Archive for the ‘கிரைண்டர்’ Category

ஜெயலலிதாவுக்கு முன்பு மற்றும் ஜெயலலிதாவுக்கு பின்பு: திராவிட கட்சிகளும், நிலையும், உருமாறுகின்ற தேவைகளும்!

திசெம்பர் 11, 2016

ஜெயலலிதாவுக்கு முன்பு மற்றும் ஜெயலலிதாவுக்கு பின்பு: திராவிட கட்சிகளும், நிலையும், உருமாறுகின்ற தேவைகளும்!

aiadmk-opposition-to-gautami

மோடியை சந்தித்த பிறகு கௌதமி சதி செய்கிறாரா அதிமுக கேட்கிறது: இதனால் நடிகை கவுதமிக்கு அ.தி.மு.க.வினர் கடும் கண்டனம் தெரிவித்தனர். இதுபற்றி அ.தி.மு.க. செய்தி தொடர்பாளர் நாஞ்சில் சம்பத் ‘மாலைமலர்’ நிருபரிடம், மற்ற விவரங்களை விளக்கி விட்டு, கூறியதாவது[1]:- “…….நான் கவுதமியை கேட்கிறேன், நீ எந்த உலகத்தில் இருக்கிறாய்? இதுபோன்ற அத்துமீறலை நிறுத்திக் கொள்வது நல்லது. ஏற்கனவே கவுதமி, பிரதமரை ஒருமுறை சந்தித்து வந்துள்ளார். இதற்கு பின்னால் ஏதோ ஒரு சதி திட்டம் இருக்கிறதோ என நான் சந்தேகிக்கிறேன்”. இதேபோல செய்தி தொடர்பாளர் தீரன், முன்னாள் அமைச்சர்கள் பண்ருட்டி ராமச்சந்திரன், வளர்மதி ஆகியோரும் கவுதமியின் கருத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்[2]. இந்த சதிக்கு சகோதரி கவுதமி விலைபோய் விட்டாரா? என்ற ஐயம் எழுகிறது. ஆகவே இது தேவையில்லாத பிரச்சனை. இதை யாரும் விவாதம் ஆக்க வேண்டாம். திருச்சியில் நேற்று கவுதமியின் உருவப்படத்தை அ.தி.மு.க. நிர்வாகிகள் சிலர் தீயிட்டு எரித்தனர்[3]. மேலும் கவுதமிக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். இதுகுறித்து அ.தி.மு.க.வினர் கூறுகையில், “ஜெயலலிதா மறைவில் எந்த சந்தேகங்களும் இல்லை. அவர் ஆஸ்பத்திரியில் இருந்த போது அரசியல் கட்சி தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் நேரில் சென்று விசாரித்து உள்ளனர். எனவே அவருடைய மறைவை கவுதமி விமர்சித்துள்ளது கண்டிக்கத்தக்கது,” என்றனர்[4].

modi-formula-dravidian-tangle-intriguingஜெயலலிதா இறப்பை வைத்து லாபம் பார்க்கத் துடிப்பது ஏன்?: கடந்த இரண்டு மாதங்களாக ஜெயலலிதாவின் ஆஸ்பத்திரிவாசம் பெரிய செய்தியாக இருந்து வந்துள்ளது. இப்பொழுதோ, அது பெரிதாகி விட்டது. ஜி.எஸ்.டியை விட, இதைப் பற்றித்தான் அதிகமாக பேசுகின்றனர். சமூக ஊடகங்களின் கீழ்த்தரமான பதிவுகள், சமூக ஊடகங்களின் தரத்தையேக் குறைத்து விட்டது. கட்சிசார்புடன் வேலைசெய்யும் பலரை வெளிகாட்டி வருகிறது. தகவல் தொழிற்நுட்ப சட்டம் மற்றும் இந்திய குற்றவியல் சட்டப் பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்கும்போது, அலறும் சிலர், ஜெயலலிதாவை இறந்த பின்னரும் மோசமாக விமர்சித்து வருவதை மற்றவர்களும் கவனித்து வருகிறார்கள். பொதுவாக, இந்தியாவில் இறந்தவர்களைப் பற்றி அதிகமாக விமர்சிப்பதில்லை. குறிப்பாக பெண்ணை அவ்வாறு செய்வதில்லை. ஆனால், ஜெயலலிதா விசயத்தில் இரண்டும் மீறப்படுகின்றன. இது அந்த விமர்சர்களுக்கு, அவர்களை சார்ந்த அரசியல் கட்சிகளுக்கு, சித்தாந்த கூட்டங்களுக்கு எதிராக போகும் என்பதை அவர்கள் அறிந்து கொள்ல வேண்டும்.

dmk-tries-to-break-aidmk-rajathi-meetingதிமுகவில் நடந்து வரும் மாற்றங்கள்: திராவிடக் கட்சிகளில் மாற்றம், உருவமைப்பு, முதலியவை ஏற்படுமா என்ற யேஷ்யங்கள் ஏற்பட்டுள்ளன. திமுக மறுபடியும் உயிர்த்தெழ வேண்டும் என்ற ஆசை வந்து விட்டது. எப்படியாவது, அதிமுகவைக் குலைக்க வேண்டும் என்ற எண்ணம் சென்ற மாதங்களை விட அதிகமாகி விட்டது. ஆனால் ஜாக்கிரதையாக செயல்பட வேண்டும் எண்ணமும் உள்ளது. ஸ்டாலின் ஜெயலலிதாவுக்கு மரியாதை செல்லுத்தியதும், ராகுல் கருணாநிதியை பார்க்காமல் சென்றதும், மோடி சசிகலா-நடராஜன் முதலியோருடன் பேசியதும், அழகிரி கருணாநிதியை வந்து சந்தித்ததும் நிச்சயமாக அத்தகைய திட்டத்தை எடுத்துக் காட்டுகிறது. கருணாநிதியும் உடல்நிலை சரியாக இல்லாத நிலையில், திமுகவிலும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. “ஜெயலலிதா-கருணாநிதி ஆஸ்பத்திரிவாசம்” நிச்சயமாக பாரபட்சமாக விமர்சிக்கப் பட்டது. கருணாநிதிக்குப் பிறகு திமுக தலைமை ஸ்டாலினுக்குத்தான் செல்லும் என்றாலும், அழகிரி விடுவதாக இல்லை. இதுவரை மறைந்திருந்த ராஜா, மற்படியும், வெளிவந்து ஸ்டாலினுடன் வலம் வருகிறார்.

rahul-karuna-ladaiகாங்கிரஸில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள்: 2ஜி ஊழல் காங்கிரஸ்-திமுக கட்சிகளை இணைத்து வைத்தாலும், அதே விசயம் அவர்களை பாதித்து வருகின்றது என்பதும் தெரிந்த விசயமாக இருக்கிறது. கடந்த தேர்தலில் திமுகவின் தோல்விக்கு அது ஒரு முக்கியமான அம்சமாக இருந்தது. ஊழல் என்றாலே கருணாநிதி என்ற பழைய பிம்பம் மறுபடியும் பிரதிபலித்ததால், மக்கள் ஜெயலலிதாவைத்தான் தேர்ந்தெடுத்தனர். கருணாநியை தமிழக மக்கள் என்றுமே ஊழலில்லாத முறையில் பார்க்க முடிவதில்லை. 2ஜி ஊழல் ஏதோ திமுகவுடன் தான் இணைந்திருக்கிறது என்பது போல காட்ட வேண்டும் என்று ராகுல், தமிழகத்திற்கு வரும்போதெல்லாம் கருணாநிதியை சந்திக்காமல் சென்று வருகிறார். இப்பொழுதும், ஜெயலலிதாவைப் பார்த்து மரியாதை செல்லுத்தி விட்டு செல்லும் போது, கருணாநிதியை ஏன் பார்க்கவில்லை என்று கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன. ராகுலுக்கு கருணாநிதியை விலக்க வேண்டும் என்ற எண்ணம் எப்படி ஏற்பட்டது என்பது மர்மமாக இருக்கிறது.

jaya-corruption-cases-jailed-releasedஊழலை மீறி ஜெயித்த ஜெயலலிதா: ஜெயலலிதா உண்மையாக ஊழல் செய்தாரா அல்லது சசிகலா அண்ட் கம்பெனியால் மாட்டிக் கொண்டாரா, சுப்ரமணியன் சுவாமி மாட்டி வைத்தாரா என்றெல்லாம் ஆராய்ச்சி செய்தாலும், சட்ட-வழக்குகளை சீர்தூக்கிப் பார்த்தாலும், மக்கள் அவற்றைக் கன்டுகொள்ளவில்லை என்றே தெரிகிறது. குறிப்பாக அவர் கருணாநிதி போன்ற ஆண்களால் பலிவாங்கப் படுகிறார் என்ற எண்ணம் அதிகமாகியது. தமிழக பென்களின் ஆதரவு இன்னும் ஜெயலலிதாவுக்கு இருக்கிறது. இலவசதிட்டங்கள் எல்லாமெ பெரும்பாலும், பெண்களுக்கு என்பதை கவனிக்க வேண்டும். இதனால் தான் பெண்களின் ஆதரவு, இறந்த பின்னர் இன்னும் அதிகமாகியுள்ளதை கவனிக்கலாம். இனி ஜெயலலிதாவை, எம்.ஜி.ஆரைப் போன்று ஒரு ஓட்டுக்களை இழுக்கும் சின்னமாக்கி விட்டால், அவர் பெயரைச் சொல்லி இனி ஓட்டுகள் கேட்கலாம், மக்களும் ஓட்டுப் போடுவார்கள். எம்.ஜி.ஆர் படத்தை மற்ற கட்சிகள் போடுவதைப் போல, ஜெயலலிதா படத்தை போட முடியாது. அந்த விசயத்தில் அதிமுகவுக்கு லாபம் தான். இனி “எம்.ஜி.ஆர்-ஜெயலிதா” சின்னம் அமோகமான வெற்றிசின்னமாக இருக்கும். இதை எதிர்த்து யார் பேசினாலும் மக்கள் நிச்சயமாக நிராகரிப்பார். மேலும் இன்றைய இணைதள ஞானம் பரவியுள்ள காலத்தில், இளைஞர்களின் ஆதரவும் ஜெயலலிதாவுக்கு உள்ளது. அரசியலை சீர்துக்கிப் பார்க்கும் அவர்களிடத்தில் எப்படி மோடிக்கு ஆதரவு அளித்து வருகின்றனரோ, அத்தகைய ஆதரவு “எம்.ஜி.ஆர்-ஜெயலிதா” சின்னத்திற்குக் கிடைக்கும். ஆனால், அதிமுக ஊழலற்ற நிர்வாகத்துடன் செயல்பட வேண்டும். மோடி போன்று முன்னேற்றம், வளர்ச்சி, உன்னதி, மேன்மை என்ற ரீதியில் செயல்பட வேண்டும். மறுபடியும் வட்டம்-மாவட்டம்-கார்ப்பரேஷன் என்று ஊழல்களை ஆரம்பித்தால், இக்கால இளைஞர்கள் தூக்கி எரிந்து விடுவார்கள்.

anna-mgr-jaya-funeralsஅண்ணா, எம்.ஜி.ஆர், அம்மா சின்னங்கள்: தமிழகத்தைப் பொறுத்த வரையில், அண்ணா, எம்.ஜி.ஆர் சின்னங்களுக்குப் பிறகு “அம்மா” தான் வந்துள்ளது. அண்ணாதுரை, எம்.ஜி.ஆர், அடுத்து ஜெயலிதாவால் தான் மக்களைக் கவர முடிந்துள்ளது. திமுக “எம்.ஜி.ஆர்”ஐ வைத்துதான் ஓட்டு கேட்டது. அதிமுகவும் “எம்.ஜி.ஆர்”ஐ வைத்துதான் ஓட்டு கேட்டது. எம்.ஜி.ஆர் தெர்ந்தெடுத்தது –ஜெயலிதாவை. ஆனால், ஜெயலிதா யாரையும் நம்பவில்லை, தெர்ந்தெடுக்கவில்லை, தன்னை வைத்தே எல்லாவற்றையும் நடத்தினார். முக்கியமாக பொறுப்பேற்றுக் கொண்டார். மற்றவர்கள் மீது திணிக்கவில்லை, சுமத்தவில்லை, பழிபோடவில்லை. ஆக தமிழக மக்களை ஈர்க்கவோ, ஓட்டுகளை சேர்க்கவோ  அண்ணா, எம்.ஜி.ஆர், அம்மா சின்னங்களே தவிர மற்றவையெல்ல. இனி திராவிட உதிரிக்கட்சிகள், பெரியார், அண்ணா, அம்பேத்கர், காந்தி, நேரு, எம்.ஜி.ஆர், என்ற முரண்பட்ட தலைவர்கள் சின்னங்களுடன் அம்மாவையும் சேர்ப்பார்கள். ஏன் முஸ்லிம் கட்சிகள் மட்டுமல்ல, பிஜேபியும் அம்மாவை சேர்த்துக் கொள்வார்கள்.

© வேதபிரகாஷ்

12-12-2016

jayalalita-aasaulted

[1] மாலைமலர், ஜெயலலிதா மரணம்: கவுதமியின் சந்தேகத்தின் பின்னால் சதி, பதிவு: டிசம்பர் 10, 2016 13:29, மாற்றம்: டிசம்பர் 10, 2016 13:30

[2] http://www.maalaimalar.com/News/District/2016/12/10132959/1055425/Gauthami-suspicion-conspiracy-for-Jayalalithaa-Died.vpf

[3] தினதந்தி, ஜெயலலிதா மரணம் குறித்து விமர்சனம்: நடிகை கவுதமி உருவப்படத்தை .தி.மு..வினர் எரித்தனர், பதிவு செய்த நாள்: ஞாயிறு, டிசம்பர் 11,2016, 2:32 AM IST; மாற்றம் செய்த நாள்: ஞாயிறு, டிசம்பர் 11,2016, 2:32 AM IST

[4] http://www.dailythanthi.com/News/State/2016/12/11023224/Jayalalithaa-death-Review-Actress-kavutami-cutout.vpf

இலவசப் பொருட்களும், விலையில்லா பொருட்களும்: திராவிட கட்சிகளின் விநியோகம்!

ஜனவரி 15, 2012

இலவசப் பொருட்களும், விலையில்லா பொருட்களும்: திராவிட கட்சிகளின் விநியோகம்!

பெயர் மாறி முதலமைச்சர் மாறினாலும் கொடுக்கப்படும் பொருட்கள் கொடுக்கப் படுகின்றன: டிவி இலவசம், மிக்சி-கிரைண்டர் இலவசம், வேட்டி-சேலை இலவசம் என்று கொடுக்க ஆரம்பித்து, விமர்சனத்திற்குள்ளாகியதும், இப்பொழுது பெயரை மாற்றி, “விலையில்லா வேட்டி, சேலைகள் வழங்கும் திட்டம்” என்று அதே இலவசபாணியில் விநியோகம் தொடர்கிறது. பெயர் மட்டும் மாறவில்லை, முதலமைச்சர் படமும் மாறியிருக்கிறது. ஜெயலலிதாவிற்கு நிறைய செனல்கள் / டிவிக்கள் இல்லாததால், கருணாநிதி போன்று காண்பிக்கப் படவில்லை. அரசு வேண்டுமானால், விலையில்லாமல் ஓசியில் கொடுக்கலாம், அரசிற்கு, யாரும் ஓசியில் கொடுப்பதில்லையே? 256 / 300 கோடிகள் கொடுத்தால் தானே கிடைக்கிறது. பிறகு எப்படி அவை “விலையில்லா பொருட்கள்” என்றாகும்? தினமணி, “இலவச வேட்டி, சேலைத் திட்டம்: முதல்வர் தொடங்கிவைத்தார்”, என்றே செய்தி வெளியிட்டிருக்கிறது[1]. ஆக இதற்கெல்லாம் மக்களின் வரிப்பணம் தானே செலவழிக்கப் படுகிறது. சினிமாவில், வியாபாரத்தில், சாராயத்தில், கள்ளக்கடத்தல், “நம்பர்-டூ” வியாபாரம் செய்து கள்ளப்பணம் / கருப்புப் பணம் வைத்திருப்பவர்கள் தானமாக கொடுத்தால் பரவாயில்லை. கணக்கில்லாத பணம் அவ்வாறே செலவிழிகிறது என்று விட்டுவிடலாம். ஆனால், கணக்கில், வரிப்பணமாக இருக்கும் பணத்தை இலவசத்திற்கு கொடுப்பதால் அப்பொருட்கள் விலையில்லாப் பொருட்களாகி விடாது. இதனால், நிச்சயமாக வரியேற்றம் ஏற்படும், விலைவாசி ஏறும், அத்தகைய சங்கிலித்தொடர் பொருளாதார நிகழ்வுகளில் பொது மக்கள் தான் பாதிக்கப்பட போகிறார்கள்.

ஒரு கோடியே, 70 லட்சத்து, 84 ஆயிரம் சேலைகளும், ஒரு கோடியே, 69 லட்சத்து, 75 ஆயிரம் வேட்டிகளும் பயனாளிகளுக்கு வழங்கப்பட உள்ளன: இந்த ஆண்டுக்கு, விலையில்லா வேட்டி, சேலைகள் வழங்கும் திட்டத்தை, பயனாளிகளுக்கு வழங்கி, முதல்வர் ஜெயலலிதா துவக்கி வைத்தார்[2]. பொங்கல் பண்டிகையை ஒட்டி, ஒவ்வொரு ஆண்டும் விலையில்லா வேட்டி, சேலைகள் வழங்கப்படுகின்றன. இத்திட்டத்தின் மூலம், ஏழைகள் பயன் பெறுவது மட்டுமன்றி, கைத்தறி, விசைத்தறி தொழில்களில் ஈடுபட்டுள்ளோருக்கும், ஆண்டு முழுவதும் வேலைவாய்ப்பு கிடைக்கிறது. இந்த ஆண்டு, பொங்கல் பண்டிகையை ஒட்டி, விலையில்லா வேட்டி, சேலை வழங்கும் திட்டத்தின் கீழ், ஒரு கோடியே, 70 லட்சத்து, 84 ஆயிரம் சேலைகளும், ஒரு கோடியே, 69 லட்சத்து, 75 ஆயிரம் வேட்டிகளும் பயனாளிகளுக்கு வழங்கப்பட உள்ளன. இத் திட்டத்துக் கென முதல்வர் ஜெயலலிதா, 350 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டுள்ளார். இந்த ஆண்டுக்கான விலையில்லா வேட்டி, சேலைகள் வழங்கும் திட்டத்தை, தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஜெயலலிதா நேற்று துவக்கி வைத்தார். ஏழு பயனாளிகளுக்கு, வேட்டி, சேலைகளை வழங்கினார்.

விலையில்லா வேட்டி-சேலை திட்ட ஒதுக்கீடு ரூ.350 கோடியாக உயர்வு[3]: பொங்கல்-2012 விலையில்லா வேட்டி சேலை திட்டத்துக்கான நிதி ஒதுக்கீட்டை 350 கோடி ரூபாயாக உயர்த்தி, தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து தமிழக அரசு இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பு: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசால் வழங்கப்படும் விலையில்லா வேட்டி மற்றும் சேலைகள் தயாரிப்பில் தற்போதுள்ள நிலை மற்றும் விநியோகம் குறித்து தமிழக முதல்வர் ஜெயலலிதா 5.1.2012 அன்று ஆய்வு மேற்கொண்டார். 1981ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்த போது, கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில் தேக்கமடைந்த கைத்தறி துணிகள் கொள்முதல் செய்யப்பட்டு, நெசவாளர்களுக்கு தொடர் வேலைவாய்ப்பு வழங்கப்படும் நோக்கத்துடனும், கிராமப்புற மற்றும் நகர்புறங்களில் வாழும் ஏழை எளிய மக்களுக்கு பொங்கல் பண்டிகையின் போது புத்தாடைகளை இலவசமாக வழங்கும் நோக்கத்துடனும், அகில இந்தியாவுக்கும் முன்னோடி சமூக நல திட்டமான இலவச வேட்டி சேலை வழங்கும் திட்டம் துவக்கப்பட்டது. இத்திட்டம், தமிழக அரசினால் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம் தரமான வேட்டி சேலைகளை ஏழை மக்களுக்கு வழங்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்துடன் முதன் முறையாக பருத்தி நூலுடன் பாலியெஸ்டர் நூல் கலந்து வேட்டிகள் மற்றும் சேலைகள் உற்பத்தி செய்து வழங்க தமிழக முதல்வர் ஜெயலலிதா தனது முந்தைய ஆட்சிக் காலத்தில், அதாவது 2003ஆம் ஆண்டு ஆணையிட்டார். அதன்படியே வேட்டி, சேலைகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன.                                                                                                                                              256 கோடி ரூபாய் ஒதுக்கீடு: தமிழ்நாட்டிலுள்ள கைத்தறி மற்றும் விசைத்தறி நெசவாளர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில், இந்த ஆண்டிற்கான விலையில்லா வேட்டி, சேலை திட்டத்தின் கீழ் தேவைப்படும் 170.84 இலட்சம் சேலைகள் மற்றும் 169.75 இலட்சம் வேட்டிகள் அனைத்தும் தமிழ்நாட்டில் இருந்து மட்டுமே கொள்முதல் செய்யப்பட வேண்டும் என தமிழக முதல்வர் ஜெயலலிதா ஆணையிட்டுள்ளார். அதன்படி தமிழகத்திலுள்ள கைத்தறி மற்றும் விசைத்தறி நெசவாளர்கள் மூலமே இந்த வேட்டி சேலைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. பொங்கல்-2012 விலையில்லா வேட்டி சேலை திட்டத்துக்காக நடப்பு ஆண்டில் 256 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து தமிழக முதல்வர் ஜெயலலிதா ஏற்கெனவே ஆணை வழங்கியுள்ளார்கள். இத்திட்டத்திற்காக மேலும் தேவைப்படும் 94 கோடி ரூபாயை ஒதுக்கி தமிழக முதல்வர் ஜெயலலிதா தற்போது உத்தரவிட்டுள்ளார். ஆக மொத்தம் இத்திட்டத்துக்காக 350 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் கைத்தறிகள் மூலம் உற்பத்தி செய்யப்படும் வேட்டி, சேலைகளுக்கான நெசவு கூலியில் 10 விழுக்காடு உயர்த்தி வழங்க தமிழக முதல்வர் ஜெயலலிதா 15.9.2011 அன்று ஆணையிட்டிருந்தார்கள். மேலும், இத்திட்டத்திற்கு தேவையான வேட்டி, சேலைகள் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள விசைத்தறி நெசவாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையான கூலி உயர்வினை கனிவுடன் பரிசீலனை செய்து வேட்டி மற்றும் சேலை ரகங்களுக்கு வழங்கப்பட்டு வரும் நெசவு கூலியினை வேட்டி ஒன்றுக்கு ரூ. 16/-லிருந்து ரூ. 18.40 ஆகவும், சேலை ஒன்றுக்கு ரூ. 28.16/- லிருந்து ரூ. 31.68/-ஆகவும் உயர்த்தி வழங்க தமிழக முதல்வர் ஜெயலலிதா ஆணையிட்டுள்ளார்.                                                                                                                            தீபாவளியானால் என்ன, பொன்fகலானால் என்ன, இலவசம், இலவசம் தான்: தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தலை முன்னிட்டு 01.03.2011 முதல் 15.05.2011 முடிய தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலில் இருந்தபடியாலும், உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலை முன்னிட்டு 22.09.2011 முதல் 21.10.2011 முடிய தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலில் இருந்தபடியாலும், நூல் கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்படுவதிலும், இறுதி செய்வதிலும் தாமதம் ஏற்பட்டது. இதனால் தேவையான அளவு வேட்டி, சேலைகள் நெய்வதற்கு இன்னும் சில காலம் தேவைப்படும். வேட்டி மற்றும் சேலை உற்பத்தி தொடர்ந்து முனைப்புடன் கண்காணிக்கப்பட வேண்டும் என்றும், அவற்றின் விநியோகம் பொங்கல் பண்டிகையின் போது தொடங்கப்பட்டு, வரும் தமிழ் புத்தாண்டுக்குள் தகுதி உள்ள அனைவருக்கும் வழங்கி முடிப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட வேண்டும் என தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார் என்று அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

[2] விகடன், விலையில்லா வேட்டி-சேலை திட்ட ஒதுக்கீடு ரூ.350 கோடியாக உயர்வு, Posted Date : 12:01 (06/01/2012)Last updated : 12:01 (06/01/2012); http://www.dinamalar.com/News_Detail.asp?Id=385318