Archive for the ‘கிரைஸ்ட்’ Category

திருமாவளவனுக்கு கிருத்துவர்கள் சரியான பட்டம் கொடுக்கிறார்கள்!

ஏப்ரல் 27, 2010

திருமாவளவனுக்கு கிருத்துவர்கள் சரியான பட்டம் கொடுக்கிறார்கள்!

திருமாவின் இறைத்தொண்டு: திருமாவளவன் பெரியார்தாசன் மாதிரி, கிருத்துவர்களுக்கு என்றும் புதியவர்கள் அல்லர். திருமா கிருத்துவர் என்ற பேச்சு ஏற்கெனவே உள்ளது. 80களில் கிருத்துவர்கள் நடத்தும் எல்லா கருத்தரங்களிலும் பார்க்கலாம் [குறிப்பாக AICUF, ஐக்கிய ஆலயம் …………..முதலியன]. “கிருத்துவர்களின் காவலன்” என்று போஸ்டர்கள் ஒட்டப் பட்டிருப்பதை பார்த்திருப்பவர்களுக்கு இது ஒன்றும் ஆச்சரியம் இல்லை. கிருஸ்துமஸ் கொண்டாட்டத்தைப் பார்க்க்க வேண்டுமே, அங்குதான் திருமாவின் உண்மையான உருவத்தை பார்க்கலாம். இறைத் தொண்டின் மகிமையே மகிமைதான்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவரும், எம்பியுமான தொல். திருமாவளவனுக்கு இறையியல் கல்லூரியான குருகுலம் அகாடமி சார்பில் டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது. இதுகுறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைமை நிலையச் செயலாளர் வன்னி அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் கால் நூற்றாண்டுக்கும் மேலாக சமூகப் பணி ஆற்றி வருகிறார். இந்தப் பணியைப் பாராட்டி உலக அளவில் செயல்பட்டுவரும் இறையியல் கல்லூரியான குருகுலம் அகாடமி, டாக்டர் (முனைவர்) பட்டம் வழங்க உள்ளது. 2009ம் ஆண்டுக்கான டாக்டர் பட்டத்தை திருமாவளவனுக்கு இக் கல்லூரி வரும் 18.07.2010 அன்று வழங்க உள்ளது என்று கூறியுள்ளார்.  சமூகப் பணி மற்றும் இறைதொண்டு ஆகியவற்றில் சிறப்பான முறையில் பணியாற்றிய சிந்தனையாளர்கள் மற்றும் களப் போராளிகளுக்கு இக்கல்லூரி கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக டாக்டர் பட்டம் வழங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

கிருத்துவர்கள் முந்தி கொண்டார்கள் போலும்: பெரியார்தாசன் மாறியதும், முஸ்லீம்கள் திருமாவிற்கு வலை வீசினர், “வாருங்கள்”, என்று வரவேற்பு கொடுத்து, சிவப்புக் கம்பளத்தினையும் விரித்தனர். ஆனால், நிலைமையை அறிந்து உசாராகி விட்டனர் கிருத்துவர்கள்!

ராமன் தான் மிகப்பெரிய பயங்கர‌வாதி என்று சொல்லி ஏசு பிறந்த நாள் கொண்டாடும் திராவிடம்!

திசெம்பர் 24, 2009

ராமன் தான் மிகப்பெரிய பயங்கர‌வாதி என்று சொல்லி ஏசு பிறந்த நாள் கொண்டாடும் திராவிடம்!

கோபதி நாராயணச்செட்டித்தெருவில் உள்ள ஹோட்டலில் இன்று மாலை (24-12-2009) அமர்க்களமான விழாவாம்! தேவசகாயம் கலந்துகொள்ளும் ஏசு பிறந்தவிழாவில், திருமா கொண்டாட்டமாம்!

இந்த அரசியல்வாதிகளை எங்கே பத்து நாட்கள் முன்பு காணோம்!

ஆறுமுக நாவலர் இல்லையே என்றுதான் நினைப்பு!

அவர் இருந்தால், இந்த போலித்தமிழர்களின் தோலையுரித்து இருப்பாரே?

ஆனால், அவரைவிட்டு, தமிழ் எதிரிகளுக்கு இந்த எதிரிகள் விழா எடுக்கின்றனர்!

விழாவில் கலந்து கொண்டவர்களுக்கு நன்றாகத் தெரிகிறது, திருமாவளவன் ஒரு கிருத்துவன் என்று. பிறகு எதற்கு இப்படி செக்யூலர் வேடமிட்டு தமிழர்களை ஏமாற்றுவது?

இப்பொழுது நன்றாகவே தெரிகிறதே, நீ ஏன் எச்சுவைத் திட்டமாட்டாய் என்று?

இலத்தீன் அமெரிக்க நாடுகளில் கிருஸ்துவின் பெயரில்தான் மக்களைக் கொன்று குவிக்கின்றனர்.

அங்கு “லிபெரேஸன் தியோலஜி” மீட்பு இறையியல் பேசி, ஏசுவை ஏ-கே-47வுடன் தான் ஏசு சித்தரிக்கப்படுகிறார். அப்பொழுது ஏசு தீவிரவாதி இல்லையா?

விஜய் டிவியின் கிறுஸ்துமஸ் தின சிறப்பு நிகழ்ச்சிகள்!

வெப்துனியா – ‎3 மணிநேரம் முன்பு‎
காலை 7:30 மணிக்கு ‘கிருஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்’ இடம்பெறும். இதில் ஏசுவை போற்றும் பாடல்கள், அருளுரை ஆகியவை இடம்பெறும். சாம் செல்லத்துரை, மோகன் சி. லாசுரஸ், பாதரியார் ஜான்

ராமன் தான் மிகப்பெரிய பயங்கர‌வாதி: திருமாவளவன்

http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=22401

https://dravidianatheism2.wordpress.com/2009/12/09/ராமன்-தான்-மிகப்பெரிய-பய/

ராமன் தான் மிகப்பெரிய பயங்கர‌வாதி என்று நாடாளுமன்ற விவாதத்தில் கலந்துகொண்டு பேசிய விடுதலைச்சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளளார்.

ஜோசப்பும் – மேரியும் படுக்கையில் இருப்பது போன்ற விளம்பரப் பலகை: நியூசிலாந்து தேவாலயத்தில் கடும் எதிர்ப்பு

திசெம்பர் 18, 2009

ஜோசப்பும் – மேரியும் படுக்கையில் இருப்பது போன்ற விளம்பரப் பலகை: நியூசிலாந்து தேவாலயத்தில் கடும் எதிர்ப்பு

http://viduthalai.periyar.org.in/20091218/news19.html

வெல்லிங்டன், டிச. 18_ உள்ளூர் ஆங்கிலிகன் தேவாலயத்தால் வைக்கப்பட்டிருந்த, ஜோசப்பும் மேரியும் படுக்கையில் இருப்பது போன்ற ஒரு விளம்பரப் பலகை கத்தோலிக்க கிறித்துவ தேவாலயத்தின் கடுமையான கண்டனத்தைப் பெற்றுள்ளது.

http://news.bbc.co.uk/2/hi/asia-pacific/8417963.stm

Mary and Joseph billboard from St Matthew-in-the-City church in Auckland

A dejected-looking Joseph lies in bed next to Mary under the caption, “Poor Joseph. God was a hard act to follow”.

“பாவம் ஜோஸப். பின்பற்றுவதற்கு கடவுள் என்பது மிகவும் கடினமான வேலையாகும்” என்ற தலைப்பில், இருவரும் படுக்கையில் படுத்திருப்பதுபோலச் சித்தரிக்கப்பட்டிருந்தது. ஜோஸப் நொந்துபோய் என்கேயோ பார்த்துக்கொண்டிருக்கிறார். மேரியோ மேலே பார்த்துக்கொண்டிருக்கிறார்.

கீழ்கண்டது “விடுதலை”யின் மொழிபெயர்ப்பு மற்றும் விமர்சனம்:

யேசுவை ஈன்ற மேரி, ஆணின் உடலுறவு இன்றி கன்னியாகவே இருந்து யேசுவைப் பெற்றெடுத்தார் என்பது கத்தோக்க கிறித்துவ மதத்தின் நம்பிக்கை. இதைக் கொச்சைப்படுத்தும் வகையில் ஜோசப்பும் மேரியும் படுக்கையில் இருப்பது போன்ற ஒரு விளம்பரப் பலகை வைக்கப்-பட்டதை அவர்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.

ஆக்லாந்தின் புனித மாத்யூ நகர தேவாலயத்-தால் இந்தப்பலகை வைக்கப்பட்டிருக்கிறது. வெறுப்பு கொண்டிருந்த ஜோசப், சோகமாக இருக்கும் மேரியுடன் படுக்கையில் போர்வைக்குள் இருப்பது போன்று அப்படத்தில் சித்திரிக்கப்-பட்டுள்ளது. ‘‘பரிதாபத்திற்குரிய ஜோசப்! கடவுளாக நடிப்பது என்பது எளிதில் மற்றவர்-களால் பின்பற்ற முடியாதது’’ என்ற அதில் வாசகம் எழுதப்பட்டிருக்கிறது.

கிறிஸ்துமஸ் விழா ஏன் கொண்டாடப்படுகிறது என்று வழக்கமாகக் கூறப்படும் காரணத்தைக் கேலி செய்வது, விழாவின் உண்மையான முக்கியத்து-வத்தை எடுத்துக் காட்டுவது என்ற நோக்கங்-களுடன்-தான் இந்த பலகை வைக்கப்பட்டுள்ளது என்று ஆங்கிலிகன் தேவாலயத்தின் பிஷப்புக்கு அடுத்த நிலையில் உள்ள பாதிரியார் கிளின் கார்டி கூறினார். ‘‘கிறிஸ்துமஸ் என்றால் என்ன என்பதை முழுவதுமாக மக்களை எண்ணிப் பார்க்கச் செய்யவே நாங்கள் முயற்சித்துள்ளோம் ’’ என்று செய்தியாளர்களிடையே அவர் கூறினார். ‘‘ஒரு குழந்தை பிறப்பதற்காக ஒரு ஆன்மிகக் கடவுள் தனது விந்துவை அளித்தாரா அல்லது ஜோசப்-பிடம் காணப்படுவது போன்ற அன்பின் ஆற்றல் நம்மிடம் இருக்கிறதா என்பது பற்றியதுதான் இந்த பலகை.’’

Mary and Joseph billboard from St Matthew-in-the-City church in Auckland

தேவையற்றது, பொறுப்பற்றது, மரியாதைக் குறைவானது என்று இந்தப் பலகை வைக்கப்-பட்டது பற்றி நியூசிலாந்தின் கிறித்துவ தேவலாயம் கண்டித்து உள்ளது. குடும்பத்திற்கே முதலிடம் அளிக்கும் குடும்ப மதிப்பீட்டுக் குழுவும் இதனைக் கண்டித்துள்ளது. கன்னி மேரி குழந்தை பெற்றது பற்றியும் அதன் ஆன்மிக முக்கியத்தைப் பற்றியும் தேவாலயக் கட்டடத்திற்குள்ளேயே அவர்கள் விவாதிக்க முடியும். ஆனால், இவ்வாறு தெருவில் ஒரு பலகையை வைத்து குடும்பங்களையும், குழந்தைகளையும் அதிர்ச்சி அடையச் செய்வது மிகவும் பொறுப்பற்ற, தேவையற்ற செயல் என்று அந்த குழுவின் இயக்குநர் பாப் மெகோஸ்கிரி கூறினார்.

(ஒரே மதத்தின் இரு பிரிவுகள் இவ்வாறு மோதிக் கொள்வது நல்ல நகைச்சுவை. நம்மூர் சைவ, வைணவத் தகராறு கிறித்துவ மதத்தையும் பிடித்துக் கொண்டது போலும்!)

விமர்சனம்:

கிருஸ்தோலாஜி / கிருஸ்துவயியல் (Christology) என்பது கிருஸ்துவைப்பற்றி படிப்பது, ஆராய்ச்சிசெய்வது, அறிவதாகும்.  ஜீஸஸ் (Jesus), கிருஸ்து (Christ) என்ற இரு சிதாந்தங்கள் ஒன்று சேர்ந்து ஜீஸஸ் கிரைஸ்ட் (Jesus Christ) அதாவது ஏசுகிருஸ்து என்பது உருவாக்கப்பட்டது. ஆகவே ஏசுகிருஸ்து சரித்திரரீதியாக இருந்தாரா இல்லையா என்ற விவாதம் இருந்து வருகிறது. மனித கிருஸ்து (Human Christ), சரித்திரக் கிருஸ்து (Historical Christ) மற்றும் தெய்வ கிருஸ்து (Divine Christ) என்ற வாதங்களும் உண்டு.

மனித கிருஸ்து (Human Christ): கிருத்துவயியலைப் போற்றுபவர்கள், பின்பற்றுபவர்கள் மற்றும் பரப்புபவர்கள் இத்தகைய பிரச்சினைகள முன்வைத்து தமது கொள்கைகளை நிலைநிறுத்தப் பார்ப்பார்கள்.

அதாவது, கிருத்துவிற்கு கல்யாணம் ஆனதா இல்லையா, மேரி மேக்தலீன் கிருத்துவை மணம் செய்து கொண்டார்களா இல்லையா, அவர்களுக்கு குழந்தைகள் உள்ளனவா இல்லையா, 13 வருட இடைக்காலத்தில் அவர் எங்கு இருந்தார், இஎதியாவிற்கு வந்தாரா இல்லையா, ……………..என இப்படி எல்லாம் கேள்விகள் எழுப்பினால், பலரும் பற்பல விவாதங்களுடன் களமிருங்குவர்.

பதில் சாதகமாகவோ, பாதகமாகவோ இருந்தாலும், ஏசுகிருஸ்து இருந்தார் என்று ஒப்புக்கொண்டு இந்த விவாதங்களில் ஈடுபடவேண்டியிருக்கும்.

சரித்திரக் கிருஸ்து (Historical Christ): ஆனால் சரித்திர ரீதியாக ஏசுகிருஸ்து இல்லை என்று இன்றைய ஆராய்ச்சிகள் மெய்ப்பிக்கின்றன.

தெய்வ கிருஸ்து (Divine Christ):  இதெல்லாம் கிருஸ்துவை தெய்வமாகக் கருதுபவனுக்குக் கவலையில்லை. நம்பிக்கையாளனுக்கு தெய்வம் இருப்பது அவனது நம்பிக்கை.