Archive for the ‘காஃபிர்’ Category

ஆனைமுகத்தோனுக்கு ஆனைவெடி வைத்து உடைத்தேன் என்று ஆண்டிப்பட்டி ராஜா, ஆனைமுத்து இழவு விழாவில் பேசி ஒப்பாரி வைத்தது! ஈவேராவை பின்பற்றி மாலிகாபூராக மாறியது (2)

ஜனவரி 6, 2022

ஆனைமுகத்தோனுக்கு ஆனைவெடி வைத்து உடைத்தேன் என்று ஆண்டிப்பட்டி ராஜா, ஆனைமுத்து இழவு விழாவில் பேசி ஒப்பாரி வைத்தது! ஈவேராவை பின்பற்றி மாலிகாபூராக மாறியது (2)

அம்மா கொடுத்த விபூதிகளை முதலில் பூசிக் கொண்டேன், பிறகு தூக்கி எறிந்தேன்: “1973 இல் நான் ஆறாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோது, பெரியார் குடில் நடத்தினார் ஆனைமுத்து, அதில் நான் படித்தேன், அப்போது நான் விடுதிக்கு கிளம்பும்போதே என் அம்மா, இது முருகன் கோயில் விபூதி… காலையில் எழுந்ததும் இந்த விபூதிகளை வச்சுக்கோ,  இருட்டில் போனால் இந்த விபூதி வச்சுக்கோ என்று தருவாங்க. நானும் வச்சிட்டு இருந்தேன். அப்போதுதான் பெரியாரின் கடைசி உரையை நான் கேட்டேன்.. …….அதற்கு பிறகு மதம் ஏன் ஒழிய வேண்டும் என்பது போன்ற சின்ன சின்ன புத்தகங்களைப் படித்தேன்.  அதன்பிறகுதான் அந்த விபூதிகளை எல்லாம் தூக்கிப் போட்டேன். தூக்கிப் போட்டதும் இல்லாமல் எங்க ஊரில் ஒரு பிள்ளையார் சிலை இருந்தது, அந்த சிலைக்கு கீழே ஒரு ஆனைவெடி வச்சுட்டேன்.. அது உடைந்து சிதறியது, பின் அது பெரிய பிரச்சனை ஆயிடுச்சு. அதெல்லாம் ஒரு காலம்.. …” சிறுவயதில் அத்தகைய எண்ண உருவானது, என்பது, மனோதத்துவ ரீதியில் அலசவேண்டியுள்ளது. ஆனைமுத்து வீட்டில் எல்லோரும் கடவுள் நம்பிக்கைக் கொண்டவர்கள் தான். ராசாவைப் போல யாரும் அம்மாவின் பேச்சைக் கேட்காமல், மனம் புண்படும் படி நடந்து கொள்ளவில்லை.

நானே நினைத்தாலும் இந்துவாக இருந்து என்னால் வெளியேற முடியாது: ஏ.ராசா பேசியது, “என் வாழ்வில் நான் மாற்றியதற்கு காரணம் பெரியார் பேசிய அந்த கடைசி பேச்சு தான். தொடர்ந்து பேசிய அவர் நானே நினைத்தாலும் இந்துவாக இருந்து என்னால் வெளியேற முடியாது[1]. ஏன் என்றால் இந்து அமைப்பு சட்டத்தில் யார் கிறிஸ்துவர்கள், யார் இஸ்லாமியன், யார் யூதன் இல்லையோ மற்ற அனைவரும் இந்து என்றுதான் சட்டம் உள்ளது. எனவே நானே நினைத்தாலும் வெளியேற முடியவில்லை அப்படி வெளியேறினால் அந்த நாள் வந்தால் அதுதான் ஆனைமுத்துவிற்கு மரியாதை செய்யும் நாளாக இருக்கும்,” என தெரிவித்த அவர் காவியை அழிக்க அனைத்து கருப்பு சிவப்பு நீலமும் ஒன்று சேர வேண்டும் என கூறினார்[2]. இங்கு, அம்பேத்கர் அரசியல் சாசனம் சரியில்லை என்கிறாரா அல்லது இந்துசார்புடையது என்கிறாரா என்பதை கவிக்க வேண்டும். அம்பேத்கர் இந்துவிரோதி, இந்துமதத்தை வெறுப்பவர், தோஷிப்பவர்….. அதனால் தான், அவரது பேச்சுகளும், புத்தகங்களும் அவ்வாறே இருந்தன. பிறகு, அவரது அரசியல் சாசனம், நிர்ணய சட்டத்தைக் குறை சொல்வது ஏன் என்று தெரியவில்லை.

ராசா கொடுக்கும் விளக்கம்[3]: ‘இந்து’ என்றழைக்கப்படும் மக்களில் 95% சதவீதமாகவுள்ள இந்த பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களுக்கு உரிமைக்கோரி தி.மு.க போராடியபோதெல்லாம் அவற்றை எதிர்த்தவர்கள் கிறிஸ்தவர்களா? இஸ்லாமியர்களா? இல்லையே!  அதை செய்தவர்கள் பிராமணர்களும் அவர்களோடு சேர்ந்த முன்னேறிய சாதியை சார்ந்த இந்துக்களும்தான்.  வேறு மொழியில் சொன்னால், பாஜகவும் அதன் பரிவாரங்களுமே இன்றுவரை இடஒதுக்கீட்டை எதிர்த்து வருகின்றன. எனவே, தி.மு.க இந்து விரோத கட்சியல்ல.  யார் ‘இந்து’ என்பதில் பிரச்சனை இருக்கிறது.‘இந்து’ என்று தங்களை ஏற்கும் பிற்படுத்தப்பட்ட சூத்திரர்களுக்கும், தாழ்த்தப்பட்ட பஞ்சமர்களுக்கும், அந்த மதத்தில் சொல்லப்பட்டுள்ள வரையறைகளும், வரம்புகளும், கடமைகளும், கட்டுப்பாடுகளும் ஏற்புடையதா என்பதில் எங்களுக்கு கருத்து வேறுபாடு உண்டு.  அதனால்தான், பேரறிஞர் அண்ணா அவர்களே ‘இந்து’ எனும் அடையாளத்தை ஏற்க மறுத்தார்.  இந்த கருத்துப் போராட்டம் கடந்த நூறு ஆண்டுகளுக்கு மேலாக, குறிப்பாக 1916-ல் வெளிவந்த பிராமணர் அல்லாதோர் அறிக்கை (Non-Brahmin Manifesto) வந்ததில் இருந்தே தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது.  அந்த கருத்துப் போராட்டத்தில் நாங்கள் எப்போதும் தோற்றதில்லை.  தி.மு.க.வின் அரசியல்-சமூகப்பார்வை தமிழர்களை இனத்தால், மொழியால் இனணப்பதேயன்றி; மதத்தால், சாதியால் பிரிப்பதல்ல!.: என்றெல்லாம் விளக்கம் கொடுத்தது விசித்திரமாக இருந்தது[4].

இந்துவிரோதம் மற்றும் எங்க கட்சியில் இந்துக்கள் உள்ளார்கள் என்ற முரண்பாடு தொடரும்: ஆ. ராசா என்கின்ற ஆண்டிப்பட்டி ராஜா இந்து-துவேசம் பேசுவது புதியதல்ல. அவரது வீடியோ பேச்சுகள் ஏற்கெனவே அந்த இதுவிடரோதத் தன்மையினை வெளிக்கட்டியுள்ளது. ஸ்டாலின் விபூதியை அழித்தது போல, இவரும் தனது பராக்கிரமத்தைக் காட்டுகிறார் போலும். தாயின் மத உணர்வுகளைக் கூட மதிக்காதவர்களை மக்கள் புரிந்து கொள்வர்கள். அதே போலத்தான், துர்கா ஸ்டாலின், தனது கணவனுக்கு நேர்த்திக் கடன் செய்வது, விரதம் மேற்கொள்வது, பூஜைகள் செய்வது, சமஸ்கிருத சுலோகங்கள் சொல்லி பாராயணம் செய்வது போன்ற காரியங்கள். தனது மாமனாருக்கும் காசிக்குச் சென்று காரியங்களை செய்து வந்துள்ளார். ஆனைவெடி வைத்து ஆனைமுகத்தோனை உடைப்பேன். ஆனால், தீபாவளிக்கு வாழ்த்து சொல்ல மாட்டேன், திமுகவினரும் சொல்ல மாட்டார்கள்! ஆக, திமுகவின் இரு வேடங்கள் தெரிந்த விசயமே. இதனை சாதாரண மக்கள் புரிந்து கொள்ளும் வரை, தொடர்ந்து கொண்டே இருக்கும். பிரச்சாரம், விளம்பரங்கள் அதிகமாகும்.

ஆ.ராசாவின் சித்தாந்தம் என்ன?: சிறுவயதிலிருந்து வெடி வைகத்தேன், உடைத்தேன் போன்ற மனப் பாங்கு, வன்முறையினைத் தான் காட்டுகிறது. அத்தகைய உணர்சுகள் அவர் முகத்திலும்வெளிப்படுவது, புகைப்படங்களில் காணலாம்.

  • ஈவேரா உடைத்தார், அதனால் நானும் உடைத்தேன் என்பது அந்த துலுக்க விக்கிரங்களை உடைக்கும் தீவிரவாதத்தை தான் காட்டுகிறது.
  • ஏனெனில், மொஹம்மதைப் போலத்தான், தானும் மொஹம்மது என்று சொல்லிக் கொண்டு, இந்தியாவில் கஜினி-கோரி மொஹம்மதுகள் தீவிரவாதத்துடன் கோவில்களை இடித்தார்கள், விக்கிரங்களை உடைத்தார்கள், செல்வங்களைக் கொள்ளையடித்துச் சென்றாற்கள்.
  • தென்னகத்தில்மாலிக்காபூர் இடைக்காலத்தில் அவ்வாறு செய்தான். இப்பொழுது, நவீன காலத்தில் திராவிடத்துவ வாதிகள் செய்து வருகின்றனர்.
  • சிலை உடைப்பு சித்தாந்தம், நியாயப் படுத்துத்தல், பெருமைப் பேச்சிக் கொள்வது எல்லாம் ஒன்றாகத்தான் இருக்கின்றன.
  • அண்ணா சொல்லியபடி, “இனம் இனத்தோடு சேர்கிறது,” கோவில் இடிப்புகள். விக்கிர உடைப்புகளும் அவ்வாறே உள்ளன.
  • அம்மாவின் உணர்வுகளையும் மீறி, மதிக்காமல், அவர் கொடுத்த விபூதிகளை எறிந்தேன் என்பதெல்லாம், ஸ்டாலினை திருதிப் படுத்தவா, அல்லது அவரையும் விஞ்சிய திராவிடத்துவத் தலைவர் என்பதை எடுத்துக் காட்டாவா என்று தெரியவில்லை.
  • எஸ்.சி என்ற நிலையில் எல்லாவற்றையும் அனுபவித்து, “நானே நினைத்தாலும் இந்துவாக இருந்து என்னால் வெளியேற முடியாது,” என்று பேசியிருப்பதெல்லாம், எப்படி இந்து என்று சொல்லிக் கொண்டு, இந்திய அரசியல் நிர்ணயச்சட்டத்தின் படியே ஏமாற்றுகிறார் என்பதும் தெரிகிறது.

© வேதபிரகாஷ்

06-01-2022


[1] தினசரி, பிள்ளையார் சிலைக்கு வெடி வைத்தேன்: இந்து மதத்தை அவமதித்து ராசா சர்ச்சை பேச்சு, ஜனவரி.5, 2022 11.30 AM.

[2] https://dhinasari.com/latest-news/236281-i-bombed-the-pillaiyar-statue-a-rasa-controversy-speech-insulting-hinduism.html

[3] புதியதலைமுறை, திமுக இந்து விரோத கட்சியல்ல. யார்இந்து என்பதில்தான் பிரச்சனை.ராசா சிறப்பு பேட்டி, சிறப்புச் செய்திகள், puthiyathalaimurai.com   sharpana Published :21,Jul 2020 04:07 PM

[4] https://www.puthiyathalaimurai.com/newsview/74315/The-DMK-is-not-an-anti-Hindu-party–The-problem-is-who-is-a—-Hindu—–A-Rasa-Special-Interview

செபாஸ்டியன் சீமான் திடீரென்று “முருக பக்தன்” ஆகியது, இந்து வேடம் போடுவது, ஆனால் கருவறை நுழைவு போராட்டம் நடத்துவது (2)

பிப்ரவரி 9, 2015

செபாஸ்டியன் சீமான் திடீரென்றுமுருக பக்தன்ஆகியது, இந்து வேடம் போடுவது, ஆனால் கருவறை நுழைவு போராட்டம் நடத்துவது (2)

சீமான் - நெற்றியில் விபூதி

சீமான் – நெற்றியில் விபூதி

பெஞ்சமின், அலாவுதீன், செந்தில்நாதன் சேகுவேரா, சுபாஷ் சந்திரபோஸ்: “பொதுக்கூட்டத்தில் சீமான், தனது கட்சியை சேர்ந்த சிலர் தமிழில் பெயரை மாற்றிக் கொண்ட விபரத்தை வாசித்தார்”, என்று தினமலர் கூறுகிறது[1].  கூட்டத்தில் தொடர்ந்து வீரதமிழர் முன்னணி அமைப்புக்கான மாநில ஒருங்கிணைப்பாளர்களாக பெஞ்சமின், அலாவுதீன், செந்தில்நாதன் சேகுவேரா, சுபாஷ் சந்திரபோஸ் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டனர்[2] என்று அவர்களது இணைதளம் வெளியிட்டுள்ளது. இதென்ன செக்யூலரிஸ அணியா, குழப்பக்கூட்டமா, “இந்தியன்” இல்லை என்கின்ற இந்திய-விரோதி அமைப்பா, “திராவிடன்” அல்ல என்று சொல்லி ஏமாற்றும் சித்தாந்த கும்பலா, “தமிழனாக” இருப்போன் என்று தமிழ் கலாச்சாரம், பாரம்பரியம், பண்பாடு, நாகரிகம் முதலியவற்றை தூஷித்த கும்பலின் மறு அவதாரமா அல்லது மறுபடியும் “தமிழர்களின்” பெயரைச் சொல்லிக் கொண்டு, ஏமாற்ற தோண்டியுள்ள இன்னொர்ய் மோசடி கும்பலா என்று தமிழகள் விசாரித்துத் தெரிந்து கொள்ள வேண்டும்.

shanawas speech in MJK meeting Jan 28-2011- சீமான்

shanawas speech in MJK meeting Jan 28-2011- சீமான்

செபாஸ்டியன் சீமானின் இந்துவிரோத பேச்சுகள் அதிகமாகவே உள்ளன[3]. நாத்திக போர்வையில், பெரியார் சொன்னதை, இன்னும் அதிகமாகக் கொச்சைப்படுத்தி, இந்து மதத்தைச் சாடிவருவது, இவரது வேலையாகி விட்டது. நடுவே தன்னை “செக்யூலராக”க் காட்டிக்கொள்ள, சிறிது கிருத்துவத்தைக் கிண்டலடிப்பார். ஆனால், இஸ்லாமைப் பற்றி ஒன்றும் சொல்லாதது, விமர்சனிக்காதது, இவரது போலித்தனத்தை எடுத்துக் காட்டுகிறது. இத்தகைய கொள்கையற்ற மனிதர், “தமிழர்”, “பிராபகரன்”, “அம்மா”, “அப்பா”…………….என்ற வார்த்தை ஜாலங்களுடன்[4], மயிரு, மசுரு,………………………., போன்ற செம்மொழி வார்த்தைகளுடன் பவனி வந்து கொண்டிருக்கிறார். இவரது பேச்சுகள் அடங்கிய வீடியோக்கள் இணைதளங்களிலேயே உள்ளன, அவற்றை கெட்டாலே-பார்த்தாலே, உண்மையினை அறிந்து கொள்ளலாம். ஆகவே, “இந்துக்கள்” என்பவர்களும் இவரிடம் ஜாக்கிரதையாக இருக்கவேண்டிய அவசியம் உள்ளது.

Palanibaba_book_release_by_Seeman_in_MJK_meeting_Jan_28.2011

Palanibaba_book_release_by_Seeman_in_MJK_meeting_Jan_28.2011

சீமானின் கபாலீஸ்வரர் கோவில் கருவறை நுழைவு போராட்டமும், பழனி கோவில் கருவறை நுழைவு முயற்சிகளும்: 14-04-2010 அன்று கிருத்துவர்கள் சென்னை நினைவரங்கம் என்ற இடத்தில் ஆர்பாட்டம் செய்ய போலீஸாரிடம் அனுமதி கேட்டது போலவும், அதற்கு அனுமதி மறுக்கப் பட்டது போலவும், தெய்வநாயகம் என்ற புரட்டு ஆராய்ச்சியாளர், முந்தைய மோசடி-ஆராய்ச்சி கும்பல் அருளப்பா-ஆச்சார்யா கும்பல் கும்பலைச் சேர்ந்த ஆள், “தமிழர் சமயம்” என்ற இதழில் வெளியிட்டு இருக்கிறார் [மலர்.1; மே 2010, இதழ்.5, பக்கம்.10]. பிறகு வேறு இடத்தில் நடந்த கூட்டம், கபாலீஸ்வரர் கோவிலில் நடந்தது என்று “இந்தியன் எக்ஸ்பிரஸ்” வெளியிட்டது[5]. அக்கூட்டத்தில் செபாஸ்டியன் சீமான் பேசியது நினைவில் கொள்ளவேண்டும். இப்பொழுது, பழனிக்கு வந்துள்ளனர். பழனியாண்டவர் கல்லூரியில் இருந்து ஊர்வலமாக மலைக்கோவில் நோக்கி செல்வோம் என்று, திடீரென பஸ் ஸ்டாண்ட் ரவுண்டானாவில் இருந்து மலைக்கோயில் நோக்கி சென்றனர்[6]. அப்போது, “முருகனை காண மலைக்கோயிலுக்கு செல்கிறோம்’ என சீமான் மற்றும் தொண்டர்கள் மலை ஏறத்துவங்கினர். கோவிலில் சீமான் தொண்டர்களுடன் கருவறை நுழைவு வாயிலில் போராட்டம் நடத்தபோவதாக போலீசாருக்கும் மற்றும் இந்து முன்னணி அமைப்பினருக்கும் தகவல் தெரிந்ததால், அவர்கல் தடுத்துத்ன் திருப்பி அனுப்பப்பட்டனர்.[7]. இதுகுறித்து டி.எஸ்.பி., சண்முகசுந்தரம் கூறுகையில், “”ஊர்வலம், பொதுகூட்டம் நடத்த அனுமதி வாங்கியிருந்தனர். திடீரென ஊர்வலத்தின் போது மலைக்கோயிலுக்கு செல்வதாக கூறினர். இதனால் தடுத்தோம்,” என்றார். இதனையடுத்து சீமான் வெளிபிரகாரத்தில் வணங்கி விட்டு பொதுக்கூட்டத்திற்கு சென்றார் என்பதும் நாடகமே என்று அறிந்து கொள்ளலாம்.

சீமானின் குழப்ப சித்தாந்தம்

சீமானின் குழப்ப சித்தாந்தம்

இந்தியாவை, தமிழ் பேசும் மக்களை ஏமாற்றிய சீமான்: ஒருபக்கம் இந்திய விரோத சக்திகளுடன் சேர்ந்து கொண்டு கூட்டங்களை நடத்துவது[8], இன்னொரு பக்கம் அடிப்படைவாத ஜிஹாதிகளை ஆதரிப்பது, பெரியாரிஸம் பேசுவது, ……இப்படி குழப்;பக் கலவையாகத்தான் செபாஸ்டியன் சீமான் இருந்துள்ளார். தமிழருக்கு யாசின் மாலிக்கைப் பற்றி என்ன தெரியும், முஸ்லீம் என்று சொல்லிக் கொண்டு கூத்தடிப்பது தெரியுமா? அப்சல்குருவின் பெயரை வைத்துக் கொண்டு, ஆபிஸ் சையதுடன் சேர்ந்து கூட்டத்தில் கலந்து கொண்டது தெரியுமா? என்று முன்பு கேள்விகளை எழுப்பியிருந்தேன்[9].  “ஆரியர்-திராவிடர்”ரென்ற செல்லாத சித்தாந்தத்தைப் பேசி சில மக்களைத் தூண்டி விட்டுக் கொண்டிருக்கிறார். அந்த சரித்திரத் தன்மையற்ற புளுகுகளை வைத்து புத்தகம் வேறு எழுதியிருக்கிறார்! கால்டுவெல் துரோகத்தை இவர் புதுப்பிக்கிறார் போலும். இதில் இவர் “நாடார்” என்று வேறு சொல்கிறார்கள். பிறகு நாடார்களை இழிவு படுத்திய கால்டுவெல் சித்தாந்தத்தை வைத்துக் கொண்டு தமிழர்களை ஏமாற்ற யார் கற்றுக் கொடுத்தது? கனடாவில் இந்து கோவில்கள் கிருத்துவர்களால் தவறாகப் பயன்படுத்தப் பட்டதால், தண்டம் செல்லுத்த வேண்டியதாகியது[10]. இலங்கையில் முஸ்லீம்கள், முஸ்லீம்களாகத்தான் இருந்து செயல்பட்டனர், சாதித்துக் கொண்டனர். முன்பே பலமுறைக் குறிப்பிட்டப் படி, தமிழக ஊடகங்களே “இலங்கை முஸ்லீம்கள்”, “இலங்கை தமிழர்கள்” என்று பிரித்துக் காட்டி, தமிழர்களை ஒதுக்கினர்[11]. ஆனால், இவரோ பழனிபாபா விழாவில் கலந்து கொண்டு பேசுகிறார். இந்திய தமிழர்களுக்கோ, இலங்கைத் தமிழர்களுக்கோ இவரால் எந்த பிரயோஜனமும் இல்லை என்றும் எடுத்துக் காட்டப்பட்டது[12].

 

ஜான் சாமுவேல் பாதையில் செபாஸ்டியன் சீமானா?: ஜான் சாமுவேல் என்ற கிருத்துவர் 2004 வரை அனைந்துலக ஸ்கந்தா-முருகா மாநாடு என்ற பெயரில் ஒரு பிரைவேட் கம்பெனியை வைத்துக் கொண்டு, அதற்கு சேர்கள் / பங்குகள் எல்லாம் வாங்கச் சொல்லி நண்பர்களை, மாநாட்டுக்கு வந்தவர்களை வற்புறுத்தி வந்தார்[13]. முருக பக்தர் போல விபூதி வேட்டியெல்லாம் கட்டிக் கொண்டு, காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதியை எல்லாம் போய் பார்த்திருக்கிறார், இந்த சாமுவேல். முதல் மாநாடு சென்னையில், ஆசியவியல் வளாகத்தில் 1997ல் நடந்தது. அப்பொழுதே, இவர் ஒரு கிருத்துவ கூட்டத்தைக் கூட்டி வந்து, முருகன் தான் ஏசு என்பது போல ஆய்வுக்கட்டுரைகளை படிக்க வைத்ததுடன், விழா மலரிலும் வெளியிய வைத்தார். அது மட்டுமல்ல, தமிழ்-சமஸ்கிருத பேதத்தையும் கிளப்பிவிட்டார். முருகன் – கந்தன் – கார்த்திகேயன் – சுப்ரமணியன் என ஆராய்ச்சி செய்வதாக இருந்தால், சமஸ்கிருதம் தெரியாமல் எந்த ஆரய்ய்ச்சியும் செய்யமுடியாது. இருந்தாலும் சக்திவேல் முருகனார் போல ஆட்களைத் தூண்டி விட்டு பிரச்சினையைக் கிளப்பினார். முருகனைப் பிடித்துக் கொண்டிருந்த ஜான் சாமுவேல், திடீரென்று முருகனை, எம்பெருமானை அம்போ என்று விட்டுவிட்டு, தாமஸைப் பிடித்துக் கொண்டது என்ன ரகசியம் என்பதை ஆராய ஆரம்பித்தபோது தான், முந்தைய அருளாப்பா-ஆச்சார்ய பால் கோஷ்டிகளின் மோசடிகளை விட, ஒரு பெரிய மோசடியை ஆரம்பித்துள்ளனர் என்று தெரியவந்துள்ளது[14]. இதே பாணியில் தான் செபாஸ்டியன் சீமானும் இறங்கியுள்ளார்.  பிஷப்புகளை சந்தித்து, தெய்வநாயகத்துடன் சேர்ந்து கபாலீஸ்வரர் கோவில் கருவறைப் போராட்டம் என்று ஆரம்பித்து, பழனிபாபா நினைவுவிழவில் கலந்து கொண்டு, இப்பொழுது பழனிக்கு வந்துள்ளார்.

© வேதபிரகாஷ்

09-02-2015

[1] தினமலர், பழநி கோயிலில் சீமான்: போலீசார் அனுமதி மறுப்பு, பிப்ரவரி.08-02-2015, 01:17.

[2] http://www.dailythanthi.com/News/Districts/dindugal/2015/02/07211902/Sri-Lankan-Tamils-issue-the-decision-of-the-State.vpf

[3] http://www.keetru.com/periyarmuzhakkam/jul08/seemaan_1.php

[4] நான் சீமான் ஆனது எப்படி?” – ஆனந்த விகடன், http://www.naamtamilar.org/beta/textnews_detail.php?id=807

[5] இந்தியன் எக்ஸ்பிரஸ், ஏதோ அந்த கூட்டம், கபாலீஸ்வரர் கோவிலில் உள்ளேயே நடந்தது மாதிரி, ஒரு புகைப்படத்துடன், செய்தி வெளியிட்டிருக்கிறார்கள். அதற்கு கடிதம் எழுதியதற்கு, இன்று வரை மறுப்பு அல்லது அது தவறு என்று வருத்தம் தெரிவித்தோ என்ற செய்தியும் வரவில்லை / வெளியிடவில்லை.

[6] தினமலர், பழநி கோயிலில் சீமான்: போலீசார் அனுமதி மறுப்பு, பிப்ரவரி.08-02-2015, 01:17.

[7] மாலைமலர், பழனி மலைக்கோவிலுக்குள் ஊர்வலமாக செல்ல சீமானுக்கு அனுமதி மறுப்பு, பதிவு செய்த நாள் : ஞாயிற்றுக்கிழமை, பெப்ரவரி 08, 1:11 PM IST.

[8] https://atrocitiesonindians.wordpress.com/2013/05/19/why-anti-national-yasn-malik-and-sebastian-seeman-come-together/

[9] https://atrocitiesonindians.wordpress.com/2013/05/19/yasin-malik-and-sebastian-seeman-and-their-affairs/

[10] https://atrocitiesonindians.wordpress.com/2013/05/20/526-sebastian-seeman-and-yasin-malik-their-activities/

[11] https://atrocitiesonindians.wordpress.com/2013/05/21/what-yasin-malik-and-sebastian-seeman-can-do-to-indians-or-tamils/

[12] https://atrocitiesonindians.wordpress.com/2013/05/29/anti-indian-propaganda-continues-by-sebastian-seeman-party/

[13] https://christianityindia.wordpress.com/category/%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D/

[14] https://thomasmyth.wordpress.com/2011/01/21/why-asian-institute-of-studies-involves-in-the-spread-of-thomas-myth/

தமிழகத்தில் வெடிகுண்டு தயாரிப்பு, வெடிப்பொருட்கள் உபயோகம், வெடிகுண்டு கலாச்சாரம் (2)

ஒக்ரோபர் 29, 2011
தமிழகத்தில் வெடிகுண்டு தயாரிப்பு, வெடிப்பொருட்கள் உபயோகம், வெடிகுண்டு கலாச்சாரம் (2)
தமிழகத்தில் வெடிப்பொருட்கள், குண்டுகள் தயாரிக்கும் தொழிற்சாலைகள்: அருவங்காடு என்ற இடத்தில் இருக்கும் கார்டைட் நிறுவனம், இந்திய ராணுவத்திற்கு சப்ளை செய்கிறது[1]. தமிழக அரசு நிறுவனமான[2] “தமிழ்நாடு எக்ஸ்போலிசிவ் லிமிடெட்” என்ற தொழிற்சாலையில் ரசாயன வெடிகுண்டு வகைகள் தயாரிக்கப் படுகின்றன[3]. குறிப்பாக அத்தொழிற்சாலை உற்பத்தி செய்யும் ரசாயன வெடிமருந்து கலவைகளில் இவ்வகை – நைட்ரோ செல்லூலோஸ் வருகிறது. நைட்ரோ செல்லூலோஸ் வகைகளில் ( Emulsion Explosives)  மூன்று வகைகள் உள்ளன[4]
  1. Non-Permitted – அனுமதிக்கப்படாதவை
  2. Permitted – அனுமதிக்கப்பட்டவை
  3. Seismic – பூமியதிர்வு ஆராய்ச்சி முதலியவற்றிற்கு உபயோகப்படுத்தப்படுபவை.

பென்டா எரித்ரிடோல் டிரை நைட்ரேட் என்ற [PETN (Pentaerythritol Tri-Nitrate) explosive] வெடிவகைகளும் உபயோகப் படுத்தப் படுகின்றன[5]. சமீபத்தில் இந்த வெடி மருந்துகள் கொண்ட குண்டுகளைத்தான் தீவிரவாதிகள் உபயோகப் படுத்தியுள்ளனர். இத்தகைய ரசாயனப் பொருட்கள் உபயோகம், அவற்றை பயன்படுத்தக் கூடிய முறைகளை அறிந்தவர்கள் என்று தெரிகிறது. குறிப்பாக தீவிரவாதத்திற்கு அவற்றை மாற்றியமைத்து குண்டுவெடித்து நாசவேலை செய்யும் பின்னணியையும் காட்டுகிறது[6]. இவை மொத்தமாக நியமிக்கப்பட்ட விற்பனை ஏஜென்டுகள் மூலம் விற்க்கப்படுகின்றன[7] மற்றும் மாநில வாரியாக டீலர்களும் உள்ளனர்[8]. முன்பு சந்திரபாபு நாயுடு கார்கள் செல்லும்போது, நக்ஸலைட்டுகளால் இந்த வகை குண்டுகள் உபயோயோகிக்கப்பட்டன[9]. அப்பொழுது உற்பத்தி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. எனெவே, குவாரிகளுக்கு என்று வாங்கிச் செல்லும் வெடிமருந்துகள், குண்டுகள் முதலியவை தீவிரவாதிகளுக்குச் செல்கின்றன, அவர்கள் அவற்றை வெடிகுண்டுகளாக தயாரித்து, டைமர் முதலியவற்றுடன் உபயோகப் படுத்துகிறார்கள் என்று தெரிகிறது[10]. தமிழகத்தில் வெடித்துவரும் “பைப் வெடிகுண்டுகள்” குறிப்பிட்ட குழிவினரைக் காட்டுகிறது எனலாம்.

 

யாருக்கு தொடர்பு? – வழக்கை திசைத் திருப்பவா, உண்மையினை அறிந்து கொள்ளவா?  இப்பொழுதெல்லாம் போலீஸாரும், டாக்டர்களைப் போல ஆகிவிட்டார்கள், பதில் சொல்கிறார்கள் – “விசாரணை ஆரம்பிக்கப் பட்டுள்ளது. இது சம்பந்தப் பட்ட வல்லுனர்கள் அறிக்கை கொடுத்த பிறகு தான் மற்ற விவரங்கள் சொல்லமுடியும். நாங்கள் அதைப் பற்றி ஒன்றும் கூறாமுடியாது”, என்றா ரீதியில் பதில் அளிக்கின்றனர்.  போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், “நேற்று அதிகாலை 3.30 மணியளவில் வடஇந்தியரை போல காணப்பட்ட மர்ம நபர், பாலம் அருகே நடமாடி கொண்டிருந்ததாக போலீசுக்கு தகவல் கிடைத்துள்ளது[11]. வெடிகுண்டுகளை மணல் மூட்டைகளுக்கிடையே வைத்து பிரித்தபோது, அதில் 7 கிலோ எடையுள்ள, “ஹை பவர் ஜெலட்டின் ஜெல்’ வைக்கப்பட்டிருந்தது[12]; [தமிழன் டிவி எப்படி ஆர்.டி.எக்ஸ் வெடிமருந்து நிரப்பப்பட்டும் …….என்று வெளியிட்டுள்ளது என்று தெரியவில்லை[13]. ஆர்.டி.எக்ஸ் என்பது சைகிளோ-டிரை-எதிலமைன்-டிரைநைட்ரோ அமைன் (Cyclotrimethylenetrinitramine) என்பதாகும்] அதனுடன் டெட்டனேட்டர்களும் இணைக்கப்பட்டிருந்தன. அவை செயலிழக்க வைக்கப்பட்டன. “ஜெல் 90′ வகையைச் சேர்ந்த இந்த வெடி மருந்துகள் எங்கிருந்து வாங்கப்பட்டன என்பது குறித்து, விசாரணை நடக்கிறது. இந்த வகை வெடி மருந்து, அரசு வெடி மருந்து கிட்டங்கியில் மட்டுமே தயாரிக்கப்படுகிறது. இந்த சம்பவத்தில் நக்சலைட்கள், வடமாநில பயங்கரவாதிகள் அல்லது ஏதாவது அமைப்பைச் சேர்ந்தவர்கள் ஈடுபட்டிருக்கலாமா என, போலீசார் விசாரிக்கின்றனர். சம்பவ இடத்தில் மத்திய உளவுப்பிரிவு, கியூ, சிறப்பு புலனாய்வு பிரிவு உள்ளிட்ட பல்வேறு பிரிவு அதிகாரிகள் குவிந்தனர். முதற்கட்ட விசாரணையில் வெடிகுண்டு தயாரிப்பில் கை தேர்ந்தவர்களால் மட்டுமே இச்செயலில் ஈடுபட்டிருக்க முடியும் என போலீசார் சந்தேகிக்கின்றனர். அத்வானியின் கார் வரும்போது ஒருவர் பேட்டரியை இயக்கினால் வெடிக்கும் வகையில் குண்டு தயாரிக்கப்பட்டிருந்தது. தீவிரவாத அமைப்புகள் அல்லது நக்சலைட் இயக்கத்தினர் யாரும் இச்செயலில் ஈடுபட்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்[14].


ஆலம்பட்டியை தேர்வு செய்தது ஏன்? குறுகிய பாலம் என்பதனால், ஒரு வண்டி போகும் போது, எதிரில் வரும் வண்டி நின்று வழிவிட வேண்டும். அத்தகைய பாலத்தைத் தேர்ந்தெடுத்தது சந்தேகத்தையெழுப்புகிறது.

  • “இசட்’ பிரிவு பாதுகாப்பில் உள்ள தலைவர்கள் வரும் போது, அவர்கள் செல்லும் பாதையில், பாலங்கள் உட்பட முக்கிய கிராமங்களில் இரவு நேரத்தில் போலீஸ் பாதுகாப்பு போடப்படும். ஆனால், வெடிகுண்டு வைக்கப்பட்டிருந்த பாலத்தில் இரவு நேரத்திலும், நேற்று காலையிலும் கூட பாதுகாப்பிற்காக யாரும் நிறுத்தப்படவில்லை[15].
  • திருமங்கலம் – ராஜபாளையம் இடையே உள்ள ரோட்டில் இந்த ஆலம்பட்டி தரைப்பாலம் மட்டும் தான் குறுகியது. எனவே, யாரும் தப்பிவிடக் கூடாது என்பதற்காக வெடிகுண்டு வைத்தவர்கள் இப்பாலத்தை தேர்ந்தெடுத்துள்ளனர்.
  • போலீசார் கூறுகையில், “சக்தி வாய்ந்த இந்த வெடிகுண்டு வெடித்திருந்தால், பெரிய அளவில் சேதம் ஏற்பட்டிருக்கும். பைப்பிற்குள், 4 பிளாஸ்டிக் பைகளில், 4 அடிக்கு கருமருந்து அடைக்கப்பட்டிருந்தது. இந்த குண்டை, மொபைல் போன் மூலம் “ஆபரேட்’ செய்ய திட்டமிட்டிருக்கலாம்’ என்றனர்.
  •  பாலத்தின் அடியில் வெடிகுண்டு இருப்பது தெரிந்ததும், ஒரு மணி நேரம் இப்பாதையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
  • இச்சம்பவத்தால், அத்வானி ஆலம்பட்டி வழியாகச் செல்லாமல், விருதுநகர், சிவகாசி நான்கு வழிச்சாலை வழியாக ஸ்ரீவில்லிபுத்தூர் சென்றார்[16].


கோவையை தொடர்ந்து மதுரையிலும் குறி: அத்வானி, 1998ம் ஆண்டில் லோக்சபா தேர்தல் பிரசாரத்திற்காக கோவை வந்தபோது, தொடர் குண்டு வெடிப்பு நடந்ததில் பலர் பலியாகினர்; விமானம் தாமதமாக வந்ததால், அத்வானி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.இந்நிலையில், மதுரையில் நேற்று அவரை குறி வைத்தே குண்டு வைக்கப்பட்டுள்ளது. இரண்டு நாட்களாக இதற்கான வேலையில் மர்ம நபர்கள் ஈடுபட்டுள்ளனர். பயமுறுத்தவோ, எச்சரிக்கவோ அல்லாமல், தாக்குதல் நடத்தும் நோக்கிலேயே குண்டு வைக்கப்பட்டிருக்கலாம். இதற்காகவே ஆள் நடமாட்டம் அதிகம் இல்லாத இடத்தில், குறுகிய பாலத்தில் சதியை நிறைவேற்ற திட்டமிட்டுள்ளனர் என, போலீசார் கருதுகின்றனர்.மதுரை சிறையில் இருந்து விசாரணை கைதிகளை, ஆலம்பட்டி வழியாக தென்காசி கோர்ட்டிற்கு போலீசார் அழைத்துச் செல்வது வழக்கம். கைதிகளில் யாரையாவது கொலை செய்ய, இந்த குண்டுகள் வைக்கப்பட்டதா என்றும் விசாரணை நடக்கிறது. காரணம், இரு ஆண்டுகளுக்கு முன், மதுரை ரிங் ரோடு ஓடைப் பாலத்தின் அடியில், நெல்லையில் இருந்து வந்த கைதிகளை கொல்ல வைக்கப்பட்டிருந்த, “கூஜா வெடிகுண்டுகள்’ கைப்பற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.


தொடரும் மிரட்டல் – நகைச்சுவையாக மாற்றப்பட்ட குண்டுவெடிப்புகள் : மதுரைக்கு தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல் இருந்து வருகிறது. ஐந்து மாதங்களுக்கு முன், மாட்டுத்தாவணி எதிரே இருந்த டாஸ்மாக் கடையில் வெடிகுண்டு வெடித்தது. கடந்த செப்., 30ல் புதூர் அரசு பஸ் டெப்போவில் டைம் பாம் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது, அத்வானி செல்லும் பாதையில், சக்தி வாய்ந்த குண்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது. மிரட்டலுக்கு, பயமுறுத்தலுக்குக் கூட வெடிகுண்டுகளை உபயோகப் படுத்தப் படுகின்றன என்றால், அத்தகைய கொடூரம் மனங்களில் வேடிக்கையாக, விளையாட்டாக ஆகிவிட்டது போலும். அதற்கேற்ற முறையில், குண்டு வெடிப்பது எப்பது தமிழ் திரைப்படங்களில் “ஜோக்காகி” விட்டது. அது மனிதர்களைக் குரூரமாக கொல்ல உபயோகப்படுத்தப் படும் தீவிர வாதம் / பயங்கரவாதம் என்ற எண்ணத்திற்குப் பதிலாக “தமாஷாக” எடுத்துக் கொள்ளும் நிலையை தமிழ்த்திரைப்பட நகைச்சுவை மாற்றிவிட்டிருக்கிறது.


தேசதுரோகிகளின் முயற்சி:பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டியும், நிதர்சனமும்: “அத்வானி யாத்திரை வழியில் வெடிகுண்டு வைத்தது தேசதுரோகிகளின் முயற்சியாக இருக்க வேண்டும்,” என மாநில பா.ஜ., தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.அவர் தினமலர் நிருபரிடம் கூறியதாவது: “இச்செயல் கோழைத்தனமான ஒன்று. இதுபற்றி பா.ஜ., கவலை கொள்ளவில்லை. போலீசார் நடவடிக்கை எடுப்பர். அத்வானியின் யாத்திரை, ஊழல், லஞ்சம் மற்றும் கறுப்புப் பணத்திற்கு எதிரானது என அனைவரும் புரிந்து கொண்டுள்ளனர். யாத்திரை, யாருக்கும் எதிரானது அல்ல என தெரிந்த பிறகும், இத்தகைய முயற்சிகள் நடப்பது தேசதுரோகிகளின் முயற்சிகளாக தான் இருக்க முடியும். நாடு நன்றாக இருக்க வேண்டும், ஊழலை ஒழிக்க வேண்டும் என நினைப்பவர்கள், இத்தகைய செயல்களில் ஈடுபட மாட்டார்கள், என்றார். மூப்பனார் முதல் கருணாநிதி வரை இவர்கள் எப்பொழுதும் தாங்களே குண்டு வைத்துக் கொள்வர்கள்[17] என்று ஜோக் அடித்துள்ளதையும் நினைவு கூரத்தக்கது”. இதுவும் இன்றைய சூழ்நிலைகளில் முக்கியமாகிறது, ஏனெனில், இணியதள தாக்குதல்களில் மறைந்து தாக்கும் சூராதி சூரர்கள் இத்தகைய வாதத்தை வைத்து ஏமாற்றப் பார்க்கின்றனர் என்பதைவிட, உண்மையை மறைக்க பிரச்சார யுக்தியாக பயன்படுத்துகின்றனர். செய்த குற்றங்களோ, செத்தவர்களோ பொய்யில்லை. குறைந்த தண்டனைகள் பெற்று வெளியில் வந்துவிட்டதால், அவர்கள் புனிதர்கள் ஆகிவிட மாட்டார்கள், ஏனெனில் செத்தவர்களின் மனைவி-மக்களுக்கு, உறவினர்களுக்கு கொலையாளிகள் யார் என்று நன்றாகவே தெரியும். அவர்கள் நடமாடி வரும்போது, உலா வரும்போது, அப்போது பார்க்கும் போது கொலைகாரகள் போகிறார்கள் என்று தான் நினைப்பர்கள்.

   

“பவர் ஜெல்” வெடி மருந்து என்றால் என்ன?: பல்வேறு ரசாயனங்களில் இருந்து வெடி மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன[18]. அதுமட்டுமல்லாது வெடிகுண்டுகள் தயாரிப்பது பற்றி புத்தகங்களை வேறு வெளியிடுகிறார்கள். அல்-குவைதா, தலிபான் போன்ற குழுக்கள் ரசாயன படிப்புப் படித்த இளைஞர்களை வைத்துக் கொண்டு, குண்டுகளைத் தயாரிப்பது, வெடிப்பது பற்றிய கையேடுகளைத் தயாரித்து, தீவிரவாத இளைஞர்களுக்கு, புதிய தீவிரவாதிகளுக்குக் கொடுக்கிறார்கள். இவற்றில், “பவர் ஜெல் வெடி மருந்து’ ஒரு வகை. நைட்ரோகிளிசரின்[19], டி.என்.டி., அசிட்டோன் பெராக்சைடு, ஆர்.டி.எக்ஸ்., அல்லது நைட்ரோசெல்லுலரஸ் ஆகிய ரசாயன பொருட்களை அதிக அழுத்தத்தில் சிலிண்டர் அல்லது பைப்பில் அடைத்து, அதை திடீரென எரிய வைத்தால், அதிக சக்தி, வெப்பம் மற்றும் நெருப்பு வெளிப்படும். இது சில மீட்டர் சுற்றளவுக்கு சேதத்தை ஏற்படுத்தும்.வெடி மருந்தை வெடிக்கச் செய்வதற்கு, திரவ நைட்ரஜன் பயன்படுத்தப்படும். இதனால், இவ்வகை வெடிகுண்டுகள், “பவர் ஜெல்’ என அழைக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. ராணுவத்தில் மட்டுமல்லாது இவ்வகை வெடிகுண்டுகள் குவாரிகளிலும் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. அவ்வாறு அவை எளிதில் கிடைப்பதால், அவறையே வெடிகுண்டுகளாக தீவிரவாதிகள் பயன்படுத்துகின்றனர்.

வேதபிரகாஷ்

28-10-2011


[2] TEL, a Government of Tamilnadu Enterprise, has a comprehensive product range, which facilitates single window delivery of complete range of explosives and accessories to its customers.

[13] ஊழலுக்கு எதிராக நாடு முழுவதும் ரத ஊர்வலம் மேற்கொண்டுள்ள பா.ஜ.க.மூத்தத்தலைவர் அத்வானி நேற்று காலை ஊர்வலத்திற்கு தயாராகி இருந்த நிலையில் மதுரை-இராஜபாளையம் நெடுஞ்சாலையில் ஆலம்பட்டி என்ற கிராமத்தில் தரைப்பாலம் ஒன்றின் கீழ் வெடிகுண்டு இருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது.
அப்போது காவல்துறை அதிகாரிகள் விரைந்து சென்று ஆய்வு மேற்கொண்டதில் 6- அடி நீளமுள்ள குழாயில் ஆர்.டி.எக்ஸ் வெடிமருந்து நிரப்பப்பட்டும், 25-மீட்டர் நீளமுள்ள மின்கம்பியில் இணைக்கப்பட்டும் கிடந்த வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டது. http://tamilantelevision.com/news.php?Id=1319868919

[16] நன்றி – தினமலர்.

[17] காமராஜர் அரங்கத்தில் நடந்த மாநாட்டில் மூப்பனார், கருணாநிதி முதலியோர் அவ்வாறு வெளிப்படையாக கிண்டலடித்து, நக்கலாக பேசியபோது, பலர் அதை கேட்க நேர்ந்துள்ளது. அபொழுது தான் மூப்பனாரின் மீதிருந்த மதிப்பும் சரிந்தது. அடடா மூப்பனாரை போன்றவர்கள் கூட இவ்வாறு பேசுகிறார்களே என்று வியப்படைய நேர்ந்தது, வருத்தப்படவும் செய்தது.

காஃபிர் நடத்தும் “மசூதி நுழைவு” போராட்டம்!

ஜனவரி 21, 2010

காஃபிர் நடத்தும் “மசூதி நுழைவு” போராட்டம்!

வேலூர் கோட்டைக்குள் தடையை மீறி நுழைய முயன்ற திருமாவளவன் கைது
ஜனவரி 21,2010,00:00  IST

http://www.dinamalar.com/Incident_detail.asp?news_id=15579

Important incidents and happenings in and around the world

வேலூர் (20-01-2010): வேலூர் கோட்டை மசூதிக்குள் தடையை மீறி நுழைய முயன்ற திருமாவளவன் உள்ளிட்ட 700 பேரை, போலீசார் கைது செய்தனர். வேலூர் கோட்டையில் இஸ்லாமியர்களுக்கு வழிபாட்டு உரிமையை வழங்கக்கோரி, விடுதலைச் சிறுத்தைகள் சார்பில், வேலூர் கலெக்டர் அலுவலகம் முன் நேற்று ஆர்ப்பாட்டமும், கோட்டை மசூதியில் நுழையும் போராட்டமும் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆர்ப்பாட்டம் நடத்த மட்டும் அனுமதி அளித்த போலீசார் கோட்டை மசூதிக்குள் நுழைய அனுமதி அளிக்கவில்லை. தடையைமீறி மசூதிக்குள் நுழையப் போவதாக திருமாவளவன் அறிவித்ததால் வேலூரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.வேலூர் கோட்டைக்கு சீல் வைக்கப்பட்டது. கோட்டை நுழைவாயில் மூடப்பட்டது. கோட்டைக்குள் இருக்கும் அரசு அலுவலகங்களில் பணிபுரியும் ஊழியர்கள் மட்டும் கோட்டைக்குள் அனுமதிக்கப்பட்டனர். பொதுமக்களுக்கு அனுமதிமறுக்கப்பட்டது. கோட்டைக்குள் இருந்தகடைகள் மூடப்பட்டன. கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோவிலில் சாமி கும்பிட சென்ற பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.ஆர்ப்பாட்டம் நடந்த சத்துவாச்சாரி கலெக்டர் அலுவலகத்தில் இருந்து கோட்டை வரை வழியெங்கும் சாலைகளில் தடைகள் அமைத்து பொதுமக்கள் செல்ல அனுமதிக்கப்படவில்லை. அந்த வழியாக சென்ற பஸ்கள் வேறு வழியாக திருப்பி விடப்பட்டன. வேலூர் டி.ஐ.ஜி., தாமரைக்கண்ணன் தலைமையில் 500 அதிரடிப்படை போலீசார், 1,000 ஆயுதப்படை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.வேலூரின் இயல்பு நிலை பாதிக்கப் பட்டது. சாலைகள் வெறிச்சோடிகிடந்தது. பெறும்பாலான கடைகள், வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டன. பிற்பகல் 12.20 மணிக்கு சத்துவாச்சாரி கலெக்டர் அலுவலகம் முன் விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.ஆர்ப்பாட்டம் முடிந்ததும், கோட்டை மசூதிக்குள் நுழையப் போவதாக அறிவித்து விட்டு, 1.30 மணிக்கு கோட்டை நோக்கி புறப்பட்ட திருமாவளவன் உள்ளிட்ட 700 பேரை, போலீசார் கைது செய்தனர்.

வேலூர் கோட்டைக்கு உள்ளே இந்திய தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள மசூதியில் முஸ்லிம்கள் தொழுகை நடத்த அனுமதிக்கவேண்டும் என வலியுறுத்தி 20-01-2010 அன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் கைது செய்யப்பட்டார். மாலையில் விடுவிக்கப்பட்டார். திருமாவளவனுக்கும் இதற்கும் என்ன சம்பந்தம் என்று தெரியவில்லை. முஸ்லிம்களைப் பொறுத்த வரைக்கும் அவர்கள் நூல்களான குரான், ஹதிஸ், ஷரீயத் என்னசொல்கின்றனவோ அதன்படி நடப்பர். பலகாலமாக தொழுகை நடக்கவில்லை என்றால், அவ்விடத்தை மசூதியாகக் கருதப்படமாட்டாது. அதேமாதிரி, அவர்கள் சொல்லும் இடத்தில் சுதந்திரத்துக்குப் பின் தொழுகையே நடக்கவில்லை.

ஆனாலும் கோட்டைக்குள் உள்ள தெற்கு காவல் நிலையத்துக்கு எதிரே ஒதுக்கப்பட்டுள்ள தனி இடத்தில் இப்போது தொழுகை நடந்து வருகிறது.

வேலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பு இன்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் திருமாவளவனுடன் அக்கட்சித் தொண்டர்களும் ஏராளமானோரை போலீசார் கைது செய்துள்ளனர். கைது நடவடிக்கையால், அசம்பாவிதங்கள் நிகழாமல் தடுக்கும் வகையில் கலெக்டர் அலுவலகம் மற்றும் கோட்டையைச் சுற்றிய பகுதிகளிலும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

முன்பு முஸ்லிம்கள் இதே மாதிரியான கோரிக்கைவைத்தனர். ஆனால் ASI மறுத்துவிட்டது. ஆகவே முஸ்லிம் அல்லாத திருமாவளவன் இதனைப் பிரச்சியாக்கி “போராட்டம்” நடத்துகிறேன் என்றும், முஸ்லிம் அதற்கு துணை போவதும் ஆச்சரியமாகத்தான் உள்ளது!

2008ல் நடந்த நிகழ்ச்சிகள்: வேலூர், மார்ச் 4, 2008: வேலூர் கோட்டை மசூதியில் தடையை மீறி தொழுகை நடத்துவோம் என்று தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் அறிவித்ததைக் கண்டு சில முஸ்லிம் அமைப்புகளே கவலை தெரிவித்துள்ளன.  வேலூர் கோட்டையின் பராமரிப்புப் பணியை இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறை 1921-ல் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது. கோட்டைக்குள் இருந்த ஸ்ரீ ஜலகண்டேஸ்வரர் கோயில், மசூதி ஆகியவற்றில் அப்போது வழிபாடு நடைபெறவில்லை. ஆனால் சி.எஸ்.ஐ. தேவாலயத்தில் மட்டும் வழிபாடு தொடர்ந்து நடந்து வந்தது.

முஸ்லிம்கள் தொழுகை வேண்டாம் என்று ஒப்புக்கொண்டது: இந்நிலையில் ஜலகண்டேஸ்வரர் கோயிலை மக்கள் வழிபாட்டுக்கு திறந்துவிட பல்வேறு போராட்டத்தை வேலூர் மக்கள் நடத்தி வந்தனர். ஒருகட்டத்தில் இதனால் சட்டம் – ஒழுங்கு பிரச்னை ஏற்படும் நிலைக்கு மக்களின் போராட்டம் தீவிரமடைந்தது. அப்போதைய மாவட்ட ஆட்சியர் கங்கப்பா இதற்கு சுமுக தீர்வுகாண நடவடிக்கை மேற்கொண்டார். இதன் அடிப்படையில் 1981-ம் ஆண்டு கோயிலை வழிபாட்டுக்கு திறந்துவிட முடிவு செய்ததைத் தொடர்ந்து, கோட்டை வளாகத்திலேயே 1750-ம் ஆண்டில் கட்டப்பட்ட மசூதியையும் வழிபாட்டுக்கு திறந்து விடலாம் என்ற முடிவில் முஸ்லிம் அமைப்புகளைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்களை அழைத்து ஆலோசனை நடத்தினார் ஆட்சியர். இதில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் ஏ.கே. அப்துல் சமது, ஆடிட்டர் ஷெரீப் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் அந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டனர். அப்போது அவர்கள், அருகிலேயே ஹிந்து கோயில் உள்ளதால், மசூதியில் 5 வேளை தொழுகை நடத்தும்போது தேவையில்லாத பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே மசூதியில் வழிபாடு வேண்டாம் என்று கையொப்பமிட்டு கொடுத்துள்ளனர். எனவே 1981 மார்ச் 16-ம் தேதி சத்துவாச்சாரியில் இருந்த சிவலிங்கத்தை ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஊர்வலமாக எடுத்துச் சென்று ஜலகண்டேஸ்வரர் கோயிலில் பிரதிட்சை செய்து வழிபடத் தொடங்கினர்.

த.மு.மு.க பிரச்சினையைக் கிளப்பியது: மசூதியை இஸ்லாமியர்களின் தொழுகைக்கு திறந்துவிட வேண்டும் என்று முதலில் கோரிக்கை விடுத்த திராவிட முஸ்லிம் முன்னேற்றக்கழக பொதுச் செயலாளர் இக்பால் இதுகுறித்து கூறியதாவது: எங்கள் அமைப்பின் சார்பில் கோரிக்கை விடுத்தபோது, அப்போது மாவட்ட ஆட்சியராக இருந்த சிவக்குமார், மசூதி தொடர்பான ஆவணங்களைக் காட்டி, இங்கு தொழுகை வேண்டாம் என்று முஸ்லிம் பெரியவர்களே எழுதிக் கொடுத்த கடிதத்தைப் பார்த்தவுடன், காரணம் இல்லாமல் பெரியவர்கள் செய்திருக்கமாட்டார்கள் என்று அந்த கோரிக்கையை வலியுறுத்துவதை நிறுத்திவிட்டோம். தற்போது தடையை மீறி தொழுகை நடத்துவோம் என்று தெரிவித்துள்ள ஜவாஹிருல்லா தி.மு.க. கூட்டணியில் இருக்கிறார். அவர் நேரடியாக முதல்வரிடம் பேசி மசூதியை தொழுகைக்கு சுமுகமாக திறந்து விடட்டும். அல்லது தனது பதவியை ராஜிநாமா செய்யட்டும். அதைவிடுத்து பொதுமக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தும் செயல்களில் ஈடுபடுவது நல்லதல்ல என்றார். இவ்வளவு நாள்கள் அமைதியாக இருந்துவிட்டு, முஸ்லிம் பெரியவர்களே பிரச்னை கூடாது என்று முடிவு செய்துள்ள நிலையில் த.மு.மு.க. இப்பிரச்னையை கையிலெடுத்துள்ளது அனைவரிடமும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே முன்னதாகவே இப்பிரச்னையில் சுமுகத் தீர்வு காண மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அய்யப்பன் பிறப்பு வளர்ப்பு தெரிந்தால் மாலை போடுவீர்களா?

நவம்பர் 29, 2009

அய்யப்பன் பிறப்பு வளர்ப்பு தெரிந்தால் மாலை போடுவீர்களா?

இது “விடுதலை” என்கின்ற திராவிட கழகத்தினரின் நாளிதழில் “ஓடும் நதி” என்ற பெயரில் மறைந்து கொண்டு யாரோ ஒரு இந்து-விரோதி எழுதி வெளிவந்த சிறு கட்டுரையாகும். இன்றும் (டிசம்பர் 2013) கீழ்கண்ட தளத்தில் இருக்கின்றது:

http://viduthalai.periyar.org.in/20091129/news22.html

அதனால் தான், கீழ் கண்ட குறிப்பையும் நவம்பர் 2009லேயே செர்த்திருந்தேன்.

இதோ, ஐயப்பன் பக்தர்களையும் விட்டுவைப்பதில்லை.வருடா வருடம் இதே மாதிரியான தூஷணங்கள்! ஆனால், யாரும் நடவடிக்கை எடுக்காததால், இப்படியே அச்சடித்து இப்பத்திரக்கை நடதத்தப் படுகிறது.இதன் ஆசிரியர் கே. வீரமணியோ ஒரு நிகர்-பல்கலைக் கழகம் வைத்து நடத்துகிறார்.அதில் வேலை செய்யும் பலர் மாலை அணிந்துள்ளனர். அவர்கள் என்ன செய்வார்கள்?

அவர்கள் என்ன நினைப்பார்கள்?

அங்கு படிக்கும் மாணவர்கள் என்ன நினைப்பார்கள்?

ஏனெனில் மாணவர்களில் பலரும் மாலை போட்டுக் கொண்டிருக்கிறார்கள்!!

குறிப்பு: ஐய்யப்பப் பக்தர்களைப் புண்படுத்த இப்பதிவு செய்யப்படவில்லை. உண்மையில் நாத்திகவாதிகளின் மனப்பாங்கை எடுத்துக் காட்டி, அவர்களைன் போலித்தனத்தை எடுத்துக் காட்டவே நான் இப்பதிவை செய்துள்ளேன்.     

                                                                                                                  சென்னை, நவ. 29_ கேரளம் _ கேர என்ற மலையாள சொல்-லுக்கு தென்னை என்று பெயர். கேரளம் என்றால் தேங்காய் விளைகிற இடம் என்று பெயர். சந்தேகமாக இருந்-தால், உங்களுக்குத் தெரிந்த மலையாள சேட்டான், சேச்சியிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். கேரளாவிலிருந்து வந்த தேங்காயை, தமிழ்நாட்-டுத் தமிழன் விலைக்கு வாங்கி, தலையில் இரு-முடிகட்டி திரும்பவும் எங்கிருந்து வந்ததோ, அங்கேயே பக்தியின் பெயரால் கொண்டு போய் சேர்கிறான். அந்த தேங்காய்களை சபரிமலை கோவில் நிர்-வா-கமும் ஏதாவது எண்-ணைய் எடுக்கிற நிறுவனத்-திற்கு மொத்த விலைக்கு விற்று விடுகிறது. அந்த நிறுவனங்கள் தமிழ்-நாட்-டில் சிறு சிறு பாக்கெட், பாட்டில்களில் தேங்காய் எண்ணையை அடைத்து வந்து விற்கிறது. தேங்-காயை விலைக்கு வாங்-கிய தமிழன்,அதே தேங்-காயை, எண்ணைய் என்ற வடிவத்தில் திரும்ப-வும் விலைக்கு வாங்கு-கிறான். அதாவது புரிகிற மாதிரி சொல்வது என்-றால், ஒரு பொருளை இரண்டு முறை விலைக்கு வாங்குகிறான். கேரளக்காரன் தமிழ-னின் தலையில் இப்படித்-தான் மிளகாய் அரைக்-கிறான்! அய்யப்பனுக்கு மாலையணிந்து கோவி-லுக்கு போய் திரும்பும் வரை மிகவும் ஒழுக்கமாக நடந்து கொள்ள வேண்-டும் சரியாகச் சொன்-னால், கோயிலுக்குப் போய் திரும்பும் வரைக்கு-மாவது நல்லவர்களைப் போல நடியுங்கள் என்-கிறார்கள்! கேரள அய்யப்பனுக்கு மாலை போட்டுப் போகிற தமிழர்கள் தயவு செய்து அய்யப்பனின் பிறப்பு, வளர்ப்பு கதையை படித்த பிறகு,தைரியம் இருந்தால் அதற்கு பிறகு மாலை போடுங்கள்! எவ்வளவுக் எவ்வளவு அசிங்கங்-கமாக, கேவலமாக இருக்க வேண்டுமோ, அவ்வள-வுக்கு அவ்வளவு ஆபாச-மாக இருக்கிறது, அய்யப்-பனின் பிறப்பு வளர்ப்பு வரலாறு! அவைகளை படித்தால் ஒழுக்கக் கேடு-கள் தான் நாடெங்கும் தலை விரித்தாடும்..! கேரளா கிறித்தவர்கள் அதிகம் நிறைந்த மாநிலம்.

அதாவது அய்யப்பன் பிறந்து வளர்ந்து கிழித்த-தாக கூறப்படும் கேரளத்-தில், கேரள மக்கள் அய்யப்-பன விட இயேசு கிறிஸ்துவைத் தான் அதிகம் பின்பற்று-கிறார்-கள்! இது ஒன்று போதாதா? அய்யப்பன் வெறும் பொய்யப்பன் என்று புரிந்து கொள்ள… அதா-வது தன்னை சிலுவை-யில் உயிரோடு அறைந்த போது தன்னையே காப்-பாற்றிக் கொள்ளாத இயேசு தான் இவர்களை காப்பாற்றும், சக்தி வாய்ந்த கடவுளாம்! கொடுமைடா சாமி! நீங்கள் சொல்வதெல்-லாம் சரிதான்ங்க, ஆனால் நம்மை மீறிய சக்தி ஒன்னு இருக்கு, அதுக்கு பெயர் தான் கடவுள் என்பர்களே! கடவுளின் பெயரால் இந்த கேணத் தனங்கள், எதற்கு? கடைசியாக உங்களிடம் வேண்டிக் கொள்வ-தெல்-லாம், ஒன்றே ஒன்று தான்! தமிழர்களே! தமிழர்-களாக இருங்கள்!!

நன்றி: ஓடும் நதி

பின்குறிப்பு: இந்த இடுகை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இடப்பட்டது. நாத்திகம் என்ற போர்வையில், வீரமணி எப்படி தூஷணம் செய்கிறார் என்பதைத்தான் எடுத்துக் காட் ட அவ்வாறு செய்யப்பட்டது. கோடிக்கணக்கான பக்தர்களின் உணர்வுகளைப் புண்படுத்தக் கூடாது என்ற எண்ணம் அந்த மெத்த “படித்த” மேதாவிக்கு, நிகர்நிலை பல்கலைக்கழக வேந்தருக்குத் தெரியாமல் இருப்பதையும் எடுத்துக் காட்டப்பட்டது. இப்பொழுதும் இதற்கு பதில்கள் வருவதால், இக்குறிப்பு சேர்க்கப்பட்டுள்ளது.

 2009லிருந்து 2013 வரை படிப்பவர்கள் இதனை முழுவது படிக்காமலேயே, என்னை திட்டி பதில்களை பதிவு செய்து வருகிறார்கள்.

ஆகவே, தயவு செய்து முழுமையாக படித்து விட்டு பதிலை இடுங்கள் .

வேதபிரகாஷ்

04-12-2013