Archive for the ‘தினகரன் செக்ஸ்’ Category

சட்டத்திற்கு புறம்பாக ஏதும் செய்யவில்லை: சாமியார் நித்தியானந்தா!

மார்ச் 7, 2010

பிரச்சினையில் உள்ளது தினகரன் பத்திரிக்கையும் ஒன்று.
வியப்பாக, அதுவே இப்படியொரு செய்தியை வெளியிட்டுள்ளது!

சட்டத்திற்கு புறம்பாக ஏதும் செய்யவில்லை: சாமியார் நித்தியானந்தா[ ஞாயிற்றுக்கிழமை, 07 மார்ச் 2010, 12:51.49 PM GMT +05:30 ]

http://www.newindianews.com/view.php

.?2bdRfmAc3dc036QAY3e4a4qe0AKcd0eavXO4A2cd22Amlvxa2ecKU46A4ce0eYmM0604b43cYDRLd0

சென்னையிலுள்ள வழக்குரைஞர் ஸ்ரீதருக்கு சாமியார் நித்தியானந்தா தனது பேச்சுகள் அடங்கிய சி.டி.யை அனுப்பி வைத்துள்ளார். அதில் தான் சட்டத்திற்கு புறம்பாக ஏதும் செய்யவில்லை என்றும் இவை எதிரிகளின் சதித்திட்டம் என்றும் அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார்நடிகை ரஞ்சிதாவுடன் சாமியார் நித்யானந்தா ஒன்றாக இருப்பது போன்று படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. சாமியார் மீது சென்னை போலீசார் 2-வழக்குகளை பதிவு செய்தனர். அவர் எங்கு இருக்கிறார் என்பது மர்மமாக இருந்து வந்தது.

இந்நிலையில் வீடியோ மூலமாக நித்யானந்தா விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக சென்னையில் உள்ள அவரது வக்கீல் ஸ்ரீதருக்கு தனது பேச்சுகள் அடங்கிய சி.டி.யை அனுப்பி வைத்துள்ளார். அதில் நித்யானந்தா கூறியிருப்பதாவது:-

எனக்கு எதிராக விஷமிகள் சதி திட்டம் தீட்டியுள்ளனர். இதுவே என்னை பற்றி தவறான தகவல்கள் வெளிவர காரணமாகும். என் மீது சுமத்தப்பட்டுள்ள இந்த குற்றச்சாட்டுகளை சட்ட ரீதியாக நான் சந்திக்க தயாராக உள்ளேன்.

இவ்வாறு நித்யானந்தா கூறியுள்ளதாக அவரது வக்கீல் ஸ்ரீதர் தெரிவிதார்.

இதற்கிடையே நடிகை ரஞ்சிதாவும், நித்யானந்தா சாமியாரும் ஒன்றாக இருப்பது போன்ற படங்களை நான்தான் எடுத்தேன் என்று சாமியாரின் சீடர் லெனின் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார்.

இவர் கொடுத்த புகாரின் பேரில் நித்யானந்தா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சாமியாரின் அந்தரங்க விஷயங்களை லெனின் படம் எடுத்து வெளியிட்டதும் சட்டப்படி குற்றமாகும். இதனால் அவர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் அவரை கைது செய்யலாம் என்று சட்ட நிபுணர்கள் கூறியுள்ளனர்.

நித்யானந்தாவை லெனின் ஆபாசமாக படம் எடுத்து வெளியிட்டது எந்த மாதிரியான குற்றம் என்பது குறித்து வக்கீல் வானதி சீனிவாசனிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

தகவல் தொழில் நுட்ப சட்டப்படி, ஒருவரின் அந்தரங்க விஷயங்களை ஆபாசமாக படம் எடுத்து மற்றவர்களுக்கு அனுப்பி வைப்பது சட்டப்படி குற்றமாகும். எனவே பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்கும் பட்சத்தில் ஆபாசபடம் எடுத்த லெனின் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யலாம்.

இந்த குற்றம் நிருபிக்கப்பட்டால் லெனினுக்கு 2-ஆண்டு ஜெயில் தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளது.

இதேபோல் கேபிள் டிவி. ஒளிபரப்பு சட்டத்தின் கீழ், உள்ளங்களை மாசுபடுத்தும் விதத்தில், ஆபாசமான காட்சிகளை காட்டுவதும் தவறானது. இதுவும் தண்டனைக்குரிய குற்றமாகும்.

இவ்வாறு அவர் கூறினார்

சாமியாருடன் நடிகை ரஞ்சிதா படுக்கை அறை காட்சிகள்; நாடு முழுவதும் பரபரப்பு!

மார்ச் 3, 2010
சாமியாருடன் நடிகை ரஞ்சிதா படுக்கை அறை காட்சிகள்; நாடு முழுவதும் பரபரப்பு
மார்ச் 03,2010,11:00  IST

http://www.dinamalar.com/topnewsdetail.asp?news_id=1795

Top world news stories and headlines detail

மேலும் படங்கள் >> சென்னை: தமிழ் நடிகை ரஞ்சிதா, பிரபல சாமியார் நித்தியானந்தாவுடன் உல்லாசமாக இருந்த வீடியோ வெளியாகி நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த விவகாரத்தில் தமிழ் திரையுலகம் என்ன செய்யப்போகிறது? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

திருவண்ணாமலையை சேர்ந்த நித்தியானந்தாவின் இயற்பெயர் ராஜசேகரன். இவருக்கு தமிழகத்திலும், கர்நாடகாவிலும் ஆசிரமங்கள் உள்ளன. பெங்களூருவில் மைசூர் சாலையில் உள்ள பிடுதி பகுதியில் 200 ஏக்கர் பரப்பளவில் நித்தியானந்த தியான பீடம் என்ற ஆசிரமம் உள்ளது. இதுதான் நித்தியானந்தாவின் ‌தலைமையகம்.

32 வயதே நிரம்பிய நித்தியானந்தா, கதவை திற காற்று வரும் என்ற தலைப்பில் போதனைகளை கூறி வந்தார். லட்சக்கணக்கான பக்தர்களை கொண்டிருக்கும் அவர் தமிழ் நடிகை ரஞ்சிதாவுடன் உல்லாசமாக இருப்பது போன்ற வீடியோ காட்சி வெளியாகியுள்ளது. அதில் நித்தியானந்தா, அந்த நடிகையிடம்  சில்மிஷங்களில் ஈடுபடுவது போலவும், உல்லாசமாக படுக்கையை பகிர்ந்து கொள்வது போலவும், தண்ணீர் கொடுப்பது போன்றும், மாத்திரை கொடுப்பது போன்றும் காட்சிகள் பதிவாகியுள்ளன. ஆனால் அந்த வீடியோ எங்கு, எப்போது எடுக்கப்பட்டது என்ற தகவல் எதுவும் வெளியாகவில்லை. நித்தியானந்தாவின் முகத்திரையை கிழித்திருக்கும் இந்த வீடியோவில் அவருடன் உல்லாசமாக இருக்கும் நடிகை ரஞ்சிதா, பாரதிராஜாவின் படத்தில் அறிமுகமான‌வனர்; பாரதிராஜாவின்  சின்னத்திரை  தொடரிலும் நடித்தவர்.

என்ன செய்யப்போகிறது தமிழ் திரையுலகம்? : நடிகை புவனேஸ்வரி விபசார வழக்கில் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து, பத்திரிகைகளில் வெளியான செய்தியை கண்டித்து நடந்த ‌தென்னிந்திய நடிகர் சங்க கூட்டத்தில் பேசிய நடிகர், நடிகைகள் பலரும் ஆபாசமாக பேசி பத்திரிகையாளர்களை விமர்சித்தனர். இந்தக் கூட்டத்தில், சரத்குமார், ராதா ரவி, விஜயகுமார், சத்யராஜ், அருண் விஜய், மனோபாலா மற்றும் சில நடிகைககள், பத்திரிகையாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரை தாக்கிப் பேசிய தகாத வார்த்தைகளை அச்சில் கூட ஏற்ற முடியாது. “இதுபோன்ற செய்திகளால் பாதிக்கப்பட்ட நடிகைகளின் வழக்கு செலவுக்காக, ஒரு தனி சட்ட அமைப்பை ஏற்படுத்த வேண்டும். அதற்கான முழு செலவையும் நானே ஏற்றுக் கொள்கிறேன்’ என்று நடிகர் சூர்யா கூறினார்.  “பத்திரிகையாளர்களை வெட்டியிருப்பேன்’ என்று விஜயகுமார் கொந்தளித்தார். “நாற்காலிக்கு கீழே கேமராவை வைத்து, நாகரிகமற்ற முறையில் படம் பிடிப்பவர்கள் பத்திரிகையாளர்கள், ஈனப்பிறவிகள் என்றும், சூர்யா குமுறினார்.  நடிகர் – நடிகைகளின் இந்த பேச்சு பத்திரிகையாளர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. கூட்டத்தி்ல பேசிய நடிகர் சூர்யா, நடிகைகளை பாதுகாக்க சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்காக எவ்வளவு பணம் தேவைப்பட்டாலும் நான் கொடுக்கிறேன், என்று கூறினார்.

நடிகர் சங்கம் நடவடிக்கை எடுக்குமா? “சுவாமி நித்யானந்தாருடன்’ கொஞ்சும் நடிகை ரஞ்சிதா, மெய் மறந்து இருக்கும் வீடியோ காட்சிகள், தற்போது உலகம் முழுவதும் உலா வந்து கொண்டிருக்கின்றன. சினிமா நடிகை ரஞ்சிதாவுடன் சல்லாபிக்கும் காட்சிகள், ஆபாசத்தின் உச்ச கட்டம். இந்த சல்லாபம், ஒரு நாள் மட்டும் நடந்தவை அல்ல; பல நாள் நடந்தவை; இப்போது சந்திக்கு வந்துவிட்டது. நடிகர் சூர்யா, சாமியாருடன் உல்லாசமாக இருக்கும் நடிகைகளுக்கும் சட்டப்பூர்வ பாதுகாப்பு கொடுப்பாரா? எதற்கெடுத்தாலும் கண்டனக் குரல் எழுப்பி, கூட்டம் நடத்தி, கண்டன தீர்மானம் போடும் நடிகர் சங்கம், இந்த சர்ச்சைக்குரிய நடிகை மீதும் கண்டனம் தெரிவித்து நடவடிக்கை எடுக்குமா?

சினிமாக்காரர்கள் சுய பரிசோதனை செய்து கொள்ளட்டும்: இதுபோன்று செய்திகள், சந்திக்கு வந்து விட்ட பிறகாவது, தமிழ்த் திரையுலம் தன்னைத் தானே சுய பரிசோதனை செய்து கொள்ளட்டும். குற்றத்தை சுட்டிக் காட்டுபவர்கள் மீது பொய் வழக்கு போடுவதற்கு முன், தங்கள் மீது விபசார வழக்குகள் பாயாமல் தடுத்துக் கொண்டால், புண்ணியம். சினிமாக்காரர்கள் சொன்னதுபோல, “அடுத்து வரும் தலைமுறையும் அவர்களது குடும்பத்தினரும் தங்களைப் பற்றி என்ன நினைப்பார்கள்’ என்பதை ரஞ்சிதா போன்ற நடிகைகளும் அவர்களுக்காக வக்காலத்து வாங்கிய தென்னிந்திய நடிகர் சங்கமும், இவர்களுக்காக சென்னையில் 90 ஏக்கர் வழங்கிய தமிழக அரசும் சிந்திக்கட்டும்.

ஆசிரமம் சூறை!: சுவாமி நித்தியானந்தா நடிகையுடன் உல்லாசமாக இருக்கும் வீடியோ வெளியானதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் அவரது ஆசிரமங்கள் சூறையாடப்பட்டு வருகின்றன. திருவண்ணாமலையில் உள்ள ஆசிரமத்தை இந்து முன்னணி அமைப்பை சேர்ந்தவர்கள் முற்றுகையிட்டனர். நித்தியானந்தாவின் படங்களை தீ வைத்து கொளுத்தினர். புதுவையிலும் ஏராளமான பொதுமக்கள் நித்தியானந்தாவின் ஆசிரமத்தை சூறையாடினார்கள். மேலும் கடலூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருக்கும் ஆசிரமங்களை சூறையாடி வரும் இந்து அமைப்பினர் மற்றும் பொதுமக்கள், சுவாமி நித்தியானந்தாவை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றும், அவரது சொத்துக்களை அரசு பறிமுதல் செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நித்யானந்த மடம் சார்பில் திடீர் விளக்கம்: மிகுந்த பரபரப்புக்கு இடையில் ஆஸ்ரமத்தில் இருந்த நித்ய சத்யானந்த சுவாமிகள் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். தியான பீடத்தின் முகவரியோ, யாருடைய கையெழுத்தும் இல்லாமலே இந்த அறிக்கை இடம் பெற்றிருந்தது. மார்ச் 2ம் தேதி இரவில் வெளியான தொலைக்காட்சி ஒளிபரப்பில் இடம் பெற்ற தகவல்கள் அனைத்தும் உண்மைக்கு புறம்பானது. இந்த காட்சிகள் அனைத்திலும் கிராபிக்ஸ் செய்யப்பட்டு, திட்டமிட்டு சதி செய்யப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கவுள்ளோம். விரைவில் இது குறித்து முடிவு செய்யப்படும். இந்த நேரத்தில் நாங்கள் பக்தர்களுக்கும், அபிமானிகளுக்கும் எங்களின் நிலைமையை தெளிவாக கூறுகிறோம். இதனால், மிகவும் மனமுடைந்த நிலையில் உள்ளோம். எங்களுக்கு ஆதரவாக இருக்கும் அனைத்து பக்தர்களுக்கு நன்றி தெரிவிக்கிறோம். பொது வாழ்க்கையில் ஏழு ஆண்டுகளாக நித்யானந்த சுவாமிகள், பல சேவைகளை செய்துள்ளார். பல்வேறு நாடுகளிலிருந்து 20 லட்சம் பக்தர்கள், நித்யானந்த சுவாமிகளின் ஆதரவாளர்களாக உள்ளனர். வாழ்க்கையின் தத்துவம் குறித்து பல்வேறு நாடுகளில் சுவாமிகள் விளக்கியுள்ளார். இந்த நேரத்திலும் லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமிகள் மீது நம்பிக்கை கொண்டுள்ளனர். இதற்கு மேலும் இதை விளக்குவதற்கு வார்த்தைகளில்லை என்று தியான பீடத்தின் பணிகள் குறித்து நீண்ட விளக்கமளித்துள்ளனர்.