Archive for the ‘குஜராத்’ Category

மோடி-பிஜேபி வேறு, வாஜ்பேயி-பிஜேபி வேறு – ராஜா-கனிமொழியை சிறைவைத்த காங்கிரஸ் – இக்கட்சிளுடன் திமுக கூட்டு கிடையாது – கருணாநிதி திமுகவினரிடம் கெஞ்சலாக அறிவிப்பு (1)!

திசெம்பர் 16, 2013

மோடி-பிஜேபி வேறு, வாஜ்பேயி-பிஜேபி வேறு – ராஜா-கனிமொழியை சிறைவைத்த காங்கிரஸ் – இக்கட்சிளுடன் திமுக கூட்டு கிடையாது – கருணாநிதி திமுகவினரிடம் கெஞ்சலாக அறிவிப்பு (1)!

திமுகவின் கூட்டணி  பற்றி  கருணநிதியின்  விளக்கமான  பேச்சு: 15-12-2013 அன்று பொதுக்குழுவில் பிஜேபியுடன் கூட்டு வைத்துக் கொள்ள வேண்டும் என்று சிலர் பேசினர், ஆனால், காங்கிரஸுடன் கூட்டு கூடாது என்று கடுமையாக வாதிட்டனர்[1]. கருணாநிதியின் பேச்சு மிகப்பெரிய பேச்சாக இருந்தது, அதில் திமுக ஏன் பிஜேபி மற்றும் காங்கிரஸ் கட்சிகளுடன் கூட்டு கூடாது என்று விளக்கிய பிறகு, திமுகவினர் ஒற்றுமையாக இருந்து கொண்டு, மற்ற கட்சிகளுடன் கூட்டு வைத்துக் கொண்டு, வருகின்ற தேர்தலை ஒரு சோதனையாக சந்திக்க வேண்டும் என்று கெஞ்சிக் கேட்டுக் கொண்டுள்ளார். தனியாக நின்று தோற்றாலும் பரவாயில்லை என்ற ரீதியில் கூட பேசி முடித்தார். பிறகு பத்திரிக்கையாளர்களுடன் பேசும் போது கூட அதே பாணியில் பதில் அளித்தார்[2]. ஆங்கில பத்திரிக்கையாளர்களிடம் மட்டும் திட்டவட்டமாக பிஜேபி அல்லது காங்கிரஸ் கூட, கூட்டு இல்லை என்று தெரிவித்தார்[3].

 

காங்கிரஸ்,    பாரதிய   ஜனதா   கட்சிகளுடன்   கூட்டணி   இல்லை   என்று  திமுக   தலைவர்  கருணாநிதி,   நேற்று   கட்சியின்   பொதுக்குழு  கூட்டத்தில்  அறிவித்தார்[4]. திமுக பொதுக்குழு கூட்டம் திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் அண்ணா அறிவாலயத்தில் நேற்று நடந்தது. அதில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பின்னர் மதியம் அந்த கூட்டம் தொடர்ந்து நடந்தது. கூட்டத்தில் திமுகவின் பொதுக்குழு உறுப்பினர்கள் பலர் தேர்தல் கூட்டணி பற்றி கருத்து கூறினர்.
அனைவரின் கருத்தையும் கேட்டறிந்த திமுக தலைவர் கருணாநிதி கூட்டத்தின் இறுதியில் பேசியதாவது: 

நடைபெற இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில், அடுத்து வரவிருக்கின்ற சட்ட மன்றத் தேர்தலில் நாம் எத்தகைய வியூகத்தை வகுக்க வேண்டும் என்பதற்காக இங்கே கூடி இருக்கிறோம். தேர்தலில் நாம் ஈடுபட வேண்டும்; வேண்டுமா, வேண்டாமா எப்படி ஈடுபடுவது? எந்த வகையில், என்ன முறையில், யாரோடு கூட்டுச் சேர்ந்து என்றெல்லாம் இந்த பொதுக்குழுவில் கேள்விகள் கேட்கப்பட்டு, வழி முறைகளும் கூறப்பட்டு, இறுதியாக எல்லா பொறுப்புகளையும் நீங்களே தாங்கிக் கொள்ளுங்கள் என்று எங்கள் தலையில் பாரத்தைச் சுமத்தி, சிக்க வைத்திருக்கிறீர்கள். கூட்டணி இல்லாமல் ஜெயிக்க முடியாது என்று நன்கறிந்த கருணாநிதி, தனித்து நிற்போம் என்று பேசியது உள்நோக்கத்துடன் தான் என்று தெரிகிறது. வெற்றிபெற உதவி தேவை என்ற நிலையில் இருக்கும் போது, வீராப்பான பேச்சு ஒரு உபயோகமும் இல்லை என்பது தெரிந்த விசயமே. 10-15 எம்.பிக்கள் இருந்தால் தான் மத்தியில் மவுசு இருக்கும், மந்திரி பதவி கிடைக்கும். இல்லையென்றால் திமுகவை யாரும் மதிக்க மாட்டார்கள் என்று திமுகவினர் வெளிப்படையாகவே கருத்தைத் தெரிவித்தனர்.

தி.மு..வை பொறுத்தவரை தனித்து நின்றே கூட இந்த வெற்றியைப் பெற முடியும். தனித்து நின்றேகூடஎன்று நான் கூறும்போது, ‘கூடஎன்று குறிப்பிட்ட வார்த்தையை மறந்து விடக் கூடாது. தனித்து நின்றே இந்த வெற்றியைப் பெறுவோம் என்று நான் சொல்லவில்லை. தனித்து நின்றே கூட நாம் வெற்றி பெற முடியுமென்று சொன்னால், கொஞ்ச நஞ்சம் ஒருவர், இருவருடைய உதவி இருப்பது நல்லது.

மோடி   கவர்ச்சியில்  சில  திமுகவினர்: “மோடி அவர்கள் அரங்கத்திற்கு வந்திருக்கிறார். வந்த நேரமே, வந்த விதமே, அவருடைய படாடோப விளம்பரங்கள், அவருக்காக பத்திரிகைகள், ஊடகங்கள், கார்பரேட் நிறுவனங்கள் தருகின்ற ஊக்கங்கள், உலகம் முழுதும் இருக்கின்ற செய்தியாளர்கள் அல்லது ஊடக உரிமையாளர்கள் தருகின்ற விளம்பரங்கள்.

எங்களுக்கு அதிர்ச்சி அளிக்கவில்லை. ஆனால் உங்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது. அதனால் தான் பாரதீய ஜனதா, பாரதீய ஜனதா என்கிறீர்கள். நாமும் ஒரு காலத்தில் பாரதீய ஜனதோடு நாம் நட்பு கொண்டிருந்தவர்கள் தான். அது எந்த பாரதீய ஜனதா? மனிதாபிமானம் இல்லாமல் நடந்து கொண்ட அத்வானி போன்ற தலைவர்கள் உள்ள பாரதீய ஜனதா அல்ல. பிஜேபியுடன் கூட்டு வேண்டும் என்று திமுகவினர் தயாராக உள்ளனர். ஆனால், மோடியின் அதிகாரத்தோரணை கருணநிதிக்கு சவாலாக உள்ளது என்று தெரிகிறது. அவருக்கு வாஜ்பேயி போன்ற மென்மையான தலைவர் வேண்டும் என்று எதிர்பார்க்கிறார், ஆனால், மோடியிடம் அது எடுபடாது. மேலும், இப்பொழுதுள்ள நிலையும் வேறு.

நாம் கோரிக்கை வைத்தால், அதை உடனடியாக ஏற்றுக் கொண்டு, தோழமை உணர்வோடு நம்மோடு பழகிய வாஜ்பாய் போன்ற நல்ல மனிதர்கள் இருந்த அந்த காலத்தில் நாம் பாரதீய ஜனதாவோடு கை குலுக்கினோம்.

வாஜ்பாய்  பாரதிய  ஜனதா  கட்சியின்  தலைவராக  இருந்தாலும்,   அவர்  மனிதாபிமான  மிக்கத்  தலைவராக  இருந்தார்: “காமராஜருக்கு கன்னியாகுமரி கடற்கரையில் மணி மண்டபம் கட்ட வேண்டும் என நான் முதல் அமைச்சராக இருந்தபோது, அன்றைக்கு பிரதமராக இருந்த வாஜ்பாய்க்கு கடிதம் அனுப்பி வைத்தேன்.

ஆனால், அவரைச் சுற்றியிருந்த அதிகாரிகள், கருணாநிதி கேட்கிற அந்த இடம் கடலுக்கு மிக அருகே உள்ளதால் அனுமதிக்க இயலாது என்று சொன்னார்கள். அந்த கருத்தை வாஜ்பாய் எனக்கு எழுதி அனுப்பினார்கள். நான் விடவில்லை, மீண்டும் மீண்டும் அதை வற்புறுத்திக் கேட்டதால், கடற்கரையோரத்தில் காமராஜருக்கு நினைவு மாளிகை எழுப்ப வாஜ்பாய் அனுமதி தந்தார். மோடி இப்பொழுது இந்தியாவில் உள்ள பற்பல பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. அந்நிலையில் திமுக சொல்வதையெல்லாம், மோடி ஏற்றுக் கொள்வார் என்றால், கூட்டு வைத்துக் கொள்வோம் என்ற ரீதியில் பேசினால், மோடி என்ன வாஜ்பேயி ஆகிவிடுவாரா என்ன? மோடி, மோடித்தான்வாஜ்பேயி, வாஜ்பேயிதான்!

அவர் நம்முடைய தமிழ்நாட்டுத் தலைவர்களை மதிப்பவர் என்பதை எண்ணிய காரணத்தால் தான், வாஜ்பாய் அவர்கள் நம்முடைய நண்பராக இருந்த காரணத்தால் தான் அப்போது நாம் அவர்களோடு உறவு கொண்டோம்.

வாஜ்பாயினுடைய   பாரதிய  ஜனதா  வேறு,   இப்போது இருக்கிற  பா...   வேறு: “மாறன் இறந்த போது அவரை இடுகாட்டிற்கு எடுத்துச் சென்ற போது, இடுகாட்டிலே வாஜ்பாய் அவர்கள் திடீரென்று வந்து இறுதி வணக்கம் செலுத்தியதையும் நான் மறந்து விடக் கூடியதல்ல. என்னதான் பாரதிய ஜனதா கட்சியின் தலைவராக இருந்தாலும், அவர் மனிதாபிமானமிக்கத் தலைவராக இருந்தார். தோழமைக்கு மதிப்பு அளிக்கக் கூடியவராக இருந்தார், எனவே தான் பாரதிய ஜனதா என்பது வாஜ்பாய் அவர்கள் பொறுப்பிலே இருந்ததோடு அந்த வரலாறு நம்மைப் பொறுத்த வரையிலே முடிந்து விட்டது.

அந்த பாரதிய ஜனதா கட்சியிலே இருக்கின்ற, எல்லோரும் வாஜ்பாய் அவர்களைப் போன்றவர்களா என்றால், இல்லைபாரதிய ஜனதாவோடு தேர்தலில் உடன்பாடு கொள்ளலாமா, கூட்டணி அமைக்கலாமா என்றெல்லாம் காலையிலிருந்து இதுவரையில் பேசினீர்களே, இதற்கெல்லாம் பதிலாகத் தான், இதற்கெல்லாம் விளக்கவுரையாகத் தான் நான் இந்தச் சுருக்கமாக கருத்துகளை உங்களிடம் சொல்லியிருக்கிறேன். கூட்டு வைத்துக் கொள்ள வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. பிறகென்ன, அது வேறுஇது வேறு என்ற சித்தாந்தம் எல்லாம். முன்பு மதவாதம் பேசி, பிஜேபியை ஒதுக்கினர். 2002 என்று சொல்லி மிரட்டிப் பார்த்தனர், ஆனால், பொருளாதார முன்னேற்றம், வளர்ச்சி என்று மோடி பேச ஆரம்பித்ததும், இளைஞர்கள் வேறுவிதமாக சிந்திக்க ஆரம்பித்து விட்டனர். ஆமாம், அவர்களும், அந்த மோடி வேறு, இந்த மோடி வேறு என்றுதான் சொல்ல ஆரம்பித்துள்ளனர்.  

நீங்கள் புரிந்து கொள்வீர்கள்[5]. வாஜ்பாயினுடைய பாரதிய ஜனதா வேறு, இப்போது இருக்கிற பா... வேறு.

சி.பி..யை  ஆயுதமாக  வைத்து  திமுகவை  கேவலப்  படுத்திய  காங்கிரஸ்: “இந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக தனியாக நின்றாலும் நிற்குமே தவிர, நம்மை மதிக்காத, அலட்சியப்படுத்து கின்ற காங்கிரஸ்காரர்களைப் போல நம்மிடத்திலே நன்றி மறந்து செயல்படுகின்ற சைபர், சைபர், சைபர் என்று ஏழு சைபரைப் போட்டு இந்த அளவிற்கு ஆயிரம், லட்சம், கோடி ரூபாய் ஊழல் நடந்திருக்கிறது என்று சொல்லி, அதற்கெல்லாம் யாரும் காரணம் இல்லை, ஒரே ஒரு நபர் தான், ராஜா தான் என்று அவரை சிறையிலே வைத்து ­இன்னமும் அவர் மீது வழக்கு நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

ராஜா மாத்திரமல்ல, என்னுடைய மகள் கனிமொழியை எட்டு மாத காலம் சிறைச்சாலையிலே வைத்து வாட்டி, இன்னமும் வழக்கு நடக்கிறதுஆனால், வழக்கை நடத்துகிறவர்களும் சரி, வழக்கிலே சாட்சியம் தந்தவர்களும் சரி, அந்த வழக்கிலே என்ன தீர்ப்பு வரப்போகிறதோ, அந்தத் தீர்ப்பை, இப்போதே தயாரித்து, பத்திரிகைகளிலே அதைப் பற்றிய செய்திகளை ஓட விடு பவர்களும் சரி, அனைவருமே தெரிந்து ஒரு உண்மை தான், குற்றமே செய்யாதவர்களை, குற்றவாளிகளாக சி.பி.. மூலமாக கூண்டிலே ஏற்றியிருக்கிறார்கள் என்றால், அந்தச் சி.பி.. யாருடைய கை வாள்? சிபிஐ.யை வைத்து மாநில அரசுகளை காங்கிரஸ் மிரட்டி வருகின்றது என்று கருணாநிதி இப்பொழுது மிகவும் வருத்தப் பட்டுக் கொள்கிறார், பிறகு, தகுந்த வேலையில், முன்னமே அதைப் பற்றி எடுத்துக் காட்டியிருக்கலாமே? ஆனால், செய்யவில்லையே? இன்று முல்லாயம், மாயாவதி என்று எல்லோருமே, சிபிஐ வழக்குகளினின்று விடுபட்டுள்ளனர். லல்லுவுக்கும் ஜாமீன் என்று சொல்கிறார்கள். ராஜாகனிமொழி ஏற்கெனவே வெளியில் வந்து விட்டார்கள். பிறகு கருணாநிதி எதிர்பார்ப்பது என்ன? காங்கிரஸ் வாபஸ் வாங்கிவிட்டால், காங்கிரஸுடன் கூட்டணி என்பாரா?

அந்தச் சி.பி.. யாருடைய கையிலே இருந்த கடிவாளம்? அந்தச் சி.பி.. யார் கையிலே இருந்த ஆயுதம்? தெரியாதா மக்களுக்கு?

ராஜாவையும்,   கனிமொழியையும்  சிறை   வைத்தவர்கள்: “அன்றைக்கு பக்கம் பக்கமாக ஊழல் ஊழல் என்று, எத்தனை லட்சம், எத்தனை ஆயிரம், எத்தனை கோடி என்றெல்லாம் எண்ணிப் பார்க்க முடியாத அளவிற்கு அன்றையதினம் ஊழல் புகார் சொன்ன, அந்தக் காரியங்களுக்கெல்லாம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்து விட்டு, அந்த வேடிக்கையைப் பார்த்து ரசித்து விட்டு, அதிலே யார் யார் சிக்குகிறார்கள் என்பதையெல்லாம் பார்த்து, நம்மை விட்டால் சரி என்ற அளவிற்கு, பெரிய இடங்களிலே இருந்தவர்கள், பெரிய பதவியிலே இருந்தவர்கள், பெரிய நிர்வாகத் தலைமையிலே

இருந்தவர்கள் எல்லாம் தப்பித்தால் போதும் என்ற நிலைமையில் மாட்டியவர்கள், சிக்கியவர்கள் தான் குற்றவாளிகள் என்று ராஜாவையும், அதற்குப் பிறகு திடீரென்று என்னுடைய மகள் கனிமொழியையும் சிறையிலே வைத்து எட்டு மாத காலம் வாட்டினார்களே, இன்னமும் அந்த வழக்கு நடை பெற்றுக் கொண்டிருக்கிறதே, யாருடைய ஆட்சியில்? யார் இப்போது ஆட்சி யிலே இருக்கிறார்கள்? காங்கிரஸ்காரர்கள் தானே? எனவே அதையும் நாம் மறந்து விட மாட்டோம். மறந்து விடுவதற்கில்லை. ராஜாகனிமொழியை சிறை வைத்த காங்கிரஸை மறக்க முடியாது. களங்கம் ஏற்படுத்தியதையும் மறக்க முடியாது என்றெல்லாம் பேச வேண்டிய அவசியம் என்ன? ஊழலில் ஊறி நாறிப்போன காங்கிரஸே, வெட்கமில்லாமல் தேர்தல் கூட்டங்களில் ஊழலை ஒழிப்போம் என்று பேசுகிறது. இன்றோ லோக்பால் மசோதாவிற்கே நாங்கள் தான் காரணம் என்று மார்தட்டிக் கொள்கிறது, பிறகு, திமுக ஏன் கவலைப்பட வேண்டும்?

ராஜாவிற்கு ஏற்பட்ட அந்தச் சோதனை, ராஜாவுக்கு ஏற்பட்ட அந்தச் சங்கடம், அந்த அடக்கு முறை, அந்தக் களங்கம் இவைகள் எல்லாம் இன்றையதினம் டெல்லியிலே ஆட்சியிலே இருக்கின்ற காங்கிரஸ்காரர்களால் ஏற்படுத்தப்பட்டது அல்லவா? அவர்களால் மறைமுகமாகச் செய்யப்பட்ட மாய்மாலங்கள் அல்லவா? எனவே இந்தப் பொதுக்குழுவிலே அமர்ந்திருக்கின்ற உங்களுக்கெல்லாம் நான் உறுதி அளிக்கிறேன்.

வேதபிரகாஷ்

© 16-12-2013


[4] தினகரன், பொதுக்குழுவில்கருணாநிதிதிட்டவட்டம் : காங்கிரஸ், பாரதியஜனதாவுடன்திமுககூட்டணிஇல்லை,மாற்றம் செய்த நேரம்:12/16/2013 1:53:01 AM.