அருள்வாக்கு சாமியிடம் பெண்களின் கலாட்டா!
அர்ச்சகருக்குப் பிறகு, சாராய-சரக்கு சாமியார்களுக்குப் பிறகு, இப்பொழுது அருள்வாக்கு சாமியிடம் பெண்கள் கலாட்டா செய்ய ஆரம்பித்துவிட்டனர்!
கலைஞர், சன் டிவிகளுக்குக் கொண்டாட்டம்தான்!
மாறி-மாறி காட்டிகொண்டே இருக்கிறார்கள்! இதோ ஒரு பெண் வந்து சாமியை மிரட்டுகிறார்!
சாமியின் மனைவி வந்த பெண்ணை மிரட்டுகிறார்! மிரட்டும் பெண்ணை, சாமியின் மனைவி தட்டிக் கேட்கிறார்! அது அப்படியே முன்பு கலாதிநிதி மாறனுடைய மனைவி காவேரி மிரட்டிய மாதிரி இருந்தது.
அதெப்படி சரியாக அந்த இடத்தில் இந்த தொலைக்காட்சி கேமராமேன்கள், நிருபர்கள் சரியாக அங்கு சென்று கச்சிதமாக படம் எடுக்கின்றனரோ தெரியவில்லை!
அதற்கேற்ற முறையில் அந்த பெண்களும் சரியாக வந்து சாமியிடம் சண்டைப் பிடிக்கின்றனர். இருபெண்களும் கைகலப்பில் ஈடுபடுகின்றனர்! பெண்கள் சண்டை போடுகின்றனர்.
நடு இரவு / அர்த்தஜாமப் பூஜை! கிடாவெட்டுவது காண்பிக்கப் படவில்லை!
சாந்தகுமாரி, பக்கத்துவிட்டுக்காரர் புகர்ர் கூறுகிறார்!
நயினாமலை விளக்குகிறார்!
பிறகு மற்றவர்கள் அருள்வாக்கு சாமியின் மீது புகார் சொல்கின்றனர்.
“வரும் போது சாதாரணமாகத் தான் வந்தார்கள். பிறகு பூஜை, அருள்வாக்கு என்று ஆரம்பித்துவிட்டார்கள்”
“ராத்திரி எல்லாம் கிடாவெட்டி பூஜை என்று பேஜார் பண்ணுகிறார்கள்”
“நிலத் தகராறு காரணமாகத் தான் அருள்வாக்கு சாமியார் மேல் புகார் சொல்லப்படுகிறது”
நாத்திக போர்வையில், எல்லா இந்து சாமிகளையும் யாதாவது ஒரு காரணம் காட்டி இப்படி படம் காட்டுகிறார்களா?
வேடிக்கை என்னவென்றால் அடுத்த செனலில் ஒரு குறும்படம் போட்டி நடந்து கொண்டிருந்தது!
இதையேக் கூடக் காட்டலாம் போல் இருக்கிறது!
கச்சிதமாக, கேமரா வைத்துக் கொண்டு, கைத்தேர்ந்த டைரக்டர் இருந்தால்கூட அப்படி படம் எடுக்கமுடியாது போல இருக்கிறது!
ஆனால், கலைஞர் டிவியால் முடிகின்றது!
மேலேயுள்ளது நேற்றையப் பதிவு 19-12-2009. கீழேயுள்ளது தினமலர் செய்தி:
// <![CDATA[//
சேலம்: சேலத்தில், சூனிய தகடுகள் வைப்பதாகக் கூறி, சாமியாரை பெண் ஒருவர் தாக்கினார். திருச்சியைச் சேர்ந்த வேலு; ஓட்டல் தொழிலாளி. சேலத்தைச் சேர்ந்தவர் தனலட்சுமி. இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்கள், சின்ன திருப்பதியில் வாடகை வீட்டில் குடியிருந்து வருகின்றனர். அருகிலேயே ஓட்டல் வைத்துள்ளனர்.
வெள்ளி, சனி மற்றும் அமாவாசை நாட்களில் குறி சொல்வதை வாடிக்கையாக கொண்டுள்ளார் வேலு. சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து, பொதுமக்கள் அவரிடம் குறி கேட்க வருகின்றனர். நேற்று காலை வேலு வழக்கம் போல வீட்டில் குறி சொல்லிக் கொண்டிருந்தார். அப்போது, அப்பகுதியில் வசிக்கும் முனியம்மாள், அலமேலு மங்கை ஆகியோர், அங்கு சென்று வேலு குறி சொல்வதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இரு தரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் முனியம்மாள், வேலுவை தாக்கினார். அலமேலு மங்கையும், வேலுவின் மனைவி தனலட்சுமியும் கைகலப்பில் ஈடுபட்டனர். தகவலறிந்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
முனியம்மாள், அலமேலு மங்கை ஆகியோர் கூறியதாவது: வேலுவுடன் செந்தில், மணி, வெள்ளையன் ஆகியோர் இங்கு தங்கியுள்ளனர். எங்கிருந்தோ சாமி சிலைகளை திருடி வந்து, “நாங்கள் கூறினால் சாமி கூறியது போல உடனே நடக்கும்’ என்று கூறி ஏமாற்றுகின்றனர். இங்கு வருபவர்களிடம் மிரட்டி பணம் பறிக்கின்றனர். கன்னி கழியாத சிறுமிகளுக்கு, கன்னி கழிய வைப்பதற்கு ஏற்பாடு செய்வதாகக் கூறியும் பணம் பறிக்கின்றனர். இரவு நேரத்தில் இப்பகுதியில் சூனிய தகடுகளை வைக்கின்றனர். நேற்று முன்தினம் கூட, இப்பகுதியில் புதைக்கப்பட்டிருந்த ஒரு சூனிய தகட்டை எடுத்தோம். இவ்வாறு அவர்கள் கூறினார்.
குறி சொல்லும் சாமியார் வேலு கூறியதாவது: நான் பல ஆண்டாக குறி சொல்லி வருகிறேன். பொதுமக்களிடம் வெற்றிலை, பாக்கு, இரண்டு ரூபாய் தட்சிணை மட்டும் தான் கேட்பேன். குறி கூறினால் 30 ரூபாய் வாங்குவேன். மேற்கொண்டு அவர்களிடம் பணம், பொருட்கள் எதையும் வாங்க மாட்டேன். நான் குடியிருக்கும் வீட்டுக்கு முன் நிறைய புற்கள் உள்ளது. அதை மேய்வதற்காக அருகில் இருக்கும் முனியம்மாள் தனது மாடுகளை இங்கு அவிழ்த்து விடுவார். மாடுகள் குறி கேட்க வருபவர்களை முட்ட வருகிறது என்பதால், “மாடுகளை இங்கு கட்ட வேண்டாம்’ என்று கூறினேன். அதனால், அவர்கள் என் மீது பொய் குற்றம் சாட்டுகின்றனர். இவ்வாறு வேலு கூறினார். போலீசார், இரு தரப்பினரிடமும் தீவிரமாக விசாரிக்கின்றனர்.