Archive for the ‘கூட்டணி’ Category

கருணாநிதி, ஸ்டாலின், உதயநிதி: இவர்கள் விபூதி வைத்தால் என்ன, துடைத்தால் என்ன? அவர்களுக்கு அதெல்லாம் சகஜம் ஆனால், திராவிடத்துவவாதிகளின் வழிகளை இந்துத்துவவாதிகள் பின்பற்றுவது ஏன்? (2)

நவம்பர் 23, 2020

கருணாநிதி, ஸ்டாலின், உதயநிதி: இவர்கள் விபூதி வைத்தால் என்ன, துடைத்தால் என்ன? அவர்களுக்கு அதெல்லாம் சகஜம் ஆனால், திராவிடத்துவவாதிகளின் வழிகளை இந்துத்துவவாதிகள் பின்பற்றுவது ஏன்? (2)

தந்தை விபூதி அழித்தான், தனயன் வைத்துக் கொண்டான்: மயிலாடுதுறை உள்ள தனியார் திருமண மண்டபத்தில் கல்லூரி மாணவிகளிடம் உதயநிதி ஸ்டாலின் கலந்துரையாடினார்[1]. அதனைத்தொடர்ந்து கல்லூரி மாணவிகள் உதயநிதி ஸ்டாலினுடன் ஆர்வமுடன் செல்பி எடுத்துக்கொண்டனர். 22-11-2020 அன்று மூன்றாவது நாளாக கும்பகோணத்தில் பிரசாரம் மேற்கொள்ளும் உதயநிதி ஸ்டாலின் கும்பகோணம் பள்ளி தீவிபத்தில் பலியான குழந்தைகளின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துகினார். பின்னர் திருபுவனத்தில் நெசவாளர்களின் குறைகளை கேட்டறிந்தார். மேலும் கும்பகோணத்தில் பல்வேறு இடங்களுக்கு சென்று பிரசாரம் மேற்கொண்டார். தேவர் குருபூஜைக்கு சென்ற திமுக தலைவர் ஸ்டாலின் அங்கு அவருக்கு வழங்கப்பட்ட திருநீற்றை நெற்றியில் இருந்து அழித்த விவகாரம் இன்னும் முடிந்தபாடில்லை[2]. ஆனால் ஸ்டாலின் மகனான உதயநிதி தருமபுரம் ஆதீனத்திடம் ஆசி பெற்று திருநீறு பூசியிருக்கிறார்.இது கட்சித் தொண்டர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது[3], என்று ஊடகங்கள் குறிப்பிட்டாலும், தந்தையும்-தனயனும் திட்டத்துடன் தான் செயல்படுகின்றனர் என்பது நன்றாகவே தெரிகின்றது.

21-11-2020 அன்றே, தருமபுரி ஆதீனம் புகைப்படங்களைப் போட்டு, சந்திப்பை பதிவு செய்தது:  முதலில், இச்சந்திப்பு, பல கேள்விகளை எழுப்பின.

  1. இரவு பத்து மணிக்கு மேலே மடத்தில், இப்படி நாத்திகவாதியை வரவழைத்து, ஆசிர்வதித்து, பிரசாதம் கொடுக்கும் படலம் நடக்குமா?
  2. “பெண்டாட்டியை வைத்து சாமி கும்பிடற ஆட்கள்,” அரசியலில் வெற்றி என்றால், தானே வந்து கும்பிடுவதில் எந்த ஆச்சரியமும் இல்லை!
  3. ‘தமிழ் கடவுள் சேயோன்’ என்ற ஆன்மிக நூலை சந்நிதானம் வெளியிட, முதல் பிரதியை உதயநிதி பெறுவதில் என்ன வியப்பு, ஞான பழத்தையா கொடுத்தார்?
  4. “இரவு எத்தனை மணி ஆனாலும் தருமபுரம் குருமகா சந்நிதானத்தைச் சந்தித்து ஆசி பெறுவேன்,” என்று உதயநிதி கூறினார் என்றால், என்ன நாடகம் இது?
  5. வேலை வைத்து இந்துதுவவாதிகள் வேலை செய்யும் போது, நாத்திகரும், “தமிழ் கடவுள் சேயோன்’ என்று வினை செய்தால், அம்மை-அப்பனே வரவேண்டும்!

போன்ற கேள்விகள் எழுந்தன. ஆனால், “திமுக இளைஞர்அணிசெயலர் உதயநிதிஸ்டாலின் தருமையாதீன குருமணிகளிடம் ஆசிபெற்றார்,” என்றும், “தாத்தாவும் பேரனும் தருமையாதீனத்தில்,” தலைப்பிட்டு, 21-11-2020 அன்றே, தருமபுரி ஆதீனம் புகைப்படங்களைப் போட்டு, சந்திப்பை பதிவு செய்தது. அதனால், திமுக மற்றும் மடம் இதனை, ரகசியமாக வைத்துக் கொள்ளவில்லை அல்லது சதிப்பு அத்தகையதல்ல, வெளிப்படையானது அல்லது வெளிப்படுத்த வேண்டிடியது என்று தீர்மானத்துடன் இருந்தது தெரிகிறது. ஊடகங்களிலும் அப்புகைப்படங்கள் வெளிவந்துவிட்டன. கருணாநிதி மற்றும் முந்தைய மடாதிபதி இருக்கும் புகைபடத்தை, பிரேம்-அலங்காரத்துடன் நினைவுப் பரிசாக கொடுத்தது, இது ஒரு தீர்மானிக்கப் பட்ட சந்திப்பு என்பதனை உறுதி செய்கிறது.  சைவர்களோ, பக்தர்களோ, இவ்வாறு முறைகள் மீறப் படுகின்றன என்று கண்டிக்கவில்லை.

தாத்தாவும் பேரனும் தருமையாதீனத்தில், என்று நினைவு பரிசு அளித்தது !
தாத்தா முதல் பேரன் வரை தருமபுர ஆதீன தொடர்புகள்!

இந்துத்துவ வாதிகளின் தமாஷாக்கள்: “தேர்தல் நாடகத்தை ஆரம்பித்துவிட்டனர். இந்துக்களுக்கு மீண்டும் சொல்கிறேன் முருகனுக்குக் காவடி தூக்கினாலும் ஒரு பொழுதும் திமுகவை நம்பிவிட வேண்டாம். பதவிக்காக அனைத்து நாடகத்தையும் வெக்கமே இல்லாமல் இந்த குடும்பம் நடத்தும். கறுப்பர் கூட்டம் நடத்தியதே திமுக ஆதரவாளர்கள், நிர்வாகிகள் தான்.

  1. கறுப்பர் கூட்டத்தை ஏன் திமுக ஸ்டாலின் கண்டிக்கவில்லை?
  2. இந்துகளை பண்டிகைக்கு மட்டும் ஏன் ஸ்டாலின் வாழ்த்து தெரிவிப்பது இல்லை?
  3. திக அமைக்கும் மேடைகளில் ஏன் இந்து கடவுள்களை அருவருப்பாக திட்ட திமுக ஆதரவாளர்க்ள் அனுமதிக்கிறார்கள்?
  4. இதே இஸ்லாமிய கிருஸ்தவரை ஏன் பேசுவது கூட இல்லை?

இந்த நான்கு கேள்வி கேளுங்கள் எங்கே உதய நிதி வந்தாலும். (ஆம இந்த பெரியாரியவாதிகளை உதயநிதி தன் வீட்டு நாய் என்று நினைக்கிறாரா? சுயமரியாதை சுயமரியாதை என்று உதயநிதிக்கு சொம்பு தூக்கும் அளவுக்கு வந்துவிட்டார் சுபவீ. இதெல்லாம் ஒரு வாழ்க்கை!),” என்று பெரிய வீராப்பாக மாரிதாஸ் பதிவு செய்வது தமாஷாக இருக்கிறது. இதில் ஒன்றும் விசயமே இல்லை. 1960களிலிருந்து, நேரிடையாக தமிழக அரசியலை கவனித்து வருபவர்களுக்கு இது ஒரு ஜோக்! “இந்துக்களுக்கு மீண்டும் சொல்கிறேன் முருகனுக்குக் காவடி தூக்கினாலும் ஒரு பொழுதும் திமுகவை நம்பிவிட வேண்டாம்,” என்று சொல்வது தமாஷ். ஏதோ ஒட்டு மொத்த இந்துக்களுக்கு அறிவுரை சொல்கிறேன் என்ற ஆணவம் தான் உள்ளது. கமலாலயத்தில் 12-11-2020 அன்று கிருத்துவ பாஸ்டர்கள் ஜெபம் செய்த போது, இவரைக் காணோம், இப்பொழுது இதற்கெல்லாம் குதிக்கிறார்[4]. ஆக, இதெல்லாம் தேர்தல் வரை உச்சக்கட்டத்தில் இருக்கும்.

இந்த நடத்தை ஆதரித்து போற்றும் இந்துத்துவவாதிகள்!

பெண்டாட்டியை வைத்து சாமி கும்பிடற ஆட்கள்,”  அரசியலில் வெற்றி என்றால், தானே வந்து கும்பிடுவதில் எந்த ஆச்சரியமும் இல்லை: தினமலர், “தேர்தல் வருகிறது., புறப்படுவோம் கோவிலுக்கும், மடத்திற்கும்,“ என்று செய்தி வெளியிட்டுள்ளது[5]. ஆகவே, பெண்டாட்டியை வைத்து சாமி கும்பிடற ஆட்கள்,”  அரசியலில் வெற்றி என்றால், தானே வந்து கும்பிடுவதில் எந்த ஆச்சரியமும் இல்லை,” என்பது தான் நிதர்சனம். ஶ்ரீ ராமகோபாலன் முன்னரே, “பெண்டாட்டியை வைத்து சாமி கும்பிடற ஆட்கள்,” என்று திராவிட நாத்திக- இந்துவிரோதிகளைக் குறிப்பிட்டுள்ளார். ஆகவே, 2020ல் அதைப் பற்றி கண்டுபிடித்து, பெரிய ஆராய்ச்சி செய்ய வேண்டியதில்லை! இந்துக்கள், குறிப்பாக இந்துத்துவ வாதிகள் மாறுவதை கவனிக்க வேண்டும். அரசியல், அதிகாரம், பணம், பதவி……….என்றால் மாறும், மாறி விடும் போக்கைக் கவனிக்க வேண்டும். கருத்து-பதில் கருத்து என்ற உரையாடலைக் கூட சகித்துக் கொள்ளாமல் இருக்கும், இந்துத்துவ பண்டிதர்கள் இருப்பது திகைப்பாக இருக்கிறது! ஓட்டுவங்கி என்ற ரீதியில், மக்களை ஜாதி, மதம் என்று பார்க்கும் போது, எல்லா கட்சிகளும் ஒன்றாகத்தான் ஆகின்றனர். இந்துக்களுக்கு என்று, உண்மையான இந்துத்துவம் பேசும் சித்தாநந்தவாதிகளே, மாறும் போது, திராவிடத்துவவாதிகளை குறைச் சொல்வது எந்த பிரயோஜனும் இல்லை. “திருவாரூர் தேரை நாங்கள் தான் ஓட வைத்தோம்,” என்றெல்லாம் கூறிக்கொண்டதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்.

வேல் யாத்திரையில், பெண்கள் தெருவில் ஆட்டம் போட்டது. இந்த நடத்தை ஆதரித்து போற்றும் இந்துத்துவவாதிகள்!
இந்துத்துவப் பண்டிதர் ஆதரித்து பெரிய விளக்கம் கொடுத்தது!

வேல் யாத்திரையில் பெண்களை வைத்து நடனம்: வேல் யாத்திரையின் போது, நடுத்தெருவில், பெண்கள் சினிமா பாணியில் ஆடுவதாக ஒரு வீடியோ சுற்றில் உள்ளது. திராவிடத்துவவாதிகள் பாணியில், இதுக்கள் செல்ல வேண்டிய அவசியல் இல்லை. தெரிந்தும், அதனை ஆதரிக்க வேண்டும், நியாயப் படுத்த வேண்டும் என்று வலுக்கட்டாயமாக இந்துத்துவவாதிகள் ஆதரித்து வருகின்றனர். இந்துத்துவம் ஏன் இப்படி நீர்க்கப் படுகிறது, என்ற கோணத்தில் கவலைப் படவில்லை. மாறாக, ஸ்டான்லி ராஜன் (Stanely Rajan) என்ற இந்துத்தவ வாதி, வலதுசாரி பண்டிதர் ஒரு பெரிய விளக்கம் கொடுத்துள்ளது திகைப்பாக இருக்கிறது. அவர் “தேவதாசி” என்றெல்லாம் விளக்கம் கொடுத்துள்ளார். முன்பு, சொர்ணமால்யா “தேவதாசி” சிஸ்டத்தை ஏதோ ஒரு கூட்டத்தில் (பரத நாட்டியம் வாழவேண்டும், வார வேண்டும் என்ற ரீதியில்) ஆதரித்த போது, என்ன நடந்தது என்பதை ஞாபகத்தில் கொள்ளவில்லை. அரசியல் என்ற போதை-மயக்கத்தில் இருப்பதால், மற்றவையெல்லாம் இவர்கள் கண்களுக்கு, மனங்களுக்கு தெரியாமல் போகிறது என்று தெரிகிறது. மனசாட்சி இல்லாமல் வாத-விவாதங்களை செய்து கொண்டிருக்கிறார்கள். இந்துவிரோதிகளை வெல்ல, அவர்களது வழிகளையே நாங்கள் பின்பற்றுவோம் என்பது போல இந்துத்துவாதிகள் நடந்து கொள்வது சரியில்லை.

©வேதபிரகாஷ்

23-11-2020


[1] https://www.hindutamil.in/news/todays-paper/tnadu/604361-.html

[2] தமிழ்.ஏசியன்.நெட்.நியூஸ், அப்பா நாத்தீகவாதியாம்.! மகன் ஆன்மீகவாதியாம். திமுக கொள்கையை கிழித்து தொங்கவிடும் நெட்டிசன்கள்..!, By T Balamurukan, Mayiladuthurai, First Published 23, Nov 2020, 7:43 AM

[3] https://tamil.asianetnews.com/politics/dad-is-an-atheist-the-son-is-a-spiritualist-netizens-tore-up-dmk-policy-and-hung-up–qk8cbj

[4]  பதில் சொல்ல முடியாமல் தடுத்துள்ளார். கருத்து-பதில் கருத்து என்ற  உரையாடலைக் கூட சகித்துக் கொள்ளாமல் இருக்கும், இந்துத்துவ பண்டிதர்கள் இருப்பது திகைப்பாக இருக்கிறது!

[5] தினமலர், தேர்தல் வருகிறது., புறப்படுவோம் கோவிலுக்கும், மடத்திற்கும்., Updated: நவ 22, 2020 15:44 | Added : நவ 22, 2020 14:38.

மோடி-பிஜேபி வேறு, வாஜ்பேயி-பிஜேபி வேறு – ராஜா-கனிமொழியை சிறைவைத்த காங்கிரஸ் – இக்கட்சிளுடன் திமுக கூட்டு கிடையாது – கருணாநிதி திமுகவினரிடம் கெஞ்சலாக அறிவிப்பு (2)!

திசெம்பர் 16, 2013

மோடி-பிஜேபி வேறு, வாஜ்பேயி-பிஜேபி வேறு – ராஜா-கனிமொழியை சிறைவைத்த காங்கிரஸ் – இக்கட்சிளுடன் திமுக கூட்டு கிடையாது – கருணாநிதி திமுகவினரிடம் கெஞ்சலாக அறிவிப்பு (2)!

திமுகவினரின் கருத்தைத் தொகுத்து, அதே நேரத்தில் தீர்ப்பளிக்கும் முறையில் கருணாநிதி பேசியது கவனிக்க வேண்டிய விசயமாக இருக்கிறது. காங்கிரஸைக் கடுமையாகத் தாக்கியிருக்கிறார்கள்[1], ஆனால், பிஜேபியுடன் கூட்டு வைத்துக் கொண்டால் நல்லது என்றும் பேசியிருக்கிறர்கள். தினகரன் அவரது பேச்சை வெளியிட்டுள்ளது[2]. பொதுவாக நக்கீரன் அம்மாதிரி வெளியிடும், ஆனால், இப்பொழுது சுருக்கத்தை வெளியிட்டுள்ளது[3]. கருணாநிதி செய்தியாளர்களிடம் வழக்கம் போல பதில் சொல்லி சமாளித்திருக்கிறார்[4]. பிஜேபியும் இல்லை, காங்கிரஸும் இல்லை எனும் போது, வேறு யாடுடன் கூட்டு என்பது விந்தையாக இருக்கிறது[5]. ஆங்கில ஊடகங்கள் மட்டும் திட்டவட்டமாக பிஜேபி அல்லது காங்கிரஸ் கூட, கூட்டு இல்லை என்று தெரிவித்திருப்பது நோக்கத்தக்கது[6]. இதனை நேற்று இரவே (15-12-2013) ஆங்கில ஊடகங்கள் வெளியிட்டு விட்டன.

ஒரு  இயக்கத்தையே,   ஒரு  பெரிய  ஊழல்  சாம்ராஜ்யத்தில்  சிக்கவைக்கும்  முயற்சியில்  ஈடுபட்டவர்கள்  யார்யார்  என்று  எனக்கு  இன்னமும்   நன்றாகத்  தெரியும்: “நீங்கள் இந்தப் பொதுக்குழு தீர்மானங்கள் மூலமாக அனுமதித்திருக்கின்ற அந்தக் குழுவிலே இடம் பெறுகிறவர்கள், அந்தக் குழு யாரிடத்திலே தன்னுடைய முடிவினைத் தெரிவிக்க விரும்புகிறதோ, அந்த முடிவைப் பற்றி யோசித்து, இறுதி முடிவு எடுக்க வேண்டிய இடத்திலே இருக்கின்ற நானும், அன்பழகனும், ஸ்டாலினும் அத்தனை பேரும் இவைகளை எல்லாம் மறந்து விட மாட்டோம். மறந்து விட்டு ஏமாந்து விடாதீர்கள்

என்று நீங்கள் சொன்னால், நான் உங்களுக்குச் சொல்கிற பதில், ஒரு முறை பட்டது போதும், தனிப்பட்ட ஒரு காயத்திற்காக நாங்கள் அழவில்லை. தனிப்பட்ட முறையில் எனக்கு ஏற்பட்ட காயம் அல்லது ராஜாவிற்கு ஏற்பட்ட காயத்திற்காக நாங்கள் வருத்தப்படவில்லை. அவைகளை நாங்கள் சமாளிக்க முடியும்ஆனால் ஒரு இயக்கத்தையே, ஒரு பெரிய ஊழல் சாம்ராஜ்யத்தில் சிக்க வைக்கும் முயற்சியில் ஈடுபட்டவர்கள் யார் யார் என்று எனக்கு இன்னமும் நன்றாகத் தெரியும். திமுகவை ஊழலில் சிக்க வைத்தவர்களில் காங்கிரசில் குறிப்பாக உள்ளார்கள் என்றால், அந்த கூட்டாளிகளை, திமுக வெளிப்படுத்தலாமே? அந்த பிஜேபி வேறு, இந்த பிஜேபி வேறு எனும் போது, அந்த காங்கிரஸ்காரர்கள் வேறு, இந்த காங்கிரஸ்காரர்கள் வேறு, என்று இனம் கான வைக்கலாமே? ஏன் அவர்களை மறைத்து சாட வேண்டும்? துரோகிகளின் முகமூடிகளை கிழித்து எறியலாமே? இதுதானே தகுந்த சந்தர்ப்பம்?

அதையெல்லாம் மறந்து விட்டு எப்படி அவர்களை நாங்கள் காப்பாற்றியிருக்கிறோம் என்பது காப்பாற்றப்பட்டவர்களுக்குத் தெரியும்.

இந்திய  மீனவர்களைக்  கூட  பாதுகாக்க  முடியாத  நிலையிலே  இருக்கிறோம்:  “இதையெல்லாம் விட முக்கியமாக இலங்கைத் தமிழர் பிரச்சினையில் இன்றைய மத்திய காங்கிரஸ் அரசால் நாங்கள் எந்த அளவிற்கு ஏமாற்றப்பட்டோம் என்பதும், தொடர்ந்து தாக்கப்படுகின்ற இந்திய மீனவர்களைக் கூட பாதுகாக்க முடியாத நிலையிலே இருக்கிறோம் என்பதும் மறந்து விடக் கூடிய ஒன்றா என்ன? ஆகவே, உங்களுக்கு சொல்லிக் கொள்கிறேன். இவைகளை எல்லாம் மறந்து விட்டு நாங்கள் மீண்டும் காங்கிரசுடன் சேருவோம் என்று தயவுசெய்து நீங்கள் எண்ண வேண்டாம்[7].

இரண்டு  கட்சிகள்  விடப்பட்டு  விட்டன –   தனித்து  நிற்போம்: “நம்மோடு அணி சேர எந்தக் கட்சியும் விரும்பாவிட்டாலும் கூட, நாம் அதற்காகக் கவலைப்படப் போவதில்லை. 75 இலட்சம் பேர் கட்சி உறுப்பினர்களாக இருக்கிறார்கள். அந்த 75 லட்சம் பேரும்அவருடைய வீட்டார், குடும்பத்தார், உற்றார் உறவினர்களை எல்லாம் சேர்த்துப் பார்த்தால் அந்த எண்ணிக்கை கோடிக்கணக்கில் வரும். அவைகளை எல்லாம் நாங்கள்

கணக்குப் பார்த்து, யாரும் அணி சேர வரா விட்டாலும் கூட, தனியாக நிற்போம். வந்தால், வந்தவரையிலே இலாபம் என்று வட்டிக் கணக்குப் பார்க்காமல், அவர்களுடைய தோழமை உணர்வுக்கு, எங்களோடு இருந்தால் நாட்டுக்கு நன்மை என்று கருதுகிறார்களே, அந்த நம்பிக்கைக்கு நாங்கள் தருகின்ற மதிப்பாக, அணி சேருவோம். ஆனால் யாரோடு அணி சேர்ந்தாலும், யாரோடு என்பதிலும் ­இரண்டு பேரும் இரண்டு கட்சிகள் ­நான் பேசும்போதே விடப்பட்டு விட்டன என்பதை நீங்கள் தெரிந்து கொண்டிருக்கிறீர்கள். மிச்சம் இருக்கும் பெரியக் கட்சியான அதிமுகவுடன் கூட்டு என்பது பெரிய ஜோக்காகி விடும். அதேபோல, அதிமுககூட்டணியில் உள்ள கட்சிகளுடன் கூட்டு வைத்துக் கொள்ள முடியாது. பிறகு தமிழகத்தில் யாருடன் திமுக கூட்டு வைத்துக் கொள்ள முடியும்? இனி உதிரிப்பூக்களை வைத்துக் கொண்டு மாலைக் கட்டினால், அதில் வாசம் வருமா அல்லது மாலைதான் முழுமையடையுமா?

அப்படிச் சேரும்போது, கட்சிகளோடு அணி சேருவது பற்றி அல்ல. தனித்து நிற்போம் என்று நான் சொன்னேன்”, இவ்வாறு கருணாநிதி பேசினார்[8].

கட்சியை  விலை   பேசி  விடாதீர்கள்’:  பொதுக்குழுவில்   கருணாநிதி  பேசியதாவது: “நாம் தனித்து நின்றாலும் கூட, ஓரிரு கட்சிகளின் துணையோடு மாத்திரம் தான் நிற்க முடியும் என்றாலும் கூட, நீங்கள் தான் வேட்பாளர்களாக அறிவிக்கப்படுவீர்கள். அப்படி அறிவிக்கப்பட்ட வேட்பாளர்கள், அந்த வேட்பாளருக்கு ஆதரவாக இருக்கின்ற தொண்டர்கள், தனி அணி அமைத்து விடக் கூடாது. அணி தேவை என்று நான் நம்புகிறேன், ஆனால் நீங்கள் அணி வேண்டும் என்றீர்களே, அதனால் நாங்கள் எங்கள் ஊரிலே, நீங்கள் யாரை நிறுத்துகிறீர்களோ, அவர் ஒரு அணி, அவரை எதிர்க்கின்ற நாங்கள் இன்னொரு

அணி என்று பல அணிகளாக ஆகி, எல்லா அணிகளும், பல உப நதிகள், ஒரு பெரு நதியிலே கலந்து அதை மகாநதியாக ஆக்குவதைப் போல, நீங்கள் ஆக்க வேண்டுமே தவிர, கிளைநதிகளாக ஆனால், அது வாய்க்கால்களாக மாறி விடும் என்பதை மறந்து விடாதீர்கள்அணி சேருகின்ற நேரத்தில், அந்த அணிகளுக்கு ஒத்துழைப்பு தர வேண்டும். இனி வெற்றி பெற வாய்ப்பிலை என்று தெரிந்து விட்டால், திமுக எங்கு பிரிந்து விடுமோ என்று பயந்து விட்டார் போலும். பிஜேபியை ஆதரிக்கும் திமுக, எதிர்க்கும் திமுக என்று இரண்டாக பிரிந்து விட்டால் என்னாவது? எம்.பி ஆகலாம், மந்திரியாகலாம் என்ற ஆசை வந்தால், இதெல்லாம் சாத்தியம் தானே?

அந்த அணிகளில் ஒன்றாக திமுக இருந்தால், அந்த திமுக வேட்பாளருக்கு அவர் எந்தத் தொகுதியிலே நின்றாலும், எந்தத் தொகுதியிலே போட்டியிட்டாலும், யாரை எதிர்த்துப் போட்டியிட்டாலும் நம்முடைய முழு பலமும், முழு சக்தியும், நம்முடைய முழுமையான ஆர்வம் அனைத்தும் அவருடைய வெற்றிக்கே தான் என்கிற அந்த நிலையில் நீங்கள் பாடுபட வேண்டும். அந்த வெற்றியை நீங்கள் குவித்து, அடுத்த பொதுக் குழுவில் உங்களுக்கெல்லாம் நானும், அன்பழகனும், ஸ்டாலினும் நன்றியை குவிக்கின்ற வாய்ப்பை தாருங்கள்

நான்  தலைவன்  என்ற  அந்த  முறையிலே,   அந்த  தகுதியைக்  கூட  மறந்து  விட்டு  உங்களைக்  கெஞ்சிக்  கேட்கிறேன்: “இன்னும் சொல்லப் போனால், நான் தலைவன் என்ற அந்த முறையிலே, அந்த தகுதியைக் கூட மறந்து விட்டு உங்களைக் கெஞ்சிக் கேட்கிறேன். கழகத்தை, மாற்றாருக்கு விலை பேசி விடாதீர்கள்

உங்கள் ஒற்றுமையை வீணாக்கி விடாதீர்கள். வேற்றுமையினால் ஒருவருக்கு ஒருவர் உள்ள தனிப்பட்ட விரோதங்களை எல்லாம், இந்த தமிழகத்தைக் காக்க வந்த இந்த இயக்கத்தின் மீது காட்டி, இயக்கத்தைப் பழி தீர்த்து விடாதீர்கள். கட்சியை கட்டிக் காக்க வேண்டிய பொறுப்பை ஏற்றுக் கொள்ளுங்கள். வெற்றி வரும், தோல்வி வரும், ஆனால் கட்சி நிலைக்கும். கெஞ்சிக் கேட்டுக் கொள்ளும் அளவிற்கு முதிர்ந்த தலைவர் வந்து விட்டார் என்றால், தொண்டர்கள் வேறுவிதமாக நினைக்கிறார்கள் என்றாகிறது. ஸ்டாலின், அழகிரி என்று கோஷ்டிகள் வேறுவிதமாக முடிவெடுத்தாலும், திமுக பிரியத்தான் செய்யும். அதனால், பாவம், கெஞ்சியும் பார்க்கிறார்.

ஒரு கட்சியின் ஆற்றலை, அதனுடைய வாழ்வை, அதனுடைய வளத்தை நிர்ணயிப்பது தேர்தல் வெற்றி அல்ல. தேர்தல் என்பது வந்து போகின்ற ஒன்று.

 

அதே  நேரத்தில்  ஒரு  தேர்தல்,   நமக்குச்  சோதனை: ஆனால் அதே நேரத்தில் ஒரு தேர்தல், நமக்குச் சோதனை. என்ன சோதனை என்றால், நாம் எந்த அளவிற்கு ஒற்றுமையாக இருக்கிறோம், எந்த அளவிற்கு நாணயமாக இருக்கிறோம், எந்த அளவிற்கு ஒருவரையொருவர் காட்டிக் கொடுக்காமல் இருக்கிறோம், எந்த அளவிற்கு ஒருவரையொருவர் வீழ்த்தாமல் நல்ல எண்ணத்தோடு பழகிக் கொண்டிருக்கிறோம் என்பதை அளக்கும் கருவிநாளைய தினம் எந்த அணியோ, எந்தக் கட்சியோடு

அணியோ, அந்த அணி உங்களால் முன்மொழியப்பட்ட, உங்களால் தீர்மானிக்கப்பட்ட, நீங்கள் வகுத்த தீர்மானங்களில் ஒன்றான திமுக.வின் தலைவரும், பொதுச் செயலாளரும் ஒரு குழுவை அமைத்து, அவர்கள் மூலமாக தேர்தல் உடன் பாட்டிற்கான சக்திகளை ஒன்று திரட்ட வேண்டுமென்று சொல்லியிருக்கிறீர்களே, அந்தச் சக்தியை நாங்கள் வீணாக்காமல் பாடுபடுவோம், பணியாற்றுவோம். 2014 தேர்தல் திமுகவிற்கு சோதனை என்பது வேடிக்கையாக இருக்கிறது. 2014 தேர்தல், நிச்சயமாக மோடிக்கு சோதனை. ஏனெனில் வெற்றி பெறாவிட்டால், அவரது அவரது தேசிய அரசியல் முடங்கிவிடும். காங்கிரசுக்கு சோதனை, ஏனெனில், தோற்றுவிட்டால், இனி தலையெடுக்க முடியாது. ஆனால், திமுகவிற்கு ஏன் சோதனை காலம் வரவேண்டும் என்று தெரியவில்லை!

 அது எங்களுக்காக அல்ல, உங்களுக்காக, உங்களுடைய எதிர்கால சந்ததிகளின் வாழ்வுக்காக, தமிழுக்காக, தமிழர்களுக்காக, திராவிட இன உணர்வைக் கட்டிக் காப்பாற்றுவதற்காக என்பதை தெரிவித்து கொள்கிறேன்”, இவ்வாறு கருணாநிதி பேசினார்.

 

வேதபிரகாஷ்

© 16-12-2013


[2] தினகரன், பொதுக்குழுவில்கருணாநிதிதிட்டவட்டம் : காங்கிரஸ், பாரதியஜனதாவுடன்திமுககூட்டணிஇல்லை,மாற்றம் செய்த நேரம்:12/16/2013 1:53:01 AM.

மோடி-பிஜேபி வேறு, வாஜ்பேயி-பிஜேபி வேறு – ராஜா-கனிமொழியை சிறைவைத்த காங்கிரஸ் – இக்கட்சிளுடன் திமுக கூட்டு கிடையாது – கருணாநிதி திமுகவினரிடம் கெஞ்சலாக அறிவிப்பு (1)!

திசெம்பர் 16, 2013

மோடி-பிஜேபி வேறு, வாஜ்பேயி-பிஜேபி வேறு – ராஜா-கனிமொழியை சிறைவைத்த காங்கிரஸ் – இக்கட்சிளுடன் திமுக கூட்டு கிடையாது – கருணாநிதி திமுகவினரிடம் கெஞ்சலாக அறிவிப்பு (1)!

திமுகவின் கூட்டணி  பற்றி  கருணநிதியின்  விளக்கமான  பேச்சு: 15-12-2013 அன்று பொதுக்குழுவில் பிஜேபியுடன் கூட்டு வைத்துக் கொள்ள வேண்டும் என்று சிலர் பேசினர், ஆனால், காங்கிரஸுடன் கூட்டு கூடாது என்று கடுமையாக வாதிட்டனர்[1]. கருணாநிதியின் பேச்சு மிகப்பெரிய பேச்சாக இருந்தது, அதில் திமுக ஏன் பிஜேபி மற்றும் காங்கிரஸ் கட்சிகளுடன் கூட்டு கூடாது என்று விளக்கிய பிறகு, திமுகவினர் ஒற்றுமையாக இருந்து கொண்டு, மற்ற கட்சிகளுடன் கூட்டு வைத்துக் கொண்டு, வருகின்ற தேர்தலை ஒரு சோதனையாக சந்திக்க வேண்டும் என்று கெஞ்சிக் கேட்டுக் கொண்டுள்ளார். தனியாக நின்று தோற்றாலும் பரவாயில்லை என்ற ரீதியில் கூட பேசி முடித்தார். பிறகு பத்திரிக்கையாளர்களுடன் பேசும் போது கூட அதே பாணியில் பதில் அளித்தார்[2]. ஆங்கில பத்திரிக்கையாளர்களிடம் மட்டும் திட்டவட்டமாக பிஜேபி அல்லது காங்கிரஸ் கூட, கூட்டு இல்லை என்று தெரிவித்தார்[3].

 

காங்கிரஸ்,    பாரதிய   ஜனதா   கட்சிகளுடன்   கூட்டணி   இல்லை   என்று  திமுக   தலைவர்  கருணாநிதி,   நேற்று   கட்சியின்   பொதுக்குழு  கூட்டத்தில்  அறிவித்தார்[4]. திமுக பொதுக்குழு கூட்டம் திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் அண்ணா அறிவாலயத்தில் நேற்று நடந்தது. அதில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பின்னர் மதியம் அந்த கூட்டம் தொடர்ந்து நடந்தது. கூட்டத்தில் திமுகவின் பொதுக்குழு உறுப்பினர்கள் பலர் தேர்தல் கூட்டணி பற்றி கருத்து கூறினர்.
அனைவரின் கருத்தையும் கேட்டறிந்த திமுக தலைவர் கருணாநிதி கூட்டத்தின் இறுதியில் பேசியதாவது: 

நடைபெற இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில், அடுத்து வரவிருக்கின்ற சட்ட மன்றத் தேர்தலில் நாம் எத்தகைய வியூகத்தை வகுக்க வேண்டும் என்பதற்காக இங்கே கூடி இருக்கிறோம். தேர்தலில் நாம் ஈடுபட வேண்டும்; வேண்டுமா, வேண்டாமா எப்படி ஈடுபடுவது? எந்த வகையில், என்ன முறையில், யாரோடு கூட்டுச் சேர்ந்து என்றெல்லாம் இந்த பொதுக்குழுவில் கேள்விகள் கேட்கப்பட்டு, வழி முறைகளும் கூறப்பட்டு, இறுதியாக எல்லா பொறுப்புகளையும் நீங்களே தாங்கிக் கொள்ளுங்கள் என்று எங்கள் தலையில் பாரத்தைச் சுமத்தி, சிக்க வைத்திருக்கிறீர்கள். கூட்டணி இல்லாமல் ஜெயிக்க முடியாது என்று நன்கறிந்த கருணாநிதி, தனித்து நிற்போம் என்று பேசியது உள்நோக்கத்துடன் தான் என்று தெரிகிறது. வெற்றிபெற உதவி தேவை என்ற நிலையில் இருக்கும் போது, வீராப்பான பேச்சு ஒரு உபயோகமும் இல்லை என்பது தெரிந்த விசயமே. 10-15 எம்.பிக்கள் இருந்தால் தான் மத்தியில் மவுசு இருக்கும், மந்திரி பதவி கிடைக்கும். இல்லையென்றால் திமுகவை யாரும் மதிக்க மாட்டார்கள் என்று திமுகவினர் வெளிப்படையாகவே கருத்தைத் தெரிவித்தனர்.

தி.மு..வை பொறுத்தவரை தனித்து நின்றே கூட இந்த வெற்றியைப் பெற முடியும். தனித்து நின்றேகூடஎன்று நான் கூறும்போது, ‘கூடஎன்று குறிப்பிட்ட வார்த்தையை மறந்து விடக் கூடாது. தனித்து நின்றே இந்த வெற்றியைப் பெறுவோம் என்று நான் சொல்லவில்லை. தனித்து நின்றே கூட நாம் வெற்றி பெற முடியுமென்று சொன்னால், கொஞ்ச நஞ்சம் ஒருவர், இருவருடைய உதவி இருப்பது நல்லது.

மோடி   கவர்ச்சியில்  சில  திமுகவினர்: “மோடி அவர்கள் அரங்கத்திற்கு வந்திருக்கிறார். வந்த நேரமே, வந்த விதமே, அவருடைய படாடோப விளம்பரங்கள், அவருக்காக பத்திரிகைகள், ஊடகங்கள், கார்பரேட் நிறுவனங்கள் தருகின்ற ஊக்கங்கள், உலகம் முழுதும் இருக்கின்ற செய்தியாளர்கள் அல்லது ஊடக உரிமையாளர்கள் தருகின்ற விளம்பரங்கள்.

எங்களுக்கு அதிர்ச்சி அளிக்கவில்லை. ஆனால் உங்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது. அதனால் தான் பாரதீய ஜனதா, பாரதீய ஜனதா என்கிறீர்கள். நாமும் ஒரு காலத்தில் பாரதீய ஜனதோடு நாம் நட்பு கொண்டிருந்தவர்கள் தான். அது எந்த பாரதீய ஜனதா? மனிதாபிமானம் இல்லாமல் நடந்து கொண்ட அத்வானி போன்ற தலைவர்கள் உள்ள பாரதீய ஜனதா அல்ல. பிஜேபியுடன் கூட்டு வேண்டும் என்று திமுகவினர் தயாராக உள்ளனர். ஆனால், மோடியின் அதிகாரத்தோரணை கருணநிதிக்கு சவாலாக உள்ளது என்று தெரிகிறது. அவருக்கு வாஜ்பேயி போன்ற மென்மையான தலைவர் வேண்டும் என்று எதிர்பார்க்கிறார், ஆனால், மோடியிடம் அது எடுபடாது. மேலும், இப்பொழுதுள்ள நிலையும் வேறு.

நாம் கோரிக்கை வைத்தால், அதை உடனடியாக ஏற்றுக் கொண்டு, தோழமை உணர்வோடு நம்மோடு பழகிய வாஜ்பாய் போன்ற நல்ல மனிதர்கள் இருந்த அந்த காலத்தில் நாம் பாரதீய ஜனதாவோடு கை குலுக்கினோம்.

வாஜ்பாய்  பாரதிய  ஜனதா  கட்சியின்  தலைவராக  இருந்தாலும்,   அவர்  மனிதாபிமான  மிக்கத்  தலைவராக  இருந்தார்: “காமராஜருக்கு கன்னியாகுமரி கடற்கரையில் மணி மண்டபம் கட்ட வேண்டும் என நான் முதல் அமைச்சராக இருந்தபோது, அன்றைக்கு பிரதமராக இருந்த வாஜ்பாய்க்கு கடிதம் அனுப்பி வைத்தேன்.

ஆனால், அவரைச் சுற்றியிருந்த அதிகாரிகள், கருணாநிதி கேட்கிற அந்த இடம் கடலுக்கு மிக அருகே உள்ளதால் அனுமதிக்க இயலாது என்று சொன்னார்கள். அந்த கருத்தை வாஜ்பாய் எனக்கு எழுதி அனுப்பினார்கள். நான் விடவில்லை, மீண்டும் மீண்டும் அதை வற்புறுத்திக் கேட்டதால், கடற்கரையோரத்தில் காமராஜருக்கு நினைவு மாளிகை எழுப்ப வாஜ்பாய் அனுமதி தந்தார். மோடி இப்பொழுது இந்தியாவில் உள்ள பற்பல பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. அந்நிலையில் திமுக சொல்வதையெல்லாம், மோடி ஏற்றுக் கொள்வார் என்றால், கூட்டு வைத்துக் கொள்வோம் என்ற ரீதியில் பேசினால், மோடி என்ன வாஜ்பேயி ஆகிவிடுவாரா என்ன? மோடி, மோடித்தான்வாஜ்பேயி, வாஜ்பேயிதான்!

அவர் நம்முடைய தமிழ்நாட்டுத் தலைவர்களை மதிப்பவர் என்பதை எண்ணிய காரணத்தால் தான், வாஜ்பாய் அவர்கள் நம்முடைய நண்பராக இருந்த காரணத்தால் தான் அப்போது நாம் அவர்களோடு உறவு கொண்டோம்.

வாஜ்பாயினுடைய   பாரதிய  ஜனதா  வேறு,   இப்போது இருக்கிற  பா...   வேறு: “மாறன் இறந்த போது அவரை இடுகாட்டிற்கு எடுத்துச் சென்ற போது, இடுகாட்டிலே வாஜ்பாய் அவர்கள் திடீரென்று வந்து இறுதி வணக்கம் செலுத்தியதையும் நான் மறந்து விடக் கூடியதல்ல. என்னதான் பாரதிய ஜனதா கட்சியின் தலைவராக இருந்தாலும், அவர் மனிதாபிமானமிக்கத் தலைவராக இருந்தார். தோழமைக்கு மதிப்பு அளிக்கக் கூடியவராக இருந்தார், எனவே தான் பாரதிய ஜனதா என்பது வாஜ்பாய் அவர்கள் பொறுப்பிலே இருந்ததோடு அந்த வரலாறு நம்மைப் பொறுத்த வரையிலே முடிந்து விட்டது.

அந்த பாரதிய ஜனதா கட்சியிலே இருக்கின்ற, எல்லோரும் வாஜ்பாய் அவர்களைப் போன்றவர்களா என்றால், இல்லைபாரதிய ஜனதாவோடு தேர்தலில் உடன்பாடு கொள்ளலாமா, கூட்டணி அமைக்கலாமா என்றெல்லாம் காலையிலிருந்து இதுவரையில் பேசினீர்களே, இதற்கெல்லாம் பதிலாகத் தான், இதற்கெல்லாம் விளக்கவுரையாகத் தான் நான் இந்தச் சுருக்கமாக கருத்துகளை உங்களிடம் சொல்லியிருக்கிறேன். கூட்டு வைத்துக் கொள்ள வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. பிறகென்ன, அது வேறுஇது வேறு என்ற சித்தாந்தம் எல்லாம். முன்பு மதவாதம் பேசி, பிஜேபியை ஒதுக்கினர். 2002 என்று சொல்லி மிரட்டிப் பார்த்தனர், ஆனால், பொருளாதார முன்னேற்றம், வளர்ச்சி என்று மோடி பேச ஆரம்பித்ததும், இளைஞர்கள் வேறுவிதமாக சிந்திக்க ஆரம்பித்து விட்டனர். ஆமாம், அவர்களும், அந்த மோடி வேறு, இந்த மோடி வேறு என்றுதான் சொல்ல ஆரம்பித்துள்ளனர்.  

நீங்கள் புரிந்து கொள்வீர்கள்[5]. வாஜ்பாயினுடைய பாரதிய ஜனதா வேறு, இப்போது இருக்கிற பா... வேறு.

சி.பி..யை  ஆயுதமாக  வைத்து  திமுகவை  கேவலப்  படுத்திய  காங்கிரஸ்: “இந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக தனியாக நின்றாலும் நிற்குமே தவிர, நம்மை மதிக்காத, அலட்சியப்படுத்து கின்ற காங்கிரஸ்காரர்களைப் போல நம்மிடத்திலே நன்றி மறந்து செயல்படுகின்ற சைபர், சைபர், சைபர் என்று ஏழு சைபரைப் போட்டு இந்த அளவிற்கு ஆயிரம், லட்சம், கோடி ரூபாய் ஊழல் நடந்திருக்கிறது என்று சொல்லி, அதற்கெல்லாம் யாரும் காரணம் இல்லை, ஒரே ஒரு நபர் தான், ராஜா தான் என்று அவரை சிறையிலே வைத்து ­இன்னமும் அவர் மீது வழக்கு நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

ராஜா மாத்திரமல்ல, என்னுடைய மகள் கனிமொழியை எட்டு மாத காலம் சிறைச்சாலையிலே வைத்து வாட்டி, இன்னமும் வழக்கு நடக்கிறதுஆனால், வழக்கை நடத்துகிறவர்களும் சரி, வழக்கிலே சாட்சியம் தந்தவர்களும் சரி, அந்த வழக்கிலே என்ன தீர்ப்பு வரப்போகிறதோ, அந்தத் தீர்ப்பை, இப்போதே தயாரித்து, பத்திரிகைகளிலே அதைப் பற்றிய செய்திகளை ஓட விடு பவர்களும் சரி, அனைவருமே தெரிந்து ஒரு உண்மை தான், குற்றமே செய்யாதவர்களை, குற்றவாளிகளாக சி.பி.. மூலமாக கூண்டிலே ஏற்றியிருக்கிறார்கள் என்றால், அந்தச் சி.பி.. யாருடைய கை வாள்? சிபிஐ.யை வைத்து மாநில அரசுகளை காங்கிரஸ் மிரட்டி வருகின்றது என்று கருணாநிதி இப்பொழுது மிகவும் வருத்தப் பட்டுக் கொள்கிறார், பிறகு, தகுந்த வேலையில், முன்னமே அதைப் பற்றி எடுத்துக் காட்டியிருக்கலாமே? ஆனால், செய்யவில்லையே? இன்று முல்லாயம், மாயாவதி என்று எல்லோருமே, சிபிஐ வழக்குகளினின்று விடுபட்டுள்ளனர். லல்லுவுக்கும் ஜாமீன் என்று சொல்கிறார்கள். ராஜாகனிமொழி ஏற்கெனவே வெளியில் வந்து விட்டார்கள். பிறகு கருணாநிதி எதிர்பார்ப்பது என்ன? காங்கிரஸ் வாபஸ் வாங்கிவிட்டால், காங்கிரஸுடன் கூட்டணி என்பாரா?

அந்தச் சி.பி.. யாருடைய கையிலே இருந்த கடிவாளம்? அந்தச் சி.பி.. யார் கையிலே இருந்த ஆயுதம்? தெரியாதா மக்களுக்கு?

ராஜாவையும்,   கனிமொழியையும்  சிறை   வைத்தவர்கள்: “அன்றைக்கு பக்கம் பக்கமாக ஊழல் ஊழல் என்று, எத்தனை லட்சம், எத்தனை ஆயிரம், எத்தனை கோடி என்றெல்லாம் எண்ணிப் பார்க்க முடியாத அளவிற்கு அன்றையதினம் ஊழல் புகார் சொன்ன, அந்தக் காரியங்களுக்கெல்லாம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்து விட்டு, அந்த வேடிக்கையைப் பார்த்து ரசித்து விட்டு, அதிலே யார் யார் சிக்குகிறார்கள் என்பதையெல்லாம் பார்த்து, நம்மை விட்டால் சரி என்ற அளவிற்கு, பெரிய இடங்களிலே இருந்தவர்கள், பெரிய பதவியிலே இருந்தவர்கள், பெரிய நிர்வாகத் தலைமையிலே

இருந்தவர்கள் எல்லாம் தப்பித்தால் போதும் என்ற நிலைமையில் மாட்டியவர்கள், சிக்கியவர்கள் தான் குற்றவாளிகள் என்று ராஜாவையும், அதற்குப் பிறகு திடீரென்று என்னுடைய மகள் கனிமொழியையும் சிறையிலே வைத்து எட்டு மாத காலம் வாட்டினார்களே, இன்னமும் அந்த வழக்கு நடை பெற்றுக் கொண்டிருக்கிறதே, யாருடைய ஆட்சியில்? யார் இப்போது ஆட்சி யிலே இருக்கிறார்கள்? காங்கிரஸ்காரர்கள் தானே? எனவே அதையும் நாம் மறந்து விட மாட்டோம். மறந்து விடுவதற்கில்லை. ராஜாகனிமொழியை சிறை வைத்த காங்கிரஸை மறக்க முடியாது. களங்கம் ஏற்படுத்தியதையும் மறக்க முடியாது என்றெல்லாம் பேச வேண்டிய அவசியம் என்ன? ஊழலில் ஊறி நாறிப்போன காங்கிரஸே, வெட்கமில்லாமல் தேர்தல் கூட்டங்களில் ஊழலை ஒழிப்போம் என்று பேசுகிறது. இன்றோ லோக்பால் மசோதாவிற்கே நாங்கள் தான் காரணம் என்று மார்தட்டிக் கொள்கிறது, பிறகு, திமுக ஏன் கவலைப்பட வேண்டும்?

ராஜாவிற்கு ஏற்பட்ட அந்தச் சோதனை, ராஜாவுக்கு ஏற்பட்ட அந்தச் சங்கடம், அந்த அடக்கு முறை, அந்தக் களங்கம் இவைகள் எல்லாம் இன்றையதினம் டெல்லியிலே ஆட்சியிலே இருக்கின்ற காங்கிரஸ்காரர்களால் ஏற்படுத்தப்பட்டது அல்லவா? அவர்களால் மறைமுகமாகச் செய்யப்பட்ட மாய்மாலங்கள் அல்லவா? எனவே இந்தப் பொதுக்குழுவிலே அமர்ந்திருக்கின்ற உங்களுக்கெல்லாம் நான் உறுதி அளிக்கிறேன்.

வேதபிரகாஷ்

© 16-12-2013


[4] தினகரன், பொதுக்குழுவில்கருணாநிதிதிட்டவட்டம் : காங்கிரஸ், பாரதியஜனதாவுடன்திமுககூட்டணிஇல்லை,மாற்றம் செய்த நேரம்:12/16/2013 1:53:01 AM.