தமிழர்–தமிழரல்லாதோர் பிரச்சினை உருவாக்கப் படக் கூடாது – சட்டத்தைக் கையில் எடுக்கக் கூடாது, கும்பல் கொலைக்கு நியாயம் கற்பிக்கக் கூடாது (1)
திராவிட சித்தாந்திகள் தமிழரை, தமிழகத்தை பிரித்து வைத்து, துவேசத்தை வளர்த்து வருவது: தமிழகத்தில் கடந்த நூறாண்டு காலத்தில், –
- தமிழ்-தமிழரல்லாதவர்,
- திராவிடன் – ஆரியன்,
- தென்னகத்தவன் – வடக்கத்தியன்,
- வடக்கு வாழ்கிறது-தெற்கு தேய்கிறது
போன்ற பிரச்சாரங்களால், மற்ற மொழி பேசும், மற்ற மாநிலத்தவர் மீது, மனங்களில் துவேசத்தை வளர்த்து கொண்டிருக்கிறார்கள். “வந்தேறி” தத்துவம் எப்பொழுதுமே உணர்ச்சிப் பூர்வமாக எடுத்துக் கொண்டு, மற்றவர்களைத் தாக்கப் பயம் படுத்தப் பட்டு வருகிறது. பிராமணர், மார்வாடி, குஜராத்தி, வடவிந்தியன் போன்ற பிரிவினை துவேசம் இன்றும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. எந்த பிரச்சினை என்றாலும், “தமிழன்” என்று தான் அடைமொழி போட்டு செய்தி போடுவது, ஊடகங்களுக்கும் வாடிக்கையாக இருக்கிறது. ஶ்ரீலங்கா மதப்பிரச்சினை என்றாலும், “தமிழர்-முஸ்லிம்” என்று தான் செய்திகள் வெளியிட்டு, மதப்பிரச்சினையை மறைக்கப் பார்த்தனர். “காவிரி பிரச்சினை” என்றாலும், திராவிட அரசியல்வாதிகளின் கையாலாகாத விசயத்தை மறைத்து, கர்நாடகாவை, கன்னட மொழி பேசுபவர்கள் மீது வெறுப்பை-காழ்ப்பை வளர்த்து வருகின்றனர். அதற்கு சத்தியராஜ், விவேக் போன்ற நடிகர்களும் உடந்தையாக இருந்து வருகின்றனர். ஒரு திரைப்படத்தில், “இது பெங்களூரு கத்தரிக்காய், காவிரி நீரால் வளர்ந்து பெரிதாக இருக்கிறது, அது தமிழக கத்திரிக்காய், சிறிதாக இருக்கிறது, காவிரி நீர் கிடைத்தால், அதுவும் பெரிதாக வளரும்,” என்று சொல்வது, பிரிவினையின் வக்கிரகத்தைத் தான் வெளிக்காட்டுகிறது.
மோடி எதிர்ப்பு, வடவிந்தியர் எதிர்ப்பும்: சமீப மாதங்களில் “ஜல்லிக் கட்டு” பாணியில், மோடிக்கு எதிர்ப்பு, ராணுவ மந்திரி மீது கல்லெறிதல் என்றெல்லாம் அரங்கேறியுள்ளன. லலித் மோடி, நீரவ் மோடி போன்றோரை, பிரதமர் மோடியுடன் இணைத்து நக்கல் அடிப்பதும், திராவிட இனவெறியில் உருவானது, ஊக்குவிப்பது. இதெல்லாம் ஏதோ, வீர-சூர-பராக்கிரம வேலைகளாக சித்தரிக்கப் பட்டு, சமூக ஊடகங்களில் செய்திகளை, வதந்திகளாகப் பரப்பி வருகின்றனர். அதற்கு பிரிவினைவாத திராவிட சித்தாந்த அரசியல்வாதிகள் தான் ஊக்குவிப்பாளர்களாக இருந்து வருகின்றனர். நோயாளியான, கருணாநிதிக்கே, கருப்புச் சட்டை போட்டு, மோடிக்கு எதிர்ப்பு தெரிவிப்பது போல, ஸ்டாலின் போன்றவர்களே செய்திருக்கிறார்கள். இதனால், சாதாரண “தமிழ்” பேசும், தமிழனை உசுப்பி விட்டால் போலகிறது. நாமும், இதுபோல செய்தால், புகழடையலாம், நமது போட்டோ சமூக வலைதளங்களில் பரவும், பிரபலமாகி விடலாம் போன்ற பொய்யான உத்வேக மனப்பாங்கை அவன் கொள்கிறான். செயலிலும் இறங்கி விடுகிறான். “கும்பல்” என்ருவ்ரும் போது, “தரும அடி” பாணியில், எல்லோரும் அடிக்கிறார்கள். கொலையில் முடியும் போது, குற்றமாகி விடுகிறது. மோடி எதிர்ப்பை, மோடியே கண்டு கொள்ளாமல் சென்று விடலாம், ஆனால், கொலையை மறிக்க முடியாது.
குழந்தை கடத்தல், விழிப்பான கொலையாளிகள், கொலைகள், நரபலிகள், கும்பல் கொலைகள்: மாட்டிறைச்சி விவகாரத்தில், திருவண்ணாமலையில், மாட்டிறைச்சி உண்ணும் விழா நடைப் பெற்றதை நினைவு படுத்திக் கொள்ளவேண்டும். “மாட்டிறைச்சி கும்பல் கொலை” விவகாரத்தில், செல்யூலரிஸ ஊடகங்கள் அதிகமாகவே ஊளையிட்டன. இப்பொழுதைய “வடவிந்தியர்” படுகொலைகளும் திரித்துப் பேசப்படுகின்றன. ஆனால், “தமிழனை, தமிழன் கொன்று விட்டான்,” எனும்போது, எதிர்க்க்கப் படுகிறது. தி.இந்துவே, கருத்தை தைரியமாக வெளியிடுகிறது. ஆக, இதில் கூட பாரபட்சம் பார்ப்பது, படுகேவலமாக இருக்கிறது. வருடத்திற்கு 2000 குழந்தைகள் காணாமல் போவதும், ஆயிரக் கணக்கான குழந்தைகள் கிருத்துவ காப்பகங்களில், ஆஸ்ரமங்களில் கற்பழிப்பதும், செக்யூலரிஸ ஊடகங்களுக்கு வேறுவிதமாக தெரிகிறது போலும். திராவிட சித்தாந்திகளுக்கும் அது குற்றமாகத் தெரியவில்லை. இனமான தலைவர்களுக்கு, மானம், சூடு, சொரணை எல்லாம் வரவில்லை போலும். இத்தகைய, குரூர வன்மத்துடன் இருப்பதும், சமுதாயத்திற்கு தீங்குதான் விளைவிக்கும், குற்றங்கள் பெருகும். 1960லிருந்து, அத்தகைய நிலை தான் வளர்ந்து வருகிறது. குற்றங்களை, குற்ற்றங்களாக பாவிக்காமல், அவர்கள் அப்படித்தான் இருப்பார்கள், என்று பொதுப்படையான கருத்தை உருவாக்குவதும் குற்றமாகிறது[1]. ஆங்கிலேயர் எப்படி குறிப்பிட்ட குழுக்களை, “குற்றம் சேய்யும் கும்பல்” எண்ரு சட்டப்ப்டி அறிவித்தனரோ, அதுபோல இக்காலத்தில் அறிவிக்க முடியாது, என்பதனை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளவேண்டும்[2].
வதந்திகள் வடசென்னைப் பகுதிகளில் பரவுது ஏன்?: ஆர்.கே.பேட்டை சுற்றுப்பகுதியில், இரண்டு மாதங்களுக்கு முன், தனியாக இருக்கும் பெண்களை, மர்ம நபர்கள் கழுத்தை அறுத்து கொலை செய்வதாக ஒரு செய்தி பரவியது[3]. இந்த வதந்தியால், அறிமுகம் இல்லாத புதிய நபர்களை, மக்கள் அடித்து நொறுக்கிய சம்பவங்களும் நடந்தன. அந்த பரபரப்பு சற்றே ஓய்ந்த நிலையில், தற்போது, குழந்தை கடத்தல் கும்பல் நடமாடுவதாக புரளி கிளம்பியுள்ளது. இந்த புரளி, சமூக வலைதளங்கள் மூலம், வேகமாக பரவி வருகிறது.இதனால், அப்பாவி நபர்கள் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டோர், மீண்டும் தாக்குதலுக்கு உள்ளாகும் நிலை உள்ளது.இதை தவிர்க்கும் விதமாக, காவல் துறையினர், ஒலிபெருக்கி வாயிலாக, கிராமங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். சந்தேகப்படும்படியான புதிய நபர்களை கண்டால், அவர்களை துன்புறுத்தாமல், காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என, அறிவுறுத்தப்படுகிறது. வட மாநில வாலிபர்கள் சிலரை, கிராம பொதுமக்கள் தாக்கிய பின், போலீசாரிடம் ஒப்படைக்கின்றனர். விசாரணைக்கு பின், அவர்கள் அப்பாவி நபர்கள் என்பது தெரிய வருகிறது. வட மாநிலத்தவர் மீது நடத்தும் தாக்குதலை தடுக்கும் வகையில், மாவட்ட எஸ்.பி., சிபிசக்கரவர்த்தி, அனைத்து காவல் நிலையத்திற்குட்பட்ட கிராமம் மற்றும் நகரங்களில், விழிப்புணர்வு கூட்டம் நடத்த உத்தரவிட்டுள்ளார். அதில், வடமாநிலத்தினர் மற்றும் அப்பாவிகள் தாக்கப்படுவதை தடுக்க வேண்டும் என, அறிவுறுத்தியுள்ளார்[4].
திருத்தணி, ஊத்துக்கோட்டை பகுதிகளில் மர்ம நபர்கள் திரிவதாக வதந்தி[5]: திருத்தணி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட, 98 கிராமங்களிலும், டி.எஸ்.பி., சேகர் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் வினாயகம் தலைமையிலான போலீசார், கிராமங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்துகின்றனர். நான்கு நாட்களாக, ஊத்துக்கோட்டை, அண்ணாநகர், எட்டிக்குளம், பாலவாக்கம், செஞ்சியகரம், ஆரணி, பெரியபாளையம் மற்றும் மாவட்டத்தின் பல பகுதிகளில், மர்ம நபர்கள் திரிவதாக வதந்தி பரவுகிறது. இதனால், அப்பகுதி இளைஞர்கள், இரவு நேரத்தில் உருட்டுக்கட்டை உள்ளிட்ட ஆயுதங்களுடன், சாலையில் திரிகின்றனர். அசம்பாவிதம் எதும் நிகழக்கூடாது என, ஊத்துக்கோட்டை போலீசார், ஆட்டோ மூலம் விழிப்புணர்வு பிரசாரம் செய்கின்றனர். மேலும், மக்கள் கூடும் இடங்களில், வட மாநிலத்தவர் மீது பொதுமக்கள் தாக்குதல் நடத்த கூடாது என, ‘நோட்டீஸ்’ ஒட்டியுள்ளனர். ஊத்துக்கோட்டை டி.எஸ்.பி., சந்திரதாசன் கூறியதாவது: “குழந்தைகள் கடத்தல் என்ற செய்தி, வெறும் வதந்தி. கிராமங்களில், வெளியாட்கள் நடமாடினால் உடனடியாக அந்தந்த பகுதி காவல் நிலையத்திற்கு தகவல் கொடுக்க வேண்டும். அவர்களை தாக்குவது குற்றச் செயலாகும். இது போன்ற நடவடிக்கையில் யாரும் ஈடுபட வேண்டாம். மீறினால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,” என்று கூறினார்[6].
© வேதபிரகாஷ்
17-05-2018
[1] மாலைமலர், கடலூரில் மீனவர்கள் மோதலில் ஒருவர் வெட்டிக்கொலை – 20 பேர் மீது வழக்குப்பதிவு, பதிவு: மே 16, 2018 11:19
[2] https://www.maalaimalar.com/News/District/2018/05/16111909/1163414/Cuddalore-fishermen-murder-case.vpf
[3] தினமலர், வட மாநில மக்களை அடிக்காதே… உதைக்காதே! போலீசார் விழிப்புணர்வு பிரசாரம், Added : மே 11, 2018 06:04.
[4] http://www.dinamalar.com/news_detail.asp?id=2018668
[5] தினமலர், வட மாநில மக்களை அடிக்காதே… உதைக்காதே! போலீசார் விழிப்புணர்வு பிரசாரம், Added : மே 11, 2018 06:04.