Archive for the ‘டாக்டர் பட்டம்’ Category

திருமாவளவனுக்கு கிருத்துவர்கள் சரியான பட்டம் கொடுக்கிறார்கள்!

ஏப்ரல் 27, 2010

திருமாவளவனுக்கு கிருத்துவர்கள் சரியான பட்டம் கொடுக்கிறார்கள்!

திருமாவின் இறைத்தொண்டு: திருமாவளவன் பெரியார்தாசன் மாதிரி, கிருத்துவர்களுக்கு என்றும் புதியவர்கள் அல்லர். திருமா கிருத்துவர் என்ற பேச்சு ஏற்கெனவே உள்ளது. 80களில் கிருத்துவர்கள் நடத்தும் எல்லா கருத்தரங்களிலும் பார்க்கலாம் [குறிப்பாக AICUF, ஐக்கிய ஆலயம் …………..முதலியன]. “கிருத்துவர்களின் காவலன்” என்று போஸ்டர்கள் ஒட்டப் பட்டிருப்பதை பார்த்திருப்பவர்களுக்கு இது ஒன்றும் ஆச்சரியம் இல்லை. கிருஸ்துமஸ் கொண்டாட்டத்தைப் பார்க்க்க வேண்டுமே, அங்குதான் திருமாவின் உண்மையான உருவத்தை பார்க்கலாம். இறைத் தொண்டின் மகிமையே மகிமைதான்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவரும், எம்பியுமான தொல். திருமாவளவனுக்கு இறையியல் கல்லூரியான குருகுலம் அகாடமி சார்பில் டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது. இதுகுறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைமை நிலையச் செயலாளர் வன்னி அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் கால் நூற்றாண்டுக்கும் மேலாக சமூகப் பணி ஆற்றி வருகிறார். இந்தப் பணியைப் பாராட்டி உலக அளவில் செயல்பட்டுவரும் இறையியல் கல்லூரியான குருகுலம் அகாடமி, டாக்டர் (முனைவர்) பட்டம் வழங்க உள்ளது. 2009ம் ஆண்டுக்கான டாக்டர் பட்டத்தை திருமாவளவனுக்கு இக் கல்லூரி வரும் 18.07.2010 அன்று வழங்க உள்ளது என்று கூறியுள்ளார்.  சமூகப் பணி மற்றும் இறைதொண்டு ஆகியவற்றில் சிறப்பான முறையில் பணியாற்றிய சிந்தனையாளர்கள் மற்றும் களப் போராளிகளுக்கு இக்கல்லூரி கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக டாக்டர் பட்டம் வழங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

கிருத்துவர்கள் முந்தி கொண்டார்கள் போலும்: பெரியார்தாசன் மாறியதும், முஸ்லீம்கள் திருமாவிற்கு வலை வீசினர், “வாருங்கள்”, என்று வரவேற்பு கொடுத்து, சிவப்புக் கம்பளத்தினையும் விரித்தனர். ஆனால், நிலைமையை அறிந்து உசாராகி விட்டனர் கிருத்துவர்கள்!

கருணாநிதி-ஜெயலலிதா சண்டை ஆரம்பித்துவிட்டது! இப்பொழுது பாட்டு!!

திசெம்பர் 16, 2009
ஜெயலலிதா பாட்டு – கருணாநிதி விளக்கம்
Created On 12-Jan-10 10:40:09 AM

http://www.dinamalar.com/fpnnewsdetail.asp?news_id=6247

ஆளுநர் உரை கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்று பேரவைக்கு எதிர்க்கட்சித்தலைவர் ஜெயலலிதா வந்திருந்தார். உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் பேசிய அவர், கடைசியாக எம்ஜிஆரின் பாடல் ஒன்றைச் சொல்லி பேசி முடித்தார். அதற்கு முதலமைச்சர் கருணாநிதி அதே பாடலை வைத்தே ஒரு விளக்கத்தை அளித்தார்.

கருணாநிதி பேசுகையில், ” எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள் தன்னுடைய உரையின் இறுதியிலே மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களுடைய பாடலை இங்கே சொன்னார்கள். அந்தப் பாட்டு அவர்களுக்காகப் பாடியதல்ல. எனக்குத் தெரியும் – எம்.ஜி.ஆர். அவர்கள் என்னை மனதிலே கொண்டு பாடிய பாடல் அது. ஏனென்றால் என்னுடைய நாற்பதாண்டு கால நண்பர் அல்லவா? இன்னும் சொல்லப் போனால் திராவிட முன்னேற்றக் கழகத்தின் கட்சித் தேர்தல் நடைபெற்ற போது – தலைவராக நான் தான் வர வேண்டுமென்று எண்ணி அதற்காகப் பாடுபட்டவர், அதற்காக ஆட்களைச் சேர்த்தவர். அந்த நன்றி எனக்குண்டு, சாகின்ற வரையிலே உண்டு. அதைப் போல இந்தப் பொறுப்புக்கு நான் வர வேண்டுமென்று விரும்பியவர்களில் அவரும் ஒருவர். ஆகவே நான் அவருக்கும் எனக்கும் உள்ள நாற்பதாண்டு கால நட்பின் காரணமாக சொல்லுகிறேன். இங்கே அவர் இறுதியில் ஒரு பாடலைச் சொன்னாலுங்கூட – அதனை நான் இப்படித் தான் கருதிக் கொள்கிறேன்.

என்ன தான் நடக்கும், நடக்கட்டுமே!

இருட்டினில் நீதி மறையட்டுமே!

தன்னாலே வெளி வரும் தயங்காதே!

ஒரு “தலைவன்” இருக்கின்றான் மயங்காதே!

அதாவது ஒரு தலைவன் இருக்கின்றான் மயங்காதே என்று தான் – என்னைக் குறிப்பிட்டுத் தான் சொல்கிறார் – ஒரு தலைவி இருக்கிறார் மயங்காதே என்று சொல்லவில்லை (மேஜையைத் தட்டும் ஒலி) . இதை இந்த அவையிலே உள்ள உறுப்பினர்கள் எம்.ஜி.ஆருடைய அந்த நம்பிக்கையான வார்த்தையை ஏற்றுக் கொண்டு, இந்த அவையை சிறப்பாக நடத்த வேண்டும்” என்று பேசினார்.

“ஜெயலலிதாவின் பேச்சு கருணாநிதிக்கு பிடிக்கும்

சென்னை: “எதிர்க்கட்சித் தலைவரின் பேச்சு முதல்வருக்கு மிகவும் பிடிக்கும் என்று அமைச்சர் அன்பழகன் கூறினார். சட்டசபையில் ஜெயலலிதா பேசும்போது;”திருட்டு விசீடி”  தொழிலை ஒழிக்க முதல்வர் நடவடிக்கை எடுத்ததற்காக அடுத்த மாதம் திரைப்படத் துறையினர் பாராட்டு விழா நடத்த இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. “திருட்டு விசீடி”  தொழிலில் ஈடுபடுவோரை குண்டர் சட்டத்தில் அடைப்பதற்கு நான் தான் நடவடிக்கை எடுத்தேன்.

ஆளும் கட்சி உறுப்பினர்களின் பாராட்டு முதல்வருக்கும் பெரிய வியப்பை அளிக்காது. அதனால்தான் திரைப்படத் தயாரிப்பாளர்கள்,இயக்குநர்கள், நடிகர்கள் புகழ்ந்துபேசினால் முதல்வருக்கு மிகவும் பிடிக்கும் போலும்” என்றார்.

உடனே அமைச்சர் அன்பழகன் குறுக்கிட்டு, “எதிர்க்கட்சித் தலைவர் இப்படிப் பேசுவது எதிர்க்கட்சித் தலைவருக்குரிய கண்ணியத்தைப் பாதிக்கும். திரைப்படத் துறையினர் மட்டுமல்ல, எதிர்க்கட்சித் தலைவர் பேசுவது கூட முதல்வருக்கு பிடிக்கத்தான் செய்யும்” என்றார். அப்போது ,முதல்வர் கருணாநிதி சபைக்குள் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கருணாநிதி-ஜெயலலிதா சண்டை ஆரம்பித்துவிட்டது!

எதற்கு நேரம் இருக்கிறதோ இல்லையோ, இவ்விருவருக்கும் இந்த வயதிலும் பகைமை பாராட்டுவதில் வல்லவர்களாக இருக்கிறார்கள்!

கருப்பு நிறத்தில் இருப்பது “விடுதலையில்” வெளிவந்தது! சிவப்பு நிறத்தில் இருப்பது என்னுடைய விமர்சனம்!

சிறுபான்மையினருக்கு தி.மு.க. ஆட்சி உதவி செய்யவில்லையா? முதலமைச்சர் கலைஞர் பதில்

http://viduthalai.periyar.org.in/20091216/news01.html

சென்னை,டிச.16_ முதல்-வர் கலைஞர் நேற்று வெளி-யிட்டுள்ள-அறிக்கை வருமாறு:

வரும் 19ஆம் தேதி இடைத்தேர்தல். எதிர்க்-கட்சி-யின் சார்பில் இது-தான் தருணம் என்று ஏதேதோ குற்றச்சாட்-டுகளை நம்மீது சாற்று-கின்றனர். மீனவர்களுக்கு நாம் எதுவும் செய்ய-வில்-லையாம். சிறுபான்-மை-யோருக்கு அவர்கள்-தான் பிரதிநிதிகளாம். அருந்த-தியர்களுக்காக நாம் கொடுத்த வாக்கு-றுதி-களை அமலாக்கவில்-லை-யாம்,பேசியிருக்கி-றார்-கள் திருச்செந்தூரிலே சென்று.

சிறுபான்மையினரைத் தாக்கியவர் ஜெயலலிதா: 1992ஆம் ஆண்டு கர-சேவையின்போது பெரும்-பான்மையினருக்கு ஆதர-வாக ஜெயலலிதா பேசும்-போது சிறுபான்மையி-னரைத் தாக்கிப்பேச-வில்லையா? அப்போது என்ன பேசினார்? அரசி-யல் சட்டத்தின்படி பெரும்-பான்மையின-ருக்குக் கிடைக்கும் சாதா-ரண உரிமைகளையும், சிறப்பு-ரிமைகளையும் பாதிக்கும் வகையில், தங்கள் நலன்-களை முன் வைத்து செயல்படுவது சிறுபான்-மையினருக்கு ஏற்றது அல்ல. இந்த நாட்-டில் பெரும்பான்மை-யோர் இந்துக்கள். பெரும்-பான்-மை-யினரும், அவர்க-ளுடைய உரிமைகளை சிறு-பான்மையினரைப்-போல அனுபவிக்க அனு-மதிக்க வேண்டும். அயோத்-தியில் கோயில் கட்டப்-பட வேண்டும் என்பது இந்த நாட்டின் பெரும்-பான்மையான மக்களின் விருப்பத்தைப் பிரதிநிதித்-துவப்-படுத்-துவதாக உள்-ளது. பெரும்-பான்-மை-யான மக்களின் கருத்தை நாம் புறக்கணிக்-கக்-கூடாது இவ்வாறு பேசி-யவர், இப்போது திருச்-செந்தூருக்குச் சென்று சிறுபான்மை-யி-னருக்கு வேண்டியவர் என்பதைப் போல பேசு-கிறார். இஸ்-லாமியர்க-ளுக்கும், திமுக-வுக்கும் குறிப்பாக எனக்-கும் உள்ள நெருக்கத்-தைப் பற்றி அந்த மக்கள் அறிய மாட்டார்களா? இதோ ஒன்றிரண்டு சான்-றுகள் கூறவா?

இவரும்தான் ஆதரித்து பேசினார் என்று அம்மையர் ஏற்கெனவே எடுத்துக் காட்டிவிட்டார்! எதற்கு பிறகு இத்தகைய சொதப்பலான பதில்!

சிறுபான்மையினருக்கு சலுகைகள்: 1969இல் மீலாது நபிக்கு முதன்முதல் அரசு விடுமுறை; முந்தைய அ.தி.மு.க. அரசு 2001இல் ரத்து செய்த மீலாது நபி அரசு விடுமுறையை 15.11.2006 ஆணை மூலம் மீண்டும் விடுமுறை நாளாக அறிவித்தது;

ஆமாம், துலுக்க நாடுகளிலேயே விடுமுறை இல்லையாம். இவருக்கு என்ன அப்படி பொத்துக் கொண்டு வ்அருகிறது என்றுத் தெரியவில்லை?

1973இல் உருதுபேசும் லப்-பைகள், தெக்கனி முஸ்-லிம்கள் ஆகியோரைப் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்தது;

அடடா! இஸ்லாத்திற்கு எதிராக இப்படி செய்வதைக் கண்டு, அறிந்து எப்படி உண்மையான முஸ்லிம்கள் அமைதியாக இருக்கின்றனர்? அவர்களுக்குத் தான் ஜாதியில்லை என்று சொல்லுகின்றனெறே. பிறகு எப்படி கருணாநிதி அல்லாவிற்கு எதிராக முஸ்லிம்களை ஜாதிகள் மூலம் கட்ட முடியும்?

1989 இல் இஸ்லாமியர் உள்ளிட்ட சிறுபான்மை-யினர் சமுதாய மக்கள் பெரும்பயன் எய்திடும் வகையில், சிறுபான்மையி-னர் நல ஆணையம் உரு-வாக்கியது;

எதற்கு பெரும்பானமை ஆணையம் உருவாக்கவில்லை? ஜெயலலிதாவும் செய்யவில்லை. இப்பொழுது புரிகிறதா, இந்த கழககங்களின் போலித்தனத்தை?
1999ல் வக்பு வாரியச் சொத்துக்களைப் பராமரிப்பதற்கென முதன்-முறையாக ரூ.40 லட்சம் வழங்கியது;

அப்பணத்தில் காஃபிர் பங்கும் இருக்குமே? பிறகு எப்படி அல்லா ஒப்புக் கொண்டார்? இன்று 2009 வரை யாரும் கேட்காமல் இருப்பது ஆச்சரியம் தான்!1999 இல் தமிழ்நாடு சிறுபான்-மையினர் மேம்பாட்டுக் கழகம் உருவாக்கியது;

1989 ல் ஏற்படுத்தப்பட்ட சிறுபான்மையினர் நலவாரியத்திற்கும், இதற்கும் என்ன வித்தியாசம்? பிறகு ஜெஸியா, ஜகாத் முதலியன என்னாவது?
2000-_ ஆண்டில் உலமா ஓய்வூதியத் திட்டத்தை தர்க்காக்களில் பணிபுரி-யும் முஜாவர்களுக்கும் நீட்டிப்பு செய்தது;

அல்லா இதனை ஏற்ப்பாரா?

2000_ ஆண்டில் உருது அகடமி-யைத் தொடங்கியது;

அரபி அகடமியை ஏண் உருவாக்கவில்லை?

2001இல் காயிதே மில்லத் மணிமண்டபம் ரூ.58 இலட்சத்து 69 ஆயிரம் செலவில் சென்னையில் திறக்க ஆவன செய்தது;

யாராவது கேட்டார்களா? இந்த “மணி மண்டபம்” கட்டும் வியாபாரம் பற்றி ஒன்றும் புரியவில்லை!சிறு-பான்மையினரின் நலனுக்கென தனி இயக்கு-நரகம் அமைத்தது;

ஐயோ நரகமா? முஸ்லிம்கள் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும்.

உலமா மற்றும் பணியா-ளர்கள் நல வாரியம் ஏற்படுத்தியது; என்று இஸ்-லாமிய சமுதாயத்திற்கு கழக அரசு வழங்கியுள்ள சலுகைகளும், நன்மை-க-ளும் கணக்கிலடங்கா-தவை.

எதற்கு பிறகு இவ்வளவு கஷ்டப்பட்டு பதில் கொடுக்கவேண்டும்?

2001 முதல் 2006 வரை அ.தி.மு.க. அமைச்-சரவையில் முதலில் ஆறு மாதம் முஸ்லிம் சமுதா-யத்தின் பிரதிநிதியாக அன்-வர் ராஜா இடம் பெற்-றிருந்தார்; அதற்குப்-பிறகு முஸ்லிம் பிரதி-நிதியே இல்லாமல்தான் அ.தி.மு.க. அமைச்சரவை நடைபெற்றது.

எதற்கு முஸ்லிம்கள் இருக்கவேண்டும்? இதென்ன சட்டமா?

தற்பொ-ழுது திமுக ஆட்சியில் உபயதுல்லா, மைதீன்-கான் ஆகியோர் அமைச்-சர்களாக உள்ளனர். முஸ்-லிம் சமுதாயத்தினருக்குப் பிரதிநிதித்துவம் இல்-லாத தி.மு.க. அமைச்சர-வையே இதுவரை இருந்-ததில்லை.

எதற்கு இந்த போலித்தனம்? ஜின்னாவையே வென்று, கருணாநிதி பாகிஸ்தானின் பிரத மந்திரியாகவா போகிறார்?

முஸ்லிம்க-ளுக்கு 3.5 சதவிகித தனி இடஒதுக்கீடு வழங்கியது திமுக அரசு.

குரானின்படி, இதுவும் ஹராம்தான்! எதற்கு இந்த ஜாதித்துவம்?

இது போலவே மீனவர்களுக்கு திமுக அரசு செய்த சாத-னை-களில் ஒரு சிலவற்றையும்ஞாபகப்படுத்த விரும்புகிறேன்.

சிங்கார வேலல் பெயர் சூட்டினேன்: சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திற்கு சிங்காரவேலர் பெயரைச் சூட்டியதே நான்தானே. மீனவர்களுக்கான டீசல் மானியத்தை உயர்த்திக் கொடுத்தது திமுக அரசு. கடலில் மீன் பிடிக்கச் செல்லும் மீனவர் காணாமல் போனால், அவர் திரும்பி வரும் வரையில் அவரது குடும்பத்-துக்கு நாள் ஒன்றுக்கு 50 ரூபாயும் இலங்கை படை-யினரால் சுடப்பட்டு உயிரிழக்கும் மீனவர் குடும்பத்திற்கு ரூ. ஒரு லட்சமும் வழங்கப்படுகிறது. மீன் பிடித்தொழில் மேற்கொள்ளப்படாத காலங்களில் மத்திய மற்றும் மாநில அரசின் 50 சதவிகித பங்குத் தொகை ரூ. 300 சேர்த்து வழங்கப்படும் நிவாரணத் தொகை 2006_2007இல் ஒரு லட்சத்து 79,853 உறுப்பினர்களுக்கு ரூ.21 கோடியே 20 லட்சமும், 2007_2008இல் ஒரு லட்-சத்து 76 ஆயிரத்து 17 உறுப்பினர்களுக்கு ரூ.20 கோடியே 83 லட்சத்து 29 ஆயிரத்தையும் நிவாரணத் தொகையாக வழங்கப்பட்டுள்ளது. மீன் இனப் பெருக்கக் காலமாக கருதப்படும் காலங்களில் மீன் பிடித் தொழிலில் ஈடுபட முடியாத 2 லட்சம் குடும்பங்களுக்கு தலா ரூ.500 வீதம் ரூ.10 கோடி நிவாரண உதவியாக வழங்கும் புதிய திட்டம் 2008_2009இல் தான் நடைமுறைப்படுத்தப்பட்டது.

மீனவர் நல வாரியம் அமைக்கப்பட்டு ரூ. 5 கோடி நிதியும் திமுக அரசின் சார்பில் வழங்கப்பட்டு உள்ளது; மீனவர்கள் பயன் பெற உலகத் தரம் வாய்ந்த மீனவர் பயிற்சி நிலையம். சுனாமியால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு மீன்பிடி சாதனங்-களை கூடுதல் நிவாரணமாக வழங்கும் பொருட்டு ரூ.110 கோடியே 36 இலட்சம் செலவில் பொருட்கள் வழங்கப்பட்டன. 147 முதன்மை மீனவ கூட்டுறவு சங்கங்களின் மூலம் 5635 மீனவர்களுக்கு வழங்கப்பட்ட ரூ. 19 கோடியே 56 இலட்சம் கடன் மற்றும் வட்டி முழுவதையும் திமுக அரசு தள்ளுபடி செய்துள்ளது. கழக அரசைப் பொறுத்த வரையில் மீனவர்கள், சிறுபான்மையோர் என்றல்ல; அனைத்துத் தரப்பு மக்களுக்கும் எல்லாவித நன்மைகளையும் செய்ய வேண்டுமென்ற ஒரே நோக்கத்தோடுதான் பாடுபட்டு வருகின்றது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

எல்லாம் சரிதான்!

அரிசிவிலையை யார் குறைப்பது? [அரிசி மட்டுமல்ல, பருப்பு, எண்ணை, சர்க்கரை எல்லாமே]

வெங்காயம் விலையை யார் குறைப்பது? [வெங்காயம் மட்டுமல்ல, மற்ற எல்லா காய்கறிகளும்]

இதற்கு இவ்விருவரும் என்ன செய்யப் போகிறார்கள்?
முன்னம் ஒரு கட்டுரையில் குறிப்பிட்டது போல, காய்கறி கடைகள் வைத்து காய்கறி விற்றாலாவது மக்களுக்குப் புண்ணியம்!