திராவிட ஆட்சிகளில் தேசத் துரோக வழக்குகளும், அவற்றின் பின்னணியும் – திராவிடஸ்தான் முதல் திராவிடியன் ஸ்டாக் வரை – தேசிய அளவில் உள்ள வழக்குகளுடன் அவற்றை ஒப்பிட முடியாது (2)
திராவிடஸ்தான் முதல் மாநில சுயயாட்சி வரை: 1930-40களில் தனித்தமிழ் இயக்கம், திராவிட இனக் கட்டுக்கதைகளை வளர்த்தன. சைவம் என்ற போர்வையில், வைணவத்தை எதிர்த்து, தெலுங்கு பேசும் மக்களை அவமதித்த போக்கு, நீதிகட்சியைக் குலைத்து, திராவிட கழக போர்வையில், தமிழக பிரிவினை உருவெடுத்தது[1]. திராவிடஸ்தான் என்று ஆரம்பித்து, “அடைந்தால் திராவிட நாடு, இல்லையென்றால் சுடுகாடு” என்று சென்று, பிறகு, எல்லாமே குப்பையில் என்றாகியது. ஆனால், அத்தகைய தேசவிரோத கொள்கையிலிருந்து மற்ற மொழி மக்கள் வேறுபட்டனர். 1940-50 திராவிட இனவெறி கட்டுக் கதைகளினால் தான், முதலில் ஆந்திரா தனியாகப் பிரிந்தது, முதல் மொழிவாரி மாநிலமானது. தொடர்ந்து “தமிழ்” தான் உயர்ந்தது, அதிலுருந்து தான் மற்ற மொழிகள் தோன்றின என்பதனை சாதாரண மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. குறிப்பாக, தெலுங்கு மக்கள் ஒப்புக் கொள்ளவில்லை. பட்டிபோர்லு [Bhattiporlu] வரிவடிவங்களை [script] மற்றும் கல்வெட்டுகளை [inscriptions] வைத்துக் கொண்டு, தெலுங்கு வரிவடிவம் BCE மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்று வாதிட்டனர்.
1950-70களில் பெரியார்-அண்ணா திராவிட நாட்டை குப்பைத் தொட்டியில் போட்டனர்: பெரியார் ஆதித்தனாருடன் சேர்ந்து “திராவிட நாடு” தேவையில்லை என்றே பேசினார். அண்ணாவைப் பற்றிச் சொல்லத் தேவையில்லை, முதலமைச்சர் ஆக வேண்டும், தேதலில் நிற்க்கவேண்டும் என்றால், பிரிவினை பேச முடியாது. அதனால், திராவிடஸ்தானும் போய் விட்டது, திராவிட நாடும் மறந்து விட்டது, “தமிழ் நாடு” என்பதில் திருப்தி பட்டு, சுருங்கி விட்டனர். அப்படியிருந்த நிலையில், இப்பொழுது, ஸ்டாலின் “திராவிடியன் ஸ்டாக்” என்று பேசியதை / பேசுவதை கவனிக்கலாம். யாரோ தவறாக சொல்லிக் கொடுத்திருக்கின்றனர் போலும். “திராவிடியன் மாடல்” வசனங்கள் வேறு தொடர்கின்றன. அவை, “ஒன்றிய” அரசுக்கு எதிராக இருக்கிறன. கூட கவர்னர் எதிர்ப்பு வேறு. இவையெல்லாம் தேசவிரோதம் ஆகுமா, தேசாபிமானம் ஆகுமா என்று தெரியவில்லை. “மாநில சுயயாட்சி” வாதம், டிவி விவாதங்களில் எதிரொலிக்கின்றன. திமுக-திக-கம்யூனிஸ்ட் வகையறாக்கள் இதில் சளைத்தவர்கள் அல்லர்.
எம்,ஜி.ஆருக்குப் பிறகு பிரிவினைவாடம் குறைந்தது: “தமிழ்நாடு” உருவானபோது கூட, எல்லை தகராறுகளில் கேரளா, ஆந்திரா மற்றும் ஆந்திராவுடன் எதிராகவே இருந்தது. தமிழநாட்டைத் தவிர மற்ற மாநில மக்கள் தாங்கள் “திராவிடர்கள்” என்றெல்லாம் ஏற்றுக் கொள்ளவில்லை. அதனால், திராவிடத்துவ சித்தாந்தம் தமிழ்நாடு மாநிலத்துடன் சுருங்கி விட்டது. 1950-60களில், “இந்தி-எதிர்ப்பை” கையில் எடுத்து உசுப்பி விட்டனர். 1960-70களில் மேடை பேச்சு, சினிமா வைத்டுக் கொண்டு ஆட்சியைப் பிடித்தனர். 1980-70களில் காவிரி பிரச்சினையில், முன்னர் பாமகவினால், அதிகமாகவே வெறியூட்டப் பட்டு, பிறகு திராவிட பிரிவினைவாதிகளால் தீயூட்டப் பட்டது. அப்பொழுது, இங்கு “உடுப்பி” ஹோட்டல்கள் அடித்து நொறுக்கப்பட்டன. ஶ்ரீ ராகவேந்திர மடங்களும் தாக்கப்பட்டன. 1970-80களில் எம்ஜிஆரால் பிரிவினைவாதம் கொஞ்சம் குறைந்தது. “மாநில சுயயாட்சி” போர்வையில், அவ்வப்போது, திராவிடத்துவ சித்தாந்திகள் பேசுவது வழக்கமாக இருக்கிறது.
“ஆரியன்–திராவிடன்” இனவாதம் முதல் திராவிடியன் ஸ்டாக் இனவெறிவாதம் வரை: திராவிட சித்தாந்திகள் தமிழரை, தமிழகத்தை பிரித்து வைத்து, துவேசத்தை வளர்த்து வருவது: தமிழகத்தில் கடந்த நூறாண்டு காலத்தில், –
- தமிழ்-தமிழரல்லாதவர்,
- திராவிடன் – ஆரியன்,
- தென்னகத்தவன் – வடக்கத்தியன்,
- வடக்கு வாழ்கிறது-தெற்கு தேய்கிறது
- ஹிந்தி-ஹிந்தி-திணிப்பு
- ஹிந்தி-எதிர்ப்பு இந்தி-திணிப்பு
போன்ற பிரச்சாரங்களால், மற்ற மொழி பேசும், மற்ற மாநிலத்தவர் மீது, மனங்களில் துவேசத்தை வளர்த்து கொண்டிருக்கிறார்கள். “வந்தேறி” தத்துவம் எப்பொழுதுமே உணர்ச்சிப் பூர்வமாக எடுத்துக் கொண்டு, மற்றவர்களைத் தாக்கப் பயம் படுத்தப் பட்டு வருகிறது. பிராமணர், மார்வாடி, குஜராத்தி, வடவிந்தியன் போன்ற பிரிவினை துவேசம் இன்றும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.யைப்பொழுது அது “குஜராத்திற்கு” எதிராக இருக்கிறது. எந்த பிரச்சினை என்றாலும், “தமிழன்” என்று தான் அடைமொழி போட்டு செய்தி போடுவது, ஊடகங்களுக்கும் வாடிக்கையாக இருக்கிறது. ஶ்ரீலங்கா மதப்பிரச்சினை என்றாலும், “தமிழர்-முஸ்லிம்” என்று தான் செய்திகள் வெளியிட்டு, மதப்பிரச்சினையை மறைக்கப் பார்த்தனர்.
2021ல் ஸ்டாலின், திராவிடியன் ஸ்டாக் என்று கிளம்பியுள்ளார்: முத்துவேலர் கருணாநிதி ஸ்டாலின் என்கின்ற நான் என்று பதவியேற்று, தான் திராவிடியன் ஸ்டாக் என்று குறிப்பிட்டுக் கொண்டாலும், விளம்பர அரசியல் நடத்திக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் தான், திராவிட மொழி பேசும், தனிநாடு கேட்கும், திராவிட இனத்தவரான பலூச்சிஸ்தான் மக்கள் ஜின்னாவில் சிலையை தகர்த்துள்ளனர். இங்கு, கருணாநிதிக்கும், பெரியாருக்கும் சிலைகள் வைப்போம் என்று கிளம்பியுள்ளனர். பிரஹூயி, பிரோஹி, பிரஹூய், என்றெல்லாம் குறிப்பிடப் படுகின்ற மொழி திராவிடக் குடும்ப மொழி என்று திராவிடத்துவ வாதிகள் தம்பட்டம் அடித்துக் கொள்கிறார்கள், இன்றும் மேடைகளில் டமாரம் அடிக்கிறார்கள்! பிறகு, அம்மொழி பேசும் மக்களைக் கொடுமைப் படுத்தும் பாகிஸ்தானை ஏன் திராவிடத்துவ வாதிகள் கண்டு கொள்வதில்லை?
பொருளாதாரம்–நிதி என்று வந்தால் சித்தாந்தம் முடங்கி விடும்: “காவிரி பிரச்சினை” என்றாலும், திராவிட அரசியல்வாதிகளின் கையாலாகாத விசயத்தை மறைத்து, கர்நாடகாவை, கன்னட மொழி பேசுபவர்கள் மீது வெறுப்பை-காழ்ப்பை வளர்த்து வருகின்றனர். அதற்கு சத்தியராஜ், விவேக் போன்ற நடிகர்களும் உடந்தையாக இருந்தனர். ஒரு திரைப்படத்தில், “இது பெங்களூரு கத்தரிக்காய், காவிரி நீரால் வளர்ந்து பெரிதாக இருக்கிறது, அது தமிழக கத்திரிக்காய், சிறிதாக இருக்கிறது, காவிரி நீர் கிடைத்தால், அதுவும் பெரிதாக வளரும்,” என்று சொல்வது, பிரிவினையின் வக்கிரகத்தைத் தான் வெளிக்காட்டியது. ஐடியால் கர்நாடகா வளர்ந்த நிலையிலும், வியாபார சம்பந்தங்களினாலும், இப்பொழுது அடக்கி வாசிக்கப் படுகிறது. சன்–குழுமங்களின் தொடர்புகள் அறிந்த விசயமே. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, அவை வேறு வகையிலும் செயல்படுகின்றன. பொருளாதாரம், நிதியுதவி, திட்டங்கள் என்றெல்லாம் வரும் பொழுது, “ஒன்றியம்”என்று வேலை செய்யாது. தொடர்ந்து கவர்னரை எதிர்த்து வந்தாலும், வினையில் தான் சென்று முடியும்.
தேசத் துரோகம் எல்லாவற்றிலும் தான் செயல்படுகிறது: தினம்-தினம் கொலைகள், தற்கொலைகள், செக்ஸ்-வக்கிர வன்மங்கள் (அப்பா மகளை கற்பழிப்பது, மாமனார் மறுமகளிடம் எல்லை மீறுவது), வன்முறைகள், குடும்பசீரழிவுகள், கணவன்–மனைவி உறவுகள் சீரழிதல், தாம்பத்தியத்தை மீறிய உறவுகள், குடும்பக் கொலைகள் (அப்பா மனனைக் கொல்லுதல், மகன் அப்பாவைக் கொல்லுதல் முதலியன), குறைந்து வரும் மாணவ-மாணவியர் ஒழுக்கம், நடத்தை, லஞ்சத்தைப் பற்றி சொல்லவே வேண்டாம், தினம்-தினம் கைது, சஸ்பெண்ட் என்ற செய்திகள்…இந்நிலையில் திராவிடக் கட்சிகள் பரஸ்பர குற்றச் சாட்டுகள் சொல்லிக் கொண்டு தப்பிக்க / காலந்தள்ள முடியாது. விலைவாசிகள் ஏறுகின்றன என்றால், வியாபர ஒழுக்கம், வணிக தராதரம், முதலியவைப் பற்றி கண்டுகொள்வதில்லை. சங்கங்கள் மூலம் அரசியல் செய்யும் போது, கூட்டுக் கொள்ளைதான் அடிக்கிறார்கள். தக்காளியை ரோடிலும் கொட்டுவார்கள், ரூ.100/-க்கும் விற்பார்கள். கேட்டால் பெரிய பொருளாதார நிபுணன் போல, சப்ளை-டிமான்ட் என்றெல்லாம் கூடப் பேசுவான் திராவிட வியாபாரி.
© வேதபிரகாஷ்
15-05-2022
[1] இப்பொழுதும் சரவணன், சென்னைப் பல்கலை, சைவசித்தாந்த துறை, போன்ற கும்பல்கள், சைவர் இந்துக்கள் அல்லர் என்று சொல்லி வருகின்றனர். பேஸ்புக்கிலும், இந்த வாத-விவாதங்கள் தொடர்கின்றன.