Archive for the ‘தமிழின் கணவன்’ Category

திராவிடத் திருமணங்களும், தமிழர்களின் பிணக்குகளும், அரசியல்வாதிகளின் சுணக்கங்களும்

மே 28, 2010

திராவிடத் திருமணங்களும், தமிழர்களின் பிணக்குகளும்,அரசியல்வாதிகளின் சுணக்கங்களும்

சுயமரியாதை திருமணம்

எம்.ஜி.ஆரும், நானும் பிரியக்கூடாது என பாடுபட்டவர் : ஆர்.எம்.வீரப்பனுக்கு கருணாநிதி புகழாரம்

நன்றி-தினமலர்: செய்தி, படம்                           http://www.dinamalar.com/News_Detail.asp?Id=7673
சென்னை : “”எம்.ஜி.ஆருக்கும், எனக்கும் இடையே பிணக்கு விளைந்த போதெல்லாம், அதை சரி செய்ய பாடுபட்டவர் ஆர்.எம்.வீரப்பன்,” என்று தமிழக முதல்வர் கருணாநிதி கூறினார். முன்னாள் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன் – ராஜம்மாள் தம்பதியின் இளைய மகன் தங்கராஜுக்கும், கோவை தொழிலதிபர் மோகன் – மோகனா தம்பதியின் மகள் தாரிணிக்கும் சென்னையில் நேற்று திருமணம் நடந்தது.

விழாவுக்கு தலைமை வகித்து, திருமணத்தை நடத்தி வைத்து தமிழக முதல்வர் கருணாநிதி பேசியதாவது: எனக்கும், ஆர்.எம்.வீரப்பனுக்கும் உள்ள தொடர்பு நீண்ட காலத் தொடர்பு, மறைந்தும் மறையாத என் ஆருயிர் நண்பர் எம்.ஜி.ஆருடைய அணுக்கத் தொண்டர்களிலே ஒருவராக, அன்பு நண்பர்களில் ஒருவராக, அவசியப்பட்ட ஆலோசகர்களிலே ஒருவராக விளங்கியவர் வீரப்பன். “குடியரசு’ அலுவலகத்தில் 1945ம் ஆண்டு துணை ஆசிரியராக நான் இருந்த காலம் தொட்டு எனக்கும், இவருக்கும் நெருக்கமான நட்பு, அரும்பி மலர்ந்து இன்றைக்கும் மணம் வீசுகிற வகையில், அவரது இல்ல மண விழாவை நான் நடத்தி வைக்கவும், அவர் வரவேற்கவுமான சூழல் உருவாகியிருக்கிறது.

இந்த மேடையில் எனக்கு முன் பேசியவர்கள், எங்களுக்குள் என்றும் பிணக்கு ஏற்பட்டதில்லை என்று இங்கே சொன்னார்கள். இவர் என்னை எதிர்ப்பதாகக் காட்டிக் கொண்ட அந்தக் காலத்தில் கூட என்னிடம், “கள்ளக் காதல்’ கொண்டவர். தி.மு.க.,வுக்கும், எம்.ஜி.ஆர்., தலைமையில் இயங்கிய அ.தி.மு.க.,வுக்கும் இடையே சில பிரச்னைகள் தோன்றும் போதெல்லாம், இவரிடமிருந்து எனக்கு ஒரு ரகசிய கடிதம் வரும். எனக்கும், எம்.ஜி.ஆருக்கும் இடையே ஒரு பிரிவு ஏற்படக்கூடிய ஒரு சூழல் 1971ம் ஆண்டில் ஏற்பட்ட போது, வீரப்பன் என் இல்லத்திற்கு வந்து ஒரு மணி நேரத்திற்கு மேலாக, “அந்தச் சூழ்நிலை உருவாகக்கூடாது; நீங்கள் இருவரும் பிரிந்து விடக்கூடாது; ஒன்றாக இருந்து தான் இயங்க வேண்டும். பிரிக்கிற சில பேர் யார் என்பது எங்களுக்குத் தெரியும். நீங்கள் ஒன்றுபட்டு பணியாற்றுங்கள்’ என்று கண்ணீர் கலந்து தன் கவலையைத் தெரிவித்தவர்களில் மிக முக்கியமானவர். பல நேரங்களில் எம்.ஜி.ஆருக்கும், எனக்கும் அல்லது தி.மு.க.,விற்கும் இடையே பிணக்கு விளைந்த போதெல்லாம், அதை சரி செய்ய பாடுபட்டவர் ஆர்.எம்.வீரப்பன். வீரப்பன் என் நீண்ட கால நண்பர் என்பதால் அவருக்கு அந்தக் கவலை இருந்தது.

மேடையில் திருநாவுக்கரசு பேசும் போது, “ஆர்.எம்.வீரப்பனுக்கு எம்.எல்.சி., பதவி கொடுங்கள்’ என்று சொன்னார். பதவிகளை பல பேருக்கு கொடுக்கிற இடத்தில் இருந்தவர் வீரப்பன். அவர் பதவிகளை பகிர்ந்து எடுத்துக்கொள்ள வேண்டியவரே தவிர, கேட்டு பெற்றுக்கொள்ள வேண்டியவர் அல்ல. அந்தளவிற்கு இந்த இயக்கத்தின் ஆணிவேராக, அடிவேராக, இயக்கத்தை வளர்க்கின்ற வலுவான விழுதுகளிலே ஒருவராக அன்றைக்கும் இருந்தார்; இன்றைக்கும் இருக்கிறார். இவரை நான் என்றைக்கும் மறக்க மாட்டேன்.

நாள் முழுவதும் அளப்பரிய பணிகள், அதற்கிடையே கோவைக்கு மாநாட்டு பணிகளைப் பற்றி ஆய்வு செய்யச் செல்கிறோம். அங்கிருந்து ஊட்டிக்குச் சென்று ஓரிரு நாட்கள் ஓய்வு பெறலாமே என்று எண்ணினேன். ஆனால், அங்கு சென்ற எனக்கு இந்த நினைவு வந்தது. நினைவு சாட்டையாக விழுந்தது. “வீரப்பன் இல்லத் திருமணத்திற்கு செல்லாமல் ஓய்வு ஒரு கேடா உனக்கு’ என்று எனக்கு நானே கேட்டுக் கொண்டு இங்கே வந்துள்ளேன் என்றால், அது நட்பின் ஆழத்தை, நட்பின் உயர்வை உணர்த்தக்கூடிய ஒன்று என்பதை உங்களுக்கு எடுத்துச் சொல்லி, அத்தகைய ஒரு உத்தம நண்பர் என்றைக்கும் இந்த இயக்கத்தின் தூணாக விளங்கிக் கொண்டிருப்பவர். அவரது இல்லத் திருமணத்தில் பங்கேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இவ்வாறு கருணாநிதி பேசினார்.

விழாவில், நிதி அமைச்சர் அன்பழகன், துணை முதல்வர் ஸ்டாலின் மற்றும் மத்திய, மாநில அமைச்சர்கள் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக ஆர்.எம்.வீரப்பன் அனைவரையும் வரவேற்றார். மத்திய இணை அமைச்சர் ஜெகத்ரட்சகன் நன்றி கூறினார்.

கருணாநிதிக்கு ‘தமிழ்த் தலைமகன்’ விருது!

திசெம்பர் 19, 2009
கருணாநிதிக்கு ‘தமிழ்த் தலைமகன்’ விருது நாளை வழ‌ங்க‌ப்படு‌கிறது
செ‌ன்னை, சனி, 19 டிசம்பர் 2009( 16:28 IST )

http://tamil.webdunia.com/newsworld/news/tnnews/0912/19/1091219062_1.htm

கருணாநிதிக்கு ‘தமிழ்த் தலைமகன்’ விருது! கொல்கத்தா பாரதி தமிழ்ச்சங்கம் சார்பில் முதலமை‌ச்ச‌ர் கருணாநிதிக்கு ‘தமிழ்த் தலைமகன்’ விருது நாளை வழங்கப்படு‌‌கிறது. தமிழ்நாட்டுக்கு வெளியே முதன் முதலில் அமைக்கப்பட்ட மூத்த தமிழ்ச் சங்கமாகிய கொல்கத்தா பாரதி தமிழ்ச் சங்கம் 70 ஆண்டுகளாக கொல்கத்தாவில் இயங்கி வருகிறது. இந்த சங்கம், இந்த ஆண்டு முதலமைச்சர் கருணாநிதிக்கு ‘தமிழ்த் தலைமகன்” என்ற சிறப்பு விருதளிக்க தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறது.

கொல்கத்தா பாரதி தமிழ்ச்சங்கம் அளிக்கிறது: இது குறித்து அ‌‌ச்ச‌ங்க‌ம் வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள செ‌ய்‌தி‌க்கு‌றி‌ப்‌பி‌ல், தமிழுக்கு செம்மொழி சீர்பெற்றுத்தந்த பெருந்தகையும், உலகத்தமிழ் செம்மொழி மாநாடு காணும் வரலாற்று பெருமை வாய்ந்தவரும், தமிழ் இன மொழி மேம்பாட்டுக்காக தம் வயதில் எழுபது ஆண்டுகளை அள்ளித் தந்தவரும், தமிழகத்தின் முதலமைச்சராய் ஐந்து முறை அரசாள்பவரும், தமிழில் தலைசிறந்த உலக படைப்பாளியுமான முத்தமிழறிஞர் முதலமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தி‌க்கு மூத்த தமிழ் சங்கமாகிய கொல்கத்தா பாரதி தமிழ்ச்சங்கம் தமிழ்த் தலைமகன் என்ற சிறப்பு விருதளித்து மகிழ்கிறது” என்று தெ‌ரி‌வி‌‌க்க‌ப்ப‌ட்டு‌‌ள்ளது.

நாளைக்கு விழா: இ‌ந்த விருது வழங்கும் விழா, நாளை மாலை 6 மணிக்கு சென்னை, வள்ளுவர் கோட்டத்தில் நடைபெறுகிறது. விழாவுக்கு தொழில் அதிபர் பொள்ளாச்சி நா.மகாலிங்கம் தலைமை வகிக்கிறார். தமிழ் சங்கத்தின் அமைப்பாளர்களும், செயற்குழு உறுப்பினர்களும் ஒன்று கூடி முதலமைச்சருக்கு விருது வழங்குகிறார்கள். ஆலோசகர் ஞானசேகரன் வாழ்த்து மடல் வாசித்து அளிக்கிறார். இலக்கியச் செல்வர் குமரிஅனந்தன், முனைவர் அவ்வை நடராசன், நடிகர் சிவகுமார், கவிப்பேரரசு வைரமுத்து ஆகியோர் வாழ்த்துரை வழங்குகிறார்கள். கொல்கத்தா தமிழ்ச் சங்கத்தின் ஆலோசகர் மகாலிங்கம் வரவேற்புரை ஆற்றுகிறார். செயலர் ஸ்ரீதரன் நன்றியுரை ஆற்றுகிறார். பேராசிரியை பர்வீன் சுல்தானா நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குகிறார். நிறைவாக முதலமைச்சர் கருணாநிதி ஏற்புரை வழங்குகிறார்.

தமிழுக்கு உறவுமுறை கொண்டாடும் வழிகள்: ஏற்கெனவே கருணாநிதியை  தமிழுக்கு-தமிழுடன் ஒப்புமைப் படுத்தி விட்டாகி றது! தமிழே, தமிழின் உயிரே, உயிரின் நிலையே…….., வாழும் தமிழே……….என்றெல்லாம் குகாகிவிட்டது!

பிறகெப்படி கருணாநிதி  ‘தமிழ்த் தலைமகன்’ ஆகிறார் என்று பார்க்கவேண்டும்!

இவரே தமிழாகி, தமிழின் தலைமகனாவது எவ்வாறு?

இதென்ன புதிய புராணம் படைக்கின்றனரா?

முன்பு ஆதித்தனார் “தமிழர் தந்தை” என்று புகழ்ந்தபோது, சில கேள்விகள் எழுந்தன!

இப்பொழுது கருணாநிதி  ‘தமிழ்த் தலைமகன்’ ஆகிறார் என்றால், மற்ற மகன்கள் யார், தமிழ் ஆணா, பெண்ணா, ஆணென்றாலும்-பெண்ணென்றாலும், யார் தாய்-அவ்வாறே யார் தந்தை?

சென்னை, வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற விழாவில், கொல்கத்தா பாரதி தமிழ்ச் சங்கத்தின் சார்பில் தமிழக முதலமைச்சர் கலைஞருக்கு “தமிழ்த் தலைமகன்’’ விருது மடலை கொல்கத்தா பாரதி தமிழ்ச் சங்கத்தின் ஆலோசகர் த. ஞானசேகரன் வாசித்து வழங்கினார். உடன் அமைச்சர் பரிதி இளம்வழுதி, அய்ம்பெருங் குழு, எண்பேராயம் துணைத் தலைவர் முனைவர் வா.செ. குழந்தைசாமி, டாக்டர் அவ்வை நடராசன், இலக்கியச் செல்வர் குமரி அனந்தன், கவிப்பேரரசு வைரமுத்து, நடிகர் சிவகுமார், கொல்கத்தா பாரதி தமிழ்ச் சங்கத்தின் செயலாளர் இரா. சிறீதரன், ஆலோசகர் எஸ். மகாலிங்கம் ஆகியோர் உள்ளனர் (20.12.2009)..