திருமாவளவனுக்கு கிருத்துவர்கள் சரியான பட்டம் கொடுக்கிறார்கள்!
திருமாவின் இறைத்தொண்டு: திருமாவளவன் பெரியார்தாசன் மாதிரி, கிருத்துவர்களுக்கு என்றும் புதியவர்கள் அல்லர். திருமா கிருத்துவர் என்ற பேச்சு ஏற்கெனவே உள்ளது. 80களில் கிருத்துவர்கள் நடத்தும் எல்லா கருத்தரங்களிலும் பார்க்கலாம் [குறிப்பாக AICUF, ஐக்கிய ஆலயம் …………..முதலியன]. “கிருத்துவர்களின் காவலன்” என்று போஸ்டர்கள் ஒட்டப் பட்டிருப்பதை பார்த்திருப்பவர்களுக்கு இது ஒன்றும் ஆச்சரியம் இல்லை. கிருஸ்துமஸ் கொண்டாட்டத்தைப் பார்க்க்க வேண்டுமே, அங்குதான் திருமாவின் உண்மையான உருவத்தை பார்க்கலாம். இறைத் தொண்டின் மகிமையே மகிமைதான்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவரும், எம்பியுமான தொல். திருமாவளவனுக்கு இறையியல் கல்லூரியான குருகுலம் அகாடமி சார்பில் டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது. இதுகுறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைமை நிலையச் செயலாளர் வன்னி அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் கால் நூற்றாண்டுக்கும் மேலாக சமூகப் பணி ஆற்றி வருகிறார். இந்தப் பணியைப் பாராட்டி உலக அளவில் செயல்பட்டுவரும் இறையியல் கல்லூரியான குருகுலம் அகாடமி, டாக்டர் (முனைவர்) பட்டம் வழங்க உள்ளது. 2009ம் ஆண்டுக்கான டாக்டர் பட்டத்தை திருமாவளவனுக்கு இக் கல்லூரி வரும் 18.07.2010 அன்று வழங்க உள்ளது என்று கூறியுள்ளார். சமூகப் பணி மற்றும் இறைதொண்டு ஆகியவற்றில் சிறப்பான முறையில் பணியாற்றிய சிந்தனையாளர்கள் மற்றும் களப் போராளிகளுக்கு இக்கல்லூரி கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக டாக்டர் பட்டம் வழங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
கிருத்துவர்கள் முந்தி கொண்டார்கள் போலும்: பெரியார்தாசன் மாறியதும், முஸ்லீம்கள் திருமாவிற்கு வலை வீசினர், “வாருங்கள்”, என்று வரவேற்பு கொடுத்து, சிவப்புக் கம்பளத்தினையும் விரித்தனர். ஆனால், நிலைமையை அறிந்து உசாராகி விட்டனர் கிருத்துவர்கள்!