Archive for the ‘தங்கபாலு’ Category

சாமானியர் காமராஜா,​​ கருணாநிதியா?

ஜூலை 17, 2010

சாமானியர் காமராஜா,​​ கருணாநிதியா?

First Published : 17 Jul 2010 01:55:01 AM IST

சென்னையில் வியாழக்கிழமை காங்கிரஸ் தொண்டர்களுக்கு ஓர் ஆச்சரியம் காத்திருந்தது.​ கோஷ்டிகளுக்குப் பெயர்போன காங்கிரஸில் ஜி.கே.​ வாசன்,​​ ஈ.வி.கே.எஸ்.​ இளங்கோவன்,​​ தங்கபாலு ஆகிய மூவரும் ஒரே மேடையில் காட்சி தந்ததே அதற்கு காரணம்.பெரம்பூர் ராகவன் தெருவில் காமராஜரின் முழு உருவ வெண்கலச் சிலை திறப்பு விழா நடைபெற்றது.​ அதில் வாசன்,​​ இளங்கோவன்,​​ தங்கபாலு என மும்மூர்த்திகளும் அவர்தம் கோஷ்டிகளும் கலந்து கொண்டனர்.

முன்னாள் அமைச்சர் இளங்கோவன் பேசியதுதான் கூட்டத்தின் ஹைலைட்டாக இருந்தது.

“சாமானியனாகப் பிறந்து சாமானியனாகவே மறைந்தவர் காமராஜர்.​ ஆனால்,​​ சாமானியனாகப் பிறந்து குபேரனாக வாழந்து கொண்டிருப்பவர்கள் எல்லாம் காமராஜரோடு தங்களை ஒப்பிட்டுக் கொள்கிறார்கள்.​ நாங்களும் காமராஜர் ஆட்சி தான் நடத்துகிறோம் என்கிறார்கள்.​ ஆனால் ராதாபுரம் பேருந்து நிலையத்துக்கு காமராஜர் பெயர் வைக்கக்கோரி உண்ணாவிரதம் இருந்தால் சிறையில் தள்ளுகிறார்கள்.​ 43 ஆண்டுகாலமாக மற்றவர்களின் வெற்றிக்காக உழைக்கிறோம்.​ இதற்கு விடிவு காலம் எப்போது?​ நாம் கூட்டணி கட்சியின் தேசியப் பிரிவாக இயங்கிக்கொண்டே இருக்கவேண்டியதுதானா?” என்று அவர் பேசியபோது கூட்டம் கைதட்டி ஆர்ப்பரித்தது.

எல்லாவற்றையும் பேசிவிட்டு,​​ “இப்படி கைதட்டி கைதட்டி என்னை பிரச்னையில் மாட்டி விட்டு விடாதீர்கள்’ என்று கூறி கூட்டத்தினரைக் கலகலப்பாக்கினார் அவர்.