Archive for the ‘தாலி’ Category
ஜனவரி 16, 2018
ஸ்டாலினை பசு முட்ட வந்ததும், குங்குமத்தை அழித்ததும், இப்பொழுது சனியைப் பற்றி பேசும் ஸ்டாலினும், வாய்ச்சொல் கேட்டு அஞ்சும் கனிமொழியும்! (3)

10 ஆண்டுகளுக்கு முன்பு (2008) பெரியாரை செருப்பால் அடிப்பேன் என்றுக் கூறியதை பொறுத்து ரௌத்திரம் பழகாததன் விளைவை தான் தற்போது அனுபவிப்பது (2018): ஆரூர் புதியவனின் “சொற்களால் ஒரு சுதந்திரப் போர்” நூல் வெளியீட்டு விழா சென்னை கவிக்கோ அரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பங்கேற்ற கனிமொழி எம்.பி நூலை வெளியிட்டதுடன், சிறப்புரை நிகழ்த்தினார். ஜி.எஸ்.டி., முத்தலாக் என எல்லா திசைகளிலும் மக்களை ஒடுக்கும், அச்சுறுத்தும் நிகழ்வுகள் நடைபெறுவதாக குறிப்பிட்ட கனிமொழி, இவைகள் குறித்து பேசாததன் விளைவாக நமது மௌனமே நம்மை அழித்துவிடும் என்ற நிலைக்கு நாம் தள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்தார். தமிழன் ரௌத்திரம் பழகுவதை நிறுத்திக் கொண்டதால் தான் இந்த நிலையில் தமிழன் உள்ளதாகக் கூறிய கனிமொழி, 10 ஆண்டுகளுக்கு முன்பு ஒருவர் பெரியாரை செருப்பால் அடிப்பேன் என்றுக் கூறியதை நாம் பொறுத்துக் கொண்டு ரௌத்திரம் பழகாததன் விளைவை தான் தற்போது அனுபவித்து வருவதாக அதே நூல் வெளியீட்டு விழாவில் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டதை நினைவுக்கூர்ந்து அது சரியான கருத்து என்றார். சுயமரியாதையை இழந்துவிட்டு ஏதுமில்லை என்றுக் கூறிய கனிமொழி, நம் வாழ்க்கையில் வெள்ளை என்ற ஒளி உருவாக வேண்டும் எனில் நாம் கருப்பில் இருந்துதான் ஆரம்பிக்க வேண்டும் என்றும், பெரியார் என்ற கருப்புச்சட்டை இல்லாமல் விடியல் இல்லை என்று குறிப்பிட்டார்.

ஆண்டாள் எந்த சாதியில் பிறந்திருந்தால் என்ன?: ஜாதி என்ற சொல்லையே அழிக்க வேண்டும், ஜாதியே இல்லாத நிலையை உருவாக்குவதே திராவிட அரசியலின் அடிநாதம் என்றுக் கூறிய கனிமொழி, ஜாதியைக் கொண்டு ஒருவன் ஒருவரை ஒடுக்கினால் அதையே ஆயுதமாக தூக்க வேண்டியது அவசியமாகிறது என்றும் குறிப்பிட்டார். நாம் தூக்க வேண்டிய ஆயுதம் எதுவென தீர்மானிப்பது எதிரியே என்றும் கனிமொழி தெரிவித்தார். ஜாதி இல்லை என்று எல்லோரும் சொல்கிறோம், எந்த ஜாதியில் பிறந்தவரும் என்னை வந்து சேரலாம் என்று கண்ணபிரான் கூறுவதாக கீதை சொல்கிறது எனில், ஆண்டாள் எந்த சாதியில் பிறந்திருந்தால் என்ன? ஆண்டாள் பிறப்பால் தலித்தாக இருந்திருக்கலாம், எந்த சாதியாகவும் இருந்திருக்கலாம் எதுவாய் இருந்தால் என்ன? அதில் என்ன பிரச்சனை எனவும் கனிமொழி குறிப்பிட்டார். இப்படிப்பட்ட விவாதங்களை நிகழ்த்தவில்லை எனில், பயந்திருப்போம் எனில், நிச்சயமாக தமிழினம் சுயமரியாதை அற்ற இனமாக, அடையாளம் அற்ற இனமாக, எதையெல்லாம் போராடி சாதித்தோமோ அதையெல்லாம் இழந்துவிடும் இனமாக மாறிவிடும் சூழல் நிலவுவதாக கனிமொழி தெரிவித்தார்.

கடவுளை எதிர்த்து பேசிப்பேசி தான் கருணாநிதிக்கு பேசமுடியாமல் போய் விட்டதாக சிலர் பேசுவதாக வேதனை தெரிவித்த கனிமொழி: கடவுளை எதிர்த்து பேசிப்பேசி தான் கருணாநிதிக்கு பேசமுடியாமல் போய் விட்டதாக சிலர் பேசுவதாக வேதனை தெரிவித்த கனிமொழி, உடல்நலம் சரியில்லாதபோது உதவியாளர் வைத்துவிடும் விபூதியைக் கூட அழித்துவிடுபவர் கருணாநிதி என்று தெரிவித்தார். தனது தாயார் கோவிலுக்குச் செல்வது குறித்து சிலர் கேட்பதாகவும், தனது தாயார் கோவிலுக்கு செல்வதற்கான உரிமைக்காகவும் தான் போராடுவதாக தெரிவித்தார்[1]. நிகழ்வின் போது தனது வீட்டில் நடைபெற்ற சம்பவம் ஒன்றைக் குறிப்பிட்டு கனிமொழி பேசினார். “இப்போதும் இருவரும் (கருணாநிதி, கனிமொழி) கடவுளை மறுப்பது ஏன்?” என தனது தாயார் கேட்டதாகவும், “தலைவர் (கருணாநிதி) தற்போது (கடவுள் விடயத்தில்) தனது கருத்தை சிறிது மாற்றியிருப்பார்” என்று தாயார் குறிப்பிட்டதாகவும், இது தொடர்பாக கருணாநிதியிடம் “கடவுள் இருக்கிறாரா?” என கேட்டபோது, வாய் பேசமுடியாத நிலையில், “இல்லை” என கருணாநிதி தலையசைத்ததாகவும் கனிமொழி குறிப்பிட்டார்[2]. தனது வீட்டில் நிகழ்ந்த சம்பவத்தை நினைவுக்கூர்ந்த கனிமொழி, கருணாநிதியின் மவுனம் கூட நாத்திகம் பேசும் என்று குறிப்பிட்டார்[3]. மேலும், எதை வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள், திமுக நாத்திகம் பேசுவதை நிறுத்தாது என்றும் அவர் உறுதிப்பட தெரிவித்தார்[4].
15-01-2018 கனிமொழி பேச்சு: ஆரூர் புதியவனின்[5] புத்தக வெளியீட்டின் போது, இவ்வாறு கனிமொழி பேசியது பல உண்மைகளை எடுத்துக் காட்டுகிறது. ராம கோபாலன், “இவர்கள் எல்லோருமே, தங்களது பெண்டாட்டிகளை வைத்து சாமி கும்பிடுகின்ற கூட்டம்”, என்று பேசியதுண்டு. அதை கனிமொழி இப்பொழுது ஒப்புக் கொண்டுள்ளார் என்றாகிறது. அம்மாவின் “சாமி கும்பிடுகின்ற உரிமைக்கு”. இவர் என்ன போராடுவது? அப்பொழுது அவ்வுரிமையை யார் பறித்தது என்ற கேள்வி எழுகின்றது. நாத்திக துணைவன் அவ்வாறு தடுத்துக் கொண்டிருந்தால், அது அவனது ஆணாதிக்கத்தைத் தான் எடுத்துக் காட்டுகிறது. 93 வயதாகியும் துணைவியை ஆட்டிப் படைக்கிறார் என்றால், அதை மகள் எடுத்துக் கஆட்டவேண்டும். மாறாக அவரது உரிமைக்குப் போராடுகிறேன் என்றால், தந்தையை எதிர்த்தாப் போராடப் போகிறார்?

“கடவுளை எதிர்த்து பேசிப்பேசி தான் கருணாநிதிக்கு பேசமுடியாமல் போய் விட்டது”: “கடவுளை எதிர்த்து பேசிப்பேசி தான் கருணாநிதிக்கு பேசமுடியாமல் போய் விட்டதாக சிலர் பேசுவதாக வேதனை தெரிவித்த கனிமொழி, உடல்நலம் சரியில்லாதபோது உதவியாளர் வைத்துவிடும் விபூதியைக் கூட அழித்துவிடுபவர் கருணாநிதி”, என்ற போதும் அவரது மனம், மனசாட்சி உறுத்துவதை அறியலாம். உதவியாளர் விபூதியை வைப்பதற்கு கருணாநிதி ஏன் அனுமதிக்க வேண்டும், பிறகு ஏன் அழிக்க வேண்டும்? அப்படியென்றால், வைத்தால் ஏதோ பலன் கிடைக்கும் அன்ற ஆசை, நப்பாசை உள்ளுக்குள் இருக்கிறது என்றாகிறது. முதல் நாத்திகப் பழமான, கனிக்கு அத்தகைய நம்பிக்கையே இருக்கக் கூடாது ஆயிற்றே? யாரோ சொன்னார்கள் என்றால் பலித்து விடுமா என்ன? அதென்ன சாபமா, செய்வினையா, திருஷ்டியா, ….அதையெல்லாம் நம்ப வேண்டிய அவசியமே இல்லையே? பிறகு, அப்படி நம்பி வருத்தப் படுவது எடைக் காட்டுகிறது? வைத்த விபூதியையேத் துடைத்துப் போடும் அளவிற்கு நாத்திகம்-பகுத்தறிவு ஊறியிருக்கும் போது, இதெல்லாம் ஒரு விசயமா என்ன?

கருணாநிதியின் மவுனம் கூட நாத்திகம் பேசும்: “கடவுள் விடயத்தில் தனது கருத்தை சிறிது மாற்றியிருப்பார்” என்று தாயார் குறிப்பிட்டதாகவும், இது தொடர்பாக கருணாநிதியிடம் “கடவுள் இருக்கிறாரா?” என கேட்டபோது, வாய் பேசமுடியாத நிலையில், “இல்லை” என கருணாநிதி தலையசைத்ததாகவும் கனிமொழி குறிப்பிட்டார்[6]. தனது வீட்டில் நிகழ்ந்த சம்பவத்தை நினைவுக்கூர்ந்த கனிமொழி, கருணாநிதியின் மவுனம் கூட நாத்திகம் பேசும் என்று கனிமொழி குறிப்பிட்டார்[7]. அதாவது ராஜாத்தி அம்மாள் கோவில்-கோவிலாக சென்று, கும்பிட்டு, அர்ச்சனை செய்து, பிரசாதம் வாங்கி வருவார், புருடன் சாப்பிடுவான் என்று, ஆனால் சாப்பிட்டப் பட்டதா-இல்லையா என்பது ரகசியம். பிறகு, சாய் பாபா வந்தபோது ஏன் காலில் விழுந்து கும்பிட வேண்டும்? எப்படியோ கனிமொழியின் மனம், மனசாட்சி உறுத்த ஆரம்பித்து விட்டது. அதனால், இந்த அளவுக்கு விளக்கம் கொடுக்க வேண்டியதாக உள்ளது போலும்.
© வேதபிரகாஷ்
16-01-2018

[1] நியூஸ்..7.செய்தி, “எதை வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள், திமுக நாத்திகம் பேசுவதை நிறுத்தாது!” : கனிமொழி, January 15, 2018. Last Modified திங்கள், 15 ஜனவரி 2018 (23:00 IST).
[2] http://ns7.tv/ta/tamil-news/tamilnadu/15/1/2018/kanimozhi-mp-karunanidhi-athist-philosaphy
[3] தமிழ்.வெப்.துனியா, என்ன ஆனாலும் திமுக நாத்திகம் பேசுவதை நிறுத்தாது: கனிமொழி, January 15, 2018.
[4] http://tamil.webdunia.com/article/regional-tamil-news/we-don-t-stop-atheism-speech-says-kanimozhi-118011500020_1.html
[5] பேராசிரியர் முனைவர் ஹாஜா கனி, சென்னை மேடவாக்கம் காயிதேமில்லத் கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவர், தமுமுக வின் மாநிலச் செயலாளர், மக்கள் உரிமை வார இதழின் இணை ஆசிரியர்.
[6] http://ns7.tv/ta/tamil-news/tamilnadu/15/1/2018/kanimozhi-mp-karunanidhi-athist-philosaphy
[7] தமிழ்.வெப்.துனியா, என்ன ஆனாலும் திமுக நாத்திகம் பேசுவதை நிறுத்தாது: கனிமொழி, January 15, 2018.
குறிச்சொற்கள்:அரசியல், ஆண்டாள், இந்தியா, இந்து தமிழன், இந்து விரோதத் தமிழன், இந்து-விரோத நாத்திகம், இஸ்லாம், கனிமொழி, கருணாநிதி, டிவி, தன்னம்பிக்கை, தமிழ், தமிழ் இந்து, திராவிட சித்தாந்திகள், திராவிட பேச்சாளர்கள், திராவிடம், திராவிடர், திராவிடர் கழகம், திருக்குறள், நாத்திக மாநாடு, நாத்திகத் தமிழன், நாத்திகம், போலி நாத்திகம், மருத்துவம், மாடு, முட்ட வந்தது, ஸ்டாலின், ஸ்பெக்ட்ரம்
அறிவு, ஆரிய இனம், ஆரியக் கலாச்சாரம், ஆரியம், ஆரியர், ஆர்.எஸ்.எஸ், இந்தி, இந்தி எதிர்ப்பு, இந்து, இந்து தமிழன், இந்து விரோதத் தமிழன், இந்து-தூஷணம், இந்து-வெறுப்பு, இந்துவிரோத நாத்திகம், இந்துவிரோதம், இனம், இனவெறி, கடவுள், கனிமொழி, கருணாநிதி, கருத்து, கருப்பு சட்டை, சமத்துவம், சுயமரியாதை, தாலி, தி.மு.க, திக, திகவின் முகமூடி கிழிகிறது, திரவிடம், திராவிட இனம், திராவிட இயக்கம், திராவிட சித்தாந்தம், திராவிட நாத்திகம், திராவிடக் கலாச்சாரம், திராவிடத் தமிழன், திராவிடன், திராவிடம், திராவிடர், துர்கா, தேவதாசி, நாத்திகத் தமிழன், நாத்திகம், பகுத்தறிவு, பசு, பாஜக, பார்ப்பன எதிர்ப்பு, பார்ப்பன துவேஷம், பார்ப்பனர், பார்ப்பனீயம், பிஜேபி, பெரியாரிஸம், பெரியாரிஸ்ட், பெரியார், மாடு, மாடு முட்ட, மாடு முட்ட வந்தது, மாட்டுக்கறி தின்பது, மாட்டுப் பொங்கல், மாட்டுப் பொங்கல் கொண்டாடுவது, வீரமணி, ஹிந்து இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »
ஜனவரி 16, 2018
ஸ்டாலினை பசு முட்ட வந்ததும், மாட்டுக்கறிக்கு ஆதரித்ததும், குங்குமத்தை அழித்ததும் தமிழ்நாட்டவர் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் – இப்பொழுது சனியைப் பற்றி பேசும் ஸ்டாலின் (2)

போகி திருநாளும், பிடித்துள்ள சனியும்: ஸ்டாலின் பேசியது, “இன்று போகி திருநாள். போகி என்றால் பழையன கழிதலும், புதிய புகுதலும் என்ற நிலையில், நம்மை பிடித்துள்ள சனி இன்றோடு ஒழிந்திட வேண்டும். வீட்டிலிருக்கும் பழையனவற்றை மட்டுமல்ல, இந்த நாட்டிலிருக்கும் பழையனவற்றையும் அப்புறப்படுத்த வேண்டிய கட்டாயம் நமக்கு உருவாகியிருக்கிறது[1]. அந்தளவுக்கு, ஏறக்குறைய 20 ஆண்டுகள் பின்தங்கி, மோசமான நிலையில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கும் தமிழகத்திற்கு, நாளைய தினம் தை பிறக்கின்ற நேரத்தில் ஒரு நல்ல விடிவுகாலம் பிறக்கும் என்ற நம்பிக்கை நமக்கெல்லாம் உருவாகி இருக்கிறது. எனவே, நம்முடைய தமிழகத்தை காப்பாற்ற, தமிழகத்துக்கு ஒரு விடிவுகாலத்தை உருவாக்கிட, தமிழக மக்களுக்குத் தேவையான திட்டங்களை உருவாக்கிட வேண்டுமென்று, இந்த தமிழ்ப் புத்தாண்டு மற்றும் பொங்கல் விழாவில் உறுதியெடுத்துக் கொள்ள வேண்டும். அந்த நம்பிக்கையோடு உங்கள் அனைவருக்கும் தமிழ்ப் புத்தாண்டும் மற்றும் பொங்கல் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்,” என்று கூறினார்[2]. இனி தளபதியை மாடு முட்ட வந்த விவகாரத்தை கவனிப்போம்.

மாடு முட்ட வந்த சமாசாரம்: வேடிக்கை என்னவென்றால், தளபதியை மாடு முட்ட வந்த விவகாரத்தை “தினமலர்” மட்டுமே வெளியிட்டதாகத் தெரிகிறது. ஒரு வீடியூ 15-01-2018 காலையில் தேடியபோது காணப்பட்டது. மதியம் காணப்படவில்லை. கொளத்துாரில், ஸ்டாலினை மாடு முட்ட வந்ததால், மாட்டிற்காக செய்யவிருந்த பூஜையை, ஸ்டாலின் ரத்து செய்தார்.தமிழக எதிர்க்கட்சி தலைவரும், தி.மு.க., செயல் தலைவருமான ஸ்டாலினின் சொந்த தொகுதி கொளத்துார். இந்த தொகுதிக்கு உட்பட்ட, பெரவள்ளூர், பெரியார் நகர் பகுதிக்கு வந்தார். கொளத்துார் வீதிநகர் பகுதியில், நடந்த பொங்கல் விழாவிற்கு நலத்திட்ட உதவிகள் வழங்க ஸ்டாலின், 9:00 மணிக்கே வரவிருப்பதாக தெரிவிக்கப்பட்டது.ஆனால், 12:௦௦ மணிக்கு வந்த ஸ்டாலின், பொங்கல் விழா நடைபெறும் இடத்தில் இருந்த பசுமாட்டிற்கு மாலை போட சென்றார்.ஆனால், அந்த மாடு முட்ட வரவே, கோபமடைந்த ஸ்டாலின், மாலையை கட்சி தொண்டர் ஒருவரிடம் கொடுத்து மாட்டிற்கு போடச் சொன்னார்[3]. மேலும், பசு மாட்டிற்கு செய்யவிருந்த பூஜையையும் வேண்டாம் என்று கூறி மறுத்து விட்டார்[4]. சென்ற ஜூன் 2017ல் மாட்டுக்கறியை ஆதரித்துப் பேசியதை நினைவு கொள்ளலாம்[5]. இப்படி இரட்டை வேடும் போடும் இவர், பொங்கல் வாழ்த்து என்று இணைதளத்தில் படம் போடும் போது, மாட்டை சேர்த்துக் கொள்கிறார்.

மிருகம் போலி நாத்திகனின் முகமூடியைக் கிழித்து விட்டது: ஸ்டாலினை மாடு முட்ட வந்தது, மாலை போட மறுத்தது, போலி நாத்திகத்தை தோலுரித்திக் காட்டுகிறது. குங்குமத்தை அழித்த ஸ்டாலினை மாடு முட்ட வந்தது, திராவிட நாத்திகத்திற்கு சரியான அடி! பகுத்தறிவால் எந்த விளக்கமும் கொடுக்க முடியாது! முன்னர் கருணாநிதி, திமுக தொண்டர் குங்குமத்துடன் வந்தபோது, நக்கலாக, “என்ன நெற்றியில் ரத்தமா?”, என்ற கேட்ட வயதான தந்தை கருணாநிதியின் வக்கிரம் தான், தனயன், நெற்றியில் இட்ட குங்குமத்தை அழித்தபோது புலப்பட்டது. பிறகு தனது தாயார், துணைவியார், சகோதரி என்று எல்லோரும் ஏன் குங்குமம் வைக்கின்றனர், அவற்றை அழிக்காமல் இருக்கும் இவரது யோக்கியதை என்ன என்பதனை கவனிக்க வேண்டும். ஸ்டாலின் – மாடு முட்ட வந்தால் வீரத்தமிழா, கோபம் வரக்கூடாது, கொம்புகளைப் பிடித்து அடலேறு போல அடக்கி வீரத்தைக் காட்ட வேண்டும்! ஜல்லைக் கட்டுக்கு வீரம் பேசிய இந்த தளபதி கோழை போல ஓடி போனது, கேவலமானது. வயதாகி விட்டது என்று சொல்லலாம், அப்பொழுது, வயதிற்கு வேண்டிய நாகரிகம் அப்பனுக்கும், மகனுக்கும் இல்லாத்தும் கேவலம் தான். நம்பிக்கையில்லாத ஸ்டாலின் சனி பற்றி பேசுவது, அவரது பொலித்தனத்தின் உச்சம்! பிறகு ராகு-கேது எல்லாம் வரும் போல!

போகி பண்டிகையில், பழையது கலைந்து, புதியதை உருவாக்குவோம். தமிழகத்தை சனிபிடித்து ஆட்சி செய்கிறது.தை பிறந்தால் வழிபிறக்கும், பெரியாரா இப்படி சொல்லிக் கொடுத்தார்? பண்டிகைகளைக் கேவலப்படுத்திய ஈவேரா மற்றும் திக முதலியவற்றை தமிழக மக்கள் அறிந்து, புரிந்து கொண்டு விட்டனர். ஹேமமாலினியையும், ஸ்டாலினையும் மாடு முட்ட வந்ததில் உள்ள ஒற்றுமை, வேற்றுமை என்ன என்று பார்த்தால், முன்னவர் பிராமண்ராக இருந்தாலும், தான் கடமையை செய்யும் போது முட்ட வந்தது. ஆனால், இங்கோ, பொங்கல் வைத்து, பசுக்கு மாலை போட வந்த போது முட்டப் பார்த்தது. ஆக, அந்த ஜீவனுக்கு, இந்த மனிதனின் போலித் தனம் தெரிந்திருக்கிறது.

இந்து மதம் மட்டுமல்ல எந்த மதத்தை இழிவுபடுத்தினாலும் தி.மு.க. அதை ஏற்காது: வைரமுத்து-ராஜா விவகாரத்தில், ஸ்டாலின் கூறிய இரு வரியை பெரியதாக எடுத்துக் கொள்ள முடியாது[6]. இந்து மதம் மட்டுமல்ல எந்த மதத்தை இழிவுபடுத்தினாலும் தி.மு.க. அதை ஏற்காது ஊக்கப்படுத்தாது, உடன்படாது. என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்[7]. ஆனால், அவர் அவ்வாறு செய்துள்ளாரா என்று பார்த்தால் ஒன்றும் கிடையாது. ஊடகங்களும் பதிலுக்கு எந்த கேள்வியையும் கேட்கவில்லை[8]. திமுக உடன்படாது என்றால், தான் உடன் படுவேன், ஊக்குவிப்பேன், ஏற்பேன் என்றாகிறது[9]. இது பேட்டியில் ஏதோ குறிப்பிட்டிருக்கிறார், அவ்வளவுதான், ஏனெனில், இதுவரை, இந்து மதம் தாக்கப் பட்டபோது, இவர் வாயை மூடிக் கொண்டுதான் இருந்தார். இப்பொழுது கூட கனிமொழி பேசியதற்கு ஒன்றையும் சொல்லக் காணோம். அதென்ன அப்பேச்சு இழிவு படுத்தியதாக ஆகாதா? அவ்வளவு ஏன், இவரது தந்தை பேசியது எல்லாம் ஞாபகப் படுத்திக் கொண்டால், இவரது மனதுக்கு, மனசாட்சிக்குத் தெரியாமலா போய் விட்டது? வைத்த குங்குனத்தை அழித்தபோது, இவர் என்ன செய்ததாக அர்த்தம்? ஆகவே, இந்த ஒரு வரியை வைத்து, இவரது குணத்தை ஒன்றும் எடை போட முடியாது. மேலும், ஊடகங்கள், பசு முட்ட வந்ததை மறைத்ததிலிருந்தே, அவகளது வழக்கமான, செக்யூலரிஸத்தைக் காட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

பொங்கல் அன்று கனிமொழி வீட்டிற்கு சென்ற கருணாநிதி: ஆழ்வார்பேட்டை இல்லத்தில் திமுக செயல்தலைவர் ஸ்டாலினை சந்தித்து கனிமொழி பொங்கல் வாழ்த்து தெரிவித்தார்[10]. இதேபோல் திமுக தொண்டர்களும் ஸ்டாலினை நேரில் சந்தித்து தங்களது பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்தனர். தமிழக மக்களுக்கு கனி மொழி பொங்கல் வாழ்த்து தெரிவித்து உள்ளார்[11]. இந்த ஆண்டாவது தமிழக மக்களுக்கு விடிவுகாலம் பிறக்க வேண்டும் என கூறி உள்ளார். வழக்கமாக பொங்கல் அன்று கருணாநிதி வீடு களை கட்டும். இந்த ஆண்டும், சி.ஐ.டி காலணி வீட்டில் தடபுடல் ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. பொங்கல் அன்று கோபாலபுரம் வீட்டில் தொண்டர்களைப் பார்த்து கையசைத்து பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார்.

கோபாலபுரம் வீட்டில் இருக்கும் கருணாநிதி, பொங்கல் அன்று தொண்டர்களைச் சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. தனித்தனியாக தொண்டர்களை பார்க்க மருத்துவர்கள் அனுமதி தரவில்லை. நோய் தொற்று ஏற்பட்டு விடக்கூடாது என்று தடை போட்டுவிட்டனர். இந்நிலையில், 15 மாதங்களுக்கு பிறகு சென்னை சி.ஐ.டி காலணி வீட்டிற்கு ஜனவரி 15-ம் தேதி இரவு 9 மணிக்கு சென்றார் கருணாநிதி[12]. வீட்டுக்கு வந்த கருணாநிதியை அவரது மகள் கனிமொழி வரவேற்றார். ராஜாத்தி அம்மாள், அரவிந்தன் ஆகியோர் கருணாநிதியை வீட்டுக்குள் அழைத்து சென்றனர். ”வீட்டுக்கு அப்பா வந்தது மகிழ்சி அளிக்கிறது’ என்றார் கனிமொழி[13]. ஆக அப்பனை, அண்னனை மகள் சந்தித்தாள், என்று சொல்லாமல், ஏதோ ஒரு தலைவர், இன்னொருவரஇப் பார்த்தார் என்று செய்தி போட்டிருப்பது, நிருபர்கள், செய்தியாளர்களின் அடிமைத் தனத்தைக் காட்டுகிறது. “பொங்கல் இனாம்” கனமாக இருந்தது போலும். இதை ஏன் குறிப்பிட்டுகின்றேன் என்றால், மாடு முட்டிய விசயத்தை மறைத்ததால், அதனைப் பற்றி, பகுத்தறிவோடு செய்தி வெளியிட்டு விவாதிக்காமல் இருந்ததால் தான்.
© வேதபிரகாஷ்
16-01-2018

[1] பாலிமர்.நியூஸ், கொளத்தூர் தொகுதி பொங்கல் விழாக்களில் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு, 13-ஜன-2018 12:43
[2]https://www.polimernews.com/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D/
[3] தினமலர், முட்ட வந்தது பசு மாடு பூஜையை நிராகரித்த ஸ்டாலின், Added : ஜன 14, 2018 04:39.
[4] http://www.dinamalar.com/news_detail.asp?id=1938542
[5] http://www.timesnownews.com/india/video/beef-ban-dmk-protest-mk-stalin-iit-madras-assault/62078
[6] பாலிமர்.நியூஸ், எந்த மதத்தை இழிவுபடுத்தினாலும் தி.மு.க. அதை ஏற்காது – மு.க.ஸ்டாலின், 13-ஜன-2018 15:04
[7]https://www.polimernews.com/%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5/
[8] தி.இந்து, அதிமுக ஆட்சி அகலவேண்ண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு: ஸ்டா;இன் பேட்டி, Published : 13 Jan 2018 15:50 IST; Updated : 13 Jan 2018 15:50 IST
[9] http://tamil.thehindu.com/tamilnadu/article22436018.ece
[10] தினத்தந்தி, தமிழக மக்களுக்கு கனிமொழி பொங்கல் வாழ்த்து தெரிவித்தார், ஜனவரி 14, 2018, 10:23 AM
[11] http://www.dailythanthi.com/News/TopNews/2018/01/14102338/Kanimozhi-for-Tamil-people-Pongal-greeted.vpf
[12] விகடன், கனிமொழி வீட்டில் கருணாநிதி….!, எஸ். முத்துகிருஷ்ணன், Posted Date : 01:15 (16/01/2018); Last updated : 01:15 (16/01/2018)
[13] https://www.vikatan.com/news/tamilnadu/113646-karunanidhi-went-to-kanimozhis-cit-colony-house-after-15-months.html – vuukle_div
குறிச்சொற்கள்:அரசியல், அழித்தல், இந்து-விரோத நாத்திகம், கனிமொழி, கருணாநிதி, குங்குமம், தன்னம்பிக்கை, தமிழ், திமுக, திராவிட சித்தாந்திகள், திராவிட பேச்சாளர்கள், திராவிடம், திராவிடர், திராவிடர் கழகம், நாத்திக மாநாடு, நாத்திகத் தமிழன், நாத்திகம், நெற்றியில் குங்குமம், போலி நாத்திகம், வைத்தல், ஸ்டாலின், ஸ்பெக்ட்ரம்
ஆரிய இனம், ஆரியம், ஆரியர், ஆர்.எஸ்.எஸ், இந்து, இந்து தமிழன், இந்து-தூஷணம், இந்து-வெறுப்பு, இந்துவிரோத நாத்திகம், இந்துவிரோதம், இனம், இனவெறி, கடவுள், கனிமொழி, கருணாநிதி, கருத்து, கருப்பு சட்டை, குங்குமம் அழித்தல், குங்குமம் வைத்தல், சுபவீரப்பாண்டியன், சுயமரியாதை, தமிழ், தமிழ் தந்தை, தாலி, தி.மு.க, திக, திரவிடம், திராவிட இனம், திராவிட இயக்கம், திராவிட சித்தாந்தம், திராவிட நாத்திகம், திராவிடத் தமிழன், திராவிடன், திராவிடம், திராவிடர், நெற்றியில் குங்குமம், பகுத்தறிவு, பசு, பாஜக, பார்ப்பன எதிர்ப்பு, பார்ப்பனர், பார்ப்பனீயம், பிஜேபி, பெரியாரிஸம், பெரியாரிஸ்ட், பெரியார், மணியம்மை, மதசார்பற்றத் தீவிரவாதம், மதசார்பின்மை, மாடு, மாடு முட்ட, மாடு முட்ட வந்தது, மாட்டுக்கறி, மாட்டுக்கறி தின்பது, மாட்டுப் பொங்கல், மாட்டுப் பொங்கல் கொண்டாடுவது, Uncategorized இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »
ஓகஸ்ட் 10, 2016
குருகுலம், குலக்கல்வி அறிமுகப்படுத்தப் படப்போகிறது – புதிய கல்வித் திட்டமும், கனிமொழியும், திராவிட கட்சிகளும்!
குருகுலம், குலக்கல்வி அறிமுகப்படுத்தப் படப்போகிறது[1]: விடுதலை தொடர்கிறது, “புதிய கல்வித் திட்டத்தில் பள்ளிகள், பக்கத்தில் உள்ள ஆசிரமங்களுடன் இணைக்கப்படும் என்று சொல்லப் பட்டுள்ளது. அதற்கு முன்னோடியாகத்தான் சென்னை இந்து ஆன்மிகக் கண்காட்சியில் ஆசிரியர்களுக்குப் பாத பூஜை செய்யும் ஏற்பாடாகும்[2]. ஒரு காலத்தில் குருகுல வாசம் என்ற முறை இருந்தது, மாணவர்கள் பகலில் எல்லாம் பிச்சை எடுத்துக்கொண்டு வந்த பொருள்களைக் கொண்டு, உண்டு உறைந்த காலகட்டம் அது. அத்தகைய காலம் அல்ல இது! அந்தக் கால கல்வி என்பதும் இன்றைக்குக் கவைக்குதவாது – காலாவதியான ஒன்றாகும். மீண்டும் அந்தத் திசை நோக்கி மாணவர்களை, மத்தியில் உள்ள பி.ஜே.பி. ஆட்சி அழைத்துச் செல்லுகிறதோ என்ற அய்யமும், அச்சமும் ஏற்படுகின்றன. குருகுலம் என்றாலே நமக்கு சேரன்மாதேவி குருகுலம்தான் நினைவிற்கு வந்து தொலைக்கிறது. பார்ப்பனர்களுக்கு ஒரு வகையான தரமான உணவு – பார்ப்பனர் அல்லாத மாணவர்களுக்கு மட்டமான உணவு பரிமாறப்படவில்லையா? குடிதண்ணீர்கூட தனித்தனியாக வைக்கப்பட்டு இருந்ததே! அந்தப் பேதா பேதத்தை ஒழித்துக் கட்டியவர்கள் தந்தை பெரியார் அவர்களும், டாக்டர் பி. வரதராஜூலு (நாயுடு) அவர்களுமேயாவார்கள். காங்கிரசை விட்டு தந்தை பெரியார் அவர்கள் வெளியேறு வதற்கான காரணங்களுள் இதுவும் ஒன்றே!”.
இந்துத்துவா சக்திகள் தறிகெட்டு நிர்வாண ஆட்டம் போட ஆரம்பித்துவிட்டன[3]: விடுதலை தொடர்கிறது, “மத்தியில் பி.ஜே.பி. , ஆட்சிக்கு வந்தநாள் முதற்கொண்டு இந்துத்துவா சக்திகள் தறிகெட்டு நிர்வாண ஆட்டம் போட ஆரம்பித்துவிட்டன. மீண்டும் நாட்டை மனுதர்மப் பிற்போக்கு உலகத்திற்கு இழுத்துச் செல்ல முயற்சிக்கின்றன. பிரதமர் உள்பட மத்திய அமைச்சர்கள் ஆர்.எஸ்.எஸ். கூட்டும் கூட்டங்களில் பங்கேற்பது கட்டாயம்; அந்தக் கூட்டத்தில், ஆட்சியின் செயல்பாடுகள், நடவடிக்கைகள், திட்டங்கள்பற்றி ஆய்வு செய்யப்படுகின்றன. ஆட்சியின் செயல்பாடுகள் எப்படி இருக்கவேண்டும் என்பதை ஆர்.எஸ்.எஸின் சர் சங் சாலக் (தலைவர்) அறி வுறுத்துகிறார். அந்த அடிப்படையில்தான் புதிய கல்விக் கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது. அந்தத் திட்டம் செயல்பாட்டுக்கு வருமுன் சென்னையில் ஒரு கல்லூரியில் இந்து – ஆன்மிகக் கண்காட்சி என்ற பெயரில் ஒத்திகை பார்க்கப்பட்டுள்ளதைக் கவனிக்கத் தவறக்கூடாது”.
பாத பூஜை செய்வது – பிற்போக்குத்தனம் அல்லவா?[4]: விடுதலை தொடர்கிறது,”ஒரு பக்கத்தில் விஞ்ஞான மனப்பான்மை வளர்க்கப்பட வேண்டும் என்று இந்திய அரசமைப்புச் சட்டம் (51-ஏ–எச்) வலியுறுத்துகிறது. அது ஒவ்வொரு குடிமகனின் அடிப்படைக் கடமை என்றும் அரசமைப்புச் சட்டம் கட்டாயப்படுத்துகிறது. இந்திய அரசமைப்புச் சட்டத்திற்குச் சத்தியப் பிரமாணம் செய்துகொண்டு அமைச்சர் நாற்காலியில் அமர்ந்தவர்கள் அந்த அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கோட்பாட்டைக் காலில் போட்டு மிதிக்கலாமா? பாத பூஜை செய்வது – பிற்போக்குத்தனம் அல்லவா? அதுவும் காலைக் கழுவுவது அசுத்தமான ஆரோக்கியமற்ற அஞ்ஞான செயல்பாடு அல்லவா! மாணவர்களுக்கு நோய்ப் பரவும் ஆபத்தில்லை என்று அறுதியிட்டுதான் கூற முடியுமா? இதில் மகிழ்ச்சிக்குரியது, பாராட்டக் கூடியது என்னவென்றால், மாநிலங்களவையில் தி.மு.க. உறுப்பினர் கனிமொழி ஆற்றிய உரையை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய செயலாளர் தோழர் து.ராஜா அவர்களும், மத்திய உணவுத் துறை அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் அவர்களும், அய்க்கிய ஜனதா தளத் தலைவர் சரத் யாதவ் அவர்களும் வரவேற்று ஆதரவு தெரிவித்ததுதான்”.
சென்னையில் நடைபெற்ற இந்து ஆன்மிகக் கண்காட்சியில் அரங்கேற்றப்பட்ட அத்துமீறல்கள்[5]: விடுதலை தொடர்கிறது, “இதுபோன்ற பொதுக் கொள்கைகளில் கட்சிகளைக் கடந்து ஒன்று சேர்ந்து நாடாளுமன்றத்தில் குரல் கொடுக்கும் மரபு தோற்றுவிக்கப்பட்டால், ஆளும் கட்சியும் சட்ட விரோத, மதச் சார்புக் காரியங்களைச் செய்யத் தயங்குமே! சென்னையில் நடைபெற்ற இந்து ஆன்மிகக் கண்காட்சியில் அரங்கேற்றப்பட்ட அத்துமீறல்கள், நடவடிக்கைகள் விசாரிக்கப் படவேண்டும். இவ்வளவுப் பிரம்மாண்டமாக ஏற்பாடுகளைச் செய்வதற்கு நிதி ஆதாயம் எங்கிருந்து வருகிறது என்பதும் கண்டுபிடிக்கப்பட வேண்டும். கறுப்புப் பணக்காரத்தன்மையின் வடிவமான கார்ப்பரேட் சாமியாரான ராம்தேவ்களை உரிய முறையில் விசாரித்தால், பல அதிர்ச்சியூட்டக்கூடிய தகவல்கள் வெளிவரக்கூடும். பக்தி – இப்பொழுதெல்லாம் கார்ப்பரேட் நிறுவனங்களின் கைகளுக்குள் சென்றுவிட்டதே!”.
தமிழிசை கனிமொழி பேச்சுக்கு கண்டனம்[6]: டெல்லியில் இருந்து சென்னை திரும்பிய தமிழக பா.ஜனதா தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது[7]: “… பாராளுமன்றத்தில் சகோதரி கனிமொழி இந்து மதத்தில் குருவிற்கு பாத பூஜை செய்வது கூட இந்துத்துவா திணிப்பு என்கிறார்[8]. இவர்கள் போலி மதச்சார்பின்மை பற்றி பேசுகிறார்கள்[9]. நல்ல பழக்கங்கள் கூட தவறாக சித்தரிக்கப்படுகிறது[10]. இது கண்டனத்துக்குரியது. ஒவ்வொரு மதத்துக்கும் ஒவ்வொரு பழக்க வழக்கம் உள்ளது. பெரியவர்கள், குருவுக்கு மரியாதை கொடுக்க வேண்டும்[11]. இதற்கு மாணவர்கள் சமூகம் சரியாக வழி நடத்தப்படவில்லை. எல்லாமே தவறு என்பது தவறு. நான் மத்திய மந்திரி பிரகாஷ் ஜவ்டேகரிடம் புதிய கல்வி கொள்கைக்கு எதிராக தமிழகத்தில் போராட்டம் நடப்பது பற்றி கூறினேன். அதற்கு அவர் புதிய கல்வி கொள்கை இன்னும் முழுவடிவம் பெறவில்லை. வரைவு திட்டம்தான் உள்ளது. ஆலோசனையும் பெறப்பட்டுள்ளது. செப்டம்பர் 15 வரை கருத்து தெரிவிக்க கால அவகாசம் உள்ளது. நிறைவேற்றப்படாத திட்டத்துக்கு தமிழகத்தில் ஏன் போராட்டம் நடத்துகிறார்கள் என்று அவர் கேட்டார்”, இவ்வாறு அவர் கூறினார்.
நாத்திகம், இந்து-எதிர்ப்பு முதலியன தமிழ் சமுதாயத்தை மேன்படுத்த முடியாது: கடந்த 60 ஆண்டு காலம் திராவிடம், தனித்தமிழ், இந்தி-எதிர்ப்பு, பார்ப்பன-எதிர்ப்பு, கோவில்-இடிப்பு, கோவில் சொத்து கொள்ளை, இந்துமத விசயங்களில் தலையிடுவது,….. முதலிய காரியங்கள் தமிழ்நாடு மக்களை விழிப்படைய செய்தது. 1960களிலேயே, இவையெல்லாம் எடுபடாமல் பக்திப்படங்கள் நூறு நாட்களுக்கு மேலாக ஓடி சாதனை படுத்தின. பிறகு, ஆதிபராசக்தி, அம்மா போன்ற பக்தி இயக்கங்கள் வளர்ந்தன. திகவினரே கலந்து கொள்கின்றனர், சபரி மலைக்கும் போய் வர்கின்றனர். படிப்பு, பாடதிட்டம் முதலியவற்றில் பிந்தங்கியதால், தமிழக மாணவர்கள் தாம் பின்தங்கினர். நன்றாகப் படிப்பவர்கள் பற்றி பிரச்சினை இல்லை. ஆனால், மற்றவர்களை ஏமாற்றி படுகுழியில் தள்ளியது இவர்களின் சித்தாந்தம் தான். இங்கும் தங்களது மகன் – மகள், பேரன் – பேத்திகளை ஆங்கில பள்ளி, கான்வென்ட், சிபிசிஇ போன்ற முறைகளில் படிக்க வைத்து அல்லது அயல்நாடுகளுக்கு அனுப்பி வைத்து உயர்ந்து விட்டனர். ஆனால், சாதாரண மக்களின் மகன் – மகள், பேரன் – பேத்திகளை தமிழ் அல்லது போசமான பாடதிட்டங்களில் படிக்க வைத்து தரத்தை குறைத்தனர், அவர்களது வாழ்க்கையினைக் கெடுத்தனர். இந்நிலையில், அவர்கள் பண்புடன், நல்ல குணங்களுடன் வளர, இருக்க பெற்றோரைப் போற்ற வேண்டும் என்று நிகழ்சிகள் இருந்தால், அவற்றை “புதிய கல்வி திட்டத்துடன்” இணைத்து கலாட்டா செய்கின்றனர். இது திராவிடக் கட்சிகளில் போலித்தனம், கையாலாகாதத் தனம், ஏனாற்றுவேலை, சமுதாய சீரழிப்பு போன்ற தீயசக்திகளைத் தான் வெளிப்படுத்துகிறது. இதனால் தான், அவர்கள், இவர்கள் மீதான நம்பிக்கையினையும் இழந்து வருகின்றனர்.
© வேதபிரகாஷ்
10-08-2016
[1] http://viduthalai.in/component/content/article/71-headline/127299-2016-08-06-08-48-32.html
[2] விடுதலை, பாத பூஜையா?, சனி, 06 ஆகஸ்ட் 2016 14:18;
[3] விடுதலை, பாத பூஜையா?, சனி, 06 ஆகஸ்ட் 2016 14:18
[4] http://viduthalai.in/component/content/article/71-headline/127299-2016-08-06-08-48-32.html
[5] விடுதலை, பாத பூஜையா?, சனி, 06 ஆகஸ்ட் 2016 14:18
[6] மாலைமலர், மாணவர்கள் பாத பூஜை செய்த விவகாரம்: கனிமொழி எம்.பி.க்கு டாக்டர் தமிழிசை கண்டனம், பதிவு: ஆகஸ்ட் 06, 2016 12:08; மாற்றம்: ஆகஸ்ட் 06, 2016, 15:29.
[7] http://www.maalaimalar.com/Election/ElectionNews/2016/08/06120836/1031074/Tamilisai-soundararajan-Condemn-Kanimozhi-MP.vpf
[8] நக்கீரன், குருவிற்கு பாத பூஜை செய்வது இந்துத்துவா திணிப்பா? கனிமொழிக்கு தமிழிசை கண்டனம், பதிவு செய்த நாள் : 6, ஆகஸ்ட் 2016 (13:0 IST); மாற்றம் செய்த நாள் :6, ஆகஸ்ட் 2016 (13:0 IST)
[9] http://www.nakkheeran.in/Users/frmNews.aspx?N=170532
[10] Deccan Chronicle., Why so much dissent against draft policy, asks BJP, J V Siva Prasanna Kumar, Published: Aug 9, 2016, 6:04 am IST; Updated: Aug 9, 2016, 6:05 am IST
[11] Dr Tamilisai also took strong exception to the DMK Rajya Sabha MP Kanimozhi for her remarks on certain Hindu practices and said prostrating before teachers and seeking their blessings by touching their feet is an act to show students’ respect for teachers. “There is nothing wrong in this gesture,” she added.
http://www.deccanchronicle.com/nation/politics/090816/why-so-much-dissent-against-draft-policy-asks-bjp.html
குறிச்சொற்கள்:ஆரியக் கலாச்சாரம், ஆரியம், ஆரியர், இந்து கண்காட்சி, கண்காட்சி, கனிமொழி, கருணாநிதி, செச்யூலரிஸம், ஜெயலலிதா, திராவிட பேராளர்கள், திராவிடர், திராவிடர்கள், நாத்திகம், பாத பூஜை, பாதபூஜை, போலி நாத்திகம்
அறிவு, ஆரியம், ஆரியர், ஆர்.எஸ்.எஸ், இந்தி, இந்தி எதிர்ப்பு, இந்தி எதிர்ப்பு போராட்டம், இந்து, இந்து-தூஷணம், இந்து-வெறுப்பு, இந்துவிரோத நாத்திகம், இந்துவிரோதம், கனிமொழி, கருணாநிதி, குரு குலம், குருகுலம், குலக்கல்வி, குலத்தொழில், குழப்பம், செக்யூலரிஸம், ஜெயலலிதா, தாலி, தி.மு.க, திக, திரவிடம், திராவிடத் தமிழன், திராவிடம், திராவிடர், திரிபு, திருமணம், நாத்திகம், பகுத்தறிவு, பாஜக, பாத பூஜை, பாதபூஜை, Uncategorized இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »
ஓகஸ்ட் 10, 2016
இந்து ஆன்மிகக் கண்காட்சி என்ற பெயரில் பள்ளி மாணவர்களைப் பாத பூஜை செய்ய வைப்பது சரியா?
புதிய கல்விக் கொள்கைத் திட்டத்தின் ஒரு பகுதியே இந்த பாதபூஜை எல்லாம் (05-08-2016): இந்து ஆன்மிகக் கண்காட்சி என்ற பெயரில் பள்ளி மாணவர்களைப் பாத பூஜை செய்ய வைப்பது சரியா என்ற வினாவை மாநிலங்களவையில் எழுப்பினார் கவிஞர் கனிமொழி[1]. சென்னையில் இந்து மதக் கண்காட்சியில் 1800-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பங்கேற்றனர். மேலும் பள்ளிக் குழந்தைகள் பூஜை செய்யுமாறு வற்புறுத்தப் பட்டனர். இது புதிய கல்விக் கொள்கைத் திட்டத்தின் ஒரு பகுதியே என்று மாநிலங்களவையில் கழகக் குழுத் தலைவர் கனிமொழி கடும் எதிர்ப்புத் தெரிவித்தார். நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் 05-08-2016 அன்று கனிமொழி புதிய கல்விக் கொள்கையின் ஒரு பகுதியாக இந்து ஆன்மீக மாநாட்டில் மாணவர்களை கட்டாயப்படுத்தி கலந்து கொள்ள வைப்பது தொடர்பாக எதிர்ப்பு தெரிவித்தார்[2]. இதுகுறித்து அவர் பேசியதாவது: “ஆசிரியர்கள் மீது நாங்கள் மிகுந்த மரியாதை வைத்திருக்கிறோம். அவர்கள் மாணவர்களின் எதிர் காலத்தை மேம்படுத்த உழைக்கின்றனர். ஆனால் சென்னையில், இந்து மதவாத அமைப்புகள் ஒரு கண்காட்சியை நடத்துகின்றன. அதில் 1800க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பங்கேற்கின்றனர். அந்நிகழ்ச் சியின் தொகுப்பினை, பள்ளிக் குழந்தைகள் பார்க்குமாறு கட்டாயப் படுத்தப்படுகின்றனர். பூஜைகள் செய்யுமாறு வற்புறுத்தப்படுகின்றனர். இது புதிய கல்விக் கொள்கைத் திட்டத்தின் ஒரு பகுதியே’’, இவ்வாறு அவர் பேசினார்[3]. கனிமொழியின் உரைக்கு இந்திய கம்யூனிஸ்ட்கட்சி உறுப்பினர் டி.ராஜா, மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் மற்றும் காங்கிரஸ் எம்.பி.க்கள்ஆதரவு தெரிவித்தனர்[4].
கனிமொழி ஒரு திரிபு விளக்கம் கொடுக்கும், குழப்பவாதியாகி விட்டார்: ராஜ்ய சபா எம்.பி என்ற நிலையில் ஏதாவது பேசுவது, விசயங்களைத் திசைத் திருப்புவது போன்ற நிலைகளில் தான் கனிமொழி வெளிப்படுகிறார். தமிழகத்தில் கட்ந்த 60 ஆண்டுகள் திராவிட, நாத்திக மற்றும் சமூகவிரோத ஆட்சியில் நடந்து வரும் சீரழிவுகள், பெண்களின் மீதான குற்றங்கள், கல்வி சீரழிவு முதலியவை எல்லோருக்லும் தெரிந்தவை தாம். கருணாநிதி-ஜெயலலிதா என்று ஒருவர் மற்றொருவ்ரைக் குற்றஞ்சாட்டிக் கொண்டே காலங்கழித்துக் கொண்டு வருகின்றனர். கனிமொழி ஏதோ எல்லா விசயங்களையும் தொட்டுவிட வேண்டும் என்று பேசி வருவது நகைப்புரிய செய்தியாகி விட்டது. ஏனெனில், தமிழகத்தில் அவ்வரால் ஒன்றும் செய்து விடமுடியவில்லை. பெற்றோர் வணக்கம், மரியாதை செல்லுத்துவது என்பது நாட்டின் பாரம்பரியம் மட்டுமல்லாது., தனிமனித உரிமையும் ஆகும். கனொமொழிக்கு பிடிக்கிறது-பிடிக்கவில்லை என்பதால், இதைப்பற்றியெல்லாம் பேசுவது அதிகப்பிரசிங்கித்தனம் என்றே சொல்லலாம். இது கமலஹாசன் தமிழ்-சமுதாயத்திற்கு அறிவுரை கூறுவது போல உள்ளது. அறிவுரை சொல்வதற்கு, தனிமனித ஒழுக்கம், கட்டுப்பாடு, கொள்கை பிடிப்பு, குடும்ப-உறவுகள் பேணல், முதலிய விவகாரங்கள் இருக்கின்றன. ஆனால், இவற்றில் இவர்களது நிலை என்ன என்பதனை சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. இதுவும், தனிமனிதனைப் பற்றிய விமர்சனம் இல்லை, ஆனால், இங்கு, இப்பிரச்சினையில் தலையிடுவதால், எடுத்துக் காட்ட வேண்டிய அவசியம் ஏற்படுகிறது.
புதிய கல்வி கொள்கை போர்வையில் இந்து-எதிர்ப்பு: சென்னையில் ஹிந்து ஆன்மிக சேவைக் கண்காட்சியில் தமிழ் ஆசிரியர்களுக்குப் பாத பூஜை செய்த நிகழ்வைக் கண்டித்து மாநிலங்களவையில் திமுக எம்.பி.க்கள் குழுத் தலைவர் கனிமொழி பிரச்னை எழுப்பினார்[5]. இது தொடர்பாக மாநிலங்களவையில் வெள்ளிக்கிழமை 05-08-2016 காலையில் கேள்வி நேரம் தொடங்கியதும் மத்திய மனித வளத் துறை அமைச்சகம் தொடர்புடைய கேள்விகளுக்கு அத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் பதிலளிப்பதாக இருந்தது. இந்நிலையில், கேள்வி நேரம் தொடங்கிய போது இடைமறித்த கனிமொழி, “தினமணி’ நாளிதழில் “தமிழ் ஆசிரியர்களுக்கு மாணவர்கள் பாத பூஜை’ என்ற தலைப்பில் வெளியான புகைப்படத்துடன் கூடிய செய்தியின் பக்கத்தை அவையில் காண்பித்து குரல் எழுப்பினார்[6]. இதையடுத்து, அவரிடம் “என்ன பிரச்னை?’ என்று அவையை வழிநடத்திய மாநிலங்களவை துணைத் தலைவர் பி.ஜே. குரியன் கேட்டார். இந்நிலையில், உரிய நோட்டீஸ் கொடுத்தால் மட்டுமே இந்த விவகாரத்தை பரிசீலிக்க முடியும் என்று குரியன் கூறினார். இதையடுத்து, சில நிமிடங்கள் சலசலப்புக்கு பிறகு அவையில் இயல்பு நிலை திரும்பியது.
புதிய கல்விக் கொள்கை, காவிமயம் என்கின்ற வாதம் முதலியன: அரசியல் நிர்ணய சட்டத்தின் பிரிவு 21-Aன் கீழ் ஆறு முதல் 13 வரையில் உள்ள குழந்தைகளுக்கு இலவச மற்றும் கட்டாயக் கல்வி கொடுக்கப்படவேண்டும் என்றுள்ளது[7]. 1986ல் புதிய கல்விக் கொள்கை திட்டம் அறிமுகப்படுத்தப் பட்டு, 1992ல் மாற்றியமைக்கப் பட்டது[8]. விஞ்ஞானம், தொழிற்நுட்பம், தொழிற்சாலை முதலியவை அதிவேகமாக மாறிவருவதால் அவற்றிற்கேற்றபடி, மறுபடியும் கல்விக் கொள்கையை மாற்றியமைக்க வேண்டிய தேவை ஏற்பட்டது. இதனால் தான் 2016 திட்ட வடிவு சுற்றுக்கு விடப்பட்டது[9]. அதற்கான ஆலோசனைகள் மற்றும் விமர்சனங்களும் வரவேற்கப்படுகின்றன என்று அறிவிக்கப்பட்டது[10]. ஆகவே, இதில் காவிமயம் என்பதெல்லாம் ஒன்றுமே இல்லை, ஏனெனில், 1986-1992 ஆண்டுகளில் இத்திட்டம் காங்கிரஸ் அரசால் கொண்டுவரப்பட்டது. பிஜேபி-என்டிஏ அவற்றை மாற்றாமல் விஞ்ஞானம், தொழிற்நுட்பம், தொழிற்சாலை முதலியவற்றைப் பற்றிய விவரங்களை சேர்த்துள்ளது. இதனால், இவர்கள் அந்த ஆவணத்தைப் படித்து / ஒழுங்காகப் பார்க்கவில்லை என்றே தெரிகிறது. இவ்வாற்று முற்போக்கு என்றெல்லாம் சொல்லிக் கொண்டு, மக்களை பிற்போக்காக மாற்றி, அவர்களது அறிவை மழுங்க செய்வதில் தான் இவர்கள் ஈடுபட்டுள்ளார்கள். கல்வித் திறன், தொழிற் முன்னேற்றம், அனைத்துலக ரீதியில் விஞ்ஞானத்தில் சிறந்து விளங்க வேண்டும் என்ற நிலையில் இருக்கும் போது, தேவையற்ற விசயங்களில் முக்கை நுழைத்துத் திசைத் திருப்பிக் கொண்டிருக்கிறார்கள்.
கனிமொழிக்கு இந்துவிரோத கோஷ்டிகள் ஆதரவு[11]: திக வீரமணியின் விடுதலை, தங்களது திட்டத்தை இவ்வாறு வெளிப்படுத்திக் கொண்டனர், “துணைத் தலைவர் குரியன் பலமுறை குறுக்கிட்டும்கூட, தான் எடுத்துக்கொண்ட கருத்தினை அழகாகப் பதிவு செய்த கவிஞர் கனிமொழி பாராட்டப்பட வேண்டியவர் ஆவார், என்று “விடுதலை” பாராட்டுகிறது[12]. மதச்சார்பற்ற அரசாட்சியில் இயங்கும் பள்ளிகளும், மதச்சார்பற்ற தன்மைக் கொண்டவைதான். அப்படி இருக்கும் பொழுது, ஓர் இந்து மதக் கண்காட்சியில் அந்த ஆசிரியர்களும், மாணவர்களும் பயன்படுத்தப்பட்டது எப்படி? கட்டாயமாக அழைத்து வரப்பட்டது சரியா? அந்த மாணவர்கள் ஆசிரியர்களுக்குப் பாத பூஜை செய்வது என்பது எல்லாம் அசல் காட்டுவிலங்காண்டித்தனம் அல்லவா? ஆசிரியர்களை மதிப்பது என்பது வேறு; அதற்காக பாத பூஜை போன்ற, காலத்துக்கு ஒவ்வாத ஒரு பூர்ஷ்வா தனத்தைப் புதுப்பிக்கவேண்டுமா?”
© வேதபிரகாஷ்
10-08-2016
[1] விடுதலை, சென்னையில் இந்து மத கண்காட்சி பள்ளி மாணவர்களை பாத பூஜை செய்ய வைப்பதா?, மாநிலங்களவையில் கனிமொழி எதிர்ப்பு, சனி, 06 ஆகஸ்ட் 2016 16:24
[2] http://viduthalai.in/component/content/article/75-politics/127366-2016-08-06-10-55-04.html
[3] சென்னை.டுடே.நியூஸ், ஆன்மீக கண்காட்சிக்கு எதிர்ப்பு: ராஜ்யசபாவில் புகார் கூறிய கனிமொழி, டி.ராஜா, சனிக்கிழமை, ஆகஸ்ட்.6, 2016, 11.36.காலை.
[4] http://www.chennaitodaynews.com/kanimozhi-mp-speaks-about-hindu-spiritual-and-service-fair/
[5] தினமணி, ஆசிரியர்களுக்குப் பாத பூஜை செய்வதா? மாநிலங்களவையில் கனிமொழி எதிர்ப்பு, By புது தில்லி, First Published : 06 August 2016 12:48 AM IST
[6]http://www.dinamani.com/india/2016/08/06/%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9C%E0%AF%88-/article3565098.ece
[7] The Constitution (Eighty-sixth Amendment) Act, 2002 inserted Article 21-A in the Constitution of India to provide free and compulsory education of all children in the age group of six to fourteen years as a Fundamental Right in such a manner as the State may, by law, determine.
[8] Ministry of Human Resources Development, The National Education Policy, 1986 (Revised 1992), http://mhrd.gov.in/sites/upload_files/mhrd/files/upload_document/NPE86-mod92.pdf
[9] As the National Policy on Education was framed in 1986[9] and modified in 1992 (with the Constitution 73rd, 74th and 86th amendments), revision is expected to meet the requirements of humanresources and face the challenges of science, technology, academics and industry. Thus, the New Education Policy (NEP), 2016 has been formed and it is in circulation for comments and criticism to be offered before July 31stm, 2016.
[10] Ministry of Human Resources Development, Some imputs for Draft National Educationa Policy, 2016 – http://mhrd.gov.in/sites/upload_files/mhrd/files/nep/Inputs_Draft_NEP_2016.pdf
[11] http://viduthalai.in/component/content/article/71-headline/127299-2016-08-06-08-48-32.html
[12] விடுதலை, பாத பூஜையா?, சனி, 06 ஆகஸ்ட் 2016 14:18
குறிச்சொற்கள்:ஆரியர், இந்து தமிழன், கனிமொழி, கருணாநிதி, செச்யூலரிஸம், திராவிட சித்தாந்திகள், திராவிட தமிழச்சிகள், திராவிட பேராளர்கள், திராவிடம், திராவிடர், நாத்திகம், பாத பூஜை, பாதபூஜை, பெரியார், போலி நாத்திகம்
அரசியல் நாகரிகம், ஆரியம், ஆரியர், ஆர்.எஸ்.எஸ், இந்து-தூஷணம், இந்து-வெறுப்பு, இந்துவிரோத நாத்திகம், இந்துவிரோதம், கனிமொழி, கருணாநிதி, குரு குலம், குருகுலம், குலக்கல்வி, தமிழ், தாலி, தி.மு.க, திக, திராவிட இனம், திராவிட நாத்திகம், திராவிடக் கலாச்சாரம், திராவிடத் திருமணம், திராவிடன், திராவிடம், திராவிடர், பாத பூஜை, பாதபூஜை, வீரமணி, Uncategorized இல் பதிவிடப்பட்டது | 1 Comment »
பிப்ரவரி 9, 2015
செபாஸ்டியன் சீமான் திடீரென்று “முருக பக்தன்” ஆகியது, இந்து வேடம் போடுவது, ஆனால் கருவறை நுழைவு போராட்டம் நடத்துவது (2)

சீமான் – நெற்றியில் விபூதி
பெஞ்சமின், அலாவுதீன், செந்தில்நாதன் சேகுவேரா, சுபாஷ் சந்திரபோஸ்: “பொதுக்கூட்டத்தில் சீமான், தனது கட்சியை சேர்ந்த சிலர் தமிழில் பெயரை மாற்றிக் கொண்ட விபரத்தை வாசித்தார்”, என்று தினமலர் கூறுகிறது[1]. கூட்டத்தில் தொடர்ந்து வீரதமிழர் முன்னணி அமைப்புக்கான மாநில ஒருங்கிணைப்பாளர்களாக பெஞ்சமின், அலாவுதீன், செந்தில்நாதன் சேகுவேரா, சுபாஷ் சந்திரபோஸ் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டனர்[2] என்று அவர்களது இணைதளம் வெளியிட்டுள்ளது. இதென்ன செக்யூலரிஸ அணியா, குழப்பக்கூட்டமா, “இந்தியன்” இல்லை என்கின்ற இந்திய-விரோதி அமைப்பா, “திராவிடன்” அல்ல என்று சொல்லி ஏமாற்றும் சித்தாந்த கும்பலா, “தமிழனாக” இருப்போன் என்று தமிழ் கலாச்சாரம், பாரம்பரியம், பண்பாடு, நாகரிகம் முதலியவற்றை தூஷித்த கும்பலின் மறு அவதாரமா அல்லது மறுபடியும் “தமிழர்களின்” பெயரைச் சொல்லிக் கொண்டு, ஏமாற்ற தோண்டியுள்ள இன்னொர்ய் மோசடி கும்பலா என்று தமிழகள் விசாரித்துத் தெரிந்து கொள்ள வேண்டும்.

shanawas speech in MJK meeting Jan 28-2011- சீமான்
செபாஸ்டியன் சீமானின் இந்துவிரோத பேச்சுகள் அதிகமாகவே உள்ளன[3]. நாத்திக போர்வையில், பெரியார் சொன்னதை, இன்னும் அதிகமாகக் கொச்சைப்படுத்தி, இந்து மதத்தைச் சாடிவருவது, இவரது வேலையாகி விட்டது. நடுவே தன்னை “செக்யூலராக”க் காட்டிக்கொள்ள, சிறிது கிருத்துவத்தைக் கிண்டலடிப்பார். ஆனால், இஸ்லாமைப் பற்றி ஒன்றும் சொல்லாதது, விமர்சனிக்காதது, இவரது போலித்தனத்தை எடுத்துக் காட்டுகிறது. இத்தகைய கொள்கையற்ற மனிதர், “தமிழர்”, “பிராபகரன்”, “அம்மா”, “அப்பா”…………….என்ற வார்த்தை ஜாலங்களுடன்[4], மயிரு, மசுரு,………………………., போன்ற செம்மொழி வார்த்தைகளுடன் பவனி வந்து கொண்டிருக்கிறார். இவரது பேச்சுகள் அடங்கிய வீடியோக்கள் இணைதளங்களிலேயே உள்ளன, அவற்றை கெட்டாலே-பார்த்தாலே, உண்மையினை அறிந்து கொள்ளலாம். ஆகவே, “இந்துக்கள்” என்பவர்களும் இவரிடம் ஜாக்கிரதையாக இருக்கவேண்டிய அவசியம் உள்ளது.

Palanibaba_book_release_by_Seeman_in_MJK_meeting_Jan_28.2011
சீமானின் கபாலீஸ்வரர் கோவில் கருவறை நுழைவு போராட்டமும், பழனி கோவில் கருவறை நுழைவு முயற்சிகளும்: 14-04-2010 அன்று கிருத்துவர்கள் சென்னை நினைவரங்கம் என்ற இடத்தில் ஆர்பாட்டம் செய்ய போலீஸாரிடம் அனுமதி கேட்டது போலவும், அதற்கு அனுமதி மறுக்கப் பட்டது போலவும், தெய்வநாயகம் என்ற புரட்டு ஆராய்ச்சியாளர், முந்தைய மோசடி-ஆராய்ச்சி கும்பல் அருளப்பா-ஆச்சார்யா கும்பல் கும்பலைச் சேர்ந்த ஆள், “தமிழர் சமயம்” என்ற இதழில் வெளியிட்டு இருக்கிறார் [மலர்.1; மே 2010, இதழ்.5, பக்கம்.10]. பிறகு வேறு இடத்தில் நடந்த கூட்டம், கபாலீஸ்வரர் கோவிலில் நடந்தது என்று “இந்தியன் எக்ஸ்பிரஸ்” வெளியிட்டது[5]. அக்கூட்டத்தில் செபாஸ்டியன் சீமான் பேசியது நினைவில் கொள்ளவேண்டும். இப்பொழுது, பழனிக்கு வந்துள்ளனர். பழனியாண்டவர் கல்லூரியில் இருந்து ஊர்வலமாக மலைக்கோவில் நோக்கி செல்வோம் என்று, திடீரென பஸ் ஸ்டாண்ட் ரவுண்டானாவில் இருந்து மலைக்கோயில் நோக்கி சென்றனர்[6]. அப்போது, “முருகனை காண மலைக்கோயிலுக்கு செல்கிறோம்’ என சீமான் மற்றும் தொண்டர்கள் மலை ஏறத்துவங்கினர். கோவிலில் சீமான் தொண்டர்களுடன் கருவறை நுழைவு வாயிலில் போராட்டம் நடத்தபோவதாக போலீசாருக்கும் மற்றும் இந்து முன்னணி அமைப்பினருக்கும் தகவல் தெரிந்ததால், அவர்கல் தடுத்துத்ன் திருப்பி அனுப்பப்பட்டனர்.[7]. இதுகுறித்து டி.எஸ்.பி., சண்முகசுந்தரம் கூறுகையில், “”ஊர்வலம், பொதுகூட்டம் நடத்த அனுமதி வாங்கியிருந்தனர். திடீரென ஊர்வலத்தின் போது மலைக்கோயிலுக்கு செல்வதாக கூறினர். இதனால் தடுத்தோம்,” என்றார். இதனையடுத்து சீமான் வெளிபிரகாரத்தில் வணங்கி விட்டு பொதுக்கூட்டத்திற்கு சென்றார் என்பதும் நாடகமே என்று அறிந்து கொள்ளலாம்.

சீமானின் குழப்ப சித்தாந்தம்
இந்தியாவை, தமிழ் பேசும் மக்களை ஏமாற்றிய சீமான்: ஒருபக்கம் இந்திய விரோத சக்திகளுடன் சேர்ந்து கொண்டு கூட்டங்களை நடத்துவது[8], இன்னொரு பக்கம் அடிப்படைவாத ஜிஹாதிகளை ஆதரிப்பது, பெரியாரிஸம் பேசுவது, ……இப்படி குழப்;பக் கலவையாகத்தான் செபாஸ்டியன் சீமான் இருந்துள்ளார். தமிழருக்கு யாசின் மாலிக்கைப் பற்றி என்ன தெரியும், முஸ்லீம் என்று சொல்லிக் கொண்டு கூத்தடிப்பது தெரியுமா? அப்சல்குருவின் பெயரை வைத்துக் கொண்டு, ஆபிஸ் சையதுடன் சேர்ந்து கூட்டத்தில் கலந்து கொண்டது தெரியுமா? என்று முன்பு கேள்விகளை எழுப்பியிருந்தேன்[9]. “ஆரியர்-திராவிடர்”ரென்ற செல்லாத சித்தாந்தத்தைப் பேசி சில மக்களைத் தூண்டி விட்டுக் கொண்டிருக்கிறார். அந்த சரித்திரத் தன்மையற்ற புளுகுகளை வைத்து புத்தகம் வேறு எழுதியிருக்கிறார்! கால்டுவெல் துரோகத்தை இவர் புதுப்பிக்கிறார் போலும். இதில் இவர் “நாடார்” என்று வேறு சொல்கிறார்கள். பிறகு நாடார்களை இழிவு படுத்திய கால்டுவெல் சித்தாந்தத்தை வைத்துக் கொண்டு தமிழர்களை ஏமாற்ற யார் கற்றுக் கொடுத்தது? கனடாவில் இந்து கோவில்கள் கிருத்துவர்களால் தவறாகப் பயன்படுத்தப் பட்டதால், தண்டம் செல்லுத்த வேண்டியதாகியது[10]. இலங்கையில் முஸ்லீம்கள், முஸ்லீம்களாகத்தான் இருந்து செயல்பட்டனர், சாதித்துக் கொண்டனர். முன்பே பலமுறைக் குறிப்பிட்டப் படி, தமிழக ஊடகங்களே “இலங்கை முஸ்லீம்கள்”, “இலங்கை தமிழர்கள்” என்று பிரித்துக் காட்டி, தமிழர்களை ஒதுக்கினர்[11]. ஆனால், இவரோ பழனிபாபா விழாவில் கலந்து கொண்டு பேசுகிறார். இந்திய தமிழர்களுக்கோ, இலங்கைத் தமிழர்களுக்கோ இவரால் எந்த பிரயோஜனமும் இல்லை என்றும் எடுத்துக் காட்டப்பட்டது[12].

ஜான் சாமுவேல் பாதையில் செபாஸ்டியன் சீமானா?: ஜான் சாமுவேல் என்ற கிருத்துவர் 2004 வரை அனைந்துலக ஸ்கந்தா-முருகா மாநாடு என்ற பெயரில் ஒரு பிரைவேட் கம்பெனியை வைத்துக் கொண்டு, அதற்கு சேர்கள் / பங்குகள் எல்லாம் வாங்கச் சொல்லி நண்பர்களை, மாநாட்டுக்கு வந்தவர்களை வற்புறுத்தி வந்தார்[13]. முருக பக்தர் போல விபூதி வேட்டியெல்லாம் கட்டிக் கொண்டு, காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதியை எல்லாம் போய் பார்த்திருக்கிறார், இந்த சாமுவேல். முதல் மாநாடு சென்னையில், ஆசியவியல் வளாகத்தில் 1997ல் நடந்தது. அப்பொழுதே, இவர் ஒரு கிருத்துவ கூட்டத்தைக் கூட்டி வந்து, முருகன் தான் ஏசு என்பது போல ஆய்வுக்கட்டுரைகளை படிக்க வைத்ததுடன், விழா மலரிலும் வெளியிய வைத்தார். அது மட்டுமல்ல, தமிழ்-சமஸ்கிருத பேதத்தையும் கிளப்பிவிட்டார். முருகன் – கந்தன் – கார்த்திகேயன் – சுப்ரமணியன் என ஆராய்ச்சி செய்வதாக இருந்தால், சமஸ்கிருதம் தெரியாமல் எந்த ஆரய்ய்ச்சியும் செய்யமுடியாது.
இருந்தாலும் சக்திவேல் முருகனார் போல ஆட்களைத் தூண்டி விட்டு பிரச்சினையைக் கிளப்பினார். முருகனைப் பிடித்துக் கொண்டிருந்த ஜான் சாமுவேல், திடீரென்று முருகனை, எம்பெருமானை அம்போ என்று விட்டுவிட்டு, தாமஸைப் பிடித்துக் கொண்டது என்ன ரகசியம் என்பதை ஆராய ஆரம்பித்தபோது தான், முந்தைய அருளாப்பா-ஆச்சார்ய பால் கோஷ்டிகளின் மோசடிகளை விட, ஒரு பெரிய மோசடியை ஆரம்பித்துள்ளனர் என்று தெரியவந்துள்ளது[14]. இதே பாணியில் தான் செபாஸ்டியன் சீமானும் இறங்கியுள்ளார். பிஷப்புகளை சந்தித்து, தெய்வநாயகத்துடன் சேர்ந்து கபாலீஸ்வரர் கோவில் கருவறைப் போராட்டம் என்று ஆரம்பித்து, பழனிபாபா நினைவுவிழவில் கலந்து கொண்டு, இப்பொழுது பழனிக்கு வந்துள்ளார்.
© வேதபிரகாஷ்
09-02-2015
[1] தினமலர், பழநி கோயிலில் சீமான்: போலீசார் அனுமதி மறுப்பு, பிப்ரவரி.08-02-2015, 01:17.
[2] http://www.dailythanthi.com/News/Districts/dindugal/2015/02/07211902/Sri-Lankan-Tamils-issue-the-decision-of-the-State.vpf
[3] http://www.keetru.com/periyarmuzhakkam/jul08/seemaan_1.php
[4] நான் சீமான் ஆனது எப்படி?” – ஆனந்த விகடன், http://www.naamtamilar.org/beta/textnews_detail.php?id=807
[5] இந்தியன் எக்ஸ்பிரஸ், ஏதோ அந்த கூட்டம், கபாலீஸ்வரர் கோவிலில் உள்ளேயே நடந்தது மாதிரி, ஒரு புகைப்படத்துடன், செய்தி வெளியிட்டிருக்கிறார்கள். அதற்கு கடிதம் எழுதியதற்கு, இன்று வரை மறுப்பு அல்லது அது தவறு என்று வருத்தம் தெரிவித்தோ என்ற செய்தியும் வரவில்லை / வெளியிடவில்லை.
[6] தினமலர், பழநி கோயிலில் சீமான்: போலீசார் அனுமதி மறுப்பு, பிப்ரவரி.08-02-2015, 01:17.
[7] மாலைமலர், பழனி மலைக்கோவிலுக்குள் ஊர்வலமாக செல்ல சீமானுக்கு அனுமதி மறுப்பு, பதிவு செய்த நாள் : ஞாயிற்றுக்கிழமை, பெப்ரவரி 08, 1:11 PM IST.
[8] https://atrocitiesonindians.wordpress.com/2013/05/19/why-anti-national-yasn-malik-and-sebastian-seeman-come-together/
[9] https://atrocitiesonindians.wordpress.com/2013/05/19/yasin-malik-and-sebastian-seeman-and-their-affairs/
[10] https://atrocitiesonindians.wordpress.com/2013/05/20/526-sebastian-seeman-and-yasin-malik-their-activities/
[11] https://atrocitiesonindians.wordpress.com/2013/05/21/what-yasin-malik-and-sebastian-seeman-can-do-to-indians-or-tamils/
[12] https://atrocitiesonindians.wordpress.com/2013/05/29/anti-indian-propaganda-continues-by-sebastian-seeman-party/
[13] https://christianityindia.wordpress.com/category/%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D/
[14] https://thomasmyth.wordpress.com/2011/01/21/why-asian-institute-of-studies-involves-in-the-spread-of-thomas-myth/
குறிச்சொற்கள்:ஆரியக் கலாச்சாரம், ஆரியம், ஆரியர், கிருத்துவம், சீமான், செபாஸ்டியன் சீமான், திராவிட அமைப்புகள், திராவிட நாடு, திராவிடத் தமிழன், நாம் தமிழர், பழனி, பழனி பாபா, முருகன், விபூதி
அறிவு, ஆரிய இனம், ஆரியக் கலாச்சாரம், ஆரியம், ஆரியர், இந்து, இந்து தமிழன், இந்து-தூஷணம், இந்து-வெறுப்பு, இஸ்லாம், கர்த்தர், காஃபிர், சீமான், ஜிஹாத், தமிழ், தமிழ் இந்து, தமிழ் தந்தை, தாலி, திக, திரவிடத் தாலி, திரவிடம், திராவிட அமைப்புகள், திராவிட இனம், திராவிட சித்தாந்தம், திராவிட நாத்திகம், திராவிடத் தமிழன், திராவிடன், திராவிடம், திராவிடர், திருக்குறள், நாத்திகத் தமிழன், நாத்திகம், நாம் தமிழர் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »
செப்ரெம்பர் 10, 2013
தமிழ்முறைப்படி சீர்திருத்த முறையில் நடந்த திருமணத்தில் தாலி கட்டப்படாமல், “ரெடிமேட் தாலி” ஏன் அணிவிக்கப்பட்டது?
முக்கியமான குறிப்பு: சீமான்-கயல்விழி திருமணம் அவர்களது சொந்த விவகாரம். அவர்களுக்கு எல்லா உரிமைகளும் இருக்கின்றன. அவர்கள் எப்பட் வேண்டுமானாலும், எங்கேயாவது, எந்தவிதத்திலும், திருமணம் செய்து கொள்ளலாம். அது அவ்ழர்களது தனிப்பட்ட விவகாரம். அதைப் பற்றி இங்கு விமர்சிக்கப் படவில்லை. “தமிழ்முறைப்படி சீர்திருத்த முறையில் திருமணம் நடந்தது”, என்று ஊடகங்கள் பறைச்சாற்றியுள்ளதால், தமிழகர்கள் உண்மை என்ன அறிந்தாக வேண்டிய நிலை உள்ளது.சீமான் போன்ற நாத்திகக்காரர்கள், பெரியார்-சுயமரியாதை முகமூடிகளை அணிந்து கொண்டு, இந்துக்களை மிக்கக் கடுமையாக விமர்சித்துள்ளாதாலும், தமிழர்களை அவர்களது உண்மையான கலாச்சாரம், நாகரிகம், பண்பாடு, பாரம்பரியம் முதலியவற்றை அறியாமல் செய்து விட்டதாலும், சில உண்மைகளை சொல்ல வேண்டிய அவசியத்தில் கீழ்கண்ட கருத்துகள் சொல்லப்பட்டுள்ளன. |

தமிழ்முறைப்படி சீர்திருத்த முறையில் திருமணம் நடந்தது!
தமிழ் முறை மற்றும் எது சீர்திருத்த முறை எது: தமிழ்முறை மற்றும் எது சீர்திருத்தமுறை சீமான் – கயல்விழி திருமணம் தமிழ் ஆராய்ச்சியாளர்களை உசுப்பியுள்ளது எனலாம். ஏனெனில் சாதாரணமாக, ஒரு கல்யாணத்தில் என்ன நடக்கவேண்டுமே எல்லாமே நடந்தது. “தீ” தான் வளர்க்கப் படவில்லை. தமிழ்முறைப்படி சீர்திருத்த முறையில் நடந்த கல்யாணம் எனும்போது, எது தமிழ்முறை மற்றும் எது சீர்திருத்தமுறை என்ற கேள்விகள் எழுகின்றன. திராவிட இயக்கத்தின் படி, சுயமரியாதை திருமணங்கள் நடந்தன. ஆனால், அவையெல்லாம் செல்லுபடியாகாது என்ற நிலையும் ஏற்பட்டது. அண்ணாதுரை பதவிக்கு வந்ததும், இந்து திருமணச் சட்டத்தில் ஒரு பிரிவை சேர்த்துக் கொண்டு, திராவிடர்களின் சுயமரியாதையைக் காப்பாற்றினார்! அதாவது தங்களை “இந்துக்கள்” என்று ஒப்புக்கொண்டுதான் மானத்தைக் காப்பாற்றிக் கொண்டார்கள்.

தாலி கட்டுவதா, அணிவிப்பதா, தொங்கவிடுவதா – எது தமிழ்முறை, சீர்திருத்த முறை திருமணம்?
பட்டுவேட்டி, பட்டுசட்டை, பட்டுசேலை முதலியன எந்த முறை?: நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்– காளிமுத்துவின் மகள் கயல்விழி திருமணம் சென்னையில் 08-09-2013 அன்று காலையில் ஒய்.எம்.சி.ஏ. திடலில் நடந்தது. தமிழர் தேசிய இயக்க தலைவர் பழ.நெடுமாறன் தலைமை தாங்கி திருமணத்தை நடத்தி வைத்தார். சீமான் பட்டு வேட்டி, பட்டு சட்டை அணிந்து இருந்தார். மணப்பெண் கயல்விழி தங்கநிற பட்டு சேலை அணிந்து இருந்தார், என்று ஊடகங்கள் விவரித்தன. புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களும் வெளியிட்டப்பட்டன. தமிழ்முறைப்படி சீர்திருத்த முறையில் திருமணம் நடந்தது[1]. ஆனால், இவையெல்லாம் என்று விவரிக்கப்படவில்லை. இவற்றிற்கு பதிலாக கருப்புக் கலரில் உடைகள் அணிந்து கொண்டு புரட்சிகரமான இணையும் நிகழ்ச்சியை செய்திருக்கலாம். ராமருக்கே செருப்பு மாலைகள் போட்ட பகுத்தறிவாளிகள் என்பதனால், பூமாலைகளுக்குப் பதிலாக வேறெந்த மாலைகளை தேர்ந்தெடுத்திருக்கலாம். ஆனால், ஏன் செய்யவில்லை?
10.06க்குதாலிஅணிவித்தது: சீமான் பட்டு, வேட்டி சட்டை அணிந்து காலை 9.20 மணியளவில் மண மேடைக்கு வந்தார். கயல்விழி பொன்நிற பட்டு சேலை அணிந்து 9.45 மணியளவில் மண மேடைக்கு அழைத்து வரப்பட்டார். தமிழ்முறைப்படி சீர்திருத்த முறையில் திருமணம் நடந்தது. அதன்பின் சீமானும்–கயல்விழியும் இணைந்து திருமணத்துக்கு வந்திருந்தவர்களை பார்த்து கை குப்பி வரவேற்றனர். சீமான்–கயல்விழி திருமணத்தை உலக தமிழர் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன், காலை 10.05 மணிக்கு தமிழில் முதல் எழுத்தான ‘அ’ எழுத்து பொறிக்கப்பட்ட டாலருடன் கூடிய தாலியை சீமான் கையில் எடுத்து கொடுத்தார். பாவம் அப்பொழுது அவரைத் தாங்கலாக இருக்கச் செய்யவேண்டியதாயிற்று. அதை கயல்விழி கழுத்தில் சீமான் அணிவித்தார். அதைத் தொடர்ந்து சீமானும், கயல்விழி இருவரும் மாலை மாற்றிக்கொண்டார்கள். இதெல்லாம் எந்த முறை என்று தெரியவில்லை.
சுபமுகூர்த்த தினத்தில், சுபமங்கல நேரத்தில் ஏன் “புரோசு மயக்கி” தாலி கட்டி (இல்லை அணிவித்து), மேளதாளத்துடன் திருமணம் நடத்த வேண்டும்?: நாட்களை, மதங்களை, ஏன் ஆண்டுகளையே மாற்றி ஏன் இப்படி திருமணம் நடத்தப்பட வேண்டும்? 08-09-2013 மிக்கவும் சிறந்த சுபமுகூர்த்த நாள் என்பது தமிழகத்தில் உள்ள படிக்காதவனுக்குக் கூட நன்றாகத் தெரியும். அன்று பேருந்துகள், ரெயில்கள், மற்ற வண்டிகள் என்று எல்லாவற்றிலும் திருமணங்களுக்குச் சென்று கொண்டிருந்தனர். ஆகவே, சுபமுகூர்த்த தினத்தில், சுபமங்கல நேரத்தில் ஏன் “புரோசு மயக்கி” தாலிகட்டி, மேளதாளத்துடன் திருமணம் நடத்த வேண்டும் என்ற கேள்வி எழுகின்றது?
- பெரியார் இப்படித்தான் திருமணம் செய்யவேண்டும் என்று வரையறைத்தாரா?
- இனமானத் தலைவர் வீரமணி இப்படித்தான் திருமணம் நடத்தி வைக்கிறாரா?
- முத்தமிழ் வித்தகர், முத்தாரக் கணவன் இப்படித்தான் மணமக்களை சேர்த்து வைக்கிறாரா?
ராகுகாலம் (காலை 4.30 – 6.00) இல்லை; எமகண்டம் (12.00 – 01.30) இல்லை; கரணன் (10.30ம் – 12.00) இல்லை – நல்ல சுபமுகூர்த்த நேரம் = 7.30 – 8.30, ஆனால், அதற்கு மேலும் 10.30 வரை மணப்பெண், மணமகன் நட்சத்திரத்தின் படி நடத்தலாம். சீமானின் ராசி தனுஸ் / தனுசு [Sagittarius], தொடர்புடைய நட்சத்திரங்கள் மூலம், பூராடம், உத்திராடம் (பாதம்-1). தனுசுக்குப் பொறுத்தமான பெண்ராசி – கடகம் என்றால், அது கயல்விழியுடையதா என்று பார்க்கவேண்டும். ஆகவே, கயல்விழியின் நட்சத்திரம் ஹஸ்தம் அல்லது சித்திரை என்றிருக்க வேண்டும். எந்த திராவிட சோதிடர், சுயமரியதை கணியன், அல்லது பகுத்தறிவு பார்ப்பனன் இந்த நேரத்தைக் கணித்துக் கொடுத்தான் என்று தெரியவில்லை.
தாலி கட்டுவதற்கும், அணிவிப்பதற்கும் என்ன வித்தியாசம்?: பொதுவாக தாலி கட்டும் போது, மூன்று முடிச்சுகள் போடுவது வழக்கம். ஆனால், தயாராக செய்து வைத்தத் தாலியை, ஏதோ நகையை அணிவிப்பது போல அணிவிப்பது எதில் சேர்த்தி என்று தெரியவில்லை. அதற்கு மேள வாத்தியங்கள் ஏன் முழங்க வேண்டும் என்று தெரியவில்லை. முன்பிருந்த பழக்க-வழக்கங்களை மாற்றவேண்டும் என்றால், புதியதாக மாற்று சடங்குகளை உருவாக்கி அறிமுகப்படுத்த வேண்டும். சுயமரியாதை திருமணங்கள் செல்லாது என்ரபோது, பகுத்தறிவுகள் கலங்கிவிட்டன. நீதிமன்றத் தீர்ப்புகளில் பொதுவாக திருமணங்களில் செய்யப்பட்டுவரும் சடங்குகள் ஏதாவது செய்யப்பட்டன என்று மெய்ப்பித்தால் தான் கணவன் -மனைவி தாம்பத்திய உறவு உரிமைகள் கொடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டவுடன், திராவிடர்கள் 1962ற்குப் பிறகு ஒன்று-ஓன்றாக சேர்த்துக் கொண்டு விட்டனர். ஐயர், ஹோமம் இல்லாமல் மற்ற எல்லாவற்ரையும் சேர்த்துக் கொண்டுதான், இந்த நாத்திகவாதிகள், பெரியார் குஞ்சுகள், திராவிட வித்தகர்கள் திருமணம் செய்து கொள்கிறார்கள்.
பொய்யும், வழுவும் தோன்றிய பின்னர் ஐயர் யாத்தனர் கரணம் என்ப: தொல்காப்பியர், “பொய்யும், வழுவும் தோன்றிய பின்னர் ஐயர் யாத்தனர் கரணம் என்ப” என்று கூறியுள்ளார். அதாவது, களவு மற்றும் கற்பு நெறிகள் பின்பற்ரி வந்த காலத்தில், ஆண்கள் பொய் சொல்வது, இதனால் சமூகத்தில் வழுவு ஏற்படுதல் என்ற்றிருந்த நேரத்தில் ஐயர் / மேலோர் கரணங்களை, தாலிகட்டுவது போன்ற சடங்குமுறைகளை அறிமுகப்படுத்தினர். இவற்றை சங்ககால மக்களும் பின்பற்றி வந்தார்கள். சுமார் 2500 வருடங்களுக்குப் பிறகு தான், அதாவது அவர்கள் “திராவிடர்கள்” ஆனபிறகு, “சுயமரியாதை திருமணம்” என்று வேதமுறை ஒழித்து ஏற்படுத்தப்பட்டது. ஆனால், அவை செல்லாது என்றபோது, மறுபடியும் மந்திரங்கள், தீவளர்த்தல் இன்றி மற்றவை சேர்த்துக் கொள்ளப்பட்டன. அதனால்தான், தாலி நிலைத்தது. ஆக, பெரியார் ஐயரிடம் தோற்றுவிட்டார். இப்பொழுது, கருணாநிதி, வீரமணி, நெட்டுமாறன் போன்ற “ஐயர்கள்” கிளம்பியுள்ளார்கள். இவர்களைத்தான் நான் “திராவிட புரோகிதர்கள்” என்று குறிப்பிட்டுள்ளேன்.
பத்துப்பாட்டு — எட்டுத்தொகை சொல்லாதவை தமிழ் முறையா?: தமிழ் முதல் எழுத்தான “அ” பொறிக்கப்பட்ட டாலருடன் கூடிய தாலியை பழ.நெடுமாறன் எடுத்து கொடுக்க அதை சீமான் கயல்விழி கழுத்தில் அணிவித்தார்[2]. பின்னர் இருவரும் மாலை மாற்றிக் கொண்டனர். சீமான் தாலி கட்டுவதற்கு முன் மேடையில் வைக்கப்பட்டு இருந்த பிரபாகரனின் தந்தை திருவேங்கடம் வேலுப்பிள்ளை, தாயார் பானுமதி அம்மாள், காளிமுத்து, மணிவண்ணன் ஆகியோர் படங்களுக்கு மாலை அணிவித்தார். அப்போது மணமக்களும், நாம் தமிழர் கட்சியினரும் ஈழப் போரில் உயிர் நீத்த தமிழர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் உறுதி மொழி எடுத்து கொண்டனர். திருமண மேடையில் விடுதலைப்புலி தலைவர் பிரபாகரன் அவரது மனைவி மதிவதனி ஆகியோர் திருமண கோலத்தில் இருக்கும் படம் பொறித்த பிரமாண்ட பேனர் வைக்கப்பட்டு இருந்தது. மேடையின் இடது புறத்தில் பெரியார் புகைப்படமும், வலது புறத்தில் திருவள்ளுவர் படமும் வைக்கப்பட்டு இருந்தது. சீமான் பிரபாகரனுடன் ஒன்றாக இருக்கும் போட்டோக்கள் விழா அரங்கிலும், வெளியிலும் ஏராளமாக வைக்கப்பட்டு இருந்தன[3].
திராவிட்ட புரோகிதர்கள் நடத்தி வைத்துள்ள சில திருமணங்கள்:
மு. ரமேசு _ இ. சிவசங்கரி ஆகியோரது வாழ்க்கை இணைநல ஏற்பு விழாவினை தமிழர் தலைவர் நடத்தி வைத்தார். சட்டமன்ற உறுப்பினர்கள், தொழிலதிபர்கள் உடன் உள்ளனர் (மதுரை, 31.1.2010).

ரா. சுதேஷ்பாபு _ ஸ்வீட்டி ஏஞ்சலின் பிளாரன்ஸ் ஆகியோரின் மண விழாவினை துணை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நடத்தி வைத்தார். தமிழர் தலைவர் கி. வீரமணி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்துரை வழங்கினர் (சென்னை, 1.02.2010).
© வேதபிரகாஷ்
10-09-2013
குறிச்சொற்கள்:அணி, கயல்விழி, கருப்பு, கழுத்து, சீமான், தமிழ், தயாரிப்பாளர், தாலி, திராவிடம், தொங்கவிடு, நடிகன், நடிப்பு, நட்சத்திரம், நாள், நேரம், புரோகிதர், பேச்சு, மணமகள், முகூர்த்தம், ம்மண்ணமகன்
அணிவி, ஐயர், கட்டு, சீமான், சுயமரியாதை, தாலி, தாளம், திருமணம், தொங்கவிடு, நாதஸ்வரம், நாம் தமிழர், பார்ப்பனர், புரோகிதர், மணமகன், மணமகள், மணம், முறை, மேளம் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »
நவம்பர் 29, 2009
அய்யப்பன் பிறப்பு வளர்ப்பு தெரிந்தால் மாலை போடுவீர்களா?
இது “விடுதலை” என்கின்ற திராவிட கழகத்தினரின் நாளிதழில் “ஓடும் நதி” என்ற பெயரில் மறைந்து கொண்டு யாரோ ஒரு இந்து-விரோதி எழுதி வெளிவந்த சிறு கட்டுரையாகும். இன்றும் (டிசம்பர் 2013) கீழ்கண்ட தளத்தில் இருக்கின்றது:
http://viduthalai.periyar.org.in/20091129/news22.html
அதனால் தான், கீழ் கண்ட குறிப்பையும் நவம்பர் 2009லேயே செர்த்திருந்தேன்.
இதோ, ஐயப்பன் பக்தர்களையும் விட்டுவைப்பதில்லை.வருடா வருடம் இதே மாதிரியான தூஷணங்கள்! ஆனால், யாரும் நடவடிக்கை எடுக்காததால், இப்படியே அச்சடித்து இப்பத்திரக்கை நடதத்தப் படுகிறது.இதன் ஆசிரியர் கே. வீரமணியோ ஒரு நிகர்-பல்கலைக் கழகம் வைத்து நடத்துகிறார்.அதில் வேலை செய்யும் பலர் மாலை அணிந்துள்ளனர். அவர்கள் என்ன செய்வார்கள்?
அவர்கள் என்ன நினைப்பார்கள்?
அங்கு படிக்கும் மாணவர்கள் என்ன நினைப்பார்கள்?
ஏனெனில் மாணவர்களில் பலரும் மாலை போட்டுக் கொண்டிருக்கிறார்கள்!! |
குறிப்பு: ஐய்யப்பப் பக்தர்களைப் புண்படுத்த இப்பதிவு செய்யப்படவில்லை. உண்மையில் நாத்திகவாதிகளின் மனப்பாங்கை எடுத்துக் காட்டி, அவர்களைன் போலித்தனத்தை எடுத்துக் காட்டவே நான் இப்பதிவை செய்துள்ளேன்.
சென்னை, நவ. 29_ கேரளம் _ கேர என்ற மலையாள சொல்-லுக்கு தென்னை என்று பெயர். கேரளம் என்றால் தேங்காய் விளைகிற இடம் என்று பெயர். சந்தேகமாக இருந்-தால், உங்களுக்குத் தெரிந்த மலையாள சேட்டான், சேச்சியிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். கேரளாவிலிருந்து வந்த தேங்காயை, தமிழ்நாட்-டுத் தமிழன் விலைக்கு வாங்கி, தலையில் இரு-முடிகட்டி திரும்பவும் எங்கிருந்து வந்ததோ, அங்கேயே பக்தியின் பெயரால் கொண்டு போய் சேர்கிறான். அந்த தேங்காய்களை சபரிமலை கோவில் நிர்-வா-கமும் ஏதாவது எண்-ணைய் எடுக்கிற நிறுவனத்-திற்கு மொத்த விலைக்கு விற்று விடுகிறது. அந்த நிறுவனங்கள் தமிழ்-நாட்-டில் சிறு சிறு பாக்கெட், பாட்டில்களில் தேங்காய் எண்ணையை அடைத்து வந்து விற்கிறது. தேங்-காயை விலைக்கு வாங்-கிய தமிழன்,அதே தேங்-காயை, எண்ணைய் என்ற வடிவத்தில் திரும்ப-வும் விலைக்கு வாங்கு-கிறான். அதாவது புரிகிற மாதிரி சொல்வது என்-றால், ஒரு பொருளை இரண்டு முறை விலைக்கு வாங்குகிறான். கேரளக்காரன் தமிழ-னின் தலையில் இப்படித்-தான் மிளகாய் அரைக்-கிறான்! அய்யப்பனுக்கு மாலையணிந்து கோவி-லுக்கு போய் திரும்பும் வரை மிகவும் ஒழுக்கமாக நடந்து கொள்ள வேண்-டும் சரியாகச் சொன்-னால், கோயிலுக்குப் போய் திரும்பும் வரைக்கு-மாவது நல்லவர்களைப் போல நடியுங்கள் என்-கிறார்கள்! கேரள அய்யப்பனுக்கு மாலை போட்டுப் போகிற தமிழர்கள் தயவு செய்து அய்யப்பனின் பிறப்பு, வளர்ப்பு கதையை படித்த பிறகு,தைரியம் இருந்தால் அதற்கு பிறகு மாலை போடுங்கள்! எவ்வளவுக் எவ்வளவு அசிங்கங்-கமாக, கேவலமாக இருக்க வேண்டுமோ, அவ்வள-வுக்கு அவ்வளவு ஆபாச-மாக இருக்கிறது, அய்யப்-பனின் பிறப்பு வளர்ப்பு வரலாறு! அவைகளை படித்தால் ஒழுக்கக் கேடு-கள் தான் நாடெங்கும் தலை விரித்தாடும்..! கேரளா கிறித்தவர்கள் அதிகம் நிறைந்த மாநிலம்.
அதாவது அய்யப்பன் பிறந்து வளர்ந்து கிழித்த-தாக கூறப்படும் கேரளத்-தில், கேரள மக்கள் அய்யப்-பன விட இயேசு கிறிஸ்துவைத் தான் அதிகம் பின்பற்று-கிறார்-கள்! இது ஒன்று போதாதா? அய்யப்பன் வெறும் பொய்யப்பன் என்று புரிந்து கொள்ள… அதா-வது தன்னை சிலுவை-யில் உயிரோடு அறைந்த போது தன்னையே காப்-பாற்றிக் கொள்ளாத இயேசு தான் இவர்களை காப்பாற்றும், சக்தி வாய்ந்த கடவுளாம்! கொடுமைடா சாமி! நீங்கள் சொல்வதெல்-லாம் சரிதான்ங்க, ஆனால் நம்மை மீறிய சக்தி ஒன்னு இருக்கு, அதுக்கு பெயர் தான் கடவுள் என்பர்களே! கடவுளின் பெயரால் இந்த கேணத் தனங்கள், எதற்கு? கடைசியாக உங்களிடம் வேண்டிக் கொள்வ-தெல்-லாம், ஒன்றே ஒன்று தான்! தமிழர்களே! தமிழர்-களாக இருங்கள்!!
நன்றி: ஓடும் நதி
பின்குறிப்பு: இந்த இடுகை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இடப்பட்டது. நாத்திகம் என்ற போர்வையில், வீரமணி எப்படி தூஷணம் செய்கிறார் என்பதைத்தான் எடுத்துக் காட் ட அவ்வாறு செய்யப்பட்டது. கோடிக்கணக்கான பக்தர்களின் உணர்வுகளைப் புண்படுத்தக் கூடாது என்ற எண்ணம் அந்த மெத்த “படித்த” மேதாவிக்கு, நிகர்நிலை பல்கலைக்கழக வேந்தருக்குத் தெரியாமல் இருப்பதையும் எடுத்துக் காட்டப்பட்டது. இப்பொழுதும் இதற்கு பதில்கள் வருவதால், இக்குறிப்பு சேர்க்கப்பட்டுள்ளது.
2009லிருந்து 2013 வரை படிப்பவர்கள் இதனை முழுவது படிக்காமலேயே, என்னை திட்டி பதில்களை பதிவு செய்து வருகிறார்கள்.
ஆகவே, தயவு செய்து முழுமையாக படித்து விட்டு பதிலை இடுங்கள் .
வேதபிரகாஷ்
04-12-2013
|
குறிச்சொற்கள்:இந்து தமிழன், இந்து விரோதத் தமிழன், ஐம்புலன்களை வென்ற நிலை, ஐயப்பன், கருப்பு, கருப்பு சட்டை, கருப்பு வேஷ்டி, காழ்ப்பு, செச்யூலரிஸம், செறுப்பு, தமிழ், தமிழ் இந்து, திராவிட அமைப்புகள், திராவிட பேராளர்கள், திராவிட முனைவர்கள், திராவிடத் தமிழன், தூஷணம், நாத்திகம், பத்திரிக்கை ஒழுங்கில்லாத்தனம், புண்படுத்து, பெரியார், போலி நாத்திகம்
அரசியல் வேறுபாடு, அறிவு, அல் உம்மா, ஆசாரம், ஆத்மா, ஆமென், இந்தி, இந்தி எதிர்ப்பு, இந்து தமிழன், இந்து விரோதத் தமிழன், இந்து-தூஷணம், இந்து-வெறுப்பு, இந்துவிரோத நாத்திகம், இந்துவிரோதம், இனம், இனவெறி, இறையியல் கல்லூரி, ஐயப்பன், ஓம், கருணாநிதி, கருப்பு, கருப்பு சட்டை, கருப்பு வேஷ்டி, காஃபிர், சமத்துவம், சொத்து, தாலி, திரவிடம், திராவிட சாமியார், திராவிட சித்தாந்தம், திராவிட நாத்திகம், திராவிட பாகுபாடு, திராவிடக் கலாச்சாரம், திராவிடத் தமிழன், திராவிடன், திராவிடப் புரோகிதம், திராவிடம், திராவிடர், நாத்திகத் தமிழன், நாத்திகம், பகுத்தறிவு, பெரியாரிஸ்ட், பெரியார், மணியம்மை, மதசார்பற்ற நீதிமன்றம், மதசார்பற்ற போலிஸ், மதசார்பின்மை, மதசார்பு, மானம், மாயை, மாலை, மேதாவி, வீரமணி இல் பதிவிடப்பட்டது | 38 Comments »