Archive for the ‘காந்தி சிலை உடைப்பு’ Category

காந்தி சிலை உடைப்பு இங்கே, காந்தியின் பெயரில் மாவட்டம் அங்கே!

ஜனவரி 27, 2010

காந்தி சிலை உடைப்பு ஏன்?

தமிழகத்தில் தொடர்ந்து காந்தி சிலைகள் உடைக்கப் படுவது மிகவும் கேவலமக இருக்கிறது.

26-01-2010: சென்னை: சென்னை அருகே மகாதமா காந்தி சிலை தகர்த்து சேதப்படுத்தப்பட்ட செயலுக்கு காங்கிரஸ் தலைவர் தங்கபாலு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: தேசப்பிதா அண்ணல் மகாத்மா காந்திஜி திருவுருவச்சிலை திருவொற்றியூரில் நேற்று சேதப்படுத்தப்பட்டுள்ளது. இக்கொடியச் செயலுக்கு கடுமையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
குடியரசு கொண்டாட்ட நாளான நேற்று அதற்காகவே தன் உடல், பொருள், ஆவி அத்தனையும் தியாகம் செய்த தேசப்பிதாவின் திருவுருவச் சிலை மக்கள் நடமாட்டம் மிகுந்த அந்நகரின் காலடிப்பேட்டை மார்க்கெட் அருகிலேயே களங்கப்படுத்தப்பட்டுள்ளது. அதைக் கண்டதும் கொதித்தெழுந்த ஏராளமான காங்கிரஸ் சகோதர, சகோதரிகள் திருவொற்றியூர் நகர காங்கிரஸ் தலைவர் சுகுமார் தலைமையில் திரண்டனர். அண்ணலின் திருவுருவச் சிலையை ஊனப்படுத்திய சமூக விரோதிகளை உடனே கண்டுபிடித்து சிறையிலடைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தவாறு மறியலில் ஈடுபட்டனர்.  இதுவரை குற்றவாளிகளை கண்டுபிடிப்பதற்காக எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மனக் கொதிப்போடு பொறுமை காத்து வரும் காங்கிரஸ் சகோதர, சகோதரிகள் மத்தியில் அமைதியின்மை நிலவுகிறது. எனவே காவல்துறையினர் காலதாமதமின்றி தேசப்பிதாவின் திருவுருவச் சிலையை ஊனப்படுத்திய சமூக விரோதிகளை கண்டு பிடித்து தண்டிக்க வேண்டும்.  ஏற்கனவே இது போன்று தேசத் தலைவர்களின் திருவுருவப்படங்கள், சிலைகள் களங்கப்படுத்தப்பட்டு வந்துள்ளன. இனியும் தேச விரோதச் செயலுக்குரிய இக்குற்றம் தொடரா வண்ணம் காவல்துறை முன்னெச்சரிக்கை எடுக்க வேண்டுகிறேன் என்று கூறியுள்ளார்.

3-11-1957 அன்று தஞ்சையில் எடைக்குஎடைவெள்ளி நாணயம் வழங்கிய மாநாட்டில் பெரியார் ஈ.வெ.ரா. சொற்பொழிவு : (விடுதலை 8-11-1957): இதில் பெரியார் காந்தி சிலையை உடை என்று தூண்டியிருக்கிறார்.

ஓமலூரில் காந்தி சிலை உடைப்பு
மே 19,2009,00:00  IST

http://www.dinamalar.com/Incident_detail.asp?news_id=10210

Important incidents and happenings in and around the worldஓமலூர் : ஓமலூர் அருகே நள்ளிரவில் காந்தி சிலை உடைக்கப்பட்டதை கண்டித்து, காங்., கட்சியினர் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டதால் பதட்டம் ஏற்பட்டது.

சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த ஆர்.சி.செட்டிப்பட்டியில், 1974ல் அப்போதைய காங்கிரஸ் கமிட்டி சார்பில் 6 அடி உயரத்தில் பீடத்துடன் கூடிய காந்தி சிலை அமைக்கப்பட்டது. நேற்று முன்தினம் நள்ளிரவு மர்ம நபர்கள் சிலர், ஆர்.சி.செட்டிப்பட்டியில் அமைக்கப்பட்டிருந்த காந்தி சிலையை கற்களால் அடித்து, உடைத்து விட்டு, தப்பி ஓடி விட்டனர். நேற்று அதிகாலை இதைப் பார்த்த பொதுமக்கள், ஓமலூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். மீதி இருந்த காந்தி சிலையை போலீசார் மீட்டு ஓமலூர் போலீஸ் ஸ்டேஷனுக்கு எடுத்து செல்ல முயன்றனர்.

இதை அறிந்த காங்., கட்சியின் மாநில செயலர் சுசீந்திரகுமார் தலைமையில் 50க்கும் மேற்பட்ட காங்., கட்சியினர் ஆர்.சி.செட்டிப்பட்டி பகுதியில் குவிந்து காந்தி சிலையை உடைத்தவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று கோஷம் எழுப்பினர். பின், சேலம்- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் ஓமலூர் பை-பாஸ் ரோடு அருகே திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பதட்டம் ஏற்பட்டது. போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். ஒரு மணி நேர மறியல் போராட்டத்தால் சேலம்- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ஹூஸ்டன் மாகாணத்தில் ஒரு பகுதிக்கு மகாத்மா காந்தி பெயர்!

வாஷிங்டன்: அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரின் தென் மேற்கு பகுதிக்கு மகாத்மா காந்தியின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. காந்தியின் 141வது பிறந்த ஆண்டையொட்டி இந்த கெளரவம் தரப்பட்டுள்ளது. தெற்காசியர்கள் குறிப்பாக இந்தியர்கள் அதிகம் வசிக்கும் ஹில்கிராப்ட் மாவட்டத்திற்குத்தான் காந்தியின் பெயர் சூட்டப்படுகிறது. இந்த மாதம் முதல் இந்த பெயர் அதிகாரப்பூர்வமாக அமலுக்கு வந்தது. இதற்கான அறிவிப்பை ஹில்கிராப்ட் மேயர் அனிஸ் பார்க்கர் அறிவித்தார். அப்போது இந்திய துணைத் தூதர் சஞ்சீவ் அரோரா உடன் இருந்தார். ஹில்கிராப்ட் பகுதி மினி இந்தியா என்று அழைக்கப்படுகிது. இங்குள்ள இந்திய கலாச்சார மையம்தான், காந்தியின் பெயரை இந்தப் பகுதிக்கு சூட்ட கடுமையாக முயற்சித்து வந்தது. கடந்த 7 ஆண்டு கால முயற்சியின் விளைவாக தற்போது காந்தி பெயர் இங்கு சூட்டப்பட்டுள்ளது.  ஹில்கிராப்ட்டுக்கு காந்தி பெயர் சூட்டப்பட்டிருப்பதை அங்குள்ள இந்தியர்கள் உற்சாகத்துடன் வரவேற்றுள்ளனர். இங்கு நகைக் கடை பிசினஸில் ஈடுபட்டுள்ள உஷா என்பவர் கூறுகையில், இது இந்தியர்களை அங்கீகரித்துள்ளது போல உள்ளது. பெருமையாக இருக்கிறது என்றார்.