Archive for the ‘காமராஜர்’ Category

சிலை உடைத்த நாத்திகர்களுக்கு சிலை வைக்கும் கலாச்சாரத்தை உண்டாக்கிய திராவிடத்துவம்! ஸ்டாலின் – அண்ணாசாலையில் கருணாநிதி சிலை நிச்சயம் அமைக்கப்படும் (2)

செப்ரெம்பர் 2, 2021

சிலை உடைத்த நாத்திகர்களுக்கு சிலை வைக்கும் கலாச்சாரத்தை உண்டாக்கிய திராவிடத்துவம்! ஸ்டாலின்அண்ணாசாலையில் கருணாநிதி சிலை நிச்சயம் அமைக்கப்படும் (2)

ஸ்டாலின்அண்ணாசாலையில் கருணாநிதி சிலை நிச்சயம் அமைக்கப்படும்: அப்போது எழுந்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அண்மையில் திராவிடர் கழகத் தலைவர் கி வீரமணி தன்னை சந்தித்த போது இந்த கோரிக்கை தொடர்பாக தன்னிடம் வலியுறுத்துயதாக தெரிவித்தார்[1]. பெரியார் கட்டளையிட்டு திராவிடர் கழகம் வைத்த சிலையை மீண்டும் நிறுவ வேண்டுமென கி.வீரமணி கோரிக்கை வைத்ததையும் முதலமைச்சர் சுட்டிக்காட்டினார்[2]. பொதுவான இடங்களில் போக்குவரத்திற்கு இடையூறாக சிலை வைக்க கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதை தான் சுட்டிக் காட்டியதாக கூறிய முதல்வர், ஏற்கனவே நீதிமன்றத்தில் அனுமதி பெற்றுத்தான் சிலை வைக்கப்பட்டதாகவும் எனவே மீண்டும் அந்த இடத்தில் சிலை நிறுவ எந்த பிரச்சினையும் இல்லை என கி.வீரமணி கூறியதாகவும் முதல்வர் தெரிவித்தார்[3]. அண்ணா சாலையில் பெரியார், அண்ணா, எம்ஜிஆர் ஆகியோருக்கு சிலைகள் இருப்பதை போன்று கருணாநிதி சிலையை அதே இடத்தில் நிறுவ வேண்டுமென கி.வீரமணி மீண்டும் தன்னிடம் வலியுறுத்தியதாக கூறிய முதலமைச்சர், இது தொடர்பாக சட்ட வல்லுநர்களுடன் கலந்தாலோசித்து, அண்ணாசாலையில் கருணாநிதி சிலை நிச்சயம் அமைக்கப்படும் என கூறினார்[4].

மேற்காணும் பேச்சுகளில் உள்ள போலித் தனம், உண்மையற்ற நிலைகளுக்கு விளக்கம்:

  1. பலர் கருணாநிதியிடம், அவ்வாறு சிலை வைக்க வேண்டாம், நல்லதல்ல என்று அறிவுரை கூறினர்.
  2. ஒருநிலையில், குன்றக்குடியும் எடுத்துக் காட்டினார், ஒப்புக் கொள்ளவில்லை, ஆனால், சிலை திறப்பு விழாவில், அவரையே உபயோகப் படுத்திக் கொண்டனர்.
  3. வீரமணி பிடிவாதமாக இருந்தார். எல்லா வாதங்களையும் எதிர்க்க வேண்டுமானால், சிலை வைத்தே ஆகவேண்டும் என்று உசுப்பினார்.
  4. மவுண்ட் ரோடில் பெரியார், அண்ணா என்று சிலைகள் வரிசையாக இருக்கும் போது, அடுத்தது, கருணாநிதி சிலை இருக்க வேண்டும், என்று பகுத்தறிவுடன் எடுத்துக் காட்டினார்.
  5. கருணாநிதியின் எம்ஜிஆரின் மீதான வன்மப் பேச்சுகள் தான், அவரது ரசிகர்கள், தொண்டர்கள், முதலியோரை எதிர்மறை விளைவுக்குத் தள்ளியது.
  6. கருணாநிதியின் இத்தகைய செயல்களால் தான், 31-01-1976ல் ஜனாதிபதியா ஆட்சி நீக்க செய்யப் பட்டு, 31-01-1976 முதல் 30-06-1977 வரை ஜனாதிபதி ஆட்சி நடந்தது.
  7. 30-06-1977 அன்று எம்ஜிஅர் ஆட்சிக்கு வந்தார். நடந்த தேர்தலில் கருணாநிதி-திமுக படுதோல்வி அடைந்தது.
  8. 24-12-1987 அன்று எம்ஜிஆர் இறந்தாலும், 12-05-1996 வரை திமுக ஆட்சி நடந்தது.
  9. அதாவது, 17-02-1980 முதல் 13-05-1996 வரை, கருணாநிதி ஆட்சியில் இல்லை. 16 ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சியில்லாமல் தான் இருந்தார். இவரது “பெரியார் விக்கிரகம்,” பெரியார் அருள், ஆசீர்வாதம், மகிமை முதலியவை வேலை செய்யவில்லை.
  10. அதை அவர், “அஞ்ஞான வாசம்” என்றாலும், அ. கணேசன் போன்ற ஜோதிடர்கள் உண்மையினை சொல்வர். இவர் நடத்திய பரிகார ஹோமங்கள், பூஜைகள் அவர் வீட்டிலிருப்பவர்களுக்குத் தெரியும்.

2018 – பெரியார் இருந்திருந்தால் ஏன் சிலை வைக்கிறீர்கள் எனக் கேட்டிருப்பார்கமல் ஹஸன்: தமிழகத்தில் பெரியார் வாழ்ந்த காலத்தில் அவரின் சிந்தனை, கருத்துக்களுக்கு எதிராக இருந்தவர்களின் செயல்பாடுகள் இன்றும் தொடர்கிறது என்று சொல்வதில்லை தவறொன்றும் இல்லை. சிலை வழிபாடுகளுக்கு எதிராக பேசிய பெரியாருக்கு எதற்காக சிலைகள் என்ற கேள்விகள் எப்பொழுதும் முன்வைக்கப்படும். அதற்கான பதிலை பெரியாரே அவர் வாழ்ந்த காலத்தில் கூறி விட்டு சென்றுள்ளார். என்றெல்லாம், பெரியாரிஸ்டுகள் வாதம் செய்து வருகிறார்கள். 2018-ல் பெரியார் சிலை உடைப்பு பற்றி பாஜகவின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா கருத்து தெரிவித்த போது தமிழகத்தில் அவருக்கு எதிராக கண்டனங்கள் எழுந்தன. அந்நேரத்தில், நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரான கமல்ஹாசன் “சிலைகள் வைப்பதில் வித்தியாசமான கருத்துடையவன் நான். ஆனால், அதை  உடைப்பது கேவலமான செயல். பெரியார் இருந்திருந்தால் ஏன் சிலை வைக்கிறீர்கள் எனக் கேட்டிருப்பார்,” என ஈரோட்டில் பேசி இருந்தார். இது திராவிடத்துவவாதிகளின் முகத்திரைகளைக் கிழித்து விட்டது. இதனால், மறுபடியும், அதற்கு விளக்கம் கொடுத்தனர்.

விடுதலை ஆதாரம் என்று பழையக் கதையை சொன்னது: 29-07-1944 அன்று கடலூரில் பெரியாரின் மீது ஒன்றை செருப்பு வீசப்பட்ட சம்பவம் நிகழ்ந்தது. தன் மீது விழுந்த ஒற்றை செருப்பு தனக்கும் பயன்படாது, வீசியவருக்கும் பயன்பாடாது என்பதால் அதன் மற்றொரு ஜோடி செருப்பையும் பெற்றுக் கொண்டார் பெரியார் என்ற தகவல் விடுதலை நாளிலில் இடம்பெற்று இருக்கிறது. இதற்கு பின், அதே இடத்தில் 28 ஆண்டுகளுக்கு பிறகு திமுக ஆட்சியைக் கைப்பற்றிய பிறகு 1972-ல்  கருணாநிதி ஆட்சியில் கடலூர் மக்களால் பெரியாருக்கு சிலை திறக்கப்படுகிறது. கருணாநிதி திறந்து வைத்த சிலை திறப்பு நிகழ்சிக்கு முன்னிலை வகித்தார் ஈ.வெ.ரா.பெரியார். சிலைகள் வைப்பதற்கு பெரியாரே எதிர்ப்பார் என கமல்ஹாசன் கூறியது தவறான தகவல். சிலைகள் வைப்பதற்கு பெரியார் எதிர்ப்பு தெரிவித்து இருக்கமாட்டார். அதேபோன்று, ஏன் உயிருடன் இருந்தவர் தனக்கு தானே சிலை வைத்துக் கொண்டார் என சிலரும் கேள்வி கேட்பதுண்டு. ஏ.ஆர். வெங்கடாசலபதி போன்ற சரித்திராசிரியர்களும், இதைப் பற்றியெல்லாம் ஆராய்ச்சி செய்வதில்லை. கருணாந்தம், எங்கேயாவது உட்கார்ந்து, தூங்கிக் கொண்டிருப்பார். சுப.வீரப் பாண்டியனும் கண்டுகொள்ளமட்டார். விடுதலை ராஜேந்திரன், கொளத்தூர் மணி பற்றி சொல்லவேண்டிய அவசியம் இல்லை.

உயிரோடு இருப்பவர்களுக்கு சிலை வைக்கலாம் என்று நியாயப் படுத்தி வாதித்தது: பெரியார் தனக்கு தானே சிலை வைத்துக் கொள்ளவில்லை. சிலைகள் மக்கள் மத்தியில் பகுத்தறிவு சிந்தனையை பிரச்சாரமாக மாற்றுவதாக இருக்க வேண்டும் என்பதே பெரியாரின் நோக்கம். சிலை என்பது வழிபாட்டுக்குரியது அல்ல. பயன்பாட்டுக்கு உரியது என்று கூறியுள்ளார். சிலைகளே பகுத்தறிவு பிரச்சாரத்தை செய்யும் என அவர் நினைத்தார். “பிற்காலத்தில் ராமசாமினு ஒருத்தன் இருந்தான். அவன் பகுத்தறிவு பிரச்சாரம் பண்ணிக்கிட்டு இருந்தானு பேசுவாங்க. அதுக்காக தான் இந்த சிலை,” என பெரியார் சிலை திறப்பு நிகழ்ச்சியில் பேசியதாக மின்னம்பலம் செய்தியில் வெளியாகி இருக்கிறது. விடுதலை நாளிதழில், உயிருடன் இருப்பவருக்கு சிலை வைப்பது தவறில்லை என்றே வெளிப்படுத்தி உள்ளனர். சென்னை சர்வகலாசாலை வைஸ் சான்ஸ்லர் டாக்டர் லட்சுமணசாமி, ஓய்வு பெற்ற சென்னை பிரதம நீதிபதி டாக்டர் ராஜாமன்னார், கர்மவீரர் காமராஜர் என பலருக்கும் உயிருடன் இருக்கும் போதே சிலை வைக்கப்பட்டது என விடுதலை நாளிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது. பெரியார் தன் பிறந்தநாள், சிலை திறப்பு, படத்திறப்பு போன்றவற்றை இயக்கத்தின் பிரச்சார கருவியாக பயன்படுத்தினார். அண்ணாவிற்கும் அவர் வாழ்ந்த காலத்தில் படத்திறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்று உள்ளன என்கிறார்கள் இயக்கத்தை சேர்ந்தவர்கள்.

திகதிமுகவினரின் சமீபத்தைய சரித்திர உரிமை கோரிக்கைகள் சரிபார்க்கவேண்டும்: மேற்காணும் வாதங்கள், அவ்வாதங்களுக்கான ஆதாரங்கள், அவர்களுடைது தான். விடுதலையில் வந்த-வரும் செய்திகளை சரிபார்க்க, வேறொரு ஆவணம் அல்லது மூலத்தை வைத்து பரிசோதிக்க முயற்சிகளை செய்வது கிடையாது. ஒருதலைப் பட்சமாகவே, இத்தகைய வாத-விவாதங்கள், செய்திகளை வெளியிடுதல், ஏன் புத்தகங்கள் எழுதுவது, ஆராய்ச்சி செய்வது என்று நடந்து வருகின்றன. ஒரு சிலரே, ஈரோடு, பவானி, திருச்சி, கடலூர் என்று சென்று, அங்கிருக்கும் 60-90 வயதான முதியவர்களிடம் பேசி, விவரங்களை சேகரித்து வருகின்றனர். அவற்றில், இவர்களின் கூற்று, எந்த அளவுக்கு ஒருதலைப் பட்சமாக இருக்கிறது, ஏன் உண்மைக்குப் புறம்பாகவும் இருக்கிறது என்பது தெரிகிறது. அதனால் தான், ஈவேரா பிள்ளையார் உடைப்பு, ஜின்னாவுடனான சகவாசம், ஆங்கிலேயரிடம் சரண்டர் ஆனது, உனெஸ்கோ விருது போன்றவை எடுத்தும் காட்டி வருகின்றன.

அண்ணாசாலையில் கருணாநிதி சிலை நிச்சயம் அமைக்கப்படும் என கூறினார்: ஸ்டாலின், கருணாநிதியில் மகன், முதலமைச்சர் இவ்வாறு கூறியப் பிறகு, யார் எதிர்க்கப் போகிறார்கள், எதிர்க்க முடியும். எந்த நீதிபதியும் மாறாக, தீர்ப்பும் கொடுக்க முடியாது. முதலமைச்சர் தீர்மானமாக, உறுதியாக சொல்லியாகி விட்டது, “அண்ணாசாலையில் கருணாநிதி சிலை நிச்சயம் அமைக்கப்படும்.” எனவே, இனி, வீரமணி வேகமாக வேலை செய்ய ஆரம்பித்து விடுவார். 2024 பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பாக, சோனியா காந்தி போன்றோரை வரவழைத்து, சிலைத் திறப்பு விழா பிரம்மாண்டமாக நடத்தப் படும். மற்ற எதிர்கட்சி தலைவர்களும் இருப்பார்கள். கடற்கரையில், கூட்டணி தேர்தல் பிரச்சாரக் கூட்டமும் நடைபெறும். அதிமுக-பாஜக எதிர்ப்பு முழுமையாக வெளிப்படும்.

© வேதபிரகாஷ்

02-09-2021


[1] மாலைமலர், அண்ணா சாலையில் கருணாநிதிக்கு சிலைமு..ஸ்டாலின் அறிவிப்பு, பதிவு: செப்டம்பர் 01, 2021 13:05 ISTமாற்றம்: செப்டம்பர் 01, 2021 15:20 IST.

[2] https://www.maalaimalar.com/news/topnews/2021/09/01130550/2973854/Tamil-News-MK-Stalin-announced-Karunanidhi-statue.vpf

[3] தினமலர், அண்ணாசாலையில் கருணாநிதிக்கு சிலை: முதல்வர் அறிவிப்பு, Updated : செப் 01, 2021  13:41 |  Added : செப் 01, 2021  13:39.

[4] https://www.dinamalar.com/news_detail.asp?id=2835053

கருணாநிதி சிலை திறப்பு – சிலை வைத்தல், எடுத்தல், கடத்தல், உடைத்தல் எல்லாமே திராவிட கலாச்சாரம், பண்பாடு, நாகரிகம் தான்! [1]

திசெம்பர் 17, 2018

கருணாநிதி சிலை திறப்புசிலை வைத்தல், எடுத்தல், கடத்தல், உடைத்தல் எல்லாமே திராவிட கலாச்சாரம், பண்பாடு, நாகரிகம் தான்! [1]

EVR idol breaking case

பிள்ளையார் சிலையை உடைத்தவன், அப்பனுக்கு சிலை வைக்கத் துடித்த கதை சொல்லும் பிள்ளை: தமிழகத்தில் சிலை-அரசியல் என்பது திக-திமுக கட்சிகளோடு பின்னிப் பிணைந்து, பிறகு அதிமுகவையும் ஆட்டிப் படைக்கிறது. அம்பேத்கர் சிலை அரசியல் என்பது பிறகு வந்தது. அது தேவர் சிலை அரசியலோடு சேர்ந்து கொண்டு, கலவரங்களில் முடியும் நிலை ஏற்பட்டுள்ளது. ஓய்வு பெற்ற நீதிபதி எஸ்.மோஹன் கமிட்டியின் படி, சிலைகள் அவமதிக்கப் படுவதால் தான், தமிழகத்தில் கலவரங்கள் நடக்கின்றன என்று 1998லேயே எடுத்துக் காட்டினார்[1]. தேவர் ஜாதியினர் சிலைகள் 227, மஹாத்மா காந்தி 81 மற்றும் அம்பேத்கர் 66 இருப்பதாக இன்னொரு அறிக்கைக் குறிப்பிடுகிறது[2]. இதனால், புதிய சிலைகள் வைக்கக் கூடாது என்ற கருத்தும் உருவாகி வருகிறது. இங்கும் சிலையுடைப்பு அரசியலை ஆரம்பித்து வைத்தது ஈவேரா தான். உச்சநீதி மன்றம் அவரைக் கண்டித்துள்ளது, ஆனால், அவர் தான் கருணாநிதிக்கு சிலை வைப்பேன் என்று பிடிவாதம் பிடித்ததை இப்பொழுது அறிகிறோம்!

Avvai, Valluvar, Kambar, Ilango

1968ல் இரண்டாவது உலகத் தமிழ் மாநாடு நடந்த்த்தும், சிலைகள் வைத்ததும்: 1968ல் இரண்டாவது உலகத் தமிழ் மாநாடு நடந்த போதே, யாருக்கெல்லாம் சிலை வைப்பது, எடுப்பது என்பது பற்றியெல்லாம், ஏகப்பட்ட குழப்பம்,, பிரச்சினை, எதிர்ப்பு, ஆதரவு எல்லாமே நடந்தேறியது. முதலில் பெஸ்கி, போப் சிலைகள் வைக்க திட்டம் இல்லை. அப்பொழுது, யாரோ ஒருவர் லெஸ்லி நியூபிகின் என்ற சி.எஸ்.ஐ பிஷப்பிற்கு போன் செய்து, அவர்கள் சிலைகள் சேர்க்கப் பட வேண்டும் என்று அறிவித்தானாம். உடனே, புரொடெஸ்டென்ட் நியூபிகின், கத்தோலிக்க ஆர். அருளப்பாவுடன் ஆலோசனை செய்து, சிலைகள் வைக்க திட்டம் போட்டனர். லெஸ்லி அண்ணாவின் மிக நெருங்கிய நண்பர், சிறுவயதில் காஞ்சிபுரத்திலிருந்தே பழக்கம் உண்டு. அவர் சொல்லை அண்ணா தட்டவே மாட்டார் என்ற அளவுக்கு நெருக்கம் என்று நியூபிகின் முன்வாந்தார். இதற்குள் செய்தி அரசுக்குச் சென்றவுடன், செல்யூலரிஸ முறைப்படி, உமறுப் புலவருக்கு சிலை வைக்கலாம், என்று மனவை முஸ்தபா[3] [1935-2017] சொன்னார்.  ஆனால், இஸ்லாமிய அடிப்படைவாதிகள் எதிர்ப்புத் தெரிவித்ததால், கைவிடப் பட்டது. மபொசி இளங்கோ அடிகள் சிலை வைக்க வேண்டும் என்றதை, கருணாநிதி விரும்பவில்லை. ஆக, தீர்மானிக்கப் பட்ட சிலைகள் இவ்வாறு வைக்கப் பட்டன.

Bharati, dasan, Pope, Caldwell

எண் திறந்து வைக்கப் பட்ட தேதி சிலை விழாத் தலைவர் திறந்து வைத்தவர்
1 02-01-1968 திருவள்ளுவர் இஆ. நெடுஞ்செழியன் கி.ஆ.பெ. விசுவநாதன்
2 02-01-1968 அவ்வையார் சத்தியவாணி முத்து எஸ்.எஸ். வாசன்
3 02-01-1968 கம்பர் ஏ. கோவிந்தசாமி மீ. பக்தவட்சலம்
4 02-01-1968 கண்ணகி    
5 02-01-1968 சுப்பிரமணிய பாரதி மாதவன் நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கனார்
6 02-01-1968 வீர்மாமுனிவர் சாதிக் பாஷா அருளப்பா
7 02-01-1968 கி.யூ.போப் சி.பா. ஆதித்தனார் பிஷப் லெஸ்லி நியூபிகின்
8 02-01-1968 பாரதிதாசன் மா.முத்துசாமி மு. வரராசனார்
9 02-01-1968 வி.ஓ.சிதம்பரம்    
10 07-11-1971 இளங்கோ அடிகள் இரா. நெடுஞ்செழியன் ம.பொ.சிவஞானம்

Arulappa, CNA, Lesslieகண்ணகி சிலை உலகத் தமிழ் மாநாட்டின் போது வைக்கப் பட்டது. ஆனால் அது டிசம்பர் 10, 2001 அன்று, மெரினா கடற்கரையை நவீனப் படுத்தும் சாக்கில் இடிக்கப் பட்டது. போதாகுறைக்கு, அச்சிலையால் தான் சென்னை பஞ்சத்தால் நீரின்றி தவிக்கிறது என்றும் சொல்லப்பட்டது. திமுக ஆட்சிக்கு வந்தபோது, கருணாநிதி, ஜூன்.3, 2006ல் அதே இடத்தில் கண்ணகி சிலை வைத்தார். இப்படி சிலை சண்டை.

கருணாநிதிக்கு 1975ல் வைத்த சிலை 1987ல் இடிக்கப் பட்டது: 1975ல் கருணாநிதியின் சிலை மசூதிக்கு முன்பாக, அவர் ஆட்சியில் இருக்கும் போதே, ஜெனரல் பாட்டர்ஸன் – மவுண்ட் ரோடு சந்திப்பில் வைக்கப் பட்டது. அப்பொழுதே “உயிரோடு இருப்பவர்களுக்கு சிலை வைப்பதா, விக்கிரங்களை / சிலைகளை எதிர்ப்பவர், தனக்குத் தானே சிலை வைத்துக் கொள்வதா, இதனால், தீமை ஏற்படும்……….,” போன்ற பலதரப்பட்ட விமர்சனங்கள் வைக்கப் பட்டன. ஆத்திகரான, கடவுளை நம்பிய குன்றக்குடி அடிகள், நாத்திகரான-இந்துவிரோதியான, கருணாநிதியின் சிலையை திறந்து வைத்தார்! இருப்பினும், கருணாநிதிக்கு விருப்பம் இருந்ததால், நிறைவேற்றப்பட்டது. எந்த சாத்திரம் என்னவாகிற்றோ, எம்ஜிஆர் 1987ல் இறந்த போது, கருணாநிதி உயிரோடிருந்த நிலையில் சிலை உடைக்கப் பட்டது. ஒரு இளைஞன் கடப்பாரையினால், சிலையை உடைக்கும் காட்சியின் புகைப்படங்கள், நாளிதழ்களில் வெளிவந்தன. அது கண்டு போபப்பட்ட  கருணாநிதி, “அது மற்றவகளுக்கு இறுதி சிரிப்பாக இருக்கலாம், ஆனால், என் தம்பி என் நெஞ்சில் குத்தி விட்டான்”, என்று இளைஞன் உடைத்த படத்தின் கீழே எழுதினார்.

Karunanidhi statue demolished by a youth- 24-12-1987-main

உயிருடன் இருந்த போது வைக்கப் பட்ட சிலைகள்: தமிழக அரசியல் வரலாற்றில் உயிருடன் இருக்கும்போதே சிலை அமைக்கப்பட்ட தலைவர்கள் இரண்டுபேர் ஒன்று காமராஜர் மற்றொன்று கருணாநிதி. சிலை அமைக்கப்பட்டு மீண்டும் புதிய சிலை அமைக்கப்பட்ட தலைவர்கள் இரண்டுபேர். ஒன்று கருணாநிதி மற்றொன்று ஜெயலலிதா. இது சம்மீபத்தில் ஏற்பட்ட கோளாறுகள். கருணாநிதிக்கு முதன் முதலில் சிலை வைக்கவேண்டும் என்று அறிக்கை விட்டவர் பெரியார். அண்ணா உயிருடன் இருக்கும்போதே 1968-ம் ஆண்டே பெரியார் இந்த வேண்டுகோளை வைத்தார். 1968 இலும்,1971 ஆகஸ்டு 14 இலும் இருமுறை அறிவித்தார் பெரியார்! அதற்கு முன் உயிருடன் இருந்தவர்களில் அப்போதைய காங்கிரஸ் தலைவர் காமராஜருக்கு மட்டுமே ஜிம்கானா கிளப் அருகே சிலை திறக்கப்பட்டிருந்தது. அதை நேரு திறந்து வைத்தார்.

Karunanidhi statue demolished by a youth- 24-12-1987

ஈவேரா கருணாநிதிக்கு சிலை வைக்க விரும்பியது (1971): அண்ணா மறைவுக்குப் பின்னர் முதல்வர் பதவியேற்றார், பின்னர் 1971-ம் ஆண்டு சட்டமன்றத்தை கலைத்துவிட்டு நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்ந்து தேர்தலை திமுக சந்தித்தது. மிகப்பெரிய வெற்றியை திமுக இந்த தேர்தலில் பெற்றது. ஆகஸ்டு 14, 1971 அன்று பெரியார் திடலில் நடைபெற்ற பாராட்டுக் கூட்டத்தில், பெரியார் ஏற்கெனவே தான் வைத்த கோரிக்கையை மீண்டும் அப்போதைய முதல்வர் கருணாநிதியை அருகில் வைத்துக்கொண்டே வைத்தார். செயற்கரிய சாதனை செய்தவர் என்பதால் சென்னை தலைநகரில் கருணாநிதிக்குச் சிலை வைக்கவேண்டும் என்று தம் விருப்பத்தை பெரியார் தெரிவித்தார். அதை மேடையில் இருந்த குன்றக்குடி அடிகளார் போன்றவர்கள் ஆமோதித்தனர். அதே மேடையில் கருணாநிதி சிலை அமைப்புக் குழுவையும் பெரியார் அறிவித்தார். அப்போது கூட்டத்தில் பேசிய கருணாநிதி திமுக சார்பில் பெரியாருக்கு ஒரு சிலை திறக்கிறோம், அதன் பின்னர் எனக்கு சிலை திறக்கலாம் என்று அதைத் தட்டிக்கழித்தார்.

வேதபிரகாஷ்

16-12-2018.

EVR statue opened by Karu - EVR, Karu and others can be seen

[1] In October 1998 the Times of India (ToI) reported that a high-level committee headed by retired Supreme Court judge S.Mohan to investigate caste conflict in southern Tamil Nadu had made special note of statues: “Justice Mohan observed that most of the clashes that took place in the region were because of desecration of statues and both the government and private bodies were advised to desist from installing new statues.”

Times of India, View: Statue politics & shifting sands of time, By Vikram Doctor, ET Bureau|Updated: Mar 10, 2018, 10.57 AM IST

[2] Another ToI report on the committee showed the scale of the problem: “statistics in the report reveal that there are over 708 statues of various leaders in nine southern districts of Tamil Nadu alone.” Of these 227 were of dominant Thevar community leaders, 81 were of Mahatma Gandhi and 66 were of Dr.Ambedkar. Riots often sprang from mere rumours about disrespect to statues and sometimes communities disfigured their own leaders’ statues “as an excuse for attacking the other.”

https://economictimes.indiatimes.com/news/politics-and-nation/view-statue-politics-shifting-sands-of-time/articleshow/63241372.cms

[3] தென்மொழிகள் புத்தக டிரஸ்ட் நிர்வாக இயக்குநராக 40 ஆண்டுகள், ‘புத்தக நண்பன்’ (புக் பிரண்ட் – மாத இதழ்) ஆசிரியராக 4 ஆண்டுகள், யுனெஸ்கோ கூரியர் – பன்னாட்டு மாத இதழ் – ஆசிரியராக 35 ஆண்டுகள், என்சைக்ளோபீடியா பிரிட்டானிகா தலைமை பொறுப்பாசிரியர் – தமிழ் பதிப்பு, முதலமைச்சர் தலைமையில் அமைக்கப்பட்ட ‘சுதந்திர பொன்விழா குழு” முன்னாள் உறுப்பினராகவும், முதலமைச்சர் தலைமையிலான தமிழ்நாடு அரசு உயர்கல்வி – தமிழ் ஆக்கப்பணிக்குழு முன்னாள் உறுப்பினராகவும், அனைத்திந்திய தமிழ் எழுத்தாளர் சங்க முன்னாள் இணைச் செயலாளராகவும், உலகத் தமிழ் மாநாடுகளை நடத்தி வரும் சர்வதேசத் தமிழ் ஆராய்ச்சி பேரவையின் இந்தியக் குழுவின் முன்னாள் இணைச் செயலாளராகவும், ‘பாரதிய ஞானபீடப் பரிசு தேர்வுக்குழு’ உறுப்பினராகவும், 1968, 1982, 1987, 1995 ஆண்டுகளில் நடைபெற்ற உலகத் தமிழ் மாநாடுகளில் 7 ஆய்வுக் கட்டுரைகள் படித்துள்ளார்.

தமிழ், தமிழகம், தமிழ்நாடு: அரசியல் ஆட்சி, நிர்வாக மேன்மையிலிருந்து, கவர்ச்சி அரசியலுக்கு மாறியது – திராவிடத்துவவாதிகளின் வசைபாடும் போக்கு [1]

ஏப்ரல் 20, 2018

தமிழ், தமிழகம், தமிழ்நாடு: அரசியல் ஆட்சி, நிர்வாக மேன்மையிலிருந்து, கவர்ச்சி அரசியலுக்கு மாறியதுதிராவிடத்துவவாதிகளின் வசைபாடும் போக்கு [1]

கரு-இந்திராவை வசை பாடியது- சர்வாதிகாரி, காந்தாரி.....

காந்திஜி, ராஜாஜி, காமராஜ், இந்திரா, மொரார்ஜி போன்றோரை இழிவாகச் சித்தரித்து, பேசி, தூஷித்தது: பொதுவாக பிரபலமானவர்களை ஆதரித்தும், எதிர்த்தும் சிலர் பிரபலமடைய முயற்சிக்கலாம், திராவிடத்துவத்தில் அத்தகைய கொள்கையுள்ளது. வில்லன்களாக அறிமுகம் ஆகி, ஹீரோக்கள் ஆன லாஜிக் தான் [negative suggestion] பிரபலமானவர்களை ஆதரிப்பதும், எதிர்ப்பதும்! அரசியலிலும் காந்திஜி, ராஜாஜி, காமராஜ், இந்திரா, மொரார்ஜி போன்றோரை இழிவாகச் சித்தரித்து, பேசி, தூஷித்து, பிரிவினையை வளர்த்தனர். நடு இரவு கூட்டங்களில் ஆபாசமாக, கொச்சையாக மற்றும் அநாகரிகமாக பேசினர். இருப்பினும் பெரியார், அறிஞர், கலைஞர் என்ற உயர்வு நவிற்சிகளில் உலா வந்தனர். நன்றாக தமிழ் பேசுவர் என்ற திறமையைத் தவிர, வக்கிரத்துடன், வாயாலேயே கொக்கோகத்தை விவரித்து உசுப்புவர் என்ற தன்மையினை மறைத்தே வைத்தனர். பெரியார், அத்தகைய எதிர்ப்பில் தோல்வி கண்டார் எனலாம்[1]. ஆனால், தேர்தலில் நிற்கமுடியாது என்ற நிலை வந்தவுடன்[2], அண்ணாதுரையே, “திராவிட நாடு” கோரிக்கையை தூக்கிப் போட்டார், 14-01-1969 அன்று முதலமைச்சர் ஆனார். அதே தோரணையில், 50 ஆண்டுகள் கழித்து, இப்பொழுது மோடியை தூஷித்து வருகின்றனர். இன்றைக்கு மோடியை திட்டுவது, ஒருமையில் பேசுவது, தூஷிப்பது என்று திராவிட கீழ்தட்டு வர்க்க அரசியல்வாதிகள் தரந்தாழ்ந்து வாடிக்கையாக செய்து வருகின்றனர். இதற்கு தமிழ், தமிழர், தமிழ்நாடு, திராவிடம், திராவிட நாடு கட்டுக்கதைகளை, உணர்ச்சிப் பூர்வமான கோஷங்களை எழுப்பி, தீவிரவாதத்தை வளர்க்கப் பார்க்கிறார்கள்.

கரு-எம்ஜியாரை வசை பாடியது- கிழவன், கூத்தாடி

இந்திய பிரத மந்திரிகளும், திராவிட அரசியலும், பிரிவினை போராட்டங்களும்: இந்திய பிரதமர்களின் அட்டவணை, காலக் கிரமமாகக் கொடுக்கப்பட்டுள்ளது: இக்காலக்கட்டங்களில் திராவிட கட்சிகள் [திமுக-அதிமுக], மத்தியில் ஆண்ட கூட்டணியுடன் சேர்ந்து தான் அதிகாரத்தை அனுபவித்து, தத்தமது மாநில குறுகிய தன்னலங்களிலும் ஈடுபட்டிருந்தன.

  பிரதமந்திரி பெயர் இருந்து வரை ஆண்ட கட்சி
1 ஜவஹர்லால் நேரு 15-08-1947 27-05-1964 இந்திய தேசிய காங்கிரஸ்
குல்சாரிலால் நந்தா 27-05-1964 09-06-1964 இந்திய தேசிய காங்கிரஸ்
3 லால் பஹதூர் சாஸ்திரி 09-06-1964 11-01-1966 இந்திய தேசிய காங்கிரஸ்
குல்சாரிலால் நந்தா 11-01-1966 24-06-1966 இந்திய தேசிய காங்கிரஸ்
3 இந்திரா காந்தி 24-06-1966 24-03-1977 இந்திய தேசிய காங்கிரஸ்
4 மொரார்ஜி தேசாய் 24-03-1977 28-07-1979 ஜனதா கட்சி
5 சரண் சிங் 28-07-1979 14-01-1980 ஜனதா கட்சி [செக்யூலார்]
6 இந்திரா காந்தி 14-01-1980 31-10-1984 இந்திய தேசிய காங்கிரஸ்
7 ராஜிவ் காந்தி 31-10-1984 02-12-1989 இந்திய தேசிய காங்கிரஸ்
8 வி.பி. சிங் 02-12-1989 10-11-1990 இந்திய தேசிய காங்கிரஸ்
9 சந்திரசேகர் 10-11-1990 21-06-1991 இந்திய தேசிய காங்கிரஸ்
10 பி.வி. நரசிம்ம ராவ் 21-06-1991 16-05-1996 இந்திய தேசிய காங்கிரஸ்
11 அடல் பிஹாரி வாஜ்பாயி 16-05-1996 01-06-1996 பாரதிய ஜனதா பார்ட்டி
12 எச்.டி.தேவ கவுடா 01-06-1996 21-04-1997 ஜனதா தள் [யுனைடெட்]
13 ஐ.கே.குஜரால் 21-04-1997 19-03-1998 ஜனதா தள் [யுனைடெட்]
14 அடல் பிஹாரி வாஜ்பாயி 19-03-1998 22-05-2004 பாரதிய ஜனதா பார்ட்டி
மன் மோஹன் சிங் 19-03-1998 22-05-2004 இந்திய தேசிய காங்கிரஸ்
15 மன் மோஹன் சிங் 22-05-2004 26-05-2014 இந்திய தேசிய காங்கிரஸ்
16 நரேந்திர மோடி 26-05-2014 பாரதிய ஜனதா பார்ட்டி

1969-2019 என்று ஐம்பது ஆண்டு திராவிட கட்சிகளின் ஆட்சி என்று ஆராய்ச்சி செய்து பார்த்தால், அவற்றால் தமிழ், தமிழர், தமிழ்நாடு, முதலியவற்றிற்கு என்ன நன்மைக்-தீமை ஏற்பட்டன என்பதனை அலசிப் பார்த்துத் தெரிந்தும் கொள்ளலாம். திமுக மற்றும் அதிமுக தான் காங்கிரஸுடன் பல்லாண்டுகள் சேர்ந்து, கூட்டாட்சி நன்மைகளை பெற்றன. ஆகையால், காவிரிப் பிரச்சினைக்கு அவை என்ன செய்து கொண்டிருந்தன என்பதனையும் அறிந்து கொள்ளலாம்.

பார்ப்பன கூட்டம் நடுங்க வேண்டும் - 23-02-2012

எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா திராவிடர்களால் அதிகம் தூஷிக்கப் பட்டது: ஜவஹர்லால் நேரு காலத்தில் [1964 வரை] அண்ணாதுரை “அடைந்தால் திராவிட நாடு, இல்லாவிட்டால் சுடுகாடு, வடக்கு வாழ்கிறது, தெற்குத் தேய்கிறது” என்றெல்லாம் பேசி, பிறகு, அடங்கி-ஒடுங்கி, தேர்தலில் நின்று வெற்றி பெற்றி 1969ல் முதலமைச்சர் ஆனார் என்பது மேலே சுட்டிக் கட்டப்பட்டது. கருணாநிதியும் அதே பாணியைப் பின்பற்றி தொடர்ந்து ஆட்சியில் இருக்க எல்லா சூழ்ச்சிகளையும் [இந்தி எதிர்ப்பு, மாநில சுயயாட்சி] செய்து வந்தார். 1970-80களில், திராவிடத்துவவாதிகள் எம்.ஜி.ஆரை அவ்வாறு தான் தாக்கி வந்தனர். மலையாளி, கூத்தாடி, தாத்தா, என்றெல்லாம் சொல்லி, பேசி, திட்டினார்கள். ஆனால், முன்னர் அதே எம்.ஜி.ஆர் சுடப்பட்டு, ஆஸ்பதித்திரியில் இருந்த போது, அப்புகைப் படத்தை தேர்தல் பிரச்சாரத்திற்கு உபயோகப் படுத்தி, திமுக வெற்றிக் கண்டது. பிறகு, எம்.ஜி.ஆர், அதிமுக ஆரம்பித்தபோது, கருணாநிதி, தர்மத்திற்கு முன்னால் “அ” போட்டால் அதர்மம், நியாயத்திற்கு முன்னால் “அ” போட்டால் அநியாயம், என்றெல்லாம் விவரித்து, திமுக முன்னால் “அ” போட்டால் “அதிமுக” ஆயிற்று என்று சொன்னது போலத்தான், இன்று தீவிரவாத-பிரிவினைவாத கும்பல்கள், மோடியைத் தாக்கி வருகின்றனர். ஜெயலலிதாவையும் அதே பாணியில், பெண் என்றும் பார்க்காமல், கீழ்த்தரமாகத் திட்டி வந்தனர். போதாகுறைக்கு, அவர் பிராமணர் என்பதால், “பாப்பாத்தி” என்று வேறு மேடைகளில் அருவருப்பாகப் பேசி வந்தனர். அண்ணாவின் ஏசல்-பாணியை கரு அப்படியே பின்பற்றியது தான் “கடமை, கண்ணியம், கட்டுப்பாடு” என்ற கொள்கையாக இருந்தது.

Living with Soban babu - jaya- R.Rajanaygam

குடி அரசு, திராவிட நாடு, நாத்திகம், ஆபாசங்கள் இன்றும் விடுதலை, முரசொலிக்களில் தொடர்வது: ஜெயலலிதா மைனாரிடி அரசு என்று குறிப்பிட்டதை பொறுக்காமல், கருணாநிதி முரசொலியில் பழங்கதையை போட்டு அசிங்கப்படுத்தினார்[3]. முரசொலியில் ஜெயலலிதா பற்றிய எழுத்துகள் பெண்மையை தூசிக்கும் வரம்புகள், ஆபாசத்தின் எல்லைகள், எண்ணவுரிமை தரங்கள் எல்லாவற்றையும் கடந்ததவை என்பதை காணலாம்[4]. இப்படியெல்லாம் தரங்கெட்டு பேசினால், நடந்து கொண்டால், எல்லோரும் கண்டு கொள்ளாமல் இருக்கிறார்கள், அதனால், மக்கள் ஏற்றுக் கொண்டு விட்டார்கள் இல்லை நாம் அதிகாரத்தில் இருப்பதனால், யாரும் ஒன்றும் செய்ய முடியாது, அதிகாரத்தில் இல்லாமல் இருந்தாலும், அடிப்பார்கள்-உதைப்பார்கள்-அவமரியாதை செய்வார்கள் என்று தொடந்து செய்து வருகிறார்கள் என்று தெரிகிறது.  விடுதலையில் இன்றும் அத்தகைய தேசவிரோத, இந்துவிரோத, ஆனால், துலுக்க-கிருத்துவ ஆதரவு எழுத்துகளை காணலாம். பேச்சு-நடவடிக்கைகளும் அவ்வாற்றே உள்ளன, தொடர்கின்றன. “கடமை, கண்ணியம், கட்டுப்பாடு” என்ற கொள்கை தாராளமாக பின்பற்றப்பட்டு வருவது தெரிகிறது. அவர்களது நாத்திகம் செக்யூலரிஸ நாத்திகமாக இருந்து வருவதால், பிராமண எதிர்ப்பு, துவேசம் மற்று காழ்ப்புணர்வு கொதிப்புகள் ஜெயலலிதா மீது சிந்திகொண்டே இருந்தன.

© வேதபிரகாஷ்

19-04-2018


கரு-காமராஜரை வசை பாடியது-ஜாண்டக்காக்கா, மரமேறி, கட்டப்பீடி

[1] காந்தி, காங்கிரஸ் எதிர்ப்புகளிலிருந்து, இந்திய-இந்தி-இந்து-எதிர்ப்பு பவரை தோல்வி கண்டார், ஆனால், ஜின்னாவும், அம்பேத்கரும் அவரவர் வழிகளில் வெர்றிக் கண்டனர்.

[2] அரசியல் நிர்ணய சட்ட திருத்தத்தினால், திராவிட நாடு கொள்கையை, மறந்தார்.

[3] 1978-ம் ஆண்டு குமுதம் இதழில் வெளிவந்த ஜெயலலிதாவின் “மனம் திறந்து பேசுகிறேன்” என்கிற தொடரில்தான் தெலுங்கு நடிகர் சோபன் பாபுவும் தாமும் ஒரே வீட்டில் குடித்தனம் நடத்துவது குறித்தும் சோபன்பாபுவுக்கு பால்கனியில் நின்று ஜெயலலிதா டாட்டா காண்பிக்கும் படங்களும் வெளியாகி இருந்தன என குறிப்பிடப்படுவது உண்டு. 2009-ம் ஆண்டு ஆகஸ்ட் 19-ந் தேதி முரசொலி நாளேடானது 1978-ல் குமுதம் இதழில் வெளிவந்த ஜெயலலிதா பேட்டி என ஒன்றை பிரசுரம் செய்தது.

[4] Twenty years later, in 2009, when Jayalalithaa referred to the DMK government as ‘the minority government’ — which is a political statement — Karunanidhi retorted by a personal attack on Jayalalithaa, calling her ‘thirumathi’ (meaning, Mrs.), implying that she was married to Sobhan Babu, and reprinting in the DMK’s official daily Murasoli (dated 19.08.2009)Jayalalithaa’s old interview to Kumudham weekly (in which she talked about her relationship with Sobhan Babu).

Rajanayagam, Popular Cinema and Politics in South India: The Films of MGR and Rajinikanth, Routledge, New Delhi, 2015, p……, fn.23.

தீயினால் சுட்ட வடு, உள்ளாரும் ஆறாதே நாவினால் சுட்ட வடு – யாகாவாராயிமும் நாகாக்க காவாக்கால் சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு – திராவிடத்துவத்தின் துவேச-தூஷணங்கள், வசைபாடல்கள் மற்றும் நிந்தனைகள்!

ஏப்ரல் 9, 2016

தீயினால் சுட்ட வடு, உள்ளாரும் ஆறாதே நாவினால் சுட்ட வடுயாகாவாராயிமும் நாகாக்க காவாக்கால் சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு திராவிடத்துவத்தின் துவேசதூஷணங்கள், வசைபாடல்கள் மற்றும் நிந்தனைகள்!

Karunanidhi - how he abused other leaders

வாய்பேச்சு தீவிரவாததால் வெறுப்புகாழ்ப்புதுவேசம் வளர்த்து பொருளாதாரத்தை சீர்குலைத்தது[1]: இந்திய-தேசிய விரோதக் கொள்கைகளினால், மற்ற மாநிலங்களில் உள்ளவர்கள் தமிழ்நாட்டு மக்களை வித்தியாசமாக நினைத்தார்கள். இந்தி பேசும் மக்கள், தமது மொழிக்கு விரோதமாக இப்படி செயல்படுகின்றனர் என்றும் என்று திகைத்தும் இருந்தார்கள். ஏனெனில், அவர்களுக்கு, இவர்கள் (தங்களை திராவிடர்கள் என்று சொல்லிக் கொல்பவர்கள் இந்தியை ஏன் வெறுக்கிறார்கள் என்று கூட தெரியாமல் இருந்தார்கள்).  இந்தியை எதிர்ப்போம் என்று இந்தி எதிர்ப்பு போராட்டங்கள் நடத்தினர், அதில் தீக்குளிப்பு, தீவைப்பு போன்ற வன்முறைகளும் நடந்தன. ரெயில் பயணிகள் அதிக அளவில் பாதிக்கப் பட்டனர். பிறகு, இந்தி எதிர்ப்பு போராட்டங்களில் கலந்து கொண்டவர்களை “மொழிப்போர் தியாகிகள்” என்று பட்டங்கள், பென்சன் எல்லாம் கொடுத்தனர். இவையெல்லாம் இந்தி பேசும் மக்களுக்கு வியப்பாக இருந்தது. இந்தியர்களாக இருந்து கொண்டு, ஒரு மொழியை எதிர்த்தால் எப்படி தியாகிகள் ஆவார்கள் என்று அவர்கள் கேட்கவும் செய்தனர். மற்ற மாநிலங்களில் தொழிற்சாலைகள் அதிகமாக வளர்ந்தன, ஆனால், தமிழகத்தில் தொழிற்சாலைகள்வைக்க இந்தி பேசும் அல்லது வடவிந்தியர்கள் தயங்கினர். டிவிஎஸ், அசோக் லேலேண்ட், ஈஸ்வரன் அண்ட் சன்ஸ், போன்ற பிராமணக் கம்பெனிகள் / தொழிற்சாலைகள் தவிர மற்றவையெல்லாம், 1990, 2000 ஆண்டுகளுக்குப் பிறகு வந்தவை என்று நோக்கத்தக்கது.

கரு-இந்திராவை வசை பாடியது- சர்வாதிகாரி, காந்தாரி.....

கருணாநிதி இந்திராகாந்தியை தூஷித்த விதம்: கருணாநிதி, இந்திராகாந்தியை மிகவும் மோசமாக திட்டியுள்ளார். உதாரணத்திற்கு சிலவற்றைப் பார்ப்போம்:

  1. முரசொலியில் இந்திராகாந்தியை ஹிட்லர் போல் “கார்ட்டூன்” … “கிராப் வெட்டிய காஷ்மீரத்து பாப்பாத்தி” என்று, ஜாதி …
  2. “இந்திராவே…காங்கிரஸ் என்ன உங்க அப்பன் வீட்டுச் சொத்தா…?” என்று, அகில இந்தியகாங்கிரஸ் தலைவரான இந்திராவை இழிவுபடுத்தினார்.
  3. “எருமையும், இரண்டு எருமைக் கன்றுகளும் தமிழகம் வருகின்றன…” என்று இந்திரா, ராஜீவ், சஞ்சய் காந்தி வருகையை வக்கணையாக வர்ணித்தார்.
  4. “விதவை இந்திரா விரும்பினால் விதவைகள் மறுமணத் திட்டத்தின்படி மறுமணம் செய்து, என்னிடம் இட்லிக் கொப்பறையும், தையல் மிஷினும் பெற்றுக்கொள்ளட்டும்” என்று, கருணாநிதி கூறியதை காங்கிரஸ் தலைவர்கள் அவ்வளவு சுலபமாக மறந்திருக்க மாட்டார்கள்.
  5. “…அவசரச் சட்டம் கொண்டு வந்த அடங்காப்பிடாரி, சதிகாரி, சண்டாளி, சர்வாதிகாரி, சூனியக்காரி, சூர்ப்பனகை, பூதகி, காந்தாரி, கவுதாரி, கூனி, விதவை…” என்று விஷத்தைக் கக்கினார் கருணாநிதி.
  6. மிசாக் கொடுமைக்காரி, சேலை கட்டிய ஹிட்லர், முசோலினி…” என்று, இந்திராவை இழிவுபடுத்தினார். முரசொலியில் இந்திராகாந்தியை ஹிட்லர் போல் “கார்ட்டூன்” போட்டார். “கிராப் வெட்டிய காஷ்மீரத்து பாப்பாத்தி” என்று, ஜாதி துவேஷத்தைத் தூண்டினார்.
  7. மதுரை வரும் பூதகி இந்திராவிற்கு கருப்புக்கொடி காட்டுவோம். டில்லிக்கு திரும்பிச் செல்லவிடக்கூடாது என்று கொக்கரித்து, கொலைவெறித் தாக்குதல் நடத்தினார் கருணாநிதி. கருணாநிதியின் காலிகளால் ரத்தக் காயம் பட்டு உயிரைப் பணயம் வைத்து இந்திரா காந்தியை அதிர்ஷ்டவசமாகக் காப்பாற்றினார் பழ.நெடுமாறன்.
  8. “…பழ.நெடுமாறன் மேல் பட்ட ரத்தம் மாதவிடாய் ரத்தம்” என்று, தமிழ்ப் பெண்கள் வெட்கித் தலைகுனிய பெண்மையை இழிவுபடுத்தினார் ரத்தக் கருணாநிதி.

கரு-காமராஜரை வசை பாடியது-ஜாண்டக்காக்கா, மரமேறி, கட்டப்பீடி

கருணாநிதியின் அர்ச்சனைக்கள் தொடர்கின்றன: கருணாநிதி, காந்தி முதல் ராஜாஜி வரை காங்கிரஸ் தலைவர்கள்; தமிழக கட்சித்தலைவர்கள் என்று ஒருவரையும் விட்டு வைக்காமல் கேவலமான, மோசமான, ஆபாசமான, வக்கிர வார்த்தைகளினால் வசைபாடித் திட்டியுள்ளார். உதாரணத்திற்கு சில கொடுக்கப்படுகின்றன.

  1. காந்தியை வசைப்பாடியது – கன்னிப் பெண்களின் தோள்களில் கைபோட்டு களிப்படைந்தவர் காந்தி.
  2. நேரு-பண்டாரநாயக சந்திப்பைக் கொச்சைப் படுத்தி பேசியது – நேருவோ மனைவியை இழந்தவர் சிறிமாவோ பண்டார நாயகாவோ கணவரை இழந்தவர், இவ்விருவரும் இரண்டு மணி நேரம் தனிமையில் என்ன பேசியிருப்பார்கள் உடன்பிறப்பே.
  3. இந்திரா காந்தியைத் திட்டிய வசை வார்த்தைகள்: சண்டாளி , சதிகாரி , சர்வாதிகாரி , ஹிட்லர், முசோலினி , பேய் , பிசாசு பூதகி என்று இந்திரா காந்தியைத் திட்டியது.
  4. காமராஜரைத் திட்டியது: அண்டங் காக்கா, காண்டாமிருகத் தோலர் , எருமைத் தோலர் , மரமேறி , பனை ஏறி , கட்டபீடி என காமராஜரை ஒருமையில் வசை பாடியது.
  5. எம்.ஜி.ஆரைத் திட்டிய விதம் – நடிகன், காத்தாடி, கிழவன், மலையாளி , அட்டைக் கத்தி, கோமாளி, ஊமையன், அலி என்றெல்லாம் எம்ஜியாரை வசை பாடியது.
  6. மூப்பனாரைக் கிண்டல் அடித்தது – காவிரி தென்பெண்ணை பாலாறு , மூப்பனார் மூளையில் கோளாறு என்று வசை பாடியது.
  7. பல தலைவர்களை ஏளனம் பேசியது – ஐஸ்ப்ரூட் சம்பத், வாழப்பாடி ஒரு வழிப்போக்கன், செவிடன் ஜீவானந்தன், நொண்டி பா. ராமமூர்த்தி, கக்கன் என்ன கொக்கா? என்றெல்லாம் பேசியது.
  8. ராஜாஜி முதலிய காங்கிரஸ் தலைவர்களைக் கேவலமாகத்திட்டியது – குல்லுக பட்டர் ராஜகோபாலாச்சாரி, கைபர் கணவாய் வழியே வந்த வந்தேறி வெங்கட்ராமன், குரங்கன் பக்தவத்சலம், துரோகி பண்ருட்டி ராமச்சந்திரன், ஈனப் பிறவி இரா. செழியன், சீமான் வீட்டு கன்றுக் குட்டி சின்னப் பைய்யன், ஈ-எறும்பு, கொசு , தத்துப் போன ஓசி பணக்காரன் பா.சிதம்பரம் .
  9. பிஜேபி தலைவர்களை வசைபாடியது – பண்டாரம், பரதேசி, கமண்டலம், காவி உடை, ஆக்டோபஸ் ஜந்துக்கள், கூனை நிமிர்த்த முடியாத ஒட்டகங்கலான வாஜ்பாய்கள் அத்வானிகள், இல. கணேசன்கள்
  10. சோனியாவை வெள்லைக்காரி என்றது – ராஜீவ் போல நான் ஒன்றும் வெளின்னாட்டுக்காரியை கல்யாணம் செய்துக் கொள்ளவில்லை என்று சோனியாவை நிந்தித்தது.
  11. ஜெயலலிதாவை கீழ்த்தனமான வார்த்தைகள் உபயோகப்படுத்தித் திட்டியது – காந்தாரி, கவுதாரி, சூர்பனகை, காதறுந்த காலி, மூக்கறுந்த மூளி பால்கனி பாவை, தனியே பேசலாம் வா உனக்கு சேதாரம் எதுவும் ஏற்படாது, என்றெல்லாம் ஜெயலலிதாவை வசைபாடி இழிவுப்படுத்தியது.
  12. வைகோவை வாரி விட்டு திட்டிய விதம் – துரு பிடித்த வாள், குளத்தை விட்டு ஓடிய மீன், கலிங்கப் பட்டி களிமண் என்று வைகோவைத் திட்டியது.
  13. ராம்தாஸ், இளங்கோவனைத் திட்டியது – தடித்த நாக்கர் இராமதாஸ், இறுமாப்பு இளங்கோவன் என்றெல்லாம் ஒருமையில் வசை பாடியது.

கரு-எம்ஜியாரை வசை பாடியது- கிழவன், கூத்தாடி

தீயினால் சுட்ட வடு, உள்ளாரும் ஆறாதே நாவினால் சுட்ட வடுயாகாவாராயிமும் நாகாக்க காவாக்கால் சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு: திருவள்ளுவர் சொன்னதையெல்லாம், இவர்களுக்கு சொல்லிக் காட்ட வேண்டிய அவசியம் இல்லை. ஏனெனில், இவகள் எல்லாவற்றையும் கரைத்துக் குடித்தவர்கள். தமிழின் உயிர், உயிரின் வேர், வேரின் மூலம், மூலத்தின் ஆதாரம், ஆதாரத்தின் ஆரம்பன்…….என்றெல்லாம் இருந்து வருவதால், இவர்களுக்கு ஈடு-இணை யாரும் இல்லை. தமிழில் வசைபாட இவர்களுக்குத்தான் எல்லா உரிமைகளும் உள்ளன. மமதை அதிகமாகி விட்டால், திருவள்ளுவருக்கு தமிழே நான்தான் சொல்லிக் கொடுத்தேன் என்ற அளவுக்கும் போயிருக்கிறார்கள். இல்லை அவர்களையும் திட்டுகின்ற உரிமைகளைக் கொண்டிருந்தார்கள். அதனால் தான், ஈவேரா போன்றோர் அவர்களையு விட்டு வைக்கவில்லை. “இன்று தமிழ் உலகில் தமிழ்ப்புலவர்களில் இரண்டு மூன்று புலவர்களின் பெயர்கள் அடிபடுகின்றன. அவர்கள் 1. தொல்காப்பியன், 2. திருவள்ளுவன், 3. கம்பன். இம்மூவரில்,

  1. தொல்காப்பியன் ஆரியக்கூலி, ஆரிய தர்மத்தையே தமிழ் இலக்கணமாக செய்துவிட்ட மாபெரும் துரோகி.
  2. திருவள்ளுவன் அக்காலத்திற்கு ஏற்ற வகையில் ஆரியக் கருத்துக்கு ஆதரவு கொடுக்கும் அளவில் பகுத்தறிவைப் பற்றி கவலைப்படாமல் நீதி கூறும் முறையில் தனது மத உணர்ச்சியோடு ஏதோ கூறிச்சென்றான்.
  3. கம்பன் இன்றைய அரசியல்வாதிகள் – தேசபக்தர்கள் பலர்போல் அவர் படித்த தமிழ் அறிவை தமிழர் எதிரியாகிய பார்ப்பனருக்கு ஆதரவாய் பயன்படுத்தித் தமிழரை இழிவுப்படுத்தி கூலிவாங்கி பிழைக்கும் மாபெரும் தமிழ்த் துரோகியே ஆவான். முழுப்பொய்யன். முழுப்பித்தலாட்டக்காரன். தன்னைப் பார்ப்பானாகவே கருதிக்கொண்டு பார்ப்பான் கூட சொல்லப்பயப்படும் கருத்துக்களை எல்லாம் கூறி தமிழர்களை நிரந்தர கீழ்மக்களாக்கிவிட்ட துரோகியாவான். இம்மூவர்களும் ஜாதியையும், ஜாதித் தொழிலையும் ஏற்றுக்கொண்டவர்கள் ஆவார்கள்”.

இப்படி சர்வாதிகாரத் தோரணையும் எல்லோரையும் திட்டித் தீர்க்கும் போக்கை உண்டாக்கியப் பிறகு, அவரைப் பின்பற்றி வருபவர்களிடம் நாகரிகம், மரியாதை, முதலியவற்றை எதிர்பார்க்க முடியுமா?

Arya-Dravidian war, battle continue - Anna-Karu-

[1] https://dravidianatheism2.wordpress.com/2012/03/07/karunanidhi-grinds-anti-brahmin-bogey-again/

வசைபாடி மன்னிப்புக் கேட்கும் திராவிடத்துவத்தின் மகத்துவம் என்ன – மன்னிப்பினால் துவேச-தூஷணங்களின் தாக்குதல் அடங்குமா, மறையுமா, குறையுமா?

ஏப்ரல் 9, 2016

வசைபாடி மன்னிப்புக் கேட்கும் திராவிடத்துவத்தின் மகத்துவம் என்ன – மன்னிப்பினால் துவேச-தூஷணங்களின் தாக்குதல் அடங்குமா, மறையுமா, குறையுமா?

கரு முஸ்லிம் லீக், குழுக்களுடன்

திராவிட கட்சி பேரங்களில் ஈடுபட்ட முஸ்லிம்கள்:. “நேற்று (ஏப்.6) மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமை அலுவலகமான தாயகத்தில் செய்தியாளர்கலை சந்தித்தபோது, தேசிய முற்போக்கு திராவிட கழகத்தில் ஏற்பட்டுள்ள நிலைமை குறித்து விளக்கம் அளித்தேன். அக்கட்சியின் மூன்று சட்டமன்ற உறுப்பினர்களும், சில மாவட்டச் செயலாளர்களும் அக்கட்சித் தலைமை சட்டமன்ற தேர்தல் குறித்து மார்ச் 23ஆம் தேதியன்று எடுத்த முடிவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, தலைமையைக் கடுமையாக விமர்சித்து பத்திரிகையாளர்களைச் சந்தித்துக் கூறிய கருத்துகளுக்குப் பதில் சொல்லும் விதத்தில் சில விளக்கங்கள் அளித்தேன். தேசிய முற்போக்கு திராவிட கழகத்தினரை தலைமைக்கு எதிராக அறிக்கை விடச் செய்ய திராவிட முன்னேற்றக் கழகம் கோடிக்கணக்கில் பணத்தைக் கொடுத்து, வலை வீசுகிரார்கள், அதற்குச் சாட்சியமாக திருநெல்வேலி மாவட்டத்தில் தேமுதிக நெல்லை மாநகர் மாவட்டச் செயலாளர் முகமது அலி என்பவரை அக்கட்சித் தலைமைக்கு எதிராக அழைத்து வந்தால் அவருக்கு 3 கோடியும், அழைத்து வருபவருக்கு 50 லட்ச ரூபாயும் தருவதாக, கோல்டன் கான் என்ற இஸ்லாமிய நண்பரிடம், தேனியைச் சேர்ந்த நஜ்முதீன் பேசி இருக்கிறார் என்ற தகவலைச் சொன்னேன்[1]. வைகோ அறிக்கை தொடர்கிறது.

கரு-இந்திராவை வசை பாடியது- மாத விடாய்நான் வணங்கும் தெய்வமான என் அன்னை மாரியம்மாள் மீது ஆணையிட்டுக் கூறுகிறேன்: “பணம் வாங்கிக் கொண்டு கட்சி மாறுவது இழிவானது என்று கூறியபோது, இது உலகத்தின் ஆதித்தொழிலைப் போன்றது என்று கூறினேன். ஆனால், அண்ணன் டாக்டர் கலைஞர் அவர்களைக் குறித்தோ, அவரது குடும்பத்தினர் குறித்தோ, மறைமுகமாக இப்படிச் சொல்ல வேண்டும் என்று இம்மி அளவும் என் மனதில் எண்ணம் இல்லை என்பதை, நான் வணங்கும் தெய்வமான என் அன்னை மாரியம்மாள் மீது ஆணையிட்டுக் கூறுகிறேன். ஆனால், அதன்பின் நாதஸ்வரம் வாசிக்கும் அகலை அவருக்குத் தெரியும் என்று கூறியது, தவறாகப் பொருள் கொள்ளும்படி ஆகி விட்டது. அது மிகப்பெரிய தவறுதான், அண்ணன் கலைஞர் அவர்களைச் சாதியைக் குறித்து நான் இப்படிச் சொன்னதாகப் பழிப்பதற்கும் நான் ஆளாகி விட்டதை எண்ணி வேதனைப்படுகிறேன். நான் சாதிய உணர்வுகளுக்கு முற்றிலும் அப்பாற்பட்டவன், அதை அண்ணன் கலைகர் அவர்களே அறிவார்கள்.” வைகோ அறிக்கை தொடர்கிறது.

வைகோ 1978ல் பேசும் படம் - திருமலை நாயக்கர் விழா

என் உயிர் பிரியும் வரை உங்களுக்கு நான் கும்பகர்ணனாகவே இருப்பேன்:  “அண்ணன் கலைஞர் அவர்களை 30 ஆண்டுகளாக என் நெஞ்சில் வைத்துப் போற்றியவன் நான். அவர் மீது துரும்பு படுவதர்கும் சகிக்காதவனாக, அவருக்கு ஒரு கேடு என்றால் அதைத் தடுக்க என் உயிரையும் தத்தம் செய்யச் சித்தமாக இருந்தவன் நான். அதனால் தான் 1993 அக்டோபர் 3 இல் என் மீது கொலைப்பழி சுமத்தப்பட்டபோது, என் உயிர் பிரியும் வரை உங்களுக்கு நான் கும்பகர்ணனாகவே இருப்பேன் என்று அறிக்கை விட்டேன். ஆனால், உலகின் ஆதித் தொழில் என்று கலைஞர் குடும்பத்தைக் குறிப்பிட்டு நான் கூறியதாகக் கருதுவதற்கு ஒரு இடம் ஏற்பட்டு விட்டதே என்பதை நினைக்கும்போது என் மேனி முழுவதும் நடுக்கமுற்றது என்பதை என் அருகில் இருந்தவர்கள் அறிவார்கள். இப்படி நான் கூறியது என் வாழ்நாளில் செய்த ஒரு குற்றமாகவே கருதுகிறேன். அதற்கு மன்னிப்பும் கேட்டுக் கொள்கிறேன். அண்ணன் கலைஞர் அவர்கள் தாயுள்ளத்தோடு என் விளக்கத்தை ஏற்றுக் கொள்ள வேண்டுகிறேன், ”  இவ்வாறு அறிக்கையில் வைகோ தெரிவித்துள்ளார்.  வாழ்நாளில் செய்த ஒரு குற்றமாகவே கருதுகிறேன்[2]. அதற்கு மன்னிப்பும் கேட்டுக் கொள்கின்றேன். என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்[3].

Anti-Hindu Karunanidhiதிராவிடத் தலைவர்களின் பரஸ்பர வசைபாடுகள்: 1960களிலிருந்தே, பொதுவாக திராவிட சித்தாந்திகள், மேடை பேச்சாளிகள், அரசியல்வாதிகள், முதலியோர் ஆபாசமாக, கொச்சையாக, கேவலமாக, இரட்டை அர்த்தம் தொணிக்க பேசுவது எல்லாம் சகஜமாக இருந்தது. இப்பொழுது, ஊடகங்கள் மூலம் அவை பரவி வருவதால், இக்காலத்தவர், அடடா என்ன பெரியார், அண்ணா, கருணாநிதி …… முதலியோர் இப்படியா பேசினர் என்று திகைக்கின்றனர். இதனால், அவர்களைப் பற்றிய கருத்துகளும் இளைஞர்களிடையே மாறி வருகின்றன. உதாரணத்திற்கு சிலவற்றைப் பார்ப்போம்[4]:

  1. கருணாநிதி ‘காமராஜரின் தாய் கருவாடு விற்றவர்’ என்று சொன்ன போது கண்ணதாசன் தாக்குதல் மிகக்கடுமையாக இருந்தது. “என் தலைவனின் தாய் கருவாடு மட்டும் தான் விற்றார்” [அப்படியென்றால், வேறென்னதை விற்றார் என்ற கேள்வி எழுகிறது அல்லவா?].
  2. கண்ணதாசன் இறந்த போது கருணாநிதி இரங்கல், “தென்றலாய் வீசியவனும் நீ! நெருப்பாய் சுட்டவனும் நீ! தாக்குகின்ற கணை எத்தனை நீ தொடுத்த போதும் அத்தனையும் தாங்கும் என் நெஞ்சே உன் அன்னை!”  [அதாவது கருணாநிதி, பதிலுக்கு, உங்கம்மாதான் அப்படி செய்வாள் என்பது போல சாவு-இரங்களிலும் மறக்காமல் வசைப்பாடி பழித்தீர்த்துக் கொண்டுள்ளார்]
  3. எம்.ஜி.ஆர் புதுகட்சி ஆரம்பித்த போது கருணா நிதியின் எள்ளல் அன்று – எம்.ஜி.ஆர், “கூத்தாடி”, அதிமுக “நடிகர் கட்சி!” தன் மீதான “கூத்தாடி” …..என்றெல்லாம் பேசினார் [ஆனால், அண்ணா, முதலியோர் நாடகம்-சினிமா துறைகளில் நடிகனாக, எழுத்தாளராக…….வேலைப் பார்த்து பணம் சம்பாதித்தை மறந்து-மறைத்து வசைப்பாடியது].
  4. இதனால், அத்தகைய விமர்சனத்திற்கும், அதிமுக – ’நடிகர் கட்சி’ எள்ளலுக்கும் எம்.ஜி.ஆர் ஒரு கட்டத்தில் பொறுமையிழந்து சொன்னார், “கருணாநிதி தாசி பரம்பரை” என்றார் [என்ன செய்வது, பொறுமைக்கும் ஒரு இல்லையுண்டல்லவா, பொதுவாக எம்ஜியார் அப்படியெல்லாம் பேச மாட்டார். ஆனால், தூண்டப்பட்டார்].
  5. எம்.ஜி.ஆர் மறைந்த போது கருணாநிதி புகழாரம், “சொல்வாக்கும் செல்வாக்கும் மிகுந்த முதலமைச்சர்!” [அதாவது கருணாநிதி, பதிலுக்கு, “சொல்வாக்கு” என்று குறிப்பிட்டு சாவு-இரங்களிலும் மறக்காமல் வசைப்பாடி பழித்தீர்த்துக் கொண்டுள்ளார்]

அதாவது, தொடர்ச்சியாக ஒருவரை மோசமாக விமர்சித்துக் கொண்டே இருந்தால், ஒருநிலையில், யாரும் பொறுமை இழக்க நேரிடும் என்பதற்காக இது எடுத்துக் காட்டப் படுகிறது. மேலும், பெரியார், அண்ணா, கருணாநிதி ……போன்றோர் இவாறெல்லாம் பேச வேண்டிய அவசியம் என்ன என்பதும் நோக்கத்தக்கது.

பார்ப்பன கூட்டம் நடுங்க வேண்டும் - 23-02-2012

பிராமண எதிர்ப்பு விளைவுகள்யாரோஅனோனிமஸ்” என்று பதிவாகியுள்ளது[5]: தமிழகத்தில் பிராமணர்கள் தொடர்ந்து தாக்கப்பட்டு வருவதை யாரும் பதிவி செய்து வைக்கவில்லை என்றே தெரிகிறது. பெரியாரிலிருந்து, இன்று கருணாநிதி வரை “பார்ப்பன எதிர்ப்பு”, “பார்ப்பனீய எதிர்ப்பு”, “ஆரியர் துவேசம்” போன்ற போர்வைகளில் பிராமணர்கள் பலவிதங்களில் பலவித தாக்குதல்களுக்கு உட்படுத்தப் பட்டு வருகிறார்கள். உதாரணத்திற்கு, பிராமணர்கள் தாக்கப்படுவது குறித்து ஒருவர் பதிவு செய்துள்ளதை இங்கு குறிப்பிடுகிறேன். “புத்தூர் அக்ரஹாரத்திலும், ஸ்ரீரங்கத்திலும் இன்னும் நூற்றுக்கணக்கான அக்ரஹாரங்களிலும் பிராமணர்கள் ஒவ்வொரு முறையும் தி மு க வெற்றி பெறும் பொழுது தாக்கப் பட்டே வருகிறார்கள். உடம்பு பூராவும் ரத்தக் காயங்களுடன் கொலை வெறி பிடித்த தி மு க வினரால் தாக்கப் பட்டு உயிர் தப்பி வீடு வந்த என் தந்தையை சிறு வயதில் நான் கண்டு அடைந்த நடுக்கம் இன்று வரை போகவில்லை. தமிழ் நாட்டு பிராமணர்கள் மனதில் ஹிட்லர் காலத்தில் ஜெர்மனியில் வாழ்ந்த யூதர்களிடம் இருந்த அதே அச்சம் நிலவி வருகிறது என்பதே உண்மை நிலை. இன்று கருணாநிதி முரசொலியில் ஜெயலலிதாவை எத்தனை முறை கடும் வெறியுடன் பாப்பாத்தி என்று எழுதியிருக்கிறார் என்பதைப் படித்தீர்களா? அதைக் கண்டித்து ஒரு கட்டுரை எழுதும் நேர்மை உங்களுக்கு உண்டா? அதைப் படிக்கும் ஒவ்வொரு பிராமணன் மனதிலும் அச்ச உணர்வு ஏற்படுவதில்லை என்று எப்படிக் கூசாமல் எழுத முடிகிறது?” “கருணாநிதியின் பிராமண துவேஷம் ஏன்?’ என்ற கட்டுரையில் அப்பின்னணியை விவரித்துள்ளேன்[6]. சென்ற தேர்தலுக்குப் பிறகு, திராவிட இயக்க நூற்றாண்டு துவக்க விழா நேரத்தில், கருணாநிதி ஜெயலலிதாவைத் தாக்குவது போல, பிரமணர்களின் மீது அவதூறாக, வன்முறையைத் தூண்டும் விதத்தில் பேசியது ஞாபகத்தில் கொள்ளலாம்[7]. பொய்களை வைத்து, தனக்கேயுரிய பேச்சை தமிழர்கள் நினைவு கொள்ள வேண்டும்[8].

 Jayalalitha running out of TN Assembly on March 25 1989.2

© வேதபிரகாஷ்

09-04-2016

[1] முஸ்லிம்கள் பணம் கொடுக்க வருவது, எதிர்-எதிராகத் தூண்டி விடுவது, முதலிய விவகாரங்கள் என்ன என்பதையும் ஊடகங்கள் விளக்கவில்லை.

[2] தமிழ்.ஒன்.இந்தியா, இது என் வாழ்நாள் குற்றம்: கருணாநிதி குறித்து ஜாதிரீதியான விமர்சனத்துக்கு மன்னிப்பு கேட்ட வைகோ!, By: Karthikeyan, Updated: Thursday, April 7, 2016, 10:52 [IST].

[3] http://tamil.oneindia.com/news/tamilnadu/vaiko-apology-the-speech-about-karunanidhi-250651.html

[4] திராவிட அரசியல் பாரம்பரியத்தில் இப்படி தலைவர்கள் பரஸ்பர வசைப்பாடல், திட்டுகள், தூஷணங்கள் முதலியவற்றில் ஈடுப்பட்டுள்ளது, ஈடுபட்டு வருவது, அவர்களுக்கேயுரிய நாகரிகத்தைக் காட்டுகிறது.

[5]  வேதனையுடன் ச. திருமலை – Wed Nov 05, 12:00:00 AM GMT+5:30;

http://www.badriseshadri.in/2008/11/blog-post_04.html

[6]https://dravidianatheism2.wordpress.com/2010/01/17/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A3-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5/

[7] https://dravidianatheism2.wordpress.com/2012/03/07/karunanidhi-grinds-anti-brahmin-bogey-again/

[8] https://dravidianatheism2.wordpress.com/2012/02/24/564-karunanidhi-spewing-old-hypothesis-enjoying-his-leisure/

திராவிடத் தலைவர்களின் அநாகரிகமான திட்டுகள், ஆபாசமான நிந்தனைகள் மற்றும் மோசமான வசைப்பாடல்கள் ஏன்?

ஏப்ரல் 9, 2016

திராவிடத் தலைவர்களின் அநாகரிகமான திட்டுகள், ஆபாசமான நிந்தனைகள் மற்றும் மோசமான வசைப்பாடல்கள் ஏன்?

கருவை வணங்க்கும் வைகோகருணாதியை வைகோ ன்ன சொல்லி வசை பாடினார்?: தேமுதிக-வில் இருந்து அக்கட்சி நிர்வாகிகளும், எம்.எல்.ஏ களும் வெளியேறுவதற்கு காரணம் திமுக தான் என்று குற்றம் சாட்டிய மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, இந்த செயலை செய்யும் திமுக, வேறு ஏதாவது ஒரு தொழிலை செய்யலாம், என்றும் அது எந்த தொழில் என்று நான் சொன்னால், என் மீது ஊடகங்கள் என்னை விமர்சிக்கும், அந்த தொழில் ஆதி காலத்தில் இருந்து இருக்கிறது. அந்த தொழிலுக்கு அரசு அனுமதி தர வேண்டும், என்றும் தற்போது வலியுறுத்தி வருகிறார்கள், அப்படிப்பட்ட தொழிலை கருணாநிதியும், தேமுதிக-வுக்கு எதிராக போர்கொடி உயர்த்தியுள்ள சந்திரகுமாரும் செய்யலாம், என்று பேசிய வைகோ, இறுதியில் கருணாநிதியின் குடும்ப தொழில் நாதஸ்வரம், அதைகூட அவர் செய்யலாம், என்று சொன்னார்[1].”கலைஞர் நல்லா ஊதுவார்” என்று முன்பு ஒருமுறை பேசினார் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன். இப்போது வைகோவும் அதே பொருளில் பேசியுள்ளார். வேறு தொழில் செய்யலாமே என்று கேட்டுவிடலாம்………உலகம் பூராக பிரசித்தி பெற்ற ஆதிமனிதன் காலம் இருக்கிற / தொட்டு செய்து வந்த தொழில். அட்டப்பூர்வமாக்க வேண்டும் என்று பிரதமரிடம் கேட்டு வருகிற்ர்ரகள். அந்த தொழிலை இவர் செய்யலாம். கலைஞரும் செய்யலம், இவங்களும் செய்யலாம்,…..என்றெல்லாம் வீடியோவில் பதிவாகியுள்ளது[2].

வைகோ, கரு, நாதஸ்வரம் 2016 வசைபாடல்கருணாநிதி குறித்து ஜாதி ரீதியாக அப்படி என்னதான் பேசினார் வைகோ[3]: தமிழ்.ஒன்.இந்தியா வைகோ பேசியதை இவ்வாறு வெளியிட்டுள்ளது, “தேமுதிகவின் சந்திரகுமார் செய்தது பச்சைதுரோகம்இதைவிட நீ பாலில் விஷத்தைக் கொடுத்துவிஜயகாந்துக்கு விஷத்தைக் கொடுத்திருக்கலாம்சோத்துல விஷத்தைப் போட்டிருக்கலாம்.. போடுவீங்க நீங்கஇந்த மாதிரி ஆளுகநாங்க நம்புறவனுக்காக தலையை கொடுப்போம்நம்புறவனுக்காக உயிரை கொடுப்போம்இந்த மாதிரியான கீழ்த்தரமான ஈனத்தனமான வேலை…. இதை ரொம்ப கடுமையான வார்த்தையில் சொல்லனும்னா வேற ஒரு தொழில் இருக்கு.. அந்த தொழிலை செய்யலாம்னு சொல்லலாம்எம் மேல ரொம்ப பிரியமான டிவிகள் 2,3 டிவி இங்கே இருக்குஅவங்க இதை எடுத்துப் போட்டு உலகம் பூராவும் என்னை டேமேஜ் பண்ணிடுவாங்கபயப்பட வேண்டியிருக்கு உங்களுக்குநான் இதைவிட இன்னொரு தொழில் பண்ணலாமேன்னு கேட்டுறலாம்..அது என்ன தொழில்னு சொல்றாங்க.. தறி நெசவா இருக்கும்உழுவதா இருக்கும்உழவு செய்யறதா இருக்கும்பிசினஸ் பண்றதா இருக்கும்வேற ஒரு தொழில்உலகம் பூராவும் பிரசித்தி பெற்று ஆதி மனிதன் காலத்தில் இருக்கிற ஒரு தொழில்அதை சட்டப்பூர்வமாக்க வேண்டும் என்று பல பேர் கேட்டு கொண்டிருக்கிறார்கள்…. அந்த தொழிலை செய்யலாம் இவங்ககலைஞரும் செய்யலாம்.. இவங்களும் செய்யலாம்…. நாநான் ஒன்னும் தப்பா சொல்லலைங்கஅவரு நாதஸ்வரம் வாசிக்கக் கூடிய தொழிலும் தெரியும்அதனால சொன்னேன்ஒன்னும் இழிவா சொல்லலைஉலகத்தின் தலைசிறந்த இசை தமிழிசை. அதுக்குதான் உயர்வா சொல்றேன் அண்ணன் கலைஞரை….”,  இவ்வாறு வைகோ கூறியிருந்தார்[4].

February 26, 1973- CM. Karunanidhi presents the budget for the year 1973-74

February 26, 1973- CM. Karunanidhi presents the budget for the year 1973-74

உலகம் பூராவும் பிரசித்தி பெற்று ஆதி மனிதன் காலத்தில் இருக்கிற ஒரு தொழில்அதை சட்டப்பூர்வமாக்க வேண்டும் என்று பல பேர் கேட்டு கொண்டிருக்கிறார்கள்….: “தொழில்” என்பது இங்கு குறிப்பிட்டுள்ளதை “நாதஸ்வரம் ஊதும் தொழில்” என்று மாற்றி விளக்கம் அளித்துள்ளது, ஊடகங்களில் ஏமாற்று வேலையே எனலாம். ஏனெனில்,

  1. நாதஸ்வரம் ஊதுவது, வைகோ சொன்னது போல, “உலகம் பூராவும் பிரசித்தி பெற்று ஆதி மனிதன் காலத்தில் இருக்கிற ஒரு தொழில்” அல்ல.
  2. அதை சட்டப்பூர்வமாக்க வேண்டும் என்று பல பேர் கேட்டு கொண்டிருக்கிறார்கள்….” – அம்மாதிரி நாதஸ்வரம் ஊதுவதை சட்டப்பூர்வமாக்க வேண்டும் என்று பல பேர் கேட்டு கொண்டிருக்கிறார்கள்….என்பது அபத்தமானது.
  3. “அந்த தொழிலை செய்யலாம் இவங்ககலைஞரும் செய்யலாம்.. இவங்களும் செய்யலாம்…. நாநான் ஒன்னும் தப்பா சொல்லலைங்க…” – என்றது தேவதாசித் தொழிலை, விபச்சாரத்தைத் தான் குறிப்பிடுகிறார் என்பது தெரிகிறது. [இப்பொழுது அறிக்கையிலும் அதையே கூறியிருப்பது நோக்கத்தக்கது – “பணம் வாங்கிக் கொண்டு கட்சி மாறுவது இழிவானது என்று கூறியபோது, இது உலகத்தின் ஆதித்தொழிலைப் போன்றது என்று கூறினேன்.” பணத்தை வாங்கிக் கொண்டு ஆளை மாற்றுவது……அதுக்கும் பொருந்தும்]
  4. அவரு நாதஸ்வரம் வாசிக்கக் கூடிய தொழிலும் தெரியும்அதனால சொன்னேன்…” – அதாவது நக்கலாக சேர்த்து சொன்னது, அதாவது, அதுவும் தெரியும், இதுவும் தெரியும் என்கிறார்.
  5. “ஒன்னும் இழிவா சொல்லலைஉலகத்தின் தலைசிறந்த இசை தமிழிசை. அதுக்குதான் உயர்வா சொல்றேன் அண்ணன் கலைஞரை…” – பிறகு மாற்றி சமாளிக்கிறார்.
  6. “பச்சைதுரோகம்இதைவிட நீ பாலில் விஷத்தைக் கொடுத்துவிஜயகாந்துக்கு விஷத்தைக் கொடுத்திருக்கலாம்சோத்துல விஷத்தைப் போட்டிருக்கலாம்.. போடுவீங்க நீங்கஇந்த மாதிரி ஆளுக…” – என்று ஆரம்பித்து முடித்து வ்தத்தைக் கவனிக்கத்தக்கது.
  7. “நாங்க நம்புறவனுக்காக தலையை கொடுப்போம்நம்புறவனுக்காக உயிரை கொடுப்போம்…” – நம்பிக்கை துரோகம்.
  8. “இந்த மாதிரியான கீழ்த்தரமான ஈனத்தனமான வேலை….” – துரோகம், பச்சைதுரோகம், விஷம் கலப்பது என்று கடைசியாக விசயத்திற்கு வருவது.
  9. “இதை ரொம்ப கடுமையான வார்த்தையில் சொல்லனும்னா வேற ஒரு தொழில் இருக்கு.. அந்த தொழிலை செய்யலாம்னு சொல்லலாம்…”, – என்றுதான் முடித்திருக்கிறார்.
  10. பிறகு தான் சமாளிக்கும் வகையில், “அவரு நாதஸ்வரம் வாசிக்கக் கூடிய தொழிலும் தெரியும்அதனால சொன்னேன்ஒன்னும் இழிவா சொல்லலைஉலகத்தின் தலைசிறந்த இசை தமிழிசை. அதுக்குதான் உயர்வா சொல்றேன் அண்ணன் கலைஞரை…..” என்று முடித்திருக்கிறார்.

ஆகவே “ஜாதி”யைப் பற்றி சொன்னாரா, “குலத்தை”ப்பற்றி சொன்னாரா, “குலத்தொழிலை”ப்பற்றி சொன்னாரா என்பதை படித்தேத் தெரிந்து கொள்ளலாம்[5]. திராவிட கலாச்சாரத்தின் பேச்சுத் தொழில் இவ்வாறுதான் இருக்கிறது. 1960களில் இருந்தது, இப்பொழுதும் உள்ளது.

வைகோ, கரு, நாதஸ்வரம் 2016 கொடும்பாவி எரிப்புவைகோவுக்கு கிளம்பிய எதிர்ப்பு: தேர்தல் நேரத்தில், கட்சிகள் பிளவு பட்டு, கூட்டணிக் குழப்பங்களில் சிக்கியுள்ள நிலையில், எத்தலைவருக்கும், இத்தகைய உணர்ச்சிப்பூவமான பிரச்சினையை எதிர்கொள்ள விருப்பமில்லை. மேலும், தேர்தல் நேரத்தில் புகார்கள், வழக்குகள் என்று சிக்கிக்கொள்ள விருப்பமில்லை. இதையடுத்து, கருணாநிதியை தரக்குறைவாக பேசிய வைகோவுக்கு கண்டனம் தெரிவித்து, மு.க.அழகிரி ஆதரவாளர்கள், தமிழகம் முழுவதும் வைகோவின் உருவபொம்மையை எரித்தனர். ஸ்டாலின் ஆதரவாளர்கள் ஏன் எரிக்கவில்லை என்று ஊடகங்கள் நினைத்துப் பார்க்கவில்லை. தி.மு.க.வினர் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து[6] தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் திரண்டு தி.மு.க.வினர் வைகோ உருவ பொம்மையை நூற்றுக்கும் மேலான இடங்களில் எரித்து அவருக்கு எதிராக கோஷம் எழுப்பிவருகின்றனர்[7]. பல அரசியல் தலைவர்கள் வைகோவின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்தனர். இவர்களின் மீது வழக்குப் பதிவு என்று தொடர்கிறது[8]. மக்கள் நலக் கூட்டணி  தலைவர்கள் சிலர் கூட, வைகோவின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து பத்திரிகைகளுக்கு பேட்டிக்கொடுத்தனர். இந்த நிலையில், தரக்குறைவான தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவித்துள்ள வைகோ, திமுக தலைவர் மு.கருணாநிதியும் பகிரங்க மன்னிப்பு கேட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள மன்னிப்பு அறிக்கையில் கூறியிருப்பதாவது[9]:

© வேதபிரகாஷ்

09-04-2016

[1] தமிழ்.சென்னை.ஆன்லைன், கருணாநிதியின் ஜாதி குறித்து விமர்சனம் : பகிரங்க மன்னிப்பு கேட்டார் வைகோ, Published On : Apr 07, 2016.

[2] https://www.youtube.com/watch?v=q56ZR4pXjqA;  https://youtu.be/cFlukvDae5c?t=7

[3] தமிழ்.ஒன்.இந்தியா, கருணாநிதி குறித்து ஜாதி ரீதியாக அப்படி என்னதான் பேசினார் வைகோ?, By: Mathi, Updated: Thursday, April 7, 2016, 10:53 [IST]

[4] Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/vaiko-s-castiest-remark-on-karunanidhi-250668.html

[5] இவர்கள் தாம் அப்பொழுது, “ராஜாஜி குலத்தொழில் முறையை” ஆதரிக்கிறார் என்று எதிர்த்தவர்கள், அதனைக் கொச்சைப்படுத்திப் பேசியவர்கள், ராஜாஜியை வைது வசைப்பாடியவர்கள் என்பதனையும் ஞாபகத்தில் கொள்ளலாம்.

[6] http://www.maalaimalar.com/News/TopNews/2016/04/07114943/1003620/Vaiko-effigy-burning-in-TN-across.vpf

[7] மாலைமலர், தமிழகம் முழுவதும் 100 இடங்களில் வைகோ உருவபொம்மை எரிப்பு: தி.மு..வினர் 2–வது நாளாக போராட்டம், பதிவு: ஏப்ரல் 07, 2016 11:04

[8]http://www.dinamani.com/edition_vellore/thiruvannamalai/2016/04/09/%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8B-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE/article3371170.ece

[9] http://tamil.chennaionline.com/news/chennai/newsitem.aspx?NEWSID=52c7f082-09dd-444f-aeb0-7794cd2058d2&CATEGORYNAME=TCHN