Archive for the ‘காங்கிரஸ்’ Category

கருணாநிதி சிலை திறப்பு – சிலை வைத்தல், எடுத்தல், கடத்தல், உடைத்தல் எல்லாமே திராவிட கலாச்சாரம், பண்பாடு, நாகரிகம் தான்! சேர்ந்த அரசியல் அநாகரிகம் [2]

திசெம்பர் 17, 2018

கருணாநிதி சிலை திறப்புசிலை வைத்தல், எடுத்தல், கடத்தல், உடைத்தல் எல்லாமே திராவிட கலாச்சாரம், பண்பாடு, நாகரிகம் தான்! சேர்ந்த அரசியல் அநாகரிகம் [2]

EVR-karu-atheist-path-of-jihadi

1973, ஈவேராவுக்கு சிலை வைத்த போது, மறுபடியும் கருணாநிதி சிலை பேச்சு எழுந்தது: அதன் பின்னர் 1973-ம் ஆண்டு பெரியார் மறைவுக்குப் பின்னர் திமுக சார்பில், சென்னை அண்ணா சாலையில் (சிம்சன் அருகில்) பேராசிரியர் க.அன்பழகன், தலைமையில்,  மணியம்மை முன்னிலையில், பெரியார் சிலையை அப்போதைய முதல்வர் கருணாநிதி திறந்து வைத்தார். சிலை திறப்பு விழாவில் பேசிய அப்போதைய தி.க.தலைவர் மணியம்மை, “சொன்னபடி பெரியாருக்கு சிலை வைத்துவிட்டீர்கள். பெரியாருக்கு சிலை திறந்த பின்னர் எனக்கு சிலை வைக்கலாம் என்று பேசிய நீங்கள் இனியும் சாக்குப்போக்கு சொல்ல முடியாது தி..சார்பில் உங்களுக்குச் சிலை அமைக்க அனுமதி தரவேண்டும் என்று மேடையிலேயே கோரிக்கை வைத்தார். திராவிடர் கழகம் சார்பில் அண்ணா சாலையில் முழு உருவ வெண்கலைச் சிலை அமைக்க உள்ளோம், இதற்கு மறுப்பு கூறக்கூடாது,” என்று பேசினார்.

Karunanidhi statue broken in December 1987

சிலை விவகாரத்தில் திமுகஅதிமுக மோதல்: சிலைத் திறப்பை எதிர்த்து அதிமுக சார்பில் வழக்கு தொடுக்கப்பட்டது[1]. துலுக்கர் எதிர்க்காதது ஆச்சரியமே! ஒருவேளை, அப்பொழுது தர்கா தான் இருந்தது என்று இப்பொழுது வாதிக்கலாம்! முதலமைச்சர் கலைஞர் வெளியூர் பயணத்தில் இருந்தபோது, இடையில் அ.தி.மு.க.வினால் ஏற்பட்ட சட்டப் போராட்டத்தையும் திராவிடர் கழகம் எதிர் கொண்டு வென்று, அண்ணாசாலை- ஜெனரல் பேட்டர்ஸ் சாலை சந்திப்பில் முறைப்படி அரசாணை பெற்று, 21.9.1975 அன்று பெரியதோர் திருவிழாவாக நடத்தினோம். (G.O. MS.No.877 Dated 21.5.1975, Rural Development and Local Administration Department). அந்த வழக்கை திராவிடர் கழகம் வென்று அண்ணாசாலை தர்கா அருகே 1975-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 21-ம் தேதி கருணாநிதியின் வெண்கலச்சிலை திறக்கப்பட்டது[2].

Kundrakkudi, EVR nexus-2

குன்றக்குடி அடிகளார் சிலையைத் திறந்து வைத்தார். இளமையான தோற்றத்துடன் மேடையில் பேசுவதுபோன்று கையை மூன்று விரல்களை உயர்த்திய நிலையில் அமைக்கப்பட்ட தத்ரூபமான சிலை அது. அதன் பின்னர் 1987-ம் ஆண்டு டிசம்பர் மாதம் எம்ஜிஆர் மறைந்தபோது ஏற்பட்ட கலவரத்தில் கருணாநிதியின் சிலையை சில விஷமிகள் கடப்பாரையால் இடித்துத் தள்ளினர். சிலையை உடைத்ததைக்கூட நகைச்சுவையாக எடுத்துக்கொண்ட கருணாநிதி அந்தப்படத்தை முரசொலியில் வெளியிட்டு “உடன் பிறப்பே, செயல்பட விட்டோர் சிரித்து மகிழ்ந்து நின்றாலும் அந்த சின்னத்தம்பி என் முதுகிலே குத்தவில்லைநெஞ்சிலே தான் குத்துகிறான், அதனால் நிம்மதி எனக்கு. வாழ்க! வாழ்க!” என்று குறிப்பிட்டிருந்தார்[3]. அதன்பின்னர் அதே இடத்தில் திராவிடர் கழகம் சார்பில் சிலை அமைக்க முயற்சி எடுத்தபோது மனதை பாதித்த அந்த நிகழ்வால் கருணாநிதி அதைத் தடுத்துவிட்டார்[4]. இதையடுத்து தி.க.வினர் மீண்டும் சிலை அமைக்கும் முயற்சியைக் கைவிட்டனர். இந்நிலையில் கருணாநிதி மறைந்தவுடன் மீண்டும் அதே இடத்தில் சிலை அமைக்கப்படும் என்று தி.க.தலைவர் வீரமணி சமீபத்தில் அறிவித்திருந்தார். மீண்டும் அதே இடத்தில் சிலை கம்பீரமாக எழுந்து நிற்கும் என்று அறிவித்திருந்தார். இந்நிலையில் திமுக சார்பில் அண்ணா அறிவாலயத்தில் அண்ணா சிலை அருகே அவரை நேசித்த தமையன் கருணாநிதியின் சிலை அமைக்கப்படும் என திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்து அதற்கான செயலிலும் இறங்கினார். வேக வேகமாக சிலை அமைக்கும்பணி நடந்தது. அதை பலமுறை நேரில் பார்வையிட்டு திருத்தங்கள் கூறி சரியான முறையில் தத்ரூபமாக கொண்டுவரும் செயலில் ஸ்டாலின் செயல்பட்டார்.

Kundrakkudi, Sonia, Rahul

ஈவேராவின் பிடிவாதம், வீரமணியின் தீவிரம், ஸ்டாலினை துரிதப் படுத்தியதா?: 07-08-2018 அன்று கருணாநிதி காலமானார். அப்பொழுதே, அவரைப் புதைக்க சர்ச்சை உண்டானது. அண்ணாவுக்கு அருகில் புதைக்க வேண்டும் என்று திமுக ஆர்வம் காட்டியது. மெரினாவில், இனி யாரும் சிலை வைக்க்க் கூடாது என்று ஒரு திமுககாரரே வழக்குப் போட்டிருந்தார். ஒருவழியாக நீதிமன்றத்தில் வழக்குகள் விலக்கிக் கொள்ளப் பட்டதும், மெரினாவில் உடல் புதைக்கப் பட்டது. பிறகு தினம்-தினம் அரசியல் தலைவர்கள், நண்பர்கள், பிரபலங்கள் என்று வந்து எல்லா விதமான    கிரியைகளையும் செய்து சென்றனர். வைர்முத்து, பால் சகிதம் வந்து, பூஜை செய்து, பால் சொரிந்து சென்றது, விமர்சனத்திற்கு உள்ளானது.

Karunanidhi statue, Stalin keen interest

2018ல் சிலை வைக்க ஸ்டாலினின் பிடிவாதம்:  ஈவேராவே கருணாநிக்கு சிலை வைக்க வேண்டும் என்று 1968 மற்றும் 1971ல் ஆசைப்பட்டாராம், ஆனால், கருணாநிதி மறுத்தாராம்! 1987ல் உடைக்கப் பட்டப் பிறகு, வீரமணி அதே இடத்தில் சிலை வைக்க ஆசைப் பட்டாராம், ஆனால், கருணாநிதி, அவரது குடும்பம் மற்றும் திமுகவினர் அதற்கு ஒப்ப்புக் கொள்ளவில்லை. வழக்கம் போல ஆஸ்தான ஜோதிடரிடத்தில் கருத்து கேட்ட போது, வேண்டாம் என்றதால், அத்திட்டம் முடிவடைந்தது. வீரமணி விடவில்லை ஆகஸ்ட் 18, 2018 அன்று வெண்கலத்தில் சிலை வைப்பேன் என்று ஆரம்பித்தார், வைகோ தொந்தரவும் சேர்ந்தது.  உடனே, ஸ்டாலின் ஆலோசனை செய்ய ஆரம்பித்தார். தயாளு அம்மாள் வேண்டாம் என்று சொல்லி விட்டார். இதனால், தேர்தல் சமயத்தில் லாபம் பெற கருணாநிதி சிலை செய்யப் பட்டு, இறந்ததிலிருந்து 130வது நாளில் சிலை திறப்பு என்று பிடிவாதமாக ஸ்டாலின்  இறங்கினார்.

கரு-இந்திராவை வசை பாடியது- சர்வாதிகாரி, காந்தாரி.....

மாமியாரை வைததையும், கொலை செய்ய தீர்மானம் போட்டதையும், பதியை கொன்ற பழியையும் மறந்து சிலை திறக்கும் விதி! ஸ்டாலின் ஒப்புக் கொண்டதால், சிலை தயாரிக்கும் வேலை ஆரம்பித்தது. இனி கருணாநிதி பக்தி மிகும் நிலையில், பெரியாரின் மனைவிக்கு சிலை வைத்தது போல, அவரது மனைவிக்கும் சிலைவைக்கப் படலாம்! ஆகஸ்ட் 7ம் தேதியில் அண்ணா திவசம் போலவே கடை பிடிக்கலாம், கோவில்களில் வருடாந்திர சாப்பாடு போடலாம்! சிற்பி தீனதயாளனின் குழுவினரால் உருவாக்கப்பட்ட கருணாநிதியின் சிலை காங்கிரஸின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, ஆந்திரா மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு, கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் மற்றும் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி ஆகியோர் கலந்துகொள்ளும் நிகழ்வில் இன்று மாலை அண்ணா அறிவாலயத்தில் அண்ணா சிலைக்கு அருகில் திறக்கப்பட்டது. அந்த வகையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் சிலை திறப்பு விழாவுக்கு சோனியா காந்தி மற்றும் ராகுல்காந்தி உள்ளிட்டோர் மாலை சென்னை  வந்தடைந்தனர். அதேபோல கேரளா முதல்வர் பினராயி விஜயன், ஆந்திரா முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு உள்ளிட்டோரும் வருகை தந்தனர். மேலும் திருமாவளவன், வைகோ, முத்தரசன், ஜி.கே.வாசன் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் கலந்துகொண்டனர். திரையுலகம் சார்பில் ரஜினி,வைரமுத்து, சத்ருகன் சின்ஹா, பிரபு,  நாசர், குஷ்பு, வடிவேலு ஆகியோர் பங்கேற்றனர். விழாவுக்கு வந்த தலைவர்களை ஸ்டாலின் வரவேற்றார்[5].

Anti-Modi hashtag orchestrated- Gayatri Raguram-12-04-2018

டுவிட்டர் சண்டையார் வென்றது?: இச்சூழலில், ட்விட்டர் வலைத்தளத்தில் கருணாநிதி சிலை தொடர்பான ஹாஷ்டேக்குகள் இந்திய அளவில் டிரெண்டாகி வருகின்றன. திமுக ஆதரவாளர்கள் #StatueOfKalaignar என்ற ஹாஷ்டேக்கை பயன்படுத்த, எதிர்ப்பாளர்கள் பயன்படுத்தும் #StatueOfCorruption என்ற ஹாஷ்டேக்கும் டிரெண்டிங் பட்டியலில் இடம்பெற்றுள்ளது[6]. இதுமட்டுமின்றி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை தமிழகத்தில் இருந்து திரும்பச் செல்லக்கோரி #GoBackSonia என்ற ஹாஷ்டேக் டிரெண்டாகிறது. 200,000 ட்வீட்களை பெற்று உலகளாவிய அளவில் டிரெண்டிங் பட்டியலில் முதலிடம் பெற்ற #GoBackModi என்ற ஹாஷ்டேக்கை #GoBackSonia முந்துமா என்பது சந்தேகமே[7].

வேதபிரகாஷ்

16-12-2018.

Anti-Modi demo, Chennai 12-04-2018

[1] தமிழ்.ஒன்.இந்தியா, அண்ணா சாலையில் கருணாநிதி சிலை.. ஞாபகம் இருக்கிறதா?, By Sutha | Published: Saturday, August 11, 2018, 16:50 [IST]

[2] https://tamil.oneindia.com/news/tamilnadu/k-veeramani-bats-karunanidhi-statue-at-mount-road-327220.html?fbclid=IwAR1TfHm2WTDjcNm6fHtujL2arp-HduBPV2OlftOO-MtZsa2G_ImHrFFlhX0

[3] தமிழ்.இந்து, சிலை வைக்க கடைசிவரை தடைப்போட்ட கருணாநிதி: சிலைத் திறப்பு ஒரு மீள்பார்வை, மு.அப்துல் முத்தலீஃப், Published : 16 Dec 2018 13:53 IST; Updated : 16 Dec 2018 14:54 IST

[4] https://tamil.thehindu.com/tamilnadu/article25756876.ece

[5] https://www.vikatan.com/news/tamilnadu/144787-sonia-gandhi-unveiled-karunanidhis-statue-in-anna-arivalayam.html

[6] பிபிசி, மு.கருணாநிதி சிலை திறப்பு விழா: #GoBackModiக்கு பழித்தீர்க்கும் பாஜக தொண்டர்கள், 16-12-2018.

[7] https://www.bbc.com/tamil/india-46583135

தமிழ், தமிழகம், தமிழ்நாடு: நீட் தேர்வு, காவிரிப் பிரச்சினை, ஐபிஎல்-எதிர்ப்பு முதலியவை, போலீஸ் தாக்குதலில் முடிந்த விதம் [4]

ஏப்ரல் 20, 2018

தமிழ், தமிழகம், தமிழ்நாடு: நீட் தேர்வு, காவிரிப் பிரச்சினை, ஐபிஎல்எதிர்ப்பு முதலியவை, போலீஸ் தாக்குதலில் முடிந்த விதம் [4]

Nam tamilar beat police 10-04-2018

 “தமிழ்.ஒன்.இந்தியா,” சீமான் ஆள் ஏன் போலீஸாரை அடித்தார். என்று விளக்கியது[1]: “அந்த இளைஞர் ஏன் போலீசாரைத் தாக்கினார் என்ற விவரம் கிடைத்துள்ளது. 10-04-2018 அன்று, போராட்டத்தின்போது நாம் தமிழர் தலைவர் சீமானும் களத்தில் இருந்தார். அண்ணா சாலையில் அவர் பெரும் இளைஞர் கூட்டத்துடன் ஆர்ப்பாட்டம் செய்து கொண்டிருந்தபோதுதான், போலீசார் தடியடியில் இறங்கினர். ஒரு கட்டத்தில் சீமானை அடிக்க முயன்றனர் இரண்டு போலீசார். சீமானை அடிக்க வந்தவர்களில் ஒரு போலீசைத்தான் அந்த இளைஞர் தள்ளிவிட்டார். “எங்க அண்ணன் மேலயே கை வைப்பியா நீ..?” என்று கேட்டபடி அந்த போலீஸ் முகத்தில் குத்த முயன்றார் இளைஞர். அதன் பிறகு சீமான் ஓடி வந்து, கைகலப்பை விலக்க, அந்த இளைஞர் போராடும் கூட்டத்தில் கலந்துவிட்டார். நடந்த சம்பவம் இதுதான்.[2] ஆனால், ஒரு போலீஸ்காரர் அடி-அடி என்று அடித்து கீழே தள்ளியது வீடியோவில் நன்றாகவே தெரிந்தது. ஆனால், பிறகு பல்டி அடித்ததும் நல்ல கூத்துதான்.

Nam tamilar beat police why 10-04-2018

10-04-2018 மேட்சை நடத்த விடமாட்டோம் அடுத்து, ஏப்ரல் 20ம் தேதி சென்னையில் நடைபெறும் ஐபிஎல் போட்டியை நடத்த விடமாட்டோம் என்றது: ஏப்ரல் 20ம் தேதி சென்னையில் நடைபெறும் ஐபிஎல் போட்டியை நடத்த விடமாட்டோம் என்று சீமான் தெரிவித்தார்[3] என்பது தான் தலைசிறந்த தமாஷா. ஒரு வேளை பூனாவிற்கு சென்று செய்வார் போலும். 10-04-2018 மேட்சை நடத்த விடமாட்டோம் என்று கலாட்டா செய்து, பிறகு ஷூ எரிந்து கேவலப் படுத்தி, கைதாகிய சீமான் இவ்வாறு பேசியது திகைப்பாக இருந்தது[4]. ஏற்கெனவே, இனி சென்னையில் ஐபிஎல் போட்டிகள் நடக்காது என்று அறிவிக்கப் பட்டதுன், பூனாவிற்கு மாற்றப் பட்டது அறிவிக்கப்பட்டது. 11-04-2018 அன்று, காவிரிக்கான போராட்டத்துக்கு மத்தியில் சென்னையில் ஐபிஎல் நடத்தக் கூடாது என்று பாரதிராஜா, அமீர், மணியரசன், சீமான், தனியரசு, தமிமுன் அன்சாரி உள்ளிட்டோர் செய்தியாளர்களை சந்தித்தனர்[5].

Separate flag -seeman- IPL match

இனி மேலும், இக்கால இளைஞர்கள் இந்த போலிகளை நம்ப மாட்டார்கள்.  சென்னை அண்ணாநகர் மேற்கு பகுதியை சேர்ந்தவர் நர்மதாநந்தகுமார். சமூக ஆர்வலரான இவர் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி 16-04-2018 அன்று சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்தார்[6]. அந்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது: “நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானும், அவரது தொண்டர்களும் வன்முறையை தூண்டும் வகையில் பேசி போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதனால் பெண்கள் மிகுந்த அளவில் பாதிப்புக்குள்ளாகிறார்கள். சமீபத்தில் கூட ஒரு தனியார் தொலைக்காட்சி நடத்திய விவாத நிகழ்ச்சியில் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் சிலர், பாஜக தலைவர் தமிழசை சவுந்தரராஜனை கிண்டல் அடித்து பேசி அவரை அழ வைத்தார்கள். தொடர்ந்து வன்முறை தூண்டும் வகையில் பேசிய வரும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளரையும், அவரது தொண்டர்களை காவல் துறையினர் ஒடுக்க வேண்டும். முடிந்தால் கட்சியை தடை செய்வது இந்த தேசத்திற்கு நல்லது”. இவ்வாறு கூறப்பட்டிருந்தது[7].

Velmurugan threatened with snake entering IPL pitch - 10-04-2018

திமுக கர்நாடகத்தை ஆண்டாலும் காவிரி நீர் வராது: அப்போது சீமான் கூறுகையில் கர்நாடகத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால் காவிரி தமிழகத்தில் பாய்ந்தோடும் என்கிறார்கள். ஆனால் பாஜக ஆட்சியின்போதும் தமிழகத்திற்கு முறையாக நீர் திறக்கவில்லை[8]. சென்னையில் 10-01-2018 அன்று போராட்டத்தின் போது போலீசார் தாக்கப்பட்டதற்கு நடிகர் ரஜினிகாந்த் ட்விட்டரில் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்[9]. காவல்துறையினரைத் தாக்கியதாக சீமான் மீது பொய் வழக்குப் போடப்பட்டுள்ளது. அதில் சீமானை நாங்கள் கைது செய்யவிடமாட்டோம் என்று  பெ.மணியரசன், தெரிவித்துள்ளார்[10]. அதாவது, இவர் தான் சட்ட அமைச்சர், நீதிபதி என்ற தோரணை. சென்னையை அடுத்த திருவிடந்தையில் நடக்கும் ராணுவக் கண்காட்சியில் பங்கேற்க வந்த பிரதமர் மோடிக்கு எதிராக கறுப்புக்கொடி காட்டும் போராட்டத்தை தமிழக எதிர்க்கட்சிகள் 12-04-2018 அன்று மேற்கொண்டன[11]. தமிழர்கள் தொடர்ந்து பிரச்னையில் சிக்கித் தவிக்கும்போது, எந்த விதத்திலும் காப்பாற்ற முன் வராத ராணுவத்திற்கு எதற்காக கண்காட்சி நடத்தப்பட வேண்டும் என்று சீமான் கேள்வி எழுப்பினார்[12]. மோடிக்கு கருப்பு கொடி காண்பித்து, இன்று காலை போராட்டம் நடத்திய சீமான் கைது செய்யப்பட்டு பல்லாவரம் ஸ்ரீகிருஷ்ணா கல்யாண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்[13]. இதேபோல மோடிக்கு கருப்பு கொடி காண்பித்து போராட்டம் நடத்தியதற்காக இன்று கைது செய்யப்பட்ட மணியரசன், தமிமுன் அன்சாரி, கருணாஸ், தனியரசு, இயக்குநர்கள் பாரதிராஜா, கவுதமன், அமீர் ஆகியோரும் சிட்லபாக்கத்திலுள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.

13-04-2018, the detained black shirt leaders-released

இதனையடுத்து சீமான் மற்றும் தமிமுன் அன்சாரியை விடுதலை செய்யக்கோரி நாம் தமிழர் கட்சி மற்றும் மனிதநேய ஜனநாயகக் கட்சித் தொண்டர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்[14]. இதனால், ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தடியடி நடத்திய காவல்துறை அவர்களை வலுக்கட்டாயமாக கைது செய்து வேனில் ஏற்றி வருகிறது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது[15]. பல்லாவரம் ஸ்டேஷன் சாலையே பரபரப்பாக போர்க்களம் போல காணப்படுகிறது. சாலையோர வியாபாரிகள் கடைகளை எடுத்து விட்டனர். சீமானை விடுவிக்கக் கோரி பாரதிராஜாவும் வெளியேற மறுத்து வருவதால் பதட்டம் தொடர்கிறது[16]. இந்த நிலையில், 12-04-2018 அன்று இரவு 9 மணியளவில் சீமான், தமிமுன் அன்சாரி உள்ளிட்டோர் விடுதலை செய்யப்பட்டனர்[17]. இதன்பிறகு பாரதிராஜா விடுதலைக்கு சம்மதித்து வெளியே வந்தார்[18].

13--04-2018- RPF kept outside the Mantap

தொடர்ந்து “தமிழ்.ஒன்.இந்தியா,” சீமான் புராணம் பாடி வருவது, நிச்சயமாக, இரண்டிற்கும் உள்ள தொடர்பை வெளிப்படுத்துகிறது. ஒரே செய்தியை பது முறை விதவிதமாக போட்டுள்ளதே தமாஷாக உள்ளது. அவற்றையெல்லாம் தொகுத்தது தான், இப்பதிவு. “தமிழர் நலனுக்காக பல முறை சிறைக்கு சென்ற போராளி சீமான்” என்று தலைப்பிட்டு போட்ட செய்த்யில், சீமான் புராணத்தைக் காணலாம்[19]. ஐபிஎல் போட்டிக்கு எதிரான போராட்டத்தின் நடத்தப்பட்ட தாக்குதலை தொடர்ந்து சீமான் மீது கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகளை பதிவு செய்தது காவல்துறை. இந்நிலையில் சீமானை கொலை முயற்சி வழக்கில் கைது செய்ய காவல்துறை திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது[20].

13--04-2018- Mansur Ali Khan, Udhayakumar outside the Mantap

போராட்டத்தின் போது போலீஸ்காரர் 3 பேர் மீது கையில் ஒரு கொடியை [நாம் தமிழர்] ஏந்தி கொண்டு ஒரு கும்பல் தாக்குதல் நடத்தியது[21]. இந்த வீடியோ வைரலாகியது. இதைத் தொடர்ந்து காவலர்கள் புகாரின் பேரில் சீமான் உள்ளிட்ட 8 பேர் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது. “ஐபிஎல் போட்டிக்கு எதிரான போராட்டத்தின்போது போலீஸாரை தாக்கியவர்கள் நாம் தமிழர் கட்சியினர் அல்ல. நாம் தமிழர் கட்சி வன்முறை கட்சி அல்ல. போலீஸாரை தாக்குவதற்குத்தான் கட்சி நடத்திக் கொண்டிருக்கிறோமா. போலீஸாரை நாம் தமிழர்தான் தாக்கினார்கள் என்பதை எப்படி முடிவு செய்தீர்கள். முறையாக விசாரணை நடத்தி கைது செய்யுங்கள். தேவையில்லாமல் நாம் தமிழர் கட்சியினரை கைது செய்யாதீர், ” என்றெல்லாம் கேட்டுக் கொண்டது வேடிக்கையாக இருந்தது[22].

© வேதபிரகாஷ்

19-04-2018

12-04-2018, the detained black shirt leaders

[1] தமிழ்.ஒன்.இந்தியா, அந்த இளைஞர் போலீசைத் தாக்கியது ஏன் தெரியுமா?, Posted By: Shankar Published: Wednesday, April 11, 2018, 11:50 [IST]

[2] https://tamil.oneindia.com/news/tamilnadu/why-police-attacked-during-ipl-protest-316894.html

[3] தமிழ்.ஒன்.இந்தியா, ஏப். 20ல் சென்னையில் ஐபிஎல் நடக்காது, நடத்த விட மாட்டோம்சீமான் அதிரடி, Posted By: Gajalakshmi Updated: Wednesday, April 11, 2018, 15:06 [IST]

[4] https://tamil.oneindia.com/news/tamilnadu/seeman-says-ipl-match-will-not-happen-on-april-20-316922.html

[5] தமிழ்.ஒன்.இந்தியா, கர்நாடகத்தில் பாஜக ஆட்சியின்போதும் தமிழகத்துக்கு முறையாக காவிரி நீர் கிடைக்கவில்லைசீமான், Posted By: Lakshmi Priya Updated: Wednesday, April 11, 2018, 15:32 [IST].

[6] தினகரன், நாம் தமிழர் கட்சியை தடை செய்யவேண்டும், 2018-04-17@ 00:45:11

[7] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=394117

[8] https://tamil.oneindia.com/news/tamilnadu/seeman-accuses-we-never-gets-cauvery-water-though-bjp-was-power-316927.html

[9] தமிழ்.ஒன்.இந்தியா, பொய் வழக்குப் போட்டு சீமானைக் கைது செய்ய நாங்கள் விடமாட்டோம்பெ.மணியரசன், Posted By: Mohan Prabhaharan Published: Wednesday, April 11, 2018, 15:42 [IST].

[10] https://tamil.oneindia.com/news/tamilnadu/we-wont-let-arrest-seeman-says-maniyarasan-316930.html

[11] தமிழ்.ஒன்.இந்தியா, தமிழர்களை எந்த விதத்திலும் காப்பாற்றாத ராணுவத்துக்கு சென்னையில் கண்காட்சி எதற்கு? : சீமான் கேள்வி, Posted By: Mohan Prabhaharan Published: Thursday, April 12, 2018, 10:44 [IST].

[12] https://tamil.oneindia.com/news/tamilnadu/why-defence-ministry-doing-expo-chennai-questions-seeman-317002.html

[13] தமிழ்.ஒன்.இந்தியா, கைது பரபரப்புகளுக்கு முற்றுப்புள்ளி.. சீமான், தமிமுன் அன்சாரியை இரவில் விடுதலை செய்தது காவல்துறை!, Posted By: Veera Kumar Updated: Thursday, April 12, 2018, 21:04 [IST].

[14] தமிழ்.ஒன்.இந்தியா, சீமானை கைது செய்வதை எதிர்த்து போராட்டத்தில் குதித்த தொண்டர்கள்.. பல்லாவரத்தில் பரபரப்பு, Posted By: Mohan Prabhaharan Updated: Thursday, April 12, 2018, 18:50 [IST].

[15] https://tamil.oneindia.com/news/tamilnadu/police-arrests-seeman-thameemun-ansari-party-cadres-317071.html

[16] தமிழ்.ஒன்.இந்தியா, சீமான், அன்சாரி விடுதலை செய்யப்படும்வரை மண்டபத்திலேயே உள்ளிருப்பு போராட்டம் நடத்திய பாரதிராஜா, Posted By: Aravamudhan Updated: Thursday, April 12, 2018, 21:05 [IST].

[17] https://tamil.oneindia.com/news/tamilnadu/seeman-may-be-get-arrested-317054.html

[18] https://tamil.oneindia.com/news/tamilnadu/bharathiraja-refused-go-317069.html

[19] தமிழ்.ஒன்.இந்தியா, தமிழர் நலனுக்காக பல முறை சிறைக்கு சென்ற போராளி சீமான்!, Posted By: Kalai Mathi Updated: Friday, April 13, 2018, 10:29 [IST]

[20] https://tamil.oneindia.com/news/tamilnadu/seeman-went-jail-many-times-tamil-benefit-317076.html

[21] தமிழ்.ஒன்.இந்தியா, போலீஸாரை தாக்கியது நாங்கள் அல்ல: அதற்காகவா கட்சி நடத்துகிறோம்சீமான் சீறல், Posted By: Lakshmi Priya Published: Saturday, April 14, 2018, 17:28 [IST]

[22] https://tamil.oneindia.com/news/tamilnadu/seeman-says-that-his-party-is-not-violence-party/articlecontent-pf304675-317244.html