செபாஸ்டியன் சீமான் திடீரென்று “முருக பக்தன்” ஆகியது, இந்து வேடம் போடுவது, ஆனால் கருவறை நுழைவு போராட்டம் நடத்துவது (2)
பெஞ்சமின், அலாவுதீன், செந்தில்நாதன் சேகுவேரா, சுபாஷ் சந்திரபோஸ்: “பொதுக்கூட்டத்தில் சீமான், தனது கட்சியை சேர்ந்த சிலர் தமிழில் பெயரை மாற்றிக் கொண்ட விபரத்தை வாசித்தார்”, என்று தினமலர் கூறுகிறது[1]. கூட்டத்தில் தொடர்ந்து வீரதமிழர் முன்னணி அமைப்புக்கான மாநில ஒருங்கிணைப்பாளர்களாக பெஞ்சமின், அலாவுதீன், செந்தில்நாதன் சேகுவேரா, சுபாஷ் சந்திரபோஸ் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டனர்[2] என்று அவர்களது இணைதளம் வெளியிட்டுள்ளது. இதென்ன செக்யூலரிஸ அணியா, குழப்பக்கூட்டமா, “இந்தியன்” இல்லை என்கின்ற இந்திய-விரோதி அமைப்பா, “திராவிடன்” அல்ல என்று சொல்லி ஏமாற்றும் சித்தாந்த கும்பலா, “தமிழனாக” இருப்போன் என்று தமிழ் கலாச்சாரம், பாரம்பரியம், பண்பாடு, நாகரிகம் முதலியவற்றை தூஷித்த கும்பலின் மறு அவதாரமா அல்லது மறுபடியும் “தமிழர்களின்” பெயரைச் சொல்லிக் கொண்டு, ஏமாற்ற தோண்டியுள்ள இன்னொர்ய் மோசடி கும்பலா என்று தமிழகள் விசாரித்துத் தெரிந்து கொள்ள வேண்டும்.
செபாஸ்டியன் சீமானின் இந்துவிரோத பேச்சுகள் அதிகமாகவே உள்ளன[3]. நாத்திக போர்வையில், பெரியார் சொன்னதை, இன்னும் அதிகமாகக் கொச்சைப்படுத்தி, இந்து மதத்தைச் சாடிவருவது, இவரது வேலையாகி விட்டது. நடுவே தன்னை “செக்யூலராக”க் காட்டிக்கொள்ள, சிறிது கிருத்துவத்தைக் கிண்டலடிப்பார். ஆனால், இஸ்லாமைப் பற்றி ஒன்றும் சொல்லாதது, விமர்சனிக்காதது, இவரது போலித்தனத்தை எடுத்துக் காட்டுகிறது. இத்தகைய கொள்கையற்ற மனிதர், “தமிழர்”, “பிராபகரன்”, “அம்மா”, “அப்பா”…………….என்ற வார்த்தை ஜாலங்களுடன்[4], மயிரு, மசுரு,………………………., போன்ற செம்மொழி வார்த்தைகளுடன் பவனி வந்து கொண்டிருக்கிறார். இவரது பேச்சுகள் அடங்கிய வீடியோக்கள் இணைதளங்களிலேயே உள்ளன, அவற்றை கெட்டாலே-பார்த்தாலே, உண்மையினை அறிந்து கொள்ளலாம். ஆகவே, “இந்துக்கள்” என்பவர்களும் இவரிடம் ஜாக்கிரதையாக இருக்கவேண்டிய அவசியம் உள்ளது.
சீமானின் கபாலீஸ்வரர் கோவில் கருவறை நுழைவு போராட்டமும், பழனி கோவில் கருவறை நுழைவு முயற்சிகளும்: 14-04-2010 அன்று கிருத்துவர்கள் சென்னை நினைவரங்கம் என்ற இடத்தில் ஆர்பாட்டம் செய்ய போலீஸாரிடம் அனுமதி கேட்டது போலவும், அதற்கு அனுமதி மறுக்கப் பட்டது போலவும், தெய்வநாயகம் என்ற புரட்டு ஆராய்ச்சியாளர், முந்தைய மோசடி-ஆராய்ச்சி கும்பல் அருளப்பா-ஆச்சார்யா கும்பல் கும்பலைச் சேர்ந்த ஆள், “தமிழர் சமயம்” என்ற இதழில் வெளியிட்டு இருக்கிறார் [மலர்.1; மே 2010, இதழ்.5, பக்கம்.10]. பிறகு வேறு இடத்தில் நடந்த கூட்டம், கபாலீஸ்வரர் கோவிலில் நடந்தது என்று “இந்தியன் எக்ஸ்பிரஸ்” வெளியிட்டது[5]. அக்கூட்டத்தில் செபாஸ்டியன் சீமான் பேசியது நினைவில் கொள்ளவேண்டும். இப்பொழுது, பழனிக்கு வந்துள்ளனர். பழனியாண்டவர் கல்லூரியில் இருந்து ஊர்வலமாக மலைக்கோவில் நோக்கி செல்வோம் என்று, திடீரென பஸ் ஸ்டாண்ட் ரவுண்டானாவில் இருந்து மலைக்கோயில் நோக்கி சென்றனர்[6]. அப்போது, “முருகனை காண மலைக்கோயிலுக்கு செல்கிறோம்’ என சீமான் மற்றும் தொண்டர்கள் மலை ஏறத்துவங்கினர். கோவிலில் சீமான் தொண்டர்களுடன் கருவறை நுழைவு வாயிலில் போராட்டம் நடத்தபோவதாக போலீசாருக்கும் மற்றும் இந்து முன்னணி அமைப்பினருக்கும் தகவல் தெரிந்ததால், அவர்கல் தடுத்துத்ன் திருப்பி அனுப்பப்பட்டனர்.[7]. இதுகுறித்து டி.எஸ்.பி., சண்முகசுந்தரம் கூறுகையில், “”ஊர்வலம், பொதுகூட்டம் நடத்த அனுமதி வாங்கியிருந்தனர். திடீரென ஊர்வலத்தின் போது மலைக்கோயிலுக்கு செல்வதாக கூறினர். இதனால் தடுத்தோம்,” என்றார். இதனையடுத்து சீமான் வெளிபிரகாரத்தில் வணங்கி விட்டு பொதுக்கூட்டத்திற்கு சென்றார் என்பதும் நாடகமே என்று அறிந்து கொள்ளலாம்.
இந்தியாவை, தமிழ் பேசும் மக்களை ஏமாற்றிய சீமான்: ஒருபக்கம் இந்திய விரோத சக்திகளுடன் சேர்ந்து கொண்டு கூட்டங்களை நடத்துவது[8], இன்னொரு பக்கம் அடிப்படைவாத ஜிஹாதிகளை ஆதரிப்பது, பெரியாரிஸம் பேசுவது, ……இப்படி குழப்;பக் கலவையாகத்தான் செபாஸ்டியன் சீமான் இருந்துள்ளார். தமிழருக்கு யாசின் மாலிக்கைப் பற்றி என்ன தெரியும், முஸ்லீம் என்று சொல்லிக் கொண்டு கூத்தடிப்பது தெரியுமா? அப்சல்குருவின் பெயரை வைத்துக் கொண்டு, ஆபிஸ் சையதுடன் சேர்ந்து கூட்டத்தில் கலந்து கொண்டது தெரியுமா? என்று முன்பு கேள்விகளை எழுப்பியிருந்தேன்[9]. “ஆரியர்-திராவிடர்”ரென்ற செல்லாத சித்தாந்தத்தைப் பேசி சில மக்களைத் தூண்டி விட்டுக் கொண்டிருக்கிறார். அந்த சரித்திரத் தன்மையற்ற புளுகுகளை வைத்து புத்தகம் வேறு எழுதியிருக்கிறார்! கால்டுவெல் துரோகத்தை இவர் புதுப்பிக்கிறார் போலும். இதில் இவர் “நாடார்” என்று வேறு சொல்கிறார்கள். பிறகு நாடார்களை இழிவு படுத்திய கால்டுவெல் சித்தாந்தத்தை வைத்துக் கொண்டு தமிழர்களை ஏமாற்ற யார் கற்றுக் கொடுத்தது? கனடாவில் இந்து கோவில்கள் கிருத்துவர்களால் தவறாகப் பயன்படுத்தப் பட்டதால், தண்டம் செல்லுத்த வேண்டியதாகியது[10]. இலங்கையில் முஸ்லீம்கள், முஸ்லீம்களாகத்தான் இருந்து செயல்பட்டனர், சாதித்துக் கொண்டனர். முன்பே பலமுறைக் குறிப்பிட்டப் படி, தமிழக ஊடகங்களே “இலங்கை முஸ்லீம்கள்”, “இலங்கை தமிழர்கள்” என்று பிரித்துக் காட்டி, தமிழர்களை ஒதுக்கினர்[11]. ஆனால், இவரோ பழனிபாபா விழாவில் கலந்து கொண்டு பேசுகிறார். இந்திய தமிழர்களுக்கோ, இலங்கைத் தமிழர்களுக்கோ இவரால் எந்த பிரயோஜனமும் இல்லை என்றும் எடுத்துக் காட்டப்பட்டது[12].
ஜான் சாமுவேல் பாதையில் செபாஸ்டியன் சீமானா?: ஜான் சாமுவேல் என்ற கிருத்துவர் 2004 வரை அனைந்துலக ஸ்கந்தா-முருகா மாநாடு என்ற பெயரில் ஒரு பிரைவேட் கம்பெனியை வைத்துக் கொண்டு, அதற்கு சேர்கள் / பங்குகள் எல்லாம் வாங்கச் சொல்லி நண்பர்களை, மாநாட்டுக்கு வந்தவர்களை வற்புறுத்தி வந்தார்[13]. முருக பக்தர் போல விபூதி வேட்டியெல்லாம் கட்டிக் கொண்டு, காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதியை எல்லாம் போய் பார்த்திருக்கிறார், இந்த சாமுவேல். முதல் மாநாடு சென்னையில், ஆசியவியல் வளாகத்தில் 1997ல் நடந்தது. அப்பொழுதே, இவர் ஒரு கிருத்துவ கூட்டத்தைக் கூட்டி வந்து, முருகன் தான் ஏசு என்பது போல ஆய்வுக்கட்டுரைகளை படிக்க வைத்ததுடன், விழா மலரிலும் வெளியிய வைத்தார். அது மட்டுமல்ல, தமிழ்-சமஸ்கிருத பேதத்தையும் கிளப்பிவிட்டார். முருகன் – கந்தன் – கார்த்திகேயன் – சுப்ரமணியன் என ஆராய்ச்சி செய்வதாக இருந்தால், சமஸ்கிருதம் தெரியாமல் எந்த ஆரய்ய்ச்சியும் செய்யமுடியாது. இருந்தாலும் சக்திவேல் முருகனார் போல ஆட்களைத் தூண்டி விட்டு பிரச்சினையைக் கிளப்பினார். முருகனைப் பிடித்துக் கொண்டிருந்த ஜான் சாமுவேல், திடீரென்று முருகனை, எம்பெருமானை அம்போ என்று விட்டுவிட்டு, தாமஸைப் பிடித்துக் கொண்டது என்ன ரகசியம் என்பதை ஆராய ஆரம்பித்தபோது தான், முந்தைய அருளாப்பா-ஆச்சார்ய பால் கோஷ்டிகளின் மோசடிகளை விட, ஒரு பெரிய மோசடியை ஆரம்பித்துள்ளனர் என்று தெரியவந்துள்ளது[14]. இதே பாணியில் தான் செபாஸ்டியன் சீமானும் இறங்கியுள்ளார். பிஷப்புகளை சந்தித்து, தெய்வநாயகத்துடன் சேர்ந்து கபாலீஸ்வரர் கோவில் கருவறைப் போராட்டம் என்று ஆரம்பித்து, பழனிபாபா நினைவுவிழவில் கலந்து கொண்டு, இப்பொழுது பழனிக்கு வந்துள்ளார்.
© வேதபிரகாஷ்
09-02-2015
[1] தினமலர், பழநி கோயிலில் சீமான்: போலீசார் அனுமதி மறுப்பு, பிப்ரவரி.08-02-2015, 01:17.
[2] http://www.dailythanthi.com/News/Districts/dindugal/2015/02/07211902/Sri-Lankan-Tamils-issue-the-decision-of-the-State.vpf
[3] http://www.keetru.com/periyarmuzhakkam/jul08/seemaan_1.php
[4] நான் சீமான் ஆனது எப்படி?” – ஆனந்த விகடன், http://www.naamtamilar.org/beta/textnews_detail.php?id=807
[5] இந்தியன் எக்ஸ்பிரஸ், ஏதோ அந்த கூட்டம், கபாலீஸ்வரர் கோவிலில் உள்ளேயே நடந்தது மாதிரி, ஒரு புகைப்படத்துடன், செய்தி வெளியிட்டிருக்கிறார்கள். அதற்கு கடிதம் எழுதியதற்கு, இன்று வரை மறுப்பு அல்லது அது தவறு என்று வருத்தம் தெரிவித்தோ என்ற செய்தியும் வரவில்லை / வெளியிடவில்லை.
[6] தினமலர், பழநி கோயிலில் சீமான்: போலீசார் அனுமதி மறுப்பு, பிப்ரவரி.08-02-2015, 01:17.
[7] மாலைமலர், பழனி மலைக்கோவிலுக்குள் ஊர்வலமாக செல்ல சீமானுக்கு அனுமதி மறுப்பு, பதிவு செய்த நாள் : ஞாயிற்றுக்கிழமை, பெப்ரவரி 08, 1:11 PM IST.
[8] https://atrocitiesonindians.wordpress.com/2013/05/19/why-anti-national-yasn-malik-and-sebastian-seeman-come-together/
[9] https://atrocitiesonindians.wordpress.com/2013/05/19/yasin-malik-and-sebastian-seeman-and-their-affairs/
[10] https://atrocitiesonindians.wordpress.com/2013/05/20/526-sebastian-seeman-and-yasin-malik-their-activities/
[11] https://atrocitiesonindians.wordpress.com/2013/05/21/what-yasin-malik-and-sebastian-seeman-can-do-to-indians-or-tamils/
[12] https://atrocitiesonindians.wordpress.com/2013/05/29/anti-indian-propaganda-continues-by-sebastian-seeman-party/
[13] https://christianityindia.wordpress.com/category/%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D/
[14] https://thomasmyth.wordpress.com/2011/01/21/why-asian-institute-of-studies-involves-in-the-spread-of-thomas-myth/