Archive for the ‘உரிமம்’ Category

தமிழகத்தில் வெடிகுண்டு தயாரிப்பு, வெடிப்பொருட்கள் உபயோகம், வெடிகுண்டு கலாச்சாரம் (2)

ஒக்ரோபர் 29, 2011
தமிழகத்தில் வெடிகுண்டு தயாரிப்பு, வெடிப்பொருட்கள் உபயோகம், வெடிகுண்டு கலாச்சாரம் (2)
தமிழகத்தில் வெடிப்பொருட்கள், குண்டுகள் தயாரிக்கும் தொழிற்சாலைகள்: அருவங்காடு என்ற இடத்தில் இருக்கும் கார்டைட் நிறுவனம், இந்திய ராணுவத்திற்கு சப்ளை செய்கிறது[1]. தமிழக அரசு நிறுவனமான[2] “தமிழ்நாடு எக்ஸ்போலிசிவ் லிமிடெட்” என்ற தொழிற்சாலையில் ரசாயன வெடிகுண்டு வகைகள் தயாரிக்கப் படுகின்றன[3]. குறிப்பாக அத்தொழிற்சாலை உற்பத்தி செய்யும் ரசாயன வெடிமருந்து கலவைகளில் இவ்வகை – நைட்ரோ செல்லூலோஸ் வருகிறது. நைட்ரோ செல்லூலோஸ் வகைகளில் ( Emulsion Explosives)  மூன்று வகைகள் உள்ளன[4]
  1. Non-Permitted – அனுமதிக்கப்படாதவை
  2. Permitted – அனுமதிக்கப்பட்டவை
  3. Seismic – பூமியதிர்வு ஆராய்ச்சி முதலியவற்றிற்கு உபயோகப்படுத்தப்படுபவை.

பென்டா எரித்ரிடோல் டிரை நைட்ரேட் என்ற [PETN (Pentaerythritol Tri-Nitrate) explosive] வெடிவகைகளும் உபயோகப் படுத்தப் படுகின்றன[5]. சமீபத்தில் இந்த வெடி மருந்துகள் கொண்ட குண்டுகளைத்தான் தீவிரவாதிகள் உபயோகப் படுத்தியுள்ளனர். இத்தகைய ரசாயனப் பொருட்கள் உபயோகம், அவற்றை பயன்படுத்தக் கூடிய முறைகளை அறிந்தவர்கள் என்று தெரிகிறது. குறிப்பாக தீவிரவாதத்திற்கு அவற்றை மாற்றியமைத்து குண்டுவெடித்து நாசவேலை செய்யும் பின்னணியையும் காட்டுகிறது[6]. இவை மொத்தமாக நியமிக்கப்பட்ட விற்பனை ஏஜென்டுகள் மூலம் விற்க்கப்படுகின்றன[7] மற்றும் மாநில வாரியாக டீலர்களும் உள்ளனர்[8]. முன்பு சந்திரபாபு நாயுடு கார்கள் செல்லும்போது, நக்ஸலைட்டுகளால் இந்த வகை குண்டுகள் உபயோயோகிக்கப்பட்டன[9]. அப்பொழுது உற்பத்தி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. எனெவே, குவாரிகளுக்கு என்று வாங்கிச் செல்லும் வெடிமருந்துகள், குண்டுகள் முதலியவை தீவிரவாதிகளுக்குச் செல்கின்றன, அவர்கள் அவற்றை வெடிகுண்டுகளாக தயாரித்து, டைமர் முதலியவற்றுடன் உபயோகப் படுத்துகிறார்கள் என்று தெரிகிறது[10]. தமிழகத்தில் வெடித்துவரும் “பைப் வெடிகுண்டுகள்” குறிப்பிட்ட குழிவினரைக் காட்டுகிறது எனலாம்.

 

யாருக்கு தொடர்பு? – வழக்கை திசைத் திருப்பவா, உண்மையினை அறிந்து கொள்ளவா?  இப்பொழுதெல்லாம் போலீஸாரும், டாக்டர்களைப் போல ஆகிவிட்டார்கள், பதில் சொல்கிறார்கள் – “விசாரணை ஆரம்பிக்கப் பட்டுள்ளது. இது சம்பந்தப் பட்ட வல்லுனர்கள் அறிக்கை கொடுத்த பிறகு தான் மற்ற விவரங்கள் சொல்லமுடியும். நாங்கள் அதைப் பற்றி ஒன்றும் கூறாமுடியாது”, என்றா ரீதியில் பதில் அளிக்கின்றனர்.  போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், “நேற்று அதிகாலை 3.30 மணியளவில் வடஇந்தியரை போல காணப்பட்ட மர்ம நபர், பாலம் அருகே நடமாடி கொண்டிருந்ததாக போலீசுக்கு தகவல் கிடைத்துள்ளது[11]. வெடிகுண்டுகளை மணல் மூட்டைகளுக்கிடையே வைத்து பிரித்தபோது, அதில் 7 கிலோ எடையுள்ள, “ஹை பவர் ஜெலட்டின் ஜெல்’ வைக்கப்பட்டிருந்தது[12]; [தமிழன் டிவி எப்படி ஆர்.டி.எக்ஸ் வெடிமருந்து நிரப்பப்பட்டும் …….என்று வெளியிட்டுள்ளது என்று தெரியவில்லை[13]. ஆர்.டி.எக்ஸ் என்பது சைகிளோ-டிரை-எதிலமைன்-டிரைநைட்ரோ அமைன் (Cyclotrimethylenetrinitramine) என்பதாகும்] அதனுடன் டெட்டனேட்டர்களும் இணைக்கப்பட்டிருந்தன. அவை செயலிழக்க வைக்கப்பட்டன. “ஜெல் 90′ வகையைச் சேர்ந்த இந்த வெடி மருந்துகள் எங்கிருந்து வாங்கப்பட்டன என்பது குறித்து, விசாரணை நடக்கிறது. இந்த வகை வெடி மருந்து, அரசு வெடி மருந்து கிட்டங்கியில் மட்டுமே தயாரிக்கப்படுகிறது. இந்த சம்பவத்தில் நக்சலைட்கள், வடமாநில பயங்கரவாதிகள் அல்லது ஏதாவது அமைப்பைச் சேர்ந்தவர்கள் ஈடுபட்டிருக்கலாமா என, போலீசார் விசாரிக்கின்றனர். சம்பவ இடத்தில் மத்திய உளவுப்பிரிவு, கியூ, சிறப்பு புலனாய்வு பிரிவு உள்ளிட்ட பல்வேறு பிரிவு அதிகாரிகள் குவிந்தனர். முதற்கட்ட விசாரணையில் வெடிகுண்டு தயாரிப்பில் கை தேர்ந்தவர்களால் மட்டுமே இச்செயலில் ஈடுபட்டிருக்க முடியும் என போலீசார் சந்தேகிக்கின்றனர். அத்வானியின் கார் வரும்போது ஒருவர் பேட்டரியை இயக்கினால் வெடிக்கும் வகையில் குண்டு தயாரிக்கப்பட்டிருந்தது. தீவிரவாத அமைப்புகள் அல்லது நக்சலைட் இயக்கத்தினர் யாரும் இச்செயலில் ஈடுபட்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்[14].


ஆலம்பட்டியை தேர்வு செய்தது ஏன்? குறுகிய பாலம் என்பதனால், ஒரு வண்டி போகும் போது, எதிரில் வரும் வண்டி நின்று வழிவிட வேண்டும். அத்தகைய பாலத்தைத் தேர்ந்தெடுத்தது சந்தேகத்தையெழுப்புகிறது.

  • “இசட்’ பிரிவு பாதுகாப்பில் உள்ள தலைவர்கள் வரும் போது, அவர்கள் செல்லும் பாதையில், பாலங்கள் உட்பட முக்கிய கிராமங்களில் இரவு நேரத்தில் போலீஸ் பாதுகாப்பு போடப்படும். ஆனால், வெடிகுண்டு வைக்கப்பட்டிருந்த பாலத்தில் இரவு நேரத்திலும், நேற்று காலையிலும் கூட பாதுகாப்பிற்காக யாரும் நிறுத்தப்படவில்லை[15].
  • திருமங்கலம் – ராஜபாளையம் இடையே உள்ள ரோட்டில் இந்த ஆலம்பட்டி தரைப்பாலம் மட்டும் தான் குறுகியது. எனவே, யாரும் தப்பிவிடக் கூடாது என்பதற்காக வெடிகுண்டு வைத்தவர்கள் இப்பாலத்தை தேர்ந்தெடுத்துள்ளனர்.
  • போலீசார் கூறுகையில், “சக்தி வாய்ந்த இந்த வெடிகுண்டு வெடித்திருந்தால், பெரிய அளவில் சேதம் ஏற்பட்டிருக்கும். பைப்பிற்குள், 4 பிளாஸ்டிக் பைகளில், 4 அடிக்கு கருமருந்து அடைக்கப்பட்டிருந்தது. இந்த குண்டை, மொபைல் போன் மூலம் “ஆபரேட்’ செய்ய திட்டமிட்டிருக்கலாம்’ என்றனர்.
  •  பாலத்தின் அடியில் வெடிகுண்டு இருப்பது தெரிந்ததும், ஒரு மணி நேரம் இப்பாதையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
  • இச்சம்பவத்தால், அத்வானி ஆலம்பட்டி வழியாகச் செல்லாமல், விருதுநகர், சிவகாசி நான்கு வழிச்சாலை வழியாக ஸ்ரீவில்லிபுத்தூர் சென்றார்[16].


கோவையை தொடர்ந்து மதுரையிலும் குறி: அத்வானி, 1998ம் ஆண்டில் லோக்சபா தேர்தல் பிரசாரத்திற்காக கோவை வந்தபோது, தொடர் குண்டு வெடிப்பு நடந்ததில் பலர் பலியாகினர்; விமானம் தாமதமாக வந்ததால், அத்வானி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.இந்நிலையில், மதுரையில் நேற்று அவரை குறி வைத்தே குண்டு வைக்கப்பட்டுள்ளது. இரண்டு நாட்களாக இதற்கான வேலையில் மர்ம நபர்கள் ஈடுபட்டுள்ளனர். பயமுறுத்தவோ, எச்சரிக்கவோ அல்லாமல், தாக்குதல் நடத்தும் நோக்கிலேயே குண்டு வைக்கப்பட்டிருக்கலாம். இதற்காகவே ஆள் நடமாட்டம் அதிகம் இல்லாத இடத்தில், குறுகிய பாலத்தில் சதியை நிறைவேற்ற திட்டமிட்டுள்ளனர் என, போலீசார் கருதுகின்றனர்.மதுரை சிறையில் இருந்து விசாரணை கைதிகளை, ஆலம்பட்டி வழியாக தென்காசி கோர்ட்டிற்கு போலீசார் அழைத்துச் செல்வது வழக்கம். கைதிகளில் யாரையாவது கொலை செய்ய, இந்த குண்டுகள் வைக்கப்பட்டதா என்றும் விசாரணை நடக்கிறது. காரணம், இரு ஆண்டுகளுக்கு முன், மதுரை ரிங் ரோடு ஓடைப் பாலத்தின் அடியில், நெல்லையில் இருந்து வந்த கைதிகளை கொல்ல வைக்கப்பட்டிருந்த, “கூஜா வெடிகுண்டுகள்’ கைப்பற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.


தொடரும் மிரட்டல் – நகைச்சுவையாக மாற்றப்பட்ட குண்டுவெடிப்புகள் : மதுரைக்கு தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல் இருந்து வருகிறது. ஐந்து மாதங்களுக்கு முன், மாட்டுத்தாவணி எதிரே இருந்த டாஸ்மாக் கடையில் வெடிகுண்டு வெடித்தது. கடந்த செப்., 30ல் புதூர் அரசு பஸ் டெப்போவில் டைம் பாம் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது, அத்வானி செல்லும் பாதையில், சக்தி வாய்ந்த குண்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது. மிரட்டலுக்கு, பயமுறுத்தலுக்குக் கூட வெடிகுண்டுகளை உபயோகப் படுத்தப் படுகின்றன என்றால், அத்தகைய கொடூரம் மனங்களில் வேடிக்கையாக, விளையாட்டாக ஆகிவிட்டது போலும். அதற்கேற்ற முறையில், குண்டு வெடிப்பது எப்பது தமிழ் திரைப்படங்களில் “ஜோக்காகி” விட்டது. அது மனிதர்களைக் குரூரமாக கொல்ல உபயோகப்படுத்தப் படும் தீவிர வாதம் / பயங்கரவாதம் என்ற எண்ணத்திற்குப் பதிலாக “தமாஷாக” எடுத்துக் கொள்ளும் நிலையை தமிழ்த்திரைப்பட நகைச்சுவை மாற்றிவிட்டிருக்கிறது.


தேசதுரோகிகளின் முயற்சி:பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டியும், நிதர்சனமும்: “அத்வானி யாத்திரை வழியில் வெடிகுண்டு வைத்தது தேசதுரோகிகளின் முயற்சியாக இருக்க வேண்டும்,” என மாநில பா.ஜ., தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.அவர் தினமலர் நிருபரிடம் கூறியதாவது: “இச்செயல் கோழைத்தனமான ஒன்று. இதுபற்றி பா.ஜ., கவலை கொள்ளவில்லை. போலீசார் நடவடிக்கை எடுப்பர். அத்வானியின் யாத்திரை, ஊழல், லஞ்சம் மற்றும் கறுப்புப் பணத்திற்கு எதிரானது என அனைவரும் புரிந்து கொண்டுள்ளனர். யாத்திரை, யாருக்கும் எதிரானது அல்ல என தெரிந்த பிறகும், இத்தகைய முயற்சிகள் நடப்பது தேசதுரோகிகளின் முயற்சிகளாக தான் இருக்க முடியும். நாடு நன்றாக இருக்க வேண்டும், ஊழலை ஒழிக்க வேண்டும் என நினைப்பவர்கள், இத்தகைய செயல்களில் ஈடுபட மாட்டார்கள், என்றார். மூப்பனார் முதல் கருணாநிதி வரை இவர்கள் எப்பொழுதும் தாங்களே குண்டு வைத்துக் கொள்வர்கள்[17] என்று ஜோக் அடித்துள்ளதையும் நினைவு கூரத்தக்கது”. இதுவும் இன்றைய சூழ்நிலைகளில் முக்கியமாகிறது, ஏனெனில், இணியதள தாக்குதல்களில் மறைந்து தாக்கும் சூராதி சூரர்கள் இத்தகைய வாதத்தை வைத்து ஏமாற்றப் பார்க்கின்றனர் என்பதைவிட, உண்மையை மறைக்க பிரச்சார யுக்தியாக பயன்படுத்துகின்றனர். செய்த குற்றங்களோ, செத்தவர்களோ பொய்யில்லை. குறைந்த தண்டனைகள் பெற்று வெளியில் வந்துவிட்டதால், அவர்கள் புனிதர்கள் ஆகிவிட மாட்டார்கள், ஏனெனில் செத்தவர்களின் மனைவி-மக்களுக்கு, உறவினர்களுக்கு கொலையாளிகள் யார் என்று நன்றாகவே தெரியும். அவர்கள் நடமாடி வரும்போது, உலா வரும்போது, அப்போது பார்க்கும் போது கொலைகாரகள் போகிறார்கள் என்று தான் நினைப்பர்கள்.

   

“பவர் ஜெல்” வெடி மருந்து என்றால் என்ன?: பல்வேறு ரசாயனங்களில் இருந்து வெடி மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன[18]. அதுமட்டுமல்லாது வெடிகுண்டுகள் தயாரிப்பது பற்றி புத்தகங்களை வேறு வெளியிடுகிறார்கள். அல்-குவைதா, தலிபான் போன்ற குழுக்கள் ரசாயன படிப்புப் படித்த இளைஞர்களை வைத்துக் கொண்டு, குண்டுகளைத் தயாரிப்பது, வெடிப்பது பற்றிய கையேடுகளைத் தயாரித்து, தீவிரவாத இளைஞர்களுக்கு, புதிய தீவிரவாதிகளுக்குக் கொடுக்கிறார்கள். இவற்றில், “பவர் ஜெல் வெடி மருந்து’ ஒரு வகை. நைட்ரோகிளிசரின்[19], டி.என்.டி., அசிட்டோன் பெராக்சைடு, ஆர்.டி.எக்ஸ்., அல்லது நைட்ரோசெல்லுலரஸ் ஆகிய ரசாயன பொருட்களை அதிக அழுத்தத்தில் சிலிண்டர் அல்லது பைப்பில் அடைத்து, அதை திடீரென எரிய வைத்தால், அதிக சக்தி, வெப்பம் மற்றும் நெருப்பு வெளிப்படும். இது சில மீட்டர் சுற்றளவுக்கு சேதத்தை ஏற்படுத்தும்.வெடி மருந்தை வெடிக்கச் செய்வதற்கு, திரவ நைட்ரஜன் பயன்படுத்தப்படும். இதனால், இவ்வகை வெடிகுண்டுகள், “பவர் ஜெல்’ என அழைக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. ராணுவத்தில் மட்டுமல்லாது இவ்வகை வெடிகுண்டுகள் குவாரிகளிலும் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. அவ்வாறு அவை எளிதில் கிடைப்பதால், அவறையே வெடிகுண்டுகளாக தீவிரவாதிகள் பயன்படுத்துகின்றனர்.

வேதபிரகாஷ்

28-10-2011


[2] TEL, a Government of Tamilnadu Enterprise, has a comprehensive product range, which facilitates single window delivery of complete range of explosives and accessories to its customers.

[13] ஊழலுக்கு எதிராக நாடு முழுவதும் ரத ஊர்வலம் மேற்கொண்டுள்ள பா.ஜ.க.மூத்தத்தலைவர் அத்வானி நேற்று காலை ஊர்வலத்திற்கு தயாராகி இருந்த நிலையில் மதுரை-இராஜபாளையம் நெடுஞ்சாலையில் ஆலம்பட்டி என்ற கிராமத்தில் தரைப்பாலம் ஒன்றின் கீழ் வெடிகுண்டு இருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது.
அப்போது காவல்துறை அதிகாரிகள் விரைந்து சென்று ஆய்வு மேற்கொண்டதில் 6- அடி நீளமுள்ள குழாயில் ஆர்.டி.எக்ஸ் வெடிமருந்து நிரப்பப்பட்டும், 25-மீட்டர் நீளமுள்ள மின்கம்பியில் இணைக்கப்பட்டும் கிடந்த வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டது. http://tamilantelevision.com/news.php?Id=1319868919

[16] நன்றி – தினமலர்.

[17] காமராஜர் அரங்கத்தில் நடந்த மாநாட்டில் மூப்பனார், கருணாநிதி முதலியோர் அவ்வாறு வெளிப்படையாக கிண்டலடித்து, நக்கலாக பேசியபோது, பலர் அதை கேட்க நேர்ந்துள்ளது. அபொழுது தான் மூப்பனாரின் மீதிருந்த மதிப்பும் சரிந்தது. அடடா மூப்பனாரை போன்றவர்கள் கூட இவ்வாறு பேசுகிறார்களே என்று வியப்படைய நேர்ந்தது, வருத்தப்படவும் செய்தது.