Archive for the ‘ஓலை’ Category

ஓலைச்சுவடிகளை, ஆவணங்களை, மின்னாக்கம் செய்வதால் பிரயோஜனம் இல்லை!

ஜனவரி 29, 2010

ஓலைச்சுவடிகளை, ஆவணங்களை, மின்னாக்கம் செய்வதால் பிரயோஜனம் இல்லை!

டாக்டர் பெருமாள், சரஸ்வதி மஹால் நூலகத்தின் ஆவணகாப்பவர் மற்றும் நூலகர். 1989லிருந்து வேலபார்க்கும் இவர், பல ஆய்வகங்களில் காகிதம், புத்தகங்கள் முதலியவற்றைக் காப்பது, பராமரிப்பது முதலிஅவற்றைப் பற்றி அனுபவம் கொண்டுள்ளார்.

இன்று (29-01-2010, வெள்ளிக்கிழமை காலை) கலைஞர் தொலைக்காட்சியில் அவரது பேட்டியில் பல விவரங்களை எடுத்துச் சொன்னார். ஓலைச்சுவடிகள் 500 வருடகாலம் வரை இருக்கக்கூடும். ஆனால், காகிதம் நூறாண்டுகள் வரைத்தான் இருக்கும். இன்றைய ரசாயன முறைகளில் தயாரிக்கப்படும் காகிதத்தின் வாழ்நாள் குறைவாகவே இருக்கிறது.

அதே மாதிரி மின்னாக்கம் பற்றி இப்பொழுது பேசுகிறார்கள். ஓலைச்சுவடிகள் மின்னாக்கம் செய்யப்படுவதினால் எந்த முக்கியத்துவமும் இல்லை. ஒரே நேரத்தில் பல இடங்களிலிருந்து பலரும் பர்ர்க்கலாமேத் தவிர அவை எந்த அளவிற்கு பாதுகாப்பாக இருக்கும் என்று சொல்லமுடியாது. 200-300 ஆண்டுகள் வரை வரும் என்கிறார்கள்.

ஆனால், பனையோலையில் எழுதப்படும் விஷயங்கள் / ஆவணங்கள் 500 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்து வரும். ஆகையால்தான், ஜைனர்கள் இன்றும் தமது புத்தகங்களை பனையோலையில் எழுதிவைத்துக் காக்கிறார்கள். இதற்காக ஸ்ரீலங்காவிலிருந்து பனையோலைகளை வரவழைத்து, எழுத்தாளர்களுக்கு இன்றும் பயிற்சியளித்து தமது நூல்களைக் காக்கிறார்கள்.

அதுமட்டுமலாது, சில ஆவணங்களைக் காண்பித்தும் விளக்கினார்.

கலைஞர் தொலையில், இப்படியொரு நிகழ்ச்சி வந்தது ஆச்சரியமே!