Archive for the ‘குழப்பம்’ Category

குருகுலம், குலக்கல்வி அறிமுகப்படுத்தப் படப்போகிறது – புதிய கல்வித் திட்டமும், கனிமொழியும், திராவிட கட்சிகளும்!

ஓகஸ்ட் 10, 2016

குருகுலம், குலக்கல்வி அறிமுகப்படுத்தப் படப்போகிறது – புதிய கல்வித் திட்டமும், கனிமொழியும், திராவிட கட்சிகளும்!

Jaya blessing prostratedகுருகுலம், குலக்கல்வி அறிமுகப்படுத்தப் படப்போகிறது[1]: விடுதலை தொடர்கிறது, “புதிய கல்வித் திட்டத்தில் பள்ளிகள், பக்கத்தில் உள்ள ஆசிரமங்களுடன் இணைக்கப்படும் என்று சொல்லப் பட்டுள்ளது. அதற்கு முன்னோடியாகத்தான் சென்னை இந்து ஆன்மிகக் கண்காட்சியில் ஆசிரியர்களுக்குப் பாத பூஜை செய்யும் ஏற்பாடாகும்[2]. ஒரு காலத்தில் குருகுல வாசம் என்ற முறை இருந்ததுமாணவர்கள் பகலில் எல்லாம் பிச்சை எடுத்துக்கொண்டு வந்த பொருள்களைக் கொண்டு, உண்டு உறைந்த காலகட்டம் அது. அத்தகைய காலம் அல்ல இது! அந்தக் கால கல்வி என்பதும் இன்றைக்குக் கவைக்குதவாதுகாலாவதியான ஒன்றாகும். மீண்டும் அந்தத் திசை நோக்கி மாணவர்களை, மத்தியில் உள்ள பி.ஜே.பி. ஆட்சி அழைத்துச் செல்லுகிறதோ என்ற அய்யமும், அச்சமும் ஏற்படுகின்றன. குருகுலம் என்றாலே நமக்கு சேரன்மாதேவி குருகுலம்தான் நினைவிற்கு வந்து தொலைக்கிறது. பார்ப்பனர்களுக்கு ஒரு வகையான தரமான உணவுபார்ப்பனர் அல்லாத மாணவர்களுக்கு மட்டமான உணவு பரிமாறப்படவில்லையா? குடிதண்ணீர்கூட தனித்தனியாக வைக்கப்பட்டு இருந்ததே! அந்தப் பேதா பேதத்தை ஒழித்துக் கட்டியவர்கள் தந்தை பெரியார் அவர்களும், டாக்டர் பி. வரதராஜூலு (நாயுடு) அவர்களுமேயாவார்கள். காங்கிரசை விட்டு தந்தை பெரியார் அவர்கள் வெளியேறு வதற்கான காரணங்களுள் இதுவும் ஒன்றே!”.

Khader_1 Vellore Amma 2006இந்துத்துவா சக்திகள் தறிகெட்டு நிர்வாண ஆட்டம் போட ஆரம்பித்துவிட்டன[3]: விடுதலை தொடர்கிறது, “மத்தியில் பி.ஜே.பி. , ஆட்சிக்கு வந்தநாள் முதற்கொண்டு இந்துத்துவா சக்திகள் தறிகெட்டு நிர்வாண ஆட்டம் போட ஆரம்பித்துவிட்டன. மீண்டும் நாட்டை மனுதர்மப் பிற்போக்கு உலகத்திற்கு இழுத்துச் செல்ல முயற்சிக்கின்றன. பிரதமர் உள்பட மத்திய அமைச்சர்கள் ஆர்.எஸ்.எஸ். கூட்டும் கூட்டங்களில் பங்கேற்பது கட்டாயம்; அந்தக் கூட்டத்தில், ஆட்சியின் செயல்பாடுகள், நடவடிக்கைகள், திட்டங்கள்பற்றி ஆய்வு செய்யப்படுகின்றன. ஆட்சியின் செயல்பாடுகள் எப்படி இருக்கவேண்டும் என்பதை ஆர்.எஸ்.எஸின் சர் சங் சாலக் (தலைவர்) அறி வுறுத்துகிறார். அந்த அடிப்படையில்தான் புதிய கல்விக் கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது. அந்தத் திட்டம் செயல்பாட்டுக்கு வருமுன் சென்னையில் ஒரு கல்லூரியில் இந்துஆன்மிகக் கண்காட்சி என்ற பெயரில் ஒத்திகை பார்க்கப்பட்டுள்ளதைக் கவனிக்கத் தவறக்கூடாது”.

Saibaba and Karunanidhiபாத பூஜை செய்வதுபிற்போக்குத்தனம் அல்லவா?[4]: விடுதலை தொடர்கிறது,”ஒரு பக்கத்தில் விஞ்ஞான மனப்பான்மை வளர்க்கப்பட வேண்டும் என்று இந்திய அரசமைப்புச் சட்டம் (51-எச்) வலியுறுத்துகிறது. அது ஒவ்வொரு குடிமகனின் அடிப்படைக் கடமை என்றும் அரசமைப்புச் சட்டம் கட்டாயப்படுத்துகிறது. இந்திய அரசமைப்புச் சட்டத்திற்குச் சத்தியப் பிரமாணம் செய்துகொண்டு அமைச்சர் நாற்காலியில் அமர்ந்தவர்கள் அந்த அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கோட்பாட்டைக் காலில் போட்டு மிதிக்கலாமா? பாத பூஜை செய்வதுபிற்போக்குத்தனம் அல்லவா? அதுவும் காலைக் கழுவுவது அசுத்தமான ஆரோக்கியமற்ற அஞ்ஞான செயல்பாடு அல்லவா! மாணவர்களுக்கு நோய்ப் பரவும் ஆபத்தில்லை என்று அறுதியிட்டுதான் கூற முடியுமா? இதில் மகிழ்ச்சிக்குரியது, பாராட்டக் கூடியது என்னவென்றால், மாநிலங்களவையில் தி.மு.. உறுப்பினர் கனிமொழி ஆற்றிய உரையை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய செயலாளர் தோழர் து.ராஜா அவர்களும், மத்திய உணவுத் துறை அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் அவர்களும், அய்க்கிய ஜனதா தளத் தலைவர் சரத் யாதவ் அவர்களும் வரவேற்று ஆதரவு தெரிவித்ததுதான்”.

Vellore Amma - pada pujaசென்னையில் நடைபெற்ற இந்து ஆன்மிகக் கண்காட்சியில் அரங்கேற்றப்பட்ட அத்துமீறல்கள்[5]: விடுதலை தொடர்கிறது, “இதுபோன்ற பொதுக் கொள்கைகளில் கட்சிகளைக் கடந்து ஒன்று சேர்ந்து நாடாளுமன்றத்தில் குரல் கொடுக்கும் மரபு தோற்றுவிக்கப்பட்டால், ஆளும் கட்சியும் சட்ட விரோத, மதச் சார்புக் காரியங்களைச் செய்யத் தயங்குமே! சென்னையில் நடைபெற்ற இந்து ஆன்மிகக் கண்காட்சியில் அரங்கேற்றப்பட்ட அத்துமீறல்கள், நடவடிக்கைகள் விசாரிக்கப் படவேண்டும். இவ்வளவுப் பிரம்மாண்டமாக ஏற்பாடுகளைச் செய்வதற்கு நிதி ஆதாயம் எங்கிருந்து வருகிறது என்பதும் கண்டுபிடிக்கப்பட வேண்டும். கறுப்புப் பணக்காரத்தன்மையின் வடிவமான கார்ப்பரேட் சாமியாரான ராம்தேவ்களை உரிய முறையில் விசாரித்தால், பல அதிர்ச்சியூட்டக்கூடிய தகவல்கள் வெளிவரக்கூடும். பக்திஇப்பொழுதெல்லாம் கார்ப்பரேட் நிறுவனங்களின் கைகளுக்குள் சென்றுவிட்டதே!”.

kader3 Vellore Ammaதமிழிசை கனிமொழி பேச்சுக்கு கண்டனம்[6]: டெல்லியில் இருந்து சென்னை திரும்பிய தமிழக பா.ஜனதா தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது[7]: “ பாராளுமன்றத்தில் சகோதரி கனிமொழி இந்து மதத்தில் குருவிற்கு பாத பூஜை செய்வது கூட இந்துத்துவா திணிப்பு என்கிறார்[8]. இவர்கள் போலி மதச்சார்பின்மை பற்றி பேசுகிறார்கள்[9]. நல்ல பழக்கங்கள் கூட தவறாக சித்தரிக்கப்படுகிறது[10]. இது கண்டனத்துக்குரியது. ஒவ்வொரு மதத்துக்கும் ஒவ்வொரு பழக்க வழக்கம் உள்ளது. பெரியவர்கள், குருவுக்கு மரியாதை கொடுக்க வேண்டும்[11]. இதற்கு மாணவர்கள் சமூகம் சரியாக வழி நடத்தப்படவில்லை. எல்லாமே தவறு என்பது தவறு. நான் மத்திய மந்திரி பிரகாஷ் ஜவ்டேகரிடம் புதிய கல்வி கொள்கைக்கு எதிராக தமிழகத்தில் போராட்டம் நடப்பது பற்றி கூறினேன். அதற்கு அவர் புதிய கல்வி கொள்கை இன்னும் முழுவடிவம் பெறவில்லை. வரைவு திட்டம்தான் உள்ளது. ஆலோசனையும் பெறப்பட்டுள்ளது. செப்டம்பர் 15 வரை கருத்து தெரிவிக்க கால அவகாசம் உள்ளது. நிறைவேற்றப்படாத திட்டத்துக்கு தமிழகத்தில் ஏன் போராட்டம் நடத்துகிறார்கள் என்று அவர் கேட்டார்”, இவ்வாறு அவர் கூறினார்.

students-perform-pada-pooja-to-parents-HSSFநாத்திகம், இந்து-எதிர்ப்பு முதலியன தமிழ் சமுதாயத்தை மேன்படுத்த முடியாது: கடந்த 60 ஆண்டு காலம் திராவிடம், தனித்தமிழ், இந்தி-எதிர்ப்பு, பார்ப்பன-எதிர்ப்பு, கோவில்-இடிப்பு, கோவில் சொத்து கொள்ளை, இந்துமத விசயங்களில் தலையிடுவது,….. முதலிய காரியங்கள் தமிழ்நாடு மக்களை விழிப்படைய செய்தது. 1960களிலேயே, இவையெல்லாம் எடுபடாமல் பக்திப்படங்கள் நூறு நாட்களுக்கு மேலாக ஓடி சாதனை படுத்தின. பிறகு, ஆதிபராசக்தி, அம்மா போன்ற பக்தி இயக்கங்கள் வளர்ந்தன. திகவினரே கலந்து கொள்கின்றனர், சபரி மலைக்கும் போய் வர்கின்றனர். படிப்பு, பாடதிட்டம் முதலியவற்றில் பிந்தங்கியதால், தமிழக மாணவர்கள் தாம் பின்தங்கினர். நன்றாகப் படிப்பவர்கள் பற்றி பிரச்சினை இல்லை. ஆனால், மற்றவர்களை ஏமாற்றி படுகுழியில் தள்ளியது இவர்களின் சித்தாந்தம் தான். இங்கும் தங்களது மகன் – மகள், பேரன் – பேத்திகளை ஆங்கில பள்ளி, கான்வென்ட், சிபிசிஇ போன்ற முறைகளில் படிக்க வைத்து அல்லது அயல்நாடுகளுக்கு அனுப்பி வைத்து உயர்ந்து விட்டனர். ஆனால், சாதாரண மக்களின் மகன் – மகள், பேரன் – பேத்திகளை தமிழ் அல்லது போசமான பாடதிட்டங்களில் படிக்க வைத்து தரத்தை குறைத்தனர், அவர்களது வாழ்க்கையினைக் கெடுத்தனர். இந்நிலையில், அவர்கள் பண்புடன், நல்ல குணங்களுடன் வளர, இருக்க பெற்றோரைப் போற்ற வேண்டும் என்று நிகழ்சிகள் இருந்தால், அவற்றை “புதிய கல்வி திட்டத்துடன்” இணைத்து கலாட்டா செய்கின்றனர். இது திராவிடக் கட்சிகளில் போலித்தனம், கையாலாகாதத் தனம், ஏனாற்றுவேலை, சமுதாய சீரழிப்பு போன்ற தீயசக்திகளைத் தான் வெளிப்படுத்துகிறது. இதனால் தான், அவர்கள், இவர்கள் மீதான நம்பிக்கையினையும் இழந்து வருகின்றனர்.

© வேதபிரகாஷ்

10-08-2016

[1] http://viduthalai.in/component/content/article/71-headline/127299-2016-08-06-08-48-32.html

[2] விடுதலை, பாத பூஜையா?, சனி, 06 ஆகஸ்ட் 2016 14:18;

[3] விடுதலை, பாத பூஜையா?, சனி, 06 ஆகஸ்ட் 2016 14:18

[4] http://viduthalai.in/component/content/article/71-headline/127299-2016-08-06-08-48-32.html

[5] விடுதலை, பாத பூஜையா?, சனி, 06 ஆகஸ்ட் 2016 14:18

[6] மாலைமலர், மாணவர்கள் பாத பூஜை செய்த விவகாரம்: கனிமொழி எம்.பி.க்கு டாக்டர் தமிழிசை கண்டனம், பதிவு: ஆகஸ்ட் 06, 2016 12:08; மாற்றம்: ஆகஸ்ட் 06, 2016, 15:29.

[7] http://www.maalaimalar.com/Election/ElectionNews/2016/08/06120836/1031074/Tamilisai-soundararajan-Condemn-Kanimozhi-MP.vpf

[8] நக்கீரன், குருவிற்கு பாத பூஜை செய்வது இந்துத்துவா திணிப்பாகனிமொழிக்கு தமிழிசை கண்டனம், பதிவு செய்த நாள் : 6, ஆகஸ்ட் 2016 (13:0 IST); மாற்றம் செய்த நாள் :6, ஆகஸ்ட் 2016 (13:0 IST)

[9] http://www.nakkheeran.in/Users/frmNews.aspx?N=170532

[10] Deccan Chronicle., Why so much dissent against draft policy, asks BJP, J V Siva Prasanna Kumar, Published: Aug 9, 2016, 6:04 am IST; Updated: Aug 9, 2016, 6:05 am IST

[11] Dr Tamilisai also took strong exception to the DMK Rajya Sabha MP Kanimozhi for her remarks on certain Hindu practices and said prostrating before teachers and seeking their blessings by touching their feet is an act to show students’ respect for teachers. “There is nothing wrong in this gesture,” she added.

http://www.deccanchronicle.com/nation/politics/090816/why-so-much-dissent-against-draft-policy-asks-bjp.html

மோடி-பிஜேபி வேறு, வாஜ்பேயி-பிஜேபி வேறு – ராஜா-கனிமொழியை சிறைவைத்த காங்கிரஸ் – இக்கட்சிளுடன் திமுக கூட்டு கிடையாது – கருணாநிதி திமுகவினரிடம் கெஞ்சலாக அறிவிப்பு (2)!

திசெம்பர் 16, 2013

மோடி-பிஜேபி வேறு, வாஜ்பேயி-பிஜேபி வேறு – ராஜா-கனிமொழியை சிறைவைத்த காங்கிரஸ் – இக்கட்சிளுடன் திமுக கூட்டு கிடையாது – கருணாநிதி திமுகவினரிடம் கெஞ்சலாக அறிவிப்பு (2)!

திமுகவினரின் கருத்தைத் தொகுத்து, அதே நேரத்தில் தீர்ப்பளிக்கும் முறையில் கருணாநிதி பேசியது கவனிக்க வேண்டிய விசயமாக இருக்கிறது. காங்கிரஸைக் கடுமையாகத் தாக்கியிருக்கிறார்கள்[1], ஆனால், பிஜேபியுடன் கூட்டு வைத்துக் கொண்டால் நல்லது என்றும் பேசியிருக்கிறர்கள். தினகரன் அவரது பேச்சை வெளியிட்டுள்ளது[2]. பொதுவாக நக்கீரன் அம்மாதிரி வெளியிடும், ஆனால், இப்பொழுது சுருக்கத்தை வெளியிட்டுள்ளது[3]. கருணாநிதி செய்தியாளர்களிடம் வழக்கம் போல பதில் சொல்லி சமாளித்திருக்கிறார்[4]. பிஜேபியும் இல்லை, காங்கிரஸும் இல்லை எனும் போது, வேறு யாடுடன் கூட்டு என்பது விந்தையாக இருக்கிறது[5]. ஆங்கில ஊடகங்கள் மட்டும் திட்டவட்டமாக பிஜேபி அல்லது காங்கிரஸ் கூட, கூட்டு இல்லை என்று தெரிவித்திருப்பது நோக்கத்தக்கது[6]. இதனை நேற்று இரவே (15-12-2013) ஆங்கில ஊடகங்கள் வெளியிட்டு விட்டன.

ஒரு  இயக்கத்தையே,   ஒரு  பெரிய  ஊழல்  சாம்ராஜ்யத்தில்  சிக்கவைக்கும்  முயற்சியில்  ஈடுபட்டவர்கள்  யார்யார்  என்று  எனக்கு  இன்னமும்   நன்றாகத்  தெரியும்: “நீங்கள் இந்தப் பொதுக்குழு தீர்மானங்கள் மூலமாக அனுமதித்திருக்கின்ற அந்தக் குழுவிலே இடம் பெறுகிறவர்கள், அந்தக் குழு யாரிடத்திலே தன்னுடைய முடிவினைத் தெரிவிக்க விரும்புகிறதோ, அந்த முடிவைப் பற்றி யோசித்து, இறுதி முடிவு எடுக்க வேண்டிய இடத்திலே இருக்கின்ற நானும், அன்பழகனும், ஸ்டாலினும் அத்தனை பேரும் இவைகளை எல்லாம் மறந்து விட மாட்டோம். மறந்து விட்டு ஏமாந்து விடாதீர்கள்

என்று நீங்கள் சொன்னால், நான் உங்களுக்குச் சொல்கிற பதில், ஒரு முறை பட்டது போதும், தனிப்பட்ட ஒரு காயத்திற்காக நாங்கள் அழவில்லை. தனிப்பட்ட முறையில் எனக்கு ஏற்பட்ட காயம் அல்லது ராஜாவிற்கு ஏற்பட்ட காயத்திற்காக நாங்கள் வருத்தப்படவில்லை. அவைகளை நாங்கள் சமாளிக்க முடியும்ஆனால் ஒரு இயக்கத்தையே, ஒரு பெரிய ஊழல் சாம்ராஜ்யத்தில் சிக்க வைக்கும் முயற்சியில் ஈடுபட்டவர்கள் யார் யார் என்று எனக்கு இன்னமும் நன்றாகத் தெரியும். திமுகவை ஊழலில் சிக்க வைத்தவர்களில் காங்கிரசில் குறிப்பாக உள்ளார்கள் என்றால், அந்த கூட்டாளிகளை, திமுக வெளிப்படுத்தலாமே? அந்த பிஜேபி வேறு, இந்த பிஜேபி வேறு எனும் போது, அந்த காங்கிரஸ்காரர்கள் வேறு, இந்த காங்கிரஸ்காரர்கள் வேறு, என்று இனம் கான வைக்கலாமே? ஏன் அவர்களை மறைத்து சாட வேண்டும்? துரோகிகளின் முகமூடிகளை கிழித்து எறியலாமே? இதுதானே தகுந்த சந்தர்ப்பம்?

அதையெல்லாம் மறந்து விட்டு எப்படி அவர்களை நாங்கள் காப்பாற்றியிருக்கிறோம் என்பது காப்பாற்றப்பட்டவர்களுக்குத் தெரியும்.

இந்திய  மீனவர்களைக்  கூட  பாதுகாக்க  முடியாத  நிலையிலே  இருக்கிறோம்:  “இதையெல்லாம் விட முக்கியமாக இலங்கைத் தமிழர் பிரச்சினையில் இன்றைய மத்திய காங்கிரஸ் அரசால் நாங்கள் எந்த அளவிற்கு ஏமாற்றப்பட்டோம் என்பதும், தொடர்ந்து தாக்கப்படுகின்ற இந்திய மீனவர்களைக் கூட பாதுகாக்க முடியாத நிலையிலே இருக்கிறோம் என்பதும் மறந்து விடக் கூடிய ஒன்றா என்ன? ஆகவே, உங்களுக்கு சொல்லிக் கொள்கிறேன். இவைகளை எல்லாம் மறந்து விட்டு நாங்கள் மீண்டும் காங்கிரசுடன் சேருவோம் என்று தயவுசெய்து நீங்கள் எண்ண வேண்டாம்[7].

இரண்டு  கட்சிகள்  விடப்பட்டு  விட்டன –   தனித்து  நிற்போம்: “நம்மோடு அணி சேர எந்தக் கட்சியும் விரும்பாவிட்டாலும் கூட, நாம் அதற்காகக் கவலைப்படப் போவதில்லை. 75 இலட்சம் பேர் கட்சி உறுப்பினர்களாக இருக்கிறார்கள். அந்த 75 லட்சம் பேரும்அவருடைய வீட்டார், குடும்பத்தார், உற்றார் உறவினர்களை எல்லாம் சேர்த்துப் பார்த்தால் அந்த எண்ணிக்கை கோடிக்கணக்கில் வரும். அவைகளை எல்லாம் நாங்கள்

கணக்குப் பார்த்து, யாரும் அணி சேர வரா விட்டாலும் கூட, தனியாக நிற்போம். வந்தால், வந்தவரையிலே இலாபம் என்று வட்டிக் கணக்குப் பார்க்காமல், அவர்களுடைய தோழமை உணர்வுக்கு, எங்களோடு இருந்தால் நாட்டுக்கு நன்மை என்று கருதுகிறார்களே, அந்த நம்பிக்கைக்கு நாங்கள் தருகின்ற மதிப்பாக, அணி சேருவோம். ஆனால் யாரோடு அணி சேர்ந்தாலும், யாரோடு என்பதிலும் ­இரண்டு பேரும் இரண்டு கட்சிகள் ­நான் பேசும்போதே விடப்பட்டு விட்டன என்பதை நீங்கள் தெரிந்து கொண்டிருக்கிறீர்கள். மிச்சம் இருக்கும் பெரியக் கட்சியான அதிமுகவுடன் கூட்டு என்பது பெரிய ஜோக்காகி விடும். அதேபோல, அதிமுககூட்டணியில் உள்ள கட்சிகளுடன் கூட்டு வைத்துக் கொள்ள முடியாது. பிறகு தமிழகத்தில் யாருடன் திமுக கூட்டு வைத்துக் கொள்ள முடியும்? இனி உதிரிப்பூக்களை வைத்துக் கொண்டு மாலைக் கட்டினால், அதில் வாசம் வருமா அல்லது மாலைதான் முழுமையடையுமா?

அப்படிச் சேரும்போது, கட்சிகளோடு அணி சேருவது பற்றி அல்ல. தனித்து நிற்போம் என்று நான் சொன்னேன்”, இவ்வாறு கருணாநிதி பேசினார்[8].

கட்சியை  விலை   பேசி  விடாதீர்கள்’:  பொதுக்குழுவில்   கருணாநிதி  பேசியதாவது: “நாம் தனித்து நின்றாலும் கூட, ஓரிரு கட்சிகளின் துணையோடு மாத்திரம் தான் நிற்க முடியும் என்றாலும் கூட, நீங்கள் தான் வேட்பாளர்களாக அறிவிக்கப்படுவீர்கள். அப்படி அறிவிக்கப்பட்ட வேட்பாளர்கள், அந்த வேட்பாளருக்கு ஆதரவாக இருக்கின்ற தொண்டர்கள், தனி அணி அமைத்து விடக் கூடாது. அணி தேவை என்று நான் நம்புகிறேன், ஆனால் நீங்கள் அணி வேண்டும் என்றீர்களே, அதனால் நாங்கள் எங்கள் ஊரிலே, நீங்கள் யாரை நிறுத்துகிறீர்களோ, அவர் ஒரு அணி, அவரை எதிர்க்கின்ற நாங்கள் இன்னொரு

அணி என்று பல அணிகளாக ஆகி, எல்லா அணிகளும், பல உப நதிகள், ஒரு பெரு நதியிலே கலந்து அதை மகாநதியாக ஆக்குவதைப் போல, நீங்கள் ஆக்க வேண்டுமே தவிர, கிளைநதிகளாக ஆனால், அது வாய்க்கால்களாக மாறி விடும் என்பதை மறந்து விடாதீர்கள்அணி சேருகின்ற நேரத்தில், அந்த அணிகளுக்கு ஒத்துழைப்பு தர வேண்டும். இனி வெற்றி பெற வாய்ப்பிலை என்று தெரிந்து விட்டால், திமுக எங்கு பிரிந்து விடுமோ என்று பயந்து விட்டார் போலும். பிஜேபியை ஆதரிக்கும் திமுக, எதிர்க்கும் திமுக என்று இரண்டாக பிரிந்து விட்டால் என்னாவது? எம்.பி ஆகலாம், மந்திரியாகலாம் என்ற ஆசை வந்தால், இதெல்லாம் சாத்தியம் தானே?

அந்த அணிகளில் ஒன்றாக திமுக இருந்தால், அந்த திமுக வேட்பாளருக்கு அவர் எந்தத் தொகுதியிலே நின்றாலும், எந்தத் தொகுதியிலே போட்டியிட்டாலும், யாரை எதிர்த்துப் போட்டியிட்டாலும் நம்முடைய முழு பலமும், முழு சக்தியும், நம்முடைய முழுமையான ஆர்வம் அனைத்தும் அவருடைய வெற்றிக்கே தான் என்கிற அந்த நிலையில் நீங்கள் பாடுபட வேண்டும். அந்த வெற்றியை நீங்கள் குவித்து, அடுத்த பொதுக் குழுவில் உங்களுக்கெல்லாம் நானும், அன்பழகனும், ஸ்டாலினும் நன்றியை குவிக்கின்ற வாய்ப்பை தாருங்கள்

நான்  தலைவன்  என்ற  அந்த  முறையிலே,   அந்த  தகுதியைக்  கூட  மறந்து  விட்டு  உங்களைக்  கெஞ்சிக்  கேட்கிறேன்: “இன்னும் சொல்லப் போனால், நான் தலைவன் என்ற அந்த முறையிலே, அந்த தகுதியைக் கூட மறந்து விட்டு உங்களைக் கெஞ்சிக் கேட்கிறேன். கழகத்தை, மாற்றாருக்கு விலை பேசி விடாதீர்கள்

உங்கள் ஒற்றுமையை வீணாக்கி விடாதீர்கள். வேற்றுமையினால் ஒருவருக்கு ஒருவர் உள்ள தனிப்பட்ட விரோதங்களை எல்லாம், இந்த தமிழகத்தைக் காக்க வந்த இந்த இயக்கத்தின் மீது காட்டி, இயக்கத்தைப் பழி தீர்த்து விடாதீர்கள். கட்சியை கட்டிக் காக்க வேண்டிய பொறுப்பை ஏற்றுக் கொள்ளுங்கள். வெற்றி வரும், தோல்வி வரும், ஆனால் கட்சி நிலைக்கும். கெஞ்சிக் கேட்டுக் கொள்ளும் அளவிற்கு முதிர்ந்த தலைவர் வந்து விட்டார் என்றால், தொண்டர்கள் வேறுவிதமாக நினைக்கிறார்கள் என்றாகிறது. ஸ்டாலின், அழகிரி என்று கோஷ்டிகள் வேறுவிதமாக முடிவெடுத்தாலும், திமுக பிரியத்தான் செய்யும். அதனால், பாவம், கெஞ்சியும் பார்க்கிறார்.

ஒரு கட்சியின் ஆற்றலை, அதனுடைய வாழ்வை, அதனுடைய வளத்தை நிர்ணயிப்பது தேர்தல் வெற்றி அல்ல. தேர்தல் என்பது வந்து போகின்ற ஒன்று.

 

அதே  நேரத்தில்  ஒரு  தேர்தல்,   நமக்குச்  சோதனை: ஆனால் அதே நேரத்தில் ஒரு தேர்தல், நமக்குச் சோதனை. என்ன சோதனை என்றால், நாம் எந்த அளவிற்கு ஒற்றுமையாக இருக்கிறோம், எந்த அளவிற்கு நாணயமாக இருக்கிறோம், எந்த அளவிற்கு ஒருவரையொருவர் காட்டிக் கொடுக்காமல் இருக்கிறோம், எந்த அளவிற்கு ஒருவரையொருவர் வீழ்த்தாமல் நல்ல எண்ணத்தோடு பழகிக் கொண்டிருக்கிறோம் என்பதை அளக்கும் கருவிநாளைய தினம் எந்த அணியோ, எந்தக் கட்சியோடு

அணியோ, அந்த அணி உங்களால் முன்மொழியப்பட்ட, உங்களால் தீர்மானிக்கப்பட்ட, நீங்கள் வகுத்த தீர்மானங்களில் ஒன்றான திமுக.வின் தலைவரும், பொதுச் செயலாளரும் ஒரு குழுவை அமைத்து, அவர்கள் மூலமாக தேர்தல் உடன் பாட்டிற்கான சக்திகளை ஒன்று திரட்ட வேண்டுமென்று சொல்லியிருக்கிறீர்களே, அந்தச் சக்தியை நாங்கள் வீணாக்காமல் பாடுபடுவோம், பணியாற்றுவோம். 2014 தேர்தல் திமுகவிற்கு சோதனை என்பது வேடிக்கையாக இருக்கிறது. 2014 தேர்தல், நிச்சயமாக மோடிக்கு சோதனை. ஏனெனில் வெற்றி பெறாவிட்டால், அவரது அவரது தேசிய அரசியல் முடங்கிவிடும். காங்கிரசுக்கு சோதனை, ஏனெனில், தோற்றுவிட்டால், இனி தலையெடுக்க முடியாது. ஆனால், திமுகவிற்கு ஏன் சோதனை காலம் வரவேண்டும் என்று தெரியவில்லை!

 அது எங்களுக்காக அல்ல, உங்களுக்காக, உங்களுடைய எதிர்கால சந்ததிகளின் வாழ்வுக்காக, தமிழுக்காக, தமிழர்களுக்காக, திராவிட இன உணர்வைக் கட்டிக் காப்பாற்றுவதற்காக என்பதை தெரிவித்து கொள்கிறேன்”, இவ்வாறு கருணாநிதி பேசினார்.

 

வேதபிரகாஷ்

© 16-12-2013


[2] தினகரன், பொதுக்குழுவில்கருணாநிதிதிட்டவட்டம் : காங்கிரஸ், பாரதியஜனதாவுடன்திமுககூட்டணிஇல்லை,மாற்றம் செய்த நேரம்:12/16/2013 1:53:01 AM.

சேஷாசல முதலியார் – சேஷாசலம் – பெரியார்தாசன் – “……………….” – சித்தார்த்தா – அப்துல்லாஹ் (1950-2013) காலமானார்!

ஓகஸ்ட் 19, 2013

சேஷாசல முதலியார் – சேஷாசலம் – பெரியார்தாசன் – “………………….” – சித்தார்த்தா – அப்துல்லாஹ் (1950-2013) காலமானார்!

Abdullah - in different poses

பெரியார்தாசன் என்கின்ற அப்துல்லா காலமானார்: பாரதிராஜாவின் `கருத்தம்மா’, `காதலர் தினம்’ உள்பட பல்வேறு தமிழ் திரைப் படங்களில் நடித்தவர் பெரியார்தாசன். இவர் சென்னை பச்சையப்பா கல்லூரியில் 38 ஆண்டுகள் பேராசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். 15-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த இவர் பட்டிமன்றம், கருத்தரங்குகளில் பங்கேற்று வந்தார். ம.தி.மு.க. நிர்வாகியான இவர் அந்த கட்சியின் உயர் நிலைக்குழு உறுப்பினராக இருந்தார். பெரியார்தாசன் வீடு திருவேற்காடு மகாலட்சுமி நகர் 6-வது தெருவில் உள்ளது. கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். கல்லீரல் கோளாறு காரணமாக குளோபல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று நள்ளிரவு 1.25 மணிக்கு மரணம் அடைந்தார். அவருக்கு வயது 63. அவரது உடல் திருவேற்காட்டில் உள்ள அவரது வீட்டில் பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது[1]. பெரியார்தாசனுக்கு வசந்தா (62) என்ற மனைவியும், வளவன் (35), சுரதா (35) என்ற 2 மகன்களும் உள்ளனர்[2].

Seshachalam-Periyardasan-Siddharth-Abdullah

அவருடையஆன்மாசாந்தியடையபிரார்த்தனை: “அவருடைய ஆன்மா சாந்தியடைய பிரார்த்தனை” என்று செய்யலாமா, கூடாதா என்று தெரியவில்லை. இருப்பினும், இந்தியப் பாரம்பரியப்படி, “அவருடைய ஆன்மா சாந்தியடையடைவதாக” என்று சொல்லிக் கொண்டு, அவரது குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்ளலாம். இணைதளங்களில் தேடியபோது, நக்கீரனில் வெளிவந்த கீழ்கண்ட செய்தி கண்களில் பட்டது. அது அப்படியே கொடுக்கப்படுகிறது. கதிரவன் என்பவர் அச்செய்தியைக் கொடுத்திருக்கிறார்.

Abdullah introduced as Periyarthasan in Dubai - hand bill

என்னநடந்ததுஇவர்கள்  (பெரியார்தாசன்மற்றும்மணிவண்ணன்) வாழ்க்கையில்?: வ்வப்போது சினிமாவில் நடித்து வந்த பெரியார்தாசன் அண்மையில் (2010) ஆத்திகரானார்.  அதுமட்டுமில்ல – இஸ்லாம் மதத்திற்கு மாறினார் (11-03-2010). இவர் மாதிரியே பெரியாரின் தீவிர பற்றாளர் மணிவண்ணன்.  இவர் இப்போது சாய்பாபா பக்கம் சாய்ந்திருக்கிறார். சென்னை பச்சையப்பன் கல்லூரியில் தத்துவ இயல்[3] பேராசிரியராக பணிபுரிந்த பெரியார்தாசனை பாரதிராஜா சினிமாவுக்கு கொண்டு வந்தார்.  நடிப்போடு ரியல் எஸ்டேட், மல்டி லெவல் மார்க்கெட்டிங்கிலும் கால் பதித்தார். கடந்த 2004ம் ஆண்டு அன்பு பாலா நடித்த அம்மா, அப்பா, செல்லம் படத்தின் படப்பிடிப்பு புதுச்சேரியில் நடந்தது.   இதற்காக சென்னையில் இருந்து நான், (பேட்டி எடுக்க) பெரியார்தாசன், நடிகை சபீதா ஆனந்த் (நடிக்க)  மூவரும் ஒரு காரில் புதுச்சேரி சென்றோம். அப்போது பெரியார்தாசன், தனது மகன் வ.சி.வளவன் திருமணம் அழைப்பிதழ் கொடுத்தார்.  அது ஒரு புத்தகமாகவே இருந்தது.    அந்த திருமண அழைப்பிதழில் பெரியாரின் படம் அச்சிடப்பட்டிருந்தது.  உள்ளே திருக்குறள் இன்பத்து பாலுக்கு பெரியார்தாசன் எழுதிய விளக்கவுரை.

Periyardasan marriage invitation card

ஏன்பெரியாரின்படத்தைதிருமணஅழைப்பிதழில்அச்சிட்டுள்ளேன்: ஏன் பெரியாரின் படத்தை திருமண அழைப்பிதழில் அச்சிட்டுள்ளேன் என்று நினைப்பீர்கள்? என்று அவராகவே கேட்டு அவராக விளக்கம் சொல்லிக்கொண்டு வந்தார். சேசாசலம் என்கிற என் பெயரையே பெரியார்தாசன்னு மாத்திக்கிட்டேன்னா பார்த்துக்குங்க…….என்று பெரியார் மீது தான் கொண்ட பற்று பற்றி,  கிழக்கு கடற்கரை சாலை நீலாங்கரையில் ஆரம்பித்து மரக்காணம் வரை சொல்லிக்கொண்டு வந்தார். நொங்கு கடை, இளநீர் கடைகளில் கார் நின்ற போது மட்டும் இடைவேளை. ஐந்து வருடங்களில் (2005-2010) அவர் வாழ்க்கையில் என்ன மாற்றம் நிகழ்ந்ததோ….தற்போது இறைவன் மீது நாட்டம் கொண்டிருக்கிறார்.  இஸ்லாம் மதத்திற்கு மாறியுள்ளார். இதே போல் பெரியாரின் தீவிர பற்றாளர் மணிவண்ணன்.   இதனால்தான் இவருக்கும் நடிகர் சத்யராஜூக்கும் நெருக்கம் அதிகமானது. இவர் இப்போது பெரியார் தொண்டர்களுக்கு அடுத்த அதிர்ச்சி கொடுத்திருக்கிறார்.  கடந்த சில வாரங்களுக்கு முன் மஹாராஷ்டிராவில் இருக்கும் சீரடி சாய்பாபா சன்னதிக்கு சென்று வந்திருக்கிறார்[4]. கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்யும் அளவிற்கு என்ன நடந்தது இவர்கள் வாழ்க்கையில்?

Periyardasan-explaining his position-about doubting him

2013ல்பெரியார்தாசன், மணிமண்ணன்காலமானது: ஜூன் 2013ல் தான் நாத்திகரான மணிவண்ணன் (31-07-1954 – 15-06-2013) காலமானார். கதிரவன் நக்கிரனில் எடுத்துக் காட்டியுள்ளபடி, மணிவண்ணன் “கடந்த சில வாரங்களுக்கு முன் மஹாராஷ்டிராவில் இருக்கும் சீரடி சாய்பாபா சன்னதிக்கு சென்று வந்திருக்கிறார்[5]” என்றிருந்தால், இந்த மூன்று ஆண்டுகளில் மணிவண்ணன் ஆதிகரானாரா, கடவுளை நம்ப ஆரம்பித்தாரா, என்பதெல்லாம் நமக்கு தெரியாது. ஆனால், அவரது நண்பர் இந்த மூன்று ஆண்டுகளாக முஸ்லிமாக இருந்திருக்கிறார். (பகுத்தறிவு, நாத்திகம் இவற்றையெல்லாம் மூட்டைக் கட்டிவிட்டு, பெரியாரையும் ஒதுக்கி விட்டு) கடவுளை நம்பியிருக்கிறார். திராவிடர்களுக்குக் குழப்பமாகத்தான் இருக்கும். ஊடகங்களும்[6] “பெரியார்தாசன் மரணம்” என்றுதான்[7] செய்திகளை[8] வெளியிட்டிருக்கிறார்கள்[9].

Periyar Sasan - Abdullah etc

இதயத்தில்விழுந்தஇடிபெரியார்தாசன்மறைவுக்குவைகோஇரங்கல்: இதயத்தில் விழுந்த இடி என்று பேராசிரியர் பெரியார்தாசன் மறைவுக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்[10]. அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், திராவிட இயக்கத்தின் கருத்துக் களஞ்சியக் கருவூலமான, என் ஆருயிர்ச் சகோதரர் அப்துல்லாஹ் பெரியார்தாசன், என்னையும், இயக்கத்தோழர்களையும் கண்ணீரில் துடிக்க வைத்து மறைந்து விட்டார். தந்தை பெரியாரை, மாணவப் பருவத்தில் தலைவராக ஏற்றுக்கொண்டு, சுயமரியாதை வீரராக, பகுத்தறிவு நெறியை மக்களிடம் பரப்ப, எழுத்தாலும், பேச்சாலும் அவர் ஆற்றிய பணிகள் ஈடு இணையற்றவை.

Periyardasan met Ajaya Malhothra

பொருளியல், தத்துவஇயல், உளவியல்பயின்றது: பச்சையப்பன் கல்லூரியில், பொருளியல் இளங்கலை, தத்துவ இயல் முதுகலை  பட்டங்களைப் பெற்று, இலண்டன் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் உளவியல் பயின்று, முனைவர் பட்டம் பெற்று, அமெரிக்காவின் கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தில் ஆறு ஆண்டுகள் பேராசிரியராகப் பணி ஆற்றி, 34 ஆண்டுகள் பச்சையப்பன் கல்லூரியில், மெய்ப்பொருள் இயல் பேராசிரியராகப் பணி ஆற்றினார். அண்ணல் டாக்டர் அம்பேத்கருடைய, அனைத்து நூல்களையும் பழுதறக் கற்று,  ஆய்ந்து அறிந்து, அதில் அவர் பெற்ற பாண்டித்யத்துக்கு நிகராக இன்னொருவரைச் சொல்ல முடியாது. அதைப்போலவே, தந்தை பெரியாரின் எழுத்துகளையும், உரைகளையும், முழுமையாகக் கற்று உணர்ந்தவர்; அறிவாசானின் நம்பிக்கையையும், அன்பையும் பெற்று, திராவிடர் கழகத்தில் கொள்கை பரப்புச் செயலாளராகவும் இயங்கியவர்.

periyar nagar poster -claimimg periyardasan instead of Abdullah

தமிழ்ஈழவிடுதலை, பௌத்தம், பாலிமொழிகற்றல்முதலியன: தமிழ் ஈழ விடுதலைக்காக அரும்பாடுபட்டவர். மூன்று தமிழர்களின் உயிர்களை, தூக்குக் கயிற்றில் இருந்து விடுவிக்க, நான் போராடிய காலத்தில், தாமாக முன்வந்து, தன்னை மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைத்துக் கொண்டு, கடந்த இரண்டு ஆண்டுகளாக, கழகத்தை மக்கள் மன்றத்தில் வலுப்படுத்திட, மேடை முழக்கத்தின் மூலமாக, அவர் ஆற்றி உள்ள பணிகள் அளப்பரியதாகும். புத்தரின் போதனைகளைப் பயில்வதற்காக, இலங்கைக்குச் சென்று, பாலி மொழியைக் கற்றுத் தேர்ச்சி பெற்றார். 56 நூல்களைத் தந்து உள்ள பெரியார்தாசன், அம்பேத்கர் தொகுத்த புத்தரும் அவர் தம்மமும் என்ற நூலை, தமிழில் மொழி ஆக்கம் செய்தார்.  அந்தநூல், தைவான் நாட்டில் மூன்று இலட்சம் படிகள் அச்சிடப்பட்டு, உலகெங்கும் பரப்பப்பட்டன.

Periyardasan died, Dinamalar

உடலைஎரியூட்டவும்வேண்டாம்; புதைக்கவும்வேண்டாம்: அவர் உடல் நலம் குன்றியபோது, ஜூலைத் திங்களில் அவரது இல்லம் சென்று சந்தித்து, பல மணி நேரம் உரையாடிக் கொண்டு இருந்தேன். இரண்டு நாள்களுக்கு முன்பு, ஆகஸ்ட் 16 ஆம் நாள், குளோபல் மருத்துவமனையில் அவரைச் சந்தித்தேன். மூன்று மணி நேரம் அவர் என்னிடம் மனம்விட்டுப் பேசிக்கொண்டு இருந்தார். அதுதான், அவர் கடைசியாகப் பேசியது என்று, அவரது பிள்ளைகள், நேற்று என்னிடம் தெரிவித்தனர். பேரறிஞர் அண்ணாவைக் கொத்திச் சென்ற புற்று நோய்தான், பெரியார்தாசனையும் நம்மிடம் இருந்து பறித்து விட்டது. ‘தான் இறந்தபிறகு, விழிகளை சங்கர நேத்ராலயா மருத்துவமனைக்குத் தந்து விடுங்கள்; உடலை எரியூட்டவும் வேண்டாம்; புதைக்கவும் வேண்டாம்; உடலை சென்னை மருத்துவக் கல்லூரி மாணவர்களது ஆராய்ச்சி படிப்புக்காகக் கொடுத்து விடுங்கள்’ என்று குடும்பத்தாரிடம் கூறியதற்கு ஏற்ப, அவ்விதமே அவரது உடல், சென்னை மருத்துவக் கல்லூரிக்கு வழங்கப்படுகிறது. இன்னும் பல ஆண்டுகள் வாழ்ந்து, திராவிட இயக்கத்துக்கும், தமிழ் இனத்துக்கும் அருந்தொண்டு ஆற்ற  இருந்த, எங்கள் கொள்கை வைரத்தை, சாவு கொடூரமாகக் கொண்டு போய் விட்டதே என்ற வேதனையில் தவிக்கிறேன். அவரை இழந்து ஆற்றொணாத் துயரத்தில் வாடும், அவரது குடும்பத்தினருக்கும், உற்றார் உறவினர்க்கும் எனது கண்ணீர் அஞ்சலியைத் தெரிவித்துக் கொள்கின்றேன் என்று தெரிவித்துள்ளார்[11].

வாழ்க்கைக்குறிப்பு: சேசாசலம் 1950ம் ஆண்டு வட ஆற்காடு மாவட்டத்தில் உள்ள அகரம் என்ற கிராமத்தில், சைவவேளாளர் குடும்பத்தில் பிறந்தார். சேசாசல முதலியாராக, இந்துமத நம்பிக்கையாளராக இருந்தார். 1980ல் பெரியாரின் தொடர்பினால், “பெரியார்தாசன்” ஆனார். திராவிட சித்தாந்தத்தில் ஊறியிருந்தாலும், பல நம்பிக்கைகளை ஆராய்ந்து கொண்டிருந்ததால், சில காலத்திற்கு கிருத்துவராகக் கூட இருந்தார் என்று சொல்லப்படுறது. பிறகு பௌத்தராகி, “சித்தார்த்” என்ற பெயரை வைத்திருந்தார். 2010ல் முஸ்லிம் ஆனார்.

காலம் பெயர் மதம் / நம்பிக்கை
c.1950-70 சேசாசல முதலியார் சைவம்/ இந்து
c.1970-80 சேசாசலம் பகுத்தறிவுவாதி
c.1980-2008 பெரியார்தாசன் நாத்திகம் / இந்துவிரோதம்
c.2008-10 சித்தார்த் பௌத்தம் / இந்துவிரோதம்
c.2010-13 அப்துல்லா இஸ்லாம் / கடவுள்-மதம் நம்பிக்கையாளர்

C = circa = approximately = நம்பிக்கை, மதநம்பிக்கை, கடவுள் நம்பிக்கையைப் பொறுத்த வரையிலும் நிலைமை மாறியுள்ளதால், இப்படி குறிப்பிடப் பட்டுள்ளது.

யார் மறைந்தது, எது கடந்தது, எது நின்றது?: சித்தாந்த கலவைகளினால், குழப்பங்களினால், நம்பிக்கைச் சிதறல்கள், மோதல்கள் இவற்றினால் உருவானவ போலிருந்தார் என்று அவரது வாழ்க்கைக் குறிப்புகள் காட்டுகிறது. ‘தான் இறந்தபிறகு, விழிகளை சங்கர நேத்ராலயா மருத்துவமனைக்குத் தந்து விடுங்கள்; உடலை எரியூட்டவும் வேண்டாம்; புதைக்கவும் வேண்டாம்; உடலை சென்னை மருத்துவக் கல்லூரி மாணவர்களது ஆராய்ச்சி படிப்புக்காகக் கொடுத்து விடுங்கள்’ என்று குடும்பத்தாரிடம் கூறியதிலிருந்து அத்தகைய போராட்டங்கள் வெளிப்படுகின்றன. 11-03-2010 முதல் 18/19-08-2013 அன்று வரை முஸ்லிமாக இருந்த அப்துல்லா இறந்தால், யார் இறந்தது என்று உலகம் சொல்லும்?

  • இந்துவாக இருந்த சேஷாசல முதலியார் இறந்தாரா?
  • நாத்திகன் சேஷாசலம்இறந்தாரா?
  • பெரியார்தாசன்  இறந்தாரா?
  • “……….” –இறந்தாரா?
  • சித்தார்த்தா என்ற பௌத்தர் –இறந்தாரா?
  • அப்துல்லாஹ் என்ற முஸ்லிம் இறந்தாரா?

இந்தியன் இந்தியனாக இருந்தாலே போதும் – மதம் மாறவேண்டிய அவசியம் இல்லை.

© வேதபிரகாஷ்

19-08-2013


[3] சைக்காலாஜி / மனோதத்துவம் என்றும் குறிப்பிடுகிறார்கள்.

[4] கதிரவன், என்னநடந்ததுஇவர்கள்  வாழ்க்கையில்?, நக்கீரன்,   http://cinema.nakkheeran.in/Talkies.aspx?T=360

[5] கதிரவன், என்னநடந்ததுஇவர்கள்  வாழ்க்கையில்?, நக்கீரன்,   http://cinema.nakkheeran.in/Talkies.aspx?T=360

[10] தினமணி, 19-08-2013