Archive for the ‘திராவிட கல்யாணம்’ Category

பத்ரிசேஷாத்ரி, அண்ணாவை முட்டாள் எனக் குறிப்பிட்டது, தமிழ் இணைய கல்விக்கழக ஆலோசனை குழுவிலிருந்து நீக்கப் பட்டது! பூணூலை அறுப்பேன் என்று சுப.வீரபாண்டியன் பேசிதற்கு கண்டனம் தெரிவிக்கப் பட்டது!(2)

ஒக்ரோபர் 25, 2022

பத்ரி சேஷாத்ரி, அண்ணாவை முட்டாள் எனக் குறிப்பிட்டது, தமிழ் இணைய கல்விக் கழக ஆலோசனை குழுவிலிருந்து நீக்கப் பட்டது! பூணூலை அறுப்பேன் என்று சுப.வீரபாண்டியன் பேசிதற்கு கண்டனம் தெரிவிக்கப் பட்டது! (2)

பிராமணர்கள் திருப்பி தாக்கமாட்டார்கள்[1]: நாராயணன் திருப்பதி பேசியது, “பிராமணர்கள் திருப்பி தாக்கமாட்டார்கள் பத்ரி சேஷாத்ரி என்ற தனிநபரை விமர்சனம் செய்ய வேண்டுமென்றால் செய்து கொள்ளட்டும், ஆனால், இது போன்று தனிநபர் தொடர்புடைய விவகாரங்களில் வேறு எந்த சமூகத்தையாவது ஒட்டுமொத்தமாக இழித்தும், பழித்தும் பேசுவதற்கு சுப.வீரபாண்டியன் போன்றகோழைகளுக்குதைரியம் உள்ளதா? பிராமண சமுதாயத்தை சேர்ந்தவர்கள் திருப்பி தாக்க மாட்டார்கள் என்ற தைரியத்தில் இது போன்ற வன்மம் மிகுந்த தரக்குறைவான, மலிவான சாதிய விமர்சனங்களை இந்தகோழைகள்முன்வைப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது”.

வன்முறையை தூண்டும் வகையில் பேசியுள்ள சுப.வீரபாண்டியனை கைது செய்ய தமிழக காவல்துறைக்கு உத்தரவிடுவாரா?: நாராயணன் திருப்பதி பேசியது, “ஸ்டாலின் நடவடிக்கை எடுப்பாரா? பத்ரி சேஷாதிரி தவறு செய்திருந்தால், முதல்வர் மு.க.ஸ்டாலின், அவர் மீது நடவடிக்கை எடுக்கட்டும். ஆனால், ஒட்டுமொத்தமாக ஒரு சாதியை இழிவுபடுத்தும் வகையில் பேசியுள்ள, மிரட்டியுள்ள சுப. வீரபாண்டியன் மீது நடவடிக்கை எடுப்பாரா முதல்வர் மு.க.ஸ்டாலின்? பூணூலை அறுப்பேன் என்று பேசிய சுப.வீரபாண்டியனை, இது அனைவருக்குமான ஆட்சி என்று பெருமிதம் கொள்கிற முதலமைச்சர், அதன்படி நடந்து கொள்வாரா? நேர்மையான ஆட்சி நடக்குமா? மத துவேஷங்களை செய்பவர் மீது நடவடிக்கை எடுப்பேன் என சட்டசபையில் உறுதி கொடுத்த முதலமைச்சர் ஒரு குறிப்பிட்ட சாதியினரை அவதூறு செய்து, மிரட்டல் விடுத்து வன்முறையை தூண்டும் வகையில் பேசியுள்ள சுப.வீரபாண்டியனை கைது செய்ய தமிழக காவல்துறைக்கு உத்தரவிடுவாரா? நேர்மையான ஆட்சி நடத்துவதாக சொல்லிக்கொள்வதை உறுதி செய்வாரா? நியாயமாக நடந்து கொள்வாரா?,” என்று சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார்.

பா.., தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் கூறியதாவது: இது குறித்து, பா.ஜ., தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் கூறியதாவது[2]: “ஒருவரை அரசின் குழுவில் சேர்க்கவோ, குழுவில் இருந்து விலக்குவதற்கோ அரசுக்கு உரிமை உண்டு. ஆனால், பத்ரி சேஷாத்திரியை அரசின் இணைய கல்வி ஆலோசனை குழுவில் இருந்து நீக்கிய விதம் தவறானது.எந்த தலைவரும் விமர்சனத்துக்கு உட்பட்டவர் தான். தலைவர்களை நியாயமாக, கண்ணியமாக விமர்சிக்க யாருக்கும் உரிமை உண்டு. அண்ணாதுரையை பத்ரி விமர்சித்த விதம் தவறு என்றால், அதை எதிர்க்கவோ, விமர்சிக்கவோ யாருக்கும் உரிமை உண்டு. அதை தவறு என சொல்ல முடியாது. அதற்காக நாகரிக குறைவாகவோ, மிரட்டும் வகையிலோ பேசுவதை ஏற்க முடியாது. விமர்சனத்துக்காக ஒருவரை அரசு குழுவில் இருந்து வெளியேற்றினால், இப்படிப்பட்ட குழுக்களில் இருக்கும் மற்றவர்கள், எந்த தலைவர் குறித்தும் இதுவரை விமர்சித்தது இல்லையா. பத்ரி சேஷாத்ரி, அண்ணாதுரையை விமர்சித்து விட்டார் என்றதும், தி.மு..,வின் ஆதரவு இயக்க தலைவர்கள் துள்ளி குதித்து வருகின்றனர். தி.மு.., எப்போதெல்லாம் ஆட்சிக்கு வருகிறதோ, அப்போதெல்லாம் இப்படிப்பட்ட அநாகரிக சூழல் உருவாவது, வாடிக்கையாகி இருக்கிறது.தி.மு.., தலைவரோ, இரண்டாம் நிலை தலைவர்கள் கூட, இப்படிப்பட்ட அநாகரிக விமர்சனங்களை வைப்பதாக தெரியவில்லை. ஆனால், தி.மு.., ஆதரவு இயக்கங்கள் என்று கூறும் இயக்கங்களின் தலைவர்கள் தான் அராஜகமாக பேசுவதும், அநாகரிகமாக நடந்து கொள்வதும் நடக்கிறது. பிராமணர்களுக்கு எதிராக முதலில் பூணுால் அறுப்பு போராட்டம் நடத்திய தி.., இயக்கம் தி.மு..,வுக்கு ஆதரவு நிலை எடுத்து செயல்படுவதாலேயே, அவர்களுக்கு இத்தனை தைரியம்.”

ஒரு ஜாதியினரை மட்டும் அவமதிப்பதும், கேவலமாக நடத்துவதும் எப்படி சமூக நீதியாகும்?:வானதி சீனிவாசன் பேசியது, “தி.மு..,வினருக்கு இரு வண்ண பட்டை எப்படி அடையாளமாக இருக்கிறதோ, ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அடையாளம் உள்ளது. சிலர் திருநீறு பூசுகின்றனர்; சிலர் திருமண் பூசுகின்றனர். அதைப்போல பிராமணர்கள் தங்கள் அடையாளமாக பூணுால் அணிகின்றனர். பிராமணர்களுக்கு எதிரான பிரச்னை என்றால், உடனே அவர்களின் பூணுாலை அறுப்பேன் என்பது எந்த விதத்தில் நியாயம்? அனைத்து ஜாதியினரையும், மதத்தவரையும் சமமாக மதித்து நடப்பது தானே சமூக நீதி? அதை விடுத்து, ஒரு ஜாதியினரை மட்டும் அவமதிப்பதும், கேவலமாக நடத்துவதும் எப்படி சமூக நீதியாகும்? தி.மு.., ஆட்சிக்கு வந்து விட்டாலே கூடவே ரவுடித்தனமும் வந்து விடும் என்பதற்கு சுப.வீ., போன்றவர்கள் பேச்சும் உதாரணம். இப்படி முதல்வர் ஸ்டாலின் பேசுவதில்லை என்று சொன்னாலும், இப்படிப்பட்ட நிகழ்வுகள் நடக்க, அவர் அனுமதிப்பதே தவறு தானே. அவருக்கு இதில் உடன்பாடு இல்லை என்றால், இவர்களை கட்டுப்படுத்தாது ஏன்?”

திராவிட குடும்பத்தவர் பிராமணர் உதவி பெறுவது: வானதி சீனிவாசன் பேசியது, “பூணுால் போட்டிருக்கும் ஆட்கள் வேண்டாம் என்று சொன்னால், தி.மு.., தலைவரோ, அக்கட்சியின் மற்ற தலைவர்களோ தங்களுக்கு மருத்துவம் பார்த்து கொள்ளவோ, ‘ஆடிட்டிங்பணிக்கோ, சட்ட ரீதியிலான பணிக்காகவோ, பிராமணர்களிடம் செல்வதே இல்லையா? ஏன் தி.மு.., தலைவர் வீட்டுப் பெண்கள், கோவில் கோவிலாகச் செல்லும்போது, பூணுால் அணிந்த பிராமண அர்ச்சகர்களிடம் பிரசாதம் வாங்க மறுத்து விடுகின்றனரா? தங்கள் கட்சிக்கு அரசியல் ஆலோசனை வழங்க, ஒரு பிராமணரை நியமித்து கொண்டனரேஅவரிடம் அவர் அணிந்திருக்கும் பூணுாலை கழற்றி விட்டு வந்து, எங்களிடம் பணியாற்றுங்கள் என்று நிபந்தனை போட்டுத் தான் பணியாற்ற அனுமதித்தனரா?முதல்வர் இனியும் இந்த விஷயத்தில் அமைதியாக இருப்பது சரியல்ல. இப்படி பேசுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், இவ்வாறு அவர் கூறினார்[3].

சுப.வீரபாண்டியனுக்குதாம்ப்ராஸ்கண்டனம்: ”முன்னாள் முதல்வர் அண்ணாதுரையை பதிப்பாளர் பத்ரி சேஷாத்ரி விமர்சித்தார் என்பதற்காக பூணுால் குறித்து அநாகரிகமாகவும், சட்டத்திற்கு புறம்பாகவும் கருத்து தெரிவித்த திராவிடர் இயக்க தமிழர் பேரவை பொது செயலர் சுப.வீரபாண்டியனுக்கு தமிழ்நாடு பிராமணர் சங்கம் ‘தாம்ப்ராஸ்’ கண்டனம் தெரிவித்து உள்ளது[4]. சங்க மாநில தலைவர் என். நாராயணன் கூறி உள்ளதாவது[5]: “ஒரு பிராமண சமூகத்தைச் சேர்ந்தவர் தனிப்பட்ட முறையில் கூறிய கருத்து, ஒட்டுமொத்த பிராமண சமூகத்தின் கருத்து என எண்ணுவது, பகுத்தறிவுக்கு உகந்ததா? ஓர் இனத்திற்கு எதிராக வன்முறையை துாண்டுவதாக அமைந்துள்ள சுப.வீரபாண்டியனின் செயல்பாடு நடுநிலையாளர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த, 1967, தமிழ்நாடு சட்டசபை தேர்தலில் மறைந்த முன்னாள் முதல்வர் ராஜாஜி, ‘பூணுாலை கையில் பிடித்து கொண்டு தி.மு..,விற்கு ஓட்டளியுங்கள்என்று பாடுபட்டு, தி.மு.., முதன் முதலில் ஆட்சியில் அமருவதற்கு பூணுால் வெளியே வந்தததை மறுக்க முடியுமா?

திமுகவும், பிராமணர்களும்: நாராயணன் கூறியது “கடந்த 2021 சட்டசபை தேர்தலில் பிரஷாந்த் கிஷோர் பாண்டே என்ற பூணுால் அணிந்துள்ள பிரமாணர், தி.மு..,விற்கு வியூகம் அமைத்து கொடுத்து அக்கட்சியை வெற்றி பெற செய்த போதும், பூணுால் வெளியே வந்தததை மறக்கத் தான் முடியுமா? இந்த உண்மைகள் எல்லாம் தி.மு..,வினருக்கு நன்றாகவே தெரியும். ஆனால், ஆட்சியில் உள்ள தி.மு..,வை காக்காய் பிடித்து இயக்கம் நடத்துவோருக்கு தெரிந்திருக்க நியாயமில்லை. பூணுால் தொன்று தொட்டு வெளிவந்து கொண்டு தான் இருக்கிறது. தேவைப்படும் தருணங்களில் எல்லாம் தொடர்ந்து வெளிவரும். பூணுால் அறுப்பு மற்றும் இனப்படுகொலை போன்ற பிரசாரங்களை புறம்தள்ளி, தமிழக மக்களுக்கு தன் கடமைகளையும், சேவைகளையும் தொடர்ந்து பெருந்தன்மையாக செய்து வரும் பிராமண சமூகம் குறித்து தமிழக மக்கள் நன்கு அறிவர். சுப.வீரபாண்டியனின் அநாகரிக மற்றும் சட்டத்திற்கு புறம்பான செயல்பாட்டை சங்கம் வன்மையாக கண்டிக்கிறது. அவர் மீது முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்கள் வரிப்பணத்தில் அமைத்துள்ள குழுக்களில் இருந்து அவரை முதல்வர் கத்தரித்து விட வேண்டும்,” இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

© வேதபிரகாஷ்

23-10-2022.


[1]  இந்த வாதமே தேவையற்றது, இதுவரை பிராமணர்கள் தொடர்ந்து எல்லாமுறைகளிலும் தாக்கப் பட்டு வந்துள்ளனர், ஆனால், அரசியல் ரீதியில் யாரும், ஒன்றும் செய்யவில்லை, செய்து விட முடியவில்லை. அதனால் தான் அவர்கள் ஒதுங்கி போய், தங்களது வேலைகளை செய்து கொன்டிருக்கிறார்கள்.

[2] தினமலர், தி.மு.., ஆதரவு இயக்கங்களின் அநாகரிக, அராஜக அரசியல்: வானதி கடும் கண்டனம், Updated : அக் 23, 2022  10:36 |  Added : அக் 23, 2022  10:31

[3] https://www.dinamalar.com/news_detail.asp?id=3152818

[4] தினமலர், சுப.வீரபாண்டியனுக்குதாம்ப்ராஸ்கண்டனம், Added : அக் 24, 2022  06:10

[5] https://www.dinamalar.com/news_detail.asp?id=3153332

பத்ரிசேஷாத்ரி, அண்ணாவை முட்டாள் எனக் குறிப்பிட்டது, பூணூலை அறுப்பேன் என்று சுப.வீரபாண்டியன் பேசிது, தமிழ் இணைய கல்விக் கழக ஆலோசனை குழுவிலிருந்து நீக்கப் பட்டது! (1)

ஒக்ரோபர் 25, 2022

பத்ரி சேஷாத்ரி, அண்ணாவை முட்டாள் எனக் குறிப்பிட்டது, பூணூலை அறுப்பேன் என்று சுப.வீரபாண்டியன் பேசிது, தமிழ் இணைய கல்விக் கழக ஆலோசனை குழுவிலிருந்து நீக்கப் பட்டது! (1)

பத்ரி சேஷாத்ரி, அறிஞர் அண்ணாவை முட்டாள் எனக் குறிப்பிட்டு 17-10-2022 அன்று ட்விட்டரில் பதிவு செய்தது: குறிப்பிட்ட சாதியினரை அவதூறு செய்து, மிரட்டல் விடுத்து வன்முறையை தூண்டும் வகையில் பேசியுள்ள சுப.வீரபாண்டியனை கைது செய்ய தமிழக காவல்துறைக்கு முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிடுவாரா என பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி கேள்வி எழுப்பியுள்ளார்[1]. பத்ரி சேஷாத்ரி, அறிஞர் அண்ணாவை முட்டாள் எனக் குறிப்பிட்டு ட்விட்டரில் பதிவு செய்தது கடும் கண்டனங்களைக் கிளப்பிய நிலையில், அவர் தமிழ் இணைய கல்விக் கழக ஆலோசனை குழுவில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்[2]. இந்நிலையில், சுப.வீரபாண்டியன் பத்ரி சேஷாத்ரிக்கு கண்டனம் தெரிவித்துப் பேசுகையில், அவர் சார்ந்துள்ள சாதியினரை மிரட்டும் வகையில் பேசியதாக பாஜக நாராயணன் திருப்பதி கண்டனம் தெரிவித்துள்ளார்[3]. சிறுபான்மையினரான பிராமணர்களை மிரட்டும் வகையில் பேசிய சுப.வீரபாண்டியன் மீது முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்[4].

19-10-2022 அன்று தமிழ் இணைய கல்விக் கழக ஆலோசனை குழுவிலிருந்து நீக்கப் பட்டது: பதிப்பாளர் பத்ரி சேஷாத்திரி இடம்பெற்ற தமிழ் இணைய கல்விக் கழக ஆலோசனை குழு மாற்றியமைக்கப்பட்டிருக்கிறது[5]. இது தொடர்பான அரசாணை அக்டோபர் 19ஆம் தேதி வெளியான நிலையில், அதற்கு ஒருநாள் முன்பாகத்தான் 18-10-2022 அன்று பத்ரி சேஷாத்ரி அண்ணா தொடர்பாக சர்ச்சைக்குரிய கருத்துக்களை தமது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்[6]. பத்ரி சேஷாத்திரி கிழக்குப்பதிப்பகம் மூலம் பல புத்தகங்களை வெளியிட்டிருக்கிறார். தொலைக்காட்சி விவாதங்களில் அவர் அரசியல் ஆய்வாளராகவும் பங்கேற்று வருகிறார். வலதுசாரி சிந்தனை கொண்டவராக பொதுவெளியில் அறியப்படும் அவர், தமது ட்விட்டர் பக்கத்தில், அறிஞர் அண்ணாவின் இந்தி எதிர்ப்பு தொடர்பான கருத்துக்கள் அடங்கிய இடுகையை சமீபத்தில் வெளியிட்டிருந்தார். அதில் இடம்பெற்ற சில கருத்துக்கள் சர்ச்சையாக ஆளும் திமுகவினரால் கருதப்பட்டன.

டுவிட்டர் பதிவுகளும், செய்தி உருவாக்கமும்: பத்ரி சேஷாத்ரி நீக்கம் முன்னாள் தமிழக முதல்வர் அறிஞர் அண்ணாவை ட்விட்டரில் தரக்குறைவாக விமர்சித்த கிழக்கு பதிப்பக உரிமையாளர் பத்ரி சேஷாத்ரியை, தமிழ் இணைய கல்விக் கழக ஆலோசனை குழுவில் இருந்து நீக்கவேண்டும் என திமுகவினர் பலரும் கோரிக்கை விடுத்தனர்[7]. அதைத் தொடர்ந்து, தமிழ் இணைய கல்விக் கழக ஆலோசனைக் குழுவில் இருந்து பத்ரி சேஷாத்ரி நீக்கப்பட்டு, அக்குழுவை தமிழக அரசு மாற்றி அமைத்தது[8]. எனினும், திமுக எம்.பிக்கள் vs பத்ரி சேஷாத்ரி கருத்துகள் என சமூக வலைதளத்தில் அனல் பறந்தது. இன்றைக்கு, சமூக ஊடகப் பதிவுகள் செய்திகளாக மாற்றப் படுவதை கவனிக்கலாம். இவ்வாறு கிளப்பிவிடும் “செய்தி” ஓரிரு நாள், ஏதோ முக்கியமான விசயம் போல பேசுவார்கள், அலசுவார்கள், பிறகு அமைதியாகி விடுவார்கள். அதை மறந்தும் விடுவர்.

 சுப.வீரபாண்டியனின் வெறுப்புப் பேச்சு: சுப.வீ கொதிப்பு இந்நிலையில், திமுக மேடை ஒன்றில் பேசிய திராவிட இயக்க தமிழர் பேரவை தலைவர் சுப.வீரபாண்டியன், பத்ரி சேஷாத்ரியின் கருத்தைக் கண்டித்திருந்தார்[9]. தமிழகத்தில் ஒருபோதும் ஆரிய மாடலை நுழையவிடமாட்டோம், அண்ணா, கருணாநிதி பற்றி எவன் ஒருவன் தவறாக பேசினாலும் மரியாதை கொடுக்க முடியாது எனப் பேசியிருந்தார் சுப.வீரபாண்டியன்[10]. இந்த நிலையில், ‘பத்ரி சேஷாத்ரி என்பவன் அண்ணாதுரையை முட்டாள் என விமர்சிக்கிறான். இனிமேலும் அமைதியாக இருக்க முடியாது. ‘இதுநாள் வரை சட்டைக்குள் இருந்த பூணுால் மெல்ல மெல்ல வெளியே வருகிறது. கத்தரித்து விடுவோம் என்பதை மனதில் வைத்து கொள்ளுங்கள்.’வழக்கமாக யாரையும் அவன் என்று விமர்சிப்பதில்லை. இனிமேல், மரியாதை கொடுக்க முடியாதுஎன, பதிப்பாளர் பத்ரி சேஷாத்ரிக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்[11], திராவிட இயக்க தமிழர் பேரவை பொதுச் செயலர் சுப.வீரபாண்டியன். தி.மு.க., ஆதரவாளராக செயல்படும் இவர், தமிழக அரசு அமைத்துள்ள சமூக நீதி குழு உறுப்பினராகவும் உள்ளார்[12]. தமிழ் இணைய கல்விக் கழக ஆலோசனை குழுவில் இவரும் உறுப்பினராக உள்ளார் என்பது நோக்கத் தக்கது.

சுப்வீரபாண்டியனின் தாக்கம்: திராவிடத்துவவாதியாக, பெரியாரிஸவாதியாக, உலா வரும் இவர், திகவிலிருந்து, திமுக வரை, சென்னை பல்கலைக் கழக மேடைகளில் பேசுவது வழக்கமாக இருக்கிறது. இம்மாதத்தில் சென்னை பல்கலைக்கழகத்தில், சரித்திரத் துறை சார்பில் நடந்த செமினாருக்கு கனிமொழி, மற்றும் இவரும் வந்திருந்தார்கள். கருணானந்தம் ஏற்கெனவே திகவில் இருந்து கொண்டு, சரித்திரத் துறையில், கௌரவ விரிவுரையாளராகவும் பணியாற்றி வந்தார். ஜகதீசன், நாகநாதன் போன்றோரின் நண்பரும் ஆவார். ஆக, இவர்கள் எல்லோரும் பல்லாண்டுகளாக, தமது சித்தாந்தத்தில் ஊறி ஒன்றாக சேர்ந்து வேலை செய்து வருகின்றனர். தமிழக கல்வி, பாடதிட்டம், பாடமுறை, புத்தகங்கள் முதலியவற்றை வடிவமைத்தல், உருவாக்குதல் பள்ளி-கல்லூரிகளில் பாடம் எடுப்பது, விளக்குவது போன்றவற்றிலும் ஈடுபட்டு வருகிறார்கள். அந்நிலையில் தங்களது விசுவாசத்திற்கு ஏற்றபடி தான் பேசுவார்கள், வேலை செய்வார்கள். அத்தகைய ஒற்றுமை இந்துத்துவவாதிகளிடம், குறிப்பாக அரசியல் இந்துத்துவவாதிகளிடம் இல்லை.

பத்ரி சேஷாத்ரியை விமர்சிக்க சாதியை இழுத்து மிரட்டல் விடுத்துள்ள சுப.வீரபாண்டியனை கைது செய்வாரா முதல்வர்?: என பாஜக நாராயணன் திருப்பதி கேள்வி எழுப்பியுள்ளார். உங்களுக்கு உரிமை உண்டு இதுகுறித்து பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள அறிக்கையில், “பத்ரி சேஷாத்திரியை அரசு பொறுப்பில் நியமிப்பதும், நீக்குவதும் அரசின் உரிமை. அவர் யாரையாவது அநாகரீகமாகவோ, தரக்குறைவாகவோ பேசியிருந்தால் அவர் மீது நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு அதிகாரமும், கடமையும் உள்ளது. நேரு, இந்திரா காந்தி, இராஜாஜி, காமராஜர், எம்ஜிஆர், ஜெயலலிதா மற்றும் எண்ணற்ற தலைவர்களை அச்சில் ஏற்ற முடியாத தரக்குறைவான வார்த்தைகளால் விமர்சித்த கூட்டம் தான் இந்த திராவிடர் கழக கூட்டம். பிராமண சமுதாயத்தை இழிவாக அதே போல், தற்போதும் ஹிந்து மத கடவுள்களை, மத நம்பிக்கைகளை அநாகரீகமாக, தரக்குறைவாக, இழிவாக பேசிய, பேசிக்கொண்டிருக்கின்ற திராவிடர் கழக மற்றும் அதன் தோழமை கும்பல் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டிய பொறுப்பும், கடமையும் மாநில அரசுக்கு உள்ளது. ஆனால், பத்ரி சேஷாத்ரியை கண்டிக்கும் போர்வையில், திராவிடர் இயக்க தமிழர் பேரவையின் சுப.வீரபாண்டியன், பிராமண சமுதாயத்தை இழிவுபடுத்தும் வகையில் பேசியுள்ளதோடு, பூணூலை கத்தரித்து விடுவோம் என்று மிரட்டும் தொனியில் பேசியிருப்பது சிறுபான்மை சமூகமான பிராமண சமூகத்திற்கு விடப்பட்டு இருக்கும் அப்பட்டமான மிரட்டல்.

© வேதபிரகாஷ்

23-10-2022.


[1] தமிழ்.ஒன்.இந்தியா, பூணூலை அறுப்பேன் என்று பேசிய சுப.வீரபாண்டியனை கைது செய்வாரா முதல்வர்? – கொந்தளித்த பாஜக நாராயணன்!, By Vignesh Selvaraj, Updated: Saturday, October 22, 2022, 17:12 IST.

[2] https://tamil.oneindia.com/news/chennai/bjp-narayanan-thirupathy-has-questioned-whether-cm-stalin-will-arrest-suba-veerapandian-who-has-defa-481781.html

[3] தமிழ்.ஏசியாநெட்.நியூஸ், பூணூலை அறுப்பேன்.! கொந்தளித்த சுப.வீரபாண்டியன்.. கடுப்பான பாஜக , நாராயணன் திருப்பதி,Raghupati R; First Published Oct 22, 2022, 7:24 PM IST; Last Updated Oct 22, 2022, 7:24 PM IST.

[4] https://tamil.asianetnews.com/politics/auspicious-will-stalin-order-the-tamil-nadu-police-to-arrest-veerapandian-rk5qnn

[5] பிபிசி.தமிழ், அண்ணா பற்றிய சர்ச்சை ட்வீட்பத்ரி சேஷாத்ரி இடம்பெற்ற ஆலோசனை குழு மாற்றம்என்ன நடந்தது?, 20 அக்டோபர் 2022

[6] https://www.bbc.com/tamil/india-63326503

[7] தமிழ்.நியூஸ்.18, ட்விட்டரில் அண்ணா குறித்து அவதூறு கருத்து தெரிவித்த பத்ரி சேஷாத்ரி நீக்கம், News Desk, தமிழ்நாடு, 13:54 PM October 20, 2022.

[8] https://tamil.news18.com/videos/tamil-nadu/action-against-badri-seshadri-for-making-comments-about-anna-on-twitter-822178.html

[9] ஜீ.நியூஸ், பேரறிஞர் அண்ணா முட்டாள்பத்ரி சேஷாத்ரி போட்ட ட்வீட்ஒரே இரவில் தூக்கியடித்த அரசு!, Written by – க. விக்ரம் | Last Updated : Oct 20, 2022, 02:54 PM IST.

[10] https://zeenews.india.com/tamil/tamil-nadu/cn-annadurai-should-be-called-an-idiot-too-says-badri-seshadri-415837

[11] தமிழ்.வெப்.துனியா, அண்ணாவை அவமதித்து பேசிய பத்ரி சேஷாத்ரி..! – ஆலோசனை குழுவிலிருந்து நீக்கி நடவடிக்கை!, Written By Prasanth Karthick; Last Modified; வியாழன், 20 அக்டோபர் 2022 (16:17 IST)

[12] https://tamil.webdunia.com/article/regional-tamil-news/badri-sheshadri-removed-from-tn-education-advice-council-122102000059_1.html

திராவிடத் திருமணங்களும், தமிழர்களின் பிணக்குகளும், அரசியல்வாதிகளின் சுணக்கங்களும்

மே 28, 2010

திராவிடத் திருமணங்களும், தமிழர்களின் பிணக்குகளும்,அரசியல்வாதிகளின் சுணக்கங்களும்

சுயமரியாதை திருமணம்

எம்.ஜி.ஆரும், நானும் பிரியக்கூடாது என பாடுபட்டவர் : ஆர்.எம்.வீரப்பனுக்கு கருணாநிதி புகழாரம்

நன்றி-தினமலர்: செய்தி, படம்                           http://www.dinamalar.com/News_Detail.asp?Id=7673
சென்னை : “”எம்.ஜி.ஆருக்கும், எனக்கும் இடையே பிணக்கு விளைந்த போதெல்லாம், அதை சரி செய்ய பாடுபட்டவர் ஆர்.எம்.வீரப்பன்,” என்று தமிழக முதல்வர் கருணாநிதி கூறினார். முன்னாள் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன் – ராஜம்மாள் தம்பதியின் இளைய மகன் தங்கராஜுக்கும், கோவை தொழிலதிபர் மோகன் – மோகனா தம்பதியின் மகள் தாரிணிக்கும் சென்னையில் நேற்று திருமணம் நடந்தது.

விழாவுக்கு தலைமை வகித்து, திருமணத்தை நடத்தி வைத்து தமிழக முதல்வர் கருணாநிதி பேசியதாவது: எனக்கும், ஆர்.எம்.வீரப்பனுக்கும் உள்ள தொடர்பு நீண்ட காலத் தொடர்பு, மறைந்தும் மறையாத என் ஆருயிர் நண்பர் எம்.ஜி.ஆருடைய அணுக்கத் தொண்டர்களிலே ஒருவராக, அன்பு நண்பர்களில் ஒருவராக, அவசியப்பட்ட ஆலோசகர்களிலே ஒருவராக விளங்கியவர் வீரப்பன். “குடியரசு’ அலுவலகத்தில் 1945ம் ஆண்டு துணை ஆசிரியராக நான் இருந்த காலம் தொட்டு எனக்கும், இவருக்கும் நெருக்கமான நட்பு, அரும்பி மலர்ந்து இன்றைக்கும் மணம் வீசுகிற வகையில், அவரது இல்ல மண விழாவை நான் நடத்தி வைக்கவும், அவர் வரவேற்கவுமான சூழல் உருவாகியிருக்கிறது.

இந்த மேடையில் எனக்கு முன் பேசியவர்கள், எங்களுக்குள் என்றும் பிணக்கு ஏற்பட்டதில்லை என்று இங்கே சொன்னார்கள். இவர் என்னை எதிர்ப்பதாகக் காட்டிக் கொண்ட அந்தக் காலத்தில் கூட என்னிடம், “கள்ளக் காதல்’ கொண்டவர். தி.மு.க.,வுக்கும், எம்.ஜி.ஆர்., தலைமையில் இயங்கிய அ.தி.மு.க.,வுக்கும் இடையே சில பிரச்னைகள் தோன்றும் போதெல்லாம், இவரிடமிருந்து எனக்கு ஒரு ரகசிய கடிதம் வரும். எனக்கும், எம்.ஜி.ஆருக்கும் இடையே ஒரு பிரிவு ஏற்படக்கூடிய ஒரு சூழல் 1971ம் ஆண்டில் ஏற்பட்ட போது, வீரப்பன் என் இல்லத்திற்கு வந்து ஒரு மணி நேரத்திற்கு மேலாக, “அந்தச் சூழ்நிலை உருவாகக்கூடாது; நீங்கள் இருவரும் பிரிந்து விடக்கூடாது; ஒன்றாக இருந்து தான் இயங்க வேண்டும். பிரிக்கிற சில பேர் யார் என்பது எங்களுக்குத் தெரியும். நீங்கள் ஒன்றுபட்டு பணியாற்றுங்கள்’ என்று கண்ணீர் கலந்து தன் கவலையைத் தெரிவித்தவர்களில் மிக முக்கியமானவர். பல நேரங்களில் எம்.ஜி.ஆருக்கும், எனக்கும் அல்லது தி.மு.க.,விற்கும் இடையே பிணக்கு விளைந்த போதெல்லாம், அதை சரி செய்ய பாடுபட்டவர் ஆர்.எம்.வீரப்பன். வீரப்பன் என் நீண்ட கால நண்பர் என்பதால் அவருக்கு அந்தக் கவலை இருந்தது.

மேடையில் திருநாவுக்கரசு பேசும் போது, “ஆர்.எம்.வீரப்பனுக்கு எம்.எல்.சி., பதவி கொடுங்கள்’ என்று சொன்னார். பதவிகளை பல பேருக்கு கொடுக்கிற இடத்தில் இருந்தவர் வீரப்பன். அவர் பதவிகளை பகிர்ந்து எடுத்துக்கொள்ள வேண்டியவரே தவிர, கேட்டு பெற்றுக்கொள்ள வேண்டியவர் அல்ல. அந்தளவிற்கு இந்த இயக்கத்தின் ஆணிவேராக, அடிவேராக, இயக்கத்தை வளர்க்கின்ற வலுவான விழுதுகளிலே ஒருவராக அன்றைக்கும் இருந்தார்; இன்றைக்கும் இருக்கிறார். இவரை நான் என்றைக்கும் மறக்க மாட்டேன்.

நாள் முழுவதும் அளப்பரிய பணிகள், அதற்கிடையே கோவைக்கு மாநாட்டு பணிகளைப் பற்றி ஆய்வு செய்யச் செல்கிறோம். அங்கிருந்து ஊட்டிக்குச் சென்று ஓரிரு நாட்கள் ஓய்வு பெறலாமே என்று எண்ணினேன். ஆனால், அங்கு சென்ற எனக்கு இந்த நினைவு வந்தது. நினைவு சாட்டையாக விழுந்தது. “வீரப்பன் இல்லத் திருமணத்திற்கு செல்லாமல் ஓய்வு ஒரு கேடா உனக்கு’ என்று எனக்கு நானே கேட்டுக் கொண்டு இங்கே வந்துள்ளேன் என்றால், அது நட்பின் ஆழத்தை, நட்பின் உயர்வை உணர்த்தக்கூடிய ஒன்று என்பதை உங்களுக்கு எடுத்துச் சொல்லி, அத்தகைய ஒரு உத்தம நண்பர் என்றைக்கும் இந்த இயக்கத்தின் தூணாக விளங்கிக் கொண்டிருப்பவர். அவரது இல்லத் திருமணத்தில் பங்கேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இவ்வாறு கருணாநிதி பேசினார்.

விழாவில், நிதி அமைச்சர் அன்பழகன், துணை முதல்வர் ஸ்டாலின் மற்றும் மத்திய, மாநில அமைச்சர்கள் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக ஆர்.எம்.வீரப்பன் அனைவரையும் வரவேற்றார். மத்திய இணை அமைச்சர் ஜெகத்ரட்சகன் நன்றி கூறினார்.

திராவிட புரோகிதர்கள் நடத்திவரும் திருமணங்கள்!

பிப்ரவரி 2, 2010

திராவிட புரோகிதர்கள் நடத்திவரும் திருமணங்கள்!

சுயமரியாதை உள்ளவர்கள் நடத்தும் திருமணமே சுயமரியாதைத் திருமணம்
ந.ம.மதன்-த.ஆர்த்திகா சுயமரியாதைத் திருமண விழாவில் தமிழர் தலைவர் உரை

http://www.viduthalai.com/20100607/news12.html

சென்னை, ஜூன் 7_ சுயமரியாதைத் திருமணம் என்பது சுயமரியாதை உள்ளவர்கள் நடத்தும் விழா என்று குறிப்பிட்டார் திரா-விடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள்.

தென்சென்னை மாவட்ட திராவிடர் கழக அமைப்-பாளர் மு.ந.. மதியழகன் _ தமிழ்மதி ஆகியோரின் மகன் ந..ம. மதன் பி.இ.,எம்.பி.ஏ., சோலையார்பேட்டை சி.தங்கவேல் _ தேவி ஆகியோரின் மகள் த. ஆர்த்திகா பி.டெக்., ஆகியோரின் சுயமரியாதைத் திருமணம் 6.6.2010 ஞாயிறு காலை 11 மணிக்கு சென்னை நியூ உட்லண்ட்ஸ் ஓட்டலில் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

மணமகன் தந்தையார் மு.ந.மதியழகன் விழாத் தலைவரை முன்மொழிந்து உரையாற்றினார்.

திருப்பத்தூர் மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் கே.சி. எழிலரசன் அனைவரையும் வரவேற்று உரை-யாற்றினார்.

கழகத் தோழர் மதியழகன் தந்தையார் சுய-மரியா-தைச் சுடரொளி ஆசிரியர் நடராசன் அவர்களுக்கும், புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்களுக்கும் இருந்த தொடர்பையும், நட்பையும் எடுத்துக் காட்டிப் பேசினார்.

பாராட்டுரை

மணமக்களைப் பாராட்டி, வாழ்த்தி நீதியரசர் அரிகிருஷ்ணன் உரையாற்றுகையில் சுயமரியாதைத் திருமணம் சட்டப்படி செல்லாது என்று இருந்த நிலை-யிலும் கூட தந்தை பெரியார் கொள்கையை ஏற்று நாட்டில் ஏராளமான எண்ணிக்கையில் சுயமரியாதைத் திருமணங்கள் நடைபெற்றதைப் பெருமையாகச் சுட்டிக் காட்டி மணமக்களை வாழ்த்திப் பேசினார்.

டாக்டர் ருத்திரன்

பிரபல உளவியல் மருத்துவர் டாக்டர் ருத்திரன் அவர்கள் தனது திருமணமும் சரி, தம் மகனின் திருமணமும் சரி சுயமரியாதைத் திருமணமாக நடந்ததை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொண்டார்.

சுயமரியாதைத் திருமணத்தில் பொய் இல்லை: போலித்தனம் இல்லை. வாழ்க்கை ஆரம்பமே இந்தச் சிறப்புடன் துவங்குவது சுயமரியாதைத் திருமணத்-தில்தான் என்று ரத்தினச் சுருக்கமாகக் குறிப்பிட்டார்.

கலி.பூங்குன்றன்

திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் கலி. பூங்-குன்றன் அவர்கள் தன்னுரையில் குறிப்பிட்டதாவது:

தந்தை பெரியாரின் கடவுள் மறுப்பு _ மத எதிர்ப்பு, சாஸ்திர புராணங்கள் எரிப்பு என்பதே தமிழர்களின் இன இழிவு ஒழிப்பிலிருந்து தொடங்குகிறது என்று குறிப்பிட்டார்.

தொடக்கத்தில் பார்ப்பனப் புரோகிதர்கள் பார்ப்பனர்களுக்கும், சத்திரியர்களுக்கு மட்டுமே திருமணங்களை நடத்தினார்கள். திருமலை நாயக்கன் காலத்தில் வட மாநிலங்களிலிருந்து ஏராளமான பார்ப்பனர்கள் தமிழ் நாட்டுக்கு வந்து சேர்ந்தனர். இவர்களுக்கு வேலை வாய்ப்பு இல்லாத ஒரு நிலை ஏற்பட்டது.

அப்பொழுதுதான் திருமலை நாயக்க மன்னனின் முன்னிலையில் கூடி, வைசியர்களுக்கும், சூத்திரர்-களுக்கும் கூட பார்ப்பனர்கள் திருமணங்களை நடத்தி வைக்கலாம் என்ற முறை மேற்கொள்ளப்பட்டது.

இந்தப் பார்ப்பனப் புரோகிதர்கள் சூத்திரர்களுக்கு மந்திரங்களைச் சொல்லி கல்யாணத்தை நடத்தி வைக்கும்போது மறக்காமல் ஒரு முகூர்த்த நாழிகைக்கு மணமகனுக்கு பூணூல் அணிவித்து, சடங்குகள் முடிந்த பின் மறக்காமல் அந்தப் பூணூலைக் கழற்றி தண்ணீரில் எறிந்துவிடுவார்கள் என்ற வரலாற்று உண்மையையும் எடுத்துக் கூறினார்.

பொருளாளர் கோ.சாமிதுரை

திராவிடர் கழகப் பொருளாளர் வழக்குரைஞர் கோ.சாமிதுரை அவர்கள் தன்னுரையில், சுயமரி-யா-தைக் கொள்கைகளைக் கடைப்பிடிப்பவர்களுக்கு வாழ்க்கையில் தோல்வி கிடையாது என்று அழுத்த-மாகக் குறிப்பிட்டார்.

சுயமரியாதைக்காரர்கள் நீண்ட நாள் வாழ்வதற்குக் காரணம் அவர்கள் சரியான -_ பகுத்தறிவு ரீதியான வாழ்க்கை முறையே என்றும் கூறினார்.

திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரிப் பேராசிரியர் அருள்தந்தை மரியா மணமக்களை வாழ்த்திப் பேசினார்.

தமிழர் தலைவர் கி.வீரமணி

சுயமரியாதைத் திருமணத்திற்குத் தலைமை வகித்த திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றுகையில் குறிப்பிட்டதாவது:

தோழர் மதியழகன் குடும்பம் பாரம்பரியமான கழகக் குடும்பமாகும். தோழர் கொள்கையில் மிகவும் பிடிவாதக்காரர் _ பெரியார் திடலோடு நெருக்கமாக உறவு கொண்டவர்.

கழகத் தொடர்பான செய்திகளையும், ஆதாரங்களையும் ஆவணமாகத் தொகுத்து வைக்கக் கூடிய ஆற்றல் மிக்கவர்.

மணமகன் பி.இ. படிப்போடு எம்.பி.ஏ. பட்டமும் பெற்றிருக்கிறார். மணமகள் பி.டெக். படித்திருக்கிறார்.

இந்த மாற்றங்கள் எல்லாம் வருவதற்கு உழைத்தவர் தந்தை பெரியார் _ இந்த இயக்கம் என்பதை யாரும் மறுக்க முடியாது.

இங்கு பேசிய நீதிபதி அரிகிருஷ்ணன் அவர்கள் சுயமரியாதை முறையில் திருமணம் செய்து கொள்பவர்களுக்கு மட்டும்தான் சுயமரியாதை இருக்கிறதா _ மற்றவர்களுக்குக் கிடையாதா என்று சிலர் கேட்டதாகக் குறிப்பிட்டார்.

உண்மைதான். சுயமரியாதை முறையில் திருமணம் செய்து கொள்பவர்களுக்குத்தான் சுயமரியாதை உண்டு _ இந்த முறையில் திருமணம் செய்துகொள்ளாதவர் களுக்கு சுயமரியாதை கிடையாது என்ற அழுத்தமாகச் சொல்லுவதில் எங்களுக்கு ஒன்றும் தயக்கம் இல்லை (பலத்த கைதட்டல்).

இப்படிக் கூறுவது யாரையும் புண்படுத்த அல்ல: மாறாகப் பண்படுத்தத்தான்.

சுயமரியாதைத் திருமுண முறையில் ஒருவர் எஜமானர் அல்ல -_ இன்னொருவர் அடிமையும் அல்ல _ சமமானவர்கள் என்பதே இதன் தத்துவம்.

வைதீக முறையில் இதற்கு என்ன பெயர்–? தாரா முகூர்த்தம். அப்படியென்றால் பெண்ணைத் தாரை வார்த்துக் கொடுப்பதாகும். இன்னொரு பெயர் கன்னிகாதானம் என்பதாகும். பெண்ணைத் தானமாக _ பண்டமாக நினைத்து இன்னொருவருக்குக் கொடுப்பதாகும்.

வரதட்சணை என்ற சொல்லேகூட தமிழ் கிடையாது. தமிழர்களிடத்தில் இந்த ஏற்றத் தாழ்வு இல்லாதிருந்தது. ஆரியம் புகுந்ததால் பெண்ணை சந்தைப் பொருளாக்கி விட்டனர்.

சந்தையில் மாட்டை விற்கும்போதுகூட பணத்தை வாங்கிக் கொண்டு மாட்டைக் கொடுப்பார்கள். இந்த வரதட்சணை சந்தையில் பணத்தையும் கொடுத்து பொருளையும் கொடுத்து, பெண்ணையும் கொடுக்கிறார்கள்.

நெருப்புக்கும் நமக்கும் சம்பந்தம் உண்டா?

பார்ப்பனர்களை வைத்துக் கல்யாணம் நடத்தினால் தீக்குண்டம் வைப்பார்கள். அதனைச் சுற்றி ஏழு அடி எடுத்து வைக்க வேண்டும். அப்படி வைக்காவிட்டால் அந்தக் கல்யாணம் செல்லாது என்கிறார்கள். யார் எண்ணிப் பார்த்துக் கொண்டே இருக்கிறார்கள்?

நெருப்பு என்பது பார்ப்பனர்கள் குளிர் நாடுகளில் இருந்து வந்ததால் குளிர் காய்வதற்கு அவர்களுக்குத் தேவைப்பட்டது. அவர்கள் நடத்தும் சடங்குகளில் நெருப்பை முக்கியப்படுத்துவார்கள். நமக்கும் இந்தச் சடங்களுக்கும் சம்பந்தமே கிடையாது.

இதுகுறித்து தமிழறிஞர் டாக்டர் இராசமாணிக்கனார் போன்றவர்கள் பல வரலாற்றுத் தகவல்களை ஆய்வுக் கண்ணோட்டத்தோடு எழுதி இருக்கிறார்கள்.

தமிழர் திருமணத்தில் தாலி என்பதே கிடையாது என்று நிறுவியுள்ளார்.

தமிழர் தொன்மை வாய்ந்தவர் என்பதும், அவர்தம் தமிழ் மொழி வடமொழியிலிருந்து வேறுபட்டது என்பதும் ஆரியர்க்கு முற்பட்ட இந்தியருள் தமிழர் சிறந்தவர் என்பதும், பிறவும் மொழி ஆராய்ச்சியாலும், புதை பொருள்களாலும் இந்திய வரலாற்றிலும், பிறவற்றாலும் உறுதிப்பட்டுள்ள செய்திகள் ஆகும். எனவே தமிழர் மொழி வேறு, கலை வேறு, வாழ்க்கை முறை வேறு _ சுருங்கக் கூறின், தமிழர் ஆரியரின் (வடமொழியாளரின்) முற்றும் வேறுபட்டவர் என்பது ஆராய்ச்சியாற் போந்த உண்மை! பண்டைச் சங்க இலக்கியங்களைக் கொண்டு ஆராயினும், இவ்வுண்மை உணர்தல் கூடும். உண்மை இங்ஙனம் இருப்ப, இடைக் காலத்தே தமிழ் மரபுக்கு மாறான வாழ்க்கை முறை தமிழரிடை புகுந்துவிட்டது; தமிழர் பழக்க வழக்கங்கள் மாறின; மணமுறை மாறிவிட்டது; பிற சடங்குகள் பெருகின; இவற்றின் பயனாக இன்றுள்ள தமிழர்கள் பெயரளவில் தமிழர்களாக இருக்கின்றனரே அல்லாமல் மெய்த் தமிழராக -_ சங்ககாலத் தமிழர்தம் வழித் தோன்றல்களாக இல்லை என்பதை அறிய _ தமிழர் தலைகுனிய வேண்டுபவராக உளர்.

நம்மிடையே நடைபெறும் இக்காலத் திருமண முறை நமது பண்டைத் தமிழர் மரபுக்கு முற்றும் மாறானதாகக் கருதப்படும் என்று டாக்டர் இராசமாணிக்கனார் கூறியுள்ளார்.

பார்ப்பனரை அழைத்துத் திருமணத்தை நடத்தும் நிலை பிற்காலத்தில் வந்தது. தமிழர் வீட்டுத் திருமணத்தில் தமிழுக்கு இடமில்லை; சமஸ்கிருதம் குடிபுகுந்தது.

பொருள் புரியாமல் புரோகிதர்களும் மந்திரங்களை ஓதினார்கள்.

ஸோம : ப்ரதமோ விவிதே

கந்தர்வோ விவத உத்தர:

த்ருதியோ அக்னிஷ்ட பதி:

துரியிஸ்தே மநுஷ்யஜா

கீழாத்தூர் சீனிவாச ஆச்சார்யார் என்ற பார்ப்பனர் விவாஹ மந்திரார்த்த போதினி என்ற நூல் ஒன்றினை எழுதியுள்ளார். தி லிட்டில் ஃப்ளவர் கம்பெனி அதனை வெளியிட்டுள்ளது.

இந்த மந்திரத்துக்கு பொருள் என்ன? இந்த மணப் பெண்ணின் முதல் கணவன் ஸோமன்; இரண்டாவது கணவன் கந்தர்வன்; மூன்றாவது கணவன் அக்னி. நான்காவது கணவன்தான் மனித ஜாதியில் பிறந்தவன் என்று இந்த மந்திரத்தில் கூறப்படுகிறது. திருமணம் ஆவதற்கு முன் நான்கு பேருக்கு மனைவி என்பது தமிழர் வாழ்வு முறைக்கு உகந்ததுதானா?

நாவலர் சோமசுந்தர பாரதியார் கலந்துகொண்ட ஒரு திருமணத்தில் ஒரு பார்ப்பனப் புரோகிதர் கருமாதி மந்திரத்தைக் கல்யாண வீட்டில் ஓதிக்கொண்டு இருந்ததைக் கண்டுபிடித்து எதிர்த்துக் குரல் கொடுத்த நிலையும் உண்டு.

இந்த மணமக்களைப் பொறுத்தவரை சுயமரியாதைக் கொள்கையில் பூத்த பகுத்தறிவு மலர்கள். மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாகவும் வாழக் கூடியவர்கள்.

முதலில் தங்கள் பெற்றோர்களுக்கு நன்றியும் பாசமும் காட்ட வேண்டும். முதல் வட்டம் என்பது உங்கள் பெற்றோர்களைப் பாதுகாப்பது பாசம் காட்டுவது _ அவர்களுக்கு நன்றியுடன் நடந்து கொள்வது; இரண்டாவது வட்டம் என்பது உங்களுக்கு யார் யாரெல்லாம் உதவி செய்தார்களோ, அவர்களுக் கெல்லாம் நன்றி காட்டுவது; மூன்றாவது வட்டம் _ தான் உண்டு, தன் குடும்பம் உண்டு, தன் பெண்டு, தன் சுற்றம் என்கிற கடுகு உள்ளத்தோடு நடந்து கொள்ளாமல் தொண்டறம் என்ற வட்டம் _ மற்றவர்களுக்குத் தொண்டு செய்வது, உதவி செய்வதாகும்.

சமுதாயம் உங்களுக்குக் கொடுத்ததை நீங்கள் சமுதாயத்துக்குத் திருப்பிக் கொடுக்க வேண்டும் என்று கூறினார். மணமக்களை உறுதிமொழி கூறச்செய்து சுயமரியாதைத் திருமணத்தை தமிழர் தலைவர் நிறைவேற்றி வைத்தார். தாலி தவிர்க்கப்பட்டது.

இறுதியில் திருப்பத்துர் மு.ந.அன்பழகன் நன்றி கூறிட சிறப்பான மதிய விருந்துடன் விழா வெகு நேர்த்தியாக நடந்தேறியது. உற்றார், உறவினர்கள், கழகக் குடும்பத்தினர் பல்துறைகளைச் சேர்ந்த பெருமக்கள் ஏராளமானவர்கள் வருகை தந்திருந்தனர்.

http://www.viduthalai.com/20100607/news11.html

கொரட்டூர் வை. செயபாலன் _ செ. தேன்மொழி ஆகியோரின் மகன் செ. சந்திரகுமாருக்கும், இ. மகேசுவரன் _ நந்தினி ஆகியோரின் மகள் எம். சொப்னாவிற்கும் வாழ்க்கை இணை நல ஒப்பந்த விழாவினை தமிழர் தலைவர் கி. வீரமணி நடத்தி வைத்தார். உடன் கழகப் பொருளாளர் வழக்கறிஞர் கோ. சாமிதுரை, லெப்டினன்ட் கர்னல் துரைராமன் (ஓய்வு) திருமதி மோகனா வீரமணி, கோ. செல்வமணி, தேசிங்குராஜன் உள்ளனர் (7.6.2010).

தமிழர் தலைவர் நடத்தி வைத்த மணவிழாக்கள்

திரைப்பட இயக்குநர் எஸ்.பி. ஜனநாதனுக்கு தமிழர் தலைவர் பொன்னாடை அணிவித்தார். வி. சந்திரசேகரன்_ சி. உமாமகேசுவரி ஆகியோரது வாழ்க்கை இணைநல ஏற்பு விழாவினை தமிழர் தலைவர் நடத்தி வைத்தார் (திருவாரூர், பூந்தோட்டம், 30.1.2010).

ஆ. பெரியார் அரசு _ ஈ. ஜோதி ஆகியோரது வாழ்க்கை இணைநல ஏற்பு விழாவினை தமிழர் தலைவர் நடத்தி வைத்தார். உடன் மதுரை மாநகர மேயர் தேன்மொழி கோபிநாதன், நன்மாறன் எம்.எல்.ஏ., மற்றும் முக்கிய பிரமுகர்கள் உள்ளனர் (மதுரை, 31.1.2010).

மு. ரமேசு _ இ. சிவசங்கரி ஆகியோரது வாழ்க்கை இணைநல ஏற்பு விழாவினை தமிழர் தலைவர் நடத்தி வைத்தார். சட்டமன்ற உறுப்பினர்கள், தொழிலதிபர்கள் உடன் உள்ளனர் (மதுரை, 31.1.2010).

ரா. சுதேஷ்பாபு _ ஸ்வீட்டி ஏஞ்சலின் பிளாரன்ஸ் ஆகியோரின் மண விழாவினை துணை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நடத்தி வைத்தார். தமிழர் தலைவர் கி. வீரமணி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்துரை வழங்கினர் (சென்னை, 1.02.2010).

ஆத்திகத்தைத் திருடும் நாத்திகம்!

திசெம்பர் 16, 2009

ஆத்திகத்தைத் திருடும் நாத்திகம்!

“பகுத்தறிவு” என்ற வார்த்தையினை உபயோகித்துவிட்டால், எல்லாமே தமக்குத் தான் சொந்தம் என்ற அஹங்கார-ஆணவத்திமிர் சிததாந்தத்தில் செயல்படுகின்றனர் திராவிட நாத்திகர், இந்து-விரோதவாதிகள்!

உண்மையில் அத்தகைய மனப்பாங்குதான் “பாஸிஸம்” என்பது, ஆனால் அவர்கள் வசதியாக மற்றவர்களைக் குறிப்பாக தமது சித்தாந்தத்தை விமர்சிக்கும் அல்லது அவர்களது போலித்தனத்தை எடுத்துக் காட்டுபவர்களின் மீது அந்த வார்த்தையை உபயோகிப்பர்!

தன்னம்பிக்கைக்குத்-தூண்டா விளக்கு!

http://viduthalai.periyar.org.in/20091215/news13.html

‘‘மனமே ரிலாக்ஸ் ப்ளீஸ்’’ போன்ற நூல்களை மதவாதிகளே எழுதுவதிலிருந்து கடவுள் நம்பிக்கை யோடு, தனி மனித மனப் பயிற்சியும் அவசியம் என்று அவர்களே நம்புவதாகத் தெரிகிறது. அப்படியெனில் பகுத்தறிவுவாதிகளும் தங்கள் கண்ணோட்டத் திலிருந்து இத்தகைய நூல்களை எழுதுவது நல்லது. தி.க.தலைவர் வீரமணி அவர்கள் இந்த வகையில் ஒரு நல்ல தொடக்கத்தைத் தந்திருக்கிறார். வாழ்வியல் சிந்தனைகள் என்கிற அவரின் நூல், வாழ்வை எதிர்கொள்ளும் மனத் தெம்பையும் உளவியல் நுணுக்கங்களையும் கூறுகிறது.’’  (‘செம்மலர்’, ஏப்ரல் 2004)

நாத்திகர்கள் மனித சமூகத்திற்கு எத்தகைய நல் வழிகளைக் காட்டுகின்றனர், – உலகில் ஒவ்வொரு நாளும் பூக்கும் பல்வேறு மலர்களின் மணங்களைக் கொண்டு வந்து கொடுக்கிறார்கள் என்பது மிகவும் முக்கியம். கடவுளை மற_மனிதனை நினை என்றார் தந்தை பெரியார். மனிதனை நினைக்கும்போது, அவன் மகத்தான-வனாக உருவாவதற்குத் தேவையான தன்னம்பிக்கை, பகுத்தறிவு இவற்றுடன் நாட்டில் நிறைந்து நிற்கும் தகவல்கள், பொருள்களும் அவன் கவனத்திற்குக் கொண்டு வரப்படுவது அவசியமாகும். பல்லாயிரக்கணக்கான மக்கள் தெரிந்து கொள்ள, ஏன் கடைப்பிடிக்க, ஒரு மனிதன் பல நூல்களைப் படிக்க வேண்டி-யிருக்கிறது; படித்தவற்றை அசை போட்டு சாறு பிழிந்து கொடுக்க வேண்டியுள்ளது. அந்த மகத்தான தொண்டற அறிவுப் பணியைத்தான் திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் செய்திருக்கிறார்.

‘செம்மலர்’ சொல்லுவது போல பகுத்தறிவுவாதிகளின் பணிகளில் இதுவும் முக்கியமான கூறே! வாழ்வியல் சிந்தனைகள் வரிசையில் இதுவரை அய்ந்து தொகுதிகள் வெளிவந்துள்ளன. மிகப் பெரிய அளவில் இவ்வரிசைக்கு வரவேற்பு கிடைத்தது. எல்லைகளைத் தாண்டி தமிழ் படிக்கத் தெரிந்த பன்னாட்டு மக்கள் மத்தியில் பரிமளம் வீசுகிறது. இப்பொழுது ஆறாவது தொகுப்பு தந்தை பெரியார் நினைவு நாளில் வெளிவர இருக்கிறது. அதையும் சேர்த்தால் இவ்வரிசையில் 500 கட்டுரைகள் அணிசெய்கின்றன.

இந்த ஆறாவது தொகுதியைப் பொறுத்தவரை இதன் உள்ளடக்கம் இவ்வாறு அமையும்.

மனிதம்_2;  உழைப்பு-_4; திறமை_1; தொண்டறம்_5; தன்னம்பிக்கை_9; தலைமைத் தத்துவம்_-1; சமூக சீர்திருத்தம்_1; சிந்தனைக்கு_10; மூடநம்பிக்கை_-1; வாசிப்பு_5; சுற்றுச்சூழல்_1; தொலைக்காட்சி_1; பண்பாடு_-6; சுயநலம்_1; குழந்தைகள்_4; பெற்றோர்_3; முதுமை_1; ஆசிரியர்_2; உடல்நலம்_13; உணவு முறை_-3; அண்ணா (மனிதநேயம்)_-1

திராவிட இயக்க எழுத்தாளர்களில் இத்-திசையில் தன் எழுதுகோலை ஓடவிட்டவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்களே! பெரியார் என்றாலே கடவுள் மறுப்பாளர் என்ற ஓர் எண்ணத்தில் மருண்டோடுபவர்கள் இந்த வாழ்வியல் சிந்தனைகள் மூலம் நெருங்கி வருகிறார்கள் என்பதுதான் உண்மை.

‘ஆனந்தவிகடன்’ மதிப்புரையில் கூறியிருந்தது போல மூடநம்பிக்கைகளை எதிர்த்து எழுதியவர் இப்பொழுது தன்னம்பிக்கை பற்றியும் எழுதுகிறார் என்பது கவனிக்கத் தக்கதாகும். நமது கருத்துக்குத் தொடர்பேயில்லாத வாசகர் ஒருவர் எழுதியுள்ளார். ‘‘நான் பெரியாரைப் பார்த்ததில்லை. இந்தக் கொள்கை-யைப் பற்றி நிறைய விடுதலை மூலமாகப் படிக்கிறேன். இப்பொழுது தமிழர் தலைவர் அய்யா எழுதிவரும் வாழ்வியல் சிந்தனை என்ற பகுதி நமக்காகவே எழுதப்-பட்டதாகும். பாதிப்பு இல்லாதவர் யாருமே இருக்க முடியாது. நமக்காகவே எழுதப்பட்டது போல் இருக்கும். விடுதலை நாளிதழைப் படித்தால் நிறைய கருத்துகள் தெரிந்து கொள்ள முடிகிறது’’- _ விஜயா.

விடுதலைக்குள் நுழைய தந்தை பெரியார் கொள்-கைக்குள் கால் பதிக்க தமிழர் தலைவரின் வாழ்வியல் சிந்தனை நுழைவு வாயிலாக இருந்து வருகிறது. குழந்தை வளர்ப்புக்குத் தாய்ப்பாலையும், முதுமைக்கு ஊன்றுகோலையும் தரும் கட்டுரைகள் உண்டு.  குழந்தைகள் நலம், குடும்ப நலம், பெண்ணுரிமை, பொது சமையற்கூடம், ஆண்களுக்கு நிகராக பெண்-களுக்கும் அனைத்து உரிமைகள், பெண்கள் உடையில் மாற்றம், பெண்கள் கிராப் வெட்டிக் கொள்ளுதல் என்ற தந்தை பெரியார் தெரிவித்த கருத்துகள் வாழ்வியல் சிந்தனையின் தடத்தில் பதிக்கப்பட்ட மைல் கற்கள். அந்த அடிப்படையின் விரிவாக்கச் சிந்தனைகளே இவை! கால ஓட்டம், அறிவியல் வளர்ச்சி, ஊடகப் புரட்சி இவற்றையெல்லாம் வயப்படுத்தி, உள்வாங்கி, நாத்திகச் சிந்தனையின் செழுமையை முப்போகமாக விளைவித்துத் தந்துள்ளார் கருத்துக் கனலாம் விடுதலை ஆசிரியர்.

பகவானை சரணடைக!- பரம மண்டலம் போகலாம்;- சடங்குகளைச் செய்க! சொர்க்க சாம்ராஜ்ஜியம் கிடைக்கும்; நேர்த்திக் கடனாற்று, நினைத்தவை நடக்கும் என்ற மூடயிருள் சூழ்ந்த சமூக அமைப்பில் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் சிந்தனைகளின் அடிப்படையில் புத்துலகுக்கு அழைத்துச் செல்லும் மகிழ்ச்சிக்கான திறவு கோல்தான் இந்த வாழ்வியல் சிந்தனை. தந்தை பெரியார் நினைவு நாளில் (டிசம்பர் 24) தலைநகரில் வெளியிடப்படுகிறது.

மனித வாழ்வு மாயையல்ல; -மகத்தானது_ – மகிழ்ச்-சிக்குரியது! அடுத்த ஜென்மம் என்பது முடிச்சுமாறிகளின் பேச்சு! – பிறந்த இந்த வாழ்வைச் சுவைத்துப்பார்! உலகில் எத்தனை எத்தனைச் செல்வங்கள், இன்பங்கள் – உனக்காகக் காத்துக் கிடக்கின்றன! உழைப்பாய் _- உண்பாய்_- உனக்கும் அதில் உரிமையுண்டு என்று கூறிக் கைப்பிடித்து அழைத்துச் செல்லும் தன்னம்பிக்கையின் தூண்டா விளக்கு இது! திருமணத்திற்குப் பரிசளியுங்கள்; உங்கள் உறவினர்களுக்குத் தாருங்கள். நண்பர்களுக்குக் கொடுத்துப் படிக்கச் செய்யுங்கள். மிரண்டு ஓடியவர்கள் நெருங்கி வருவார்கள்.  தந்தை பெரியார் படைக்க விரும்பிய அந்தத் திரண்ட_ மகிழ்ச்சி பூத்துக் குலுங்கும் அறிவியல் உலகைத் தெரிந்து கொள்வார்கள்.

வீரமணி நாத்திகப் புரோகிதர் ஆனார்!

திசெம்பர் 13, 2009

டிச.14 கடலூர் மணவிழா தமிழர் தலைவர் தலைமை வகிக்கிறார்

http://viduthalai.periyar.org.in/20091213/news33.html

வாழ்க்கை இணை ஏற்பு விழா நாள்: 14.12.2009 திங்கள்கிழமை காலை 9 மணி, கடலூர் மாவட்டம், சுப்பராயலு நகர், தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்களின் அண்ணன் கடலூர் கி.கோவிந்த-ராசன்_பத்மாவதி ஆகியோரின் பெயரனும் கி.கோ.செல்வமணி_செல்வராணி ஆகியோரின் மகனுமாகிய செல்வன்: செ.அருண்குமார்; விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டை வட்டம், அதையூர் கே.இளங்கோவன்_பானுமதி ஆகியோரின் செல்வி: இ.சக்திதேவி,

இடம்: கடலூர், திவான் பகதூர் சுப்புராயலு (ரெட்டியார்) திருமண-மண்டபம்,

தலைமை: தமிழர் தலைவர் கி.வீரமணி, தலைவர் திராவிடர் கழகம்,

வரவேற்புரை: வீ.அன்புராஜ், திராவிடர் கழக தலைமை நிலையச் செயலாளர்,

முன்னிலை: கோ.அய்யப்பன், கடலூர் சட்டமன்ற உறுப்பினர்; பி.ஆர்.எஸ்.வெங்கடேசன், மாநில துணை தலைவர், காங்கிரஸ்; து.தங்கராசு, கடலூர் நகர செயலாளர் (தி.மு.க), நகர மன்ற தலைவர் (தி.மு.க), அ.குணசேகரன், சபையர் லித்தோ கிராபிக்ஸ், சென்னை, எ.ஜி.இராஜேந்திரன், முன்னாள் நகரமன்ற தலைவர், பழக்கடை கே.எஸ்.ராஜா நகர தி.முக இளைஞரணி அமைப்பாளர், வாழ்த்துரை: எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம், (மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்) சுப.வீரபாண்டியன், திராவிடர் இயக்கத் தமிழர் பேரவை, கோ.சாமிதுரை, பொருளாளர், திராவிடர் கழகம், இள.புகழேந்தி, தி.மு.க மாநில மாணவரணி செயலாளர், ‘வீகேயென்’ கண்ணப்பன், இணைவேந்தர், பெரியார்மணியம்மை பல்கலைக் கழகம், ஆர்.வி.ஜானகிராமன், புதுவை மாநில மேனாள் மு.முதல்வர், தி.மு.க அமைப்பாளர், எம்.எ.எஸ்.சுப்பிரமணியம், புதுவை மாநில சட்டமன்ற உறுப்பினர், எம்.டி.இராமச்சந்திரன், புதுவை மாநில முன்னாள் முதல்வர், கலி.-பூங்குன்றன், திராவிடர் கழக பொதுச்செயலாளர், கே.எஸ்.அழகிரி, கடலூர் நாடாளுமன்ற உறுப்பினர் என்.இராஜாங்கம், முன்னாள் அமைச்சர், இரா.விசுவநாதன், சி.பி.அய். தேசிய குழு உறுப்பினர், சு.அறிவுக்கரசு,பொதுச்செயலாளர், திராவிடர் கழகம், துரை.சந்திரசேகரன், துணை பொதுச்-செயலாளர் திராவிடர் கழகம் மற்றும் பலர்.

திராவிட கலாச்சாரத்தில் திருமணமும், திருமண முறிவும்

முன்பு, இதே கடலூரில் ஒரு திருமண முறிவு விழா நடந்தது பற்றி நினைவுள்ளது! அப்பொழுது, பையன்- பெண் இரு வீட்டாரது பெற்றோர் முன்னிலையில் பலர் முன்னிலையில், பெண் வந்து, தாலியைக் கழட்டி பயன் இடத்தில் கொடுக்கவேண்டும். அப்பொழுது, பாவம், அந்த பெண் அழுது கொண்டே அவ்வாறு செய்ததாக செய்தி, படங்கள் வெளியாயின.

என் குடும்பத்திற்கு நான் பயன்பட்டதை விட பல்லாயிரக்கணக்கான இயக்கக் குடும்பங்களுக்குப் பயன்பட்டேன்

கடலூர் மணவிழாவில் தமிழர் தலைவர் பெருமிதம்

http://viduthalai.periyar.org.in/20091215/news10.html

செ. அருண்குமார் -_ சக்திதேவி ஆகியோரின் மணவிழாவில், தமிழர் தலைவர் கி. வீரமணி, சுப. வீரபாண்டியன் மற்றும் முக்கிய பிரமுகர்கள் உள்ளனர் (கடலூர், 14.12.2009).

கடலூர், டிச. 15_ நான் என் குடும்பத்திற்குப் பயன்-பட்டதை விட பல்லாயிரக்கணக்கான இயக்கக் குடும்பங்களுக்குப் பயனுள்ளவனாகப் பயன்பட்டேன் என்று நேற்று கடலூரில் நடைபெற்ற மணவிழாவில் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் கூறி விளக்கமளித்தார்.

கடலூரில் 14.-12.2009 அன்று காலை 9.45 மணிக்கு திவான் பகதூர் சுப்பராயலு (ரெட்டியார்) திருமண மண்டபத்தில் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்-களின் மூத்த அண்ணன் சுயமரியாதைச் சுடரொளி கடலூர் கி. கோவிந்தராசன் அவர்களின் பேரன் செல்வன் செ. அருண்குமார் -_ செல்வி இ. சக்திதேவி ஆகியோரது வாழ்வியல் இணையேற்பு விழா நிகழ்ச்சி திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. அனைவரையும் வரவேற்று மணமகனின் தந்தை கி.கோ. செல்வமணி உரையாற்றினார். விழாவிற்கு தலைமையேற்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வாழ்த்துரை வழங்கி எஸ்.கே.கோவிந்தசாமி – தங்கம் மகாலட்சுமி, கடலூர் கி. கோவிந்தராசு_- பத்மாவதி ஆகியோரின் பேரனும் கி.கோ. செல்வமணி_-செல்வராணி ஆகியோரின் செல்வன் செ. அருண் குமாருக்கும், கே.குப்புசாமி – நவகாந்தி ஆகியோரின் பேத்தியும் கே. இளங்கோவன் – பானுமதி ஆகியோரின் செல்வி இ. சக்திதேவிக்கும் வாழ்வியல் இணையேற்பு விழாவினை நடத்தி வைத்தார்.

தமிழர் தலைவர் உரை: தமிழர் தலைவர் தமது உரையில், இங்கே நடை-பெறும் மணவிழாவிற்கு வந்திருக்கும் அனைவரையும் எங்கள் குடும்ப மணவிழா என்ற முறையில் வர-வேற்கிறேன். எனது மூத்த அண்ணன் சுயமரியா-தைக்காரர் கடலூர் கி.கோவிந்தராசன் அவர்கள் நான் சிறு குழந்தையாக இருந்த போது (ஒரு வருடம்) எனது தாயார் மறைந்துவிட்டார். என்னை அவர் தாய் போல் அன்போடு வளர்த்தார். எனது இளைய அண்ணன் கி. தண்டபாணி அவர்கள் எனது தந்தை போல் இருந்து வளர்த்து ஆளாக்கினார்கள். என்னைப் படிக்க வைத்து குடும்பத்துக்குப் பயன்பட வேண்டும் என நினைத்தார்கள்.

ஆனால், நான் எனது குடும்பத்திற்குப் பயன்-பட்டதை விட தமிழ் நாட்டில் உள்ள பல ஆயிரக்-கணக்கான இயக்கக் குடும்பத்திற்குப் பயன்பட்டேன் என்பது தான் உண்மை. எனது அண்ணனின் வழி வந்த சுயமரியாதை உணர்வோடு இருக்கக்கூடிய இந்தப் பேரன் திருமணத்தை நடத்தி வைப்பதிலே பெரு மகிழ்ச்சி அடைகிறேன் என பல்வேறு பழைய அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார்.

வாழ்த்தியோர்: கடலூர் சட்டமன்ற உறுப்பினர் கடலூர் கோ.அய்யப்பன் முன்னதாகவே வருகை தந்து தமிழர் தலைவருக்கு சால்வை அணிவித்து மணமக்களை வாழ்த்திவிட்டுச் சென்றார். புதுவை சி.பி.அய். தேசிய குழு உறுப்பினர் இரா. விசுவநாதன், தி.மு.க. மாநில மாணவரணி செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான இரா.புகழேந்தி, புதுவை முன்னாள் முதல்வர் டி. ராமச்சந்திரன், மற்றும் புதுவை முன்னாள் முதல்வர் ஆர்.வி.ஜானகிராமன், பெங்களூரு தி.மு.க. பிரமுகர் கிள்ளிவளவன், ஏ.ஜி.இராசேந்திரன், பழக்கடை கோவிந்தன், மதிமுக கடலூர் மாவட்டச் செயலாளர் எஸ். பத்மநாபன், நெல்லிக்குப்பம் சட்ட மன்ற உறுப்பினர் சபா. இராசேந்திரன், கடலூர் நகர் மன்றத் துணைத் தலைவர் பா. தாமரைச்செல்வன், திராவிடர் கழகப் பொருளாளர் கோ. சாமிதுரை, திராவிட இயக்க தமிழர் பேரவை தலைவர் சுப.வீர-பாண்டியன், தி.க. பொதுச்செயலாளர் சு. அறிவுக்கரசு ஆகியோர் உள்பட பல்வேறு இயக்கப் பிரமுகர்கள், தொழில் அதிபர்கள் வருகை தந்து மணமக்களை வாழ்த்-தினார்கள். தென்னிந்திய லித்தோ உரிமையா-ளர்கள் சங்க கவுரவத் தலைவர் பா.பழனி, செயலாளர் மகாலிங்கம், குடந்தை ஆர். ஜெயராமன் ஆகியோர் தமிழர் தலைவருக்குப் பொன்னாடை அணிவித்தனர். மணமக்கள் சார்பாக விழாவில் பங்கேற்ற சிறப்பு விருந்தினர்களுக்கு சால்வை அணிவித்து சிறப்பு செய்யப்பட்டது.

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி நிகழ்ச்சி துவங்குவதற்கு முன்னதாகவே சென்றிருந்து வாயிலில் நின்று விருந்தினர்களை அன்போடு நலம் விசாரித்து வரவேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. விழா நடைபெற்ற வளாகத்தில் தலைவர்களை வரவேற்கும் வண்ணம் ஏராளமான பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. இந்நிகழ்ச்சிக்கு மோகனா வீரமணி, திருச்சி. ப.சுப்பிரமணியம், ஞான.செபஸ்தியான், பெரியார் மாளிகை தங்காத்தாள், சுதா. அன்புராஜ், மதுரை தே.எடிசன்ராசா, செல்லம், முருகேசன், புதுச்சேரி வா.சு.சம்பந்தம், புதுவை சிவ. வீரமணி, கே.குமார். வெ. அன்பரசன், அறிவழகன், விலாசினிராஜ், இளங்கோ, ராசா (இ.ஆ.), கடலூர் தேசிங்குராசன், டி.எஸ்.டி. பெரியார் செல்வன், அரங்க பன்னீர்செல்வம், சொ. தண்டபாணி, தாமோதரன், தென்னவன், மணிவேல், உதய சங்கர், சிதம்பரம் செல்வரத்தினம் கடலூர் சீனியம்மாள், குப்புசாமி கடலூர், போ. குழந்தைவேலன், விஜயகுமார், பிரசாத், க.மு.தாஸ், விஜயலட்சுமி, பண்ருட்டி கோ.புத்தன், வடலூர் புலவர் இராணவன், இந்திரஜித், நெய்வேலி மணிவண்ணன், அதியமான், கண்ணன், உட்பட பல்வேறு முக்கிய பிரமுகர்கள் பங்கேற்று சிறப்பித்தனர். கழகத் துணைப் பொதுச்செயலாளர் துரை. சந்திரசேகரன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.