தமிழ், தமிழகம், தமிழ்நாடு: மேலே ஏறி தேசத்தை அவமதித்தவனும், கீழே இறங்கி தேசத்தை நேசித்தவனும் – மோடி–எதிர்ப்பு வேலை செய்யும் விதம் [5]
ராட்சத விளம்பரப் பலகை மீது ஆடிய நாடகம்: சென்னை விமான நிலையம் அருகே ராட்சத விளம்பரப் பலகை ஒன்று உள்ளது. அந்த இடத்திற்குள் செய்தியாளர்கள் போல் நுழைந்த தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் யாரும் எதிர்பாராத நேரத்தில் விளம்பரப் பலகையில் மேல் ஏறி கருப்புக் கொடிகளுடன் முழக்கங்களை எழுப்பினர்[1]. போலீசார் மேலே ஏறினால் குதித்து தற்கொலை செய்துகொள்வோம் என்று அவர்கள் மிரட்டல் விடுத்ததை அடுத்து கீழிருந்தே போலீசார் சமரசப் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து கீழே இறங்கி வந்த அனைவரையும் போலீசார் கைது செய்தனர்[2]. இது விளம்பரத்தை தேடிய யுக்தியாக இருந்ததே தவிர, உண்மையில் எதையும் சாதிப்பதற்கு என்பதாக இல்லை. இக்காலத்தில் சில தனி நபர்கள் தொலைதொடர்பு-கோபுரங்கள் போன்றவற்றில் ஏறி தற்கொலை செய்து கொள்வேன் என்ற மனநிலை பாதித்துள்ளவர்களுக்கும், இவர்களுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. அதாவது, மிக்க மலிந்த வரட்டு விளம்பரத்திற்காக நடத்தப் பட்ட நாடகம் இது என்றாகிறது. ,மு.க. ஸ்டாலின் ட்விட்டர் பக்கத்தில்[3], “விமானத்தில் மேலே மட்டும் பறக்கும் நீங்கள், கீழே எங்கள் உணர்வுகளின் அடையாளமாய் கருப்புக் கொடி அசைவதை பாருங்கள், உடனடியாக உச்ச நீதிமன்றத்தில் தொடுத்திருக்கும் வழக்கை திரும்ப பெறுங்கள். இல்லையேல், கருப்பு என்கிற நெருப்பு அணையாது,” என்று பதிவிட்டுள்ளார்[4].
மேலே ஏறி தேசத்தை அவமதித்தவனும், கீழே இறங்கி தேசத்தை நேசித்தவனும்: யார் வீரன் என்று இந்தியன் அறிந்து கொள்வான்!: சென்னையை அடுத்த மகாபலிபுரம் அருகே உள்ள திருவிடந்தையில் ராணுவ தளவாடக் கண்காட்சியில், இந்தியாவில் தயாரான நவீன ரக பீரங்கிகள், டாங்குகள், நவீன ராடார்கள், போர் விமானங்கள், நீர்மூழ்கி கப்பல்களின் மாதிரிகள் ஆகியவையும் இடம் பெற்றன. இந்நிலையில் மகேந்திரசிங் தோனி கண்காட்சியை நேரில் சென்று பார்வையிட்டு, ராணுவ அதிகாரிகளிடம் அதன் செயல்பாடு குறித்து கேட்டறிந்தார். மேலே ஏறி தேசத்தை அவமதித்தவனும், கீழே இறங்கி தேசத்தை நேசித்தவனும்: யார் வீரன் என்று இந்திய அறிந்து கொள்வான்! சென்னையைப் பிரிந்த தோனி, தேசத்தை மறக்கவில்லை, தேசபிமானிக்கும், தேசவிரோதிக்கும் உள்ள வித்தியாசம் இதுதான்! 14-15 தேதிகளில் பொதுமக்கள் 3-4 லட்சங்கள் வரை இவற்றைப் பார்த்து சென்றுள்ளது மக்களின் பிரதிபலிப்பைக் காட்டுகிறது. அந்த தேசவிரோத ஆர்பாட்டம், கலாட்டாக்களால் எற்பட்ட பாதிப்பையும் இந்த அமைதியான லட்சக்கணக்கான மக்களின் கூடுதல்களையும் ஒப்பிட்டுப் பார்த்தால், உண்மை விளங்கும்.
மோதி–எதிர்ப்பில், காங்கிரஸ் சந்தோசப்படுவது, தற்செயலா, திட்டமா?”: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி தமிழகத்தில் போராட்டம் எழுந்துள்ள நிலையில் பிரதமர் நரேந்திர மோடி சென்னை வந்தார். அப்போது பல்வேறு அமைப்பினர் கருப்புக் கொடி போராட்டம் நடத்தியதால் மோடி சாலைவழிப் பயணத்தைத் தவிர்த்து, ஹெலிகாப்டரில் பயணித்தார், என்றெல்லாம் ஊடகங்கள் பொய்யை வாரி இறைத்தன. இதற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, “கருப்புக் கொடியைக் கண்டு பயப்படும் மோடி ஒரு கோழை. அவரைப் போன்ற கோழையான பிரதமரை இந்தியா கண்டதில்லை,” என விமர்சித்தார்[5]. முன்னர் மோடிக்கு பொன்னாடைப் போர்த்தி, தாஜா பிடித்த வைகோவின் பேச்சு படுகேவலமாக இருந்தது. இருப்பினும், இந்தக் கருத்தை காங்கிரஸ் கட்சியின் சமூக வலைதள பிரிவு தலைவரும், நடிகையுமான ரம்யா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து, ”இதை இன்னும் சத்தமாகவும், உறுதியாகவும் சொல்லுங்கள்” என பதிவிட்டு, தமிழகத்து ஆதரவாக ‘#Goback Modi’ என எழுதி இருந்தது திகைப்பாக இருந்தது[6]. அப்படி என்ன காங்கிரஸுக்கு, இந்த போராட்டத்திற்கும் தொடர்பு என்ற கேள்வியும் எழுந்தது.
கர்நாடக பாஜகவினர் கடும் கண்டனம் தெரிவித்தது: இதற்கு கர்நாடக பாஜகவினர் கடும் கண்டனம் தெரிவித்தனர். மேலும் கர்நாடக பாஜகவின் ட்விட்டர் பக்கத்தில், ”காங்கிரஸைச் சேர்ந்த ரம்யா கர்நாடகாவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்துள்ளார். கர்நாடகா எதிர்க்கும் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கக் கோரி சில தமிழ் அமைப்பினர் போராடி வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவாக ரம்யா பேசியுள்ளார்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது[7]. இதேபோல மைசூரு-குடகு பாஜக எம்.பி. பிரதாப் சிம்ஹா, ”ரம்யாவின் உண்மையான முகம் வெளிப்பட்டுவிட்டது. தமிழர்களின் போராட்டத்துக்கு ஆதரவு அளித்துள்ளதால், உடனடியாக ரம்யாவை காங்கிரஸில் இருந்து நீக்க வேண்டும். காவிரி மேலாண்மை வாரியத்தைக் கோரும் தமிழர்களின் போராட்டத்துக்கு ஆதரவு அளிக்கும் ரம்யா கர்நாடகாவுக்கு தேவையா?” என எதிர்ப்பு தெரிவித்துள்ளார்[8]. ஆனால், தமிழக காங்கிரஸோ, அதன் கூட்டணி கட்சியான திமுகவோ இதைப் பற்றி கண்டுகொள்ளவில்லை. குறைந்த பட்சம், வீராதி வீரர், சூராதி சூரர் வைகோ எதிர்ப்பு தெரிவித்திருக்க வேண்டும், ஆனால், செய்யவில்லை. வட்டாள் நாகராஜ் மட்டும், சத்யராஜுக்கு உருத்திக் கொண்டிர்க்கலாம், ஆனால் குத்து ரம்யாவின், இந்த உள்-குத்து பரியவில்லை போலும்!
ரம்யாவிற்கு எதிராக காயத்ரி ரகுராமின் டுவிட்டர் பதிலும் வெளிப்படும்ம் நிலையும்: இந்நிலையில், தமிழகத்தில் மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து #GoBackModi என்ற ஹேஷ்டேக் சமூக வலைதளங்களில் உலகளவில் டிரெண்ட் ஆனது என்றும் ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டன . இதுகுறித்து நடன இயக்குனரரும், பாஜக உறுப்பினருமான காயத்ரி ரகுராம் தனது ட்விட்டர் பக்கத்தில்[9], “மோடி நமக்கு உதவில்லை என்றால்? வேறு யார் நமக்கு உதவுவார்கள். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விருந்து நிகழ்ச்சிகளில் பிஸியாக இருக்கிறார். காங்கிரஸும், ரம்யாவுமே போலியான போராட்டக்காரர்களை விலைக்கு வாங்கி மோடிக்கு எதிராக பதிவிட வைக்கிறார்கள். ரம்யா, ராகுலின் சிறந்த நண்பர். அவர்தான் காங்கிரஸின் சமூக வலைதளங்களை கையாள்கிறார்,” என்று பதிவிட்டார்[10]. அதுமட்டுமல்லாது, வேலையில்லாதகள் தான் அத்தகைய பதிவுகளை செய்திருப்பார்கள் என்றும் காட்டமாக கமென்ட் அடித்தார்[11]. காயத்ரி ரகுராமை கிண்டலடித்து மீம்ஸ் போட்டனர், ஆனால், உண்மையான காவிரி-எதிர்ப்பு செய்த ரம்யாவை கண்டுகொள்ளவில்லை. ஒரே நாளில் இந்த ட்ரென்ட் அடங்கி விட்டதால், அது போலியானது என்று வெளிப்பட்டது[12]. தமிழகத்திலேயே கண்டுகொள்ளாத போது ரம்யா ஏன் இதற்கு முக்கியத்துவம் .கொடுத்தார் என்ற கேள்வியும் எழுந்தது[13]. எப்படியாகிலும், அது செயற்கை என்றாகிவிட்டது.
இந்த கலாட்டாக்களுக்கு யார் பண உதவி செய்தது?: இருப்பினும், இந்த அள்விற்கு ஊடகங்கள் ஏன் பொங்கி செயல்பட்டன, அவ்வாறு நடுநிலை இல்லாத நிலையில் பாரபட்சம் மிக்க முறையில் செயல்பட வேண்டிய அவசியம் என்ன; அவர்கள் தன்னிச்சையாக, அவ்வாறு செயல்பட்டனரா அல்லது அரசியல் தூண்டுதலால் செய்தனரா என்று எழும் கேள்விகளுக்கு பதில் காண வேண்டும் என்றால், இத்தனையும் பணசெலவு இல்லாமல் நடக்காது. மேலும் அது ஒரு தீர்மான விளைவுகளை அறிந்து எதிர்கொள்ளும் திட்டமாக இருந்தது. ஆகவே, நிச்சயமாக காங்கிரஸ், திமுக முதலிய அரசியல் கட்சிஅளின் ஆதரவு இல்லாமல் நடக்காது. திமுக தலைமையில் அறிவாலயத்தில் 11-04-2018 அன்று நடந்த அனைத்துக் கட்சி தீர்மானங்கள் அதனை வெளிப்படுத்துகிறது. ஆக இந்த மக்கள் விரோத, பொது வாழ்க்கையினை பாதித்த போராட்டங்களுக்கு வேண்டிய பொருள்-பண உதவி (logistics) அந்தந்த கட்சிகளின் சார்பி; வந்துள்ளது அல்லது அவற்றை அளித்த வியாபாரிகள் மற்றும் கூட்டாளிகளிடமிருந்து வந்துள்ளது. இதன் ஆதாயம், நிச்சயமாக தமிழக ஆட்சி பிடிக்கும் நிலையல்ல, ஏனெனில், அது முடியாது என்று ஸ்டாலினுக்கு நன்றாகவே தெரியும்.. பிறகு ஏன் மோடி-எதிர்ப்பு என்ற கேள்விதான் மிஞ்சுகிறது. ஆக போதுமக்கள் நன்றாக புரிந்து கொள்வார்கள். ஐபிஎல் ரசிகர்கள், வியாபாரிகள் மற்றும் போர்க்கப்பலைப் பார்த்து விட்டு சென்ற சாதாரண மக்களும், கடந்த மூன்று நாட்கள் 10 முதல் 12 வரை ஏன் அத்தகைய கலாட்டா நடந்தது கிரிக்கெட் பார்க்கச் சென்ற இளம்-பெண்கள் மற்றவர்களிம் ஏன் அநாகரிகமாக நடந்து கொண்டானர்.
அம்பேத்கரையும் மறந்து, மோடி–எதிர்ப்பு போதையில் வெறியாட்டம் போட்டது: 14-04-2018 அம்பேட்தகரின் 127வது பிறந்த நாளாக இருந்தாலும், இந்த கோஷ்டிகள் மறந்து போய் கிடக்கின்றன. வேலை இல்லாதவன், கலாட்டா செய்வதே வேலையாகக் கொண்டவன் அற்பத் தனமாக, பிரதமந்திரியை எதிர்க்க தெருக்களில் வருவது வீரமல்ல என்று மக்களுக்குப் புரிந்தது. 134 கோடி மக்களின் பிரதம மந்திரியை அரைவேக்காட்டு ராகுலாலேயே ஒன்றும் செய்ய முடியவில்லை, இவர்களால் என்ன செய்யமுடியும் என்பதும் தெரிந்தது. 1960களில், இவர்கள் “பொறுக்கிகள், ரௌடிகள்” என்று பொது மக்கள் ஒதுங்கினார்கள், ஒதுக்கினார்கள், 2018ல் அவர்கள் சுவர் மீதும், கம்பங்களிலும் ஏறியிருக்கிறார்கள். பிற்படுத்தப் பட்டவன், டீ விற்றவன் என்ற தகுதி கொண்டவர், பிரதமர் ஆகியுள்ளதை இவர்களால் ஜீரணிக்க முடியவில்லை, இதில் ஐயரும், இவர்களும் ஒன்று படுகிறார்கள். இந்திய-விரோத வெறித்தன கோஷங்கள் அவர்களை வெளிக்காட்டி விட்டது, இனி தமிழ்நாடு மக்கள் அவர்களை நம்ப மாட்டார்கள். ஆளும் கட்சியினர், வலுவான சித்தாந்த கட்சியினர் எதிர்க்காமல் இருக்கும் போது, பிரிவினைவாதிகள் சேர்ந்து வந்தது அரசியல் சதுரங்கம். திராவிட இனவெறியர்களால் ராணுவம், ராணுவ முக்கியத்துவ நிகழ்சிகளைக் கூட கொச்சைப் படுத்த முடியும் என்பதனை உறுதிப்படுத்துகிறது. கொடிநாள் [Armed Forces Flag Day] வசூலில் தமிழகம் முன்னிலையில் உள்ள ரகசியம், இந்த இந்திய-விரோதிகளால் தானா?
© வேதபிரகாஷ்
19-04-2018
[1] பாலிமர் செய்தி, ராட்சத விளம்பரப் பலகை மீது ஏறி தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் கருப்பு கொடி போராட்டம், 12-04-2018.
[2] https://www.polimernews.com/view/5975-Protest-against-PM-Narendra-Modi’s-visit-near-Chennai-Airport
[3] தி.இந்து, ‘‘மேலே பறக்கும் நீங்கள், கீழே மக்கள் உணர்வுகளை பாருங்கள்’’ – மோடியை விமர்சித்து ஸ்டாலின் ட்வீட், Published : 12 Apr 2018 12:13 IST; Updated : 12 Apr 2018 12:13 IST.
[4] http://tamil.thehindu.com/tamilnadu/article23510103.ece
[5] தினத்தந்தி, பிரதமர் மோடி பற்றிய வைகோவின் கருத்துக்கு ஆதரவு: நடிகை ரம்யாவுக்கு கர்நாடக பா.ஜனதா எதிர்ப்பு, ஏப்ரல் 13, 2018, 03:00 AM.
[6] https://www.dailythanthi.com/News/Districts/2018/04/13024821/upport-for-Vaikos-opinionActress-Ramya-has-been-criticized.vpf
[7] தி.இந்து, வைகோவின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்த நடிகை ரம்யாவுக்கு பாஜக எதிர்ப்பு, இரா.வினோத், Published : 14 Apr 2018 19:09 IST; Updated : 14 Apr 2018 19:10 IST
[8] http://tamil.thehindu.com/india/article23541580.ece
[9] தி.இந்து, ‘‘பிரதமர் மோடிக்கு எதிரான #GoBackModi டிரெண்டிங்: காங்கிரஸூம் ரம்யாவுமே காரணம்’’ – காயத்ரி ரகுராம், Published : 12 Apr 2018 14:09 IST; Updated : 12 Apr 2018 14:25 IST
[10] http://tamil.thehindu.com/tamilnadu/article23510990.ece
[11] தமிழ்.ஒன்.இந்தியா, மோடிக்கு எதிராக காசு கொடுத்து டிவிட் செய்துள்ளார்கள்.. வேலையில்லாதவர்கள்.. காயத்திரி ரகுராம் சர்ச்சை, Posted By: Shyamsundar Updated: Thursday, April 12, 2018, 17:13 [IST].
[12] https://tamil.oneindia.com/news/tamilnadu/gayathri-raguramm-says-that-the-hashtag-gobackmodi-has-created-317057.html
[13] https://tamil.oneindia.com/news/tamilnadu/gayathri-raguramm-says-that-the-hashtag-gobackmodi-has-created/articlecontent-pf304403-317057.html