Archive for the ‘திகவின் முகமூடி கிழிகிறது’ Category

திராவிட ஆட்சிகளில் தேசத் துரோக வழக்குகளும், அவற்றின் பின்னணியும் –  திராவிடஸ்தான் முதல் திராவிடியன் ஸ்டாக் வரை – தேசிய அளவில் உள்ள வழக்குகளுடன் அவற்றை ஒப்பிட முடியாது (2)

மே 15, 2022

திராவிட ஆட்சிகளில் தேசத் துரோக வழக்குகளும், அவற்றின் பின்னணியும்  திராவிடஸ்தான் முதல் திராவிடியன் ஸ்டாக் வரைதேசிய அளவில் உள்ள வழக்குகளுடன் அவற்றை ஒப்பிட முடியாது (2)

திராவிடஸ்தான் முதல் மாநில சுயயாட்சி வரை: 1930-40களில் தனித்தமிழ் இயக்கம், திராவிட இனக் கட்டுக்கதைகளை வளர்த்தன. சைவம் என்ற போர்வையில், வைணவத்தை எதிர்த்து, தெலுங்கு பேசும் மக்களை அவமதித்த போக்கு, நீதிகட்சியைக் குலைத்து, திராவிட கழக போர்வையில், தமிழக பிரிவினை உருவெடுத்தது[1]. திராவிடஸ்தான் என்று ஆரம்பித்து, “அடைந்தால் திராவிட நாடு, இல்லையென்றால் சுடுகாடு” என்று சென்று, பிறகு, எல்லாமே குப்பையில் என்றாகியது. ஆனால், அத்தகைய தேசவிரோத கொள்கையிலிருந்து மற்ற மொழி மக்கள் வேறுபட்டனர். 1940-50 திராவிட இனவெறி கட்டுக் கதைகளினால் தான், முதலில் ஆந்திரா தனியாகப் பிரிந்தது, முதல் மொழிவாரி மாநிலமானது. தொடர்ந்து “தமிழ்” தான் உயர்ந்தது, அதிலுருந்து தான் மற்ற மொழிகள் தோன்றின என்பதனை சாதாரண மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. குறிப்பாக, தெலுங்கு மக்கள் ஒப்புக் கொள்ளவில்லை. பட்டிபோர்லு [Bhattiporlu] வரிவடிவங்களை [script] மற்றும் கல்வெட்டுகளை [inscriptions] வைத்துக் கொண்டு, தெலுங்கு வரிவடிவம் BCE மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்று வாதிட்டனர்.

1950-70களில் பெரியார்-அண்ணா திராவிட நாட்டை குப்பைத் தொட்டியில் போட்டனர்: பெரியார் ஆதித்தனாருடன் சேர்ந்து “திராவிட நாடு” தேவையில்லை என்றே பேசினார். அண்ணாவைப் பற்றிச் சொல்லத் தேவையில்லை, முதலமைச்சர் ஆக வேண்டும், தேதலில் நிற்க்கவேண்டும் என்றால், பிரிவினை பேச முடியாது. அதனால், திராவிடஸ்தானும் போய் விட்டது, திராவிட நாடும் மறந்து விட்டது, “தமிழ் நாடு” என்பதில் திருப்தி பட்டு, சுருங்கி விட்டனர். அப்படியிருந்த நிலையில், இப்பொழுது, ஸ்டாலின் “திராவிடியன் ஸ்டாக்” என்று பேசியதை / பேசுவதை கவனிக்கலாம். யாரோ தவறாக சொல்லிக் கொடுத்திருக்கின்றனர் போலும். “திராவிடியன் மாடல்” வசனங்கள் வேறு தொடர்கின்றன. அவை, “ஒன்றிய” அரசுக்கு எதிராக இருக்கிறன. கூட கவர்னர் எதிர்ப்பு வேறு. இவையெல்லாம் தேசவிரோதம் ஆகுமா, தேசாபிமானம் ஆகுமா என்று தெரியவில்லை. “மாநில சுயயாட்சி” வாதம், டிவி விவாதங்களில் எதிரொலிக்கின்றன. திமுக-திக-கம்யூனிஸ்ட் வகையறாக்கள் இதில் சளைத்தவர்கள் அல்லர்.

எம்,ஜி.ஆருக்குப் பிறகு பிரிவினைவாடம் குறைந்தது: “தமிழ்நாடு” உருவானபோது கூட, எல்லை தகராறுகளில் கேரளா, ஆந்திரா மற்றும் ஆந்திராவுடன் எதிராகவே இருந்தது. தமிழநாட்டைத் தவிர மற்ற மாநில மக்கள் தாங்கள் “திராவிடர்கள்” என்றெல்லாம் ஏற்றுக் கொள்ளவில்லை. அதனால், திராவிடத்துவ சித்தாந்தம் தமிழ்நாடு மாநிலத்துடன் சுருங்கி விட்டது. 1950-60களில், “இந்தி-எதிர்ப்பை” கையில் எடுத்து உசுப்பி விட்டனர். 1960-70களில் மேடை பேச்சு, சினிமா வைத்டுக் கொண்டு ஆட்சியைப் பிடித்தனர். 1980-70களில் காவிரி பிரச்சினையில், முன்னர் பாமகவினால், அதிகமாகவே வெறியூட்டப் பட்டு, பிறகு திராவிட பிரிவினைவாதிகளால் தீயூட்டப் பட்டது. அப்பொழுது, இங்கு “உடுப்பி” ஹோட்டல்கள் அடித்து நொறுக்கப்பட்டன. ஶ்ரீ ராகவேந்திர மடங்களும் தாக்கப்பட்டன.  1970-80களில் எம்ஜிஆரால் பிரிவினைவாதம் கொஞ்சம் குறைந்தது. “மாநில சுயயாட்சி” போர்வையில், அவ்வப்போது, திராவிடத்துவ சித்தாந்திகள் பேசுவது வழக்கமாக இருக்கிறது.

ஆரியன்திராவிடன்இனவாதம் முதல் திராவிடியன் ஸ்டாக் இனவெறிவாதம் வரை: திராவிட சித்தாந்திகள் தமிழரை, தமிழகத்தை பிரித்து வைத்து, துவேசத்தை வளர்த்து வருவது: தமிழகத்தில் கடந்த நூறாண்டு காலத்தில், –

  • தமிழ்-தமிழரல்லாதவர்,
  • திராவிடன் – ஆரியன்,
  • தென்னகத்தவன் – வடக்கத்தியன்,
  • வடக்கு வாழ்கிறது-தெற்கு தேய்கிறது
  • ஹிந்தி-ஹிந்தி-திணிப்பு
  • ஹிந்தி-எதிர்ப்பு இந்தி-திணிப்பு

போன்ற பிரச்சாரங்களால், மற்ற மொழி பேசும், மற்ற மாநிலத்தவர் மீது, மனங்களில் துவேசத்தை வளர்த்து கொண்டிருக்கிறார்கள். “வந்தேறி” தத்துவம் எப்பொழுதுமே உணர்ச்சிப் பூர்வமாக எடுத்துக் கொண்டு, மற்றவர்களைத் தாக்கப் பயம் படுத்தப் பட்டு வருகிறது. பிராமணர், மார்வாடி, குஜராத்தி, வடவிந்தியன் போன்ற பிரிவினை துவேசம் இன்றும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.யைப்பொழுது அது “குஜராத்திற்கு” எதிராக இருக்கிறது. எந்த பிரச்சினை என்றாலும், “தமிழன்” என்று தான் அடைமொழி போட்டு செய்தி போடுவது, ஊடகங்களுக்கும் வாடிக்கையாக இருக்கிறது. ஶ்ரீலங்கா மதப்பிரச்சினை என்றாலும், “தமிழர்-முஸ்லிம்” என்று தான் செய்திகள் வெளியிட்டு, மதப்பிரச்சினையை மறைக்கப் பார்த்தனர்.

2021ல் ஸ்டாலின், திராவிடியன் ஸ்டாக் என்று கிளம்பியுள்ளார்: முத்துவேலர் கருணாநிதி ஸ்டாலின் என்கின்ற நான் என்று பதவியேற்று, தான் திராவிடியன் ஸ்டாக் என்று குறிப்பிட்டுக் கொண்டாலும், விளம்பர அரசியல் நடத்திக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் தான், திராவிட மொழி பேசும், தனிநாடு கேட்கும், திராவிட இனத்தவரான பலூச்சிஸ்தான் மக்கள் ஜின்னாவில் சிலையை தகர்த்துள்ளனர். இங்கு, கருணாநிதிக்கும், பெரியாருக்கும் சிலைகள் வைப்போம் என்று கிளம்பியுள்ளனர். பிரஹூயி, பிரோஹி, பிரஹூய், என்றெல்லாம் குறிப்பிடப் படுகின்ற மொழி திராவிடக் குடும்ப மொழி என்று திராவிடத்துவ வாதிகள் தம்பட்டம் அடித்துக் கொள்கிறார்கள், இன்றும் மேடைகளில் டமாரம் அடிக்கிறார்கள்! பிறகு, அம்மொழி பேசும் மக்களைக் கொடுமைப் படுத்தும் பாகிஸ்தானை ஏன் திராவிடத்துவ வாதிகள் கண்டு கொள்வதில்லை?

பொருளாதாரம்நிதி என்று வந்தால் சித்தாந்தம் முடங்கி விடும்: “காவிரி பிரச்சினை” என்றாலும், திராவிட அரசியல்வாதிகளின்  கையாலாகாத விசயத்தை மறைத்து, கர்நாடகாவை, கன்னட மொழி பேசுபவர்கள் மீது வெறுப்பை-காழ்ப்பை வளர்த்து வருகின்றனர். அதற்கு சத்தியராஜ், விவேக் போன்ற நடிகர்களும் உடந்தையாக இருந்தனர். ஒரு திரைப்படத்தில், “இது பெங்களூரு கத்தரிக்காய், காவிரி நீரால் வளர்ந்து பெரிதாக இருக்கிறது, அது தமிழக கத்திரிக்காய், சிறிதாக இருக்கிறது, காவிரி நீர் கிடைத்தால், அதுவும் பெரிதாக வளரும்,” என்று சொல்வது, பிரிவினையின் வக்கிரகத்தைத் தான் வெளிக்காட்டியது. ஐடியால் கர்நாடகா வளர்ந்த நிலையிலும், வியாபார சம்பந்தங்களினாலும், இப்பொழுது அடக்கி வாசிக்கப் படுகிறது. சன்–குழுமங்களின் தொடர்புகள் அறிந்த விசயமே. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, அவை வேறு வகையிலும் செயல்படுகின்றன. பொருளாதாரம், நிதியுதவி, திட்டங்கள் என்றெல்லாம் வரும் பொழுது, “ஒன்றியம்”என்று வேலை செய்யாது. தொடர்ந்து கவர்னரை எதிர்த்து வந்தாலும், வினையில் தான் சென்று முடியும்.

தேசத் துரோகம் எல்லாவற்றிலும் தான் செயல்படுகிறது: தினம்-தினம் கொலைகள், தற்கொலைகள், செக்ஸ்-வக்கிர வன்மங்கள் (அப்பா மகளை கற்பழிப்பது, மாமனார் மறுமகளிடம் எல்லை மீறுவது), வன்முறைகள், குடும்பசீரழிவுகள், கணவன்–மனைவி உறவுகள் சீரழிதல், தாம்பத்தியத்தை மீறிய உறவுகள், குடும்பக் கொலைகள் (அப்பா மனனைக் கொல்லுதல், மகன் அப்பாவைக் கொல்லுதல் முதலியன), குறைந்து வரும் மாணவ-மாணவியர் ஒழுக்கம், நடத்தை, லஞ்சத்தைப் பற்றி சொல்லவே வேண்டாம், தினம்-தினம் கைது, சஸ்பெண்ட் என்ற செய்திகள்…இந்நிலையில் திராவிடக் கட்சிகள் பரஸ்பர குற்றச் சாட்டுகள் சொல்லிக் கொண்டு தப்பிக்க / காலந்தள்ள முடியாது. விலைவாசிகள் ஏறுகின்றன என்றால், வியாபர ஒழுக்கம், வணிக தராதரம், முதலியவைப் பற்றி கண்டுகொள்வதில்லை. சங்கங்கள் மூலம் அரசியல் செய்யும் போது, கூட்டுக் கொள்ளைதான் அடிக்கிறார்கள். தக்காளியை ரோடிலும் கொட்டுவார்கள், ரூ.100/-க்கும் விற்பார்கள். கேட்டால் பெரிய பொருளாதார நிபுணன் போல, சப்ளை-டிமான்ட் என்றெல்லாம் கூடப் பேசுவான் திராவிட வியாபாரி.

© வேதபிரகாஷ்

15-05-2022


[1]  இப்பொழுதும் சரவணன், சென்னைப் பல்கலை, சைவசித்தாந்த துறை, போன்ற கும்பல்கள், சைவர் இந்துக்கள் அல்லர் என்று சொல்லி வருகின்றனர். பேஸ்புக்கிலும், இந்த வாத-விவாதங்கள் தொடர்கின்றன.

ஆனைமுகத்தோனுக்கு ஆனைவெடி வைத்து உடைத்தேன் என்று ஆண்டிப்பட்டி ராஜா, ஆனைமுத்து இழவு விழாவில் பேசி ஒப்பாரி வைத்தது! (1)

ஜனவரி 6, 2022

ஆனைமுகத்தோனுக்கு ஆனைவெடி வைத்து உடைத்தேன் என்று ஆண்டிப்பட்டி ராஜா, ஆனைமுத்து இழவு விழாவில் பேசி ஒப்பாரி வைத்தது! (1)

பிள்ளையார் சிலைக்கு அடியில் ஆனை வெடி வச்சவன் நான்“.. அது சுக்குநூறாகி ஊரே ரெண்டாச்சு.. அலறவிட்ட .ராசா:  சென்னை சேப்பாக்கத்தில் பெரியார் ஆனைமுத்து படத்திறப்பு மற்றும் வெளியீட்டு நிகழ்ச்சியில் நாடாளுமன்ற உறுப்பினரும் திமுக துணைப் பொதுச் செயலாளருமான ஆ ராசா பேசியதாவது :………., என்று ஏசியாநெட்.நியூஸ் கதையை ஆரம்பிக்கிறது[1]. “அதன்பிறகுதான் அந்த விபூதிகளை எல்லாம் தூக்கிப் போட்டேன். தூக்கிப் போட்டதும் இல்லாமல் எங்க ஊரில் ஒரு பிள்ளையார் சிலை இருந்தது, அந்த சிலைக்கு கீழே ஒரு  ஆனைவெடி வச்சுட்டேன்.. அது உடைந்து சிதறியது, பின் அது பெரிய பிரச்சனை ஆயிடுச்சு. அதெல்லாம் ஒரு காலம்……,” என்று ராசா பேசியதை வெளியிட்டுள்ளது[2]. “என் வாழ்வில் நான் மாறியதற்கு காரணம் பெரியார் பேசிய அந்த கடைசி பேச்சு தான். பெரியாரின் சிந்தனைகள் என்னுள் வந்த பின்பு ஊரில் இருந்த பிள்ளையார் சிலைக்கு அடியில் ஆனைவெடி வைத்து அதை தகர்த்தவன் தான்,” என திமுக நாடாளுமன்ற உறுப்பினரும், அக்கட்சியின் துணைப் பொதுச் செயலாளருமான ஆ.ராசா கூறியுள்ளார்[3]. பெரியாரின் கருத்துக்கள் உள்வாங்கிய நான் அம்மா கொடுத்த விபூதி பொட்டளங்களை தூக்கி எறிந்ததாகவும் அவர் பேசியுள்ளார்[4]. பொட்டலம், என்று தமிழில் ஒழுங்காக எழுதத் தெரியாத இந்த திராவிடத்துவ வாதிகள் தாம் தமிழைக் காக்கிறோம், உயிரை விடுகிறோம் என்று வீராப்பு-சால்ஜாப்பு பேசி வருகின்றனர்.

விளம்பரம்தினசரி அறிக்கைஅதிரடி டிவி செய்திகள் மூலம் ஆட்சி நடத்துவது: ஏசியாநெட்.நியூஸ் கதையை தொடர்கிறது, “திமுக ஆட்சி பொறுப்புக்கு வந்தது முதல் அரசியல் ரீதியாகவும் நிர்வாக ரீதியிலும் பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. கொரோனா காலம்தொட்டு, மழை வெள்ளம் பாதிப்புவரை அரசு எடுத்த ஒவ்வொரு நடவடிக்கைகளையும் மக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர். இது ஒருபுறம் இருந்தாலும் எதிர்க்கட்சிகளான அதிமுகபாஜக பிரச்சாரத்தின் போது திமுக கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை, பொய் வாக்குறுதிகளை கொடுத்து ஆட்சிக்கு வந்துவிட்டது என்று திமுக மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன. அதேபோல் பல்வேறு மாநிலங்களில் பெட்ரோலுக்கான மாநில வரி குறைக்கப்பட்டுள்ளது, அதேபோல் தமிழக அரசும் அந்த வரியை குறைக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன”. விளம்பரம்-தினசரி அறிக்கை-அதிரடி டிவி செய்திகள் மூலம் ஆட்சி நடத்துவது என்பது தொடர்ந்து வருகிறது. ஆக, ஆ. ராசவின் பேச்சு, அத்தகைய பிரச்சஆத்தின் யுக்தியாகவும் இருக்கலாம். ஏனெனில், இதெல்லாம் திராவிடத்துவவாதிகளுக்கு கைவைந்த கலை.

இந்துக்களை எதிர்த்து வரும் கழகங்கள்: ஏசியாநெட்.நியூஸ் கதையை தொடர்கிறது, “அதிமுக எதிர்க்கட்சியாக இருந்தாலும் உண்மையான எதிர்க்கட்சி பாஜகதான் என்பதை கட்டமைக்கும் வகையில் பாஜகவினர் தொடர்ந்த திமுக அரசை மூர்க்கமாக எதிர்த்து வருகின்றனர். அந்த வகையில் திமுக ஆட்சி என்பது இந்துக்களுக்கும் இந்து மதத்திற்கும் எதிரானது, அதனால்தான் இந்து அறநிலைத்துறையின் பெயரில் இந்துக் கோவில்களில் உள்ள தங்க நகைகளை உருக்குவோம் எனக் கூறி வருகின்றனர். இன்னும் பல்வேறு இடங்களில் கோவில் சொத்துக்கள் மீட்கப்படாமல் உள்ளன[5]. அதை மீட்க முயற்சிகள் இல்லை, அதேபோல விநாயகர் சதுர்த்தியின் போது சிலைகளை வைக்க அனுமதி வழங்காததும் இந்து மத விரோத போக்கு இல்லாமல் வேறொன்றும் இல்லை என கடுமையாக விமர்சித்து வருகின்றனர்[6]. கழகங்கள் இல்லாத தமிழகத்தை உருவாக்குவோம் என்ற முழக்கத்துடன் பாஜக செயல்பட்டு வந்தாலும் அதிமுக திமுக என்ற இரண்டு கழகங்களில் அதிமுகவுடன் கைகோர்த்து திமுகவை கடுமையாக விமர்சித்து வருகிறது. திமுக எதிர்ப்பு என்பது அரசியல் எதிர்ப்பு மட்டும் அல்ல சித்தாந்த ரீதியான எதிர்பார்க்க பாஜக செய்து வருகிறது. தமிழகத்தைப் பொறுத்த வரையில்  அதிமுகதான் எதிர்க்கட்சி என்றாலும் பாஜக- திமுகவுக்கு இடையேதான் கடுமையான எதிர்ப்பு நிலவி வருகிறது என்பதே நிதர்சனம்.

கருப்பு சிவப்பு நீலம் ஒன்றாக இருந்தால் மட்டுமே 2024 ல் பாஜக என்ற காவியை வீழ்த்த முடியும்: ஏசியாநெட்.நியூஸ் கதையை தொடர்கிறது, “இந்நிலையில் அதை மெய்ப்பிக்கும் வகையில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் .ராசா பெரியாரின் சுயமரியாதை மற்றும் கொள்கை பாதையைப் பின்பற்றிய ஆனைமுத்து படத்திறப்பு விழாவில் இந்து மதத்தை தான் ஏன் எதிர்க்கிறேன் என்றும், காவி எவ்வளவு ஆபத்தானது என்பது குறித்தும் விளக்கி பேசியுள்ளார். மேலும் கருப்பு சிவப்பு நீலம் ஒன்றாக இருக்க வேண்டும் அப்படி இருந்தால் மட்டுமே 2024 ல் பாஜக என்ற காவியை வீழ்த்த முடியும்,” என்று பேசியுள்ளார்[7]. தொடர்ந்து அவர் தனது பேச்சுக்கள் மூலம் பாஜக எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளார்.  இதை தமிழ்.ஒன்.இந்தியாவும் வெளியிட்டுள்ளது[8]. இங்கு பச்சையை ஏன் விட்டனர் என்று தெரியவில்லை. அதை வைத்து தான், கடந்த 100 ஆண்டுகளாக ஆட்சி நடத்துகின்றனர், பிரிவினையையும் வளர்த்து வருகின்றனர். தீவிரவாதத்தை வளர்க்கின்றனர் என்று தெரிந்தும், கூட்டு வைத்துக் கொண்டு அரசியல் நடத்தி வருகின்றனர். இதைப் பற்றி என்.ஐ.ஏ, மற்ற அனைத்துலக நிறுவனங்களே எடுத்துக் காட்டி வருகின்றன. இருப்பினும், இங்கு ஒன்றுமே தெரியாதது போலவும், உள்ளூர் ஊடகங்களில் செய்திகள், தகவல்கள் வராமலும் கட்டுப்பாடுகளை வைட்துள்ளனர்.

.ராசாவின் பேச்சுஅதன் விவரம் பின்வருமாறு: ஏசியாநெட்.நியூஸ் கதையை தொடர்கிறது,   சென்னை சேப்பாக்கத்தில் மார்க்சிய பெரியாரிய பொதுவுடமைக் கட்சியின் சார்பில் பெரியாரியல் பெரியார் ஆனைமுத்து படத்திறப்பு மற்றும் நினைவலைகள் புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது இதில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டனர் அதில் நாடாளுமன்ற உறுப்பினர் திமுக துணைப் பொதுச் செயலாளர்களில் ஒருவரான ஆ ராசா கலந்து கொண்டார் அப்போது பேசிய அவர், “96 வயது வரை வாழ்ந்து, 75 ஆண்டுகாலம் பெரியார் குறித்து மட்டுமே பேசி மறைந்த ஆனைமுத்து படத்திறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். அவருக்கும் எனக்கும் உள்ள தொடர்பு நீண்ட நெடியது, டெல்லிக்கு வரும்போதெல்லாம் என் வீட்டிற்கு வந்து நீண்ட நேரம் பேசுவார். ஒரு தத்துவத்தை கூறி அந்த தத்துவம் நிறைவேறுவதை தன் கண்ணால் பார்த்த ஒரே தலைவர் பெரியார் அந்த பெரியாரே பேரறிஞர் என ஆனைமுத்துவை கூறினார். அதை விட அவருக்கு நாம் என்ன பெருமையை செய்ய முடியும். பூலோக ரீதியாக ஆனைமுத்துவும் நானும் ஒரே மாவட்டத்தை சேர்ந்தவர்கள்”.

© வேதபிரகாஷ்

06-01-2022


[1] ஆசியாநெட்.நியூஸ், பிள்ளையார் சிலைக்கு அடியில் ஆனை வெடி வச்சவன் நான்“.. அது சுக்குநூறாகி ஊரே ரெண்டாச்சு.. அலறவிட்ட .ராசா, Ezhilarasan Babu, Chennai, First Published Jan 4, 2022, 10:57 AM IST.

[2]  https://tamil.asianetnews.com/politics/i-am-the-one-who-put-the-elephant-explosive-under-the-idol-of-pillaiyar-a-rasa-speech–r5675u

[3] விநாயகருக்கே வெடி வச்சவன் நான்! ஆ.ராசா பேச்சு | A Raja Speech | Periyar | DMK | Anaimuthu | Aa Rasa, Jan 3, 2022.

[4] https://www.youtube.com/watch?v=EQnK87JGQhQ

[5] ஒரேதேசம், பிள்ளையார் சிலைக்கு யானை வெடிவச்சு சிலையை சுக்குநூறாக்கியவன் நான்! .ராசாவின் ஆணவ பேச்சு!, Oredesam BY OREDESAM  January 4, 2022.

[6] https://oredesam.in/explosive-statue-to-the-pillaiyar-statue/

[7] தமிழ்.ஒன்.இந்தியா, கருப்பு + சிவப்பு + நீலம் ஒன்றாகட்டும்.. காவியை விட்டுவிடுவோம்.. சேப்பாக்கத்தை தெறிக்கவிட்ட .ராசா, By Hemavandhana Published: Monday, January 3, 2022, 12:09 [IST]

[8] https://tamil.oneindia.com/news/chennai/bjp-can-be-toppled-if-black-red-and-blue-combine-says-mp-a-rasa-444125.html

பகவத் கீதை, கிருஷ்ண தூஷணம், திரிபு விளக்கம், இந்துவிரோதக் கூட்டங்களின் தொடரும் சட்டமீறல்கள் – நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்! [2]

ஜூலை 29, 2020

பகவத் கீதை, கிருஷ்ண தூஷணம், திரிபு விளக்கம், இந்துவிரோதக் கூட்டங்களின் தொடரும் சட்டமீறல்கள்நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்! [2]

DK arheist discourse on Bhagawat Gita.his book

  1. இந்நாட்டின் அரசமைப்புச் சட்டத்தின் மதச்சார்பின்மை (Secularism) கொள்கைக்கு முற்றிலும் முரணானது இது. இந்து மத நூலை இப்படி விருப்பப் பாடம் என்ற போர்வையோடு பல்கலைக் கழகத்தில் வைத்தால், மற்ற மதவாதிகளான இசுலாமியரின் ‘‘குரான்”, கிறித்துவர்களின் ‘‘பைபிள்”, சீக்கியர்களின் ‘‘கிரந்தம்”, பவுத்தர்களின் ‘‘தம்மபதம்”, ஜொராஷ்டர்களின் ‘‘அவெஸ்தா”, பகுத்தறிவாளர்களின் ‘‘கீதையின் மறுபக்கம்” நூல் – இவைகளை அதேபோல் விருப்பப் பாடமாக வைக்க வேண்டும் என்ற குரல் எழுந்தால், அதை ஏற்று துணைவேந்தரோ – அவரது ‘அகாடமிக் கவுன்சில்’ என்ற அமைப்பு தலையாட்டுமா?
  1. கீதை வன்முறையைத் தூண்டும் ஒரு கொலைகார நூல்!: முன்னாள் நீதிபதி எழுதிய ‘மகாத்மாவின் கொலை’ நூல். ‘தேசப்பிதா’ என்று அழைக்கப்படும் அண்ணல் காந்தியாரை சுட்டுக்கொன்ற – தொடக்கத்தில் ஆர்.எஸ்.எஸ்.சிடம் பயிற்சி பெற்ற நாதுராம் விநாயக் கோட்சே, நீதி மன்றத்தில் கொடுத்த வாக்குமூலத்திலேயே, தான் இந்த கொலை முடிவுக்கு வருவதற்குப் பெரிதும் துணை நின்று தூண்டிய நூல் ‘பகவத் கீதை’ என்று கூறியுள்ள நிலையில், ‘The Murder of the Mahatma’ – ‘மகாத்மாவின் கொலை’ என்ற தலைப்பில் பஞ்சாப் உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி ஜஸ்டிஸ் ஜி.டி.கோஸ்லா 1963 இல் எழுதிய நூலில், 1977 வரை மூன்று பதிப்புகள் வெளியாகி – விற்பனையாகி – இக்கருத்தை அவர் பதிவு செய்துள்ளார்! எவரே மறுப்பர்? பகவத் கீதை வன்முறையைத் தூண்டும் நூல்! கீதை கொலை நூல்தான் என்று சுவாமி சித்பவானந்தா எழுதிய விளக்கவு ரையிலேயே குறிப்பிட்டுள்ளார்! ‘‘இந்து சாஸ்திரங்களில் சொல்லப் பட்டபடி நடந்துகொள்வதுதான் நல்ல மனிதன் ஒருவருடைய கடமை – தர்மம் ஆகும்” என்பதே கோட்சே வாக்குமூலம். (அவர் கைப்பட எழுதியது ‘May it Please Your Honour’ என்ற தலைப்பில் ஒரு நூலாகவும் (ஆங்கிலத்தில்) அது வெளி வந்துள்ளது). ‘‘…தாயகத்தைக் காப்பாற்ற உயிரைக் கொடுத்தும் போராடவேண்டும் என்று ஹிந்துக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். பகவத் கீதையிலிருந்து சில சுலோ கங்களைச் சொல்லி உணர்ச்சிகரமாகத் தனது வாக்குமூல உரையை முடித்தார்….” – இப்படி நீதிபதி ஜி.டி.கோஸ்லா அந்த நூலில் குறிப்பிடுகிறார்!

DK Veeramani discourse on Bhagawat Gita-28-07-2020-1

‘‘கடமையைச் செய்; பலனை எதிர் பார்க்காதே: ‘‘கடமையைச் செய்; பலனை எதிர் பார்க்காதே” என்பதில் கடமை என்பது ஜாதி – வருணத்தைக் காப்பாற்றும் கடமையைச் செய்யவேண்டும் என்று வன்முறையைத் தூண்டும் ஒரு நூல் பகவத் கீதை ஆகும். இப்படிப்பட்ட நூலில் இருப்பதாகத் தவறான மேற்கோள்களைக் காட்டி மக்களை ஏமாற்றுகின்றனர். குறளை விருப்பப் பாடமாக வைக்கட்டும்! திருக்குறள் போன்ற உலகப் பொது ஒழுக்க நூல் – ‘வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ் நாட்டில்’ அவரது குறளை விருப்பப் பாடமாக வைக்க வேண்டாமா? அண்ணா பல்கலைக் கழகத்தில் அண் ணாவின் அரிய சிந்தனைக் கருவூலங்களை வைக்கவேண்டாமா? அவர் பெயரால் அமைந்த பல்கலைக் கழகம் அல்லவா அது? தமிழ்நாடு முழுவதும் அறப்போர் கிளர்ச்சி உறுதி! இன்னும் ஒரு மாதத்திற்குள் இதைப் பின்வாங்கி மாற்றாவிடில், தமிழ்நாடு முழுவதும் அறப்போர்க் கிளர்ச்சி தொடர் போராட்டமாக, அண்ணா பல்கலைக் கழகம் முன் தொடங்கி, தொடருவது உறுதி! உறுதி!! பெரியார் மண்ணில் இப்படி உணர்ச் சிபூர்வ நெருப்புடன் நெருங்கும் முயற்சி யில் இப்பல்கலைக் கழகத் துணைவேந்தர் ஈடுபடக் கூடாது. ஒன்றுபட்டு கண்டனக் குரல் எழட்டும்! தமிழக அரசும், முதலமைச்சரும் – மதச்சார்பின்மைக்கு எதிரான இதனை அகற்றிட முழு முயற்சியில் உடனடியாக ஈடுபடவேண்டும்! ஒத்த கருத்துள்ள அனைவரும், அனைத்துக் கட்சித் தலைவர்களும், கல்வி யாளர்களும் ஒன்றுபட்டு கண்டனக்குரல் எழுப்பிட முன்வரவேண்டும்.

DK Veeramani discourse on Bhagawat Gita-28-07-2020-2

2017லும் இதே கருத்தை வெளியிட்டது[1]: சதுர் வர்ணம் மயா ஸ்ருஷ்டம் என்று கடவுள் அவதாரமான கண்ணன் கூறுகிறான் என்று எழுதி, ஜாதியைப் பாதுகாக்கிறது. கொலையை நியாயப்படுத்தும் நூல் இந்நூல் – காந்தியாரைக் கொன்ற கோட்சே, நான் கீதையைப் படித்தபிறகே இந்த முடிவுக்கு வந்தேன் என்று நீதிமன்றத்திலேயே வாக்குமூலம் தந்துள்ளான். இந்த வன்முறையைத் தூண்டும் நூலை- மாணவர்களின் பிஞ்சு உள்ளத்தில் புகுத்தினால் அது நஞ்சைப் புகுத்துவது அல்லவா? இந்த மசோதாவை நாடாளுமன்றத்தில் உள்ள அத்தனை எதிர்க்கட்சிகளும் கடுமையாக எதிர்த்து தோற்கடிக்க வேண்டும். பகவத் கீதையை தேசிய நூலாக்க அரசு பிரகடனப்படுத்த வேண்டும் என்று முன்பு குரல் எழுப்பியவுடன் எதிர்ப்பு – கண்டனம் புயல்போல் கிளம்பியதால் அது பின்வாங்கப்பட்டது.மீண்டும் ஆழம் பார்க்கவே இம்முயற்சி; எல்லோரும் ஒன்று திரண்டு இம்முயற்சியை முறியடிக்க வேண்டும்” என்று வீரமணி தெரிவித்துள்ளார்[2].

DK Veeramani discourse on Bhagawat Gita-28-07-2020-3

கிருஷ்ணன் என்ன உனக்கு மட்டும்தானா தெரியும்? உன் கிருஷ்ணனையும் தெரியும், அவன் பாட்டனையும் எங்களுக்குத் தெரியும்!: வீரமணியை கடந்த ஆண்டுகளில் அதிகம் பாதித்துள்ளது ஶ்ரீ கிருஷ்ண பரமாத்மா தான்! 2013ல் இப்படி பிதற்றியுள்ளார்[3], ஒரு கூட்டத்தில் பேசியது இப்படியுள்ளது, “உங்களுக்கு என்ன தெரியும்? உன் கிருஷ்ணனையும் தெரியும், அவன் பாட்டனையும் எங்களுக்குத் தெரியும்! ஆக, எங்கள் கிருஷ்ணனைப்பற்றி பேசிவிட்டார்களா என்று நீங்கள் கேட்கிறீர்கள். கிருஷ்ணன் என்ன உனக்கு மட்டும்தானா தெரியும்? உன் கிருஷ்ணனையும் தெரியும், அவன் பாட்டனையும் எங்களுக்குத் தெரியும்! ஏனென்றால், நீ கிருஷ்ணன் என்று சொல்கின்ற கடவுளைப்பற்றி, உன் மூக்கை சொறிந்து, திசை திருப்பிவிட்டிருக்கிறார்கள் யாரோ!” பாவம், அந்த அளவுக்கு குற்றம் கண்டுபிடிக்க கீதை பற்றி ஆராய்ச்சியே செய்துள்ளார் போலும். திமிருடன், இவ்வாறு ஒருமையில் பேசியிருப்பதை கவனிக்க வேண்டும். மனத்தில் எந்த அளவுக்கு வன்மம் இருந்தால் ஒழிய, இவ்வாறு பேச்சு வந்திருக்காது. பிறகு, இத்தகைய ஆட்களிடமிருந்து எதை எதிர்பார்க்க முடியும்?

DK Veeramani discourse on Bhagawat Gita-28-07-2020-4
கோர்ட்டில் கிருஷ்ணனையும் கூப்பிட முடியும்; கிருஷ்ணதாசர்களையும் கூப்பிட முடியும்: வீரமணி பொறிந்து தள்ளினார், “இன்னும் சில பேர் வழக்கு போடுவோம் என்று சொல் கிறார்கள். போடுங்கள்! உங்கள் வழக்கைத்தான் நான் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். அப்போதுதான், கோர்ட்டில் கிருஷ்ணனையும் கூப்பிட முடியும்; கிருஷ்ணதாசர்களையும் கூப்பிட முடியும். உன்னாலே வர முடியுமானால், வழக்கு போடுங்கள்!ஆதாரபூர்வமாக தாக்கல் செய்கிறோம்! கோர்ட்டில், நாங்கள் ஆதாரபூர்வமாக, கிருஷ்ணன் செய்த லீலைகளைப் படமாகப் போட்டு, குளத்தில் பெண்கள் எல்லாம் பாதி நிர்வாணமாக நிற்கிறார்கள்; சேலைகளைத் தூக்கிக்கொண்டு மரத்தின்மீது கிருஷ்ணன் இருக்கிறார் பாருங்கள் அந்தப் படத்தினை, நீதிபதி அவர்களே இதனை ஆதாரபூர்வமாக தாக்கல் செய்கிறோம் என்று சொன்னால், என்ன ஆவார் கிருஷ்ணன், அதனை நீங்கள் எண்ணிப் பார்க்க வேண்டும்”. எப்படி முகலாய போலித்தன சரித்திரவியல், கட்டுக்கதை உருவாக்கம், சித்திரங்கள் வரந்த விதம், இவர்களைப் போன்ற நாத்திகர்களால் உபயோகப்படுத்தப் படுகிறது என்பதனையும் கவனிக்க வேண்டும்.

DK Veeramani discourse on Bhagawat Gita-28-07-2020-5
ஒரு லட்சம் பிரதிக்குமேல் விற்பனையாகிய கீதையின் மறுபக்கம்: தன்னுடைய புத்தகத்தைப் பற்றி பீழ்த்திக் கொள்கிறார், “கீதையின் மறுபக்கம்! இதோ என் கைகளில் இருப்பது கீதையின் மறுபக்கம் நூல்! கிருஷ்ணன் உபதேசம் செய்தாராம்யாருக்கு, அர்ஜுனனுக்கு! அதுதான் கீதை! எதிர் எதிரே படைகள் இருக்கு. அந்தப் படையில் அர்ஜுனன் சண்டை போட போகிறாராம். அர்ஜுனனுக்குத் தேரோட்டியாக கிருஷ்ணன் போறாராம். அப்போது காதோடு காதாக கீதா உபதேசம் செய்றாராம். எங்கே? எதிரிப் படைகள் நிற்கின்ற இடத்தில் – 700 சுலோகம் முடியும் வரை எதிரிப் படைகள் அமைதியாக நிற்கின்றதாம். கீதையின் மறுபக்கம் நூல் இருக்கிறதே, ஒரு லட்சம் பிரதிக்குமேல் விற்பனையாகி இருக்கிறது. அதுமட்டுமல்ல, ஆங்கிலத்திலே, இந்தியிலே, எல்லா மொழிகளிலும் அச்சாகி இருக்கிறது. இதற்கு ஒரு வரி மறுப்பு கிடையாது”.  முதலில் வாங்கிப் படித்தார்களா, இல்லை, கண்டுகொள்ளவில்லையா என்பது தெரியவில்லை. ஏனெனில், ஏற்கெனவே தெரிந்த பொய்களை, திரட்டி புத்தகம் போட்டால், யாரும் படிக்க மாட்டார்கள், அதன், தரம் தெரிந்தவர், ஒதுக்கத்தான் செய்வார்கள். பிறகு, அதனைப் பற்றி தம்படாம் அடித்துக் கொள்வதில் என்ன பலனும் இல்லை.

© வேதபிரகாஷ்

29-07-2020

DK Veeramani discourse on Bhagawat Gita-28-07-2020-6

[1] தினபூமி, பகவத் கீதையை பள்ளிகளில் கட்டாயமாக்கும் முயற்சியை முறியடிக்க வேண்டும்: வீரமணி, செவ்வாய்க்கிழமை, 23 மே 2017.

[2] http://www.thinaboomi.com/2017/05/23/72353.html?page=5

[3] வீரமணி, உன் கிருஷ்ணனையும் தெரியும், அவன் பாட்டனையும் எங்களுக்குத் தெரியும்!, விடுதலை, 03-10-2013.

DK Veeramani discourse on Bhagawat Gita-28-07-2020-8

பகவத் கீதை, கிருஷ்ண தூஷணம், திரிபு விளக்கம், இந்துவிரோதக் கூட்டங்களின் தொடரும் சட்டமீறல்கள்! [1]

ஜூலை 29, 2020

பகவத் கீதை, கிருஷ்ண தூஷணம், திரிபு விளக்கம், இந்துவிரோதக் கூட்டங்களின் தொடரும் சட்டமீறல்கள்! [1]

EVR and RSS

இந்துவிரோதிகளும், இந்துத்துவவாதிகளும்: ஜூலை 11, 2020ல் வீரமணி மறுபடியும் அதே தூஷணத்தை செய்திருப்பதால், இதனை விளக்கமாக எழுத வேண்டிய அவசியம் உண்டாகி உள்ளது.  “இந்துத்துவம்” பேசிக் கொண்டு, தம்மை “இந்துவவாதிகள்,” என்று சொல்லிக் கொண்டு, இந்துமதத்தினையே தாங்கள் தான் காத்து வருகின்றது போலக் காட்டிக் கொண்டாலும், திடீரென்று, “பெரியார் கொள்கை தான் எங்கள் கொள்கை,” என்றெல்லாம் பேசியிருப்பது திகைப்படையச் செய்கிறது. தமிழகத்தில் திராவிடக் கட்சிகளின் ஆதரவில்லாமல், அரசு-அதிகாரம் பெறமுடியாது என்றதால், இவ்வாறு சமரசம் செய்து கொள்கின்றனரோ என்ற சந்தேகமும் எழுகிறது. இந்து, இந்து நலன், இந்து பாதுபாப்பு முதலியவை, குறுகிய “அரசியல்,” அரசியல் கூட்டணி, அரசியல் ஆதாயம் போன்றவற்றில் சிக்க வைத்து, குறுக்கி விட முடியாது. அதனால் தான், மற்றுக் கருத்து கொண்டவர்கள், விவரங்களை எடுத்துக் கொண்டு, அரைகுறையாக புரிந்து கொண்டு, தூஷித்துக் கொண்டிருக்கிறார்கள்.

Bhagawat Gita, tilakk, Sedition
பகவத் கீதை எதிர்ப்புஆந்நியர் ஆட்சி முதல் திராவிட ஆட்சி வரை: பகவத் கீதையினை இந்துக்கள் ஆதரிப்பது அறிந்து, அதனை தூஷித்து புத்தகத்தை எழுதுவது, பேசுவது, தூஷிப்பது புதியதல்ல. ஆங்கிலேயர் காலத்திலிருந்தே, பகவத் கீதையை எதிர்த்து பிரச்சாரம் நடந்தது. சுமார் 150 ஆண்டு காலமாக இது நடந்து வருகிறது. தேசதுரோக அறிக்கை கமிட்டி, “பகவத் கீதை வன்முறையைத் தூண்டுகிறது,” அதனால், அதனை தடை செய்யவும் முற்பட்டது[1]. இந்திய புத்தகங்கள் ஸ்காட்லான்ட் யார்டுக்கு அனுப்பப் பட்டு புலன் விசாரணைக்கு உட்படுத்தப் பட்டது[2]. 1896ல் பிளேக்கினால் கோடிக் கணக்கான மக்கள் இறந்த போது, ஆங்கிலேயர் உகந்த நடவடிக்கை எடுக்காததால், திலகர் “கேசரி”யில் அவர்களைத் தாக்கி எழுதினார். 1659ல் சிவாஜி எப்படி ஒரு முகலாய தலபதியைக் கொன்றார் என்று குறிப்பிட்டார். பிறகு, ஆர்பாட்டக் காரர்கள், ஒரு ஆங்கிலேய அதிகாரியைக் கொன்றனர். அதனால், திலகருக்கு ஆறுவருடம் தீவாந்திர தண்டனை கொடுக்கப் பட்டது. இதனால், ஆங்கிலேயர் அவருக்கு திலகருக்கும், காந்திக்கும் இடையிலேயே கீதை ஆதரிப்பு-எதிர்ப்பு விவாதம் நடந்தது. காந்தி உண்மையில் கீதையை ஆதரிப்பது போல காட்டிக் கொண்டு, எதிர்க்கவே செய்தார்.  திலகர் வழக்கை வைத்துப் பார்த்தால், இப்பொழுது, வன்முறையினைத் தூண்டுபவர்கள், இந்துவிரோத திரவிடத்துவ, பெரியாரிஸ, கம்யூனிஸ, துலுக்கக் கூட்டங்கள் தான். அவ்வப்பொழுது, பெயரை மாற்றிக் கொள்கின்றன, ஆனால், வேலை செய்வது, ஊக்குவிப்பது அவர்கள் தான்.

Tilak argued his sedition case 1918

சமீபத்தைய எதிர்ப்புகள்: இந்திய வரலாற்றுப் பேரவை போன்ற கம்யூனிஸ-துலுக்க ஆதரவு அமைப்புகள் அத்தகைய ஆய்வுக் கட்டுரைகளை ஊக்குவித்தன[3]. அவ்வப்போது, ஆங்கிலத்தில், செய்திகள் வந்து கொண்டிருக்கும். சிலர், அரைகுறையாக திரித்து விளக்கம் கொடுப்பர்[4]. அவையெல்லாம் ஊடகங்களில் வந்து கொண்டிருக்கும், இன்றும் வந்து கொண்டிருக்கின்றன[5]. போதாகுறைக்கு, பகவத் கீதை, பௌத்தத்திலிருந்து காபியடித்து எழுதப் பட்டது என்றெல்லாம் சில ஆராய்ச்சியாளர்கள் எடுத்துக் காட்டுகின்றனர். 2012ல் ரஷ்யாவில் தடை செய்யப் பட வேண்டும் என்று வழக்கு தொடரப் பட்டது, ஆனால், நீதிமன்றம் தள்ளுபடி செய்தது[6]. சென்ற வருடம் அண்ணா பல்கலைக் கழகத்தில், சேர்க்கப் பட்டது என்றபோதும், பிரச்சினையைக் கிளப்பினர்[7]. உண்மையில், பிளாடோ போன்றவர்களின் தத்துவத்துடன், இந்திய தத்துவத்தையும் படிக்க ஏற்பாடு செய்தபோது, எதிர்ப்புத் தெரிவித்தனர்[8]. எப்படி சைவ-வைணவ சர்ச்சை, சண்டை, எதிர்ப்புகள் இலக்கியங்களாக வெளிப்பட்டபோது, அவை மற்றவர்களால் சாதகமாக உபயோகித்துக் கொண்டார்களோ, அதேபோல இந்த விவரங்களை வைத்துக் கொண்டு, தன்னுடைய காழ்ப்பு, வெறுப்பு, துவேசம் முதலியவற்றைச் சேர்த்து இப்புத்தகத்தை வீரமணி எழுதித் தள்ளினார். இந்துஎதிர்ப்பு ஒன்றையே பிரதானமாக வைத்துக் கொண்டு, வீரமணி கூட்டம் திரும்பத் திரும்ப இந்த பிரச்சாரத்தை செய்து வருகின்றது. மேலே குறிப்பிட்ட இந்துவிரோத குப்பைகளை அள்ளிக் கொண்டு, இங்கு குப்பைக் கொட்ட முயல்கிறது இந்துவிரோதக் கூட்டம்.

Bhagawat Gita, tilakk, Sedition.s.24A1

ஜூலை 2020 – நாவலர் நெடுஞ்செழியன் நூற்றாண்டு விழா காணொலியில் வீரமணி பேசியது[9]: “பகவத் கீதை ஏன், எதற்காக?” என்ற சிறிய நூலை வாங்கி நீங்கள் மேலும் விரிவாகப் படித்துத் தெரிந்து கொள்ளலாம் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி காணொலி மூலம் உரையாற்றியது[10], “இது உங்களையெல்லாம், நம்மையெல்லாம் குழப்புகிறது என்று மட்டும் நினைக்காதீர்கள். அர்ஜுனனையே குழப்புகிறது. கீதையிலேயே அதைச் சொல்லியிருக்கின்றான். கீதையினுடைய அத்தியாயம் மூன்றுசுலோகம் இரண்டிலே அர்ஜுனன் சொல்லுகிறான்:

ஜனார்த்தனா! (ஜனார்த்தனன் என்றால் கிருஷ்ணன்) என் னைக் குழப்பாதே!” கெஞ்சுகிறான் உனது பேச்சுக்கள் அனைத்தும் குழப்பமாய் இருக்கின்றன. குழப்பம் உண்டாவதால் எனது மதி மயங்குகிறதுமதிமயங்காமல் வேறு என்ன செய்யும்?…….”ஏதாவது ஒன்றைச் சொல்லி இதுதான் உயர்ந்தது என்று சொல். நான் அதைப் பின்பற்றுகிறேன். இல்லாவிட்டால் ஆளைவிடு. என்னைப் போட்டு குழப்பு குழப்பு என்று குழப்புகிறாயே!

உலகம் முழுவதும் எத்தனையோ தத்துவ ஞானிகள் படித்து பொருள் கொடுத்துள்ளாற்கள். ஆனால், இத ஆளுக்கு மட்டும் இப்படி தோன்றுகிறது: விசயம் தெரிந்தவர்கள் இதனைப் படித்தால், இந்த ஆளுக்கு ஒன்றும் தெரியவில்லை என்பதை நன்றாகவே தெரிந்து கொள்வார்கள். அது தான் நடந்து கொண்டிருக்கிறது. அதனால் டான், இந்த ஆளை யாரும் பொருட்படுத்துவது இல்லை. அதனாலேயே, தொடர்ந்து இப்படி குப்பைகளைக் கொட்டி வருவதும் விசித்திரமான விசயமே!

 …….ஒரு சுலோகத்தினைச் சொல்லி முடிக்க 5 நிமிடம் வேண்டும். 700 சுலோகங்களையும் சொல்லி முடிக்க 5 நாட்கள் வேண்டும்……..பயனை எதிர்பார்க்காமல் எவன் கடமையைச் செய்வான்? நாங்கள் வெட்டியாட்களாகவா வந்து உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கிறோம். பேசினால் அதனைக் கேட்பவர்களுக்குக் கொஞ்சமாவது புத்தி வருமே என்பதற்காகத்தான் பேசிக் கொண்டிருக்கிறோமே தவிர, நீ உழைத்துக் கொண்டே இரு, பலனை எதிர்பார்க்காதே, நான் கொடுப்பதை வாங்கிக் கொள். நீயாகக் கேட்காதே, கடமையைச் செய் என்கிற அறிவுரையை எல்லோரும் சொல்லுகிறார்கள். இதை எப்படிச் சொல்லுகிறார்கள் என்று புரியவில்லை?,” என்று பல உளறல்கள் உள்ளன. இங்கு முக்கியமானவை மட்டும் கொடுக்கப்பட்டுள்ளன.

K.Veeramanis anti-Hindu tirade, Viduthalai, 27-07-2020
2019ல் வெளியிட்டக் கருத்து: 2019ல் பேசிய / எழுதிய சமாசாரங்களும் ஒன்றும் புதியவை அல்ல. கடந்த 100-150 ஆண்டுகளாக, வெளிநாட்டவர் எழுதி வந்துள்ளதை தொகுத்தவை தான். “இதற்கான நியாயமான காரணங்கள் இதோ”, என்று வீரமணி சொல்வது[11]:

  1. கீதை ஒரு இந்து மத நூல் மட்டுமல்ல, ஜாதியை ஆதரித்து நியாயப்படுத்தும் நூல்.

“சதுர் வர்ணம் மயா ஸ்ருஷ்டம், குண – கர்ம விபாகச

தஸ்ய கர்த்தாரமபி மாம் வித்த்யா கர்த்தாரர மவ்யயம்”

(அத்தியாயம் 4, சுலோகம் 13)

அதாவது, ‘‘நாலு வருணங்களையும் நானே படைத்தேன். நானே அதனைப் படைத்தவனாக இருந்தாலும் அதனை மாற்றிட அல்லது திருத்தி அமைத்திட என்னால் முடியாது” என்று கூறும் நூல்.

  1. சூத்திரர்களும், பெண்களும்பாவயோனியில் பிறந்தவர்கள் என்று அவர்களைக் கேவலப்படுத்தும் நூல்.

“மாம் ஹி பார்த்த வ்யபாச்ரித்ய யேஸ்பி ஸ்யு, பா – யோன்ய

ஸத்ரியோ வைச்யாஸ் – ததா சூத்ராஸ் – தேஸ் பியாந்தி பராங்கதிம்”

(அத்தியாயம் 9, சுலோகம் 32)

அதாவது, ‘‘பெண்களும், சூத்திரர்களும் பாவ யோனியில் பிறந்தவர்கள். அதனால் அவர்கள் கீழானவர்கள். “பிராமணன், சத்திரியன், வைசியன் ஆகிய மூன்று வர்ணத்தாருக்கும் தொண்டூழியம் செய்வது ஒன்றே சூத்திரர்களின் இயல்பான கடமையாகும்” என்றும் கூறும் நூல் பகவத் கீதை. மகளிரும் படிக்கும் ஒரு பல்கலைக் கழகத்தில் இப்படி இழிவுபடுத்தும் நூல் இடம்பெறலாமா?

© வேதபிரகாஷ்

29-07-2020

Tilak, Gandhi and Gita

[1] Sedition Committee Report, 1918 found that Bhagawat Gita was inspiring extreme nationalist freedom fighters were resorting to violence by the teachings of Bhagawat Gita and therefore, it had to be proscribed.

[2] ஆங்கிலேய அரசு இந்திய விடுதலைப் போராட்ட வீரர்கள் பகவஹ் கீதைப் படித்து, ஊக்கம் கொண்டு தான், ஆங்கிலேய அதிகாரிகளைக் கொன்று வருகின்றனர் என்று நினைத்துக் கொண்டனர். உண்மையில் அவர்கள் தங்களது வாழ்க்கை நிலையில்லாதது, அதனால், உயிரை தேசத்திற்காக அர்ப்பணிக்கலாம் என்பதனைத் திரித்து விளக்கம் கொண்டது.

[3] Ganachari, Aravind. British official view of Bhagawat Gita as text book for the mental trainng of revolutionaryProceedings of the Indian History Congress. Vol. 56. Indian History Congress, 1995, pp.601-610.

[4] Bangalore Mirror, Gita propagates violence: Sreedhar, Prathibha Nandakumar, Updated: Feb 28, 2015, 22:21 IST.

[5] https://bangaloremirror.indiatimes.com/opinion/views/bhagavad-gita-violence/articleshow/46414314.cms

[6] Corley, Felix. “RUSSIA: Has «madness» of banning religious publications been stopped?».” Forum, 2012.

[7] Indian Express, Anna University includes Bhagavad Gita in curriculum, irks academics, Published: 26th September 2019 05:23 AM | Last Updated: 26th September 2019 10:00 AM

[8] https://www.newindianexpress.com/cities/chennai/2019/sep/26/anna-university-includes-bhagavad-gita-in-curriculum-irks-academics-2039110.html

[9] கே. வீரமணி, ‘‘பகவத் கீதை ஏன் எதற்காக,” July 28, 2020 • Viduthalai • கழகம்

[10]https://viduthalai.page/article/%E2%80%98%E2%80%98%E0%AE%AA%E0%AE%95%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%80%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%22/JVUSo8.html

[11]  கி.வீரமணி, தலைவர், திராவிடர் கழகம் 26.9.2019, முகாம்: பிலெடெல்ஃபியா (அமெரிக்கா). https://www.facebook.com/asiriyarkv/posts/2489306694438478

ஸ்டாலினை பசு முட்ட வந்ததும், குங்குமத்தை அழித்ததும், இப்பொழுது சனியைப் பற்றி பேசும் ஸ்டாலினும், வாய்ச்சொல் கேட்டு அஞ்சும் கனிமொழியும்! (3)

ஜனவரி 16, 2018

ஸ்டாலினை பசு முட்ட வந்ததும், குங்குமத்தை அழித்ததும், இப்பொழுது சனியைப் பற்றி பேசும் ஸ்டாலினும், வாய்ச்சொல் கேட்டு அஞ்சும் கனிமொழியும்! (3)

Kanimozhi confession -13-01-2018-2

10 ஆண்டுகளுக்கு முன்பு (2008) பெரியாரை செருப்பால் அடிப்பேன் என்றுக் கூறியதை பொறுத்து ரௌத்திரம் பழகாததன் விளைவை தான் தற்போது அனுபவிப்பது (2018): ஆரூர் புதியவனின் “சொற்களால் ஒரு சுதந்திரப் போர்” நூல் வெளியீட்டு விழா சென்னை கவிக்கோ அரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பங்கேற்ற கனிமொழி எம்.பி நூலை வெளியிட்டதுடன், சிறப்புரை நிகழ்த்தினார். ஜி.எஸ்.டி., முத்தலாக் என எல்லா திசைகளிலும் மக்களை ஒடுக்கும், அச்சுறுத்தும் நிகழ்வுகள் நடைபெறுவதாக குறிப்பிட்ட கனிமொழி, இவைகள் குறித்து பேசாததன் விளைவாக நமது மௌனமே நம்மை அழித்துவிடும் என்ற நிலைக்கு நாம் தள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்தார். தமிழன் ரௌத்திரம் பழகுவதை நிறுத்திக் கொண்டதால் தான் இந்த நிலையில் தமிழன் உள்ளதாகக் கூறிய கனிமொழி, 10 ஆண்டுகளுக்கு முன்பு ஒருவர் பெரியாரை செருப்பால் அடிப்பேன் என்றுக் கூறியதை நாம் பொறுத்துக் கொண்டு ரௌத்திரம் பழகாததன் விளைவை தான் தற்போது அனுபவித்து வருவதாக அதே நூல் வெளியீட்டு விழாவில் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டதை நினைவுக்கூர்ந்து அது சரியான கருத்து என்றார். சுயமரியாதையை இழந்துவிட்டு ஏதுமில்லை என்றுக் கூறிய கனிமொழி, நம் வாழ்க்கையில் வெள்ளை என்ற ஒளி உருவாக வேண்டும் எனில் நாம் கருப்பில் இருந்துதான் ஆரம்பிக்க வேண்டும் என்றும், பெரியார் என்ற கருப்புச்சட்டை இல்லாமல் விடியல் இல்லை என்று குறிப்பிட்டார்.

Kanimozhi confession -13-01-2018-1

ஆண்டாள் எந்த சாதியில் பிறந்திருந்தால் என்ன?: ஜாதி என்ற சொல்லையே அழிக்க வேண்டும், ஜாதியே இல்லாத நிலையை உருவாக்குவதே திராவிட அரசியலின் அடிநாதம் என்றுக் கூறிய கனிமொழி, ஜாதியைக் கொண்டு ஒருவன் ஒருவரை ஒடுக்கினால் அதையே ஆயுதமாக தூக்க வேண்டியது அவசியமாகிறது என்றும் குறிப்பிட்டார். நாம் தூக்க வேண்டிய ஆயுதம் எதுவென தீர்மானிப்பது எதிரியே என்றும் கனிமொழி தெரிவித்தார். ஜாதி இல்லை என்று எல்லோரும் சொல்கிறோம், எந்த ஜாதியில் பிறந்தவரும் என்னை வந்து சேரலாம் என்று கண்ணபிரான் கூறுவதாக கீதை சொல்கிறது எனில், ஆண்டாள் எந்த சாதியில் பிறந்திருந்தால் என்ன? ஆண்டாள் பிறப்பால் தலித்தாக இருந்திருக்கலாம், எந்த சாதியாகவும் இருந்திருக்கலாம் எதுவாய் இருந்தால் என்ன? அதில் என்ன பிரச்சனை எனவும் கனிமொழி குறிப்பிட்டார். இப்படிப்பட்ட விவாதங்களை நிகழ்த்தவில்லை எனில், பயந்திருப்போம் எனில், நிச்சயமாக தமிழினம் சுயமரியாதை அற்ற இனமாக, அடையாளம் அற்ற இனமாக, எதையெல்லாம் போராடி சாதித்தோமோ அதையெல்லாம் இழந்துவிடும் இனமாக மாறிவிடும் சூழல் நிலவுவதாக கனிமொழி தெரிவித்தார்.

Kanimozhi confession -13-01-2018-3

கடவுளை எதிர்த்து பேசிப்பேசி தான் கருணாநிதிக்கு பேசமுடியாமல் போய் விட்டதாக சிலர் பேசுவதாக வேதனை தெரிவித்த கனிமொழி: கடவுளை எதிர்த்து பேசிப்பேசி தான் கருணாநிதிக்கு பேசமுடியாமல் போய் விட்டதாக சிலர் பேசுவதாக வேதனை தெரிவித்த கனிமொழி, உடல்நலம் சரியில்லாதபோது உதவியாளர் வைத்துவிடும் விபூதியைக் கூட அழித்துவிடுபவர் கருணாநிதி என்று தெரிவித்தார். தனது தாயார் கோவிலுக்குச் செல்வது குறித்து சிலர் கேட்பதாகவும், தனது தாயார் கோவிலுக்கு செல்வதற்கான உரிமைக்காகவும் தான் போராடுவதாக தெரிவித்தார்[1]. நிகழ்வின் போது தனது வீட்டில் நடைபெற்ற சம்பவம் ஒன்றைக் குறிப்பிட்டு கனிமொழி பேசினார். “இப்போதும் இருவரும் (கருணாநிதி, கனிமொழி) கடவுளை மறுப்பது ஏன்?” என தனது தாயார் கேட்டதாகவும், “தலைவர் (கருணாநிதி) தற்போது (கடவுள் விடயத்தில்) தனது கருத்தை சிறிது மாற்றியிருப்பார்” என்று தாயார் குறிப்பிட்டதாகவும், இது தொடர்பாக கருணாநிதியிடம் “கடவுள் இருக்கிறாரா?” என கேட்டபோது, வாய் பேசமுடியாத நிலையில், “இல்லை” என கருணாநிதி தலையசைத்ததாகவும் கனிமொழி குறிப்பிட்டார்[2]. தனது வீட்டில் நிகழ்ந்த சம்பவத்தை நினைவுக்கூர்ந்த கனிமொழி, கருணாநிதியின் மவுனம் கூட நாத்திகம் பேசும் என்று குறிப்பிட்டார்[3]. மேலும், எதை வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள், திமுக நாத்திகம் பேசுவதை நிறுத்தாது என்றும் அவர் உறுதிப்பட தெரிவித்தார்[4].

 

15-01-2018 -Arur Pudhiyavan, book release.215-01-2018 கனிமொழி பேச்சு: ஆரூர் புதியவனின்[5]  புத்தக வெளியீட்டின் போது, இவ்வாறு கனிமொழி பேசியது பல உண்மைகளை எடுத்துக் காட்டுகிறது. ராம கோபாலன், “இவர்கள் எல்லோருமே, தங்களது பெண்டாட்டிகளை வைத்து சாமி கும்பிடுகின்ற கூட்டம்”, என்று பேசியதுண்டு. அதை கனிமொழி இப்பொழுது ஒப்புக் கொண்டுள்ளார் என்றாகிறது. அம்மாவின் “சாமி கும்பிடுகின்ற உரிமைக்கு”. இவர் என்ன போராடுவது? அப்பொழுது அவ்வுரிமையை யார் பறித்தது என்ற கேள்வி எழுகின்றது. நாத்திக துணைவன் அவ்வாறு தடுத்துக் கொண்டிருந்தால், அது அவனது ஆணாதிக்கத்தைத் தான் எடுத்துக் காட்டுகிறது. 93 வயதாகியும் துணைவியை ஆட்டிப் படைக்கிறார் என்றால், அதை மகள் எடுத்துக் கஆட்டவேண்டும். மாறாக அவரது உரிமைக்குப் போராடுகிறேன் என்றால், தந்தையை எதிர்த்தாப் போராடப் போகிறார்?

15-01-2018 -Arur Pudhiyavan, book release

கடவுளை எதிர்த்து பேசிப்பேசி தான் கருணாநிதிக்கு பேசமுடியாமல் போய் விட்டது: “கடவுளை எதிர்த்து பேசிப்பேசி தான் கருணாநிதிக்கு பேசமுடியாமல் போய் விட்டதாக சிலர் பேசுவதாக வேதனை தெரிவித்த கனிமொழி, உடல்நலம் சரியில்லாதபோது உதவியாளர் வைத்துவிடும் விபூதியைக் கூட அழித்துவிடுபவர் கருணாநிதி”, என்ற போதும் அவரது மனம், மனசாட்சி உறுத்துவதை அறியலாம்.  உதவியாளர் விபூதியை வைப்பதற்கு கருணாநிதி ஏன் அனுமதிக்க வேண்டும், பிறகு ஏன் அழிக்க வேண்டும்? அப்படியென்றால், வைத்தால் ஏதோ பலன் கிடைக்கும் அன்ற ஆசை, நப்பாசை உள்ளுக்குள் இருக்கிறது என்றாகிறது. முதல் நாத்திகப் பழமான, கனிக்கு அத்தகைய நம்பிக்கையே இருக்கக் கூடாது ஆயிற்றே? யாரோ சொன்னார்கள் என்றால் பலித்து விடுமா என்ன? அதென்ன சாபமா, செய்வினையா, திருஷ்டியா, ….அதையெல்லாம் நம்ப வேண்டிய அவசியமே இல்லையே? பிறகு, அப்படி நம்பி வருத்தப் படுவது எடைக் காட்டுகிறது? வைத்த விபூதியையேத் துடைத்துப் போடும் அளவிற்கு நாத்திகம்-பகுத்தறிவு ஊறியிருக்கும் போது, இதெல்லாம் ஒரு விசயமா என்ன?

15-01-2018 - Kanimozhi on atheism-regrets about the comments on karu

கருணாநிதியின் மவுனம் கூட நாத்திகம் பேசும்: “கடவுள் விடயத்தில் தனது கருத்தை சிறிது மாற்றியிருப்பார்” என்று தாயார் குறிப்பிட்டதாகவும், இது தொடர்பாக கருணாநிதியிடம் “கடவுள் இருக்கிறாரா?” என கேட்டபோது, வாய் பேசமுடியாத நிலையில், “இல்லை” என கருணாநிதி தலையசைத்ததாகவும் கனிமொழி குறிப்பிட்டார்[6]. தனது வீட்டில் நிகழ்ந்த சம்பவத்தை நினைவுக்கூர்ந்த கனிமொழி, கருணாநிதியின் மவுனம் கூட நாத்திகம் பேசும் என்று கனிமொழி குறிப்பிட்டார்[7]. அதாவது ராஜாத்தி அம்மாள்  கோவில்-கோவிலாக சென்று, கும்பிட்டு, அர்ச்சனை செய்து, பிரசாதம் வாங்கி வருவார், புருடன் சாப்பிடுவான் என்று, ஆனால் சாப்பிட்டப் பட்டதா-இல்லையா என்பது ரகசியம். பிறகு, சாய் பாபா வந்தபோது ஏன் காலில் விழுந்து கும்பிட வேண்டும்? எப்படியோ கனிமொழியின் மனம், மனசாட்சி உறுத்த ஆரம்பித்து விட்டது. அதனால், இந்த அளவுக்கு விளக்கம் கொடுக்க வேண்டியதாக உள்ளது போலும்.

© வேதபிரகாஷ்

16-01-2018

15-01-2018 - Kanimozhi on atheism

[1] நியூஸ்..7.செய்தி, எதை வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள், திமுக நாத்திகம் பேசுவதை நிறுத்தாது!” : கனிமொழி, January 15, 2018. Last Modified திங்கள், 15 ஜனவரி 2018 (23:00 IST).

[2] http://ns7.tv/ta/tamil-news/tamilnadu/15/1/2018/kanimozhi-mp-karunanidhi-athist-philosaphy

[3] தமிழ்.வெப்.துனியா, என்ன ஆனாலும் திமுக நாத்திகம் பேசுவதை நிறுத்தாது: கனிமொழி, January 15, 2018.

[4] http://tamil.webdunia.com/article/regional-tamil-news/we-don-t-stop-atheism-speech-says-kanimozhi-118011500020_1.html

[5] பேராசிரியர் முனைவர் ஹாஜா கனி, சென்னை மேடவாக்கம் காயிதேமில்லத் கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவர், தமுமுக வின் மாநிலச் செயலாளர், மக்கள் உரிமை வார இதழின் இணை ஆசிரியர்.

[6] http://ns7.tv/ta/tamil-news/tamilnadu/15/1/2018/kanimozhi-mp-karunanidhi-athist-philosaphy

[7] தமிழ்.வெப்.துனியா, என்ன ஆனாலும் திமுக நாத்திகம் பேசுவதை நிறுத்தாது: கனிமொழி, January 15, 2018.

 

எதிர்க்கட்சியான பார்ப்பனக் கூட்டம் நடுங்கும் – கருணாநிதியின் திராவிட முழக்கம்!

பிப்ரவரி 24, 2012

எதிர்க்கட்சியான பார்ப்பனக் கூட்டம் நடுங்கும் – கருணாநிதியின் திராவிட முழக்கம்!

பார்ப்பனக் கூட்டம் நடுங்க வேண்டும்!’: கருணாநிதி உருக்கமான வேண்டுகோள்[1]: “உங்கள் உற்றார், உறவினர், பந்து மித்திரர், தோழர், தோழியருக்கெல்லாம் சொல்லி, விளக்கி, கட்சியில் அங்கத்தினராகச் சேருங்கள். கட்சிப் பத்திரிகைகளைப் படியுங்கள். நம் பத்திரிகைகள் வளர்ந்தால் தான், நம் எதிர்க்கட்சியான பார்ப்பனக் கூட்டம் நடுங்கும்” என, தி.மு.க., தலைவர் கருணாநிதி அறிவுறுத்தி உள்ளார். இருப்பினும் அவரது குடும்பத்தில் உள்ள பாப்பாத்திகளையும், அந்த பாப்பாத்திகளுக்குப் பிறந்தவர்களையும் விரட்டியடிப்பாரா என்று தெரியவில்லை.
கருணநிதியின் அறிக்கை (கடிதமாக உள்ளது): திராவிட இயக்க நூறாம் ஆண்டு துவக்க விழா, 27ம் தேதி தி.மு.க., தலைமை நிலையத்தில், எனது தலைமையில், அன்பழகன் முன்னிலையில் நடக்கிறது. அதில், தி.க., வீரமணி, சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதி மோகன், நன்னன், சுப.வீரபாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். திராவிட இயக்கத்தின் தோற்றம், அதன் மேன்மை பற்றியும் பேசுகிறார்கள்.

திராவிட நாடு கோரிக்கையை குப்பையில் போட்ட மாவீரர்கள்: ”ஒருவன் உள்ள வரையில்,  குருதி ஒரு சொட்டு  உள்ளவரையில் திராவிட நாட்டின் உரிமைக்குப் போரிடச் சிறிதும் பின்னிடல் இல்லை” என்றார் பாரதிதாசன். (பாராளுமன்றத்தில் அரசியல் நிர்ணய சட்டத்தில் தனிநாடு கேட்கும் கட்சிகளின் மீது நடவடிக்கை எடுக்கப் படும் என்றதும், திராவிட வீரர்கள் தங்களின் வால்களை சுருட்டிக் கொண்டனர். அண்ணாதுரை பாராளுமன்றத்தில் பேசியதும் வேடிக்கைதான். ஏனெனில் கோரிக்கையை விட்டு ஆட்சியைப் பிடிததது திமுக!)

கால்டுவெல்லின் பொய்களை நம்பும் ஆட்கள் இங்குதான் இருப்பார்கள் போலும்[2]: கடந்த, 1856ல் திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்ற நூலை எழுதிய ராபர்ட் கால்டுவெல் தான், திராவிட மொழி பேசும் மக்கள் ஒரே இனத்தவர் எனக் குறிப்பிட்டார். திராவிடர் என்ற பெயரை அவர் தான் முதன் முதலாக உபயோகித்தார்என்ற குறிப்புகளும் உள்ளன (மாக்ஸ் முல்லரைத் தொடர்ந்து, கால்டுவெல்லும் தனது கருத்தை மாற்றிக் கொண்டார். ஆனால், அத்தகைய திருத்தம் செய்யப்பட்ட பதிப்பு இந்தியாவில் வெளியிடப் படவில்லை. இன்று ஆரியர்-திராவிடர் என்ற இனங்கள் எல்லாம் கட்டுக்கதை என்று மெய்பிக்கப் பட்டு விட்டது. சரித்திர ஆசிரியர்கள் யாரும் ஒப்புக் கொள்வதில்லை. அதுமட்டுமல்லாது திருட்டுத் தனமாக அகழ்வாய்வு செய்து பல ஆதாரங்களை மறைத்து விட்ட பாதகன் இந்த கால்டுவெல்[3]).

அரைத்த மாவை அரைக்கும் கருணாநிதி: மனோன்மணியம் எழுதிய சுந்தரம் பிள்ளை, “திராவிட நல் திருநாடும்’ எனக் குறிப்பிட்டுள்ளார்[4]. 1912ம் ஆண்டு தோன்றிய, “மெட்ராஸ் யுனைடெட் லீக்’ சங்கத்தின் முதலாம் ஆண்டு விழா, 1913, டாக்டர் நடேசன் மருத்துவமனைத் தோட்டத்தில் நடந்தது. “சங்கத்தின் பெயர், அதன் நோக்கத்தைப் பிரதிபலிப்பதாக இல்லை’ என சிலர் பேசினர். அப்போது டாக்டர் நடேசன் தான், “திராவிடச் சங்கம் என்று பெயர் மாற்றலாம். ஏனென்றால், நாமெல்லாம் திராவிடர்களாயிற்றே’ என, முடிவைத் தெரிவித்தார். அதை, அனைவரும் ஒருமனதாக ஏற்றுக் கொண்டனர்.

சரித்திரத்தைத் திரித்து கூறும் கருணாநிதி[5]: பிட்டி தியாகராயர் திராவிட இனத்தின் மீது மாறாத அன்பு கொண்டவர்.தொடக்கத்தில் தியாகராயர் பெரும் வைதீகராக இருந்தார். தன் இல்லத்திலேயே சிலை வைத்து புரோகிதரைக் கொண்டு பூஜை புனருத்தாரணம் எல்லாம் செய்து வந்தார்.   அப்படிப்பட்டவர் டாக்டர் நடேசன் தொடர்பு ஏற்பட்ட பிறகு, வைதீகத்திலிருந்து விலகி வந்து, பார்ப்பனர் ஆதிக்க எதிர்ப்பில் அதிகத் தீவிரம் காட்டத் தொடங்கினார்[6]. அப்படிப்பட்ட தியாகராயர் 1917ல் நடைபெற்ற சென்னை மாகாண முதலாவது நீதிக் கட்சி மாநாட்டில் உரையாற்றும்போது, பிறப்பினால் உயர்வு தாழ்வு கற்பிப்பது திராவிட மரபன்று. திருவள்ளுவர் முதலிய திராவிடத் தலைவர்கள் பிரம்மனின் முகத் துதித்தோர் யாம் என்று பெருமை பேசினாரில்லை.  பிறப்பினால் ஏற்றத்தாழ்வு கற்பித்தோரும் நால்வகைச் சாதி இந்நாட்டில் நாட்டினோரும் ஆரியரே. அவ்வருணாச்சிரமக் கோட்டையை இடித் தெறிய 2400 ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றிய புத்தர் முயன்றார், முடியவில்லை. பின்னர் வந்த பல சீர்திருத்தவாதிகள் முயன்றனர், தோற்றனர். ராமானுசரும் புரோகிதக் கொடுமைகளைக் களைந்தெறிய ஒல்லும் வழியெல்லாம் முயன்றார், தோல்வியே கண்டார்.

திராவிடத் தலைவர்கள் ஆங்கிலேயர்களின் அடிவருடிகளான உண்மையை மறைக்கும் கருணாநிதி[7]: பார்ப்பனர் பிடி மேன்மேலும் அழுத்தமுற்றே வந்தது. தீண்டாமை, அண்டாமை, பாராமை முதலிய சமுதாயச் சீர்கேடுகளும்  படிப்படியே பரவிப் பெருகலாயின. அத்தகைய பலம் பொருந்திய சாதிக் கோட்டையை தகர்த்தெறிய, இதுவே தக்க காலம்.  இதுவே தக்க வாய்ப்பு என்று முழங்கினார். பி அண்ட் சி மில்லில் அப்போது ஒரு வேலை நிறுத்தப் போராட்டம். அதுகுறித்து தியாகராயருக்கும், ஆளுநராக இருந்த வெல்லிங்டன் பிரபுவுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று, அதில் ஆத்திரமடைந்த தியாகராயர் வெளியே வந்து விட்டார்.  அப்போது முதலமைச்சர் பதவியில் இருந்த பனகல் அரசர் தியாகராயர் வெளியே வந்ததைக் கேள்விப்பட்டு, உடனடியாக ஆளுநரைச் சந்தித்து, எம் தலைவரிடம் மன்னிப்புக் கேட்காவிட்டால், எங்கள் மந்திரிசபை ராஜினாமா செய்யும் என்று தெரிவித்தாராம். ஆளுநரும் அவ்வாறே உடனடியாக மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்தாராம். டாக்டர் நடேசனுக்கு துணை நின்ற மற்றொருவர் டாக்டர் டி.எம். நாயர். ஆரியர் வருகையிலிருந்து அவர் பேச்சைத் தொடங்கினால், இடையிலே புராண, இதிகாசக் கதைகளையெல்லாம் கூறி மக்களை உணர்ச்சிக் கடலில் ஆழ்த்தக் கூடிய பேச்சாளர். தென்னகத்தில் ஒன்றிரண்டு தவிர, மற்ற எல்லாப் பதவிகளிலும் பார்ப்பனர்கள் உட்கார்ந்து விட்டார்கள். உயர்நீதிமன்ற நீதிபதிகளாகநியமிக்கப்பட்ட ஒன்பது இந்தியரில், எட்டு பேர் பார்ப்பனர்கள், ஒருவர் நாயர். உதவி கலெக்டர்கள் 146 பேரில் 77 பேர் பார்ப்பனர்கள். 125 மாவட்ட நீதிபதிகளில் 93 பேர் பார்ப்பனர்கள். மக்கள் தொகையில் நூற்றுக்கு மூன்று பேராக உள்ள பார்ப்பனர்கள், இத்தனை வேலைகளில் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள் என்று இந்தப் புள்ளி விவரங்களை அடுக்கிச் சொல்லி, இந்த அநீதியை இப்படியே தொடர விடலாமா? என்று கர்ச்சிப்பார்.

“பார்ப்பனரல்லாதார் கொள்கை விளக்கம்’ என்ற அறிக்கை: டி.எம்.நாயர், 1917ல், சென்னை ஸ்பர்டாங் சாலை அருகே நடந்த பொதுக் கூட்டத்தில் ஆற்றிய உரையும், சர்.பிட்டி.தியாகராயர், 1918ல் நீதிக் கட்சியின் சார்பில் வெளியிட்ட, “பார்ப்பனரல்லாதார் கொள்கை விளக்கம்’ என்ற அறிக்கையும், திராவிடருக்கான ஆதி ஆவணங்கள் எனப் போற்றப்படுகின்றன. டாக்டர் நாயரின் புகழ் பெற்ற அந்த உரையில், வீரத் திராவிடர்களே என்னையே எடுத்துக் கொள்ளுங்கள். லண்டனிலும், சென்னையிலும் என்னைப் பெரிய டாக்டர் என்று சொல்கிறார்கள். நான் எம்.டி. பட்டதாரி. எனக்கு ஏராளமான வருமானம் வருகிறது.  என் செலவு போக, என் வருமானத்தில் மீதப்படும் பணத்தையெல்லாம், என்னருமைத் தலைவர் பிட்டி தியாகராயரைப் போன்று, உங்களைப் போன்ற திராவிட மக்களைத் தட்டி எழுப்பும் நீதிக் கட்சியின் வளர்ச்சிக்காகச் செலவிடுவதில் பெருமைப்படுகிறேன். நாயரின் உரையில், “திராவிடத் தோழர்களே… நீங்கள் எல்லாம் உங்கள் உற்றார், உறவினர், பந்து மித்திரர், தோழர், தோழியருக்கெல்லாம் சொல்லி, விளக்கி, நீதிக் கட்சியில் அங்கத்தினராகச் சேருங்கள். கட்சிப் பத்திரிகைகளைப் படியுங்கள். நம் பத்திரிகைகள் வளர்ந்தால் தான், நம் மக்களுக்கு பலம் வரும். நம் எதிர்க்கட்சியான, பார்ப்பனக் கூட்டம் நடுங்கும்’ என முழங்கியதைத் தான், நான் இப்போதும் திரும்பக் கூற விரும்புகிறேன்.

முரசொலி மாறனின் புரட்டு வரலாறு[8]: “திராவிட இயக்க வரலாறு’ என, முரசொலி மாறன் எழுதிய நூலில், உயர் பதவியில் ஒரு பிராமணர் நியமிக்கப்பட்டால், உடனே தன் நியமன அதிகார வரம்புக்குட்பட்ட பிற பதவிகளிலும் தங்களது இனத்தாரைக் கொண்டு வந்து நிரப்புவதும், தொன்று தொட்டு இருந்து வரும் வழக்கம்’ என எழுதியதோடு, அதற்கு உதாரணங்கள் சிலவற்றையும் குறிப்பிட்டுள்ளார். வருவாய்த் துறை வாரியம் ஒருமுறை ஆய்வு நடத்திய போது ஜி. வெங்கட்ரமணையா என்கிற உயர் பதவி வகித்த பிராமணருக்கு உறவினர்களும், தொடர்புடையவர்களும் மாத்திரம் அந்தத் துறையில் 49 பேர் இருந்தது தெரியவந்ததாம். 1890 களில் செங்கற்பட்டிலும், சென்னை நகரிலும் தோன்றிய வெம்பாக்கம் அய்யங்கார் குடும்பம் (புகழ் பெற்ற சர். பாஷ்யம் அய்யங்கார் வகையறா) ஆங்கிலேயர் ஆட்சியில் கிடைக்கும் உத்தியோகங்களையெல்லாம் நன்கு நுகர்ந்தது.

ஐயர்கள் நாயர்கள் ஆனார்களா இல்லை நாயர்கள் ஐயர்கள் ஆனார்களா?: 1861லிருந்து 1921 வரை அந்தக் குடும்பத்தைச் சேர்ந்தவர்களில் ஐவர் சட்டசபை உறுப்பினர்களாகவும், இருவர் அட்டர்னி ஜெனரல்களாகவும், மூவர் உயர்நீதி மன்ற நீதிபதிகளாகவும், மூவர் ஸ்மால்காஸ் கோர்ட் நீதிபதிகளாகவும், மாண்டேகு,செம்ஸ்ஃபோர்டு சீர்திருத்தத்தில் உதயமான ஆட்சியில் ஒருவர் உள்துறை அமைச்சராகவும், மூவர் மாநில அரசின் துணை செகரட்டரிகளாகவும் இருந்திருக்கின்றனர். மேலும் பலர் தாசில்தாரர்களாகவும், பப்ளிக் பிராசிகியூட்டர்களாகவும், டெபுடி கலெக்டர்களாகவும் இருந்தனர் என்று மாறன் அந்த நூலில் குறிப்பிட்டுள்ளார். அந்த உண்மை வரலாறுகளையெல்லாம் திராவிடர்களுக்கு, தமிழர்களுக்கு நினைவு படுத்தும் வகையில்தான் திராவிட இயக்க 100ம் ஆண்டு தொடக்க விழா நடைபெறவுள்ளது. அந்த நிகழ்ச்சியில் நம்மைப்பற்றி புரிந்துகொள்ள தெரிந்து கொள்ளத்தக்க பல விவரங்களை சான்றோர் பலர் விளக்கிட உள்ளார்கள்.

உண்மை வரலாறு எது என்று தெரிந்தால் தமிழர்கள் உருப்பட்டு விடுவார்கள்[9]: இந்த உண்மை வரலாறுகளை எல்லாம் திராவிடர்களுக்கு, தமிழர்களுக்கு நினைவுபடுத்தும் வகையில் தான், திராவிட இயக்க நூறாம் ஆண்டு துவக்க விழா நடக்கவுள்ளது. ஆண்டு முழுவதும் கொண்டாடப் போகிறோமே, துவக்க விழாவில் கலந்து கொள்ளாமல் விட்டால் என்ன என நினைத்துவிடக் கூடாது. இவ்வாறு கருணாநிதி தெரிவித்தார் (உண்மை வரலாறு என்னெவென்று தெரிந்து கொண்டால் தமிழர்கள் உருப்பட்டு விடுவார்கள். அவ்வாறு தெரியவிடாமல், தமிழர்களை இத்தகைய பொய்யான இனவாத சித்தாந்தங்களை வைத்துக் கொண்டு முட்டாள்கKஆல்லி விட்டதால், கடந்த 60-100 வருடங்களில் தமிழர்கள் முன்னேறாமல், பின் தங்கியே உள்ளர்கள்).

வேதபிரகாஷ்

24-02-2012


[1] தினமலர், பார்ப்பனக் கூட்டம் நடுங்க வேண்டும்!’: கருணாநிதி உருக்கமான வேண்டுகோள், பிப்ரவரி 23,2012, http://www.dinamalar.com/News_detail.asp?Id=412586

[2] சி. பி. பிரௌன் என்ற பாதிரி தான் கால்டுவெல்லிற்கு சமஸ்கிருதம் சொல்லிக் கொடுத்தார். அவர் கால்டுவெல்லின் அயோக்கியத்தனத்தைப் பற்றி குறிப்பிட்டுள்ளார். அவற்றைப் படித்தறிந்தால், தமிழர்கள் நிச்சயமாகத் திருந்துவார்கள். அதுமட்டுமல்லாது, கால்டுவெல் சாணார்களை பற்றி மிகவும் கேவலமாக தனது புத்தகத்தில் எழுதியுள்ளான். அதனால் அப்புத்தகம் இந்தியாவில் தடை செய்யப்பட்டது.

http://dravidianatheism.wordpress.com/2011/02/18/denigrating-tamils-with-robert-caldwell/

http://dravidianatheism.wordpress.com/2010/01/30/caldwell-purana-continues/

http://dravidianatheism.wordpress.com/2010/01/30/house-of-caldwell-converted-to-memorial/

http://dravidianatheism.wordpress.com/2010/01/29/caldwell-honured-without-anyy-remorse-by-tn-government/

[3] நாணயங்கள், முக்கியமான சரித்திர அதாரங்கள் மறைப்பு!:அங்கிருந்து ஆயிரக்கணக்கில், ஓலைச்சுவடி புத்தகங்களை எடுத்து இங்கிலாந்திற்கு அனுப்பினார். தமிழ் தொன்மையினை ஆராய்ந்து அதனை மாக்ஸ்முல்லரின் ஆராச்சிகளுக்கு எதிராகப் பயன்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் வந்தபோது, இந்தியாவின் ஒட்டுமொத்த ஒருமைப்பாடு அதிர்ச்சியளித்தது. ஓலைச்சுவடி புத்தகங்களைப் படித்து தாமரைப்பரணி ஆற்றங்கரையில் உள்ள பழைய காயல் என்ற ஊர்தான் மிகவும் பழமையானது என்று தெரிந்து கொண்டார். அதுமட்டுமல்லது அது பாண்டியர்களின் துறைமுகமாக இருந்தது, போன்ற விஷயங்களையும் தெரிந்து கொண்டார். பல இடங்களில் பழமையான நாணயங்கள் முதலியவற்றைக் கண்டதும் திகைத்தார். ஏனெனில், அவையெல்லாம், இந்திய ராஜ வம்சாவளியினரின் கடற்பயணங்களைக் குறிக்கும் ஆதாரங்களைக் கொண்டிருந்தன. சர் வால்டர் எல்லியட் எடுத்துக் காட்டியபடி, கப்பல் பொறிக்கப்பட்டுள்ள நாணயங்களையெல்லாம், சாமர்த்தியமாக மறைத்துவிட்டார். பிறகு அரசு பூர்வமாக அறிவிக்கவேண்டுமேயன்று, அனுமதியுடன் அகழ்வாய்வு மேற்கொண்டதுபோல், பிறகு பழங்கால கட்டிடங்கள், கோவில்கள் முதலியவற்றின் அஸ்திவாரங்களுக்கு அருகில் நோண்ட ஆரம்பித்தார்.  அதன்மூலமாகத்தான், தாழிகள், பளபலப்பான மற்றும் கலைநயம் பொருந்திய மண்பாண்டங்கள் , மீன் இலச்சினையுடைய பாண்டியர்களது நாணயங்கள் முதலியவற்றைக் கண்டுபிடித்ததாக அறிவித்தார். இப்படி திருட்டுத் தனமாக, அகழ்வாய்வு மேற்கொண்டு பல ஆதாரங்களை மறைத்தவர் தான் கால்டுவெல்.

http://dravidianatheism.wordpress.com/2010/01/29/caldwell-honured-without-anyy-remorse-by-tn-government/

[4] அப்பாட்டிலேயே சில வரிகள் நீக்கப்பட்டன, மாற்றியமைக்கப் பட்டுள்ளன என்பதெல்லாம் தெரிந்தால், குட்டு வெளிப்பட்டு விடும்.

[6] தினகரன், திராவிட இயக்கத்தின் 100ம் ஆண்டு விழா திமுக தலைவர் கருணாநிதி அழைப்பு, http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=3671

[7] பி. ராமமூர்த்தி, ஆரிய மாயையா? திராவிட மாயையா? விடுதலைப் போரும், திராவிட இயக்கமும், பழனியப்பா பிரதர்ஸ், சென்னை, 1987.

[8] முரசொலி மாறன், ஏன் வேண்டும் இந்த இன்பத் திராவிடம், முத்துவேல் பதிப்பகம், திருச்சிராப்பள்ளி, 1957.

[9] குணா, திராவிடத்தால் வீழ்ந்தோம், தமிழக ஆய்வரண், பெங்களூர், 1995.

திராவிடத் திருமணங்களும், தமிழர்களின் பிணக்குகளும், அரசியல்வாதிகளின் சுணக்கங்களும்

மே 28, 2010

திராவிடத் திருமணங்களும், தமிழர்களின் பிணக்குகளும்,அரசியல்வாதிகளின் சுணக்கங்களும்

சுயமரியாதை திருமணம்

எம்.ஜி.ஆரும், நானும் பிரியக்கூடாது என பாடுபட்டவர் : ஆர்.எம்.வீரப்பனுக்கு கருணாநிதி புகழாரம்

நன்றி-தினமலர்: செய்தி, படம்                           http://www.dinamalar.com/News_Detail.asp?Id=7673
சென்னை : “”எம்.ஜி.ஆருக்கும், எனக்கும் இடையே பிணக்கு விளைந்த போதெல்லாம், அதை சரி செய்ய பாடுபட்டவர் ஆர்.எம்.வீரப்பன்,” என்று தமிழக முதல்வர் கருணாநிதி கூறினார். முன்னாள் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன் – ராஜம்மாள் தம்பதியின் இளைய மகன் தங்கராஜுக்கும், கோவை தொழிலதிபர் மோகன் – மோகனா தம்பதியின் மகள் தாரிணிக்கும் சென்னையில் நேற்று திருமணம் நடந்தது.

விழாவுக்கு தலைமை வகித்து, திருமணத்தை நடத்தி வைத்து தமிழக முதல்வர் கருணாநிதி பேசியதாவது: எனக்கும், ஆர்.எம்.வீரப்பனுக்கும் உள்ள தொடர்பு நீண்ட காலத் தொடர்பு, மறைந்தும் மறையாத என் ஆருயிர் நண்பர் எம்.ஜி.ஆருடைய அணுக்கத் தொண்டர்களிலே ஒருவராக, அன்பு நண்பர்களில் ஒருவராக, அவசியப்பட்ட ஆலோசகர்களிலே ஒருவராக விளங்கியவர் வீரப்பன். “குடியரசு’ அலுவலகத்தில் 1945ம் ஆண்டு துணை ஆசிரியராக நான் இருந்த காலம் தொட்டு எனக்கும், இவருக்கும் நெருக்கமான நட்பு, அரும்பி மலர்ந்து இன்றைக்கும் மணம் வீசுகிற வகையில், அவரது இல்ல மண விழாவை நான் நடத்தி வைக்கவும், அவர் வரவேற்கவுமான சூழல் உருவாகியிருக்கிறது.

இந்த மேடையில் எனக்கு முன் பேசியவர்கள், எங்களுக்குள் என்றும் பிணக்கு ஏற்பட்டதில்லை என்று இங்கே சொன்னார்கள். இவர் என்னை எதிர்ப்பதாகக் காட்டிக் கொண்ட அந்தக் காலத்தில் கூட என்னிடம், “கள்ளக் காதல்’ கொண்டவர். தி.மு.க.,வுக்கும், எம்.ஜி.ஆர்., தலைமையில் இயங்கிய அ.தி.மு.க.,வுக்கும் இடையே சில பிரச்னைகள் தோன்றும் போதெல்லாம், இவரிடமிருந்து எனக்கு ஒரு ரகசிய கடிதம் வரும். எனக்கும், எம்.ஜி.ஆருக்கும் இடையே ஒரு பிரிவு ஏற்படக்கூடிய ஒரு சூழல் 1971ம் ஆண்டில் ஏற்பட்ட போது, வீரப்பன் என் இல்லத்திற்கு வந்து ஒரு மணி நேரத்திற்கு மேலாக, “அந்தச் சூழ்நிலை உருவாகக்கூடாது; நீங்கள் இருவரும் பிரிந்து விடக்கூடாது; ஒன்றாக இருந்து தான் இயங்க வேண்டும். பிரிக்கிற சில பேர் யார் என்பது எங்களுக்குத் தெரியும். நீங்கள் ஒன்றுபட்டு பணியாற்றுங்கள்’ என்று கண்ணீர் கலந்து தன் கவலையைத் தெரிவித்தவர்களில் மிக முக்கியமானவர். பல நேரங்களில் எம்.ஜி.ஆருக்கும், எனக்கும் அல்லது தி.மு.க.,விற்கும் இடையே பிணக்கு விளைந்த போதெல்லாம், அதை சரி செய்ய பாடுபட்டவர் ஆர்.எம்.வீரப்பன். வீரப்பன் என் நீண்ட கால நண்பர் என்பதால் அவருக்கு அந்தக் கவலை இருந்தது.

மேடையில் திருநாவுக்கரசு பேசும் போது, “ஆர்.எம்.வீரப்பனுக்கு எம்.எல்.சி., பதவி கொடுங்கள்’ என்று சொன்னார். பதவிகளை பல பேருக்கு கொடுக்கிற இடத்தில் இருந்தவர் வீரப்பன். அவர் பதவிகளை பகிர்ந்து எடுத்துக்கொள்ள வேண்டியவரே தவிர, கேட்டு பெற்றுக்கொள்ள வேண்டியவர் அல்ல. அந்தளவிற்கு இந்த இயக்கத்தின் ஆணிவேராக, அடிவேராக, இயக்கத்தை வளர்க்கின்ற வலுவான விழுதுகளிலே ஒருவராக அன்றைக்கும் இருந்தார்; இன்றைக்கும் இருக்கிறார். இவரை நான் என்றைக்கும் மறக்க மாட்டேன்.

நாள் முழுவதும் அளப்பரிய பணிகள், அதற்கிடையே கோவைக்கு மாநாட்டு பணிகளைப் பற்றி ஆய்வு செய்யச் செல்கிறோம். அங்கிருந்து ஊட்டிக்குச் சென்று ஓரிரு நாட்கள் ஓய்வு பெறலாமே என்று எண்ணினேன். ஆனால், அங்கு சென்ற எனக்கு இந்த நினைவு வந்தது. நினைவு சாட்டையாக விழுந்தது. “வீரப்பன் இல்லத் திருமணத்திற்கு செல்லாமல் ஓய்வு ஒரு கேடா உனக்கு’ என்று எனக்கு நானே கேட்டுக் கொண்டு இங்கே வந்துள்ளேன் என்றால், அது நட்பின் ஆழத்தை, நட்பின் உயர்வை உணர்த்தக்கூடிய ஒன்று என்பதை உங்களுக்கு எடுத்துச் சொல்லி, அத்தகைய ஒரு உத்தம நண்பர் என்றைக்கும் இந்த இயக்கத்தின் தூணாக விளங்கிக் கொண்டிருப்பவர். அவரது இல்லத் திருமணத்தில் பங்கேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இவ்வாறு கருணாநிதி பேசினார்.

விழாவில், நிதி அமைச்சர் அன்பழகன், துணை முதல்வர் ஸ்டாலின் மற்றும் மத்திய, மாநில அமைச்சர்கள் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக ஆர்.எம்.வீரப்பன் அனைவரையும் வரவேற்றார். மத்திய இணை அமைச்சர் ஜெகத்ரட்சகன் நன்றி கூறினார்.

பெரியார்தாசனை காண்காணிக்க வேண்டுமாம் – சொல்வது முஸ்லீம்கள்!

ஏப்ரல் 10, 2010

பெரியார்தாசனை காண்காணிக்க வேண்டுமாம் – சொல்வது முஸ்லீம்கள்!

இதெல்லாம் வேடிக்கையாகவே உள்ளது.

அதிரடியாக, பரபரப்புடன், அந்த ஆளை ரியாத்திற்கு அழைத்து வந்து சுன்னத் செய்து “முஸ்லீம்” என்று சொல்லி, மெக்கா-மெதினா தரிசனத்திற்கு அழைத்துச் சென்று………………….படங்கள் எல்லாம் எடுத்து காட்டி, இப்பொழுது “கண்காணிக்கப் படுவார்” என்றால் என்ன?

பெரியார்தாசனை கண்காணிக்கும் அதென்ன புதிய நிலைபாடு?

http://markaspost.wordpress.com/2010/04/10/பெரியார்தாசனை-கண்காணிக்/

பெரியார்தாசன் என்ன நோக்கில் இஸ்லாத்தை ஏற்றார் எனத் தெரியவில்லை! நாங்கள் அவரை கண்காணித்துக் கொண்டு இருக்கிறோம் என்ற தனி நபர் ஜமாஅத்தின் நிலைப்பாடு பற்றி மார்க்க அடிப்படையில் சரியா என்பதை அறிந்து கொள்ளும் முன் இதுபோன்ற விஷயங்களில் ஏற்கனவே அந்த ஜமாஅத்தின் நிலைப் பாடு என்ன? என்பதை பார்ப்போம்!

முதலாவதாக, இதுவரை இஸ்லாத்தை ஏற்ற அனைவருக்கும் இதே நிலைதான் எடுக்கப்பட்டதா?
தங்கள் ஜமாஅத்தில் வந்து இஸ்லாத்தை ஏற்றால் இந்த அளவு கோலைக் கொண்டுதான் அவர்களை அளந்தார்களா? கண்காணித்த பிறகுதான் அவர்கள் அறிமுகப்படுத்தப்பட்டர்களா?

அய்யம்பேட்டை சகோதரிகளை இப்படித்தான் கண்காணித்து அனைத்து ஊடகங்களில் எல்லாம் முன்னிலைப்படுத்தினார்களா? தவ்ஹீத் எழுச்சி மாநாட்டில் மேடை ஏறி உரை நிகழ்த்த அனுமதிக்கப்பட் டார்களா?

ஏ.ஆர். ரஹ்மானை மேடையேற்ற முடியுமா? என்றெல்லாம் கேட்கிறார்களே! ஏ.ஆர். ரஹ்மான் இன்றுதான் இஸ்லாத்தை ஏற்றார் என்றால் அவரையும் இதே நிலைபாடு கொண்டுதான் வரவேற்று அதன் பின் அவருக்கு மார்க்கத்தை எடுத் துச் சொல்ல வேண்டும்.

அவரது நிலை என்ன என்பது பற்றி நம்மிடத்தில் கேள்வி இல்லை. “அவர்களுக்காக நீர் விசாரிக்கப்பட மாட்டீர்” -(அல்குர்ஆன்) என அல்லாஹ் கூறுவதாலும், வந்தவர்களுக்கு நேர்வழியை எடுத்துச் சொல்லாமல் எட்டி நின்று கண்காணித்து “விழுந்த பின் தான் சுட்டிக் காட்டுவோம்’ என்பது என்ன நிலைபாடு?

மார்க்க அடிப்படையில் இஸ்லாத்தை ஏற்றவர்களின் உள்ளத்தைப் பிளந்து பார்க்கும் செயலைச் செய்யக் கூடாது என்பதை காலீத் பின் வலீத் (ரலீ) சம்பவத்திலும், உஸôமா (ரலி) சம்பவத்திலும் நாம் காண்கிறோம்.

நாளை அவர் வழிகெட்டு விட்டால்… என்ற கேள்வியே முதலில் தவறாகும். நபி (ஸல்) அவர்கள் காலத்தில் அவர்களிடத்திலே கலிமா சொல்லி இஸ்லாத்தை ஏற்ற எத்தனையோ பேர் இஸ்லாத்தை விட்டு வெளியேறிய சம்பவத்தை மிஃராஜின் போதும், பொய்த் தூதரை பின்பற்றிச் சென்ற சம்பவத்திலும் நாம் அறிந்திருக் கின்றோம்.

நபி (ஸல்) அவர்களின் காலத்திற் குப் பின்னும், அபுபக்கர் (ரலி) ஆட்சிக் காலத்தில் ஜகாத்தை மறுத்து ஒரு கூட்டமும், பொய்த் தூதர்களைப் பின்பற்றி ஒரு கூட்டமும் வழி தவறிச் சென்றது. உஸ்மான் (ரலி) காலத்தில் கார்ஜியாக்கள் என்று ஒரு பிரிவினர் வழிகெட்டுப் போனதை அறிந்திருக்கிறோம். இப்படி நபி (ஸல்) அவர்களால் உறுதிமொழி எடுத்த எத்தனையோ பேர் வழிகேட்டில் வீழ்ந்திருப்பதை அறிந்திருக்கிறோம்.

வழிகேடும், நேர்வழியும் நம் கையில் இல்லை. ஒருவர் சொர்கத்துக்குரிய காரியத்தை செய்து கொண்டே இருப்பார், இறுதி நேரத்தில் நரகத்திற்குரிய காரியத்தைச் செய்ய வைத்து அவரை அல்லாஹ் நரகத்திற்குரியவராக்குவான். ஒருவர் நரகத்திற்குரிய காரியத்தை செய்து கொண் டே இருப்பார், இறுதி நேரத்தில் சொர்க்கத்துக்குரிய காரியத்தை செய்ய வைத்து அவரை சொர்க் கத்திற்கு உரியவராக ஆக்குவான். (-புஹாரி)

நம்மில் எத்தனையோ பேர் வழிகேட்டில் இருந்து நேர்வழிக்கும், நேர்வழியில் இருந்து வழிகேட்டிற்கும் சென்றுள்ளதாக நீங்கள் கூறுகின்றீர்கள். ஏன்? ஆலிமான நீங்களே கூட இறை மறுப்புக் கொள்கைக்குச் சென்று நேர்வழிக்கு திரும்பி வந்ததாகக் கூறியுள்ளீர்கள்! இவ்வாறு இருக்கையில் இஸ்லாத்தை ஏற்ற ஒருவரின் உள்ளத்தை ஆராய மல் அவர்களை வரவேற்பதும், முக்கியத்துவம் அளிப்பதும் மார்க்க அடிப்படையில் தவறில்லையே!

புதிதாக இஸ்லாத்தை ஏற்ற முஹாஜிர்களுக்கு, அன்சாரிகளுக்கு இல்லாத முக்கியத்துவத்தை நபி (ஸல்) அளித்ததை நாம் ஹதீஸ்களில் பார்க்கிறோம். எந்த அளவுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது என்றால், “நீங்கள் நீதமாக நடக்கவில்லை, புதிதாக இஸ்லாத்தை ஏற்றவர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து எங்களை புறக்கணிக்கின்றீர்கள் என அன்சாரிகள் நபி (ஸல்) அவர்களைப் பார்த்து கேட்கும் அளவிற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.

மக்கா வெற்றியின்போது “அபூஸுஃப்யான் வீட்டில் தஞ்சமடைபவர்களுக்கு பாதுகாப்பு உத்தரவாதம்” வழங்குமளவுக்கு இஸ்லாத்தை ஏற்றவர்களுக்கு சிறப்பும், கனிமத்து பொருட்களில் கூடுதல் பங்கும் வழங்கப்பட்டிருக்கும்போது நாம் ஏன் இதிலிருந்து படிப்பினை பெறாமல் மற்றவர்கள் மேடையில் பேசியபின் நமது மேடையில் ஏறுவதா? என்றும், இது நமது ஜமாஅத் நிலைப்பாடு! என்றும் கூறி நபி (ஸல்) நிலைப்பாட்டை புறந்தள்ளுவது சரியாகுமா?

நாத்திகரான கோவை ராம கிருஷ்ணனும், இணை வைப்பாள ரான இந்து மக்கள் கட்சி அர்ஜுன் சம்பத்தும், தாங்களும் இந்த விஷயத்தில் ஒரே நேர்கோட்டில் இணைந்து “”அவரை கண்காணிக்கிறோம்” என ஒரே வார்த்தைகளை வெளிப்படுத்தி இருப்பதன் மூலம், உங்கள் சிந்தனை காவியாகவோ, கருப்பாகவோ மாறிவிடாமல் இறைவனிடம் பிரார்த்திக்கிறோம்.

தகவல் – மங்கோலியன்

நன்றி; www.intjonline.in மற்றும் சமுதாய மக்கள் ரிப்போர்ட்

அன்புடன்;சதாம் ஹுசைன்

ஆக இஸ்லாத்திற்கு மாறியவர்கள் பற்றி இந்த அளவிற்கு ஆராய்ச்சி நடத்துகிறார்கள் என்றால், “மாற்றப்பட்டவர்களின் நிலை” பற்றி முஸ்லீம்கள் ஆராய்ச்சி செய்தது / செய்யாதது என்ன? நன்றாக படித்து, ஒருநிலையில் தாங்கள் ஏதோ ஒரு காரணத்திற்காகத் தான் மதம் மாற்றப்பட்டுள்ளோம் என அறிந்தால், அவர்களும் தங்களது நிலைப்பாடு பற்றி சிந்திக்க ஆரம்பித்து விடுவார்களே?

இப்படி எல்லா மதம் மாறிய முஸ்லீம்களும் கண்காணிக்கப் படுவார்களா?

நம்பிக்கையின் மீது ஆதாரமாக மதம் மாறினாரா அல்லது மாற்றப் பட்டரா என்ற கேள்வியும் அதற்கான பதிலும் பெரியார்தாசன் நண்பர்களிடையே ஏற்கெனவே உள்ளன, அவை தாராளாமாகவே பேசப் பட்டன. “பணத்திற்காகத்தான்” மாறினார் என்பது முதல் குற்றச்சாட்டு. அந்நிலையில் “நம்பிக்கை” போய்விடுகிறது.

மனிதன் தான் எப்படியாவது விளக்கம் அளித்து தன்னுடைய செயலை நியாயப் படுத்திக் கொள்ளலாம். அந்நிலையில் படித்த சேஷாசலத்திற்கு /பெரியார்தாசனுக்கு /  ……………க்கு/ சித்தார்தா……னந்தாவிற்கு / அப்துல்லாவிற்கு எந்த பிரச்சினையும் இல்லை.

அதுமட்டுமல்ல, சிலர் அப்துல்லாவிற்கே அறிவுரை அளிக்க ஆரம்பித்து விட்டனர்:

ஐயா , பேராசிரியர் அவர்களே!

நீங்கள் இஸ்லாத்தில் இணந்தது எங்களுக்கு பெருமைதான் என்றாலும் என் மனதுக்குள் ஒரு பயம் நிலவி வருகிறது. இது சுன்னத், அது ஹராம், இதைச் செய்யவேண்டும், அதைச் செய்யக்கூடாது  என்று இலவச அறிவுரை சொல்ல சில அரைகுறை ஆலிம்கள் வருவார்கள். உங்களுக்கே தெரியாமல் உங்களை மூளைச்சலவை செய்வார்கள். நீங்கள் மனோவியல் பேராசிரியர் மட்டுமல்ல சிகிச்சையாளரும்கூட, எனவே குர்ஆனையும் ஹதீஸையும் ஆராய்ந்ததுபோல் அவர்கள் சொல்வதையும் ஆய்ந்து ஆராய்ந்து ஏற்றுக்கொள்ளுங்கள். இது ஒன்று.

மற்றொன்று, ‘இறைவன் ஒருவன்தான், அவனுக்கு இணைவைக்கக்கூடாது, அவனுக்கு இணையாக எதுவுமில்லை’ என்ற செய்தி நபிகளாருக்குப் பிறகு இந்திய துணைக்கண்டம் முதல் எல்லா நாடுகளுக்கும் பரப்பியவர்கள் ஒரு சிலர். அவர்கள் தங்கள் வாழ்நாள் முழுவதையும் இறை தியானத்தில் மூழ்கி மக்களின் வாழ்க்கை முறை, உணவு, நாகரீகம், பண்பாட்டுமுறை இவைகள் அனைத்தையும் மாற்றி நேர்வழிப் படுத்தியவர்கள். சுருக்கமாகச் சொன்னால் இறைவன் சொன்னதை, நபிகளார் சொன்னதை மக்களின் அறிவுக்குத் தகுந்தவாறு போதனை புரிந்தவர்கள். சூஃபிகள் என்றழைக்கப்படும் இவர்களை சிலர் தவறாகச் சித்தரிக்கிறார்கள் என்பதை உங்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறேன்.

http://abedheen.wordpress.com/2010/04/10/jaffer-periyardasan/

எதற்கு இவ்வளவு கட்டுப்பாடு?

பாவம், ஒருவேளை, விட்டால் ஓடிவிடுவாரோ என்னவோ?

முஸ்லீம்கள் மதம் மாற்றும் பிரச்சினை இன்னுமொரு கோணத்தில் செல்கின்றது என்பதனை அறியலாம்.

பெரியாரும், பகவான் ரமண ரிஷியும்!

ஜனவரி 26, 2010

கடவுள், மதம், ஜாதி இல்லை என்ற பெரியார் மனிதநேயத்திற்காக பாடுபட்டார்
பகவான் ரமண ரிஷியோ தன் குடும்பத்திற்காக பாடுபட்டார்
சிவகாசி பொதுக்கூட்டத்தில் தமிழர்தலைவர் விளக்கம்

http://viduthalai.periyar.org.in/20100126/news12.html

சிவகாசி, ஜன.26_ கட-வுள், மதம், ஜாதி இல்லை என்று சொன்ன பெரி-யார் மனிதநேயத்-திற்காக பாடுபட்டார். மக்களை ஒன்றுபடுத்-தினார். கட-வுள் ரமண-ரிஷி மக்க-ளுக்கு எந்த பயனும் செய்யவில்லை. குடும்பத்-திற்கே பயன்-பட்டார் என்று திராவி-டர் கழக தலைவர், தமிழர் தலை-வர் கி.வீரமணி அவர்கள் கூறி விளக்கவு-ரையாற்-றி-னார்.

தமிழர் தலைவர் கி.வீர-மணி அவர்கள் ஆற்றிய உரை-யின் நேற்றைய தொடர்ச்சி வருமாறு: தவறு செய்தால் தண்டனை உண்டு

தவறு செய்தால் தண்-டனை அனுபவிக்க வேண்-டும். இதுதான் வள்ளு-வரு-டைய வாழ்க்கை முறை. இதுதான் தமிழ-னுடைய வாழ்க்கை முறை தவறு செய்யாமல் வாழுங்-கள் என்று திருக்குறளில் சொல்லப்பட்டிருக்கிறது.

மீறி தவறு செய்து-விட்டால் அதற்குரிய தண்டனையை அனுப-விக்கத் தயாராகுங்கள். இதுதான் தமிழர்க-ளு-டைய வாழ்க்கை முறை. தவறு செய்யக்கூடாது என்பது தமிழர்களுடைய பண்பாட்டு முறை. தவறு செய்வது என்பது ஆரிய பண்பாட்டு படை யெடுப்-பினாலே வந்த ஒன்று. இவற்றை எல்லாம் நீங்-கள் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும்.

பெரியாரியக்கம் வெறுக்க வேண்டியது அல்ல. மாறாக ஒவ்வொரு-வரும் பங்கேற்க வேண்-டிய இயக்கம். பெரியார்-காமராஜர்

தமிழ்நாட்டிலே இந்த அளவுக்கு கல்வி வளர்ந்-திருக்கிறது என்றால் அதற்கு அடித்தள-மிட்-டவர் காமராஜர் அல்-லவா? தந்தை பெரியார் இல்லாவிட்டால் காம-ராஜர் ஆட்சிக்கு அவ்-வ-ளவு பெரிய பலம் வந்தி-ருக்குமா? எனவே எல்லா துறைகளிலும் அறிவியல் வாழ்வியல் இப்படி எல்-லாவற்றை-யும் சொல்லிக்-கொடுக்-கின்ற இயக்கம் இந்த இயக்கம்.

பெரியாருடைய இயக்-கத்தில் உள்ளவர்கள், பெரியாருடைய தொண்-டர்கள் அனாவசிய செலவு செய்ய மாட்-டார்களே.

இங்கே கூட அய்யா அவர்கள் ரூ.50 ஆயி-ரத்தை தாராளமாக நன்கொடை கொடுத்-தார். ஏன் கொடுத்தார்? அனாவசிய செலவு என்-பது கருப்பு சட்டைக்-கார-னுக்கு கிடையவே கிடை-யாது.

பெரியார் இயக்கத்தில் இல்லாமல் இருந்தி-ருந்-தால் கோவிலுக்கு செலவு செய்ய வேண்-டும். திரு-விழாவுக்கு செலவு செய்ய வேண்-டும். அதைவிட அறிவு ரொம்ப குறை-வாக ஆகியிருக்கும் சிந்-திக்–கின்ற மனப்பான்மையே வந்திருக்காது.

இங்கு நல்ல அறிவி-யல் மய்யம் வர வேண்-டும். பொது நலத் தொண்டு அளவுக்குப் பரவ வேண்-டும். தந்தை பெரியார் சொன்னார். ஒரு ரூபாய் சம்பாதித்தால் பத்து காசாவது மிச்சப்படுத்து. எனவே எங்களுடைய தோழர்கள் பெரி-யாரு-டைய கொள்கையை வாழ்க்கைமுறையாக ஏற்றுக்கொண்டிருக்கக் கூடியவர்கள் யாராக இருந்–தாலும் அவர்கள் சிக்கனக்காரர்கள். பெரியார் சிக்கனக்-காரர். சில பேர் பெரி-யாரை கஞ்சன் என்று நாக்கில் நரம்பில்லாமல் சொல்லு வார்கள். இதை-விட தவ றான புரிதல் வேறொன்-றும் கிடை-யாது.

பணத்தை விரும்பியதுண்டு

அய்யா அவர்கள் பணத்தை விரும்பினார். அதை அவரே சொன்-னதுண்டு. எனக்கு பணத்-தாசை ரொம்ப அதிகம் என்று ஆனால் அந்தப் பணம் எதற்காக என்பது-தான் முக்கியம். ஒரு காலணா கொடுத்தாலும் அய்யா வாங்கிக்-கொள்-வார்.

கையெழுத்துப் போட வேண்டும் என்று அய்யா அவர்களிடம் கேட்டால் நான்கணா தர வேண்-டும். பெரியார் திரைப்-படம் பார்த்திருப்பீர்கள். பெயர் வைக்க வேண்டும் என்று யாராவது கேட்-டால் நல்ல பெயர் வைக்க வேண்டுமா? சாதாரண பெயர் வைக்க வேண்-டுமா? என்று கேட்பார்.

சாதாரண பெயர் வைப்பதற்கு ஒரு ரூபாய். நல்ல பெயர் வைப்பதற்கு இரண்டு ரூபாய். நல்ல பெயர் காமராஜ் என்று பெயர் சூட்டுவார்.

எல்லா சொத்துக்களும் மக்களுக்கே

எனவே அய்யா அவர்-கள் சேர்த்து வைத்த சொத்-துகள் எல்லாம் அறக்கட்டளை-யாக்கப்-பட்டு மீண்டும் -பொது மக்களுக்கே பயன்-படும்-படி ஆக்கப்பட்டிருக்-கிறது.

அவரென்ன சொந்த பந்தங்களுக்கு கொடுத்-தாரா? அல்லது ஜாதிக்-காரர்களுக்கு ஏதாவது அமைப்பை உருவாக்கிக்-கொள்ள கொடுத்தாரா?

எல்லா சொத்து-களை-யும் மக்களுக்கே திருப்பி-க்கொடுத்த ஒரு மாபெ-ரும் தலைவர் உலக வர-லாற்-றிலேயே வேறு எங்-கும் காண முடியாது. (கைதட்-டல்). அவருடைய அறக்-கட்டளையில் அவ-ரு-டைய ஜாதிக்காரர்கள் கிடையாது. அவருடைய சொந்தக்காரர்கள் கிடை-யாது.. பெரியாருடைய சொந்-தம் என்பதிருக்-கிறதே, அது இரத்த பாசத்தைப் பொறுத்-ததல்ல; கொள்-கைப் பாசத்தைப் பொறுத்-தது.

கருப்புச்சட்டைக்-காரர்-க-ளாகிய நாங்கள் எல்-லாம் ஒரே குடும்பம். அய்யா போஸ் அவர்கள் இருக்கிறார்கள், காஞ்-சனா அம்மாள் அவர்கள் இருக்கிறார்கள். இவர்கள் எல்லாம்தான் நம் உறவுக்-காரர்கள்.

சாராய, கஞ்சா சாமியார்

மதுரை மாவட்டத்-தில் இருந்து திருவண்-ணாமலைக்கு ஓடிப் போ-னவர் ஒருவர். திரு-வண்-ணாமலை கிரிவலப் பாதையில் பார்த்தால் அவனவன் சாமியார், சாமியார் என்று சொல்-லு-கின்றான்.

நமது மாவட்ட தலை-வர் மணிக்கு வேண்டிய மாவட்டம் திருவண்-ணா-மலை மாவட்டம். அங்கு யார் சாமியாராக இப்-பொழுது இருக்கி-றார்கள் என்றால் சாரா-யம் குடிக்-கிறவர்கள் இருக்–கின்-றார்கள். சாராயம் கஞ்சா உள்ளே போனால்தான் சாமியே குறி சொல்கிறது. இதற்கு ஞாயிற்றுக் கிழ-மைகளில் அளவு கடந்த கூட்டம். கொழுத்த வரு-மானம். தொலைக்-காட்-சியில் இதைக்காட்டி-னார்கள். ஆயிரக்கணக்-கான பேர் வருகிறார்கள். இதைப் பார்த்து என்ன இவ்வளவு அசிங்-கமாக இருக்கிறது என்று கருதினோம். ஒரு வாரத்-திற்குள் நடவடிக்கை எடுக்கவில்லையென்றால் நேரடிப் போராட்டம் நடத்துவோம். இதை அரசுக்குத் தெரியப்-படுத்-துகிறோம் என்று பத்தி-ரிகையில் எழுதி-னோம். பொதுக்கூட்டத்-தில் பேசினோம். திரு-வண்-ணா–மலை-யில் நடத்-திய கூட்-டத்திற்கு எல்லா கட்சிக்-காரர்களும் வந்-தார்கள்.

உடனே கலைஞர் நடவடிக்கை எடுத்தார்

அடுத்த நாள் காலை-யிலேயே முதலமைச்சர் கலைஞர் உத்தரவு போட்-டார். யார் அந்தச் சாமி-யார்? நேரே பிடித்து எங்கே வைக்க வேண்-டுமோ அங்கே வைத்தார் (கைதட்டல்)

அதன்பிறகு பார்த்தீர்-களேயானால் அருள் வாக்கெல்லாம் வர-வில்லை. அந்த திருவண்-ணா-மலையில் ஒரு ரமண ரிஷி எதற்கெடுத்தாலும் மகரிஷி, மகரிஷி, என்று சொல்லுவார்கள். படித்த-வன் மாதிரி ஒரு போலியை உலகத்தில் வேறு எங்குமே காண-முடி-யாது. இந்த வெறும் படிப்பு கோழையாக்-குவது மட்டுமல்ல ஒரு-வரை துணிச்சலாக சிந்-திக்க வைப்பதில்லை.

மதுரை மாவட்டம் திருச்சுழியை சேர்ந்தவர். சுழி எப்படியிருக்கிறது என்று பார்க்க வேண்டும். அருப்புக்கோட்டைக்கு பக்கத்திலே இருக்கின்ற ஊர். திருச்சுழியிலிருந்து அரைக்கால் டிரவு-சருடன் 50 வருடத்திற்கு முன்-னால் திருட்டு ரயில் ஏறி திரு-வண்ணா-ம-லைக்கு வந்த-வர் –தான் இந்த ரம-ணரிஷி.

இவர் கண்ட இடத்-தில் சுற்றித் திரிகின்றார். பசி வரும்பொழுது மயக்-கம் வருகின்றது. கீழே விழுந்-துவிடுகிறார். யாரோ பையன் கீழே விழுந்து விட்டானே என்று தூக்கி உட்கார வைத்தார்கள்.

கொஞ்சநேரம் ஆனது. மரத்தில் சாய்ந்து உட்-கார்ந்து பசியால் கண்ணை மூடிக்கொண்-டி-ருந்தார். அடுத்து துணி-யில்லை. கோவணம் கட்ட ஆரம்-பித்தார். சாதாரண வெங்-கட்ட ரமணன், வெங்கட் என்-பது போய் ரமணர் ஆனார். ரமணர் பிறகு ரிஷி ஆனார். ரமண ரிஷி ஆனபிறகு ஆசிரமம் ஏரா-ளமான சொத்துகள் எக்கச்சக்கமாக சேர்ந்து விட்டது.

நம்ம ஊரிலே மட்டும் முட்டாள் இருப்பான் என்பதல்ல. வெளிநாட்-டிலும் இருப்பான். ரம-ணரிஷிக்கு முதல் சீடர் பெருமாள்சாமி என்பவர். இவர் பாப்பனர் அல்லாத ஒருவர். ரமண ரிஷியை பெரிய ஆளாக ஆக்குவ-தற்கு உதவிகரமாக இருந்-தவர் இவர்.

நான் சொல்வது ஆதார பூர்வமான செய்தி. இது கற்பனை அல்ல. ரமணரி-ஷி-யினுடைய சீடர் ஒரு புத்-தகம் எழுதி-யிருக்-கின்-றார்.

ரமண ரிஷி சொத்து உறவினருக்கு

ரமண ரிஷி செல்-வாக்கு வந்தவுடனே, பணம் வந்தவுடனே தன்-னுடைய தாயாரை வர-வ-ழைத்தார். அடுத்தது தனது தம்பியை வரவ-ழைத்தார். சொத்து-களை தனது சகோதரர் மீது எழுதி வைத்தார், ரமண ரிஷி. உடனே பெருமாள் சாமியும், மற்ற சீடர்களும் சென்று சொத்துகளை உங்கள் உறவினருக்கு எழுதி வைக்கலாமா? நீங்-களோ சந்நியாசி ஆயிற்றே என்று கேட்டார்கள்.

நீங்கள் பகவான் ரம-ண-ரிஷி. நீங்களே பக-வான் ஆயிட்டீங்களே சொத்து-களை எப்படி உங்களு-டைய குடும்பத்தி-டம் கொடுக்க முடியும் என்று கேட்டார்கள். யாரிடம்? ரமணரிஷி-யிடம்.

ஆனால் ரமண ரிஷியோ அதைப் பற்றி கவலைப்படவில்லை. நீதிமன்றத்தில் வழக்கு வந்தது. ரமணரிஷியை நீதிமன்றத்திற்கு அழைத்-தார்கள். அவர் வர மறுத்து விட்டார்.

ரமண ரிஷியின் மர்-மங்கள் என்ற தலைப்-பில் பெருமாள்சாமி என்ற சீடர் நீதிமன்றத்-தில் வழக்கு தொடர்ந்-தார். 1934, 1935ஆம் ஆண்டு-க-ளில் இந்த வழக்கு வந்தது.

இந்த செய்திகள் ஆங்கிலத்திலும், தமிழி-லும் நூலாகவே வந்திருக்-கிறது. ஆதார பூர்வமாக சொல்லுவது தான் எங்-களுக்கு வழக்கமே தவிர வேறு அல்ல. ரமணரிஷி-யின் வழக்கு இன்னமும் முடியவில்லை.

நம்முடைய நாட்டில் எந்தவொரு வழக்கும் அவ்வளவு எளிதாக முடிந்து விடாது. வெள்ளி விழா, பொன்விழாவைத் தாண்டித்தான் ஒவ்-வொரு வழக்கும் நடைபெற்று வருகிறது.

வழக்கு போட்ட ஆளும் செத்துப் போனார். வக்கீலும் செத்துப்-போ-னார். நீதிபதியும் செத்துப்-போனார். வழக்கு மட்-டும் உயிரோடு இருக்கி-றது. வழக்கு பாட்டுக்கு நடந்து கொண்டிருக்கும். ஒன்றுமில்லை.

காஞ்சிபுரம் யானைக்கு வடகலை நாமம் போடு-வதா? அல்லது தென்-கலை நாமம் போடுவதா? என்று பிரச்சினை. யானைக்கு எந்த நாமம் போடுவது என்பதில் தகராறு. வெள்ளைக்-காரர்கள் காலத்தில் லண்டன் பிரிவி கவுன்-சில் வரை இந்த வழக்கு வந்தது.

வெள்ளைக்கார நீதிப-திகளிடம் வழக்கு வந்த பொழுது வடகலை என்றால் என்ன? தென்-கலை என்றால் என்ன? என்று கேட்டனர். இவர்-களுக்கு வாதாடியவனும் வெள்ளைக்காரன். வெள்-ளைக்கார- வழக்கறிஞர் நீதிபதிகளிடம் கஷ்டப்-பட்டு விளக்கினார். மைலார்டு அவர்களே! இது ஒன்றுமில்லை; ஒய்_-யுக்கும், யு_வுக்கும் இருக்-கின்ற சண்டை என்று சொன்னார்.

ஒய் (சீ) என்றால் பாதம் வைத்திருக்கும் யு (ஹி) என்றால் பாதமில்-லாத நாமம். எனவே இந்த இரண்டு நாமத்தில் எந்த நாமத்தை யானைக்கு வைப்பதில் என்பது பிரச்-சினை என்று சொன்-னார். காஞ்சிபுரம் கோவில் யானைக்கு ஒரு வாரம் இந்த நாமம் போடு; இன்னொரு வாரத்திற்கு இன்னொரு நாமம் போடு என்று சொன்-னார். யானையும் செத்து போய் விட்டது-. இன்-னமும் அந்த வழக்கு முடி-யவில்லை. அது போல ரமண ரிஷி வழக்கு இன்-னமும் நடந்து கொண்-டிருக்கிறது.

ரமணரிஷி தன்னு-டைய தம்பிக்கு எல்லா சொத்தையும் எழுதி விட்-டார். ரமண ரிஷியின் குடும்பம் ஆசிரமத்தில் வந்து அமர்ந்து விட்டது.

இப்பொழுது நினைத்-துப் பாருங்கள் கடவுள் இல்லை என்று சொன்ன தந்தை பெரியார் நீங்கள் கொடுத்த நான்கணா-வைக்கூட பத்திரமாக வைத்து_முடிச்சு போட்டு வைத்து அதை மீண்டும் பொது மக்களுக்கு பயன்-படும்படி அறக்கட்டளை-யாக்கி பல்கலைக் கழக-மாக, கல்லூரிகளாக மருத்துவமனைகளாக, பிரச்சார கேந்திரங்களாக ஆக்கியிருக்கின்றார்.

கடவுள் இல்லை என்று சொன்ன தந்தை பெரியார் மனிதநேயப் பணிகளை செய்தார். அதே நேரத்திலே கடவுள் அவ-தாரம் என்று சொன்ன ரமண ரிஷி, மக்கள் கொடுத்த அவ்வளவு தொகையையும் தனதாக்-கிக்-கொண்டார்.

இதில் யார் உயர்ந்த-வர்கள்? இன்றைக்கும் கடவுள் பெயரால் தானே மக்களிடையே சண்டை; இன்றைக்கும் மதத்தின் பெயரால் தானே மக்களி-டையே சண்டை.. எனவே கடவுள் மனி-தர்களைப் பிரித்திருக்-கிறது. மதம் மனிதர்-களைப் பிரித்திருக்-கிறது. ஜாதி மனிதர்க-ளைப் பிரித்-திருகிக்றது.

இவைகளை எல்லாம் எதிர்த்த பெரியார் மனி-தர்-களை நேசித்தார். மனிதர்-களை ஒற்றுமைப்-படுத்-தினார். சுயமரியாதை வாழ்வே சுகவாழ்வு என்று தந்திருக்-கின்றார். அப்-படிப்-பட்ட தந்தை பெரி-யாரின் பிள்-ளைகள் ஆயி-ரம் காலத்-துப் பயிர்கள்.

அந்தப் பணிகள் சிறப்-பாக நடைபெற அய்யா போஸ் அவர்கள் வழங்-கிய நிலமிருக்கிறதே அது மிகப்பெரிய வாய்ப்பாக அமைந்து சிவகாசியிலே ஒரு புதிய அத்தியாயம், திராவிடர் இயக்க வர-லாற்றிலே மட்டுமல்ல; மனிதநேய வரலாற்றில் பொறிக்கப்படும் என்று சொல்லி, வாய்ப்பளித்த அனைவருக்கும் நன்றி கூறி விடைபெறுகிறேன்.

பெரிதா, சிறிதா என்பது முக்கியமல்ல. ஒவ்வொருவருடைய பங்களிப்பும் இருக்க வேண்டும். அதற்கு நீங்-கள் உதவ வேண்டும். பெரியார் எப்படி எல்-லோருக்கும் சொந்தமோ அது போல பெரியார் மய்யமும் மக்களுக்குச் சொந்தம் என்று கூறி விடைபெறுகிறேன்.

இவ்வாறு தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் உரையாற்-றி-னார்.

நாத்திகமும், ஆத்திகமும்: அகில இந்திய பகுத்தறிவாளர் மாநாடு: நம்பிக்கையாளர்களுக்கு சவால் – IV

ஜனவரி 16, 2010

அகில இந்திய பகுத்தறிவாளர் மாநாடு: நம்பிக்கையாளர்களுக்கு சவால் – IV

© வேதபிரகாஷ்

முன்பு இம்மாநாட்டின் நிகழ்வுகளை பத்திதுள்ளேன்[1]அகில இந்திய பகுத்தறிவாளர் மாநாடு: நம்பிக்கையாளர்களுக்கு சவால் – I to III! இதில் தீர்மானங்கள் சம்பந்தமான விவரங்கள் கொடுக்கப்படுகின்றன.

7வது பகுத்தறிவாளர் கழக மாநாட்டின் தீமானங்கள்!: இரண்டாவது நாளில் (27-12-2009, ஞாயிற்றுக் கிழமை) மாநாட்டின் தீர்மானங்கள் முதலில் வாசிக்கப்பட்டு, அதன் விவரங்கள் பின்னணி நரேந்திர நாயக்கினால் விளக்கப்பட்டன:

1. இந்திய அரசு மதத்தை அரசியலிலிருந்து பிரிக்க தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும். அதற்காக ஒரு சட்டவடிவை உண்டாக்கி, சட்டமாக்க வேண்டும்[2]. லிப்ரான் கமிஷன் அறிக்கையிலும் இக்கருத்து சொல்லப்பட்டிருக்கிறது[3].

2. விளம்பரங்களில் வரும் மூட நம்பிக்கைகள் நிறுத்தப்படவேண்டும். அதாவது விளம்பரங்கள் மூடநம்பிக்கைகள் பரப்ப உபயோகிக்கக்கூடாது[4].

3. பொது சிவில் சட்டத்தை (Uniform Civil Code) அமூலாக்க வேண்டும்[5]. ஏற்கெனவே இரண்டு உச்சநீதிமன்ற தீர்ப்புகள் இதனை வலியுறுத்துள்ளது.

4. அயல்நாட்டிலிருந்து ஊக்குவிக்கப்படும் தீவிரவாதம் ஒழிக்கப்படவேண்டும்[6]. அதுமட்டுமல்லாது, எல்லாவிதமான தீவிரவாதங்களும் ஒழிக்கப்படவேண்டும்.

5. அரசியல் நிர்ணயச் சட்டத்தின் சரத்து 31 (Art.31), முக்கியமாக சிறுபான்மையினருக்கு அளிக்கப்பட்டுள்ள சலுகை நீக்கப்படவேண்டும். எல்லாமதங்களின் உரிமைகளும் மதிக்கப்படவேண்டும் (Art.14) என்பதைவிட, சிறுபான்மையினரின் உரிமைகள் பாதுகாக்கப்படவேண்டும் என்று மாற்றவேண்டும்.

6. கொடுக்கப்படும் மான்யங்கள் (Subsidies) அறவே ஒழிக்கப்படவேண்டும்.

7. சிறப்புத் திருமண சட்டத்தினைத் திருத்தி (Special marriage Act), பதிவு செய்தல் என்பது எல்லா மதங்களுக்கும் கட்டாயமாக்கவேண்டும்[7].

8. பொது இடங்களில் மதசம்பந்தமான அடையாளங்கள் / சின்னங்கள் வைப்பது நீக்கப்படவேண்டும். அவ்வாறே வழிபடும் இடங்கள் உள்ளதும் நீக்கப்படவேண்டும்.

9. ஸ்ரீலங்கத் தமிழர்களின் மனித உரிமை மீறல்களை கண்டிக்கிறது[8].

10. போலி-விஞ்ஞானம் ரீதியில் / மூலமாக பரப்பப்படும் மூடநம்பிக்கைகளை அரசு உரிய முறையில் தடுக்க ஆவன செய்யவேண்டும்.

நாயக்கின் விளக்கம் இந்து-விரொதமாகத்தான் இருந்தது: ஒவ்வொரு தீர்மானம் முன்மொழியும் போது, நரேந்திர நாயக் விளக்கங்கொடுத்து, இது தெரிந்த விஷயம்தான், இதை நிறைவேற்றுவதில் எந்தப் பிரச்சினையும் இருக்காது என்று நினைக்கிறேன் / இல்லை என்ற ரீதியில் பேசினார். மூடநம்பிக்கை பற்றி விவாதிக்கும் போது, செக்யூலரிஸ பாணியில், இந்து-எதிர்ப்பாக இருந்தது ஆச்சரியமான இருந்தது. “அயல்நாட்டிலிருந்து ஊக்குவிக்கப்படும் தீவிரவாதம் ஒழிக்கப்படவேண்டும்”, என்றப்பொது, சில குரல்கள் எழுந்தன, உடனே அவர், “எல்லாவிதமான தீவிரவாதங்களும் ஒழிக்கப்படவேண்டும்” என்று சேர்த்துக் கொள்கிறேன் என்றார். அரசியல் நிர்ணயச் சட்டத்தின் சரத்து 31 பற்றிய விவாதம் வந்தபோது “சரண்டர்” ஆகிய நிலைதான் ஏற்பட்டது[9]. “பொது இடங்களில் மதசம்பந்தமான அடையாளங்கள் / சின்னங்கள் வைப்பது நீக்கப்படவேண்டும். அவ்வாறே வழிபடும் இடங்கள் உள்ளதும் நீக்கப்படவேண்டும்”, என்று சமீபத்தை தீர்ப்பின்படி, தீமானத்தை கொண்டுவந்தாலும், முஸ்லிம்கள், கிருத்துவர்கள் செய்துவரும் ஆக்கிரமிப்பு முதலியவைப் பற்றி மூச்சுவிடவில்லை. தெருக்களில் உள்ள கோவில்கள் உடனே அகற்றப்படவேண்டும் என்றுதான் பேசினார்[10]. “ஈழத் தமிழர்களின் மனித உரிமை மீறல்களை கண்டிக்கிறது” என்பதற்கும் எதிர்ப்பு இருந்தது. நாயக் அதனை, ஸ்ரீலங்கத் தமிழர்களின் மனித உரிமை மீறல்களை கண்டிக்கிறது”, என்று மாற்றிவிட்டார்!

ஐந்தாவது தீர்மானத்திற்கு எதிர்ப்பு: தீர்மானங்களை கூட்டமைப்பின் தென் மண்டலச் செயலாளர் வா.நேரு முன்மொழிந்தார். கூட்டமைப்பின் பிற அமைப்பின் சார்பாக அளிக்கப்பட்ட சிறுபான்-மையினரின் சிறப்பு உரிமைகளை அரச-மைப்புச் சட்டத்திலி-ருந்து நீக்க வேண்டுகோள் விடுத்த – தீர்மான முன்-வரைவின் மீது பகுத்தறிவாளர் கழகப் பொதுச் செயலாளர் வீ.குமரேசன் தனது எதிர்ப்பினை பதிவு செய்தார்[11]. சிறுபான்-மையினருக்கான சிறப்பு உரிமைகள் இந்நாட்டில் ஆண்டாண்டு காலமாக ஆதிக்கம் செலுத்தி வரும் இந்துமத அமைப்புகளின் செயல்களுக்கு ஒரு பாதுகாப்பாக, சமத்துவத்தைப் பேண வழிகோலும் வேறுபாட்டு உரிமையாக, மனிதநேயத்தைப் பேணும் உரிமையாக உள்ள நிலைமையினை விளக்கி, அந்த சிறப்பு உரிமைகள் மேலும் மேலும் சீர்மைப்படுத்தப்பட்ட வேண்டியதன் அவசியத்தை விளக்கிப் பேசினார். இத்தகைய வலிந்து ஆதரிக்கும் நிலையில், மற்ற மதத்தினர்க்கு இந்த அமைப்பில் யாரும் இல்லை போலயிருக்கிறது.

முஸ்லிம்களே இல்லாத மாநாட்டில் முஸ்லிம்களுக்கு ஆதரவாக இருந்த நாத்திகர்கள்: நம்பிக்கையில்லாதவர், மூடநம்பிக்கை எதிர்ப்பவர், கடவுட்மறுப்பு சித்தாந்திகள், நாத்திகவாதிகள், பகுத்தறிவு வாதிகள் என்றேல்லாம் சொல்லிக் கொண்டு கூடியிருந்த கூட்டத்தில் ஒரு முஸ்லிமும் இல்லதது ஆச்சரியமாகவே இருந்தது. ஆனால், மேலே குறிப்பிட்ட ஐந்தாவது தீர்மானத்திற்லு கருப்புச் சாடைகள் எதிர்ப்பு தெரிவித்தன. சிறுபான்மை-யினர் உரிமையினை பாதிக்கும் அந்த தீர்மான முன்வரைவினை நீக்குவ-தற்கு பகுத்தறிவாளர் கழகம் எடுத்து வைத்த வாதங்களை பொதுக்குழு உணர்ந்து முன்வரைவு நிலையிலேயே அதற்கு முடிவு கட்டப்பட்டு அது நீக்கப்பட்டுவிட்டது.

நாத்திகர்களும், போலி-நாத்திகர்களும்: இந்தி பேசும் நாத்திகர்களைக் கண்டு, குறிப்பாகக் கேட்டு நமது கருப்புச் சட்டைகள் முழித்தது, அதிர்ந்தது முதலியன பார்ப்பதற்கு வேடிக்கையாக இருந்தது. இந்த 7வது ரேஸனலிஸ்ட் மாநாட்டிலேயே, போலி, சாதாரண மற்றும் பாரபட்சமுள்ள, குழப்பவாத, சந்தர்ப்பவாத நாத்திகர்களை மற்றும் நாத்திகவாதிகளைக் காணமுடிகிறது. அவர்களுக்குள் உள்ள முரண்பாடுகளும் வெளிப்படுகின்றன:

1. இந்து-விரோத நாத்திகம்: இந்தியாவில் இந்துக்கள் அதிகமாக இருப்பதால், இந்துமதத்தை எதிர்க்கிறோம் அன்றாலும், அத்தகைய வாதம், 100% நாத்திகமாக இல்லாமல், இந்து-விரோதமாகவே இருக்கிறது. வட-இந்தியாவில் எடுபடுவதில்லை என்று இந்த மாநாட்டிலேயே ஒப்புக்கொள்கிறர்கள்.

2. கிருத்துமத சார்புள்ள நாத்திகம்: தம்மை நாத்திகர்கள் என்று சொல்லிக் கொண்டாலும், கிருத்துவ அடிப்படை நம்பிக்கைகளைப் பற்றி விமர்சிக்க மாட்டார்கள் (பாவத்தின் சித்தாந்தம், ஆண் உறவு இல்லாமல் குழந்தை பிறப்பது, சிலுவையில் மரித்தது, உயிர்த்தெழுந்தது, ஆகாயத்தில் சென்றது……………….முதலியன), குறைகூற மாட்டார்கள். பொதுவான விஷயங்களை பேசி, உள்ள எல்லா சமூக-சீரழிவுகளுக்கும் இந்துமதம்தான் காரணம், ஆகையால் இந்துமதம் ஒழிக்கப் படவேண்டும் என்றும் பேசுவர்.

3. முஸ்லிம் மத சார்புள்ள நாத்திகம்: தம்மை நாத்திகர்கள் என்று சொல்லிக் கொண்டாலும், முஸ்லிம் மற்றும் இஸ்லாம் பற்றி மூச்சுக்கூட விடமாட்டர்கள். அடிப்படை நம்பிக்கைகளைப் பற்றி விமர்சிக்க மாட்டார்கள். பொதுவான விஷயங்களை பேசி, உள்ள எல்லா சமூக-சீரழிவுகளுக்கும் இந்துமதம்தான் காரணம், ஆகையால் இந்துமதம் ஒழிக்கப் படவேண்டும் என்றும் பேசுவர்[12].

4. தியானம், யோகா முதலியவற்றவை எதிர்க்கும் நாத்திகம்: சமீபத்தில் இத்தகையவற்றிற்கு மேலைநாடுகளில் அங்கீகாரம் கிடைத்ததாலும், அதன் பலனால், மக்கள் பலர் அவற்றைக் கடைப்பிடிப்பதாலும், தங்களுக்கு பாதிப்பு என்ற முறையில் எதிர்க்கின்றனர். வேடிக்கையென்னவென்றால், அதையே கிருத்துவர்கள், முஸ்லிம்கள் செய்தால் எதிர்க்கமாட்டார்கள். ஏனனில் அவர்களும் ஆஸ்ரமங்கள் வைத்துக் கொண்டு அப்பய்ற்ச்சிகளை மற்றவர்களுக்கு அளிக்கிறார்கள்[13].

5. சோதிடத்தையும், வானவியலையும் குழப்பும் நாத்திகம்: வேண்டுமென்றே சோதிடத்தையும் வானியலையும் குழப்பி, இந்திய வானியலை தூஷிப்பார்கள். விஷயம் இல்லையென்றால், இன்னென்ன தேதிகளில் சூரியகிரகணம், சந்திரகிரகணம், கோள்கள் ஒரே கோட்டில் வருவது முதலியன சோதிட-பஞ்சாங்களில் குறிப்பிடமுடியாது. வானியல் என்பது ஆண்டாண்டு காலமான நிகழ்வுகளை உன்னிப்பாக பல இடங்களில் பார்ப்பது, குறித்து வைப்பது, தொகுப்பது மற்றும் அதன் மூலம் அத்தகைய நிகழ்வுகள் ஏற்படும் என்று கூறுவது. 108 ஆண்டுகளுக்கு ஒருமுறை கங்கண கிரகணம் ஏற்படும், கோள்கள் ஒரே கிரமமாக வரும் முதலியன சோதிடம் ஆகாது, மூடநம்பிக்கையாகாது. பிறகெப்படி, பஞ்சாங்கள் அவற்றைக் குறிப்பிடுகின்றன?

6. நாத்திகத்தையும், பகுத்தறிவையும் குழப்பும் நாத்திகம்: இது “திராவிடம்” பேசும் “தமிழர்களிடம்” அதிகம் காணப்படுகிறது. அம்பேத்கரிஸம் முதலியன பேசுபவரிடமும் காணப்படும். நாத்திகம் என்பது கடவுட்தன்மையினை அறவோடு மறுப்பது. பகுத்தறிவு என்பது ஓரளவிற்கு மனித அறிவிற்கு புரிகிண்ர அளவில் ஏற்றுக்கொள்வது. இரண்டும் ஒன்றல்ல.

7. மூடநம்பிக்கையை எதிர்க்கும் நாத்திகம்: மேகங்கள் திரண்டு வந்தால் மழை பெய்யும் போன்றவையும் மூடநம்பிக்கைதான். ஏனெனில் மழை பெய்யலாம், பெய்யாமலும் இருக்கலாம்[14]. மழைகாலத்தில் மழை வரும், வெயில் காலத்தில் வெயில் வரும் என்பதெல்லாம் இப்பொழுது மாறிவிட்டன. இது பூகோளக் கோளாறு / பிறழ்ச்சி. அதிக விளைச்சல் இருந்தால் விலை முறைந்துவிடும் முதலியனவும் மூடநம்பிக்கைதான். ஏனெனில் பலநேரங்களில் அவ்வாறு விலை குறைவதில்லை. அரசு வரிவிகிதங்களைக் குறைக்கின்றது, சலுகைகளை அள்ளிவீசுகிறது, இருப்பினும் இப்பொழுது கட்டிடப் பொருட்கள் விலை 2003லிருந்து ஏறுமுகமாகவே உள்ளன[15]. இப்படி பல உதாரணங்களைக் குறிப்பிட்டுச் சொல்லலாம். பங்குச் சந்தையைப் பற்றி கேட்கவே வேண்டாம்!

8. செக்யூலரிஸ நாத்திகம்: இது இந்தியாவிற்கே உரித்தானது. இந்த மூடநம்பிக்கை இங்கிருந்து இப்பொழுது உலகம் முழுவதும் பரவி வருகிறது எனலாம்.

9. நவநாகரிக நாத்திகம்: அதாவது, பெண்கள் “பெண்கள் கிளப்பிற்கு போவது” என்ற ரீதியில் உள்ள நாத்திகர்கள்! பெயரளவில் நாத்திகர்கள் எனலாம். திக, திமுக, பாமக மற்றும் அம்பேத்கரிஸம் முதலிய கோஷ்டிகளில் அதிகமாகக் காணலாம். இவர்களைப் பொறுத்தவரைக்கும் அவர்கள் குடும்பத்தில் ஆண்கள் நாத்திகர், பெண்கள் ஆத்திகர்!

10. விஞ்ஞானம் பேசும் நாத்திகம்: ஓரளவிற்கு விஞ்ஞானம் பேசினாலும், ஒரு நிலையில் அதிலும் மூடநம்பிக்கை வந்துவிடும்[16]. இப்பொழுது மரபணு மற்றும் இனங்களைப் பற்றியும், மொழிகள் உண்டானது, நியாண்டர்தால் குரங்கு எப்படி பாடியது, பேசியது, ஆடியது போன்ற ஆராய்ச்சிகளினின்று அத்தகைய விஞ்ஞான-நாத்திகத்தை அறியலாம்[17].

© வேதபிரகாஷ்

16-01-2009


[1] வேதபிரகாஷ், அகில இந்திய பகுத்தறிவாளர் மாநாடு: நம்பிக்கையாளர்களுக்கு சவால், விவரங்களுக்கு இங்கு பார்க்கவும்:

https://dravidianatheism2.wordpress.com/2009/12/26/அகிலஇந்தியபகுத்தறிவாளர/

வேதபிரகாஷ், திராவிட பொய்களும், திரிபுகளும், பிரச்சாரங்களும், மேலும் விவரங்களுக்கு:

https://dravidianatheism2.wordpress.com/page/2/ மற்றும் https://dravidianatheism2.wordpress.com/page/3/

[2] மும்பையில் அத்தகைய வரைசட்டத்தை சட்டசபையில் கொண்டுவந்ததாகவும், ஆனால் மாநில அரசு தாமதப் படுத்துவதாகவும் நாயக் தெரிவித்தார்.

[3] கமிஷனின் அறிக்கைகளை, இந்திய அரசொயல்வாதிகள் என்றுமே மதிப்பதில்லை. மேலும் இந்த லிப்ரான் கமிஷன், முகுக்க-முழுக்க அரச்சியல் நோக்கம் கொண்டது என்பது அப்பட்டமாகத் தெரிவதால், சட்டரிதியில் யாரும் அதை பெரிதாகக் கொள்ளவில்லை. இரண்டு-மூன்று நாட்களில் ஊடகங்களேஅடங்கிவிட்டன.

[4] சிவப்பாக கிரீம், ஆண்கள் அழகாகக் கிரீம், முலைகளை பெரிதாக்க கிரீம் முதலியவற்றை எதிர்க்காதது ஆச்சரியமே!

[5] Smt. Sarla Mudgal, President, Kalyani and others vs. Union of India and other, AIR 1995 Supreme Court 1531 மற்றும் John Vallamattom v. Union of India AIR 2003 SC 2902.

திகவினர்-கருப்புச்சட்டைகள் இதனை எதிர்க்காதது ஆச்சரியமே. ஒருவேளை அதைப் பற்றி சரியாக தெரிந்து கொள்ளவில்லையா அல்லத் அவர்களது முஸ்லிம் நண்பர்கள் அதைப் பற்றி சொல்லவில்லையா அல்லது அத்தகைய தீர்மானம் வரும் என்பதை எதிர்பார்க்கவில்லையா?

http://vedaprakash.indiainteracts.in/2009/03/15/islam-goes-hi-tech-whether-it-is-terrorism-or-divorce/

Mohammad Ahmed Khan v. Shah Bano Begum – AIR 1985 SC 945 –  இதுதான் ராஜிவ் காந்தி சட்டத்தை வளைத்து, முஸ்லிம் அடிப்படைவாதிகளுக்குத் துணைப்போய், ஒரு புதிய சட்டத்தை முகமதியர்க்லளுக்க்ய்=உ ஏற்படுத்தியது.

John Vallamattom v. Union of India AIR 2003 SC 2902 – சரளா முத்கல் வழக்கு அடுத்து உச்சநீதிமன்றத்தில், மறுபடியும் அரசாங்கத்திற்கு ஒரு பொது சிவில் சட்டத்தை எடுத்துவரவேண்டிய அவசியத்தை உணர்த்தியுள்ளது. ஆனால், நமது செக்யூலரிஸ அரசியல்வாதிகள் அமைதி காக்கின்றனர். மற்ற நேரங்களில் நீதிமன்ற தீர்ப்புபடித்தான் நடப்பொம் என்று முழக்கமிடும் வீரர்கள் இப்பொழுது ஊமையாகிவிடுகிண்ரனர். இதுதான் இந்தியாவில் சட்டத்தை, உச்சநீதிமன்றத் தீர்ப்புகளை மத்திக்கும் லட்சணம்!

இதை “சட்ட / நீதி நாத்திகம்” என்று கூட கூறலாம்!

[6] அயல்நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படுவது என்ன என்பது நாத்திகர்கள் பகுத்தறிவுவாதிகளுக்குத் தெரிந்திருப்பது சந்தோஷமான விஷயம்தான்.

[7] தமிழ்நாட்டில் அத்தகைய சட்டம் எடுத்து வந்துள்ளபோது, முஸ்லிம்கள் எதிர்த்துள்ளதை கருத்தில் கொள்ளவேண்டும்.

[8] திகவினர்-கருப்புச்சட்டைகள் இந்த விஷயத்தைக் கண்டுகொள்ளவே இல்லை. தமிழர்களுக்கு போராடுவோம், உயிர்விடுவோம் என்று பேசும் இவர்கள் அமைதியாக இருந்தனர். “ஈழம்” என்ற வார்த்தைக்கு வடமாநிலத்தவர் எதிர்ப்புத் தெரிவித்து அதை “ஸ்ரீலங்கா” என்று மாற்றியபோதும் கண்டுகொள்ளவில்லை.

[9] அவருக்குப் பிடிக்கவில்லை என்பது, அவர்முகபாவம் காட்டியது. இருப்பினும் நன்பர்களின் அழுத்ததால், சமரசம் செய்துகொண்டார் எனலாம்.

[10] மசூதி கட்ட நிலங்களை ஆக்கரமிப்பு செய்கின்றனர். பிறகு பட்டா வாங்கி சரிசெய்து கொள்கின்றனர். கிருத்துவர்களும் அதே வேலைத்தான் செய்து வருகின்றனர். அவர்கள் முதலில் சிலுவையை நட்டுவிடுவார்கள். பிறகு அதனைச் சுற்றி மேடைக் கட்ட்வார்கள். வரம் வாரம் தொழுகிறேன் என்று கூட்டம் கூட்டுவார்கள். பிறகு சுவர்கள், கூரை என வரும்………….அந்த இடத்தையே ஆக்கரமித்துவிடுவார்கள்.

[11] http://viduthalai.periyar.org.in/20091231/news19.html

[12] இப்பொழுது சிதம்பரத்தையும் இதில் சேர்த்துக் கொள்ளலாம். உள்துறை அமைச்சர் ஸ்தானத்தில் இருந்து கொண்டு, ஜிஹாத் சொல்லி பல குண்டுவெடிப்புகளை மேற்கொண்டு, அப்பாவி மக்களைக் கொன்று குவித்தபிறகும், ஜிஹாத் இல்லை என்று பேசும் போக்கு!

[13] இதைப் பற்றி தனியாகவே எழுதலாம். கேரளத்தில் மட்டுமல்லாது, இந்தியா முழுவதிலும் இப்பொழுது முஸ்லிம் சோதிடர்கள் அதிகமாகக் கிளம்பிவிட்டர்கள்! அரசு பேருந்துகளில் வேறு விளம்பரம் செய்து கொள்கிறார்கள்!

[14] சன், கலைஞர் டிவிகளில் ரமணர் உதிக்கும் முத்துகளைக் கேட்டு முடிவு செய்து கொள்ளலாம்.

[15] இரும்பைப் பொருத்த வரைக்கும் உற்பத்தியாளர்கள், ஆட்சியாளர்கள், அதிகாரிகள் முதலியோர் சேந்து கொள்ளையடிக்கின்றனர். பல அரசியல்வாதிகளே அத்தகைய இரும்பு தொழிற்சாலைகள் வைத்துக் கொண்டு கொள்ளையடிக்கிறார்கள்.

[16] சிவப்பாக கிரீம், ஆண்கள் அழகாகக் கிரீம், முலைகளை பெரிதாக்க கிரீம் முதலியவற்றை எதிர்க்காதது ஆச்சரியமே!

[17] மேனாட்டு விஞ்ஞானிகளிடன் இது அதிகமாகக் காணப்படுகிறது. விஞ்ஞான ரீதியில் ஆராய்ச்சி செய்தாலும், ஒரு நேரத்தில் தமது கிருத்துவமத அடிப்படைவாத்தில் மூழ்கி வேறுவிதமான விளக்கங்கள் கொடுப்பர், அதாவது பைபிளுக்கு எதிராக போகாமல், விளக்கம் கொடுப்பர்!