Archive for the ‘உண்மை சமதர்மம்’ Category

பெரியார்தாசனை காண்காணிக்க வேண்டுமாம் – சொல்வது முஸ்லீம்கள்!

ஏப்ரல் 10, 2010

பெரியார்தாசனை காண்காணிக்க வேண்டுமாம் – சொல்வது முஸ்லீம்கள்!

இதெல்லாம் வேடிக்கையாகவே உள்ளது.

அதிரடியாக, பரபரப்புடன், அந்த ஆளை ரியாத்திற்கு அழைத்து வந்து சுன்னத் செய்து “முஸ்லீம்” என்று சொல்லி, மெக்கா-மெதினா தரிசனத்திற்கு அழைத்துச் சென்று………………….படங்கள் எல்லாம் எடுத்து காட்டி, இப்பொழுது “கண்காணிக்கப் படுவார்” என்றால் என்ன?

பெரியார்தாசனை கண்காணிக்கும் அதென்ன புதிய நிலைபாடு?

http://markaspost.wordpress.com/2010/04/10/பெரியார்தாசனை-கண்காணிக்/

பெரியார்தாசன் என்ன நோக்கில் இஸ்லாத்தை ஏற்றார் எனத் தெரியவில்லை! நாங்கள் அவரை கண்காணித்துக் கொண்டு இருக்கிறோம் என்ற தனி நபர் ஜமாஅத்தின் நிலைப்பாடு பற்றி மார்க்க அடிப்படையில் சரியா என்பதை அறிந்து கொள்ளும் முன் இதுபோன்ற விஷயங்களில் ஏற்கனவே அந்த ஜமாஅத்தின் நிலைப் பாடு என்ன? என்பதை பார்ப்போம்!

முதலாவதாக, இதுவரை இஸ்லாத்தை ஏற்ற அனைவருக்கும் இதே நிலைதான் எடுக்கப்பட்டதா?
தங்கள் ஜமாஅத்தில் வந்து இஸ்லாத்தை ஏற்றால் இந்த அளவு கோலைக் கொண்டுதான் அவர்களை அளந்தார்களா? கண்காணித்த பிறகுதான் அவர்கள் அறிமுகப்படுத்தப்பட்டர்களா?

அய்யம்பேட்டை சகோதரிகளை இப்படித்தான் கண்காணித்து அனைத்து ஊடகங்களில் எல்லாம் முன்னிலைப்படுத்தினார்களா? தவ்ஹீத் எழுச்சி மாநாட்டில் மேடை ஏறி உரை நிகழ்த்த அனுமதிக்கப்பட் டார்களா?

ஏ.ஆர். ரஹ்மானை மேடையேற்ற முடியுமா? என்றெல்லாம் கேட்கிறார்களே! ஏ.ஆர். ரஹ்மான் இன்றுதான் இஸ்லாத்தை ஏற்றார் என்றால் அவரையும் இதே நிலைபாடு கொண்டுதான் வரவேற்று அதன் பின் அவருக்கு மார்க்கத்தை எடுத் துச் சொல்ல வேண்டும்.

அவரது நிலை என்ன என்பது பற்றி நம்மிடத்தில் கேள்வி இல்லை. “அவர்களுக்காக நீர் விசாரிக்கப்பட மாட்டீர்” -(அல்குர்ஆன்) என அல்லாஹ் கூறுவதாலும், வந்தவர்களுக்கு நேர்வழியை எடுத்துச் சொல்லாமல் எட்டி நின்று கண்காணித்து “விழுந்த பின் தான் சுட்டிக் காட்டுவோம்’ என்பது என்ன நிலைபாடு?

மார்க்க அடிப்படையில் இஸ்லாத்தை ஏற்றவர்களின் உள்ளத்தைப் பிளந்து பார்க்கும் செயலைச் செய்யக் கூடாது என்பதை காலீத் பின் வலீத் (ரலீ) சம்பவத்திலும், உஸôமா (ரலி) சம்பவத்திலும் நாம் காண்கிறோம்.

நாளை அவர் வழிகெட்டு விட்டால்… என்ற கேள்வியே முதலில் தவறாகும். நபி (ஸல்) அவர்கள் காலத்தில் அவர்களிடத்திலே கலிமா சொல்லி இஸ்லாத்தை ஏற்ற எத்தனையோ பேர் இஸ்லாத்தை விட்டு வெளியேறிய சம்பவத்தை மிஃராஜின் போதும், பொய்த் தூதரை பின்பற்றிச் சென்ற சம்பவத்திலும் நாம் அறிந்திருக் கின்றோம்.

நபி (ஸல்) அவர்களின் காலத்திற் குப் பின்னும், அபுபக்கர் (ரலி) ஆட்சிக் காலத்தில் ஜகாத்தை மறுத்து ஒரு கூட்டமும், பொய்த் தூதர்களைப் பின்பற்றி ஒரு கூட்டமும் வழி தவறிச் சென்றது. உஸ்மான் (ரலி) காலத்தில் கார்ஜியாக்கள் என்று ஒரு பிரிவினர் வழிகெட்டுப் போனதை அறிந்திருக்கிறோம். இப்படி நபி (ஸல்) அவர்களால் உறுதிமொழி எடுத்த எத்தனையோ பேர் வழிகேட்டில் வீழ்ந்திருப்பதை அறிந்திருக்கிறோம்.

வழிகேடும், நேர்வழியும் நம் கையில் இல்லை. ஒருவர் சொர்கத்துக்குரிய காரியத்தை செய்து கொண்டே இருப்பார், இறுதி நேரத்தில் நரகத்திற்குரிய காரியத்தைச் செய்ய வைத்து அவரை அல்லாஹ் நரகத்திற்குரியவராக்குவான். ஒருவர் நரகத்திற்குரிய காரியத்தை செய்து கொண் டே இருப்பார், இறுதி நேரத்தில் சொர்க்கத்துக்குரிய காரியத்தை செய்ய வைத்து அவரை சொர்க் கத்திற்கு உரியவராக ஆக்குவான். (-புஹாரி)

நம்மில் எத்தனையோ பேர் வழிகேட்டில் இருந்து நேர்வழிக்கும், நேர்வழியில் இருந்து வழிகேட்டிற்கும் சென்றுள்ளதாக நீங்கள் கூறுகின்றீர்கள். ஏன்? ஆலிமான நீங்களே கூட இறை மறுப்புக் கொள்கைக்குச் சென்று நேர்வழிக்கு திரும்பி வந்ததாகக் கூறியுள்ளீர்கள்! இவ்வாறு இருக்கையில் இஸ்லாத்தை ஏற்ற ஒருவரின் உள்ளத்தை ஆராய மல் அவர்களை வரவேற்பதும், முக்கியத்துவம் அளிப்பதும் மார்க்க அடிப்படையில் தவறில்லையே!

புதிதாக இஸ்லாத்தை ஏற்ற முஹாஜிர்களுக்கு, அன்சாரிகளுக்கு இல்லாத முக்கியத்துவத்தை நபி (ஸல்) அளித்ததை நாம் ஹதீஸ்களில் பார்க்கிறோம். எந்த அளவுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது என்றால், “நீங்கள் நீதமாக நடக்கவில்லை, புதிதாக இஸ்லாத்தை ஏற்றவர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து எங்களை புறக்கணிக்கின்றீர்கள் என அன்சாரிகள் நபி (ஸல்) அவர்களைப் பார்த்து கேட்கும் அளவிற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.

மக்கா வெற்றியின்போது “அபூஸுஃப்யான் வீட்டில் தஞ்சமடைபவர்களுக்கு பாதுகாப்பு உத்தரவாதம்” வழங்குமளவுக்கு இஸ்லாத்தை ஏற்றவர்களுக்கு சிறப்பும், கனிமத்து பொருட்களில் கூடுதல் பங்கும் வழங்கப்பட்டிருக்கும்போது நாம் ஏன் இதிலிருந்து படிப்பினை பெறாமல் மற்றவர்கள் மேடையில் பேசியபின் நமது மேடையில் ஏறுவதா? என்றும், இது நமது ஜமாஅத் நிலைப்பாடு! என்றும் கூறி நபி (ஸல்) நிலைப்பாட்டை புறந்தள்ளுவது சரியாகுமா?

நாத்திகரான கோவை ராம கிருஷ்ணனும், இணை வைப்பாள ரான இந்து மக்கள் கட்சி அர்ஜுன் சம்பத்தும், தாங்களும் இந்த விஷயத்தில் ஒரே நேர்கோட்டில் இணைந்து “”அவரை கண்காணிக்கிறோம்” என ஒரே வார்த்தைகளை வெளிப்படுத்தி இருப்பதன் மூலம், உங்கள் சிந்தனை காவியாகவோ, கருப்பாகவோ மாறிவிடாமல் இறைவனிடம் பிரார்த்திக்கிறோம்.

தகவல் – மங்கோலியன்

நன்றி; www.intjonline.in மற்றும் சமுதாய மக்கள் ரிப்போர்ட்

அன்புடன்;சதாம் ஹுசைன்

ஆக இஸ்லாத்திற்கு மாறியவர்கள் பற்றி இந்த அளவிற்கு ஆராய்ச்சி நடத்துகிறார்கள் என்றால், “மாற்றப்பட்டவர்களின் நிலை” பற்றி முஸ்லீம்கள் ஆராய்ச்சி செய்தது / செய்யாதது என்ன? நன்றாக படித்து, ஒருநிலையில் தாங்கள் ஏதோ ஒரு காரணத்திற்காகத் தான் மதம் மாற்றப்பட்டுள்ளோம் என அறிந்தால், அவர்களும் தங்களது நிலைப்பாடு பற்றி சிந்திக்க ஆரம்பித்து விடுவார்களே?

இப்படி எல்லா மதம் மாறிய முஸ்லீம்களும் கண்காணிக்கப் படுவார்களா?

நம்பிக்கையின் மீது ஆதாரமாக மதம் மாறினாரா அல்லது மாற்றப் பட்டரா என்ற கேள்வியும் அதற்கான பதிலும் பெரியார்தாசன் நண்பர்களிடையே ஏற்கெனவே உள்ளன, அவை தாராளாமாகவே பேசப் பட்டன. “பணத்திற்காகத்தான்” மாறினார் என்பது முதல் குற்றச்சாட்டு. அந்நிலையில் “நம்பிக்கை” போய்விடுகிறது.

மனிதன் தான் எப்படியாவது விளக்கம் அளித்து தன்னுடைய செயலை நியாயப் படுத்திக் கொள்ளலாம். அந்நிலையில் படித்த சேஷாசலத்திற்கு /பெரியார்தாசனுக்கு /  ……………க்கு/ சித்தார்தா……னந்தாவிற்கு / அப்துல்லாவிற்கு எந்த பிரச்சினையும் இல்லை.

அதுமட்டுமல்ல, சிலர் அப்துல்லாவிற்கே அறிவுரை அளிக்க ஆரம்பித்து விட்டனர்:

ஐயா , பேராசிரியர் அவர்களே!

நீங்கள் இஸ்லாத்தில் இணந்தது எங்களுக்கு பெருமைதான் என்றாலும் என் மனதுக்குள் ஒரு பயம் நிலவி வருகிறது. இது சுன்னத், அது ஹராம், இதைச் செய்யவேண்டும், அதைச் செய்யக்கூடாது  என்று இலவச அறிவுரை சொல்ல சில அரைகுறை ஆலிம்கள் வருவார்கள். உங்களுக்கே தெரியாமல் உங்களை மூளைச்சலவை செய்வார்கள். நீங்கள் மனோவியல் பேராசிரியர் மட்டுமல்ல சிகிச்சையாளரும்கூட, எனவே குர்ஆனையும் ஹதீஸையும் ஆராய்ந்ததுபோல் அவர்கள் சொல்வதையும் ஆய்ந்து ஆராய்ந்து ஏற்றுக்கொள்ளுங்கள். இது ஒன்று.

மற்றொன்று, ‘இறைவன் ஒருவன்தான், அவனுக்கு இணைவைக்கக்கூடாது, அவனுக்கு இணையாக எதுவுமில்லை’ என்ற செய்தி நபிகளாருக்குப் பிறகு இந்திய துணைக்கண்டம் முதல் எல்லா நாடுகளுக்கும் பரப்பியவர்கள் ஒரு சிலர். அவர்கள் தங்கள் வாழ்நாள் முழுவதையும் இறை தியானத்தில் மூழ்கி மக்களின் வாழ்க்கை முறை, உணவு, நாகரீகம், பண்பாட்டுமுறை இவைகள் அனைத்தையும் மாற்றி நேர்வழிப் படுத்தியவர்கள். சுருக்கமாகச் சொன்னால் இறைவன் சொன்னதை, நபிகளார் சொன்னதை மக்களின் அறிவுக்குத் தகுந்தவாறு போதனை புரிந்தவர்கள். சூஃபிகள் என்றழைக்கப்படும் இவர்களை சிலர் தவறாகச் சித்தரிக்கிறார்கள் என்பதை உங்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறேன்.

http://abedheen.wordpress.com/2010/04/10/jaffer-periyardasan/

எதற்கு இவ்வளவு கட்டுப்பாடு?

பாவம், ஒருவேளை, விட்டால் ஓடிவிடுவாரோ என்னவோ?

முஸ்லீம்கள் மதம் மாற்றும் பிரச்சினை இன்னுமொரு கோணத்தில் செல்கின்றது என்பதனை அறியலாம்.

நிலவுக்கே களங்கம், குறை இல்லாமல் அரசில்லை, குற்றம் இருந்தால் தண்டியுங்கள்: சொல்வது கருணாநிதி!

ஜனவரி 2, 2010
நிலவுக்கே களங்கம், குறை இல்லாமல் அரசில்லை, குற்றம் இருந்தால் தண்டியுங்கள்: சொல்வது கருணாநிதி!
ஆட்சியைக் கவிழ்க்க எண்ண வேண்டாம்: முதல்வர்
First Published : 02 Jan 2010 12:17:00 AM IST

http://www.dinamani.com/edition/story.aspx?SectionName=Tamilnadu&artid=177141&SectionID=129&MainSectionID=…………….

இலவச வேட்டி, சேலை வழங்கும் திட்டத்தை, சென்னையில் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தார் முதல்வர் கருணாநிதி. உடன், மத்திய அமைச்சர் தயாநிதி மாறன், வருவாய் மற்று

“குற்றங்களைப் பெரிதாக்கி திமுக ஆட்சியை கவிழ்க்க எண்ண வேண்டாம்”: சென்னை, ஜன.1: “குற்றங்களைப் பெரிதாக்கி திமுக ஆட்சியை கவிழ்க்க எண்ண வேண்டாம்” என்று முதல்வர் கருணாநிதி பேசினார்.தமிழ்ப் புத்தாண்டு, பொங்கல் பண்டிகையை ஒட்டி தமிழகம் முழுவதும் இலவச வேட்டி, சேலை வழங்கும் திட்டத்தை சென்னையில் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தார், கருணாநிதி. இந்த நிகழ்ச்சியில் அவர் பேசியது:”கடந்த 2001-ம் ஆண்டில் வேட்டி, சேலைகள் வழங்கும் திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டது. காரணம், அந்த ஆண்டில் தேர்தல் முடிந்து வேறு ஆட்சி வந்தது. அவர்கள் இந்தத் திட்டத்தை நிறுத்தி விட்டார்கள். திமுக அரசு இப்படி நிறுத்தியிருந்தால், வாரந்தோறும் சென்னை, திருச்சி, மதுரை, வேலூர், விழுப்புரம் என்று ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று இருக்கும். இப்போது அப்படி நடைபெறாமல் இந்தத் திட்டம் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது.

நிறுத்தப்பட்டதற்குக் காரணம்: 2001-ம் ஆண்டு நிறுத்தப்பட்ட இலவச வேட்டி, சேலை வழங்கும் திட்டம், 2002, 2003-ம் ஆண்டுகளில் நிறைவேற்றப்படவில்லை.ஆனால், 2004-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் வந்தது. அந்த ஆண்டு இந்தத் திட்டத்தை மீண்டும் அன்றிருந்த ஆட்சியாளர்கள் அரைகுறையாக நிறைவேற்றினார்கள்.திமுகவைப் பொறுத்தவரை, தேர்தலுக்காக அல்ல; கட்சி அரசியலுக்காக அல்ல, மக்களை மகிழ்ச்சியடையச் செய்ய பொங்கல் கொண்டாடுகின்ற அந்த நாளிலாவது அவர்கள் பூரிப்போடு இருக்க வேண்டும். இதனால், இலவச வேட்டி, சேலை வழங்கும் திட்டத்தைக் கொண்டு வந்து நிறைவேற்றினோம். ஒரு அரசு மக்களுக்காக இருக்கின்ற அரசு; தேர்தலுக்காக இருக்கின்ற அரசு அல்ல என்பதை எடுத்துக் காட்டுகின்ற வகையில் இந்தத் திட்டத்தை தொடர்ந்து நடத்தி வருகிறோம்.

குறை இல்லாமல்: ஒரு நாட்டில் ஒரு அரசு, அதுவும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு அந்த மக்களுக்குத் தொண்டாற்ற வேண்டும். அதை குறை கூறுபவர்களும் இருப்பார்கள். குறை இல்லாமல் ஒரு அரசு இருக்க முடியாது. குறை இருந்தால் சொல்லுங்கள்; கேட்கிறோம். குற்றம் இருந்தால் கண்டியுங்கள்; தண்டியுங்கள். அதற்குப் பணிகிறோம் என்பதுதான் இந்த அரசின் கொள்கை, லட்சியமாக இருந்து வருகிறது.குறை சொல்ல வேண்டும் என்பதற்காகவே குறை சொல்லிக் கொண்டிருந்தால் அது ஜனநாயகம் அல்ல. குறை கண்ட இடத்தில் அதைச் சொல்வதும், அதைத் திருத்திக் கொள்வதும்தான் ஜனநாயகம்.

நிலவுக்கே களங்கம்: நிலவுக்கே களங்கம் இருப்பதாகச் சொல்கிறோம். அதைப் போல முழு நிலவாக இருந்தாலும் எங்கேயோ ஒரு கரும்புள்ளி இருக்கத்தான் செய்யும். அதைச் சுட்டிக் காட்டி இந்த அரசோடு ஒத்துழைத்து அதை நீக்குவதற்குப் பாடுபட வேண்டும். அதையே குற்றமாகச் சொல்லி அந்தக் குற்றத்தையே பெரிதாக்கி நிலவு பெரிதா, அதிலே இருக்கின்ற களங்கம் பெரிதா என்பதில் போட்டி போட்டுக் கொண்டு களங்கத்தைப் பெரிதாக்கி ஆட்சியைக் கவிழ்த்து விடலாம்; ஆட்சியை ஒழித்து விடலாம் என யாரும் கருதக் கூடாது” என்று முதல்வர் கருணாநிதி பேசினார்.

மன்னிக்க வேண்டும் கலைஞரே! உண்மையென்னவென்றால் “கலைஞர்” முன்னம் தமிழுக்காக செய்த காரியங்களை “கருணாநிதி” என்ற அரசியல்வாதி தமிழை, தமிழகத்தைக் கெடுத்து விட்டான் என்பதுதான் உண்மை.

* நாத்திகப் போர்வையில், ஆலயங்களை சூரையாடினாய்;

* செக்யூலரிஸக் கஞ்சி குடித்து, தாமஸ் படம் காட்டி இந்து விரோதியானாய்;

* சமத்துவம் பேசி கடவுளர்களின் படிப்பென்ன என்று கேட்டாய்;

* பலகலைகழகங்கள் பலவற்றை அதிகரித்து பட்டங்களை அள்ளினாய்;

* மனைவி-துணைவி-மகள் நெற்றிகளில் இருப்பதை மறந்து, தொண்டனின் நெற்றியில் என்ன ரத்தம் என்று கேட்டாய்;

* ஆன்மீகப் போர்வையிலே கடவுள் ஆக முயன்றாய்;

* முட்டாள்பெட்டி, மடக்கம்பி இணைப்புகள், தினசரி ஆட்டங்கள் மூலம் படிப்பைக் கெடுத்தாய்;

* ஒரு ரூபாயில் அரிசி விற்க பத்து ரூபாய் செலவு செய்கிறாய்;

* கோடிகளை பெற்றவுடன் கோடிகளை மறைத்தாய்;

* ஓய்விற்கே ஓய்வு கொடுத்தாய்;

இன்னும் பலவற்றை என்னுடைய பதிவுகளில் http://www.indiainteracts.com, http://www.dravidianatheism.wordpress.com மற்றும் http://www.dravidianatheism2.wordpress.com காணலாம். இதெல்லாம் தவறல்ல, மாபெரும் சமூகக் குற்றங்கள், மக்கள் விரோதச் செயல்கள்! எப்படி மக்கள் மறப்பார்கள்?

எங்கள் குழந்தை மதம் சேராதவன்’: போராடி வென்ற அபூர்வ பெற்றோர்!

ஜனவரி 1, 2010

எங்கள் குழந்தை மதம் சேராதவன்’: போராடி வென்ற அபூர்வ பெற்றோர்

ஜனவரி 01,2010,00:00  IST

http://www.dinamalar.com/Incident_detail.asp?news_id=15082

மும்பை: பொதுவாக காதலுக்குத்தான் ஜாதி, மதம் கிடையாது என்பர். ஆனால், மும்பையில் ஒரு தம்பதியர் தங்கள் குழந்தை எந்த மதத்தையும் சேராதவன் என்று  விண்ணப்பம்  செய்து,  போராடி பிறப்புச் சான்றிதழ் வாங்கியிருக்கின்றனர். அதிதி ஷெட்டே-ஆலிப் சுர்தி தம்பதியருக்கு ஓர் அழகான ஆண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்த 15 நாட்களுக்குள் மருத்துவமனையில் பிறப்புச் சான்றிதழ் பெற வேண்டும் என்ற அடிப்படையில், மருத்துவமனை அளித்த விண்ணப்பத்தை நிரப்பிக் கொடுத்தனர் தம்பதியர். அப்போது, அதில் “மதம்’ என்ற இடத்தை மட்டும் நிரப்பாமல் கொடுத்தனர்.

விண்ணப்பத்தில் எந்த இடமாவது நிரப்பாமல் காலியாக இருந் தால், கம்ப்யூட்டர்   மிஷின் அதை நிராகரித்து விடும். தம்பதியர் தங்கள் குழந்தையை எந்த மதத்துக்குள்ளும் அடக்க விரும்பவில்லை.   இதைப் புரிந்து கொள்ளாத அலுவலர், அவர்களை மேலதிகாரியிடம் அனுப்பி வைத்தார். பண்பான மேலதிகாரி, இவர்களின் நோக்கத்தைப் புரிந்து கொண்டு, “ஆனால் கம்ப்யூட்டர்  அதை ஏற்றுக் கொள்ளாது. அதனால் “இந்து, முஸ்லிம், கிறிஸ்தவம், பிற’ என்ற வரிசையில் வரும் “பிற’ என்ற இடத்தை நிரப்பிக் கொடுங்கள்’ என்று ஆலோசனை சொன்னார்.  அதன்படியே அதிதி தம்பதியினர் நிரப்பிக் கொடுத்து விண்ணப்பம் பெற்றனர்.  இது அவர்களின் முதல் வெற்றி.  ஆனால், இன்னும் தடைகள் பல இருக்கின்றன. பள்ளியில் சேரும் போது, பாஸ்போர்ட் பெறும்போது எனப் பல தடைகள். இதைக் கண்டு எல்லாம் அசருவதாக இல்லை அதிதி தம்பதியினர்.

“நான் கர்ப்பமாக இருக்கும் போதே, பிறக்கும் குழந்தைக்கு எந்த மதத்தையும் குறிப்பிடக் கூடாது என்று தெளிவாக இருந்தோம். நான் இந்து. என் கணவர் முஸ்லிம். இன்னும் பல மதங்களின் கொள்கைகள் பற்றி எங்கள் மகனுக்குச் சொல்லிக் கொடுப்போம். அவனே தனக்குப் பிடித்த மதத்தைத் தேர்ந்தெடுக்கட்டும்.  ஜனநாயக, மதச்சார்பற்ற ஒரு நாட்டில் ஏன் ஒருவர் தன்னை எந்த மதத்தையும் சேராதவர் என்று அடையாளப்படுத்திக் கொள்ளக் கூடாது?’ என்கிறார் அதிதி. ஆலிப் சுர்தி, பிரபல எழுத்தாளரும் கார்ட்டூனிஸ்ட்டுமான அபித் சுர்தி (75)யின் மகன். அபித்துக்கு ஓஷோ, வாஜ்பாய், அமிதாப் போன்ற பெரிய ரசிக வட்டாரம் உண்டு. “நான் என் இரண்டு மகன்களுக்கும் எந்த மதத்தையும் குறிப்பிடவில்லை.  ஆனால், அந்தக் காலக்கட்டத்தில் அதைச் சான்றிதழில் பதிவு பண்ண என்னால் முடியவில்லை. அதை இப்போது என் மகனும் மருமகளும் சாதித்துள்ளனர்’ என்று பெருமை பொங்கக் கூறுகிறார் அபித்.