Archive for the ‘சரவண சித்தர்’ Category

சென்னிமலை சரவண சித்தர், சிலை கடத்தல் சமாசாரத்தில் போலீஸாரிடம் சிக்கியதும், விடுவிக்கப்பட்டதும் – ஆத்திக-நாத்திக போராட்டம்!

ஜூன் 6, 2016

சென்னிமலை சரவண சித்தர், சிலை கடத்தல் சமாசாரத்தில் போலீஸாரிடம் சிக்கியதும், விடுவிக்கப்பட்டதும் ஆத்திகநாத்திக போராட்டம்!

சரவண சித்தர் - அஷ்டமுக லிங்கம் - 05_06_2016_016_011

சரவண சித்தர் போலீஸாரிடம் மாட்டிக் கொண்டது எப்படி?: சென்னையைச் சேர்ந்தவர் தீனதயாள், ௭௮; சர்வதேச சிலை கடத்தல்காரன் சுபாஷ் சந்திரகபூரின் நெருங்கிய கூட்டாளி. இவர் வீட்டில், பல கோடி ரூபாய் மதிப்புள்ள சிலைகளை, போலீசார் மீட்டுள்ளனர். இந்நிலையில், சிலை கடத்தல் தொடர்பாக, அப்பிரிவு போலீசார் சென்னிமலையில் நடத்திய, ‘நாடகம்’ தற்போது வெட்ட வெளிச்சமாகியுள்ளது. இந்நிலையில், சிலை கடத்தலில் திருப்பூர் மாவட்டம், படியூர் பகுதியைச் சேர்ந்த சிலருக்குத் தொடர்பு இருப்பதாக திருப்பூர் தனிப்படை காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, தனிப்படையினர் திருப்பூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களுக்குச் சென்று விசாரணை மேற்கொண்டனர்[1]. திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி – படியூர் வழியில் சிவகிரி என்ற இடத்தில், நேற்று முன்தினம் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்[2]. அப்போது ஒரு காரில், டிரைவர் உட்பட மூன்று பேர் வந்தனர்[3]. முதலில் அவர்களின் பெயர்களை வெளியிட போலீஸார் மறுத்தனர். அவர்களிடம், எட்டு முகம் கொண்ட ஐம்பொன் ஈஸ்வரன் சிலை இருந்தது. விசாரணையில், அவர்கள் சென்னிமலை சுந்தரர் வீதியில், சித்தர் பீடம் நடத்தி வரும் சரவண சித்தர், 47; அவரது தம்பி முருகன், 41; திருச்சி மணச்சநல்லூரைச் சேர்ந்த மனோகரன், 40 என்பது தெரியவந்தது. சிலையை விற்க அவர் கொண்டு சென்றதும் தெரியவந்தது.

அஷ்டமுக சிவலிங்கம் சிலையா - விக்கிரகமாஎட்டுதலை ஈஸ்வரன் சிலை சரவண சித்தரிடம் வந்தது எப்படி?: நான்கு மாதத்துக்கு முன், சரவண சித்தரிடம் பக்தர் ஒருவர் தந்த சிலையே அது என்பதும் தெரிந்தது.  “கடந்த 15 நாளுக்கு முன்பு மடத்திற்கு வந்த பக்தர் ஒருவர் 15 சென்டிமீட்டர் உயரம் கொண்ட பித்தளையினால் ஆன 8 முகம் கொண்ட சிவன் சிலையை கொடுத்துள்ளார்”, என்று தினகரன் கூறுகிறது[4]. நான்கு மாதமா அல்லது 15 நாட்களா என்பதை ஊடகங்கள் அல்லது போலீஸார் தான் தீர்மானிக்க வேண்டும். தன் வீட்டில் வைத்திருந்தால் பிரச்னையாக உள்ளது. எனவே, சித்தர் பீடத்தில் வைக்குமாறு கொடுத்துள்ளார். இப்பொழுதெல்லாம் வேண்டிய காரியம் நடக்க வேண்டும் என்று அரைகுறையாக மந்திர-தந்திர-யந்திர வேலைகளில் சிலர் ஈடுபட ஆரம்பித்துள்ளனர். இவர்களது விபரீத எண்ணங்களினால், புதிய-புதிய தேவதைகள் அவற்றின் விக்கிரகங்கள் உருவாகின்றன[5]. பாதி விநாயகர், பாதி ஆஞ்சனேயர் (ஆதி அந்த பிரபு) போன்ற விக்கிரகங்கள் உருவாக்கப்படுகின்றன. அவற்றிற்கான கோவில்கள், ஸ்தலபுராணங்கள், பூஜைகள், யாகங்கள் முதலியனவும் உருவாக்கப்படுகின்றன. பலன் கிடைத்த பக்தர்களின் ஒப்புதல்கள் என்று அதிகமாகிக் கொண்டிருக்கின்றன. ஆனால் அதே நேரத்தில் பலன் கிடைக்காதவர்கள் அல்லது எதிர்மறை விளைவுகளை சந்தித்தவர்கள் அவ்விக்கிரகங்களை எப்படியாவது தங்களை விட்டு நீங்கினால் போதும் என்ற நிலைக்குத் தள்ளப் படுகின்றனர். அதுபோல தன்னிடம் வந்து சேர்ந்த இந்த எட்டுதலை ஈஸ்வரன் விக்கிரகத்தை நான்கு மாதமாக சரவண சித்தர் பூஜை செய்து வந்துள்ளார்.

அஷ்டமுக சிவலிங்கம் விக்கிரகம் விற்கப்படுகிறதுசிலைக்கடத்தல் வழக்கிற்கு சம்பந்தம் இல்லை என்று சித்தர் விடுவிப்பு: இந்நிலையில், சென்னையில் வசிக்கும் அவரது தம்பி முருகன், ஜவுளி வியாபாரி, அந்த சிலையை போட்டோ எடுத்து, ‘வாட்ஸ் ஆப்’பில் வெளியிட்டுள்ளார். இதை முருகனின் நண்பரான திருச்சி மணச்சநல்லூரை சேர்ந்த மனோகரனுக்கு அனுப்பி உள்ளனர்.இந்த போட்டோவை, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரும் பார்த்துள்ளனர். தமிழகம் முழுவதும் சிலை கடத்தல் சம்பவம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், அந்த கும்பலுக்கும், முருகனுக்கும் தொடர்பு இருக்கலாமோ என்ற சந்தேகம் எழுந்தது[6]. இதையடுத்து, நாடகமாடி முருகனை பிடிக்க முயன்றனர். இதன்படி, முருகனுக்கு போலீசார் ஆசை காட்டினர். முதலில் மறுத்த முருகன், ஆறு கோடி ரூபாய் தருவதாகக் கூறியதும் ஒப்புக் கொண்டுள்ளார்[7]. இதை சபலமா, ஆசையா, உள்நோக்கமா என்று தெரியவில்லை. சிலையை எடுத்து வருமாறு, போலீசார் கூறியுள்ளனர். அழைப்பது போலீசார் என தெரியாமல், காரில் சிலையுடன் மூவரும் சென்றபோது தான், வாகன தணிக்கையில் சிக்கியுள்ளனர்[8]. விசாரணையில், ஒரு பக்தர் தந்ததும், ஆறு கோடி ரூபாய் ஆசை காட்டியதால், விற்பதற்கு எடுத்துச் சென்றதும் உறுதியானது. இதனால், சிலை கடத்தல் கும்பலுக்கும், இவர்களுக்கும் தொடர்பு இல்லை என்பதும் தெரியவந்தது. இதில், சிலை கடத்தப்படவில்லை என்பதும், கடந்த 15 நாட்களுக்கு முன்பு மடத்திற்கு வந்த பக்தர் ஒருவர் தோட்டத்தில் கிணறு வெட்டும் போது கண்டெடுத்த சிலை  என்பதை போலீசார் உறுதி செய்தனர்[9]. கிணறு தோண்டும் போது சிலை கிடைத்தால் ஏன் உரிய அதிகாரிகளுக்கு தெரிவிக்கவில்லை என்பதும் நோக்கத்தக்கது. இதையடுத்து சரவணன், முருகன், மனோகரன் ஆகியோரை போலீசார் விடுவித்தனர்[10]. அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட சாமி சிலையை  சென்னிமலை போலீஸ் ஸ்டேஷனில் வைத்துள்ளனர். இந்த சிலையை தொல்லியல் துறையிடம் ஒப்படைக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்[11].

அஷ்டமுக சிவலிங்கம் -சித்தர் வைத்திருந்ததும், வலைதளத்தில் விற்கப்படுவதும் ஒரே மாதிரியாக இருக்கின்றன8-முக சிவன் சிலை, அஷ்டமுகலிங்கம்: 15 சென்டிமீட்டர் உயரம் கொண்ட பித்தளையினால் ஆன 8 முகம் கொண்ட சிவன் சிலை என்று குறிப்பிடப்படுவது சுமார் 9 அங்குலம் உயரம் கொண்ட விக்கிரகம் என்றது தினகரன். (எட்டு முகம் கொண்ட ஐம்பொன் ஈஸ்வரன் சிலை என்றது தினமலர்). ஆக இது பித்தளையா, ஐம்பொன்னா என்ற சந்தேகமும் சேர்ந்து விட்டது. வலைதளத்தைத் தேடிப் பார்த்தாலே, இது அஷ்முகலிங்கம் என்று அழைக்கப்படுகிறது, விறனைக்குள்ளது என்று தெரிந்து கொள்ளலாம். வலைதளங்களில் சாதாரணமாக விற்பனைக்குள்ளது[12]. ரூ.5 முதல் 8 ஆயிரம் வரை விற்கப்படுகிறது. அதாவது பணம், விருப்பம் இருந்தால் யார் வேண்டுமானாலும் வாங்கலாம். ஆகவே, இதை வைத்து அந்த பக்தர், சென்னிமலை சித்தர், விற்க முயன்ற முருகன், போலீசார் முதலியோர் ஆடியது “காமெடி நாடகமா”, பொழுதுபோக்கா என்பது கவனிக்கும்போது தமாஷாக இருக்கிறது.

சென்னிமமை சித்தரும், அவர் வைத்திருந்த அஷ்டமுக லிங்கமும்அறியாத பக்தர்களும், ஆன்மீக குருக்களும், அதிரடி சித்தர்களும்: பொதுவாக இதைப் பற்றிய விசயங்கள் சம்பந்தப்பட்டவர்களுக்குத் தெரியாமல் இருக்கிறது அல்லது தெரிந்தும் மறைக்கிறார்கள், அதனால், இதைப் பற்றி மாயைகள், கட்டுக்கதைகள் முதலியவற்றை உருவாக்குகிறார்கள் என்று தெரிகிறது. பூஜைக்குரிய விக்கிரகம் எந்த அளவில் இருக்க வேண்டும், எப்படி பூஜை செய்ய வேண்டும், பூஜை செய்பவர்கள் பூஜையை எப்படி செய்ய வேண்டும் என்ற முறைகள் எல்லாம் இருக்கின்றன. ஆனால், இப்பொழுது “பாஸ்ட் ஃபுட்”  ரேஞ்சில் பக்தர்களுக்கு உடனடியாக பலன்களை தருகிறோம் என்று சில “சித்தர்கள்” இப்படி இறங்கிவிட்டார்கள் என்பதுதான் தெரிகிறது. மனித வாழ்க்கை முதலியவற்றைப் பற்றி உண்மைகள், தத்துவங்கள் முதலியவற்றை அரைகுறையாக அல்லது எல்லாம் தெரிந்தது போன்று, “கவுன்சிலிங்”, மனோதத்துவ முறையில் அறிவுரை கொடுத்தல் முறையில் செயல்பட்டு, அதற்கு ஆன்மீக போர்வையை போர்த்தி, சித்தர் ஜாலங்களைக் கூட்டி விபரீதங்களில் ஈடுபட்டால், இவையெல்லாமும், மக்களுக்கு, குறிப்பாக நம்பிக்கையாளர்கக்கு பாதகமாகத்தான் போகும், போய் கொண்டிருக்கின்றன.

evr-karu-atheist-path-of-jihadiதிராவிடம், பிரிவினை, நாத்திகம் முதலியவற்றால் கோவில்களுக்கு ஏற்பட்ட சீரழிவுகள்: தமிழகத்தைப் பொறுத்த வரையில் கடந்த 100 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ், தனித்தமிழ், தமிழ்-உயர்வு முதலியவற்றை வைத்துக் கொண்டு பிரிவானை மூலம் பாரதத்திலிருந்து துண்டாட திராவிட சித்தாந்திகள் வேலை செய்தனர். ஆட்சி, அதிகாரம், மணபலம் முதலியவை வந்ததும் கடந்த 60 ஆண்டுகளாக கோவில்கள், மடங்கள், மதநிறுவனங்கள் முதலியவற்றை திராவிட நாத்திகத்தால் சீரழித்தனர். இதனால் தான், கோவில்கள் சீரழிகின்றன, சிதிலமடைகின்றன, விக்கிரங்கள்-சிலைகள் கொள்ளை போகின்றன. இவை பலநிலைகளில் நடந்து கொண்டுருப்பதனால், சம்பந்தப் பட்டவர்கள் மறைக்கப் பட்டு, கடைசியாக மாட்டுபவன் அல்லது அயல்நாட்டுக்கு கடத்தி விற்பவனை காட்டி விட்டு மற்றவர்கள் தப்பித்துக் கொள்ளப் பார்க்கின்றனர். 100 ஆண்டுகளுக்கு மேலான எந்த வழங்காலப் பொருளும் ஏற்றுமதி செய்யக் கூடாது என்றுள்ள போது, அதைவிட குறவான காலத்தைச் சேந்ர்தது என்று சான்றிதழ் கொடுப்பவர்கள், ஏற்றுமதி செய்ய உதவுபர்கள், சுங்கத்துறையை ஏமாற்றுபவர்கள் முதல், கோவிலிலிருந்து எடுத்தவர்கள், திருடியவர்கள், அவற்றை பத்திரமாக எடுத்து இடம் மாற்றியவர்கள், சென்னை அல்லது மற்ற துறைமுகங்களுக்கு எடுத்து வர ஏற்பாடு செய்தவர்கள் என அனைவருமே குற்றவாளிகள் தாம். இதனால், நாத்திகக் குற்றவாளிகள் பலநிலைகளில் ஆத்திகர்களை ஏமாற்றுவதால் தான் இத்தனை சீரழிவுகளும் நடந்து கொண்டிருக்கின்றன.

© வேதபிரகாஷ்

06-06-2016

[1] தினமணி, சென்னிமலையில் சிலை கடத்தல் கும்பலிடம் போலீஸார் விசாரணை, By பெருந்துறை, First Published : 05 June 2016 06:46 AM IST

[2] தினமலர், சிலை கடத்தலில் தொடர்பு? ஊத்துக்குளி அருகே 3 பேர் கைது, First Published : 05 June 2016 06:46 AM IST.

[3]http://www.dinamani.com/edition_coimbatore/erode/2016/06/05/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-/article3467398.ece

[4] தினகரன், சென்னிமலை மடத்தில் 8 முகம் சிலை மீட்டல் மடாதிபதியிடம் போலீசார் விசாரணை, 05-06-2016, ஞாயிறு, 19.04.38.

[5] பிரத்தியங்கரா தேவி, காலகண்டி, பைரவ மஹிஷி,  பிரத்தியங்கரா தேவி என்று உக்கிர தேவதைகளின் விக்கிரகங்கள் தயாரிக்கப் படுகின்றன. அவையெல்லாம் சாதாரணமாக வீட்டில் பூஜை செய்து வழிபடும் தேவதகள் அல்ல.

[6] தினமணி, சென்னிமலையில் சிலை கடத்தல் கும்பலிடம் போலீஸார் விசாரணை, பெருந்துறை, First Published : 05 June 2016 06:46 AM IST

[7] தினமலர், ரூபாய் 6 கோடி ஆசையில் சிக்கிய சித்தர்: சிலை கடத்தல் சம்பவத்தில்காமெடி, ஜூன்.6, 2016. 02.24.

[8]http://www.dinamani.com/edition_coimbatore/erode/2016/06/05/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-/article3467398.ece

[9] தினகரன், சென்னிமலை மடத்தில் 8 முகம் சிலை மீட்டல் மடாதிபதியிடம் போலீசார் விசாரணை, 05-06-2016, ஞாயிறு, 19.04.38.

[10] http://www.dinamalar.com/news_detail.asp?id=1535904

[11] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=221942

[12] http://www.exoticindiaart.com/product/sculptures/ashta-mukha-linga-EV25/