Archive for the ‘திராவிடன்’ Category

திக-திமுக பேச்சாளர்கள், தலைவர்கள் மற்றும் சித்தாந்தவாதிகள், 1950களிலிருந்து பேசி வரும் கெட்ட, ஆபாச மற்றும் மோசமான வார்த்தைகள், வசவுகள் மற்றும் திட்டுகள் (2)

ஜனவரி 14, 2023

திகதிமுக பேச்சாளர்கள், தலைவர்கள் மற்றும் சித்தாந்தவாதிகள், 1950களிலிருந்து பேசி வரும் கெட்ட, ஆபாச மற்றும் மோசமான வார்த்தைகள், வசவுகள் மற்றும்  திட்டுகள் (2)

அண்ணாமலையைக் கடுமையாக வசைப் பாடியது: மேலும் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையை சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மிக மோசமாக பேசியுள்ளார். போலீஸ் வேலையை பாதியிலேயே விட்டுவிட்டு ஓடி வந்த அண்ணாமலை திமுகவை பற்றி பேசுகிறார். பிரான்சில் வாங்கிய வாட்சை இந்தியாவில் கட்டிக்கொண்டு தேச பக்தியை பற்றி பேசுகிறார். அவர் தாய் அவரை எப்படி பெற்றெடுத்தார் என்று மிக மோசமாக விமர்சித்துள்ளார். மேலும், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியை உருவ கேலி செய்து பேசியது அதிமுகவினரை கொந்தளிக்க செய்துள்ளது. கவர்னரை அவதூறாகவும், கொலை மிரட்டல் விடுக்கும் வகையிலும் கடந்த சில நாட்களாக பேசி வரும் தி.மு.க,வைச் சேர்ந்த ஆர்.எஸ்.பாரதி, சிவாஜி கிருஷ்ணமூர்த்தி ஆகியோரை கைது செய்து அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பா.ஜ., செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி கோரிக்கை விடுத்துள்ளார்[1]. இது குறித்து அவர் கூறியதாவது[2]: கவர்னர் குறித்து சிவாஜி கிருஷ்ணமூர்த்தி பேசிய அந்த தரம் கெட்ட வார்த்தைகள் தி மு கவின் ஒப்புதலோடே பேசப்பட்டிருக்கிறது என்பதை உறுதி செய்யும்.

புகார் கொடுத்தும் போலீஸார் நடவடிக்கை எடுக்காமல் இருப்பது: “தொடர்ந்து பா.., தலைவர்களை தரக்குறைவாக பேசியது குறித்து புகார் அளித்தும் தமிழக காவல் துறை நடவடிக்கை எடுக்கவில்லை. கடந்த இரு மாதங்களுக்கு முன்னர் கூட பா.., தலைவர் அண்ணாமலை குறித்து சிவாஜி கிருஷணமூர்த்தி கூறிய கருத்துக்களை கண்டித்து நாம் புகாரளித்திருந்தும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்காது, கண்டும் காணாமல் இருப்பது தி மு கவின் முழு ஒப்புதலோடு பேச வைக்கப்படுகிறார் என்பதையே உறுதி செய்கிறது. காஷ்மீருக்கு கவர்னரை போகச்சொல்லி, தீவிரவாதிகளை இங்கிருந்து காஷ்மீருக்கு அனுப்பி வைத்து கவர்னரை கொலை செய்வோம் என்றும், சட்டசபையில் கொலை செய்தாலும் வழக்கு இல்லை என்று கூறியதும், அடித்தால் வீடு திரும்ப முடியாது என்று திமுகவின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி குறிப்பிட்டதையும் பார்க்கும் போது, திட்டமிட்ட ரீதியில் தமிழக ஆளுநர் ரவி மீது வன்முறையை கட்டவிழ்த்து விட தி.மு.., சதி செய்கிறதோ என்ற சந்தேகத்தை எழுப்புகிறது”.

ஸ்டாலின் சொல்வதும், திமுகவினர் செய்வதும்; “திமுக அரசின் தோல்விகளை மறைப்பதற்கு, சட்ட ஒழுங்கு சீர்கெட்டுக் கொண்டிருக்கிறது என்பதை மூடி மறைப்பதற்கு, பொருளாதார ரீதியாக தமிழகத்தை மேம்படுத்த முடியவில்லை என்பதை மறைப்பதற்கு, மத்திய அரசின் பல்வறு நலத்திட்டங்களில் கொண்டு வரப்பட்டுள்ள சீர்திருத்தங்களால் அத்திட்டங்களில் ஊழல்கள் செய்ய முடிவதில்லை என்ற ஆத்திரத்தில்,மாநில அரசு நிர்வாகத்தை திறம்பட செலுத்த முடியாத காரணத்தினால், மொழி ரீதியாக, சாதி ரீதியாக, மத ரீதியாக மக்களை தூண்டிவிட்டு திசை மாற்ற முயற்சிக்கிறது தி.மு.. கவர்னரை காஷ்மீருக்கு செல் என்றும், அங்குநாங்கள்தீவிரவாதிகளை அனுப்பி உன்னை கொன்று விடுவோம் என்று கூறியிருப்பது அதிர்ச்சியளிப்பதோடு, தி மு கவிற்கு தீவிரவாதிகளின் தொடர்பு குறித்த சந்தேகங்களை எழுப்புகிறது. தமிழக காவல் துறை உடனடியாக, இந்த இரு நபர்களையும் கைது செய்து விசாரணை செய்ய வேண்டும். இரு நாட்களுக்கு முன்னர் முதல்வர் ஸ்டாலின் , கவர்னர் குறித்து திமுகவினர் விமர்சிக்க வேண்டாம் என்று அறிவுறுத்தியதாக செய்திகள் வெளியான நிலையில், இரு நாட்களாக தான் அதிகளவில் ஆளுநரை விமர்சிக்கின்றனர்”.

சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மற்றும் ஆர்.எஸ். பாரதி ஆகியோர் தி மு தலைமையின் ஒப்புதலோடு, ஆசியோடு தான் ஆளுநரை தரக்குறைவாக, கொலை மிரட்டல் தொனியில் பேசியுள்ளனர்: “சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மற்றும் ஆர்.எஸ். பாரதி ஆகியோர் தி மு தலைமையின் ஒப்புதலோடு, ஆசியோடு தான் ஆளுநரை தரக்குறைவாக, கொலை மிரட்டல் தொனியில் பேசியுள்ளனர் என்பது தெளிவாகிறது. தமிழக காவல் துறை தலைவர் ,சென்னை மாநகர ஆணையர் உடனடியாக இந்த நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து கைது செய்ய வேண்டியது அவசியம் மட்டுமல்ல அவசரமும் கூட. உண்மையில், முதல்வர் ஸ்டாலினுக்கு இந்த பேச்சுகளில் உடன்பாடு இல்லையெனில், சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மற்றும் ஆர் எஸ் பாரதி இருவரையும் கைது செய்ய உத்தரவிடுவதோடு, தி மு பொது கூட்டங்களில் அமைச்சர்களின் முன்னிலையில் இந்த கருத்துக்களை கூறியிருப்பதற்கு பொறுப்பேற்று தமிழக மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். இந்த இருவரையும் தி மு கவை விட்டு நீக்க வேண்டும். இல்லையேல், ஆளுநர் குறித்த அவதூறுகள் மற்றும் கொலை மிரட்டல்களுக்கு முதல்வர் ஸ்டாலின் பொறுப்பேற்க வேண்டும்,”. இவ்வாறு அவர் கூறினார்.

திகதிமுகவினரின் கெட்ட வார்த்தை பாரம்பரியம்:

  1. தி.மு.க..வின் துணை பொதுச் செயலாளரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஆ.ராசா, தேர்தல் பரப்புரையின் போது, கள்ள உறவில் பிறந்த குறைப் பிரசவம் தான் எடப்பாடி பழனிசாமி என தமிழக முதல்வரின் பிறப்பைப் பற்றி அருவருப்பான வகையில் பேசியுள்ளார்.
  2. தி.மு.க.வின் தலைவர் அண்ணாதுரையே இம்மாதிரியான பேச்சுகளுக்கு அடித்தளம் அமைத்தவர். காந்தியார் மீரா பாயுடனும், சுசிலாக்களுடனும், சத்காரியாதிகளிலே ஈடுபட்டுச் சரோஜினிகளின் பராமரிப்பில் பிர்லா மாளிகையில் இருந்தார் என எழுதியவர்.
  3. 1962 அக்டோபர் மாதம் 23ந் தேதி பாரத பிரதமர் நேரு இலங்கை விஜயத்தின் போது, சிறிமாவோ பண்டாரநாயக்காவை சந்தித்து, ஒரு மணி நேரம் விவாதித்த செய்தியை, அண்ணாதுரை, தம்பி, நேருவோ மனைவியை இழந்தவர், சிறிமாவோ கணவனை இழந்தவர், இருவரும் ஒரு மணி நேரம் தனிமையில் சந்தித்தார்கள் என்றால் என்ன நடந்திருக்கும் என சிந்தித்து பார் தம்பி என கட்டுரை எழுதியவர்.
  4. 1962-ல் சேலத்தில் நடந்த தி.க. மாநாட்டில் மாற்றான் மனைவி மற்றொருவனை விரும்பினால் அதை குற்றமாக கருத கூடாது என தீர்மானம் இயற்றிய ஈவெ. ராமசாமி நாயக்கர்.
  5. சேலத்தில் நடந்த தி.முக. பொதுக் கூட்டத்தில், அண்ணாதுரை, சினிமா நடிகையின் கற்பு பற்றி கீழ்தரமாக விமர்சனம் செய்தவர். அவள் ஒன்றும் படிதாண்டா பத்தினி அல்ல. நான் முற்றும் துறந்த முனிவன் அல்ல என கூறியது மட்டுமில்லாமல், அவள் தபால்நிலையத்தில் உள்ள மைக்கூடு, அதை யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம், நானும் பயன்படுத்தினேன் என்றார்.
  6. சட்டசபையில் திராவிட நாடு எங்கே இருக்கிறது என கேள்வி எழுப்பிய காங்கிரஸ் உறுப்பினர் திருமதி அனந்தநாயகிக்கு பெண் உறுப்பினரிடம் பாவாடை நாடா பற்றி விரசமாகச் சொன்னவர் கருணாநிதி.
  7. மதுரையில் இந்திரா காந்தி வருகை தந்த போது, கருப்பு கொடி ஆர்பாட்டம் என்ற பெயரில் தாக்குதல்களை நடத்தியவர்கள் தி.முக.வினர்.
  8. தாக்குதலின் போது இந்திரா காந்தியின் நெற்றியில் கல் பட்டு ரத்தம் வழிந்தது. இது பற்றி கருணாநிதி முன் வைத்த விமர்சனம், அம்மையாருக்கு மாதவிடாய் ஏற்பட்டு இருக்கும் என்ற ஈனத்தனமாக விமர்சித்தவர்.
  9. 1972ல் எம்ஜிஆர் திமுக விலிருந்து பிரிந்து கணக்கு கேட்ட போது, கருணாநிதியின் பதில்களில் முக்கியமான பதில், ‘யாரிடம் கேட்கிறார் கணக்கு, போய் லதாவிடம், சரோஜா தேவியிடம், மஞ்சுளாவிடம் கணக்குக் கேள்’ என்பதுதான்.
  10. அன்பழகனை ஜெயலலிதா உதவிப் பேராசிரியர் என்று குறிப்பிட்டு பேசியதற்கு (திமுகவினர் அன்பழகனை ‘பேராசிரியர்’ என்றே பல காலம் கூறி வந்தனர். சமீபத்தில் தான் ஜெயலலிதா போட்டு உடைத்தார். அவர் கடைசியாக வகித்த பதவி ‘உதவிப் பேராசிரியர்’ என்று கூறியதற்கு, அன்பழகன் சட்டசபையிலேயே “எனக்கு நான் முன்பு செய்த தொழில் தெரியும் உங்களுக்கு உங்கள் பழைய தொழில் தெரியுமா” என்று விரசமாகப் பேசினார்.
  11. கல்லக்குடியில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது, முதல்வர் எடப்பாடி பழனிசாமி குறித்து கடும் விமர்ச்சனம் செய்தார். அதில், அவர் எடப்பாடி இல்ல. டெட்பாடி.
  12. உதயநிதி ஸ்டாலின் – முதல்வர் பதவிக்காக, சசிகலா கால்ல அப்படி தானே விழுந்து கெடந்தாரு. டேபிள், சேர்குள்ளலாம் புகுந்து வந்தாரு. விட்டா அந்த அம்மா காலுக்குள்ளயே புகுந்துருப்பாரு என்று நக்கல் நையாண்டி செய்தார்.

அழுக்கு வார்த்தைகள்: தூற்றுதல் மற்றும் துஷ்பிரயோகத்தின் கலாச்சார வரலாறு” – வெங்கடாசலபதி: 07-01-2017 அன்று மாலை, சென்னை, சென்னை மேம்பாட்டு ஆய்வுக் கழகத்தின் பேராசிரியர் வெங்கடாசலபதி அவர்களால் “அழுக்கு வார்த்தைகள்: தூற்றுதல் மற்றும் துஷ்பிரயோகத்தின் கலாச்சார வரலாறு” வழங்கப்பட்டது. அவர் விசித்திரமான, கோபமான மற்றும் வினோதமான சூழ்நிலைகளில் மக்களால் துஷ்பிரயோகம், சாபம், பெயர்-அழைப்பு, கெட்ட மொழி பயன்படுத்துதல் போன்றவற்றைக் கையாண்டார். 19 ஆம் நூற்றாண்டில், ஷேக்ஸ்பியரில் தோன்றிய அழுக்கு வார்த்தைகள் தாமஸ் பவுட்லரால் அகற்றப்பட்டு “பவுட்லெரிசடோயன்” என்று அழைக்கப்பட்டது. அதே வழியில், பிரிட்டிஷ் அரசாங்கம் சில பகுதிகளை வெளியேற்றிய பிறகு சில தமிழ் இலக்கியங்களை அனுமதித்தது. கமல்ஹாசனின் “அபூர்வ ராகங்கள்” என்ற வார்த்தையில் எப்படி பயன்படுத்தப்பட்டது என்பதைக் குறிப்பிடும் இலக்கியங்களை விட சினிமாக்களில், அரிதாகவே மோசமான வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டன. அவர் தேர்ந்தெடுத்த எடுத்துக்காட்டுகள் தேர்ந்தெடுக்கப்பட்டவை, இது போன்ற மோசமான மொழியைப் பயன்படுத்துபவர்கள் மட்டுமே பயன்படுத்துகிறார்கள், மற்றவர்கள் பயன்படுத்தவில்லை. திராவிடத் தலைவர்கள் மேடைகளில் எப்படி அநாகரிகமான, ஒழுக்கக்கேடான வார்த்தைகளால் அவதூறாகப் பயன்படுத்தினார்கள் என்பதை வசதியாக அடக்கி வைத்திருந்தார். பெண்கள் ஒருபோதும் துஷ்பிரயோகம் செய்வது போல், இயற்கையில் “ஆணாதிக்கம்” போன்ற துஷ்பிரயோகங்களை அவர் பின்பற்ற முயன்றார். அவர் லாவகமாகவும், முரட்டுத்தனமாகவும், வாய்மொழியாகவும் இருந்தபோதிலும், “அடப்பாவி” என்பதைத் தவிர, எந்த ஒரு மோசமான வார்த்தையையும் அவர் ஒருபோதும் உச்சரிக்கவில்லை. அவர் நான்கு வார்த்தைகளை குறிப்பிட்டார், சில உதாரணங்களை மேற்கோள் காட்டி “F….K” என்ற வார்த்தை. முட்டாள், தட்டான், போர்ச்சுகீசியர் பறவர்களை, முகமதியர் திட்டுவதால் தான் மதம் மாறினர். அதாவது, சேவியர், பாதுகாப்பேன் என்ற சரத்துடன் தான் அவர்களை மதம் மாற்றினார்[3].

© வேதபிரகாஷ்

13-01-2022

இந்திரா காந்தியை, இவ்வாறெல்லாம் வசைபாடினார்………………….பிறகு கூட்டணியும் வைத்டுக் கொண்டார்………..


[1] தினமலர், ஆர்.எஸ். பாரதியை கைது செய்ய பா.ஜ., கோரிக்கை, மாற்றம் செய்த நாள்: ஜன 13,2023 22:19.

[2] https://m.dinamalar.com/detail-amp.php?id=3217369

[3] வெங்கடாசலபதி பேச்சை, இங்கே கேட்கலாம்: https://podtail.com/en/podcast/centre-of-south-asian-studies-seminars/professor-a-r-venkatachalapathy-dirty-words-a-hist/

காமராஜரை வசவு பாடிய, மாமேதை-கலைஞர்-கருணாநிதி……

எம்ஜிஆரையும் இவ்வாறு வசைபாடியுள்ளதை கவனிக்க வேண்டும்……

திக-திமுக பேச்சாளர்கள், தலைவர்கள் மற்றும் சித்தாந்தவாதிகள், 1950களிலிருந்து பேசி வரும் கெட்ட, ஆபாச மற்றும் மோசமான வார்த்தைகள், வசவுகள் மற்றும் திட்டுகள் (1)

ஜனவரி 14, 2023

திகதிமுக பேச்சாளர்கள், தலைவர்கள் மற்றும் சித்தாந்தவாதிகள், 1950களிலிருந்து பேசி வரும் கெட்ட, ஆபாச மற்றும் மோசமான வார்த்தைகள், வசவுகள் மற்றும்  திட்டுகள் (1)

திகதிமுக பேச்சாளர்கள், தலைவர்கள் மற்றும் சித்தாந்தவாதிகள், 1950களிலிருந்து பேசி வருவது: திக-திமுக பேச்சாளர்கள், தலைவர்கள் மற்றும் சித்தாந்தவாதிகள், 1950களிலிருந்து பேசி வந்ததை, இன்றைய 70-80-90 வயதானவர்களுக்கு, அதிலும் நேரிடையாக கூட்டங்களுக்குச் சென்று அவர்கள் பேசியதைக் கேட்டவர்களுக்கு, அவர்கள் எவ்வாறு, எப்படியெல்லாம் அநாகரிகமாக, கெட்ட வார்த்தைகள், மோசமான வசைபாடுகள், முதலியவற்றையெல்லாம் சரமாரியாக, வழக்கமாக பேசுவார்கள் என்று அறிவார்கள். அத்தகைய தரமற்ற, மோசமான, ஆபாசமான, மிகக் கேவலமான பேச்சுகள், இப்பொழுது, 2021-2023 ஆண்டுகளிலும் பேசப் படுகிறது என்பதைக் கேட்கும் பொழுது, கவனிக்கும் பொழுது, மிக வருத்தமாக, திகைப்பாக மற்றும் அதிர்ச்சியாக இருக்கிறது.  சைதை சாதிக், துரை முருகன், கே.என். நேரு, ஆர்.எஸ். பாரதி, சிவாஜி கிருஷ்ணமூர்த்தி என்று பலர் பேச ஆரம்பித்து விட்டார்கள். இப்பொழுது, சிவாஜி கிருஷ்ணமூர்த்தி பேசியது, பழைய அந்த 1950களில் பேசிய திக-திமுகவினரை ஒத்துப் போகிறது. இதை விட கேவலமாக எல்லா கூட பேசியிருக்கிறார்கள். திகவினர் பேசும் பொழுது, பெண்களே வேகமாக நடந்து, ஏன் ஓடவும் செய்வார்கள், அந்த அளவுக்கு மோசமாக, ஆபாசமாக, அருவருப்பாகப் பேசுவது உண்டு.

9-01-2023 ஆளுநர் ஆர்.என்.ரவி உரை: தமிழ்நாடு சட்டசபை கூட்டத்தொடர் ஜனவரி 9 ஆம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது. திமுக அரசுக்கும் ஆளுநருக்கும் நீண்டநாட்களாக இருந்து வரும் பஞ்சாயத்துக்கு மத்தியில் பெருத்த எதிர்பார்ப்புடன் இக்கூட்டத்தொடர் தொடங்கியது. இதற்கிடையே, தமிழ்நாட்டை தமிழகம் என்று சொல்வதுதான் சரியானதாக இருக்கும் என்று ஆர்.என். ரவி கருத்து பதிவிட்டிருந்தார். அந்த கருத்து தமிழ்நாட்டில் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆளுநர் ரவி ஆளுநராக செயல்படாமல் தொடர்ந்து பாஜக கட்சிக்காரராகா கருத்து கூறி வருகிறார் என்றும் அவர் உடனே பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் அழுத்தம் கொடுத்து வருகின்றனர். உண்மையில் இவையெல்லாம் கடந்த 50-70 ஆண்டுகளில் ஏற்கெனவே பேசி முடித்தது தான். அச்சிலும் உள்ளது தான்.

திராவிட சித்தாந்த வார்த்தைகளை ஆளுனர் தவிர்த்தது: இதற்கு மத்தியில் சட்டசபை உரையை வாசித்த ஆளுநர் ரவி, உரையில் இருந்த சமூகநீதி, சுயமரியாதை, திராவிட மாடல் என்ற வார்த்தைகளை வாசிக்காமல் தவிர்த்தார். மேலும், தமிழ்நாடு சட்டம் ஒழுங்கை சிறப்பாக கையாள்கிறது, அமைதி பூங்காவாக திகழ்கிறது என்பதையும் வாசிக்காமல் கடந்தார். குறிப்பாக, பெரியார், அம்பேத்கர், காமராசர், அண்ணா, கலைஞர் ஆகிய தலைவர்களின் பெயர்களையும் வாசிக்காமல் கடந்துவிட்டார். இதை விமர்சித்த முதல்வர் ஸ்டாலின் ஆளுநருக்கு முன்பாகவே எதிர்ப்பு தீர்மானத்தை கொண்டு வந்தார். ஆளுனர் உட்கார்ந்திருக்கும் பொழுதே, ஏற்கெனவே தயாரித்த, அச்சிடத்த காகிதப் பேச்சை வைத்து ஸ்டாலின் படிக்க ஆரம்பித்தார். ஆளுனருக்கு தமிழ் தெரியாது என்பதால், ஸ்டாலின், ஆங்கில மொழிபெயட்ப்பைக் கொடுத்திருக்க வேண்டும். அந்நிலையில், ஆளுனர் போலீஸ் அதிகாரியைக் கூப்பிட்டு கேட்கிறார். அவர், ஸ்டாலின் பேசியதைப் பற்றி சொல்லியிருக்கலாம். அதனால், அதிகாரிகளைக் கூப்பிட்டு, வெளியே சென்று விட்டார். “அப்போது ஆளுநர் வெளிநடப்பு செய்தார் என்பது அனைவரும் அறிந்ததே,” என்று தமிழ் ஊடகங்கள் சுருக்கமாக கூறியுள்ளன. அதற்கு பிறகு திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் யாரும் ஆளுநரை விமர்சிக்க கூடாது என்றும் அவரை குறித்து கருத்து தெரிவிக்கக்கூடாது என்றும் முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தினார்.

திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி ஆளுநரை பாகிஸ்தானுக்கு அனுப்பி கொல்ல வேண்டும் என்று பேசியது: இந்நிலையில் திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி ஆளுநரை பாகிஸ்தானுக்கு அனுப்பி கொல்ல வேண்டும் என்றும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை கெட்ட கெட்ட வார்த்தைகளில் வசைபாடியும் இருப்பது மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது[1]. சிவாஜி கிருஷ்ணமூர்த்தி பேசியதாவது[2]; “அரசு கொடுத்த உரையை ஒழுங்காக படித்திருந்தால் ஆளுநரை கையெடுத்து கும்பிட்டு அனுப்பி இருப்பேன்[3]. ஆனால், அவர் டாக்டர் அம்பேத்கர் பெயரையே சொல்லமாட்டேன் என்று தவிர்த்தால் செருப்பால் அடிப்பேன் என்று சொல்ல எனக்கு உரிமை இருக்கா இல்லையா? அம்பேத்கர் பெயரை சொல்லமாட்டேன் என்று சொன்னால் ஆளுநர் காஷ்மீருக்கு செல்லட்டும்; நாங்களே தீவிரவாதிகளை அனுப்பி சுட்டு கொல்வோம்,” என்றார். இப்படி சுருக்கமாக செய்தி போட்டிருந்தாலும், மிகவும் கெட்ட வார்த்தைகளை உபயோகப் படுத்தியிருப்பதை கேட்கலாம்.

திமுக பேச்சாளரின் கொலைவெறி பேச்சு: இந்தியா டுடே[4], “ஆளுநரை திட்ட வேண்டாம் என முதல்வர் கேட்டுக்கொள்கிறார். அவர் பேச்சை சரியாகப் படித்திருந்தால், அவரது காலில் பூ வைத்து கைகூப்பி நன்றி தெரிவித்திருப்பேன்[5]. ஆனால், அம்பேத்கரின் பெயரைச் சொல்ல மறுத்தால் அவரை செருப்பால் அறைய எனக்கு உரிமை இல்லையா?[6] அவருடைய பெயரைச் சொல்ல மறுத்ததால், நீங்கள் காஷ்மீருக்குச் செல்லுங்கள்[7]. உங்களைச் சுட்டுக் கொல்ல ஒரு தீவிரவாதியை அனுப்புவோம்,” என்று பேசியது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது[8]. இப்பேச்சு ஆங்கில ஊடகங்களில் 13-01-2023 அன்றே பரவலாக, இணைதளங்களில் வெளியிட்டுள்ளன. ஏனெனில், 2023ல் இவ்வாறு பேசுவது தான் அதிர்ச்சியளிப்பாக உள்ளது. இதனால், இழிவுபடுத்துதல், துஷ்பிரயோகம் செய்தல், அசிங்கமாக-ஆபாசமாக எப்படி பேசுவார்கள் என்று திகைத்து விட்டனர் எனலாம்.

கொஞ்சம் விவரமாக; திமுக நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், தமிழக அரசு எழுதி கொடுத்ததை முழுமையாக படிக்காத ஆளுநரை தகாத வார்த்தையில் பேசியும், அவரை செருப்பால அடிப்பேன் என ஆவேசமாக பேசினார்[9]. தொடர்ந்து, அம்பேத்கர் பெயரை சொல்லாத அவரை, ஜம்மு காஷ்மீருக்கு சென்று விடலாம் என்றும், அங்கு தீவிரவாதிகளை அனுப்பி கொல்வோம் என்று எச்சரிக்கை விடுத்தார்[10]….மேலும், தனது பதவியை பாதியிலேயே ராஜினிமா செய்து வந்த அண்ணாமலை எனக் கூறி அசிங்கமான வார்த்தையில் விமர்சித்த திமுக நிர்வாகி சிவாஜி கிருஷ்ணமூர்த்தி, பிரான்ஸ்ல தயாரித்த கடிகாரத்தை கட்டிக்கொள்வதுதான் தேசபக்தியாடா..? என்று கேள்வி எழுப்பினார்.…….தொடர்ந்து எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சித்த அவர், வாரிசு அரசியல் குறித்து பேசினார். கருணாநிதி, ஸ்டாலின், உதயநிதிக்கு ஆண்மை இருப்பதால் வாரிசு அரசியல் நடத்துவதாகவும், ஆண்மை இல்லாதவர்கள் மருத்துவமனைக்கு செல்லுமாறு கிண்டலாக குறிப்பிட்டார்……..அதோடு, திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று அதிமுக குற்றம்சாட்டி வருவது குறித்து பேசிய அவர், பொள்ளாச்சியில் நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கேளியாக குறிப்பிட்டு, ஜெயலலிதா மரணம் எப்போது நடந்தது என்று சொல்லும் யோகிதை இருக்கிறதா..? என அதிமுகவுக்கு கேள்வி எழுப்பினார்.

© வேதபிரகாஷ்

13-01-2022


[1] சமயம், கவர்னரை நாங்களே கொல்லுவோம்‘… அண்ணாமலையை… – திமுக பேச்சாளர் பகீர்..!, Divakar M | Samayam Tamil | Updated: 13 Jan 2023, 4:05 pm.

[2] https://tamil.samayam.com/latest-news/state-news/dmk-spokesperson-sivaji-krishnamurthy-has-criticized-governor-ravi-and-annamalai-using-filthy-words/articleshow/96965349.cms

[3] India Today, Will send terrorist to kill Tamil Nadu Guv, says DMK leader; BJP demands arrest under Goondas Act, Pramod Madhav and Apoorva Jayachandran , Chennai,UPDATED: Jan 13, 2023 23:07 IST

[4] https://www.indiatoday.in/india/story/tamil-nadu-cm-governor-stand-off-dmk-leader-remark-row-bjp-reacts-2321350-2023-01-13

[5] Times.Now, ‘If you don’t read government’s speech, go to Kashmir and we will…’, DMK leader’s abusive remarks against TN Guv, Updated Jan 13, 2023 | 10:17 PM IST.

[6] https://www.timesnownews.com/india/dmk-leader-shivaji-krishnamurthy-abusive-remarks-against-tamil-nadu-governor-rn-ravi-article-96973932

[7] ANI, “If you don’t read govt’s speech, then go to Kashmir”: DMK leader’s remark against Tamil Nadu Governor, ANI | Updated: Jan 14, 2023 00:51 IST

[8] https://www.aninews.in/news/national/politics/if-you-dont-read-govts-speech-then-go-to-kashmir-dmk-leaders-remark-against-tamil-nadu-governor20230114005143/

[9] அப்டேட்.நியூஸ், எச்சை சோறு.. பாதியிலே ஓடி வந்த பொ*** அண்ணாமலை ; ஆளுநரை செருப்பால அடிப்பேன் ; திமுக பிரமுகர் சர்ச்சை பேச்சு, Author: Babu Lakshmanan, 13 January 2023, 5:44 pm.

[10] https://www.updatenews360.com/trending/dmk-executive-controversial-speech-about-governor-rn-ravi-and-annamalai-130123/

பத்ரிசேஷாத்ரி, அண்ணாவை முட்டாள் எனக் குறிப்பிட்டது, தமிழ் இணைய கல்விக்கழக ஆலோசனை குழுவிலிருந்து நீக்கப் பட்டது! பூணூலை அறுப்பேன் என்று சுப.வீரபாண்டியன் பேசிதற்கு கண்டனம் தெரிவிக்கப் பட்டது!(2)

ஒக்ரோபர் 25, 2022

பத்ரி சேஷாத்ரி, அண்ணாவை முட்டாள் எனக் குறிப்பிட்டது, தமிழ் இணைய கல்விக் கழக ஆலோசனை குழுவிலிருந்து நீக்கப் பட்டது! பூணூலை அறுப்பேன் என்று சுப.வீரபாண்டியன் பேசிதற்கு கண்டனம் தெரிவிக்கப் பட்டது! (2)

பிராமணர்கள் திருப்பி தாக்கமாட்டார்கள்[1]: நாராயணன் திருப்பதி பேசியது, “பிராமணர்கள் திருப்பி தாக்கமாட்டார்கள் பத்ரி சேஷாத்ரி என்ற தனிநபரை விமர்சனம் செய்ய வேண்டுமென்றால் செய்து கொள்ளட்டும், ஆனால், இது போன்று தனிநபர் தொடர்புடைய விவகாரங்களில் வேறு எந்த சமூகத்தையாவது ஒட்டுமொத்தமாக இழித்தும், பழித்தும் பேசுவதற்கு சுப.வீரபாண்டியன் போன்றகோழைகளுக்குதைரியம் உள்ளதா? பிராமண சமுதாயத்தை சேர்ந்தவர்கள் திருப்பி தாக்க மாட்டார்கள் என்ற தைரியத்தில் இது போன்ற வன்மம் மிகுந்த தரக்குறைவான, மலிவான சாதிய விமர்சனங்களை இந்தகோழைகள்முன்வைப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது”.

வன்முறையை தூண்டும் வகையில் பேசியுள்ள சுப.வீரபாண்டியனை கைது செய்ய தமிழக காவல்துறைக்கு உத்தரவிடுவாரா?: நாராயணன் திருப்பதி பேசியது, “ஸ்டாலின் நடவடிக்கை எடுப்பாரா? பத்ரி சேஷாதிரி தவறு செய்திருந்தால், முதல்வர் மு.க.ஸ்டாலின், அவர் மீது நடவடிக்கை எடுக்கட்டும். ஆனால், ஒட்டுமொத்தமாக ஒரு சாதியை இழிவுபடுத்தும் வகையில் பேசியுள்ள, மிரட்டியுள்ள சுப. வீரபாண்டியன் மீது நடவடிக்கை எடுப்பாரா முதல்வர் மு.க.ஸ்டாலின்? பூணூலை அறுப்பேன் என்று பேசிய சுப.வீரபாண்டியனை, இது அனைவருக்குமான ஆட்சி என்று பெருமிதம் கொள்கிற முதலமைச்சர், அதன்படி நடந்து கொள்வாரா? நேர்மையான ஆட்சி நடக்குமா? மத துவேஷங்களை செய்பவர் மீது நடவடிக்கை எடுப்பேன் என சட்டசபையில் உறுதி கொடுத்த முதலமைச்சர் ஒரு குறிப்பிட்ட சாதியினரை அவதூறு செய்து, மிரட்டல் விடுத்து வன்முறையை தூண்டும் வகையில் பேசியுள்ள சுப.வீரபாண்டியனை கைது செய்ய தமிழக காவல்துறைக்கு உத்தரவிடுவாரா? நேர்மையான ஆட்சி நடத்துவதாக சொல்லிக்கொள்வதை உறுதி செய்வாரா? நியாயமாக நடந்து கொள்வாரா?,” என்று சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார்.

பா.., தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் கூறியதாவது: இது குறித்து, பா.ஜ., தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் கூறியதாவது[2]: “ஒருவரை அரசின் குழுவில் சேர்க்கவோ, குழுவில் இருந்து விலக்குவதற்கோ அரசுக்கு உரிமை உண்டு. ஆனால், பத்ரி சேஷாத்திரியை அரசின் இணைய கல்வி ஆலோசனை குழுவில் இருந்து நீக்கிய விதம் தவறானது.எந்த தலைவரும் விமர்சனத்துக்கு உட்பட்டவர் தான். தலைவர்களை நியாயமாக, கண்ணியமாக விமர்சிக்க யாருக்கும் உரிமை உண்டு. அண்ணாதுரையை பத்ரி விமர்சித்த விதம் தவறு என்றால், அதை எதிர்க்கவோ, விமர்சிக்கவோ யாருக்கும் உரிமை உண்டு. அதை தவறு என சொல்ல முடியாது. அதற்காக நாகரிக குறைவாகவோ, மிரட்டும் வகையிலோ பேசுவதை ஏற்க முடியாது. விமர்சனத்துக்காக ஒருவரை அரசு குழுவில் இருந்து வெளியேற்றினால், இப்படிப்பட்ட குழுக்களில் இருக்கும் மற்றவர்கள், எந்த தலைவர் குறித்தும் இதுவரை விமர்சித்தது இல்லையா. பத்ரி சேஷாத்ரி, அண்ணாதுரையை விமர்சித்து விட்டார் என்றதும், தி.மு..,வின் ஆதரவு இயக்க தலைவர்கள் துள்ளி குதித்து வருகின்றனர். தி.மு.., எப்போதெல்லாம் ஆட்சிக்கு வருகிறதோ, அப்போதெல்லாம் இப்படிப்பட்ட அநாகரிக சூழல் உருவாவது, வாடிக்கையாகி இருக்கிறது.தி.மு.., தலைவரோ, இரண்டாம் நிலை தலைவர்கள் கூட, இப்படிப்பட்ட அநாகரிக விமர்சனங்களை வைப்பதாக தெரியவில்லை. ஆனால், தி.மு.., ஆதரவு இயக்கங்கள் என்று கூறும் இயக்கங்களின் தலைவர்கள் தான் அராஜகமாக பேசுவதும், அநாகரிகமாக நடந்து கொள்வதும் நடக்கிறது. பிராமணர்களுக்கு எதிராக முதலில் பூணுால் அறுப்பு போராட்டம் நடத்திய தி.., இயக்கம் தி.மு..,வுக்கு ஆதரவு நிலை எடுத்து செயல்படுவதாலேயே, அவர்களுக்கு இத்தனை தைரியம்.”

ஒரு ஜாதியினரை மட்டும் அவமதிப்பதும், கேவலமாக நடத்துவதும் எப்படி சமூக நீதியாகும்?:வானதி சீனிவாசன் பேசியது, “தி.மு..,வினருக்கு இரு வண்ண பட்டை எப்படி அடையாளமாக இருக்கிறதோ, ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அடையாளம் உள்ளது. சிலர் திருநீறு பூசுகின்றனர்; சிலர் திருமண் பூசுகின்றனர். அதைப்போல பிராமணர்கள் தங்கள் அடையாளமாக பூணுால் அணிகின்றனர். பிராமணர்களுக்கு எதிரான பிரச்னை என்றால், உடனே அவர்களின் பூணுாலை அறுப்பேன் என்பது எந்த விதத்தில் நியாயம்? அனைத்து ஜாதியினரையும், மதத்தவரையும் சமமாக மதித்து நடப்பது தானே சமூக நீதி? அதை விடுத்து, ஒரு ஜாதியினரை மட்டும் அவமதிப்பதும், கேவலமாக நடத்துவதும் எப்படி சமூக நீதியாகும்? தி.மு.., ஆட்சிக்கு வந்து விட்டாலே கூடவே ரவுடித்தனமும் வந்து விடும் என்பதற்கு சுப.வீ., போன்றவர்கள் பேச்சும் உதாரணம். இப்படி முதல்வர் ஸ்டாலின் பேசுவதில்லை என்று சொன்னாலும், இப்படிப்பட்ட நிகழ்வுகள் நடக்க, அவர் அனுமதிப்பதே தவறு தானே. அவருக்கு இதில் உடன்பாடு இல்லை என்றால், இவர்களை கட்டுப்படுத்தாது ஏன்?”

திராவிட குடும்பத்தவர் பிராமணர் உதவி பெறுவது: வானதி சீனிவாசன் பேசியது, “பூணுால் போட்டிருக்கும் ஆட்கள் வேண்டாம் என்று சொன்னால், தி.மு.., தலைவரோ, அக்கட்சியின் மற்ற தலைவர்களோ தங்களுக்கு மருத்துவம் பார்த்து கொள்ளவோ, ‘ஆடிட்டிங்பணிக்கோ, சட்ட ரீதியிலான பணிக்காகவோ, பிராமணர்களிடம் செல்வதே இல்லையா? ஏன் தி.மு.., தலைவர் வீட்டுப் பெண்கள், கோவில் கோவிலாகச் செல்லும்போது, பூணுால் அணிந்த பிராமண அர்ச்சகர்களிடம் பிரசாதம் வாங்க மறுத்து விடுகின்றனரா? தங்கள் கட்சிக்கு அரசியல் ஆலோசனை வழங்க, ஒரு பிராமணரை நியமித்து கொண்டனரேஅவரிடம் அவர் அணிந்திருக்கும் பூணுாலை கழற்றி விட்டு வந்து, எங்களிடம் பணியாற்றுங்கள் என்று நிபந்தனை போட்டுத் தான் பணியாற்ற அனுமதித்தனரா?முதல்வர் இனியும் இந்த விஷயத்தில் அமைதியாக இருப்பது சரியல்ல. இப்படி பேசுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், இவ்வாறு அவர் கூறினார்[3].

சுப.வீரபாண்டியனுக்குதாம்ப்ராஸ்கண்டனம்: ”முன்னாள் முதல்வர் அண்ணாதுரையை பதிப்பாளர் பத்ரி சேஷாத்ரி விமர்சித்தார் என்பதற்காக பூணுால் குறித்து அநாகரிகமாகவும், சட்டத்திற்கு புறம்பாகவும் கருத்து தெரிவித்த திராவிடர் இயக்க தமிழர் பேரவை பொது செயலர் சுப.வீரபாண்டியனுக்கு தமிழ்நாடு பிராமணர் சங்கம் ‘தாம்ப்ராஸ்’ கண்டனம் தெரிவித்து உள்ளது[4]. சங்க மாநில தலைவர் என். நாராயணன் கூறி உள்ளதாவது[5]: “ஒரு பிராமண சமூகத்தைச் சேர்ந்தவர் தனிப்பட்ட முறையில் கூறிய கருத்து, ஒட்டுமொத்த பிராமண சமூகத்தின் கருத்து என எண்ணுவது, பகுத்தறிவுக்கு உகந்ததா? ஓர் இனத்திற்கு எதிராக வன்முறையை துாண்டுவதாக அமைந்துள்ள சுப.வீரபாண்டியனின் செயல்பாடு நடுநிலையாளர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த, 1967, தமிழ்நாடு சட்டசபை தேர்தலில் மறைந்த முன்னாள் முதல்வர் ராஜாஜி, ‘பூணுாலை கையில் பிடித்து கொண்டு தி.மு..,விற்கு ஓட்டளியுங்கள்என்று பாடுபட்டு, தி.மு.., முதன் முதலில் ஆட்சியில் அமருவதற்கு பூணுால் வெளியே வந்தததை மறுக்க முடியுமா?

திமுகவும், பிராமணர்களும்: நாராயணன் கூறியது “கடந்த 2021 சட்டசபை தேர்தலில் பிரஷாந்த் கிஷோர் பாண்டே என்ற பூணுால் அணிந்துள்ள பிரமாணர், தி.மு..,விற்கு வியூகம் அமைத்து கொடுத்து அக்கட்சியை வெற்றி பெற செய்த போதும், பூணுால் வெளியே வந்தததை மறக்கத் தான் முடியுமா? இந்த உண்மைகள் எல்லாம் தி.மு..,வினருக்கு நன்றாகவே தெரியும். ஆனால், ஆட்சியில் உள்ள தி.மு..,வை காக்காய் பிடித்து இயக்கம் நடத்துவோருக்கு தெரிந்திருக்க நியாயமில்லை. பூணுால் தொன்று தொட்டு வெளிவந்து கொண்டு தான் இருக்கிறது. தேவைப்படும் தருணங்களில் எல்லாம் தொடர்ந்து வெளிவரும். பூணுால் அறுப்பு மற்றும் இனப்படுகொலை போன்ற பிரசாரங்களை புறம்தள்ளி, தமிழக மக்களுக்கு தன் கடமைகளையும், சேவைகளையும் தொடர்ந்து பெருந்தன்மையாக செய்து வரும் பிராமண சமூகம் குறித்து தமிழக மக்கள் நன்கு அறிவர். சுப.வீரபாண்டியனின் அநாகரிக மற்றும் சட்டத்திற்கு புறம்பான செயல்பாட்டை சங்கம் வன்மையாக கண்டிக்கிறது. அவர் மீது முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்கள் வரிப்பணத்தில் அமைத்துள்ள குழுக்களில் இருந்து அவரை முதல்வர் கத்தரித்து விட வேண்டும்,” இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

© வேதபிரகாஷ்

23-10-2022.


[1]  இந்த வாதமே தேவையற்றது, இதுவரை பிராமணர்கள் தொடர்ந்து எல்லாமுறைகளிலும் தாக்கப் பட்டு வந்துள்ளனர், ஆனால், அரசியல் ரீதியில் யாரும், ஒன்றும் செய்யவில்லை, செய்து விட முடியவில்லை. அதனால் தான் அவர்கள் ஒதுங்கி போய், தங்களது வேலைகளை செய்து கொன்டிருக்கிறார்கள்.

[2] தினமலர், தி.மு.., ஆதரவு இயக்கங்களின் அநாகரிக, அராஜக அரசியல்: வானதி கடும் கண்டனம், Updated : அக் 23, 2022  10:36 |  Added : அக் 23, 2022  10:31

[3] https://www.dinamalar.com/news_detail.asp?id=3152818

[4] தினமலர், சுப.வீரபாண்டியனுக்குதாம்ப்ராஸ்கண்டனம், Added : அக் 24, 2022  06:10

[5] https://www.dinamalar.com/news_detail.asp?id=3153332

பத்ரிசேஷாத்ரி, அண்ணாவை முட்டாள் எனக் குறிப்பிட்டது, பூணூலை அறுப்பேன் என்று சுப.வீரபாண்டியன் பேசிது, தமிழ் இணைய கல்விக் கழக ஆலோசனை குழுவிலிருந்து நீக்கப் பட்டது! (1)

ஒக்ரோபர் 25, 2022

பத்ரி சேஷாத்ரி, அண்ணாவை முட்டாள் எனக் குறிப்பிட்டது, பூணூலை அறுப்பேன் என்று சுப.வீரபாண்டியன் பேசிது, தமிழ் இணைய கல்விக் கழக ஆலோசனை குழுவிலிருந்து நீக்கப் பட்டது! (1)

பத்ரி சேஷாத்ரி, அறிஞர் அண்ணாவை முட்டாள் எனக் குறிப்பிட்டு 17-10-2022 அன்று ட்விட்டரில் பதிவு செய்தது: குறிப்பிட்ட சாதியினரை அவதூறு செய்து, மிரட்டல் விடுத்து வன்முறையை தூண்டும் வகையில் பேசியுள்ள சுப.வீரபாண்டியனை கைது செய்ய தமிழக காவல்துறைக்கு முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிடுவாரா என பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி கேள்வி எழுப்பியுள்ளார்[1]. பத்ரி சேஷாத்ரி, அறிஞர் அண்ணாவை முட்டாள் எனக் குறிப்பிட்டு ட்விட்டரில் பதிவு செய்தது கடும் கண்டனங்களைக் கிளப்பிய நிலையில், அவர் தமிழ் இணைய கல்விக் கழக ஆலோசனை குழுவில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்[2]. இந்நிலையில், சுப.வீரபாண்டியன் பத்ரி சேஷாத்ரிக்கு கண்டனம் தெரிவித்துப் பேசுகையில், அவர் சார்ந்துள்ள சாதியினரை மிரட்டும் வகையில் பேசியதாக பாஜக நாராயணன் திருப்பதி கண்டனம் தெரிவித்துள்ளார்[3]. சிறுபான்மையினரான பிராமணர்களை மிரட்டும் வகையில் பேசிய சுப.வீரபாண்டியன் மீது முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்[4].

19-10-2022 அன்று தமிழ் இணைய கல்விக் கழக ஆலோசனை குழுவிலிருந்து நீக்கப் பட்டது: பதிப்பாளர் பத்ரி சேஷாத்திரி இடம்பெற்ற தமிழ் இணைய கல்விக் கழக ஆலோசனை குழு மாற்றியமைக்கப்பட்டிருக்கிறது[5]. இது தொடர்பான அரசாணை அக்டோபர் 19ஆம் தேதி வெளியான நிலையில், அதற்கு ஒருநாள் முன்பாகத்தான் 18-10-2022 அன்று பத்ரி சேஷாத்ரி அண்ணா தொடர்பாக சர்ச்சைக்குரிய கருத்துக்களை தமது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்[6]. பத்ரி சேஷாத்திரி கிழக்குப்பதிப்பகம் மூலம் பல புத்தகங்களை வெளியிட்டிருக்கிறார். தொலைக்காட்சி விவாதங்களில் அவர் அரசியல் ஆய்வாளராகவும் பங்கேற்று வருகிறார். வலதுசாரி சிந்தனை கொண்டவராக பொதுவெளியில் அறியப்படும் அவர், தமது ட்விட்டர் பக்கத்தில், அறிஞர் அண்ணாவின் இந்தி எதிர்ப்பு தொடர்பான கருத்துக்கள் அடங்கிய இடுகையை சமீபத்தில் வெளியிட்டிருந்தார். அதில் இடம்பெற்ற சில கருத்துக்கள் சர்ச்சையாக ஆளும் திமுகவினரால் கருதப்பட்டன.

டுவிட்டர் பதிவுகளும், செய்தி உருவாக்கமும்: பத்ரி சேஷாத்ரி நீக்கம் முன்னாள் தமிழக முதல்வர் அறிஞர் அண்ணாவை ட்விட்டரில் தரக்குறைவாக விமர்சித்த கிழக்கு பதிப்பக உரிமையாளர் பத்ரி சேஷாத்ரியை, தமிழ் இணைய கல்விக் கழக ஆலோசனை குழுவில் இருந்து நீக்கவேண்டும் என திமுகவினர் பலரும் கோரிக்கை விடுத்தனர்[7]. அதைத் தொடர்ந்து, தமிழ் இணைய கல்விக் கழக ஆலோசனைக் குழுவில் இருந்து பத்ரி சேஷாத்ரி நீக்கப்பட்டு, அக்குழுவை தமிழக அரசு மாற்றி அமைத்தது[8]. எனினும், திமுக எம்.பிக்கள் vs பத்ரி சேஷாத்ரி கருத்துகள் என சமூக வலைதளத்தில் அனல் பறந்தது. இன்றைக்கு, சமூக ஊடகப் பதிவுகள் செய்திகளாக மாற்றப் படுவதை கவனிக்கலாம். இவ்வாறு கிளப்பிவிடும் “செய்தி” ஓரிரு நாள், ஏதோ முக்கியமான விசயம் போல பேசுவார்கள், அலசுவார்கள், பிறகு அமைதியாகி விடுவார்கள். அதை மறந்தும் விடுவர்.

 சுப.வீரபாண்டியனின் வெறுப்புப் பேச்சு: சுப.வீ கொதிப்பு இந்நிலையில், திமுக மேடை ஒன்றில் பேசிய திராவிட இயக்க தமிழர் பேரவை தலைவர் சுப.வீரபாண்டியன், பத்ரி சேஷாத்ரியின் கருத்தைக் கண்டித்திருந்தார்[9]. தமிழகத்தில் ஒருபோதும் ஆரிய மாடலை நுழையவிடமாட்டோம், அண்ணா, கருணாநிதி பற்றி எவன் ஒருவன் தவறாக பேசினாலும் மரியாதை கொடுக்க முடியாது எனப் பேசியிருந்தார் சுப.வீரபாண்டியன்[10]. இந்த நிலையில், ‘பத்ரி சேஷாத்ரி என்பவன் அண்ணாதுரையை முட்டாள் என விமர்சிக்கிறான். இனிமேலும் அமைதியாக இருக்க முடியாது. ‘இதுநாள் வரை சட்டைக்குள் இருந்த பூணுால் மெல்ல மெல்ல வெளியே வருகிறது. கத்தரித்து விடுவோம் என்பதை மனதில் வைத்து கொள்ளுங்கள்.’வழக்கமாக யாரையும் அவன் என்று விமர்சிப்பதில்லை. இனிமேல், மரியாதை கொடுக்க முடியாதுஎன, பதிப்பாளர் பத்ரி சேஷாத்ரிக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்[11], திராவிட இயக்க தமிழர் பேரவை பொதுச் செயலர் சுப.வீரபாண்டியன். தி.மு.க., ஆதரவாளராக செயல்படும் இவர், தமிழக அரசு அமைத்துள்ள சமூக நீதி குழு உறுப்பினராகவும் உள்ளார்[12]. தமிழ் இணைய கல்விக் கழக ஆலோசனை குழுவில் இவரும் உறுப்பினராக உள்ளார் என்பது நோக்கத் தக்கது.

சுப்வீரபாண்டியனின் தாக்கம்: திராவிடத்துவவாதியாக, பெரியாரிஸவாதியாக, உலா வரும் இவர், திகவிலிருந்து, திமுக வரை, சென்னை பல்கலைக் கழக மேடைகளில் பேசுவது வழக்கமாக இருக்கிறது. இம்மாதத்தில் சென்னை பல்கலைக்கழகத்தில், சரித்திரத் துறை சார்பில் நடந்த செமினாருக்கு கனிமொழி, மற்றும் இவரும் வந்திருந்தார்கள். கருணானந்தம் ஏற்கெனவே திகவில் இருந்து கொண்டு, சரித்திரத் துறையில், கௌரவ விரிவுரையாளராகவும் பணியாற்றி வந்தார். ஜகதீசன், நாகநாதன் போன்றோரின் நண்பரும் ஆவார். ஆக, இவர்கள் எல்லோரும் பல்லாண்டுகளாக, தமது சித்தாந்தத்தில் ஊறி ஒன்றாக சேர்ந்து வேலை செய்து வருகின்றனர். தமிழக கல்வி, பாடதிட்டம், பாடமுறை, புத்தகங்கள் முதலியவற்றை வடிவமைத்தல், உருவாக்குதல் பள்ளி-கல்லூரிகளில் பாடம் எடுப்பது, விளக்குவது போன்றவற்றிலும் ஈடுபட்டு வருகிறார்கள். அந்நிலையில் தங்களது விசுவாசத்திற்கு ஏற்றபடி தான் பேசுவார்கள், வேலை செய்வார்கள். அத்தகைய ஒற்றுமை இந்துத்துவவாதிகளிடம், குறிப்பாக அரசியல் இந்துத்துவவாதிகளிடம் இல்லை.

பத்ரி சேஷாத்ரியை விமர்சிக்க சாதியை இழுத்து மிரட்டல் விடுத்துள்ள சுப.வீரபாண்டியனை கைது செய்வாரா முதல்வர்?: என பாஜக நாராயணன் திருப்பதி கேள்வி எழுப்பியுள்ளார். உங்களுக்கு உரிமை உண்டு இதுகுறித்து பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள அறிக்கையில், “பத்ரி சேஷாத்திரியை அரசு பொறுப்பில் நியமிப்பதும், நீக்குவதும் அரசின் உரிமை. அவர் யாரையாவது அநாகரீகமாகவோ, தரக்குறைவாகவோ பேசியிருந்தால் அவர் மீது நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு அதிகாரமும், கடமையும் உள்ளது. நேரு, இந்திரா காந்தி, இராஜாஜி, காமராஜர், எம்ஜிஆர், ஜெயலலிதா மற்றும் எண்ணற்ற தலைவர்களை அச்சில் ஏற்ற முடியாத தரக்குறைவான வார்த்தைகளால் விமர்சித்த கூட்டம் தான் இந்த திராவிடர் கழக கூட்டம். பிராமண சமுதாயத்தை இழிவாக அதே போல், தற்போதும் ஹிந்து மத கடவுள்களை, மத நம்பிக்கைகளை அநாகரீகமாக, தரக்குறைவாக, இழிவாக பேசிய, பேசிக்கொண்டிருக்கின்ற திராவிடர் கழக மற்றும் அதன் தோழமை கும்பல் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டிய பொறுப்பும், கடமையும் மாநில அரசுக்கு உள்ளது. ஆனால், பத்ரி சேஷாத்ரியை கண்டிக்கும் போர்வையில், திராவிடர் இயக்க தமிழர் பேரவையின் சுப.வீரபாண்டியன், பிராமண சமுதாயத்தை இழிவுபடுத்தும் வகையில் பேசியுள்ளதோடு, பூணூலை கத்தரித்து விடுவோம் என்று மிரட்டும் தொனியில் பேசியிருப்பது சிறுபான்மை சமூகமான பிராமண சமூகத்திற்கு விடப்பட்டு இருக்கும் அப்பட்டமான மிரட்டல்.

© வேதபிரகாஷ்

23-10-2022.


[1] தமிழ்.ஒன்.இந்தியா, பூணூலை அறுப்பேன் என்று பேசிய சுப.வீரபாண்டியனை கைது செய்வாரா முதல்வர்? – கொந்தளித்த பாஜக நாராயணன்!, By Vignesh Selvaraj, Updated: Saturday, October 22, 2022, 17:12 IST.

[2] https://tamil.oneindia.com/news/chennai/bjp-narayanan-thirupathy-has-questioned-whether-cm-stalin-will-arrest-suba-veerapandian-who-has-defa-481781.html

[3] தமிழ்.ஏசியாநெட்.நியூஸ், பூணூலை அறுப்பேன்.! கொந்தளித்த சுப.வீரபாண்டியன்.. கடுப்பான பாஜக , நாராயணன் திருப்பதி,Raghupati R; First Published Oct 22, 2022, 7:24 PM IST; Last Updated Oct 22, 2022, 7:24 PM IST.

[4] https://tamil.asianetnews.com/politics/auspicious-will-stalin-order-the-tamil-nadu-police-to-arrest-veerapandian-rk5qnn

[5] பிபிசி.தமிழ், அண்ணா பற்றிய சர்ச்சை ட்வீட்பத்ரி சேஷாத்ரி இடம்பெற்ற ஆலோசனை குழு மாற்றம்என்ன நடந்தது?, 20 அக்டோபர் 2022

[6] https://www.bbc.com/tamil/india-63326503

[7] தமிழ்.நியூஸ்.18, ட்விட்டரில் அண்ணா குறித்து அவதூறு கருத்து தெரிவித்த பத்ரி சேஷாத்ரி நீக்கம், News Desk, தமிழ்நாடு, 13:54 PM October 20, 2022.

[8] https://tamil.news18.com/videos/tamil-nadu/action-against-badri-seshadri-for-making-comments-about-anna-on-twitter-822178.html

[9] ஜீ.நியூஸ், பேரறிஞர் அண்ணா முட்டாள்பத்ரி சேஷாத்ரி போட்ட ட்வீட்ஒரே இரவில் தூக்கியடித்த அரசு!, Written by – க. விக்ரம் | Last Updated : Oct 20, 2022, 02:54 PM IST.

[10] https://zeenews.india.com/tamil/tamil-nadu/cn-annadurai-should-be-called-an-idiot-too-says-badri-seshadri-415837

[11] தமிழ்.வெப்.துனியா, அண்ணாவை அவமதித்து பேசிய பத்ரி சேஷாத்ரி..! – ஆலோசனை குழுவிலிருந்து நீக்கி நடவடிக்கை!, Written By Prasanth Karthick; Last Modified; வியாழன், 20 அக்டோபர் 2022 (16:17 IST)

[12] https://tamil.webdunia.com/article/regional-tamil-news/badri-sheshadri-removed-from-tn-education-advice-council-122102000059_1.html

திராவிட ஆட்சிகளில் தேசத் துரோக மற்றும் பத்திரிக்கையாளர்களின் வழக்குகளும், அவற்றின் பின்னணியும் – தேசிய அளவில் உள்ள வழக்குகளுடன் அவற்றை ஒப்பிட முடியாது (3)

மே 15, 2022

திராவிட ஆட்சிகளில் தேசத் துரோக மற்றும் பத்திரிக்கையாளர்களின் வழக்குகளும், அவற்றின் பின்னணியும் தேசிய அளவில் உள்ள வழக்குகளுடன் அவற்றை ஒப்பிட முடியாது (3)

நீதிமன்றமும் அரசையும், சட்டமன்றத்தையும் மதிக்க வேண்டும்: உச்ச நீதிமன்றத்தின் இவ்வுத்தரவு பற்றி மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜுஜூ கூறியதாவது[1]: “நாங்கள் எங்கள் நிலைப்பாட்டை மிகத் தெளிவாகக் கூறியுள்ளோம். மேலும் இவ்விவகாரத்தில் பிரதமரின் நோக்கம் குறித்து நீதிமன்றத்திற்குத் தெரிவித்துள்ளோம். நீதிமன்றத்தையும் அதன் சுதந்திரத்தையும் நாங்கள் மதிக்கிறோம். ஆனால் லட்சுமண ரேகை என ஒன்று உள்ளது. அதனை அரசின் அனைத்து அமைப்புகளும் மதிக்க வேண்டும். நீதிமன்றமும் அரசையும், சட்டமன்றத்தையும் மதிக்க வேண்டும். எங்களிடம் தெளிவான எல்லை நிர்ணயம் உள்ளது. அந்த லட்சுமண ரேகயை யாரும் கடக்கக்கூடாது,” இவ்வாறு கூறினார்[2]. அப்பிரிவு தேவயில்லை என்ற படசத்தில், இன்னொரு சட்டம் உருவாக்கப் படும். ஏனெனில், தேசத்துரோக கருத்துகள், வேலைகள், தீவிரவாதங்கள் இருக்கத்தான் செய்கின்றன. பிறகு அவற்றைக் க்ட்டுப் படுத்த, தடுக்க, தீர்க்க்க, தண்டிக்க நீதிமன்றம், அரசு, சட்டமன்றம், நாடாளுமன்றம் என்ன செய்ய முடியும் என்று கவனிக்க வேண்டும்

பிரிட்டிஷ் கால சட்டங்களில் ஒன்று தேச துரோக சட்டம்[3]. இந்த சட்டம் அரசியல் காரணங்களுக்காக பழிவாங்கவே அதிகம் பயன்படுத்தப்படுவதாக குற்றச்சாட்டு உள்ளது[4]. இதில் மத்திய, மாநில அரசுகள் எதுவும் விதிவிலக்கல்ல என்றும் கூறப்படுகிறது. இச்சட்டத்தை நீக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் ஏராளமான மனுக்கள் உள்ளன. கடந்த திங்களன்று (மே 09) இம்மனுக்கள் தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது. மத்திய அரசு, இச்சட்டம் குறித்து பரிசீலிப்பதாகவும், அதன் முடிவுகள் வரும் வரை இச்சட்டத்திற்கு எதிரான மனுக்களை விசாரிக்க வேண்டாம் என கேட்டுக்கொண்டது. இந்நிலையில் இன்று மீண்டும் அம்மனுவை விசாரித்த கோர்ட், அச்சட்டத்தை நிறுத்தி வைப்பதாக அதிரடி உத்தரவு பிறப்பித்தது. ”அரசின் பரிசீலனை முடியும் வரை தேச துரோக சட்டத்தை பயன்படுத்தக் கூடாது. மத்திய, மாநில அரசுகள் பிரிவு 124ஏ-வை பயன்படுத்தி வழக்கு பதியாது என நம்புகிறோம். தேச துரோக வழக்கின் கீழ் உள்ள விசாரணைகள் நிறுத்தி வைக்கப்படுகிறது. ஏற்கனவே தேச துரோக வழக்கில் சிறையில் உள்ளவர்கள் ஜாமின் கோரி நீதிமன்றத்தை அணுகலாம்” என நீதிபதிகள் கூறினர்.

இந்தியாவில் தேசத்துரோக சட்டம், முந்தைய வழக்குகள்: பிரிடிஷ்-இந்திய அரசுக்கு எதிராக இருந்தவர்களைத் `தேசத்துரோகிகள்’ என்று அழைக்கப் பட்டனர், அதில், விடுதலை போராளிகளும் அடங்குவர். பகத்சிங் போன்றவர்கள் தேசத்துரோகிகள் எனராங்கிலேயர் அரசு முத்திரைக் குத்தியது. தேசத் துரோக வழக்கில் திலகர் 18 மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டார். 1922-ம் ஆண்டு மகாத்மா காந்தி, யங் இந்தியா இதழில் பிரிட்டிஷ் அரசுக்கு எதிராகக் கட்டுரை எழுதியபோது, காந்தி மீதும் `யங் இந்தியா’ வெளியீட்டாளர் சங்கர்லால் பாங்கர் மீதும் இந்தச் சட்டம் பாய்ந்தது. “இந்தியர்கள் மீது அடக்குமுறையைப் பாய்ச்சுவதற்காகவே இந்தச் சட்டம் திட்டமிட்டு வடிவமைக்கப்பட்டுள்ளது,” என்று காந்தி, 124ஏ பிரிவு குறித்து கூறியுள்ளார். ஜவகர்லால் நேரு இச்சட்டப் பிரிவு 124ஏ ஏற்றுக்கொள்ள முடியாத மிகவும் ஆட்சேபனைக்குரிய சட்டம் எனத் தெரிவித்தார். இந்தியர்களை அடக்கி வைக்கவே தேசத்துரோகச் சட்டத்தை பிரிடிஷ்-இந்திய ஆட்சியாளர்கள் திட்டமிட்டு இயற்றினர் என மகாத்மா காந்தி கருத்து தெரிவித்தார். தேசத் துரோக வழக்கில் வ. உ. சிதம்பரம்பிள்ளை 1908 முதல் 1912 முடிய வரை சிறையில் அடைக்கப்பட்டார். 2003-ஆம் ஆண்டில் விசுவ இந்து பரிசத் பொதுச் செயலாளர் பிரவீன் தொகாடியா தேசத் துரோக வழக்கில் கைது செய்யப்பட்டார். 2010-இல் எழுத்தாளர் அருந்ததி ராய் காஷ்மீர் பிரிவினைவாதம் மற்றும் மாவோயிஸ்டுகளுக்கு ஆதரவாகவும், இந்திய அரசுக்கு எதிராகவும் எழுதியதற்கு தேசத் துரோக வழக்கில் குற்றம் சாட்டப்பட்டார்.

பிரிவு 124 க்கு ஆதரவான கருத்துக்கள்: இந்திய தண்டனைச் சட்டம், பிரிவு 124 ஏ தேசப் பிரிவினைவாதிகள் மற்றும் தீவிரவாதிகளுக்கு எதிராகப் பயன்படுத்தப்படுகிறது. வன்முறை மற்றும் சட்டவிரோதமாக அரசை அகற்றுவதற்கான முயற்சிகள் நடந்தால், அவற்றிலிருந்து மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை இந்தச் சட்டம் பாதுகாக்கிறது. அரசின் நிலையான தன்மை, தேசத்தின் ஒற்றுமைக்கும் பொருளாதாரத்துக்கும் முக்கியமானதாகும். நீதிமன்ற அவமதிப்பு செய்தால், தண்டனை வழங்கப்படுவது போல அரசை அவமதித்தால் தண்டனை கிடைக்கும் என்பதை இந்தச் சட்டம் உறுதி செய்கிறது’ என இதன் ஆதரவாளர்கள் கருதுகின்றனர். பல மாநிலங்களில் மாவோயிஸ்ட்டுகள் கிளர்ச்சி செய்து வருகின்றனர். இவர்கள் அரசைக் கவிழ்க்க முயன்று, பல்வேறு கிளர்ச்சிகளில் ஈடுபடுகின்றனர். வடகிழக்கு மாநிலங்களில், காஷ்மீரத்தில் தேசவிரோத குழுக்கள் வெளிப்ப்டையாகவே, ஆயுதம் ஏந்தி போராடி வருகின்றன. இவற்றைத் தடுத்து, அரசை நிலைநாட்ட இந்தச் சட்டம் பயன் படுத்தப்படுவதாக இதன் ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர். 03-07-2019  அன்று நாடாளுமன்றத்தில் பேசிய உள்துறை இணையமைச்சர் நித்யானந்த் ராய், “எந்தக் காரணத்தைக் கொண்டும் தேசத்துரோக சட்டம் ரத்து செய்யப்படாது, தேச விரோத, பிரிவினைவாத மற்றும் பயங்கரவாதிகளைத் திறம்பட எதிர்த்துப் போராடுவதற்காகவே இந்தச் சட்டம் உருவாக்கப்பட்டுள்ளது,” என்றார்.

பிரிவு 124 க்கு எதிர் கருத்துகள்: தேசத்துரோகச் சட்டம், காலனிய ஆதிக்கத்தின் நினைவாக இன்னும் இந்தியாவில் இருந்து கொண்டிருக்கிறது. ஜனநாயக நாட்டுக்கு இதுபோன்ற சட்டங்கள் பொருந்தாது. இந்திய அரசியலமைப்புச் சட்டம் தன் குடிமக்களுக்குத் தந்த பேச்சு சுதந்திரத்தை இந்தச் சட்டம் பறிக்கிறது’ என்று இந்தச் சட்டத்தை எதிர்ப்பவர்கள் கூறுகின்றனர். அரசின் கருத்துக்கு எதிராக நிலைப்பாட்டைக் கொண்டிருப்பது, விவாதம் நடத்துவது ஜனநாயகத்திற்குத் தேவையான அத்தியாவசியமான விஷயங்கள். ஆட்சியாளர்களைக் கேள்வி கேட்கும் உரிமை, விமர்சிக்கும் உரிமை மக்களின் அடிப்படைத் தேவை. “தேசத்துரோக வழக்கை வைத்து இந்தியர்கள் மீது அடக்குமுறையை ஏவிய, பிரிட்டன் தன் நாட்டில் தேசத்துரோக சட்டத்தையே ரத்து செய்து விட்டது. இந்தியாவில் இந்தச் சட்டம் இன்னும் பயன்பாட்டில் இருப்பது ஏன்?,” என்கிற கேள்வியும் இந்தச் சட்டத்தை எதிர்ப்பவர்களிடம் எழுகிறது.

கேதார் நாத் சிங் வழக்கும், தீர்ப்பும்: தேசத் துரோகம் தொடர்பான இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 124(அ) குறித்து தேசிய அளவில் தீவிர விவாதம் எழுந்துள்ளது. மூன்றாண்டுகள் முதல் ஆயுட்காலம் வரையிலும் நீட்டிக்கக்கூடிய சிறைத் தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து தண்டனை விதிக்க இப்பிரிவு வகைசெய்கிறது. மத்திய அரசின் பார்வையோ நடைமுறையில் இருந்துவரும் இந்தச் சட்டப்பிரிவு மேலும் தொடர வேண்டும் என்பதாகவே இருக்கிறது. இச்சட்டப்பிரிவு செல்லும் என்று 1962-ல் அளிக்கப்பட்ட கேதார் நாத் சிங் வழக்கின் தீர்ப்பையே உச்ச நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு பின்பற்ற வேண்டும் என்ற அரசு வழக்கறிஞர்களின் வாதங்களை உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளவில்லை. கேதார் நாத் சிங் வழக்கின் தீர்ப்பில் தேசத் துரோகச் சட்டப்பிரிவை உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொண்டபோதிலும்கூட, அப்பிரிவு தவறாகப் பயன்படுத்தக்கூடாது என்பதற்கான கட்டுப்பாடுகளையும் விதித்தது. வன்முறையைத் தூண்டிவிடவோ அல்லது அதற்கு அழைப்புவிடுக்கவோ செய்யாதபட்சத்தில், அரசின் மீது கூறப்படும் விமர்சனங்கள் தேசத் துரோகம் ஆகாது என்று அத்தீர்ப்பு வரையறுத்தது.

வினோத் துவாவின் விமர்சனம், அரசியல் ரீதியிலான முறையீடு: தற்போது தொடரப்பட்டிருக்கும் வழக்கு இமாச்சல பிரதேசத்தைச் சேர்ந்த பத்திரிகையாளர் வினோத் துவா, பெருந்தொற்றின்போது புலம்பெயர் தொழிலாளர்களின் பிரச்சினைகளை மத்திய அரசு எதிர்கொண்ட விதத்தை விமர்சனம் செய்து தெரிவித்த கருத்துகளின் அடிப்படையில் அவருக்கு எதிராகத் தொடரப்பட்ட தேச விரோதக் குற்றச்சாட்டைத் தொடர்ந்து எழுந்ததாகும்[5]. வினோத் துவா மீதான இக்குற்றச்சாட்டை, இரண்டு நீதிபதிகள் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு ஏற்கெனவே தள்ளுபடி செய்துவிட்டது. தன் மீதான முதல் தகவல் அறிக்கையை ரத்துசெய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் மனு செய்திருந்த வினோத் துவா, குறைந்தபட்சம் பத்தாண்டு காலம் ஊடகங்களில் பணிபுரிந்த பத்திரிகையாளர்கள் மீது இக்குற்றச்சாட்டைப் பதிவுசெய்யும் முன்னர் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அல்லது அவரால் நியமிக்கப்பட்டவர், எதிர்க்கட்சித் தலைவர், மாநில உள்துறை அமைச்சர் ஆகியோரைக் கொண்ட குழுவிடம் முன்கூட்டி ஒப்புதல் பெறப்பட வேண்டும் என்று உத்தரவிடுமாறும் கோரியிருந்தார். உள்நோக்கம் கொண்ட இக்கோரிக்கையில், அரசியல் இருப்பது வெளிப்பட்டது. சட்டப்பிரிவு தவறாகப் பயன்படுத்தப்படக் கூடாது என்ற நோக்கில் அவர் கோரிய இந்த வேண்டுதலை உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளவில்லை[6].

© வேதபிரகாஷ்

15-05-2022


[1] தினமலர், லட்சுமண ரேகையை கடக்க வேண்டாம்:சுப்ரீம் கோர்ட் உத்தரவு குறித்து மத்திய அமைச்சர்,மாற்றம் செய்த நாள்: மே 11,2022 19:06

[2] https://m.dinamalar.com/detail.php?id=3027322

[3] தினகரன், தேச துரோக சட்டம் மறு பரிசீலினை: ஒன்றிய அரசு, 2022-05-09@ 16:05:06.

[4] https://www.dinakaran.com/news_detail.asp?Nid=763940

[5] தமிழ்.இந்து, தேசத் துரோகம் என்னும் காலனிய எச்சம்!,, செல்வ புவியரசன், Published : 09 May 2022 06:46 AM; Last Updated : 09 May 2022 06:46 AM

[6] https://www.hindutamil.in/news/opinion/columns/797680-treason-1.html

திராவிட ஆட்சிகளில் தேசத் துரோக வழக்குகளும், அவற்றின் பின்னணியும் –  திராவிடஸ்தான் முதல் திராவிடியன் ஸ்டாக் வரை – தேசிய அளவில் உள்ள வழக்குகளுடன் அவற்றை ஒப்பிட முடியாது (2)

மே 15, 2022

திராவிட ஆட்சிகளில் தேசத் துரோக வழக்குகளும், அவற்றின் பின்னணியும்  திராவிடஸ்தான் முதல் திராவிடியன் ஸ்டாக் வரைதேசிய அளவில் உள்ள வழக்குகளுடன் அவற்றை ஒப்பிட முடியாது (2)

திராவிடஸ்தான் முதல் மாநில சுயயாட்சி வரை: 1930-40களில் தனித்தமிழ் இயக்கம், திராவிட இனக் கட்டுக்கதைகளை வளர்த்தன. சைவம் என்ற போர்வையில், வைணவத்தை எதிர்த்து, தெலுங்கு பேசும் மக்களை அவமதித்த போக்கு, நீதிகட்சியைக் குலைத்து, திராவிட கழக போர்வையில், தமிழக பிரிவினை உருவெடுத்தது[1]. திராவிடஸ்தான் என்று ஆரம்பித்து, “அடைந்தால் திராவிட நாடு, இல்லையென்றால் சுடுகாடு” என்று சென்று, பிறகு, எல்லாமே குப்பையில் என்றாகியது. ஆனால், அத்தகைய தேசவிரோத கொள்கையிலிருந்து மற்ற மொழி மக்கள் வேறுபட்டனர். 1940-50 திராவிட இனவெறி கட்டுக் கதைகளினால் தான், முதலில் ஆந்திரா தனியாகப் பிரிந்தது, முதல் மொழிவாரி மாநிலமானது. தொடர்ந்து “தமிழ்” தான் உயர்ந்தது, அதிலுருந்து தான் மற்ற மொழிகள் தோன்றின என்பதனை சாதாரண மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. குறிப்பாக, தெலுங்கு மக்கள் ஒப்புக் கொள்ளவில்லை. பட்டிபோர்லு [Bhattiporlu] வரிவடிவங்களை [script] மற்றும் கல்வெட்டுகளை [inscriptions] வைத்துக் கொண்டு, தெலுங்கு வரிவடிவம் BCE மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்று வாதிட்டனர்.

1950-70களில் பெரியார்-அண்ணா திராவிட நாட்டை குப்பைத் தொட்டியில் போட்டனர்: பெரியார் ஆதித்தனாருடன் சேர்ந்து “திராவிட நாடு” தேவையில்லை என்றே பேசினார். அண்ணாவைப் பற்றிச் சொல்லத் தேவையில்லை, முதலமைச்சர் ஆக வேண்டும், தேதலில் நிற்க்கவேண்டும் என்றால், பிரிவினை பேச முடியாது. அதனால், திராவிடஸ்தானும் போய் விட்டது, திராவிட நாடும் மறந்து விட்டது, “தமிழ் நாடு” என்பதில் திருப்தி பட்டு, சுருங்கி விட்டனர். அப்படியிருந்த நிலையில், இப்பொழுது, ஸ்டாலின் “திராவிடியன் ஸ்டாக்” என்று பேசியதை / பேசுவதை கவனிக்கலாம். யாரோ தவறாக சொல்லிக் கொடுத்திருக்கின்றனர் போலும். “திராவிடியன் மாடல்” வசனங்கள் வேறு தொடர்கின்றன. அவை, “ஒன்றிய” அரசுக்கு எதிராக இருக்கிறன. கூட கவர்னர் எதிர்ப்பு வேறு. இவையெல்லாம் தேசவிரோதம் ஆகுமா, தேசாபிமானம் ஆகுமா என்று தெரியவில்லை. “மாநில சுயயாட்சி” வாதம், டிவி விவாதங்களில் எதிரொலிக்கின்றன. திமுக-திக-கம்யூனிஸ்ட் வகையறாக்கள் இதில் சளைத்தவர்கள் அல்லர்.

எம்,ஜி.ஆருக்குப் பிறகு பிரிவினைவாடம் குறைந்தது: “தமிழ்நாடு” உருவானபோது கூட, எல்லை தகராறுகளில் கேரளா, ஆந்திரா மற்றும் ஆந்திராவுடன் எதிராகவே இருந்தது. தமிழநாட்டைத் தவிர மற்ற மாநில மக்கள் தாங்கள் “திராவிடர்கள்” என்றெல்லாம் ஏற்றுக் கொள்ளவில்லை. அதனால், திராவிடத்துவ சித்தாந்தம் தமிழ்நாடு மாநிலத்துடன் சுருங்கி விட்டது. 1950-60களில், “இந்தி-எதிர்ப்பை” கையில் எடுத்து உசுப்பி விட்டனர். 1960-70களில் மேடை பேச்சு, சினிமா வைத்டுக் கொண்டு ஆட்சியைப் பிடித்தனர். 1980-70களில் காவிரி பிரச்சினையில், முன்னர் பாமகவினால், அதிகமாகவே வெறியூட்டப் பட்டு, பிறகு திராவிட பிரிவினைவாதிகளால் தீயூட்டப் பட்டது. அப்பொழுது, இங்கு “உடுப்பி” ஹோட்டல்கள் அடித்து நொறுக்கப்பட்டன. ஶ்ரீ ராகவேந்திர மடங்களும் தாக்கப்பட்டன.  1970-80களில் எம்ஜிஆரால் பிரிவினைவாதம் கொஞ்சம் குறைந்தது. “மாநில சுயயாட்சி” போர்வையில், அவ்வப்போது, திராவிடத்துவ சித்தாந்திகள் பேசுவது வழக்கமாக இருக்கிறது.

ஆரியன்திராவிடன்இனவாதம் முதல் திராவிடியன் ஸ்டாக் இனவெறிவாதம் வரை: திராவிட சித்தாந்திகள் தமிழரை, தமிழகத்தை பிரித்து வைத்து, துவேசத்தை வளர்த்து வருவது: தமிழகத்தில் கடந்த நூறாண்டு காலத்தில், –

  • தமிழ்-தமிழரல்லாதவர்,
  • திராவிடன் – ஆரியன்,
  • தென்னகத்தவன் – வடக்கத்தியன்,
  • வடக்கு வாழ்கிறது-தெற்கு தேய்கிறது
  • ஹிந்தி-ஹிந்தி-திணிப்பு
  • ஹிந்தி-எதிர்ப்பு இந்தி-திணிப்பு

போன்ற பிரச்சாரங்களால், மற்ற மொழி பேசும், மற்ற மாநிலத்தவர் மீது, மனங்களில் துவேசத்தை வளர்த்து கொண்டிருக்கிறார்கள். “வந்தேறி” தத்துவம் எப்பொழுதுமே உணர்ச்சிப் பூர்வமாக எடுத்துக் கொண்டு, மற்றவர்களைத் தாக்கப் பயம் படுத்தப் பட்டு வருகிறது. பிராமணர், மார்வாடி, குஜராத்தி, வடவிந்தியன் போன்ற பிரிவினை துவேசம் இன்றும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.யைப்பொழுது அது “குஜராத்திற்கு” எதிராக இருக்கிறது. எந்த பிரச்சினை என்றாலும், “தமிழன்” என்று தான் அடைமொழி போட்டு செய்தி போடுவது, ஊடகங்களுக்கும் வாடிக்கையாக இருக்கிறது. ஶ்ரீலங்கா மதப்பிரச்சினை என்றாலும், “தமிழர்-முஸ்லிம்” என்று தான் செய்திகள் வெளியிட்டு, மதப்பிரச்சினையை மறைக்கப் பார்த்தனர்.

2021ல் ஸ்டாலின், திராவிடியன் ஸ்டாக் என்று கிளம்பியுள்ளார்: முத்துவேலர் கருணாநிதி ஸ்டாலின் என்கின்ற நான் என்று பதவியேற்று, தான் திராவிடியன் ஸ்டாக் என்று குறிப்பிட்டுக் கொண்டாலும், விளம்பர அரசியல் நடத்திக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் தான், திராவிட மொழி பேசும், தனிநாடு கேட்கும், திராவிட இனத்தவரான பலூச்சிஸ்தான் மக்கள் ஜின்னாவில் சிலையை தகர்த்துள்ளனர். இங்கு, கருணாநிதிக்கும், பெரியாருக்கும் சிலைகள் வைப்போம் என்று கிளம்பியுள்ளனர். பிரஹூயி, பிரோஹி, பிரஹூய், என்றெல்லாம் குறிப்பிடப் படுகின்ற மொழி திராவிடக் குடும்ப மொழி என்று திராவிடத்துவ வாதிகள் தம்பட்டம் அடித்துக் கொள்கிறார்கள், இன்றும் மேடைகளில் டமாரம் அடிக்கிறார்கள்! பிறகு, அம்மொழி பேசும் மக்களைக் கொடுமைப் படுத்தும் பாகிஸ்தானை ஏன் திராவிடத்துவ வாதிகள் கண்டு கொள்வதில்லை?

பொருளாதாரம்நிதி என்று வந்தால் சித்தாந்தம் முடங்கி விடும்: “காவிரி பிரச்சினை” என்றாலும், திராவிட அரசியல்வாதிகளின்  கையாலாகாத விசயத்தை மறைத்து, கர்நாடகாவை, கன்னட மொழி பேசுபவர்கள் மீது வெறுப்பை-காழ்ப்பை வளர்த்து வருகின்றனர். அதற்கு சத்தியராஜ், விவேக் போன்ற நடிகர்களும் உடந்தையாக இருந்தனர். ஒரு திரைப்படத்தில், “இது பெங்களூரு கத்தரிக்காய், காவிரி நீரால் வளர்ந்து பெரிதாக இருக்கிறது, அது தமிழக கத்திரிக்காய், சிறிதாக இருக்கிறது, காவிரி நீர் கிடைத்தால், அதுவும் பெரிதாக வளரும்,” என்று சொல்வது, பிரிவினையின் வக்கிரகத்தைத் தான் வெளிக்காட்டியது. ஐடியால் கர்நாடகா வளர்ந்த நிலையிலும், வியாபார சம்பந்தங்களினாலும், இப்பொழுது அடக்கி வாசிக்கப் படுகிறது. சன்–குழுமங்களின் தொடர்புகள் அறிந்த விசயமே. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, அவை வேறு வகையிலும் செயல்படுகின்றன. பொருளாதாரம், நிதியுதவி, திட்டங்கள் என்றெல்லாம் வரும் பொழுது, “ஒன்றியம்”என்று வேலை செய்யாது. தொடர்ந்து கவர்னரை எதிர்த்து வந்தாலும், வினையில் தான் சென்று முடியும்.

தேசத் துரோகம் எல்லாவற்றிலும் தான் செயல்படுகிறது: தினம்-தினம் கொலைகள், தற்கொலைகள், செக்ஸ்-வக்கிர வன்மங்கள் (அப்பா மகளை கற்பழிப்பது, மாமனார் மறுமகளிடம் எல்லை மீறுவது), வன்முறைகள், குடும்பசீரழிவுகள், கணவன்–மனைவி உறவுகள் சீரழிதல், தாம்பத்தியத்தை மீறிய உறவுகள், குடும்பக் கொலைகள் (அப்பா மனனைக் கொல்லுதல், மகன் அப்பாவைக் கொல்லுதல் முதலியன), குறைந்து வரும் மாணவ-மாணவியர் ஒழுக்கம், நடத்தை, லஞ்சத்தைப் பற்றி சொல்லவே வேண்டாம், தினம்-தினம் கைது, சஸ்பெண்ட் என்ற செய்திகள்…இந்நிலையில் திராவிடக் கட்சிகள் பரஸ்பர குற்றச் சாட்டுகள் சொல்லிக் கொண்டு தப்பிக்க / காலந்தள்ள முடியாது. விலைவாசிகள் ஏறுகின்றன என்றால், வியாபர ஒழுக்கம், வணிக தராதரம், முதலியவைப் பற்றி கண்டுகொள்வதில்லை. சங்கங்கள் மூலம் அரசியல் செய்யும் போது, கூட்டுக் கொள்ளைதான் அடிக்கிறார்கள். தக்காளியை ரோடிலும் கொட்டுவார்கள், ரூ.100/-க்கும் விற்பார்கள். கேட்டால் பெரிய பொருளாதார நிபுணன் போல, சப்ளை-டிமான்ட் என்றெல்லாம் கூடப் பேசுவான் திராவிட வியாபாரி.

© வேதபிரகாஷ்

15-05-2022


[1]  இப்பொழுதும் சரவணன், சென்னைப் பல்கலை, சைவசித்தாந்த துறை, போன்ற கும்பல்கள், சைவர் இந்துக்கள் அல்லர் என்று சொல்லி வருகின்றனர். பேஸ்புக்கிலும், இந்த வாத-விவாதங்கள் தொடர்கின்றன.

திராவிட ஆட்சிகளில் தேசத் துரோக வழக்குகளும், அவற்றின் பின்னணியும் – தேசிய அளவில் உள்ள வழக்குகளுடன் அவற்றை ஒப்பிட முடியாது (1)

மே 15, 2022

திராவிட ஆட்சிகளில் தேசத் துரோக வழக்குகளும், அவற்றின் பின்னணியும் தேசிய அளவில் உள்ள வழக்குகளுடன் அவற்றை ஒப்பிட முடியாது (1)

தமிழகத்தில் இரண்டாவதாக அதிக தேசதுரோக வழக்குகள் பதிவு செய்யப் பட்டுள்ளன: தமிழகத்தில் கடந்த 2010 முதல் 2020ம் ஆண்டு வரையிலான அதிமுக ஆட்சியில் அதிகளவு தேச துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டதால், நாட்டிலேயே 2வது இடத்தை பெற்றுள்ளது[1]. இவ்விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றம் விசாரணை நடத்தி வரும் நிலையில் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது[2] என்று தினகரன் கூறுவது வேடிக்கைதான். தேச துரோகம் தொடர்பான இந்திய தண்டனைச் சட்டத்தின் 124ஏ பிரிவு குறித்து உச்ச நீதிமன்றம் விசாரித்து வருகிறது. இந்தச் சட்டத்தை மறுபரிசீலனை செய்யத் தேவையில்லை என்று உச்ச நீதிமன்றத்தில் ஒன்றிய அரசு  தரப்பு வாதாடி வந்தது. ஆனால், இந்தச் சட்டம் தவறாகப்  பயன்படுத்தப்படுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க முடியும் என்று ஒன்றிய அரசின் தரப்பில் கூறப்பட்டது. அதனால், தற்போது நிலுவையில் இருக்கும் தேசதுரோக வழக்குகளையும், இடைப்பட்ட காலத்தில் பதிவு செய்யப்பட்ட தேசதுரோக வழக்குகளையும் எவ்வாறு கையாள்வது என்பது தொடர்பான விபரங்கள் உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசால் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பிரிவினைவாதம் பேசப் படுவது புதியதல்ல: அதிமுக ஆட்சியில் அதிகம், திமுக ஆட்சியில் அதிகம் / குறைவு என்பதெல்லாம் விசயமே இல்லை, ஏனெனில், தமிழ்-தமிழ்நாடு-தமிழ்தேசம்-தமிழ்தேசியம் என்றெல்லாம் பேசி பிரிவினைவாதத்தில், பிரிவினையில் ஈடுபட்டவர்கள், ஈடுபட்டு வருபவர்கள் அதிகமாக இருக்கின்றனர். கருணாநிதி முதலமைச்சராக இருந்த பொழுது அத்தகையோரின் மாநாடுகளுக்கு தடை விதித்துள்ளனர். கொடைக்கானல் டிவி நிலையத்தில் குண்டுவெடிப்பு, மீன்சுருட்டியில் இந்தியன் வங்கி கொள்ளை-கொலை……போன்றவை ஞாபகத்தில் கொள்ளலாம். தமிழீழம் போர்வையிலும், பல குழுக்கள் செயல் பட்டு வந்தது-வருபவை அறியப் பட்டவையே. இப்பொழுது கிலாபா போர்வையில் முஸ்லிம் குழுக்கள் வேலை செய்து வருகின்றன. ஆகவே, தமிழகத்தில் “ஒன்றிய” போர்வையில் நடந்து வரும் பேச்சுகளும் கவனிக்கப் பட்டு வருகின்றன. “மாநில சுயயாட்சி,” “திராவிடியன் ஸ்டாக்,” “திராவியன் மாடல்” என்பவை எல்லாம் அவற்றின் முகமூடிகளே. ஏனெனில், இப்பொழுது இனம், இனவாதம் எல்லாம் யாரும், எந்நாடிலும் பேசுவதில்லை.

ஐபிசியின் பிரிவு  124ன் கீழ் தேசத்துரோக வழக்கு பதிவு: தேசதுரோக வழக்கின்படி, எந்தவொரு நபரும் அரசுக்கு எதிரான கருத்துக்களை எழுதினாலோ அல்லது பேசினாலோ அல்லது அத்தகைய உள்ளடக்கத்தை ஆதரித்தாலோ அல்லது தேசிய சின்னங்கள் மூலம்  அரசியலமைப்பை இழிவுபடுத்த முயன்றால், அவர் மீது ஐபிசி-யின் பிரிவு  124ஏ-ன் கீழ் தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்படலாம். மேலும், தேச விரோத அமைப்போடு தொடர்புடையவராகவோ அல்லது அவர்களுக்கு உடந்தையாக செயல்பட்டால் அவருக்கு எதிராகவும் தேசத்துரோக வழக்கு பதிய முடியும். இந்நிலையில், தேசத் துரோகச் சட்டம் குறித்த விவாதங்களுக்கு மத்தியில் அதிர்ச்சித் தகவல் ஒன்று வெளியாகி உள்ளது என்று தினகரன் குறிப்பிடுவது தமாஷான விசயம் தான். எல்லாவற்றையும் அதிமுக ஆட்சியின் மீது பழி போட்டு தப்பித்துக் கொள்ள முடியாது. இந்த ஐந்தாண்டுகள் பற்றி, பிறகு தான் எடைபோட முடியும். தங்களுக்குத் தானே சான்றிதழ் கொடுத்துக் கொள்ளலாம், ஆனால், மக்களை ஏமாற்ற முடியாது.

2010-2022 ஆண்டுகளில் பதிவான வழக்குகள் எண்ணிக்கை: நாடு முழுவதும் கடந்த 2010ம் ஆண்டு முதல் 2020ம் ஆண்டு வரை அதிகளவு தேசத்துரோக வழக்குகளை பதிவு செய்த மாநிலமாக பீகார் உள்ளது. அதற்கு அடுத்த இடத்தில் தமிழ்நாடு உள்ளது. தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்ட அறிக்கையின்படி, கடந்த 2010ம் ஆண்டு முதல் 2020ம் ஆண்டு வரை, பீகாரில் மட்டும் 168 தேசதுரோக வழக்குகள் பதிவாகியுள்ளன. தொடர்ந்து –

தமிழ்நாட்டில் – 139, உத்தரப் பிரதேசத்தில் – 115, ஜார்கண்ட்டில் -62, கர்நாடகாவில் – 50, ஒடிசாவில் – 30, அரியானாவில் – 29, ஜம்மு காஷ்மீரில் – 26,மேற்குவங்கத்தில் – 22, பஞ்சாப்பில் – 21, குஜராத்தில் – 17, இமாச்சல் பிரதேசத்தில் – 15, டெல்லியில் – 14, லட்சத்தீவில் – 14, கேரளாவில் – 14

என்ற வரிசையில் வழக்குகள் பதிவாகி உள்ளன. இதில் திமுக அரசு பெருமைப் பட்டுக் கொள்வதில் ஒன்றும் இல்லை. இந்த ஒரு வருடத்தில், இந்துவிரோத செயல்கள் எவ்வளவு நடந்துள்ளன என்பதை கவனிக்கலாம். அவையெல்லாம் பெருமை சேர்ப்பவை அல்ல. ஒரு நிலையில் அவையும் தேசவிரோதம் ஆகும்.

வழக்குகள் அதிகம், ஆனால், குற்றம் நிரூபிக்கப் படுவது குறைஆக உள்ளது: மேலும், கடந்த 2016 மற்றும் 2019 ஆண்டுக்கு இடையில், தேசத்துரோக வழக்குகளின் எண்ணிக்கை 160 சதவீதம் (93 வழக்குகள்) அதிகரித்துள்ளது. ஆனால் 2019ம் ஆண்டில் தண்டனை விகிதம் என்று பார்த்தால் 3.3 சதவீதமாக உள்ளது. குற்றம் சாட்டப்பட்ட 93 பேரில் இருவர் மட்டுமே குற்றவாளிகள் என்று அறிவிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழகத்தை பொருத்தமட்டில் 2010ம் ஆண்டு முதல் 2020ம் ஆண்டு வரை அதிகளவு தேசத்துரோக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அந்த காலக் கட்டத்தில் தமிழகத்தில் அதிமுக ஆட்சி நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது, என்று தினகரன் குறிப்பிட்டு சந்தோசப்படுகிறது. ஆனால், திமுகவின் பிரிவினைவாதம் உலகம் அறிந்தது. இப்பொழுதைய “ஒன்றிய” நிலை தொடர்ந்து, கவர்னர் தாக்கப் பட்டால், த்ஹிராவிடியன் மாடல் தகர்ந்து விடும். சடம்-ஒழுங்கு சீரழிந்து கொண்டிருந்தால், முடிவு வேறு மாதிரி சென்று விடும்..

152 ஆண்டுகள் பழமையான தேசவிரோத சட்டத்தை தற்காலிகமாக நிறுத்திவைத்தது: 152 ஆண்டுகள் பழமையான தேசவிரோத சட்டத்தை தற்காலிகமாக நிறுத்திவைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது[3]. 124 ஏ சட்டத்தின் கீழ் வழக்கு பதியவும் தடை விதித்துள்ள உச்ச நீதிமன்றம், தேச துரோக சட்டத்தின் கீழ் சிறையில் உள்ளவர்கள் ஜாமீன் பெற விண்ணப்பிக்கலாம் எனவும் கூறியுள்ளது[4]. ஆங்கிலேயே காலனிய ஆட்சியின்போது அரசுக்கு எதிராக விடுதலைப் போராட்டத்தில் ஈடுபடுபவர்களை ஒடுக்கும் விதமாக தேசத்துரோக வழக்குகள் பதியப்பட்டன. நாடு விடுதலை பெற்ற பின்னரும் காலனிய சட்டமான தேசத் துரோக வழக்கு பதியப்பட்டு வருகிறது.இந்நிலையில், அரசுக்கு எதிராக குரல் எழுப்பும் சமூக ஆர்வலர்கள், அரசியல் தலைவர்கள், பத்திரிக்கையாளர்கள் மீது  124A சட்டப்பிரிவின் கீழ் தேசத் துரோக வழக்குப் பதியப்பட்டு வருவதாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டு வருகிறது. எனவே, காலனியத்துவ தேசத்துரோக வழக்கு சட்டப்பிரிவான 124A-ஐ ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை எழுப்பப்பட்டது.

பத்திரிக்கை சங்கங்கள் வழக்கு தொடர்ந்தன: தேச துரோக சட்டத்துக்கு தடைகோரி எடிட்டர்ஸ் கில்டு, பத்திரிக்கையாளர் அருண் சோரி, எம்பி மௌவா மைத்ரா, பி.யு.சி.எல் உள்ளிட்டோர் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணா, நீதிபதிகள் சூர்ய காந்த் மற்றும் ஹிமா கோஹ்லி ஆகியோர் அடங்கிய மூன்று நீதிபதிகள் அமர்வு இந்த வழக்கை விசாரித்து வருகிறது. வழக்கு 11-05-2022 அன்று விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசும் மாநில அரசுகளும் தேச விரோத சட்டத்தை பயன்படுத்த இடைக்கால தடை விதித்தது[5]. தலைமை நீதிபதி அமர்வு, அதனையும் மீறி ஏதேனும் வழக்குகள் எங்காவது பதிவு செய்யப்பட்டால் நீதிமன்றத்தை நாட உத்தரவிட்டது[6]. இதுதொடர்புடைய வழக்குகளை நீதிமன்றங்கள் விரைந்து முடிக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. இந்த சட்டத்தை பயன்படுத்தாமல் இருக்க மத்திய அரசு மாநிலங்களுக்கு கூடுதல் ஆலோசனைகளை வழங்கலாம் எனவும் உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. ஏற்கனவே கைது செய்யப்பட்ட 13 ஆயிரம் பேர் நீதிமன்றங்கள் மூலம் ஜாமின் பெற்றுக்கொள்ளவும் உச்சநீதிமனறம் அனுமதி அளித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

© வேதபிரகாஷ்

15-05-2022


[1] தினகரன், 2010 முதல் 2020ம் ஆண்டு வரையிலான அதிமுக ஆட்சியில் தேச துரோக வழக்கு பதிந்ததில் தமிழ்நாடு 2வது இடம்: சுப்ரீம் கோர்ட் விசாரணைக்கு மத்தியில் அதிர்ச்சி தகவல், 2022-05-11@ 15:05:14.

[2] https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=764520 

[3] NEWS18 TAMIL, தேச துரோக வழக்கு பதிய உச்ச நீதிமன்றம் தடை.. சட்டம் தற்காலிகமாக நிறுத்திவைப்பு, Published by:Murugesh M, LAST UPDATED : MAY 11, 2022, 13:41 IST. First published: May 11, 2022, 13:40 IST.

[4] https://tamil.news18.com/news/national/breaking-sedition-law-in-abeyance-supreme-court-urges-centre-states-not-to-file-firs-invoking-section-124a-mur-743986.html

[5] தமிழ்.இந்தியன்.இக்ஸ்பிரஸ், அரசு மறுபரிசீலனை செய்யும் வரை தேச துரோக விசாரணையை நிறுத்தி வைத்த உச்ச நீதிமன்றம்!, Written by WebDesk, Updated: May 11, 2022 10:05:24 pm

[6] https://tamil.indianexpress.com/india/supreme-court-interim-order-on-sedition-section-124a-centre-452724/

ஆனைமுகத்தோனுக்கு ஆனைவெடி வைத்து உடைத்தேன் என்று ஆண்டிப்பட்டி ராஜா, ஆனைமுத்து இழவு விழாவில் பேசி ஒப்பாரி வைத்தது! ஈவேராவை பின்பற்றி மாலிகாபூராக மாறியது (2)

ஜனவரி 6, 2022

ஆனைமுகத்தோனுக்கு ஆனைவெடி வைத்து உடைத்தேன் என்று ஆண்டிப்பட்டி ராஜா, ஆனைமுத்து இழவு விழாவில் பேசி ஒப்பாரி வைத்தது! ஈவேராவை பின்பற்றி மாலிகாபூராக மாறியது (2)

அம்மா கொடுத்த விபூதிகளை முதலில் பூசிக் கொண்டேன், பிறகு தூக்கி எறிந்தேன்: “1973 இல் நான் ஆறாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோது, பெரியார் குடில் நடத்தினார் ஆனைமுத்து, அதில் நான் படித்தேன், அப்போது நான் விடுதிக்கு கிளம்பும்போதே என் அம்மா, இது முருகன் கோயில் விபூதி… காலையில் எழுந்ததும் இந்த விபூதிகளை வச்சுக்கோ,  இருட்டில் போனால் இந்த விபூதி வச்சுக்கோ என்று தருவாங்க. நானும் வச்சிட்டு இருந்தேன். அப்போதுதான் பெரியாரின் கடைசி உரையை நான் கேட்டேன்.. …….அதற்கு பிறகு மதம் ஏன் ஒழிய வேண்டும் என்பது போன்ற சின்ன சின்ன புத்தகங்களைப் படித்தேன்.  அதன்பிறகுதான் அந்த விபூதிகளை எல்லாம் தூக்கிப் போட்டேன். தூக்கிப் போட்டதும் இல்லாமல் எங்க ஊரில் ஒரு பிள்ளையார் சிலை இருந்தது, அந்த சிலைக்கு கீழே ஒரு ஆனைவெடி வச்சுட்டேன்.. அது உடைந்து சிதறியது, பின் அது பெரிய பிரச்சனை ஆயிடுச்சு. அதெல்லாம் ஒரு காலம்.. …” சிறுவயதில் அத்தகைய எண்ண உருவானது, என்பது, மனோதத்துவ ரீதியில் அலசவேண்டியுள்ளது. ஆனைமுத்து வீட்டில் எல்லோரும் கடவுள் நம்பிக்கைக் கொண்டவர்கள் தான். ராசாவைப் போல யாரும் அம்மாவின் பேச்சைக் கேட்காமல், மனம் புண்படும் படி நடந்து கொள்ளவில்லை.

நானே நினைத்தாலும் இந்துவாக இருந்து என்னால் வெளியேற முடியாது: ஏ.ராசா பேசியது, “என் வாழ்வில் நான் மாற்றியதற்கு காரணம் பெரியார் பேசிய அந்த கடைசி பேச்சு தான். தொடர்ந்து பேசிய அவர் நானே நினைத்தாலும் இந்துவாக இருந்து என்னால் வெளியேற முடியாது[1]. ஏன் என்றால் இந்து அமைப்பு சட்டத்தில் யார் கிறிஸ்துவர்கள், யார் இஸ்லாமியன், யார் யூதன் இல்லையோ மற்ற அனைவரும் இந்து என்றுதான் சட்டம் உள்ளது. எனவே நானே நினைத்தாலும் வெளியேற முடியவில்லை அப்படி வெளியேறினால் அந்த நாள் வந்தால் அதுதான் ஆனைமுத்துவிற்கு மரியாதை செய்யும் நாளாக இருக்கும்,” என தெரிவித்த அவர் காவியை அழிக்க அனைத்து கருப்பு சிவப்பு நீலமும் ஒன்று சேர வேண்டும் என கூறினார்[2]. இங்கு, அம்பேத்கர் அரசியல் சாசனம் சரியில்லை என்கிறாரா அல்லது இந்துசார்புடையது என்கிறாரா என்பதை கவிக்க வேண்டும். அம்பேத்கர் இந்துவிரோதி, இந்துமதத்தை வெறுப்பவர், தோஷிப்பவர்….. அதனால் தான், அவரது பேச்சுகளும், புத்தகங்களும் அவ்வாறே இருந்தன. பிறகு, அவரது அரசியல் சாசனம், நிர்ணய சட்டத்தைக் குறை சொல்வது ஏன் என்று தெரியவில்லை.

ராசா கொடுக்கும் விளக்கம்[3]: ‘இந்து’ என்றழைக்கப்படும் மக்களில் 95% சதவீதமாகவுள்ள இந்த பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களுக்கு உரிமைக்கோரி தி.மு.க போராடியபோதெல்லாம் அவற்றை எதிர்த்தவர்கள் கிறிஸ்தவர்களா? இஸ்லாமியர்களா? இல்லையே!  அதை செய்தவர்கள் பிராமணர்களும் அவர்களோடு சேர்ந்த முன்னேறிய சாதியை சார்ந்த இந்துக்களும்தான்.  வேறு மொழியில் சொன்னால், பாஜகவும் அதன் பரிவாரங்களுமே இன்றுவரை இடஒதுக்கீட்டை எதிர்த்து வருகின்றன. எனவே, தி.மு.க இந்து விரோத கட்சியல்ல.  யார் ‘இந்து’ என்பதில் பிரச்சனை இருக்கிறது.‘இந்து’ என்று தங்களை ஏற்கும் பிற்படுத்தப்பட்ட சூத்திரர்களுக்கும், தாழ்த்தப்பட்ட பஞ்சமர்களுக்கும், அந்த மதத்தில் சொல்லப்பட்டுள்ள வரையறைகளும், வரம்புகளும், கடமைகளும், கட்டுப்பாடுகளும் ஏற்புடையதா என்பதில் எங்களுக்கு கருத்து வேறுபாடு உண்டு.  அதனால்தான், பேரறிஞர் அண்ணா அவர்களே ‘இந்து’ எனும் அடையாளத்தை ஏற்க மறுத்தார்.  இந்த கருத்துப் போராட்டம் கடந்த நூறு ஆண்டுகளுக்கு மேலாக, குறிப்பாக 1916-ல் வெளிவந்த பிராமணர் அல்லாதோர் அறிக்கை (Non-Brahmin Manifesto) வந்ததில் இருந்தே தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது.  அந்த கருத்துப் போராட்டத்தில் நாங்கள் எப்போதும் தோற்றதில்லை.  தி.மு.க.வின் அரசியல்-சமூகப்பார்வை தமிழர்களை இனத்தால், மொழியால் இனணப்பதேயன்றி; மதத்தால், சாதியால் பிரிப்பதல்ல!.: என்றெல்லாம் விளக்கம் கொடுத்தது விசித்திரமாக இருந்தது[4].

இந்துவிரோதம் மற்றும் எங்க கட்சியில் இந்துக்கள் உள்ளார்கள் என்ற முரண்பாடு தொடரும்: ஆ. ராசா என்கின்ற ஆண்டிப்பட்டி ராஜா இந்து-துவேசம் பேசுவது புதியதல்ல. அவரது வீடியோ பேச்சுகள் ஏற்கெனவே அந்த இதுவிடரோதத் தன்மையினை வெளிக்கட்டியுள்ளது. ஸ்டாலின் விபூதியை அழித்தது போல, இவரும் தனது பராக்கிரமத்தைக் காட்டுகிறார் போலும். தாயின் மத உணர்வுகளைக் கூட மதிக்காதவர்களை மக்கள் புரிந்து கொள்வர்கள். அதே போலத்தான், துர்கா ஸ்டாலின், தனது கணவனுக்கு நேர்த்திக் கடன் செய்வது, விரதம் மேற்கொள்வது, பூஜைகள் செய்வது, சமஸ்கிருத சுலோகங்கள் சொல்லி பாராயணம் செய்வது போன்ற காரியங்கள். தனது மாமனாருக்கும் காசிக்குச் சென்று காரியங்களை செய்து வந்துள்ளார். ஆனைவெடி வைத்து ஆனைமுகத்தோனை உடைப்பேன். ஆனால், தீபாவளிக்கு வாழ்த்து சொல்ல மாட்டேன், திமுகவினரும் சொல்ல மாட்டார்கள்! ஆக, திமுகவின் இரு வேடங்கள் தெரிந்த விசயமே. இதனை சாதாரண மக்கள் புரிந்து கொள்ளும் வரை, தொடர்ந்து கொண்டே இருக்கும். பிரச்சாரம், விளம்பரங்கள் அதிகமாகும்.

ஆ.ராசாவின் சித்தாந்தம் என்ன?: சிறுவயதிலிருந்து வெடி வைகத்தேன், உடைத்தேன் போன்ற மனப் பாங்கு, வன்முறையினைத் தான் காட்டுகிறது. அத்தகைய உணர்சுகள் அவர் முகத்திலும்வெளிப்படுவது, புகைப்படங்களில் காணலாம்.

  • ஈவேரா உடைத்தார், அதனால் நானும் உடைத்தேன் என்பது அந்த துலுக்க விக்கிரங்களை உடைக்கும் தீவிரவாதத்தை தான் காட்டுகிறது.
  • ஏனெனில், மொஹம்மதைப் போலத்தான், தானும் மொஹம்மது என்று சொல்லிக் கொண்டு, இந்தியாவில் கஜினி-கோரி மொஹம்மதுகள் தீவிரவாதத்துடன் கோவில்களை இடித்தார்கள், விக்கிரங்களை உடைத்தார்கள், செல்வங்களைக் கொள்ளையடித்துச் சென்றாற்கள்.
  • தென்னகத்தில்மாலிக்காபூர் இடைக்காலத்தில் அவ்வாறு செய்தான். இப்பொழுது, நவீன காலத்தில் திராவிடத்துவ வாதிகள் செய்து வருகின்றனர்.
  • சிலை உடைப்பு சித்தாந்தம், நியாயப் படுத்துத்தல், பெருமைப் பேச்சிக் கொள்வது எல்லாம் ஒன்றாகத்தான் இருக்கின்றன.
  • அண்ணா சொல்லியபடி, “இனம் இனத்தோடு சேர்கிறது,” கோவில் இடிப்புகள். விக்கிர உடைப்புகளும் அவ்வாறே உள்ளன.
  • அம்மாவின் உணர்வுகளையும் மீறி, மதிக்காமல், அவர் கொடுத்த விபூதிகளை எறிந்தேன் என்பதெல்லாம், ஸ்டாலினை திருதிப் படுத்தவா, அல்லது அவரையும் விஞ்சிய திராவிடத்துவத் தலைவர் என்பதை எடுத்துக் காட்டாவா என்று தெரியவில்லை.
  • எஸ்.சி என்ற நிலையில் எல்லாவற்றையும் அனுபவித்து, “நானே நினைத்தாலும் இந்துவாக இருந்து என்னால் வெளியேற முடியாது,” என்று பேசியிருப்பதெல்லாம், எப்படி இந்து என்று சொல்லிக் கொண்டு, இந்திய அரசியல் நிர்ணயச்சட்டத்தின் படியே ஏமாற்றுகிறார் என்பதும் தெரிகிறது.

© வேதபிரகாஷ்

06-01-2022


[1] தினசரி, பிள்ளையார் சிலைக்கு வெடி வைத்தேன்: இந்து மதத்தை அவமதித்து ராசா சர்ச்சை பேச்சு, ஜனவரி.5, 2022 11.30 AM.

[2] https://dhinasari.com/latest-news/236281-i-bombed-the-pillaiyar-statue-a-rasa-controversy-speech-insulting-hinduism.html

[3] புதியதலைமுறை, திமுக இந்து விரோத கட்சியல்ல. யார்இந்து என்பதில்தான் பிரச்சனை.ராசா சிறப்பு பேட்டி, சிறப்புச் செய்திகள், puthiyathalaimurai.com   sharpana Published :21,Jul 2020 04:07 PM

[4] https://www.puthiyathalaimurai.com/newsview/74315/The-DMK-is-not-an-anti-Hindu-party–The-problem-is-who-is-a—-Hindu—–A-Rasa-Special-Interview

ஆனைமுகத்தோனுக்கு ஆனைவெடி வைத்து உடைத்தேன் என்று ஆண்டிப்பட்டி ராஜா, ஆனைமுத்து இழவு விழாவில் பேசி ஒப்பாரி வைத்தது! (1)

ஜனவரி 6, 2022

ஆனைமுகத்தோனுக்கு ஆனைவெடி வைத்து உடைத்தேன் என்று ஆண்டிப்பட்டி ராஜா, ஆனைமுத்து இழவு விழாவில் பேசி ஒப்பாரி வைத்தது! (1)

பிள்ளையார் சிலைக்கு அடியில் ஆனை வெடி வச்சவன் நான்“.. அது சுக்குநூறாகி ஊரே ரெண்டாச்சு.. அலறவிட்ட .ராசா:  சென்னை சேப்பாக்கத்தில் பெரியார் ஆனைமுத்து படத்திறப்பு மற்றும் வெளியீட்டு நிகழ்ச்சியில் நாடாளுமன்ற உறுப்பினரும் திமுக துணைப் பொதுச் செயலாளருமான ஆ ராசா பேசியதாவது :………., என்று ஏசியாநெட்.நியூஸ் கதையை ஆரம்பிக்கிறது[1]. “அதன்பிறகுதான் அந்த விபூதிகளை எல்லாம் தூக்கிப் போட்டேன். தூக்கிப் போட்டதும் இல்லாமல் எங்க ஊரில் ஒரு பிள்ளையார் சிலை இருந்தது, அந்த சிலைக்கு கீழே ஒரு  ஆனைவெடி வச்சுட்டேன்.. அது உடைந்து சிதறியது, பின் அது பெரிய பிரச்சனை ஆயிடுச்சு. அதெல்லாம் ஒரு காலம்……,” என்று ராசா பேசியதை வெளியிட்டுள்ளது[2]. “என் வாழ்வில் நான் மாறியதற்கு காரணம் பெரியார் பேசிய அந்த கடைசி பேச்சு தான். பெரியாரின் சிந்தனைகள் என்னுள் வந்த பின்பு ஊரில் இருந்த பிள்ளையார் சிலைக்கு அடியில் ஆனைவெடி வைத்து அதை தகர்த்தவன் தான்,” என திமுக நாடாளுமன்ற உறுப்பினரும், அக்கட்சியின் துணைப் பொதுச் செயலாளருமான ஆ.ராசா கூறியுள்ளார்[3]. பெரியாரின் கருத்துக்கள் உள்வாங்கிய நான் அம்மா கொடுத்த விபூதி பொட்டளங்களை தூக்கி எறிந்ததாகவும் அவர் பேசியுள்ளார்[4]. பொட்டலம், என்று தமிழில் ஒழுங்காக எழுதத் தெரியாத இந்த திராவிடத்துவ வாதிகள் தாம் தமிழைக் காக்கிறோம், உயிரை விடுகிறோம் என்று வீராப்பு-சால்ஜாப்பு பேசி வருகின்றனர்.

விளம்பரம்தினசரி அறிக்கைஅதிரடி டிவி செய்திகள் மூலம் ஆட்சி நடத்துவது: ஏசியாநெட்.நியூஸ் கதையை தொடர்கிறது, “திமுக ஆட்சி பொறுப்புக்கு வந்தது முதல் அரசியல் ரீதியாகவும் நிர்வாக ரீதியிலும் பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. கொரோனா காலம்தொட்டு, மழை வெள்ளம் பாதிப்புவரை அரசு எடுத்த ஒவ்வொரு நடவடிக்கைகளையும் மக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர். இது ஒருபுறம் இருந்தாலும் எதிர்க்கட்சிகளான அதிமுகபாஜக பிரச்சாரத்தின் போது திமுக கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை, பொய் வாக்குறுதிகளை கொடுத்து ஆட்சிக்கு வந்துவிட்டது என்று திமுக மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன. அதேபோல் பல்வேறு மாநிலங்களில் பெட்ரோலுக்கான மாநில வரி குறைக்கப்பட்டுள்ளது, அதேபோல் தமிழக அரசும் அந்த வரியை குறைக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன”. விளம்பரம்-தினசரி அறிக்கை-அதிரடி டிவி செய்திகள் மூலம் ஆட்சி நடத்துவது என்பது தொடர்ந்து வருகிறது. ஆக, ஆ. ராசவின் பேச்சு, அத்தகைய பிரச்சஆத்தின் யுக்தியாகவும் இருக்கலாம். ஏனெனில், இதெல்லாம் திராவிடத்துவவாதிகளுக்கு கைவைந்த கலை.

இந்துக்களை எதிர்த்து வரும் கழகங்கள்: ஏசியாநெட்.நியூஸ் கதையை தொடர்கிறது, “அதிமுக எதிர்க்கட்சியாக இருந்தாலும் உண்மையான எதிர்க்கட்சி பாஜகதான் என்பதை கட்டமைக்கும் வகையில் பாஜகவினர் தொடர்ந்த திமுக அரசை மூர்க்கமாக எதிர்த்து வருகின்றனர். அந்த வகையில் திமுக ஆட்சி என்பது இந்துக்களுக்கும் இந்து மதத்திற்கும் எதிரானது, அதனால்தான் இந்து அறநிலைத்துறையின் பெயரில் இந்துக் கோவில்களில் உள்ள தங்க நகைகளை உருக்குவோம் எனக் கூறி வருகின்றனர். இன்னும் பல்வேறு இடங்களில் கோவில் சொத்துக்கள் மீட்கப்படாமல் உள்ளன[5]. அதை மீட்க முயற்சிகள் இல்லை, அதேபோல விநாயகர் சதுர்த்தியின் போது சிலைகளை வைக்க அனுமதி வழங்காததும் இந்து மத விரோத போக்கு இல்லாமல் வேறொன்றும் இல்லை என கடுமையாக விமர்சித்து வருகின்றனர்[6]. கழகங்கள் இல்லாத தமிழகத்தை உருவாக்குவோம் என்ற முழக்கத்துடன் பாஜக செயல்பட்டு வந்தாலும் அதிமுக திமுக என்ற இரண்டு கழகங்களில் அதிமுகவுடன் கைகோர்த்து திமுகவை கடுமையாக விமர்சித்து வருகிறது. திமுக எதிர்ப்பு என்பது அரசியல் எதிர்ப்பு மட்டும் அல்ல சித்தாந்த ரீதியான எதிர்பார்க்க பாஜக செய்து வருகிறது. தமிழகத்தைப் பொறுத்த வரையில்  அதிமுகதான் எதிர்க்கட்சி என்றாலும் பாஜக- திமுகவுக்கு இடையேதான் கடுமையான எதிர்ப்பு நிலவி வருகிறது என்பதே நிதர்சனம்.

கருப்பு சிவப்பு நீலம் ஒன்றாக இருந்தால் மட்டுமே 2024 ல் பாஜக என்ற காவியை வீழ்த்த முடியும்: ஏசியாநெட்.நியூஸ் கதையை தொடர்கிறது, “இந்நிலையில் அதை மெய்ப்பிக்கும் வகையில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் .ராசா பெரியாரின் சுயமரியாதை மற்றும் கொள்கை பாதையைப் பின்பற்றிய ஆனைமுத்து படத்திறப்பு விழாவில் இந்து மதத்தை தான் ஏன் எதிர்க்கிறேன் என்றும், காவி எவ்வளவு ஆபத்தானது என்பது குறித்தும் விளக்கி பேசியுள்ளார். மேலும் கருப்பு சிவப்பு நீலம் ஒன்றாக இருக்க வேண்டும் அப்படி இருந்தால் மட்டுமே 2024 ல் பாஜக என்ற காவியை வீழ்த்த முடியும்,” என்று பேசியுள்ளார்[7]. தொடர்ந்து அவர் தனது பேச்சுக்கள் மூலம் பாஜக எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளார்.  இதை தமிழ்.ஒன்.இந்தியாவும் வெளியிட்டுள்ளது[8]. இங்கு பச்சையை ஏன் விட்டனர் என்று தெரியவில்லை. அதை வைத்து தான், கடந்த 100 ஆண்டுகளாக ஆட்சி நடத்துகின்றனர், பிரிவினையையும் வளர்த்து வருகின்றனர். தீவிரவாதத்தை வளர்க்கின்றனர் என்று தெரிந்தும், கூட்டு வைத்துக் கொண்டு அரசியல் நடத்தி வருகின்றனர். இதைப் பற்றி என்.ஐ.ஏ, மற்ற அனைத்துலக நிறுவனங்களே எடுத்துக் காட்டி வருகின்றன. இருப்பினும், இங்கு ஒன்றுமே தெரியாதது போலவும், உள்ளூர் ஊடகங்களில் செய்திகள், தகவல்கள் வராமலும் கட்டுப்பாடுகளை வைட்துள்ளனர்.

.ராசாவின் பேச்சுஅதன் விவரம் பின்வருமாறு: ஏசியாநெட்.நியூஸ் கதையை தொடர்கிறது,   சென்னை சேப்பாக்கத்தில் மார்க்சிய பெரியாரிய பொதுவுடமைக் கட்சியின் சார்பில் பெரியாரியல் பெரியார் ஆனைமுத்து படத்திறப்பு மற்றும் நினைவலைகள் புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது இதில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டனர் அதில் நாடாளுமன்ற உறுப்பினர் திமுக துணைப் பொதுச் செயலாளர்களில் ஒருவரான ஆ ராசா கலந்து கொண்டார் அப்போது பேசிய அவர், “96 வயது வரை வாழ்ந்து, 75 ஆண்டுகாலம் பெரியார் குறித்து மட்டுமே பேசி மறைந்த ஆனைமுத்து படத்திறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். அவருக்கும் எனக்கும் உள்ள தொடர்பு நீண்ட நெடியது, டெல்லிக்கு வரும்போதெல்லாம் என் வீட்டிற்கு வந்து நீண்ட நேரம் பேசுவார். ஒரு தத்துவத்தை கூறி அந்த தத்துவம் நிறைவேறுவதை தன் கண்ணால் பார்த்த ஒரே தலைவர் பெரியார் அந்த பெரியாரே பேரறிஞர் என ஆனைமுத்துவை கூறினார். அதை விட அவருக்கு நாம் என்ன பெருமையை செய்ய முடியும். பூலோக ரீதியாக ஆனைமுத்துவும் நானும் ஒரே மாவட்டத்தை சேர்ந்தவர்கள்”.

© வேதபிரகாஷ்

06-01-2022


[1] ஆசியாநெட்.நியூஸ், பிள்ளையார் சிலைக்கு அடியில் ஆனை வெடி வச்சவன் நான்“.. அது சுக்குநூறாகி ஊரே ரெண்டாச்சு.. அலறவிட்ட .ராசா, Ezhilarasan Babu, Chennai, First Published Jan 4, 2022, 10:57 AM IST.

[2]  https://tamil.asianetnews.com/politics/i-am-the-one-who-put-the-elephant-explosive-under-the-idol-of-pillaiyar-a-rasa-speech–r5675u

[3] விநாயகருக்கே வெடி வச்சவன் நான்! ஆ.ராசா பேச்சு | A Raja Speech | Periyar | DMK | Anaimuthu | Aa Rasa, Jan 3, 2022.

[4] https://www.youtube.com/watch?v=EQnK87JGQhQ

[5] ஒரேதேசம், பிள்ளையார் சிலைக்கு யானை வெடிவச்சு சிலையை சுக்குநூறாக்கியவன் நான்! .ராசாவின் ஆணவ பேச்சு!, Oredesam BY OREDESAM  January 4, 2022.

[6] https://oredesam.in/explosive-statue-to-the-pillaiyar-statue/

[7] தமிழ்.ஒன்.இந்தியா, கருப்பு + சிவப்பு + நீலம் ஒன்றாகட்டும்.. காவியை விட்டுவிடுவோம்.. சேப்பாக்கத்தை தெறிக்கவிட்ட .ராசா, By Hemavandhana Published: Monday, January 3, 2022, 12:09 [IST]

[8] https://tamil.oneindia.com/news/chennai/bjp-can-be-toppled-if-black-red-and-blue-combine-says-mp-a-rasa-444125.html

பூட்டிக் கிடக்கும் கோவில்களும், உடைக்கப் படும் உண்டியல்கள், கதவுகள், சிலைகள் முதலியன – உள்நோக்கங்களுடன் நடக்கின்றனவா தற்செயலான நிகழ்வுகளா?

ஒக்ரோபர் 23, 2021

பூட்டிக் கிடக்கும் கோவில்களும், உடைக்கப் படும் உண்டியல்கள், கதவுகள், சிலைகள் முதலியன உள்நோக்கங்களுடன் நடக்கின்றனவா தற்செயலான நிகழ்வுகளா?

சாதாராண மக்களின் நேர்த்திக் கடன், வேண்டுதல்கள், பொங்கல் வைப்பது, முதலிய காரியங்கள் தடைப் பட்டுள்ளது: கொரோனா தொற்று, உயிரிழப்பு போன்ற காரணங்களினால், தமிழகத்தில் பெரும்பாலான கோவில்கள் மூடிக் கிடக்கின்றன. இதனால், பக்தர்களுன் கூட்டம் அறவே குறைந்து விட்டது. மற்ற நகரங்களிலிருந்து, மாநிலங்களிலிருந்து கார்களில், பேரூந்துகளில் வந்து செல்லும் கூட்டமும் குறைந்து விட்டது. சாதாரண மக்கள் வேன்களில், ஏன் லாரிகளில் கூட்டம்-கூடமாக வந்து, நேர்த்திக் கடன், வேண்டுதல்கள், பொங்கல் வைப்பது, முதலியவற்றை செய்யும் கட்சிகளும் மறைந்து விட்டன. பிறந்த நாள், திருமணநாள், திருமணம் போன்ற நிகழ்வுகளும் பாதிக்கப் பட்டுள்ளன. பக்தி, சிரத்தை, நேர்த்திக் கடன், வேண்டுதல்கள், முதலியவற்றில் எந்த இடையூறுகள்  வரக்கூடாது என்று பிடிவாதமாக சில பக்தர்கள் கஷ்டப் பட்டு வந்தாலும், கோவில்கள் பூட்டிக் கிடப்பதால், வெளியேலேயே மனம் நொந்து, ஆனால், விடாமல் தங்களது படையல்களை, வேண்டுதல்களை செய்வது, முடிப்பது என்று நடந்து வருகிறது.

தலை உடைக்கப்பட்ட நிலை
சப்தமாதர்கள் சிலைகளின் அடிபாகம் பெயர்க்கப் பட்டுள்ள நிலை

பூட்டை உடைத்து பூஜை செய்த பக்தர்கள்: இந்நிலையில், முக்கியமாக வெள்ளி-சனி-ஞாயிறு நாட்களில் கோவில்கள் பூட்டிக் கிடப்பது, பலருக்கு வருத்தத்தைஅளித்தது. புதியதாக நத்திக-இந்து விரோத கட்சி அரசுக்கு வந்திருப்பதால், அவ்வாறு நடக்கிறது என்று மக்கள் நம்ப ஆரம்பித்து விட்டனர். இந்நிலையில், மூடநம்பிக்கைகளில் அல்லது அப்போர்வைகளில் சிலர் கோவில்களில் நுழைந்து சேதங்களை ஏற்படுத்தி வருகிறார்கள். ஒரு பக்கம் பக்தியின் சிரத்தையினால், கோவில் பூட்டையே உடைத்து, உள்ளே சென்று பூஜை செய்து விட்டு செல்லும் பக்தர்களையும் காண்கிறோம். இன்னொரு பக்கம் உண்டிகளை உடைப்பது, திருடுவது போன்றவை அதிகமாகியுள்ளன. ஆனால், அவற்றையும் மீறி, இப்பொழுது, கோவில் சிலைகளை உடைப்பதில் சிலர் ஈட்டுபட்டிருப்பது தெரிகிறது. இது திட்டமிட்ட செயலா, அல்லது பெரியாரின் தடி வேல செய்கிறாதா, அல்லது பெரியார் போல, சாமி வந்து ஆடும் பக்தர்கள் போல, சிலைகளை உடைக்கிறார்களா என்று தெரியவில்லை.

சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவிலும், துணைகோவில்களும்: பெரம்பலூர் அருகே சிறுவாச்சூரில் பிரசித்தி பெற்ற மதுரகாளியம்மன் கோயில் உள்ளது. இக்கோவிலுக்கு ஆயிரக்கணக்கில் தினமும் வேண்டுதலாக, குலதெய்வம் என்ற முறையிலும், அனைத்து சமூகத்தினரும் வந்து செல்வார்கள். இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயிலின் துணை கோயில்களான பெரியசாமி- செல்லியம்மன் கோயில், செங்கமலையார் கோயில்கள் சிறுவாச்சூரில் பெரியசாமி மலையில் அமைந்துள்ளன[1]. இங்கு பெரியசாமி, செல்லியம்மன் சிலைகள் மற்றும் செங்கமலையார், கன்னிமார்கள், பரிவார தெய்வங்களின் 14 சுடுமண் சிலைகள் உள்ளன[2]. இந்த கோவிலுக்கு அருகே, அந்த கோவில்களின் தல வரலாற்றின்படி மூலஸ்தான கோவிலான பெரியசாமி மலைக்கோவில் உள்ளது[3]. வருபவர்கள் எல்லா கோவிகளுக்கும் வந்து தரிசித்து செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

05-10-2021 கோவில்களில் சிலைகள் உடைப்பு: இந்நிலையில், அக்டோபர் 5ம்தேதி அன்று காலை பூசாரிகள் மற்றும் பக்தர்கள் கோயிலுக்குச் சென்றபோது, பெரியசாமி மலையில் உள்ள பெரியசாமி, செல்லியம்மன் சிலைகள், செங்கமலையார் கோயிலில் உள்ள கன்னிமார் சிலைகள் மற்றும் பரிவார தெய்வங்களின் சிலைகள் சேதப்படுத்தப்பட்டு கிடந்தன[4]. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் அளித்த தகவலின்பேரில், பெரம்பலூர் போலீஸார் அங்கு சென்று பார்வையிட்டனர். தொடர்ந்து, சிலைகளை சேதப்படுத்தியது யார் என்பது குறித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்[5]. தலை, கால் என்று உடைத்த நிலையைப் பார்த்தால், விலையுயர்ந்த பொருளுக்கு ஆசைப்பட்டு செய்ததாகத் தெரியவில்லை. மற்ற உயரமுள்ள சிலைகளின் தலைகள் அப்படியே இருக்கின்றன. சிலைகளை உடைக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்திருந்தால், மற்ற சிலைகளையும் சேதப் படுத்தி இருக்கலாம்.

07-10-2021 அன்று இன்னொரு கோவிலில் சிலைகள் உடைப்பு: இந்த நிலையில், 07-10-2021 வியாழக்கிழமை இரவு திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சிறுவாச்சூர் கிராம பகுதியில் இருந்த பெரியாண்டவர் கோவிலில் இருந்த பல லட்சம் ரூபாய் மதிப்பிலான 13 கல் சிலைகளும், உடைக்கப்பட்டிருந்தன[6]. அதோடு, கற்சிலைகளின் அடிப்பாகத்தில் வைக்கப்பட்டிருந்த எந்திரத் தகடுகள், காசுகள் திருடப்பட்டிருந்தன. மேலும், சிறுவாச்சூர் முருகன் கோவிலில், குதிரை மற்றும் மயில் சிலைகளும் சேதப்படுத்தப்பட்டிருந்தன.  பெரியசாமி சிலையின் தலையில் பரிவட்டம், இடது கையில் இருந்த பாதுகாப்பு கேடயம், செல்லியம்மன் சிலை, 2 கொங்கானி கருப்பு சிலைகளின் வலது கையில் இருந்த கத்திகள், 4 சாத்தடையார் சிலைகளின் வலது கையில் இருந்த கத்திகள், 2 பாப்பாத்தியம்மன் சிலைகள், புலி வாகனம் ஒன்று ஆகியவை உடைக்கப்பட்டு, சேதமடைந்து கிடந்தன[7]. மேலும் பெரியசாமி மலை கோவில் அருகே உள்ள செங்கமலையார் கோவிலில் சப்த கன்னிமார்கள் மற்றும் பரிவார தெய்வங்கள் என அங்குள்ள 14 சாமி சிலைகளில் 5 சிலைகள் உடைத்து சேதப்படுத்தப்பட்டிருந்தது[8]. மாவட்டம் முழுவதும் உள்ள பக்தர்கள் இந்தத் தொடர் சிலை உடைப்புகளால் அதிர்ச்சியடைந்தனர் .சிலைகள் உடைப்பு குறித்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணி நேரில் விசாரணை நடத்தினார்.

சக்கரம்எந்திரம் தேவை என்றால், அடிப்பகுதிகள் தான் சேதப் பட்டிருக்க வேண்டும்: சப்த மதர் சிலைகள் அடியோடு பெயர்த்துத் தள்ளப் பட்டுள்ளன. இது நிச்சயமாக சக்கரம்-எந்திரம் தேவை என்ற ரீதியில் சேதப் படுத்தியது தெரிகிறது. இந்த நிலையில், பெரியசாமி கோயில் பக்கம் சந்தேகத்திற்கு இடமாக சுற்றிக் கொண்டிருந்த நபரைப் போலீசார் பிடித்து விசாரித்ததில் அவர் தான் சிலைகளை உடைத்தவர் என்பது தெரியவந்தது[9]. கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோயிலைச் சேர்ந்த 35 வயதான நடராஜன் என்கிற நாதன் என்பது விசாரணையில் தெரியவந்தது[10]. சிலைகளின் அடியில் உள்ள எந்திரத் தகடுகளை வீட்டில் வைத்தால், செல்வம் கொழிக்கும்; பணமழை கொட்டும்; குடும்பம் சுபிட்சமாகும் என நினைத்துள்ளார் நடராஜன், என்று ஊடகங்கள் நிறுத்திக் கொண்டுள்ள நிலையில், நக்கீரன், இதனை கொஞ்சம் நீட்டியுள்ளது. அதாவது, அவர் சென்னையைச் சேர்ந்த நாதன் என்கின்ற தெலுங்கு பிராமணர் வகுப்பைச் சேர்ந்தவர் என்று தாடி ராஜா சொன்னதாகக் கூறுகிறது[11]. இதனால் போலீஸ் அவரது மனநலம் குறித்து மருத்துவரீதியாக சோதித்து விட்டு, அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்துள்ளது[12].

சிலைகள் உடைப்பதற்கு உள்நோக்கம் என்ன?: “கிராமக் கோவில்களில் சிலைகளை உடைக்கும் வக்கிரக் கும்பல்,” என்றால் அக்கும்பலில் உள்ள மற்றவர்கள் யார் என்று சொல்ல வேண்டும். ஒருவரை மட்டும் பிடித்து, வழக்கை முடித்து விடும் போக்கு இருக்கக் கூடாது. பல இடங்களில் செய்துள்ளதால், ஒரே நபர் செய்திருக்க முடியாது. ஆகவே இங்கு ஆதாயம் என்பதை விட, வேறு உள்நோக்கம் இருப்பதையும் கவனிக்கலாம். கிராமக் கோவில்களைக் குறிவைக்கிறார்கள் என்பதா அல்லது அத்த்கைய தோற்றத்தை உண்டாக்க வேண்டும் என்றுள்ளதா? இக்கோவில்களுக்கும் மக்கள் வரவேண்டும் என்று கவனத்தை ஈர்க்க செய்யப் பட்டுள்ளதா? தமிழ்-தெலுங்கு போன்ற நக்கீரத்தனமும் உள்ளதா? இல்லை இந்துவிரோத, நாத்திக, பெரியாரிஸ மற்ற கும்பல்கள் வேலை செய்கின்றனவா போன்ற கேள்விகளையும் எழுப்பலாம். திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, இத்தகைய நிகழ்ச்சிகளும் நடப்பதும் திகைப்பாக இருக்கிறது.  

© வேதபிரகாஷ்

23-10-2021


[1] தமிழ்.இந்து, சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோயிலின் துணை கோயில்களில் சாமி சிலைகள் சேதம், செய்திப்பிரிவு, Published : 07 Oct 2021 03:15 AM; Last Updated : 07 Oct 2021 03:15 AM.

[2] https://www.hindutamil.in/news/todays-paper/regional01/723682-.html

[3] மாலை மலர், பெரம்பலூரில் பெரியாண்டவர் கோவிலில் 13 சாமி சிலைகள் உடைப்பு, பதிவு: அக்டோபர் 08, 2021 15:13 IST

[4] https://www.maalaimalar.com/news/district/2021/10/08151339/3080520/Tamil-News-13-god-statue-broken-in-perambalur.vpf

[5] இ.டிவி.பாரத்.காம், பெரம்பலூர் அருகே சிறுவாச்சூர் பெரியசாமி மலையில் சாமி சிலைகள் உடைப்பு, Published on: Oct 6, 2021, 11:04 PM IST.

[6] https://www.etvbharat.com/tamil/tamil-nadu/state/perambalur/sami-idols-smashed-on-siruvachchur-periyasamy-hill-near-perambalur/tamil-nadu20211006230446227

[7] தினத்தந்தி, மதுரகாளியம்மன் உபகோவில்களில் சாமி சிலைகள் உடைப்பு, பதிவு: அக்டோபர் 07,  2021 01:35 AM.

[8] https://www.dailythanthi.com/Districts/Chennai/2021/10/07013518/Breaking-of-Sami-idols-in-Madurakaliamman-sub-temples.vpf

[9] NEWS18 TAMIL, சாமி சிலைகளுக்கு அடியில் எந்திர தகடுகிடைத்தால் பணம் கொட்டும்… 29 சிலைகளை உடத்த நபர், LAST UPDATED : OCTOBER 09, 2021, 19:43 IST

[10] https://tamil.news18.com/news/tamil-nadu/perambalur-district-person-who-broke-the-20-god-idols-in-perambalur-vjr-581563.html

[11] நக்கீரன், கிராமக் கோவில்களில் சிலைகளை உடைக்கும் வக்கிரக் கும்பல்!, எஸ்.பி. சேகர், Published on 20/10/2021 (07:03) | Edited on 20/10/2021 (07:42).

[12] https://www.nakkheeran.in/nakkheeran/perverted-mob-breaking-idols-village-temples/perverted-mob-breaking-idols-village