வசைபாடி மன்னிப்புக் கேட்கும் திராவிடத்துவத்தின் மகத்துவம் என்ன – மன்னிப்பினால் துவேச-தூஷணங்களின் தாக்குதல் அடங்குமா, மறையுமா, குறையுமா?
திராவிட கட்சி பேரங்களில் ஈடுபட்ட முஸ்லிம்கள்:. “நேற்று (ஏப்.6) மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமை அலுவலகமான தாயகத்தில் செய்தியாளர்கலை சந்தித்தபோது, தேசிய முற்போக்கு திராவிட கழகத்தில் ஏற்பட்டுள்ள நிலைமை குறித்து விளக்கம் அளித்தேன். அக்கட்சியின் மூன்று சட்டமன்ற உறுப்பினர்களும், சில மாவட்டச் செயலாளர்களும் அக்கட்சித் தலைமை சட்டமன்ற தேர்தல் குறித்து மார்ச் 23ஆம் தேதியன்று எடுத்த முடிவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, தலைமையைக் கடுமையாக விமர்சித்து பத்திரிகையாளர்களைச் சந்தித்துக் கூறிய கருத்துகளுக்குப் பதில் சொல்லும் விதத்தில் சில விளக்கங்கள் அளித்தேன். தேசிய முற்போக்கு திராவிட கழகத்தினரை தலைமைக்கு எதிராக அறிக்கை விடச் செய்ய திராவிட முன்னேற்றக் கழகம் கோடிக்கணக்கில் பணத்தைக் கொடுத்து, வலை வீசுகிரார்கள், அதற்குச் சாட்சியமாக திருநெல்வேலி மாவட்டத்தில் தேமுதிக நெல்லை மாநகர் மாவட்டச் செயலாளர் முகமது அலி என்பவரை அக்கட்சித் தலைமைக்கு எதிராக அழைத்து வந்தால் அவருக்கு 3 கோடியும், அழைத்து வருபவருக்கு 50 லட்ச ரூபாயும் தருவதாக, கோல்டன் கான் என்ற இஸ்லாமிய நண்பரிடம், தேனியைச் சேர்ந்த நஜ்முதீன் பேசி இருக்கிறார் என்ற தகவலைச் சொன்னேன்”[1]. வைகோ அறிக்கை தொடர்கிறது.
நான் வணங்கும் தெய்வமான என் அன்னை மாரியம்மாள் மீது ஆணையிட்டுக் கூறுகிறேன்: “பணம் வாங்கிக் கொண்டு கட்சி மாறுவது இழிவானது என்று கூறியபோது, இது உலகத்தின் ஆதித்தொழிலைப் போன்றது என்று கூறினேன். ஆனால், அண்ணன் டாக்டர் கலைஞர் அவர்களைக் குறித்தோ, அவரது குடும்பத்தினர் குறித்தோ, மறைமுகமாக இப்படிச் சொல்ல வேண்டும் என்று இம்மி அளவும் என் மனதில் எண்ணம் இல்லை என்பதை, நான் வணங்கும் தெய்வமான என் அன்னை மாரியம்மாள் மீது ஆணையிட்டுக் கூறுகிறேன். ஆனால், அதன்பின் நாதஸ்வரம் வாசிக்கும் அகலை அவருக்குத் தெரியும் என்று கூறியது, தவறாகப் பொருள் கொள்ளும்படி ஆகி விட்டது. அது மிகப்பெரிய தவறுதான், அண்ணன் கலைஞர் அவர்களைச் சாதியைக் குறித்து நான் இப்படிச் சொன்னதாகப் பழிப்பதற்கும் நான் ஆளாகி விட்டதை எண்ணி வேதனைப்படுகிறேன். நான் சாதிய உணர்வுகளுக்கு முற்றிலும் அப்பாற்பட்டவன், அதை அண்ணன் கலைகர் அவர்களே அறிவார்கள்.” வைகோ அறிக்கை தொடர்கிறது.
என் உயிர் பிரியும் வரை உங்களுக்கு நான் கும்பகர்ணனாகவே இருப்பேன்: “அண்ணன் கலைஞர் அவர்களை 30 ஆண்டுகளாக என் நெஞ்சில் வைத்துப் போற்றியவன் நான். அவர் மீது துரும்பு படுவதர்கும் சகிக்காதவனாக, அவருக்கு ஒரு கேடு என்றால் அதைத் தடுக்க என் உயிரையும் தத்தம் செய்யச் சித்தமாக இருந்தவன் நான். அதனால் தான் 1993 அக்டோபர் 3 இல் என் மீது கொலைப்பழி சுமத்தப்பட்டபோது, என் உயிர் பிரியும் வரை உங்களுக்கு நான் கும்பகர்ணனாகவே இருப்பேன் என்று அறிக்கை விட்டேன். ஆனால், உலகின் ஆதித் தொழில் என்று கலைஞர் குடும்பத்தைக் குறிப்பிட்டு நான் கூறியதாகக் கருதுவதற்கு ஒரு இடம் ஏற்பட்டு விட்டதே என்பதை நினைக்கும்போது என் மேனி முழுவதும் நடுக்கமுற்றது என்பதை என் அருகில் இருந்தவர்கள் அறிவார்கள். இப்படி நான் கூறியது என் வாழ்நாளில் செய்த ஒரு குற்றமாகவே கருதுகிறேன். அதற்கு மன்னிப்பும் கேட்டுக் கொள்கிறேன். அண்ணன் கலைஞர் அவர்கள் தாயுள்ளத்தோடு என் விளக்கத்தை ஏற்றுக் கொள்ள வேண்டுகிறேன், ” இவ்வாறு அறிக்கையில் வைகோ தெரிவித்துள்ளார். வாழ்நாளில் செய்த ஒரு குற்றமாகவே கருதுகிறேன்[2]. அதற்கு மன்னிப்பும் கேட்டுக் கொள்கின்றேன். என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்[3].
திராவிடத் தலைவர்களின் பரஸ்பர வசைபாடுகள்: 1960களிலிருந்தே, பொதுவாக திராவிட சித்தாந்திகள், மேடை பேச்சாளிகள், அரசியல்வாதிகள், முதலியோர் ஆபாசமாக, கொச்சையாக, கேவலமாக, இரட்டை அர்த்தம் தொணிக்க பேசுவது எல்லாம் சகஜமாக இருந்தது. இப்பொழுது, ஊடகங்கள் மூலம் அவை பரவி வருவதால், இக்காலத்தவர், அடடா என்ன பெரியார், அண்ணா, கருணாநிதி …… முதலியோர் இப்படியா பேசினர் என்று திகைக்கின்றனர். இதனால், அவர்களைப் பற்றிய கருத்துகளும் இளைஞர்களிடையே மாறி வருகின்றன. உதாரணத்திற்கு சிலவற்றைப் பார்ப்போம்[4]:
- கருணாநிதி ‘காமராஜரின் தாய் கருவாடு விற்றவர்’ என்று சொன்ன போது கண்ணதாசன் தாக்குதல் மிகக்கடுமையாக இருந்தது. “என் தலைவனின் தாய் கருவாடு மட்டும் தான் விற்றார்” [அப்படியென்றால், வேறென்னதை விற்றார் என்ற கேள்வி எழுகிறது அல்லவா?].
- கண்ணதாசன் இறந்த போது கருணாநிதி இரங்கல், “தென்றலாய் வீசியவனும் நீ! நெருப்பாய் சுட்டவனும் நீ! தாக்குகின்ற கணை எத்தனை நீ தொடுத்த போதும் அத்தனையும் தாங்கும் என் நெஞ்சே உன் அன்னை!” [அதாவது கருணாநிதி, பதிலுக்கு, உங்கம்மாதான் அப்படி செய்வாள் என்பது போல சாவு-இரங்களிலும் மறக்காமல் வசைப்பாடி பழித்தீர்த்துக் கொண்டுள்ளார்]
- எம்.ஜி.ஆர் புதுகட்சி ஆரம்பித்த போது கருணா நிதியின் எள்ளல் அன்று – எம்.ஜி.ஆர், “கூத்தாடி”, அதிமுக “நடிகர் கட்சி!” தன் மீதான “கூத்தாடி” …..என்றெல்லாம் பேசினார் [ஆனால், அண்ணா, முதலியோர் நாடகம்-சினிமா துறைகளில் நடிகனாக, எழுத்தாளராக…….வேலைப் பார்த்து பணம் சம்பாதித்தை மறந்து-மறைத்து வசைப்பாடியது].
- இதனால், அத்தகைய விமர்சனத்திற்கும், அதிமுக – ’நடிகர் கட்சி’ எள்ளலுக்கும் எம்.ஜி.ஆர் ஒரு கட்டத்தில் பொறுமையிழந்து சொன்னார், “கருணாநிதி தாசி பரம்பரை” என்றார் [என்ன செய்வது, பொறுமைக்கும் ஒரு இல்லையுண்டல்லவா, பொதுவாக எம்ஜியார் அப்படியெல்லாம் பேச மாட்டார். ஆனால், தூண்டப்பட்டார்].
- எம்.ஜி.ஆர் மறைந்த போது கருணாநிதி புகழாரம், “சொல்வாக்கும் செல்வாக்கும் மிகுந்த முதலமைச்சர்!” [அதாவது கருணாநிதி, பதிலுக்கு, “சொல்வாக்கு” என்று குறிப்பிட்டு சாவு-இரங்களிலும் மறக்காமல் வசைப்பாடி பழித்தீர்த்துக் கொண்டுள்ளார்]
அதாவது, தொடர்ச்சியாக ஒருவரை மோசமாக விமர்சித்துக் கொண்டே இருந்தால், ஒருநிலையில், யாரும் பொறுமை இழக்க நேரிடும் என்பதற்காக இது எடுத்துக் காட்டப் படுகிறது. மேலும், பெரியார், அண்ணா, கருணாநிதி ……போன்றோர் இவாறெல்லாம் பேச வேண்டிய அவசியம் என்ன என்பதும் நோக்கத்தக்கது.
பிராமண எதிர்ப்பு – விளைவுகள் – யாரோ “அனோனிமஸ்” என்று பதிவாகியுள்ளது[5]: தமிழகத்தில் பிராமணர்கள் தொடர்ந்து தாக்கப்பட்டு வருவதை யாரும் பதிவி செய்து வைக்கவில்லை என்றே தெரிகிறது. பெரியாரிலிருந்து, இன்று கருணாநிதி வரை “பார்ப்பன எதிர்ப்பு”, “பார்ப்பனீய எதிர்ப்பு”, “ஆரியர் துவேசம்” போன்ற போர்வைகளில் பிராமணர்கள் பலவிதங்களில் பலவித தாக்குதல்களுக்கு உட்படுத்தப் பட்டு வருகிறார்கள். உதாரணத்திற்கு, பிராமணர்கள் தாக்கப்படுவது குறித்து ஒருவர் பதிவு செய்துள்ளதை இங்கு குறிப்பிடுகிறேன். “புத்தூர் அக்ரஹாரத்திலும், ஸ்ரீரங்கத்திலும் இன்னும் நூற்றுக்கணக்கான அக்ரஹாரங்களிலும் பிராமணர்கள் ஒவ்வொரு முறையும் தி மு க வெற்றி பெறும் பொழுது தாக்கப் பட்டே வருகிறார்கள். உடம்பு பூராவும் ரத்தக் காயங்களுடன் கொலை வெறி பிடித்த தி மு க வினரால் தாக்கப் பட்டு உயிர் தப்பி வீடு வந்த என் தந்தையை சிறு வயதில் நான் கண்டு அடைந்த நடுக்கம் இன்று வரை போகவில்லை. தமிழ் நாட்டு பிராமணர்கள் மனதில் ஹிட்லர் காலத்தில் ஜெர்மனியில் வாழ்ந்த யூதர்களிடம் இருந்த அதே அச்சம் நிலவி வருகிறது என்பதே உண்மை நிலை. இன்று கருணாநிதி முரசொலியில் ஜெயலலிதாவை எத்தனை முறை கடும் வெறியுடன் பாப்பாத்தி என்று எழுதியிருக்கிறார் என்பதைப் படித்தீர்களா? அதைக் கண்டித்து ஒரு கட்டுரை எழுதும் நேர்மை உங்களுக்கு உண்டா? அதைப் படிக்கும் ஒவ்வொரு பிராமணன் மனதிலும் அச்ச உணர்வு ஏற்படுவதில்லை என்று எப்படிக் கூசாமல் எழுத முடிகிறது?” “கருணாநிதியின் பிராமண துவேஷம் ஏன்?’ என்ற கட்டுரையில் அப்பின்னணியை விவரித்துள்ளேன்[6]. சென்ற தேர்தலுக்குப் பிறகு, திராவிட இயக்க நூற்றாண்டு துவக்க விழா நேரத்தில், கருணாநிதி ஜெயலலிதாவைத் தாக்குவது போல, பிரமணர்களின் மீது அவதூறாக, வன்முறையைத் தூண்டும் விதத்தில் பேசியது ஞாபகத்தில் கொள்ளலாம்[7]. பொய்களை வைத்து, தனக்கேயுரிய பேச்சை தமிழர்கள் நினைவு கொள்ள வேண்டும்[8].
© வேதபிரகாஷ்
09-04-2016
[1] முஸ்லிம்கள் பணம் கொடுக்க வருவது, எதிர்-எதிராகத் தூண்டி விடுவது, முதலிய விவகாரங்கள் என்ன என்பதையும் ஊடகங்கள் விளக்கவில்லை.
[2] தமிழ்.ஒன்.இந்தியா, இது என் வாழ்நாள் குற்றம்: கருணாநிதி குறித்து ஜாதிரீதியான விமர்சனத்துக்கு மன்னிப்பு கேட்ட வைகோ!, By: Karthikeyan, Updated: Thursday, April 7, 2016, 10:52 [IST].
[3] http://tamil.oneindia.com/news/tamilnadu/vaiko-apology-the-speech-about-karunanidhi-250651.html
[4] திராவிட அரசியல் பாரம்பரியத்தில் இப்படி தலைவர்கள் பரஸ்பர வசைப்பாடல், திட்டுகள், தூஷணங்கள் முதலியவற்றில் ஈடுப்பட்டுள்ளது, ஈடுபட்டு வருவது, அவர்களுக்கேயுரிய நாகரிகத்தைக் காட்டுகிறது.
[5] வேதனையுடன் ச. திருமலை – Wed Nov 05, 12:00:00 AM GMT+5:30;
http://www.badriseshadri.in/2008/11/blog-post_04.html
[6]https://dravidianatheism2.wordpress.com/2010/01/17/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A3-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5/
[7] https://dravidianatheism2.wordpress.com/2012/03/07/karunanidhi-grinds-anti-brahmin-bogey-again/
[8] https://dravidianatheism2.wordpress.com/2012/02/24/564-karunanidhi-spewing-old-hypothesis-enjoying-his-leisure/