தீயினால் சுட்ட வடு, உள்ளாரும் ஆறாதே நாவினால் சுட்ட வடு – யாகாவாராயிமும் நாகாக்க காவாக்கால் சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு – திராவிடத்துவத்தின் துவேச–தூஷணங்கள், வசைபாடல்கள் மற்றும் நிந்தனைகள்!
வாய்–பேச்சு தீவிரவாததால் வெறுப்பு–காழ்ப்பு–துவேசம் வளர்த்து பொருளாதாரத்தை சீர்குலைத்தது[1]: இந்திய-தேசிய விரோதக் கொள்கைகளினால், மற்ற மாநிலங்களில் உள்ளவர்கள் தமிழ்நாட்டு மக்களை வித்தியாசமாக நினைத்தார்கள். இந்தி பேசும் மக்கள், தமது மொழிக்கு விரோதமாக இப்படி செயல்படுகின்றனர் என்றும் என்று திகைத்தும் இருந்தார்கள். ஏனெனில், அவர்களுக்கு, இவர்கள் (தங்களை திராவிடர்கள் என்று சொல்லிக் கொல்பவர்கள் இந்தியை ஏன் வெறுக்கிறார்கள் என்று கூட தெரியாமல் இருந்தார்கள்). இந்தியை எதிர்ப்போம் என்று இந்தி எதிர்ப்பு போராட்டங்கள் நடத்தினர், அதில் தீக்குளிப்பு, தீவைப்பு போன்ற வன்முறைகளும் நடந்தன. ரெயில் பயணிகள் அதிக அளவில் பாதிக்கப் பட்டனர். பிறகு, இந்தி எதிர்ப்பு போராட்டங்களில் கலந்து கொண்டவர்களை “மொழிப்போர் தியாகிகள்” என்று பட்டங்கள், பென்சன் எல்லாம் கொடுத்தனர். இவையெல்லாம் இந்தி பேசும் மக்களுக்கு வியப்பாக இருந்தது. இந்தியர்களாக இருந்து கொண்டு, ஒரு மொழியை எதிர்த்தால் எப்படி தியாகிகள் ஆவார்கள் என்று அவர்கள் கேட்கவும் செய்தனர். மற்ற மாநிலங்களில் தொழிற்சாலைகள் அதிகமாக வளர்ந்தன, ஆனால், தமிழகத்தில் தொழிற்சாலைகள்வைக்க இந்தி பேசும் அல்லது வடவிந்தியர்கள் தயங்கினர். டிவிஎஸ், அசோக் லேலேண்ட், ஈஸ்வரன் அண்ட் சன்ஸ், போன்ற பிராமணக் கம்பெனிகள் / தொழிற்சாலைகள் தவிர மற்றவையெல்லாம், 1990, 2000 ஆண்டுகளுக்குப் பிறகு வந்தவை என்று நோக்கத்தக்கது.
கருணாநிதி இந்திராகாந்தியை தூஷித்த விதம்: கருணாநிதி, இந்திராகாந்தியை மிகவும் மோசமாக திட்டியுள்ளார். உதாரணத்திற்கு சிலவற்றைப் பார்ப்போம்:
- முரசொலியில் இந்திராகாந்தியை ஹிட்லர் போல் “கார்ட்டூன்” … “கிராப் வெட்டிய காஷ்மீரத்து பாப்பாத்தி” என்று, ஜாதி …
- “இந்திராவே…காங்கிரஸ் என்ன உங்க அப்பன் வீட்டுச் சொத்தா…?” என்று, அகில இந்தியகாங்கிரஸ் தலைவரான இந்திராவை இழிவுபடுத்தினார்.
- “எருமையும், இரண்டு எருமைக் கன்றுகளும் தமிழகம் வருகின்றன…” என்று இந்திரா, ராஜீவ், சஞ்சய் காந்தி வருகையை வக்கணையாக வர்ணித்தார்.
- “விதவை இந்திரா விரும்பினால் விதவைகள் மறுமணத் திட்டத்தின்படி மறுமணம் செய்து, என்னிடம் இட்லிக் கொப்பறையும், தையல் மிஷினும் பெற்றுக்கொள்ளட்டும்” என்று, கருணாநிதி கூறியதை காங்கிரஸ் தலைவர்கள் அவ்வளவு சுலபமாக மறந்திருக்க மாட்டார்கள்.
- “…அவசரச் சட்டம் கொண்டு வந்த அடங்காப்பிடாரி, சதிகாரி, சண்டாளி, சர்வாதிகாரி, சூனியக்காரி, சூர்ப்பனகை, பூதகி, காந்தாரி, கவுதாரி, கூனி, விதவை…” என்று விஷத்தைக் கக்கினார் கருணாநிதி.
- மிசாக் கொடுமைக்காரி, சேலை கட்டிய ஹிட்லர், முசோலினி…” என்று, இந்திராவை இழிவுபடுத்தினார். முரசொலியில் இந்திராகாந்தியை ஹிட்லர் போல் “கார்ட்டூன்” போட்டார். “கிராப் வெட்டிய காஷ்மீரத்து பாப்பாத்தி” என்று, ஜாதி துவேஷத்தைத் தூண்டினார்.
- மதுரை வரும் பூதகி இந்திராவிற்கு கருப்புக்கொடி காட்டுவோம். டில்லிக்கு திரும்பிச் செல்லவிடக்கூடாது என்று கொக்கரித்து, கொலைவெறித் தாக்குதல் நடத்தினார் கருணாநிதி. கருணாநிதியின் காலிகளால் ரத்தக் காயம் பட்டு உயிரைப் பணயம் வைத்து இந்திரா காந்தியை அதிர்ஷ்டவசமாகக் காப்பாற்றினார் பழ.நெடுமாறன்.
- “…பழ.நெடுமாறன் மேல் பட்ட ரத்தம் மாதவிடாய் ரத்தம்” என்று, தமிழ்ப் பெண்கள் வெட்கித் தலைகுனிய பெண்மையை இழிவுபடுத்தினார் ரத்தக் கருணாநிதி.
கருணாநிதியின் அர்ச்சனைக்கள் தொடர்கின்றன: கருணாநிதி, காந்தி முதல் ராஜாஜி வரை காங்கிரஸ் தலைவர்கள்; தமிழக கட்சித்தலைவர்கள் என்று ஒருவரையும் விட்டு வைக்காமல் கேவலமான, மோசமான, ஆபாசமான, வக்கிர வார்த்தைகளினால் வசைபாடித் திட்டியுள்ளார். உதாரணத்திற்கு சில கொடுக்கப்படுகின்றன.
- காந்தியை வசைப்பாடியது – கன்னிப் பெண்களின் தோள்களில் கைபோட்டு களிப்படைந்தவர் காந்தி.
- நேரு-பண்டாரநாயக சந்திப்பைக் கொச்சைப் படுத்தி பேசியது – நேருவோ மனைவியை இழந்தவர் சிறிமாவோ பண்டார நாயகாவோ கணவரை இழந்தவர், இவ்விருவரும் இரண்டு மணி நேரம் தனிமையில் என்ன பேசியிருப்பார்கள் உடன்பிறப்பே.
- இந்திரா காந்தியைத் திட்டிய வசை வார்த்தைகள்: சண்டாளி , சதிகாரி , சர்வாதிகாரி , ஹிட்லர், முசோலினி , பேய் , பிசாசு பூதகி என்று இந்திரா காந்தியைத் திட்டியது.
- காமராஜரைத் திட்டியது: அண்டங் காக்கா, காண்டாமிருகத் தோலர் , எருமைத் தோலர் , மரமேறி , பனை ஏறி , கட்டபீடி என காமராஜரை ஒருமையில் வசை பாடியது.
- எம்.ஜி.ஆரைத் திட்டிய விதம் – நடிகன், காத்தாடி, கிழவன், மலையாளி , அட்டைக் கத்தி, கோமாளி, ஊமையன், அலி என்றெல்லாம் எம்ஜியாரை வசை பாடியது.
- மூப்பனாரைக் கிண்டல் அடித்தது – காவிரி தென்பெண்ணை பாலாறு , மூப்பனார் மூளையில் கோளாறு என்று வசை பாடியது.
- பல தலைவர்களை ஏளனம் பேசியது – ஐஸ்ப்ரூட் சம்பத், வாழப்பாடி ஒரு வழிப்போக்கன், செவிடன் ஜீவானந்தன், நொண்டி பா. ராமமூர்த்தி, கக்கன் என்ன கொக்கா? என்றெல்லாம் பேசியது.
- ராஜாஜி முதலிய காங்கிரஸ் தலைவர்களைக் கேவலமாகத்திட்டியது – குல்லுக பட்டர் ராஜகோபாலாச்சாரி, கைபர் கணவாய் வழியே வந்த வந்தேறி வெங்கட்ராமன், குரங்கன் பக்தவத்சலம், துரோகி பண்ருட்டி ராமச்சந்திரன், ஈனப் பிறவி இரா. செழியன், சீமான் வீட்டு கன்றுக் குட்டி சின்னப் பைய்யன், ஈ-எறும்பு, கொசு , தத்துப் போன ஓசி பணக்காரன் பா.சிதம்பரம் .
- பிஜேபி தலைவர்களை வசைபாடியது – பண்டாரம், பரதேசி, கமண்டலம், காவி உடை, ஆக்டோபஸ் ஜந்துக்கள், கூனை நிமிர்த்த முடியாத ஒட்டகங்கலான வாஜ்பாய்கள் அத்வானிகள், இல. கணேசன்கள்
- சோனியாவை வெள்லைக்காரி என்றது – ராஜீவ் போல நான் ஒன்றும் வெளின்னாட்டுக்காரியை கல்யாணம் செய்துக் கொள்ளவில்லை என்று சோனியாவை நிந்தித்தது.
- ஜெயலலிதாவை கீழ்த்தனமான வார்த்தைகள் உபயோகப்படுத்தித் திட்டியது – காந்தாரி, கவுதாரி, சூர்பனகை, காதறுந்த காலி, மூக்கறுந்த மூளி பால்கனி பாவை, தனியே பேசலாம் வா உனக்கு சேதாரம் எதுவும் ஏற்படாது, என்றெல்லாம் ஜெயலலிதாவை வசைபாடி இழிவுப்படுத்தியது.
- வைகோவை வாரி விட்டு திட்டிய விதம் – துரு பிடித்த வாள், குளத்தை விட்டு ஓடிய மீன், கலிங்கப் பட்டி களிமண் என்று வைகோவைத் திட்டியது.
- ராம்தாஸ், இளங்கோவனைத் திட்டியது – தடித்த நாக்கர் இராமதாஸ், இறுமாப்பு இளங்கோவன் என்றெல்லாம் ஒருமையில் வசை பாடியது.
தீயினால் சுட்ட வடு, உள்ளாரும் ஆறாதே நாவினால் சுட்ட வடு – யாகாவாராயிமும் நாகாக்க காவாக்கால் சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு: திருவள்ளுவர் சொன்னதையெல்லாம், இவர்களுக்கு சொல்லிக் காட்ட வேண்டிய அவசியம் இல்லை. ஏனெனில், இவகள் எல்லாவற்றையும் கரைத்துக் குடித்தவர்கள். தமிழின் உயிர், உயிரின் வேர், வேரின் மூலம், மூலத்தின் ஆதாரம், ஆதாரத்தின் ஆரம்பன்…….என்றெல்லாம் இருந்து வருவதால், இவர்களுக்கு ஈடு-இணை யாரும் இல்லை. தமிழில் வசைபாட இவர்களுக்குத்தான் எல்லா உரிமைகளும் உள்ளன. மமதை அதிகமாகி விட்டால், திருவள்ளுவருக்கு தமிழே நான்தான் சொல்லிக் கொடுத்தேன் என்ற அளவுக்கும் போயிருக்கிறார்கள். இல்லை அவர்களையும் திட்டுகின்ற உரிமைகளைக் கொண்டிருந்தார்கள். அதனால் தான், ஈவேரா போன்றோர் அவர்களையு விட்டு வைக்கவில்லை. “இன்று தமிழ் உலகில் தமிழ்ப்புலவர்களில் இரண்டு மூன்று புலவர்களின் பெயர்கள் அடிபடுகின்றன. அவர்கள் 1. தொல்காப்பியன், 2. திருவள்ளுவன், 3. கம்பன். இம்மூவரில்,
- தொல்காப்பியன் ஆரியக்கூலி, ஆரிய தர்மத்தையே தமிழ் இலக்கணமாக செய்துவிட்ட மாபெரும் துரோகி.
- திருவள்ளுவன் அக்காலத்திற்கு ஏற்ற வகையில் ஆரியக் கருத்துக்கு ஆதரவு கொடுக்கும் அளவில் பகுத்தறிவைப் பற்றி கவலைப்படாமல் நீதி கூறும் முறையில் தனது மத உணர்ச்சியோடு ஏதோ கூறிச்சென்றான்.
- கம்பன் இன்றைய அரசியல்வாதிகள் – தேசபக்தர்கள் பலர்போல் அவர் படித்த தமிழ் அறிவை தமிழர் எதிரியாகிய பார்ப்பனருக்கு ஆதரவாய் பயன்படுத்தித் தமிழரை இழிவுப்படுத்தி கூலிவாங்கி பிழைக்கும் மாபெரும் தமிழ்த் துரோகியே ஆவான். முழுப்பொய்யன். முழுப்பித்தலாட்டக்காரன். தன்னைப் பார்ப்பானாகவே கருதிக்கொண்டு பார்ப்பான் கூட சொல்லப்பயப்படும் கருத்துக்களை எல்லாம் கூறி தமிழர்களை நிரந்தர கீழ்மக்களாக்கிவிட்ட துரோகியாவான். இம்மூவர்களும் ஜாதியையும், ஜாதித் தொழிலையும் ஏற்றுக்கொண்டவர்கள் ஆவார்கள்”.
இப்படி சர்வாதிகாரத் தோரணையும் எல்லோரையும் திட்டித் தீர்க்கும் போக்கை உண்டாக்கியப் பிறகு, அவரைப் பின்பற்றி வருபவர்களிடம் நாகரிகம், மரியாதை, முதலியவற்றை எதிர்பார்க்க முடியுமா?
[1] https://dravidianatheism2.wordpress.com/2012/03/07/karunanidhi-grinds-anti-brahmin-bogey-again/