தமிழ், தமிழகம், தமிழ்நாடு: அரசியல் ஆட்சி, நிர்வாக மேன்மையிலிருந்து, கவர்ச்சி அரசியலுக்கு மாறியது – திராவிடத்துவவாதிகளின் வசைபாடும் போக்கு [1]
காந்திஜி, ராஜாஜி, காமராஜ், இந்திரா, மொரார்ஜி போன்றோரை இழிவாகச் சித்தரித்து, பேசி, தூஷித்தது: பொதுவாக பிரபலமானவர்களை ஆதரித்தும், எதிர்த்தும் சிலர் பிரபலமடைய முயற்சிக்கலாம், திராவிடத்துவத்தில் அத்தகைய கொள்கையுள்ளது. வில்லன்களாக அறிமுகம் ஆகி, ஹீரோக்கள் ஆன லாஜிக் தான் [negative suggestion] பிரபலமானவர்களை ஆதரிப்பதும், எதிர்ப்பதும்! அரசியலிலும் காந்திஜி, ராஜாஜி, காமராஜ், இந்திரா, மொரார்ஜி போன்றோரை இழிவாகச் சித்தரித்து, பேசி, தூஷித்து, பிரிவினையை வளர்த்தனர். நடு இரவு கூட்டங்களில் ஆபாசமாக, கொச்சையாக மற்றும் அநாகரிகமாக பேசினர். இருப்பினும் பெரியார், அறிஞர், கலைஞர் என்ற உயர்வு நவிற்சிகளில் உலா வந்தனர். நன்றாக தமிழ் பேசுவர் என்ற திறமையைத் தவிர, வக்கிரத்துடன், வாயாலேயே கொக்கோகத்தை விவரித்து உசுப்புவர் என்ற தன்மையினை மறைத்தே வைத்தனர். பெரியார், அத்தகைய எதிர்ப்பில் தோல்வி கண்டார் எனலாம்[1]. ஆனால், தேர்தலில் நிற்கமுடியாது என்ற நிலை வந்தவுடன்[2], அண்ணாதுரையே, “திராவிட நாடு” கோரிக்கையை தூக்கிப் போட்டார், 14-01-1969 அன்று முதலமைச்சர் ஆனார். அதே தோரணையில், 50 ஆண்டுகள் கழித்து, இப்பொழுது மோடியை தூஷித்து வருகின்றனர். இன்றைக்கு மோடியை திட்டுவது, ஒருமையில் பேசுவது, தூஷிப்பது என்று திராவிட கீழ்தட்டு வர்க்க அரசியல்வாதிகள் தரந்தாழ்ந்து வாடிக்கையாக செய்து வருகின்றனர். இதற்கு தமிழ், தமிழர், தமிழ்நாடு, திராவிடம், திராவிட நாடு கட்டுக்கதைகளை, உணர்ச்சிப் பூர்வமான கோஷங்களை எழுப்பி, தீவிரவாதத்தை வளர்க்கப் பார்க்கிறார்கள்.
இந்திய பிரத மந்திரிகளும், திராவிட அரசியலும், பிரிவினை போராட்டங்களும்: இந்திய பிரதமர்களின் அட்டவணை, காலக் கிரமமாகக் கொடுக்கப்பட்டுள்ளது: இக்காலக்கட்டங்களில் திராவிட கட்சிகள் [திமுக-அதிமுக], மத்தியில் ஆண்ட கூட்டணியுடன் சேர்ந்து தான் அதிகாரத்தை அனுபவித்து, தத்தமது மாநில குறுகிய தன்னலங்களிலும் ஈடுபட்டிருந்தன.
பிரதமந்திரி பெயர் | இருந்து | வரை | ஆண்ட கட்சி | |
1 | ஜவஹர்லால் நேரு | 15-08-1947 | 27-05-1964 | இந்திய தேசிய காங்கிரஸ் |
– | குல்சாரிலால் நந்தா | 27-05-1964 | 09-06-1964 | இந்திய தேசிய காங்கிரஸ் |
3 | லால் பஹதூர் சாஸ்திரி | 09-06-1964 | 11-01-1966 | இந்திய தேசிய காங்கிரஸ் |
– | குல்சாரிலால் நந்தா | 11-01-1966 | 24-06-1966 | இந்திய தேசிய காங்கிரஸ் |
3 | இந்திரா காந்தி | 24-06-1966 | 24-03-1977 | இந்திய தேசிய காங்கிரஸ் |
4 | மொரார்ஜி தேசாய் | 24-03-1977 | 28-07-1979 | ஜனதா கட்சி |
5 | சரண் சிங் | 28-07-1979 | 14-01-1980 | ஜனதா கட்சி [செக்யூலார்] |
6 | இந்திரா காந்தி | 14-01-1980 | 31-10-1984 | இந்திய தேசிய காங்கிரஸ் |
7 | ராஜிவ் காந்தி | 31-10-1984 | 02-12-1989 | இந்திய தேசிய காங்கிரஸ் |
8 | வி.பி. சிங் | 02-12-1989 | 10-11-1990 | இந்திய தேசிய காங்கிரஸ் |
9 | சந்திரசேகர் | 10-11-1990 | 21-06-1991 | இந்திய தேசிய காங்கிரஸ் |
10 | பி.வி. நரசிம்ம ராவ் | 21-06-1991 | 16-05-1996 | இந்திய தேசிய காங்கிரஸ் |
11 | அடல் பிஹாரி வாஜ்பாயி | 16-05-1996 | 01-06-1996 | பாரதிய ஜனதா பார்ட்டி |
12 | எச்.டி.தேவ கவுடா | 01-06-1996 | 21-04-1997 | ஜனதா தள் [யுனைடெட்] |
13 | ஐ.கே.குஜரால் | 21-04-1997 | 19-03-1998 | ஜனதா தள் [யுனைடெட்] |
14 | அடல் பிஹாரி வாஜ்பாயி | 19-03-1998 | 22-05-2004 | பாரதிய ஜனதா பார்ட்டி |
மன் மோஹன் சிங் | 19-03-1998 | 22-05-2004 | இந்திய தேசிய காங்கிரஸ் | |
15 | மன் மோஹன் சிங் | 22-05-2004 | 26-05-2014 | இந்திய தேசிய காங்கிரஸ் |
16 | நரேந்திர மோடி | 26-05-2014 | பாரதிய ஜனதா பார்ட்டி |
1969-2019 என்று ஐம்பது ஆண்டு திராவிட கட்சிகளின் ஆட்சி என்று ஆராய்ச்சி செய்து பார்த்தால், அவற்றால் தமிழ், தமிழர், தமிழ்நாடு, முதலியவற்றிற்கு என்ன நன்மைக்-தீமை ஏற்பட்டன என்பதனை அலசிப் பார்த்துத் தெரிந்தும் கொள்ளலாம். திமுக மற்றும் அதிமுக தான் காங்கிரஸுடன் பல்லாண்டுகள் சேர்ந்து, கூட்டாட்சி நன்மைகளை பெற்றன. ஆகையால், காவிரிப் பிரச்சினைக்கு அவை என்ன செய்து கொண்டிருந்தன என்பதனையும் அறிந்து கொள்ளலாம்.
எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா திராவிடர்களால் அதிகம் தூஷிக்கப் பட்டது: ஜவஹர்லால் நேரு காலத்தில் [1964 வரை] அண்ணாதுரை “அடைந்தால் திராவிட நாடு, இல்லாவிட்டால் சுடுகாடு, வடக்கு வாழ்கிறது, தெற்குத் தேய்கிறது” என்றெல்லாம் பேசி, பிறகு, அடங்கி-ஒடுங்கி, தேர்தலில் நின்று வெற்றி பெற்றி 1969ல் முதலமைச்சர் ஆனார் என்பது மேலே சுட்டிக் கட்டப்பட்டது. கருணாநிதியும் அதே பாணியைப் பின்பற்றி தொடர்ந்து ஆட்சியில் இருக்க எல்லா சூழ்ச்சிகளையும் [இந்தி எதிர்ப்பு, மாநில சுயயாட்சி] செய்து வந்தார். 1970-80களில், திராவிடத்துவவாதிகள் எம்.ஜி.ஆரை அவ்வாறு தான் தாக்கி வந்தனர். மலையாளி, கூத்தாடி, தாத்தா, என்றெல்லாம் சொல்லி, பேசி, திட்டினார்கள். ஆனால், முன்னர் அதே எம்.ஜி.ஆர் சுடப்பட்டு, ஆஸ்பதித்திரியில் இருந்த போது, அப்புகைப் படத்தை தேர்தல் பிரச்சாரத்திற்கு உபயோகப் படுத்தி, திமுக வெற்றிக் கண்டது. பிறகு, எம்.ஜி.ஆர், அதிமுக ஆரம்பித்தபோது, கருணாநிதி, தர்மத்திற்கு முன்னால் “அ” போட்டால் அதர்மம், நியாயத்திற்கு முன்னால் “அ” போட்டால் அநியாயம், என்றெல்லாம் விவரித்து, திமுக முன்னால் “அ” போட்டால் “அதிமுக” ஆயிற்று என்று சொன்னது போலத்தான், இன்று தீவிரவாத-பிரிவினைவாத கும்பல்கள், மோடியைத் தாக்கி வருகின்றனர். ஜெயலலிதாவையும் அதே பாணியில், பெண் என்றும் பார்க்காமல், கீழ்த்தரமாகத் திட்டி வந்தனர். போதாகுறைக்கு, அவர் பிராமணர் என்பதால், “பாப்பாத்தி” என்று வேறு மேடைகளில் அருவருப்பாகப் பேசி வந்தனர். அண்ணாவின் ஏசல்-பாணியை கரு அப்படியே பின்பற்றியது தான் “கடமை, கண்ணியம், கட்டுப்பாடு” என்ற கொள்கையாக இருந்தது.
குடி அரசு, திராவிட நாடு, நாத்திகம், ஆபாசங்கள் இன்றும் விடுதலை, முரசொலிக்களில் தொடர்வது: ஜெயலலிதா மைனாரிடி அரசு என்று குறிப்பிட்டதை பொறுக்காமல், கருணாநிதி முரசொலியில் பழங்கதையை போட்டு அசிங்கப்படுத்தினார்[3]. முரசொலியில் ஜெயலலிதா பற்றிய எழுத்துகள் பெண்மையை தூசிக்கும் வரம்புகள், ஆபாசத்தின் எல்லைகள், எண்ணவுரிமை தரங்கள் எல்லாவற்றையும் கடந்ததவை என்பதை காணலாம்[4]. இப்படியெல்லாம் தரங்கெட்டு பேசினால், நடந்து கொண்டால், எல்லோரும் கண்டு கொள்ளாமல் இருக்கிறார்கள், அதனால், மக்கள் ஏற்றுக் கொண்டு விட்டார்கள் இல்லை நாம் அதிகாரத்தில் இருப்பதனால், யாரும் ஒன்றும் செய்ய முடியாது, அதிகாரத்தில் இல்லாமல் இருந்தாலும், அடிப்பார்கள்-உதைப்பார்கள்-அவமரியாதை செய்வார்கள் என்று தொடந்து செய்து வருகிறார்கள் என்று தெரிகிறது. விடுதலையில் இன்றும் அத்தகைய தேசவிரோத, இந்துவிரோத, ஆனால், துலுக்க-கிருத்துவ ஆதரவு எழுத்துகளை காணலாம். பேச்சு-நடவடிக்கைகளும் அவ்வாற்றே உள்ளன, தொடர்கின்றன. “கடமை, கண்ணியம், கட்டுப்பாடு” என்ற கொள்கை தாராளமாக பின்பற்றப்பட்டு வருவது தெரிகிறது. அவர்களது நாத்திகம் செக்யூலரிஸ நாத்திகமாக இருந்து வருவதால், பிராமண எதிர்ப்பு, துவேசம் மற்று காழ்ப்புணர்வு கொதிப்புகள் ஜெயலலிதா மீது சிந்திகொண்டே இருந்தன.
© வேதபிரகாஷ்
19-04-2018
[1] காந்தி, காங்கிரஸ் எதிர்ப்புகளிலிருந்து, இந்திய-இந்தி-இந்து-எதிர்ப்பு பவரை தோல்வி கண்டார், ஆனால், ஜின்னாவும், அம்பேத்கரும் அவரவர் வழிகளில் வெர்றிக் கண்டனர்.
[2] அரசியல் நிர்ணய சட்ட திருத்தத்தினால், திராவிட நாடு கொள்கையை, மறந்தார்.
[3] 1978-ம் ஆண்டு குமுதம் இதழில் வெளிவந்த ஜெயலலிதாவின் “மனம் திறந்து பேசுகிறேன்” என்கிற தொடரில்தான் தெலுங்கு நடிகர் சோபன் பாபுவும் தாமும் ஒரே வீட்டில் குடித்தனம் நடத்துவது குறித்தும் சோபன்பாபுவுக்கு பால்கனியில் நின்று ஜெயலலிதா டாட்டா காண்பிக்கும் படங்களும் வெளியாகி இருந்தன என குறிப்பிடப்படுவது உண்டு. 2009-ம் ஆண்டு ஆகஸ்ட் 19-ந் தேதி முரசொலி நாளேடானது 1978-ல் குமுதம் இதழில் வெளிவந்த ஜெயலலிதா பேட்டி என ஒன்றை பிரசுரம் செய்தது.
[4] Twenty years later, in 2009, when Jayalalithaa referred to the DMK government as ‘the minority government’ — which is a political statement — Karunanidhi retorted by a personal attack on Jayalalithaa, calling her ‘thirumathi’ (meaning, Mrs.), implying that she was married to Sobhan Babu, and reprinting in the DMK’s official daily Murasoli (dated 19.08.2009)Jayalalithaa’s old interview to Kumudham weekly (in which she talked about her relationship with Sobhan Babu).
Rajanayagam, Popular Cinema and Politics in South India: The Films of MGR and Rajinikanth, Routledge, New Delhi, 2015, p……, fn.23.