ஜெயலலிதாவுக்கு முன்பு மற்றும் ஜெயலலிதாவுக்கு பின்பு: ஜெயலலிதாவுக்கு நிகராக இன்னொரு திராவிட தலைவர் உருவாகுவது கடினமே!
ஜெயலலிதாவும், ஜி.எஸ்.டி அரசியலும்: ஜி.எஸ்.டியை பற்றி அமித் மித்ரா எந்த அளவுக்கு தெரிந்து கொண்டிருக்கிறாரோ, அதைவிட ஜெயலலிதா தெரிந்து கொண்டிருந்தார் என்பதை, மோடி, அருண் ஜைட்லி, பியூஸ் கோயல் என்று படையெடுத்து வந்து ஜெயலலிதாவைப் பார்த்தது, சந்திக்க முயன்றது, மா ஃபோ பாண்டியன் பேசிய விதம் முதலியவை எடுத்துக் காட்டுகின்றன. இந்திய நிலையில், அதுதான் ஜெயலலிதாவை தேசியத்தலைவர் போன்ற தோற்றத்தை உருவாக்கியது. ஏனெனில், அவர்கள் கேரள அல்லது வங்காள முதலமைச்சர்களைச் சென்று பார்க்கவில்லை, பேசவில்லை. கடந்த தேர்தல்களில், தமிழகத்தில் பிஜேபியை கொஞ்சம் கூட கண்டு கொள்ளவில்லை. மோடி வந்து சென்றாலும், பாராளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தல்களில் தன்னுடைய பலத்தை நிரூபித்தார். ஜி.எஸ்.டியைப் பொறுத்த வரையில், சேவை வரி திரட்டும் அதிகாரத்தை மாநிலங்களுக்கு அளிக்க வேண்டும் என்று உறுதியாகக் கேட்டு வந்தது தமிழகம் தான். இந்நிலையில், காங்கிரஸ் கலாட்டா செய்து வருகின்ற நிலையில், பிஜேபி ஜெயலலிதாவின் ஆதரவை எதிர்பார்த்தது, ஆனால், ஜெயலலிதா காலமானது, எல்லாவற்றையும் முடக்கி விட்டது. ஜெயலிலதாவுக்குப் பிறகு, மோடியின் அதிமுக பக்கம் சாய்தலை இவ்வித்த்தில் தான் காணவேண்டும்.
நடிகை கௌதமி மோடிக்கு எழுதிய கடிதம் (08-12-2016): ஜெயலலிதா இறந்த பிறகு, பலர் அவரை வாழ்த்தி வருவதே வினோதமான போக்காக இருக்கும் நிலையில், கௌதமி, ஜெயலலிதா மரணம் குறித்து பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளது, அதைவிட வினோதமாக உள்ளது. ‘அப்போலோவில் அனுமதிக்கப்பட்ட நாள் முதல் மறைந்த நாள் வரை ஏன் யாரையும் பார்க்க விடவில்லை? ஏன் அவருடைய உடல்நலம் குறித்த தகவல்கள் ரகசியமாக உள்ளன? மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு தலைவரைப் பற்றி மக்கள் தெரிந்துகொள்ளக்கூடாதா?’ என கேட்டுள்ளார்[1]. கடிதத்தில் இருந்து சில வரிகள்[2]: “I ask these questions now because it is a primary concern and right of every citizen of India to be aware of and informed about their democratically elected leaders. To be aware of their state of health and ability to perform their duties for the larger good of the people. To be concerned for the wellness and comfort of a beloved leader of the masses. And the fact that a tragedy of such tremendous scale should not go unquestioned and definitely, not unanswered, under any circumstances. If this be the case with a public figure of this magnitude, then what chance does the common citizen of India have when he fights for his personal rights? Gautami Tadimalla, 08.12.2016”. இப்படி அவரது பிளாக்கில் அக்கடிதம் வெளிவந்ததும், ஊடகங்கள், அதனை செய்தியாக்கி விட்டது[3].
இப்பொழுது நடக்கும் ஊடகதர்மமும், செய்தி வெளியீடுகளும்: இன்றைக்கு பேஸ்புக், டுவிட்டர், வாட்ஸ்-அப் முதலியவற்றில் உள்ளவற்றையெல்லாம் செய்திகளாக்கி வருவது தரமற்ற செயலாக தெரிகிறது. பொதுவாக நிருபர்கள் விசாரித்து, செய்தித்தரம் உள்ளதா என்று பார்த்துதான், செய்திகளை அனுப்புவார்கள். அதனை, ஆசிரியர் பார்த்துப் படித்து, அதனை செய்தியாக வெளியிடலாமா வேண்டாமா என்று தீர்மானித்தப் பிறகு, வெளியாகும், இல்லை குப்பைத் தொட்டிக்கு போகும். பத்திரிக்கை / நாளிதழ் ஆசிரியர் ஊடகதர்மத்தைப் பின்பற்றி வந்தனர். ஆனால், இன்றைக்கு, குப்பைத்தொட்டிக்கு போகவேண்டிய விவகாரங்கள் செய்தியாகின்றன. இது நிருபர்கள் ஆதிக்கம் செல்லுத்துகின்றனரா அல்லது பத்திரிக்கை / நாளிதழ் ஆசிரியர் கைப்பாவைகளாக, பொம்மைகளாக வேலை செய்து வருகின்றனரா என்றா சந்தேகமும் எழுகின்றது. இன்றைக்கு, ஊடகங்கள் பெரும்பாலும், அரசியல் கட்சிகள், தொழிலதிபர்கள், அந்நியநாட்டு ஏஜென்டுகள்-சித்தாந்தவாதிகள் முதலியோரின் கைகளில் உள்ளது என்பது தெரிந்த விசயமாகி விட்டது. தெரிந்து விட்டநிலையிலும், அவை கவலைப்படுவதாக இல்லை. கூட்டணி கொள்ளையில், அவற்றிற்கு விளம்பரங்கள் கிடைக்கின்றன, வாழ்ந்து வளர்கின்றனர். மற்றவை வீழ்ந்து மறைகின்றன.
கௌதமி கடிதத்தின் விவரங்கள்: “ஒரு சாதாரண இந்திய குடிமகளாக நான் இந்த கடிதத்தை எழுதுகிறேன்[4]. சமீபத்தில் காலமான தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் கோடிக்கணக்கான நபர்களில் நானும் ஒருவர். ஜெயலலிதா சிறந்த அரசியல் தலைவர் மட்டுமல்லாமல் பெண்கள் தங்கள் வாழ்வில் எப்படி தடைகளைத் தாண்டி முன்னேற வேண்டும் என்பதற்கும் நல்ல உதாரணம். பல்வேறு நல்வாழ்வுத் திட்டங்களை அவர் நிறைவேற்றியுள்ளார். சமீபத்தில் காலமான அவரின் மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் உள்ளன[5]. அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது, சிகிச்சை அளிக்கப்பட்டது, அவர் குணமாகி வருவதாக கூறப்பட்டது, திடீரென மாரடைப்பால் மரணமடைந்தார் என அறிவிக்கப்பட்டது போன்ற பல சந்தேகங்கள் உள்ளன[6]. பல மர்மங்கள் நிறைந்திருக்கும் அவரது மரணத்தில் இருக்கும் சந்தேகங்களை பிரதமர் மோடி தீர்க்க வேண்டும். முதல்வரின் மரணம் குறித்து அறிந்து கொள்ள, ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் உரிமை உள்ளது[7]. தனிப்பட்ட நபரின் மரணமாக இருந்தால் அறிந்துகொள்ள எங்களுக்கு உரிமை இல்லாமல் இருக்கலாம். ஆனால் மக்களால் விரும்பப்பட்ட, தமிழக முதல்வராக பதவி வகித்த ஒருவரின் மரணம் குறித்து அறிந்து கொள்ள முயற்சி செய்வது எந்த விதத்திலும் தவறும் இல்லை. இந்த கடிதம் குறித்து நீங்கள் நடவடிக்கை எடுப்பீர்கள் என நான் முழுமனதுடன் நம்புகிறேன். இந்த விஷயத்திலும் நீங்கள் உண்மையை வெளிக்கொண்டு வருவீர்கள் என நான் நம்புகிறேன்,” என தனது கடிதத்தில் கௌதமி கூறியுள்ளார்[8].
சி.ஆர்.சரஸ்வதியின் பதில்: இதுதொடர்பாக அதிமுக செய்தி தொடர்பாளர் சி.ஆர்.சரஸ்வதி பிரபல தொலைக்காட்சிக்கு அளித்துள்ள பேட்டியில்[9], “ஜெயலலிதா வேகமாக குணம் அடைந்து வீடு திரும்புவார் என்று அனைவரும் எதிர்பார்த்தோம். அவர் நன்றாக தான் இருந்தார். திடீரென்று அவருக்கு மாரடைப்பு வரும் என்றோ, அவர் நம்மை விட்டு பிரிந்து செல்வார் என்றோ யாரும் நினைக்கவில்லையே?.அதிமுக அல்லாது தமிழகம் மற்றும் இந்தியா அளவில் கட்சியை சேர்ந்தவர்கள் அப்பல்லோ வந்து ஜெயலலிதா உடல்நலம் குறித்து விசாரித்தனர். அவர் உடல்நலம் தேறி வருவதாகவும், விரைவில் வீடு திரும்புவார் என்றே அனைவரும் கூறினர்[10]. இதை கௌதமி அவர்கள் பார்க்கவில்லையா? படித்து தெரிந்து கொள்ளவில்லையா?[11] அரசு மருத்துவர்களாக எய்ம்ஸ் மருத்துவர்கள் தானே சிகிச்சை அளித்தனர், ரிச்சர்டு என்ன அதிமுக–வை சேர்ந்த மருத்துவரா? அத்தனை பேரும் ஜெயலலிதா நன்றாக இருப்பதாகவும், விரைவில் வீட்டுக்கு வந்து விடுவார் என்றும் பேட்டி கொடுத்தனர்[12]. அப்படியானால் அத்தனை பேரும் பொய் சொன்னார்கள் என்று கவுதமி சொல்கிறாரா?. வீணாக யாரும் வதந்தியை பரப்ப வேண்டாம்[13]. நன்றாக உடல் நலம் பெற்று வந்த அவருக்கு எதிர்பாராமல் உடல் நிலை மோசம் அடைந்ததாக லண்டன் டாக்டர் தனது டுவிட்டரில் பதிவு செய்திருக்கிறாரே? ஏன் நேற்று கூட அப்பல்லோ நர்ஸ்களும், மருத்துவர்கள் எவ்வளவு அருமையாக சொல்லி இருக்காங்க? ஏன் காட்டவில்லை என்று கௌதமி கேட்குறாங்க? ஐசியூவில் இருக்கும் போது யாராக இருந்தாலும் முதல்வரை சென்று பார்க்க முடியாது,” என கூறியுள்ளார்[14].
© வேதபிரகாஷ்
12-12-2016
[1] விகடன், ஜெ., மரணத்தில் ஏன் ரகசியம்? – கௌதமியின் கடிதம், Posted Date : 07:44 (09/12/2016); Last updated : 10:06 (09/12/2016).
[2] http://www.vikatan.com/news/india/74516-gautami-writes-to-pm-modi-on-the-mystery-surrounding-jayalalithaas-death.art
[3] Gautami Tadimalla, 4/472, Kapaleeswarar Nagar, Neelankarai, Chennai 600041, +917338713979.
https://gautamitadimalla.wordpress.com/2016/12/08/tragedy-and-unanswered-questions/
[4] தமிழ்.வெப்துனியா, ஜெயலலிதா மரணத்தில் மர்மம் உள்ளது: நடிகை கௌதமி பிரதமருக்கு கடிதம்!, Last Modified: வெள்ளி, 9 டிசம்பர் 2016 (10:46 IST)
[5] http://www.tamil.webdunia.com/article/regional-tamil-news/gautami-raises-questions-on-jayalalithaa-s-mystery-death-writes-to-pm-modi-116120900006_1.html
[6] மாலைமலர், ஜெயலலிதா மரணம் குறித்த சர்ச்சை: பிரதமர் மோடிக்கு நடிகை கவுதமி கடிதம், பதிவு: டிசம்பர் 09, 2016 11:09
[7] http://www.maalaimalar.com/News/District/2016/12/09110950/1055149/Jayalalithaa-death-controversy-actress-gowthami-letter.vpf
[9] லங்காஶ்ரீ, நடிகை கௌதமிக்கு காட்டமாக பதிலடி கொடுத்த சி.ஆர்.சரஸ்வதி, டிசம்பர்.09, 2016.
[10] தினசரி, அதிமுக குறித்து வதந்தி பரப்புவதை கௌதமி நிறுத்த வேண்டும்: ஸி.ஆர்.சரஸ்வதி ஆவேசம், 09-12-2016.09.15.PM IST.
[11] http://www.dhinasari.com/politics/10813-cr-saraswathi-condemn-gauthamis-remark-over-jayalalithas-death-row.html
[12] தினதந்தி, யாரும் வதந்தியை பரப்ப வேண்டாம்: ஜெயலலிதா மரணம் குறித்து சந்தேகத்தை கிளப்புவதா? நடிகை கவுதமிக்கு, சி.ஆர்.சரஸ்வதி கண்டனம், பதிவு செய்த நாள்: சனி, டிசம்பர் 10,2016, 6:48 PM IST; மாற்றம் செய்த நாள்: சனி, டிசம்பர் 10,2016, 11:15 PM IST;
[13] http://www.dailythanthi.com/News/State/2016/12/10184858/I-do-not-want-anyone-to-spread-rumors-Actress-Gautami.vpf