Archive for the ‘கருப்பு வேஷ்டி’ Category

கருணாநிதி சிலை திறப்பு – சிலை வைத்தல், எடுத்தல், கடத்தல், உடைத்தல் எல்லாமே திராவிட கலாச்சாரம், பண்பாடு, நாகரிகம் தான்! சேர்ந்த அரசியல் அநாகரிகம் [2]

திசெம்பர் 17, 2018

கருணாநிதி சிலை திறப்புசிலை வைத்தல், எடுத்தல், கடத்தல், உடைத்தல் எல்லாமே திராவிட கலாச்சாரம், பண்பாடு, நாகரிகம் தான்! சேர்ந்த அரசியல் அநாகரிகம் [2]

EVR-karu-atheist-path-of-jihadi

1973, ஈவேராவுக்கு சிலை வைத்த போது, மறுபடியும் கருணாநிதி சிலை பேச்சு எழுந்தது: அதன் பின்னர் 1973-ம் ஆண்டு பெரியார் மறைவுக்குப் பின்னர் திமுக சார்பில், சென்னை அண்ணா சாலையில் (சிம்சன் அருகில்) பேராசிரியர் க.அன்பழகன், தலைமையில்,  மணியம்மை முன்னிலையில், பெரியார் சிலையை அப்போதைய முதல்வர் கருணாநிதி திறந்து வைத்தார். சிலை திறப்பு விழாவில் பேசிய அப்போதைய தி.க.தலைவர் மணியம்மை, “சொன்னபடி பெரியாருக்கு சிலை வைத்துவிட்டீர்கள். பெரியாருக்கு சிலை திறந்த பின்னர் எனக்கு சிலை வைக்கலாம் என்று பேசிய நீங்கள் இனியும் சாக்குப்போக்கு சொல்ல முடியாது தி..சார்பில் உங்களுக்குச் சிலை அமைக்க அனுமதி தரவேண்டும் என்று மேடையிலேயே கோரிக்கை வைத்தார். திராவிடர் கழகம் சார்பில் அண்ணா சாலையில் முழு உருவ வெண்கலைச் சிலை அமைக்க உள்ளோம், இதற்கு மறுப்பு கூறக்கூடாது,” என்று பேசினார்.

Karunanidhi statue broken in December 1987

சிலை விவகாரத்தில் திமுகஅதிமுக மோதல்: சிலைத் திறப்பை எதிர்த்து அதிமுக சார்பில் வழக்கு தொடுக்கப்பட்டது[1]. துலுக்கர் எதிர்க்காதது ஆச்சரியமே! ஒருவேளை, அப்பொழுது தர்கா தான் இருந்தது என்று இப்பொழுது வாதிக்கலாம்! முதலமைச்சர் கலைஞர் வெளியூர் பயணத்தில் இருந்தபோது, இடையில் அ.தி.மு.க.வினால் ஏற்பட்ட சட்டப் போராட்டத்தையும் திராவிடர் கழகம் எதிர் கொண்டு வென்று, அண்ணாசாலை- ஜெனரல் பேட்டர்ஸ் சாலை சந்திப்பில் முறைப்படி அரசாணை பெற்று, 21.9.1975 அன்று பெரியதோர் திருவிழாவாக நடத்தினோம். (G.O. MS.No.877 Dated 21.5.1975, Rural Development and Local Administration Department). அந்த வழக்கை திராவிடர் கழகம் வென்று அண்ணாசாலை தர்கா அருகே 1975-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 21-ம் தேதி கருணாநிதியின் வெண்கலச்சிலை திறக்கப்பட்டது[2].

Kundrakkudi, EVR nexus-2

குன்றக்குடி அடிகளார் சிலையைத் திறந்து வைத்தார். இளமையான தோற்றத்துடன் மேடையில் பேசுவதுபோன்று கையை மூன்று விரல்களை உயர்த்திய நிலையில் அமைக்கப்பட்ட தத்ரூபமான சிலை அது. அதன் பின்னர் 1987-ம் ஆண்டு டிசம்பர் மாதம் எம்ஜிஆர் மறைந்தபோது ஏற்பட்ட கலவரத்தில் கருணாநிதியின் சிலையை சில விஷமிகள் கடப்பாரையால் இடித்துத் தள்ளினர். சிலையை உடைத்ததைக்கூட நகைச்சுவையாக எடுத்துக்கொண்ட கருணாநிதி அந்தப்படத்தை முரசொலியில் வெளியிட்டு “உடன் பிறப்பே, செயல்பட விட்டோர் சிரித்து மகிழ்ந்து நின்றாலும் அந்த சின்னத்தம்பி என் முதுகிலே குத்தவில்லைநெஞ்சிலே தான் குத்துகிறான், அதனால் நிம்மதி எனக்கு. வாழ்க! வாழ்க!” என்று குறிப்பிட்டிருந்தார்[3]. அதன்பின்னர் அதே இடத்தில் திராவிடர் கழகம் சார்பில் சிலை அமைக்க முயற்சி எடுத்தபோது மனதை பாதித்த அந்த நிகழ்வால் கருணாநிதி அதைத் தடுத்துவிட்டார்[4]. இதையடுத்து தி.க.வினர் மீண்டும் சிலை அமைக்கும் முயற்சியைக் கைவிட்டனர். இந்நிலையில் கருணாநிதி மறைந்தவுடன் மீண்டும் அதே இடத்தில் சிலை அமைக்கப்படும் என்று தி.க.தலைவர் வீரமணி சமீபத்தில் அறிவித்திருந்தார். மீண்டும் அதே இடத்தில் சிலை கம்பீரமாக எழுந்து நிற்கும் என்று அறிவித்திருந்தார். இந்நிலையில் திமுக சார்பில் அண்ணா அறிவாலயத்தில் அண்ணா சிலை அருகே அவரை நேசித்த தமையன் கருணாநிதியின் சிலை அமைக்கப்படும் என திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்து அதற்கான செயலிலும் இறங்கினார். வேக வேகமாக சிலை அமைக்கும்பணி நடந்தது. அதை பலமுறை நேரில் பார்வையிட்டு திருத்தங்கள் கூறி சரியான முறையில் தத்ரூபமாக கொண்டுவரும் செயலில் ஸ்டாலின் செயல்பட்டார்.

Kundrakkudi, Sonia, Rahul

ஈவேராவின் பிடிவாதம், வீரமணியின் தீவிரம், ஸ்டாலினை துரிதப் படுத்தியதா?: 07-08-2018 அன்று கருணாநிதி காலமானார். அப்பொழுதே, அவரைப் புதைக்க சர்ச்சை உண்டானது. அண்ணாவுக்கு அருகில் புதைக்க வேண்டும் என்று திமுக ஆர்வம் காட்டியது. மெரினாவில், இனி யாரும் சிலை வைக்க்க் கூடாது என்று ஒரு திமுககாரரே வழக்குப் போட்டிருந்தார். ஒருவழியாக நீதிமன்றத்தில் வழக்குகள் விலக்கிக் கொள்ளப் பட்டதும், மெரினாவில் உடல் புதைக்கப் பட்டது. பிறகு தினம்-தினம் அரசியல் தலைவர்கள், நண்பர்கள், பிரபலங்கள் என்று வந்து எல்லா விதமான    கிரியைகளையும் செய்து சென்றனர். வைர்முத்து, பால் சகிதம் வந்து, பூஜை செய்து, பால் சொரிந்து சென்றது, விமர்சனத்திற்கு உள்ளானது.

Karunanidhi statue, Stalin keen interest

2018ல் சிலை வைக்க ஸ்டாலினின் பிடிவாதம்:  ஈவேராவே கருணாநிக்கு சிலை வைக்க வேண்டும் என்று 1968 மற்றும் 1971ல் ஆசைப்பட்டாராம், ஆனால், கருணாநிதி மறுத்தாராம்! 1987ல் உடைக்கப் பட்டப் பிறகு, வீரமணி அதே இடத்தில் சிலை வைக்க ஆசைப் பட்டாராம், ஆனால், கருணாநிதி, அவரது குடும்பம் மற்றும் திமுகவினர் அதற்கு ஒப்ப்புக் கொள்ளவில்லை. வழக்கம் போல ஆஸ்தான ஜோதிடரிடத்தில் கருத்து கேட்ட போது, வேண்டாம் என்றதால், அத்திட்டம் முடிவடைந்தது. வீரமணி விடவில்லை ஆகஸ்ட் 18, 2018 அன்று வெண்கலத்தில் சிலை வைப்பேன் என்று ஆரம்பித்தார், வைகோ தொந்தரவும் சேர்ந்தது.  உடனே, ஸ்டாலின் ஆலோசனை செய்ய ஆரம்பித்தார். தயாளு அம்மாள் வேண்டாம் என்று சொல்லி விட்டார். இதனால், தேர்தல் சமயத்தில் லாபம் பெற கருணாநிதி சிலை செய்யப் பட்டு, இறந்ததிலிருந்து 130வது நாளில் சிலை திறப்பு என்று பிடிவாதமாக ஸ்டாலின்  இறங்கினார்.

கரு-இந்திராவை வசை பாடியது- சர்வாதிகாரி, காந்தாரி.....

மாமியாரை வைததையும், கொலை செய்ய தீர்மானம் போட்டதையும், பதியை கொன்ற பழியையும் மறந்து சிலை திறக்கும் விதி! ஸ்டாலின் ஒப்புக் கொண்டதால், சிலை தயாரிக்கும் வேலை ஆரம்பித்தது. இனி கருணாநிதி பக்தி மிகும் நிலையில், பெரியாரின் மனைவிக்கு சிலை வைத்தது போல, அவரது மனைவிக்கும் சிலைவைக்கப் படலாம்! ஆகஸ்ட் 7ம் தேதியில் அண்ணா திவசம் போலவே கடை பிடிக்கலாம், கோவில்களில் வருடாந்திர சாப்பாடு போடலாம்! சிற்பி தீனதயாளனின் குழுவினரால் உருவாக்கப்பட்ட கருணாநிதியின் சிலை காங்கிரஸின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, ஆந்திரா மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு, கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் மற்றும் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி ஆகியோர் கலந்துகொள்ளும் நிகழ்வில் இன்று மாலை அண்ணா அறிவாலயத்தில் அண்ணா சிலைக்கு அருகில் திறக்கப்பட்டது. அந்த வகையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் சிலை திறப்பு விழாவுக்கு சோனியா காந்தி மற்றும் ராகுல்காந்தி உள்ளிட்டோர் மாலை சென்னை  வந்தடைந்தனர். அதேபோல கேரளா முதல்வர் பினராயி விஜயன், ஆந்திரா முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு உள்ளிட்டோரும் வருகை தந்தனர். மேலும் திருமாவளவன், வைகோ, முத்தரசன், ஜி.கே.வாசன் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் கலந்துகொண்டனர். திரையுலகம் சார்பில் ரஜினி,வைரமுத்து, சத்ருகன் சின்ஹா, பிரபு,  நாசர், குஷ்பு, வடிவேலு ஆகியோர் பங்கேற்றனர். விழாவுக்கு வந்த தலைவர்களை ஸ்டாலின் வரவேற்றார்[5].

Anti-Modi hashtag orchestrated- Gayatri Raguram-12-04-2018

டுவிட்டர் சண்டையார் வென்றது?: இச்சூழலில், ட்விட்டர் வலைத்தளத்தில் கருணாநிதி சிலை தொடர்பான ஹாஷ்டேக்குகள் இந்திய அளவில் டிரெண்டாகி வருகின்றன. திமுக ஆதரவாளர்கள் #StatueOfKalaignar என்ற ஹாஷ்டேக்கை பயன்படுத்த, எதிர்ப்பாளர்கள் பயன்படுத்தும் #StatueOfCorruption என்ற ஹாஷ்டேக்கும் டிரெண்டிங் பட்டியலில் இடம்பெற்றுள்ளது[6]. இதுமட்டுமின்றி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை தமிழகத்தில் இருந்து திரும்பச் செல்லக்கோரி #GoBackSonia என்ற ஹாஷ்டேக் டிரெண்டாகிறது. 200,000 ட்வீட்களை பெற்று உலகளாவிய அளவில் டிரெண்டிங் பட்டியலில் முதலிடம் பெற்ற #GoBackModi என்ற ஹாஷ்டேக்கை #GoBackSonia முந்துமா என்பது சந்தேகமே[7].

வேதபிரகாஷ்

16-12-2018.

Anti-Modi demo, Chennai 12-04-2018

[1] தமிழ்.ஒன்.இந்தியா, அண்ணா சாலையில் கருணாநிதி சிலை.. ஞாபகம் இருக்கிறதா?, By Sutha | Published: Saturday, August 11, 2018, 16:50 [IST]

[2] https://tamil.oneindia.com/news/tamilnadu/k-veeramani-bats-karunanidhi-statue-at-mount-road-327220.html?fbclid=IwAR1TfHm2WTDjcNm6fHtujL2arp-HduBPV2OlftOO-MtZsa2G_ImHrFFlhX0

[3] தமிழ்.இந்து, சிலை வைக்க கடைசிவரை தடைப்போட்ட கருணாநிதி: சிலைத் திறப்பு ஒரு மீள்பார்வை, மு.அப்துல் முத்தலீஃப், Published : 16 Dec 2018 13:53 IST; Updated : 16 Dec 2018 14:54 IST

[4] https://tamil.thehindu.com/tamilnadu/article25756876.ece

[5] https://www.vikatan.com/news/tamilnadu/144787-sonia-gandhi-unveiled-karunanidhis-statue-in-anna-arivalayam.html

[6] பிபிசி, மு.கருணாநிதி சிலை திறப்பு விழா: #GoBackModiக்கு பழித்தீர்க்கும் பாஜக தொண்டர்கள், 16-12-2018.

[7] https://www.bbc.com/tamil/india-46583135

கருணாநிதி சிலை திறப்பு – சிலை வைத்தல், எடுத்தல், கடத்தல், உடைத்தல் எல்லாமே திராவிட கலாச்சாரம், பண்பாடு, நாகரிகம் தான்! [1]

திசெம்பர் 17, 2018

கருணாநிதி சிலை திறப்புசிலை வைத்தல், எடுத்தல், கடத்தல், உடைத்தல் எல்லாமே திராவிட கலாச்சாரம், பண்பாடு, நாகரிகம் தான்! [1]

EVR idol breaking case

பிள்ளையார் சிலையை உடைத்தவன், அப்பனுக்கு சிலை வைக்கத் துடித்த கதை சொல்லும் பிள்ளை: தமிழகத்தில் சிலை-அரசியல் என்பது திக-திமுக கட்சிகளோடு பின்னிப் பிணைந்து, பிறகு அதிமுகவையும் ஆட்டிப் படைக்கிறது. அம்பேத்கர் சிலை அரசியல் என்பது பிறகு வந்தது. அது தேவர் சிலை அரசியலோடு சேர்ந்து கொண்டு, கலவரங்களில் முடியும் நிலை ஏற்பட்டுள்ளது. ஓய்வு பெற்ற நீதிபதி எஸ்.மோஹன் கமிட்டியின் படி, சிலைகள் அவமதிக்கப் படுவதால் தான், தமிழகத்தில் கலவரங்கள் நடக்கின்றன என்று 1998லேயே எடுத்துக் காட்டினார்[1]. தேவர் ஜாதியினர் சிலைகள் 227, மஹாத்மா காந்தி 81 மற்றும் அம்பேத்கர் 66 இருப்பதாக இன்னொரு அறிக்கைக் குறிப்பிடுகிறது[2]. இதனால், புதிய சிலைகள் வைக்கக் கூடாது என்ற கருத்தும் உருவாகி வருகிறது. இங்கும் சிலையுடைப்பு அரசியலை ஆரம்பித்து வைத்தது ஈவேரா தான். உச்சநீதி மன்றம் அவரைக் கண்டித்துள்ளது, ஆனால், அவர் தான் கருணாநிதிக்கு சிலை வைப்பேன் என்று பிடிவாதம் பிடித்ததை இப்பொழுது அறிகிறோம்!

Avvai, Valluvar, Kambar, Ilango

1968ல் இரண்டாவது உலகத் தமிழ் மாநாடு நடந்த்த்தும், சிலைகள் வைத்ததும்: 1968ல் இரண்டாவது உலகத் தமிழ் மாநாடு நடந்த போதே, யாருக்கெல்லாம் சிலை வைப்பது, எடுப்பது என்பது பற்றியெல்லாம், ஏகப்பட்ட குழப்பம்,, பிரச்சினை, எதிர்ப்பு, ஆதரவு எல்லாமே நடந்தேறியது. முதலில் பெஸ்கி, போப் சிலைகள் வைக்க திட்டம் இல்லை. அப்பொழுது, யாரோ ஒருவர் லெஸ்லி நியூபிகின் என்ற சி.எஸ்.ஐ பிஷப்பிற்கு போன் செய்து, அவர்கள் சிலைகள் சேர்க்கப் பட வேண்டும் என்று அறிவித்தானாம். உடனே, புரொடெஸ்டென்ட் நியூபிகின், கத்தோலிக்க ஆர். அருளப்பாவுடன் ஆலோசனை செய்து, சிலைகள் வைக்க திட்டம் போட்டனர். லெஸ்லி அண்ணாவின் மிக நெருங்கிய நண்பர், சிறுவயதில் காஞ்சிபுரத்திலிருந்தே பழக்கம் உண்டு. அவர் சொல்லை அண்ணா தட்டவே மாட்டார் என்ற அளவுக்கு நெருக்கம் என்று நியூபிகின் முன்வாந்தார். இதற்குள் செய்தி அரசுக்குச் சென்றவுடன், செல்யூலரிஸ முறைப்படி, உமறுப் புலவருக்கு சிலை வைக்கலாம், என்று மனவை முஸ்தபா[3] [1935-2017] சொன்னார்.  ஆனால், இஸ்லாமிய அடிப்படைவாதிகள் எதிர்ப்புத் தெரிவித்ததால், கைவிடப் பட்டது. மபொசி இளங்கோ அடிகள் சிலை வைக்க வேண்டும் என்றதை, கருணாநிதி விரும்பவில்லை. ஆக, தீர்மானிக்கப் பட்ட சிலைகள் இவ்வாறு வைக்கப் பட்டன.

Bharati, dasan, Pope, Caldwell

எண் திறந்து வைக்கப் பட்ட தேதி சிலை விழாத் தலைவர் திறந்து வைத்தவர்
1 02-01-1968 திருவள்ளுவர் இஆ. நெடுஞ்செழியன் கி.ஆ.பெ. விசுவநாதன்
2 02-01-1968 அவ்வையார் சத்தியவாணி முத்து எஸ்.எஸ். வாசன்
3 02-01-1968 கம்பர் ஏ. கோவிந்தசாமி மீ. பக்தவட்சலம்
4 02-01-1968 கண்ணகி    
5 02-01-1968 சுப்பிரமணிய பாரதி மாதவன் நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கனார்
6 02-01-1968 வீர்மாமுனிவர் சாதிக் பாஷா அருளப்பா
7 02-01-1968 கி.யூ.போப் சி.பா. ஆதித்தனார் பிஷப் லெஸ்லி நியூபிகின்
8 02-01-1968 பாரதிதாசன் மா.முத்துசாமி மு. வரராசனார்
9 02-01-1968 வி.ஓ.சிதம்பரம்    
10 07-11-1971 இளங்கோ அடிகள் இரா. நெடுஞ்செழியன் ம.பொ.சிவஞானம்

Arulappa, CNA, Lesslieகண்ணகி சிலை உலகத் தமிழ் மாநாட்டின் போது வைக்கப் பட்டது. ஆனால் அது டிசம்பர் 10, 2001 அன்று, மெரினா கடற்கரையை நவீனப் படுத்தும் சாக்கில் இடிக்கப் பட்டது. போதாகுறைக்கு, அச்சிலையால் தான் சென்னை பஞ்சத்தால் நீரின்றி தவிக்கிறது என்றும் சொல்லப்பட்டது. திமுக ஆட்சிக்கு வந்தபோது, கருணாநிதி, ஜூன்.3, 2006ல் அதே இடத்தில் கண்ணகி சிலை வைத்தார். இப்படி சிலை சண்டை.

கருணாநிதிக்கு 1975ல் வைத்த சிலை 1987ல் இடிக்கப் பட்டது: 1975ல் கருணாநிதியின் சிலை மசூதிக்கு முன்பாக, அவர் ஆட்சியில் இருக்கும் போதே, ஜெனரல் பாட்டர்ஸன் – மவுண்ட் ரோடு சந்திப்பில் வைக்கப் பட்டது. அப்பொழுதே “உயிரோடு இருப்பவர்களுக்கு சிலை வைப்பதா, விக்கிரங்களை / சிலைகளை எதிர்ப்பவர், தனக்குத் தானே சிலை வைத்துக் கொள்வதா, இதனால், தீமை ஏற்படும்……….,” போன்ற பலதரப்பட்ட விமர்சனங்கள் வைக்கப் பட்டன. ஆத்திகரான, கடவுளை நம்பிய குன்றக்குடி அடிகள், நாத்திகரான-இந்துவிரோதியான, கருணாநிதியின் சிலையை திறந்து வைத்தார்! இருப்பினும், கருணாநிதிக்கு விருப்பம் இருந்ததால், நிறைவேற்றப்பட்டது. எந்த சாத்திரம் என்னவாகிற்றோ, எம்ஜிஆர் 1987ல் இறந்த போது, கருணாநிதி உயிரோடிருந்த நிலையில் சிலை உடைக்கப் பட்டது. ஒரு இளைஞன் கடப்பாரையினால், சிலையை உடைக்கும் காட்சியின் புகைப்படங்கள், நாளிதழ்களில் வெளிவந்தன. அது கண்டு போபப்பட்ட  கருணாநிதி, “அது மற்றவகளுக்கு இறுதி சிரிப்பாக இருக்கலாம், ஆனால், என் தம்பி என் நெஞ்சில் குத்தி விட்டான்”, என்று இளைஞன் உடைத்த படத்தின் கீழே எழுதினார்.

Karunanidhi statue demolished by a youth- 24-12-1987-main

உயிருடன் இருந்த போது வைக்கப் பட்ட சிலைகள்: தமிழக அரசியல் வரலாற்றில் உயிருடன் இருக்கும்போதே சிலை அமைக்கப்பட்ட தலைவர்கள் இரண்டுபேர் ஒன்று காமராஜர் மற்றொன்று கருணாநிதி. சிலை அமைக்கப்பட்டு மீண்டும் புதிய சிலை அமைக்கப்பட்ட தலைவர்கள் இரண்டுபேர். ஒன்று கருணாநிதி மற்றொன்று ஜெயலலிதா. இது சம்மீபத்தில் ஏற்பட்ட கோளாறுகள். கருணாநிதிக்கு முதன் முதலில் சிலை வைக்கவேண்டும் என்று அறிக்கை விட்டவர் பெரியார். அண்ணா உயிருடன் இருக்கும்போதே 1968-ம் ஆண்டே பெரியார் இந்த வேண்டுகோளை வைத்தார். 1968 இலும்,1971 ஆகஸ்டு 14 இலும் இருமுறை அறிவித்தார் பெரியார்! அதற்கு முன் உயிருடன் இருந்தவர்களில் அப்போதைய காங்கிரஸ் தலைவர் காமராஜருக்கு மட்டுமே ஜிம்கானா கிளப் அருகே சிலை திறக்கப்பட்டிருந்தது. அதை நேரு திறந்து வைத்தார்.

Karunanidhi statue demolished by a youth- 24-12-1987

ஈவேரா கருணாநிதிக்கு சிலை வைக்க விரும்பியது (1971): அண்ணா மறைவுக்குப் பின்னர் முதல்வர் பதவியேற்றார், பின்னர் 1971-ம் ஆண்டு சட்டமன்றத்தை கலைத்துவிட்டு நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்ந்து தேர்தலை திமுக சந்தித்தது. மிகப்பெரிய வெற்றியை திமுக இந்த தேர்தலில் பெற்றது. ஆகஸ்டு 14, 1971 அன்று பெரியார் திடலில் நடைபெற்ற பாராட்டுக் கூட்டத்தில், பெரியார் ஏற்கெனவே தான் வைத்த கோரிக்கையை மீண்டும் அப்போதைய முதல்வர் கருணாநிதியை அருகில் வைத்துக்கொண்டே வைத்தார். செயற்கரிய சாதனை செய்தவர் என்பதால் சென்னை தலைநகரில் கருணாநிதிக்குச் சிலை வைக்கவேண்டும் என்று தம் விருப்பத்தை பெரியார் தெரிவித்தார். அதை மேடையில் இருந்த குன்றக்குடி அடிகளார் போன்றவர்கள் ஆமோதித்தனர். அதே மேடையில் கருணாநிதி சிலை அமைப்புக் குழுவையும் பெரியார் அறிவித்தார். அப்போது கூட்டத்தில் பேசிய கருணாநிதி திமுக சார்பில் பெரியாருக்கு ஒரு சிலை திறக்கிறோம், அதன் பின்னர் எனக்கு சிலை திறக்கலாம் என்று அதைத் தட்டிக்கழித்தார்.

வேதபிரகாஷ்

16-12-2018.

EVR statue opened by Karu - EVR, Karu and others can be seen

[1] In October 1998 the Times of India (ToI) reported that a high-level committee headed by retired Supreme Court judge S.Mohan to investigate caste conflict in southern Tamil Nadu had made special note of statues: “Justice Mohan observed that most of the clashes that took place in the region were because of desecration of statues and both the government and private bodies were advised to desist from installing new statues.”

Times of India, View: Statue politics & shifting sands of time, By Vikram Doctor, ET Bureau|Updated: Mar 10, 2018, 10.57 AM IST

[2] Another ToI report on the committee showed the scale of the problem: “statistics in the report reveal that there are over 708 statues of various leaders in nine southern districts of Tamil Nadu alone.” Of these 227 were of dominant Thevar community leaders, 81 were of Mahatma Gandhi and 66 were of Dr.Ambedkar. Riots often sprang from mere rumours about disrespect to statues and sometimes communities disfigured their own leaders’ statues “as an excuse for attacking the other.”

https://economictimes.indiatimes.com/news/politics-and-nation/view-statue-politics-shifting-sands-of-time/articleshow/63241372.cms

[3] தென்மொழிகள் புத்தக டிரஸ்ட் நிர்வாக இயக்குநராக 40 ஆண்டுகள், ‘புத்தக நண்பன்’ (புக் பிரண்ட் – மாத இதழ்) ஆசிரியராக 4 ஆண்டுகள், யுனெஸ்கோ கூரியர் – பன்னாட்டு மாத இதழ் – ஆசிரியராக 35 ஆண்டுகள், என்சைக்ளோபீடியா பிரிட்டானிகா தலைமை பொறுப்பாசிரியர் – தமிழ் பதிப்பு, முதலமைச்சர் தலைமையில் அமைக்கப்பட்ட ‘சுதந்திர பொன்விழா குழு” முன்னாள் உறுப்பினராகவும், முதலமைச்சர் தலைமையிலான தமிழ்நாடு அரசு உயர்கல்வி – தமிழ் ஆக்கப்பணிக்குழு முன்னாள் உறுப்பினராகவும், அனைத்திந்திய தமிழ் எழுத்தாளர் சங்க முன்னாள் இணைச் செயலாளராகவும், உலகத் தமிழ் மாநாடுகளை நடத்தி வரும் சர்வதேசத் தமிழ் ஆராய்ச்சி பேரவையின் இந்தியக் குழுவின் முன்னாள் இணைச் செயலாளராகவும், ‘பாரதிய ஞானபீடப் பரிசு தேர்வுக்குழு’ உறுப்பினராகவும், 1968, 1982, 1987, 1995 ஆண்டுகளில் நடைபெற்ற உலகத் தமிழ் மாநாடுகளில் 7 ஆய்வுக் கட்டுரைகள் படித்துள்ளார்.

அண்ணா நூலகத்தை எடுத்தே தீருவேன் என்கிற நாள்தான் கருணாநிதி தீக்குளிக்கும் நாளாக இருக்கும்!

மார்ச் 19, 2012

அண்ணா நூலகத்தை எடுத்தே தீருவேன் என்கிற நாள்தான் கருணாநிதி தீக்குளிக்கும் நாளாக இருக்கும்

தில்லை நடராஜனையும், ஶ்ரீரங்கநாதனையும் பீரங்கி வைத்து பிளப்பது எந்நாளோ, அந்நாளே பொன்னாள்” என்று அண்ணா பேசி தமிழர்களை ஏமாறியது போல, இன்று கருணநிதி இப்படி பேசி ஏமாற்றப் பார்க்கிறார்.

திராவிடம் என்பது செல்லாக் காசாகி விட்டது எனலாம். 1960களில் காணப்பட்ட வெறி அடங்கி விட்டது, ஏனெனில் மக்கள் உண்மையை அறிந்து கொண்டு விட்டார்கள். ஆரியர்-திராவிடர் என்று பேசுவதை யாரும் இனி நம்பமாட்டார்கள், ஏனெனில் கருணாநிதியே தனது குடும்பத்தில் பல ஆரிய / பிராமணப் பெண்களை மறுமகள்காக வைத்திருக்கிறார்.

இப்பொழுது இத்தகைய பேச்சுகளை யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்றாலும், அத்தகைய பித்து அல்லது வெட்டிப் பேச்சு எப்படி ஒரு வயதான, பொறுப்பான, முதல்வர் பதவி வகித்த மனிதரிடத்திலிருந்து வருகிறது என்பதுதான் கவனிக்க வேண்டிய விஷயமாகிறது. அண்ணா நூலகத்தை எடுத்தே தீருவேன் என்கிற நாள்தான் கருணாநிதி தீக்குளிக்கும் நாளாக இருக்கும்”, என்று பேசியது அந்த தோரணையில் தான் உள்ளது.

தேர்தல் கூட்டத்தில் தீக்குளிப்பு ஒப்பாரி: திருமணத்தில் அரசியல், அரசியலில் சினிமா, சினிமாவில் சித்தாந்தம், சித்தாந்தத்தில் பிரிவினைவாதம் என்று மாறி-மாறி பேசிவருவது இவர்களுக்கு கைவந்த கலை. ஆகவே, சென்னை அண்ணா நூலகத்தை மருத்துவமனையாக மாற்றியே தீருவேன் என்று சொல்லும் நாள்தான் கருணாநிதி தீக்குளிக்கும் நாளாக இருக்கும் என்றார் திமுக தலைவர் கருணாநிதி. சங்கரன்கோவிலில் திமுக வேட்பாளர் ஜவஹர் சூரியகுமாரை ஆதரித்து வியாழக்கிழமை இரவு நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் அவர் மேலும் பேசியது:

அண்ணா பெயரில் கட்சி வைத்துக் கொள்ள அருகதை இருக்கிறதா? “சென்னையில், நான் முதல்வராக இருந்தபோது, அண்ணா பெயரால் அமைத்த நூற்றாண்டு

இப்பொழுதெல்லாம் சில பெயர்கள் வியாபார சின்னம், வணிக முத்திரை, விற்பனை அடையாளம் போன்று ஆகி விட்டன. அம்பேத்கர் என்ற பெயரும், அவரது படமும் அப்படியாகி விட்டது. யார்-யாரோ உபயோகப் படுத்திகிறார்கள். அவர்களை கேட்கமுடிவதில்லை.

 நூலகத்தில் 4 லட்சத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் உள்ளன. ஆசியாவிலேயே மிகப் பெரிய நூலகம் என்று பிரிட்டிஷ், ரஷிய நாட்டினர்களும் கூறுகிறார்கள். அண்ணா வாழ்ந்ததை எதிர்காலத்தினர் மத்தியில் பதிவு செய்வதற்காகதான் இந்த நூலகத்தை அமைத்தேன். ஆனால், அதை மருத்துவமனையாக மாற்றுவேன் என்று கூறுபவர்கள், அண்ணா பெயரில் கட்சி வைத்துக் கொள்ள அருகதை இருக்கிறதா?

அண்ணா நூலகத்தை எடுத்தே தீருவேன் என்கிற நாள்தான் கருணாநிதி தீக்குளிக்கும் நாளாக இருக்கும்: மருத்துவமனை கூடாது என்று கூறுபவன் அல்ல நான். ஆனால், வேண்டும் என்றே அதை மருத்துவமனையாக மாற்ற முயற்சிக்கிறார்கள். இது தொடர்பான வழக்கு தற்போது நடைபெறுகிறது. இந்த வழக்கு உச்ச நீதிமன்றம் வரைக்கும் போகலாம். நீதிமன்ற தீர்ப்புகள் வந்தாலும், அண்ணா நூலகத்தை எடுத்தே தீருவேன் என்கிற நாள்தான் கருணாநிதி தீக்குளிக்கும் நாளாக இருக்கும்.

எனது சூளுரைக்கு பலம் சேர்க்க திமுகவை ஆதரியுங்கள்: எங்களை ஆளாக்கியவர் அண்ணா. இளைஞர்களை அறிவாளியாக்கியவர் அவர். உலகம் என்றும் அவரை நினைத்துக்கொண்டிருக்கிறது. அவர் பெயரால் அமைத்த நூலகத்தை எடுத்தே

அண்ணா தமிழகத்தில் புகழ் பெற்றது மாறுபட்ட கால கட்டம் ஆகும். அதே போல எம்.ஜி.ஆர் இருந்தார். ஆனால், கருணாநிதிக்கு அத்தகைய தனிப்பட்ட சிறப்பான அடையாளம் கிடைக்கவில்லை. அதனால் தான், பெரியார், அண்ணா என்று பெயர்களை இக்காலத்திலும் சொல்லிக் கொண்டு மிரட்டி வருகிறார்.

 தீருவேன் என்று ஒரு பெண்மணி ஆக்ரோஷமாக கூறிவருகிறார். தேர்தல் மட்டும் எங்களுக்கு முக்கியம் அல்ல. அண்ணாவும் முக்கியம். அவரை உருவாக்கிய பெரியாரும் முக்கியம். அவர்களால் உருவாக்கப்பட்ட நாங்கள் தந்தைக்கும், தனயனுக்கும் செலுத்த வேண்டிய கடமைகள் உள்ளன. என்னை யாரும் தடுத்துவிட முடியாது. எங்கள் குறிக்கோளை நிறைவேற்றியே தீருவோம். அந்த குறிக்கோள் வலுப்பெற திமுகவுக்கு ஆதரவு தாருங்கள். எனது சூளுரைக்கு பலம் சேர்க்க திமுகவை ஆதரியுங்கள் என்றார் கருணாநிதி.

தமிழகத்தில் தீக்குளிப்பு கலாச்சாரம் திராவிட கட்சிகளின் பாரம்பரியமாக வளர்ந்து தொடர்ந்து வருகிறது: அதில் அரசியலும் உள்ளது. ஏனெனில், எந்த மனிதனும் தற்கொலை செய்து கொள்ள விரும்ப மாட்டான். அத்தகைய முடிவை எடுக்கும்

திராவிட பாரம்பரியத்தில் தீக்குளிப்பு என்பது வியாபாரமாகி விட்டது. 1960களில் இருந்த மனப்பாங்கு இப்பொழுது எந்த திராவிட தியாகியிடத்திலும் இல்லை. அதாவது, முன்பு போல உயிர் தியாகம் செய்ய யாரும் முன்வருவதில்லை. அவ்வாறு தயார் செய்யவும் முடிவதில்லை.

 மனிதன், விரைந்து தனது யுரிரை மாய்த்துக் கொள்ள விரும்புவான். தீக்குளித்து இறத்தல் என்பது ஒரு கொடுமையான இறப்பாகும். அதில் சிலர் இறக்காமல் தீக்காயங்களுடன் பிழைத்தும் உள்ளாரள். அவர்கள் நரக வேதனை அனுபவித்துள்ளார்கள். ஆகவே அதை உயர்வாக நினைப்பது, மதிப்பது மனிதத்தன்மைக்கு விரோதமானது. தீக்குளிப்பு என்ற தற்கொலை மிரட்டல் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தும் செயற்பாடு அல்ல, மிரட்டுவதிலும் குரூரத்தைக் காட்டும் தன்மையாகும். திமுக ஆட்சியில் சிலர் இந்தி திணிப்பை எதிர்த்து தீக்குளிக்க ஆரம்பித்தனர். அதை திமுக பிரமலமாக்கி தியாகமாகச் சித்தரித்தது. அதனால், சிலர் மனசலனம் உள்ளவர்கள், வாழ்க்கையை வேறு காரணங்களுக்காக வெறுத்தவர்கள், தீக்குளிக்க யத்தனித்தது மற்றும் உண்மையாகவே தீக்குளித்தது நிதர்சனமாக இருந்தது.

கருணாநிதியின் `தீக்குளிப்பு’ பேச்சு பற்றி டாக்டர் ராமதாஸ் கருத்து[1]: சமீப காலத்தில் திராவிட இயக்கத்தைப் பற்றி அதிக அளவில் விமர்சித்து வருகிறார் ராமதாஸ். கருணநிதியின் தீக்குளிப்புப் பற்றியும் கரடுமையாக சாடியுள்ளார். உண்மையிலே போராளியாக இருந்தால் தீக்குளிப்பேன் என்று கருணாநிதி சொல்லமாட்டார் என்று டாக்டர் ராமதாஸ் பேசினார். “திராவிட மாயை” கருத்தரங்கம் பா.ம.க. சார்பில் `திராவிட மாயை’ என்ற தலைப்பில் கருத்தரங்கம் சென்னை அண்ணாசாலை தேவநேய பாவாணர் நூலக கட்டிடத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு பா.ம.க. மாநில தலைவர் ஜி.கே.மணி தலைமை தாங்கினார். கருத்தரங்கை தொடங்கி வைத்து பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

“திராவிட மாயை” கருத்தரங்கம்: “திராவிட மாயை” என்று கம்யூனிஸ்ட் தலைவர் ராமமூர்த்தி ஒரு புத்தகத்தை எழுதியுள்ளாற். அதற்குப் பிறகு, “திராவிடத்தால் வீழ்ந்தோம்” என்ற புத்தகத்தை வெளியிடப்பட்டது. இப்பொழுது அதே ராகத்தை இவர் பாடுகிறார்ள்: “திராவிட இயக்கங்கள் அதன் வழிதோன்றல்கள், ஈரோட்டில் படித்தவர்கள், பெரியாரின் சீடர்கள் என்று சொல்லிக்கொள்பவர்கள், `நூற்றாண்டு

திராவிடம் என்பது மாயை என்றால், அதைச் சுற்றியிருக்கும் கருத்துகள், சித்தாந்தம், முதலியவையும் மாயைதான். கட்டுக்கதைதான். இருப்பினும் அதை வைத்துக் கொண்டு பிழைப்பு நடத்தலாம் என்று இனறும் சிலர் இருந்தால், அது அவர்களது பலவீனத்தைக் காட்டுகிறது.

 விழா’ எடுக்க கிளம்பிவிட்டார்கள். குறிப்பாக கலைஞருக்கு சில கேள்விகளை நான் கேட்டுத்தான் ஆகவேண்டும். பெரியார், சாதி ஒழிப்புக்கு பாடுபடுவதை ஒருகொள்கையாக கொண்டார். நீங்கள் அதிலே செய்த சாதனை என்ன? சாதியை ஒழிப்பதற்கு பதிலாக, சாதியை வளர்த்தீர்கள். பெரியாரின் சீடர் என்று சொல்லிக்கொள்ளும் கலைஞர் அவர்களே மதத்தை பற்றி இப்போது பேசத் தயாரா? இன்றைக்கு மதத்தை பற்றி உங்கள் கருத்துக்களை வெளியிடத் தயாரா? கடவுளை பற்றி நீங்கள் இப்போது பேசத் தயாரா? தமிழ்நாட்டை சீரழித்து ஆட்சியில் இல்லாதபோது, ஆரியர், திராவிடர் என்ற பேச்சு உங்கள் நாவிலே, எழுத்திலே வருகிறது. தென்னிந்திய நல உரிமை சங்கம், சுயமரியாதை இயக்கம், நீதிக் கட்சி என்று பல இயக்கங்களை பெரியார் ஏற்படுத்தினார். 45 ஆண்டு காலம் தமிழ்நாட்டை சீரழித்து சின்னாபின்னமாக்கிய ஆட்சியாளர்கள் திராவிட இயக்கத்தை சேர்ந்தவர்கள்தான். இவற்றை எல்லாம் திசை திருப்ப, திராவிட இயக்கம் என்று சொல்லிக்கொண்டு, அதற்கு நூற்றாண்டு விழா என்று சொல்லிக்கொண்டு, ஏமாற்றிக்கொண்டு இருக்கிறார்கள். இவற்றை எல்லாம் மக்களுக்கு தொடர்ந்து புரியவைத்துக்கொண்டு இருப்போம்.

“திராவிட” என்ற பெயரை எப்படி திராவிட கட்சிகள் புறக்கணிக்க முடியும்: “திராவிட” என்பதனை ஒரு வியாபார முத்திரை, வணிக சின்னம் போல உபயோகித்து மக்களை ஏமாற்றி வரும் கட்சிகள் எப்படி அதை எடுக்கும்? ஆனால் ராமதாஸ் தொடர்கிறார், “பெயரை மாற்றுங்கள் தமிழர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து ஈழத்தமிழர்களை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபடுவோம். இலங்கையில் தனி ஈழம் அமைவதுதான்

திராவிட என்ற சொல்லை எந்த திராவிடக் கட்சியும் எடுக்க முடியாது. ஏனெனில், அவை அவ்வாறே பதிவு செய்துள்ளன. பெயர் மாற்றினால் இருக்கின்ற அடையாளமும் தெரியாமல் போய்விடும்.

 பிரச்சினைக்கு தீர்வு ஆகும். இதை நோக்கி நமது செயல்பாடுகள் இருக்கவேண்டும். முதலில் உங்கள் கட்சியின் பெயரை மாற்றிக்கொள்ளுங்கள். திராவிட என்று இருப்பதை, `தமிழர் முன்னேற்றக் கழகம்’ என்று மாற்றிக்கொள்ளுங்கள். கட்சி என்றால் கொள்கை வேண்டும். பெரியார் சில கொள்கைகளை முன்வைத்து, அதற்காக கடைசிவரை போராடினார். இப்போதாவது கொள்கையை சொல்லி தமிழ் மக்களிடம் வாருங்கள். தமிழ் மக்கள் இன்றைக்கு ஏமாற தயாராக இல்லை. செம்மொழியை பெற்றுவிட்டோம் என்று எல்லாம் சொல்லுகிறீர்கள், இன்றைக்கு தமிழ் வளர்வதற்கு என்ன முயற்சிகளை எடுத்திருக்கின்றீர்கள்?. முத்தமிழ் என்றால் இயல், இசை, நாடகம் என்று சொல்லுகிறார்கள். இவற்றில் எதை நீங்கள் வளர்த்தீர்கள்?.
தீக்குளிப்பேன் என்பது வெட்டிப் பேச்சு: 45 ஆண்டுகளாக உங்களின் திராவிட கட்சி ஆட்சியில் வளர்த்து எல்லாம் சாராயத்தை கொடுத்து, திரைப்பட மோகத்தை தந்து, மக்களை இலவசங்களுக்கு கைஏந்தவைத்தீர்கள். தமிழுக்கு நீங்கள் செய்த சாதனை என்ன? என்று பட்டியல் இடுங்கள். முடிந்தால் அதுபற்றி உங்களோடு விவாதிக்க தயாராக இருக்கிறேன். இப்போது கலைஞர் தீக்குளிக்கப்போவதாக சொல்லுகிறார்.

தமிழ் என்று சொல்லியும் பிழைத்துக் கொள்ள முடியாது. ஏனெனில் ஒரு புண்ணியவான் திருக்குறளை வைத்தே ஏமாற்றி கோடிகளை அள்ளியுள்ளான்; இன்னொருவனோ திருவள்ளுவன் கையாலாகாத ஆள், தாமஸ் என்ற ஓடுகாலியிடம் பைபிளைக் கற்ருக் கொண்டுதான் திருக்குறலள் எழுதப் பட்டது என்கிறான்; இன்னொருவனோ, திருக்குறளை எங்கள் குருவினிடத்திலிருந்து திருடிக் கொண்டு சென்று விட்டார், அதை தனது என்று சொல்லி புழக்கத்தில் விட்டார் என்கிறான். இவர்கள் எல்லோருமே தங்களை “தமிழர்கள்” என்ரு தான் சொல்லிக் கொள்கிறார்கள்.

 ஒரு போராளி உண்மையிலே போராளியாக இருந்தால், தீக்குளிப்பேன் என்று சொல்லமாட்டார். இன்றைக்கு இந்த நிலையில் தமிழன் இருப்பதற்கு காரணம் கலைஞரும், திராவிட இயக்கமும்தான் என்று பல்வேறு பொதுக்கூட்டங்களில், கருத்தரங்கங்களில் சொல்ல முடியும். தமிழ் மெல்ல, மெல்ல சாகும் என்றுதான் சொன்னார்கள். இந்த நிலையில் தமிழ் இப்போது வேகமாக செத்துக்கொண்டு இருக்கிறது. இவ்வாறு டாக்டர் ராமதாஸ் பேசினார். முன்னதாக முன்னாள் மத்திய மந்திரி ஏ.கே.மூர்த்தி, தமிழ் தேசிய விடுதலை இயக்க பொதுச்செயலாளர் தியாகு, மக்கள் மாநாட்டுக் கட்சி தலைவர் சக்திவேல், திரைப்பட இயக்குநர் வி.சேகர் தமிழாலயம் இயக்குநர் கு.பச்சைமால் ஆகியோர் பேசினார்கள். முடிவில் சென்னை மாவட்ட பா.ம.க. அமைப்பு செயலாளர் மு.ஜெயராமன் நன்றி கூறினார்.


 


அய்யப்பன் பிறப்பு வளர்ப்பு தெரிந்தால் மாலை போடுவீர்களா?

நவம்பர் 29, 2009

அய்யப்பன் பிறப்பு வளர்ப்பு தெரிந்தால் மாலை போடுவீர்களா?

இது “விடுதலை” என்கின்ற திராவிட கழகத்தினரின் நாளிதழில் “ஓடும் நதி” என்ற பெயரில் மறைந்து கொண்டு யாரோ ஒரு இந்து-விரோதி எழுதி வெளிவந்த சிறு கட்டுரையாகும். இன்றும் (டிசம்பர் 2013) கீழ்கண்ட தளத்தில் இருக்கின்றது:

http://viduthalai.periyar.org.in/20091129/news22.html

அதனால் தான், கீழ் கண்ட குறிப்பையும் நவம்பர் 2009லேயே செர்த்திருந்தேன்.

இதோ, ஐயப்பன் பக்தர்களையும் விட்டுவைப்பதில்லை.வருடா வருடம் இதே மாதிரியான தூஷணங்கள்! ஆனால், யாரும் நடவடிக்கை எடுக்காததால், இப்படியே அச்சடித்து இப்பத்திரக்கை நடதத்தப் படுகிறது.இதன் ஆசிரியர் கே. வீரமணியோ ஒரு நிகர்-பல்கலைக் கழகம் வைத்து நடத்துகிறார்.அதில் வேலை செய்யும் பலர் மாலை அணிந்துள்ளனர். அவர்கள் என்ன செய்வார்கள்?

அவர்கள் என்ன நினைப்பார்கள்?

அங்கு படிக்கும் மாணவர்கள் என்ன நினைப்பார்கள்?

ஏனெனில் மாணவர்களில் பலரும் மாலை போட்டுக் கொண்டிருக்கிறார்கள்!!

குறிப்பு: ஐய்யப்பப் பக்தர்களைப் புண்படுத்த இப்பதிவு செய்யப்படவில்லை. உண்மையில் நாத்திகவாதிகளின் மனப்பாங்கை எடுத்துக் காட்டி, அவர்களைன் போலித்தனத்தை எடுத்துக் காட்டவே நான் இப்பதிவை செய்துள்ளேன்.     

                                                                                                                  சென்னை, நவ. 29_ கேரளம் _ கேர என்ற மலையாள சொல்-லுக்கு தென்னை என்று பெயர். கேரளம் என்றால் தேங்காய் விளைகிற இடம் என்று பெயர். சந்தேகமாக இருந்-தால், உங்களுக்குத் தெரிந்த மலையாள சேட்டான், சேச்சியிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். கேரளாவிலிருந்து வந்த தேங்காயை, தமிழ்நாட்-டுத் தமிழன் விலைக்கு வாங்கி, தலையில் இரு-முடிகட்டி திரும்பவும் எங்கிருந்து வந்ததோ, அங்கேயே பக்தியின் பெயரால் கொண்டு போய் சேர்கிறான். அந்த தேங்காய்களை சபரிமலை கோவில் நிர்-வா-கமும் ஏதாவது எண்-ணைய் எடுக்கிற நிறுவனத்-திற்கு மொத்த விலைக்கு விற்று விடுகிறது. அந்த நிறுவனங்கள் தமிழ்-நாட்-டில் சிறு சிறு பாக்கெட், பாட்டில்களில் தேங்காய் எண்ணையை அடைத்து வந்து விற்கிறது. தேங்-காயை விலைக்கு வாங்-கிய தமிழன்,அதே தேங்-காயை, எண்ணைய் என்ற வடிவத்தில் திரும்ப-வும் விலைக்கு வாங்கு-கிறான். அதாவது புரிகிற மாதிரி சொல்வது என்-றால், ஒரு பொருளை இரண்டு முறை விலைக்கு வாங்குகிறான். கேரளக்காரன் தமிழ-னின் தலையில் இப்படித்-தான் மிளகாய் அரைக்-கிறான்! அய்யப்பனுக்கு மாலையணிந்து கோவி-லுக்கு போய் திரும்பும் வரை மிகவும் ஒழுக்கமாக நடந்து கொள்ள வேண்-டும் சரியாகச் சொன்-னால், கோயிலுக்குப் போய் திரும்பும் வரைக்கு-மாவது நல்லவர்களைப் போல நடியுங்கள் என்-கிறார்கள்! கேரள அய்யப்பனுக்கு மாலை போட்டுப் போகிற தமிழர்கள் தயவு செய்து அய்யப்பனின் பிறப்பு, வளர்ப்பு கதையை படித்த பிறகு,தைரியம் இருந்தால் அதற்கு பிறகு மாலை போடுங்கள்! எவ்வளவுக் எவ்வளவு அசிங்கங்-கமாக, கேவலமாக இருக்க வேண்டுமோ, அவ்வள-வுக்கு அவ்வளவு ஆபாச-மாக இருக்கிறது, அய்யப்-பனின் பிறப்பு வளர்ப்பு வரலாறு! அவைகளை படித்தால் ஒழுக்கக் கேடு-கள் தான் நாடெங்கும் தலை விரித்தாடும்..! கேரளா கிறித்தவர்கள் அதிகம் நிறைந்த மாநிலம்.

அதாவது அய்யப்பன் பிறந்து வளர்ந்து கிழித்த-தாக கூறப்படும் கேரளத்-தில், கேரள மக்கள் அய்யப்-பன விட இயேசு கிறிஸ்துவைத் தான் அதிகம் பின்பற்று-கிறார்-கள்! இது ஒன்று போதாதா? அய்யப்பன் வெறும் பொய்யப்பன் என்று புரிந்து கொள்ள… அதா-வது தன்னை சிலுவை-யில் உயிரோடு அறைந்த போது தன்னையே காப்-பாற்றிக் கொள்ளாத இயேசு தான் இவர்களை காப்பாற்றும், சக்தி வாய்ந்த கடவுளாம்! கொடுமைடா சாமி! நீங்கள் சொல்வதெல்-லாம் சரிதான்ங்க, ஆனால் நம்மை மீறிய சக்தி ஒன்னு இருக்கு, அதுக்கு பெயர் தான் கடவுள் என்பர்களே! கடவுளின் பெயரால் இந்த கேணத் தனங்கள், எதற்கு? கடைசியாக உங்களிடம் வேண்டிக் கொள்வ-தெல்-லாம், ஒன்றே ஒன்று தான்! தமிழர்களே! தமிழர்-களாக இருங்கள்!!

நன்றி: ஓடும் நதி

பின்குறிப்பு: இந்த இடுகை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இடப்பட்டது. நாத்திகம் என்ற போர்வையில், வீரமணி எப்படி தூஷணம் செய்கிறார் என்பதைத்தான் எடுத்துக் காட் ட அவ்வாறு செய்யப்பட்டது. கோடிக்கணக்கான பக்தர்களின் உணர்வுகளைப் புண்படுத்தக் கூடாது என்ற எண்ணம் அந்த மெத்த “படித்த” மேதாவிக்கு, நிகர்நிலை பல்கலைக்கழக வேந்தருக்குத் தெரியாமல் இருப்பதையும் எடுத்துக் காட்டப்பட்டது. இப்பொழுதும் இதற்கு பதில்கள் வருவதால், இக்குறிப்பு சேர்க்கப்பட்டுள்ளது.

 2009லிருந்து 2013 வரை படிப்பவர்கள் இதனை முழுவது படிக்காமலேயே, என்னை திட்டி பதில்களை பதிவு செய்து வருகிறார்கள்.

ஆகவே, தயவு செய்து முழுமையாக படித்து விட்டு பதிலை இடுங்கள் .

வேதபிரகாஷ்

04-12-2013