R; First Published Oct 22, 2022, 7:24 PM IST; Last Updated Oct 22, 2022, 7:24 PM IST.
[4] https://tamil.asianetnews.com/politics/auspicious-will-stalin-order-the-tamil-nadu-police-to-arrest-veerapandian-rk5qnn
[5] பிபிசி.தமிழ், அண்ணா பற்றிய சர்ச்சை ட்வீட் – பத்ரி சேஷாத்ரி இடம்பெற்ற ஆலோசனை குழு மாற்றம் – என்ன நடந்தது?, 20 அக்டோபர் 2022
[6] https://www.bbc.com/tamil/india-63326503
[7] தமிழ்.நியூஸ்.18, ட்விட்டரில் அண்ணா குறித்து அவதூறு கருத்து தெரிவித்த பத்ரி சேஷாத்ரி நீக்கம், News Desk, தமிழ்நாடு, 13:54 PM October 20, 2022.
[8] https://tamil.news18.com/videos/tamil-nadu/action-against-badri-seshadri-for-making-comments-about-anna-on-twitter-822178.html
[9] ஜீ.நியூஸ், பேரறிஞர் அண்ணா முட்டாள்… பத்ரி சேஷாத்ரி போட்ட ட்வீட் – ஒரே இரவில் தூக்கியடித்த அரசு!, Written by – க. விக்ரம் | Last Updated : Oct 20, 2022, 02:54 PM IST.
[10] https://zeenews.india.com/tamil/tamil-nadu/cn-annadurai-should-be-called-an-idiot-too-says-badri-seshadri-415837
[11] தமிழ்.வெப்.துனியா, அண்ணாவை அவமதித்து பேசிய பத்ரி சேஷாத்ரி..! – ஆலோசனை குழுவிலிருந்து நீக்கி நடவடிக்கை!, Written By Prasanth Karthick; Last Modified; வியாழன், 20 அக்டோபர் 2022 (16:17 IST)
[12] https://tamil.webdunia.com/article/regional-tamil-news/badri-sheshadri-removed-from-tn-education-advice-council-122102000059_1.html