Archive for the ‘உடலுறவு’ Category

கருணாநிதியின் தொகுதியில் கிளப்புகளில் கன்றாவியான குத்தாட்டம்!

மே 3, 2010

கருணாநிதியின் தொகுதியில் கிளப்புகளில் கன்றாவியான குத்தாட்டம்!

விதிகளை மீறி மது கிண்ணத்துடன் ஆட்டம் போட்டதாகவும் புகார்

சென்னையில் `டிஸ்கோத்தே’ நடன கிளப்புகளில் அதிரடி சோதனை
அழகிகள் மீது ரூபாய் நோட்டுகளை வீசி ரசிகர்கள் கொண்டாட்டம் அம்பலம்
சென்னை,மே.3-சென்னையில் கலாசார நடன கிளப்புகளில் அழகிகளுடன் ரசிகர்கள் மது கிண்ணத்துடன் ஆட்டம் போடுவதாகவும், ரூபாய் நோட்டுகளை வீசி ரசிகர்கள் அழகிகளுடன் கிளு,கிளுப்பு நடனம் ஆடுவதாகவும், வந்த புகாரின் பேரில் போலீசார் 2 நடன கிளப்புகளில் அதிரடியாக புகுந்து சோதனை நடத்தினார்கள்.
திடுக்கிடும் புகார்கள்: சென்னை திருவல்லிக்கேணி, அண்ணாசாலை போலீஸ் சரகங்களில் 2 இடங்களில் கலாசார நடன கிளப்புகள் உள்ளன. கடுமையான விதிமுறைகள் விதித்து போலீசார் இந்த நடன கிளப்புகளுக்கு போலீசார் அனுமதி வழங்கி இருந்தனர். ஆனால் விதிமுறைகளை மீறி இந்த நடன கிளப்புகளில் நடன நிகழ்ச்சிகள் நடப்பதாக போலீசாருக்கு நிறைய புகார்கள் வந்தன. போலீசார் வகுத்து கொடுத்த விதிமுறைகளில், இரவு 11 மணிக்கு மேல் நடன நிகழ்ச்சிகள் நடத்த கூடாது, ஆபாச நடனம் இடம்பெறக் கூடாது, மது விருந்து நடத்த கூடாது, அழகிகள் அருகில் ரசிகர்கள் செல்ல அனுமதிக்க கூடாது போன்றவை இடம்பெற்றிருந்தன.
ஆனால் போலீஸ் வகுத்து கொடுத்த விதிகளை மீறி, மது கிண்ணத்துடன் ரசிகர்கள் அழகிகளுடன் ஆட்டம் போடுவதாகவும், அழகிகள் மீது ரூபாய் நோட்டுகளை அள்ளிவீசி ரசிகர்கள் களியாட்டம் நடத்துவதாகவும், புகார்கள் வந்தன. இதனால் அந்த கிளப்புகளில் சோதனை போட்டு நடவடிக்கை எடுக்கும்படி போலீசாருக்கு உத்தரவிடப்பட்டது.
அதிரடி சோதனை: இதன்பேரில் திருவல்லிக்கேணி உதவி கமிஷனர் தமிழ்செல்வன், இன்ஸ்பெக்டர்கள் ராஜேந்திரகுமார், ராஜேந்திரன் ஆகியோர் போலீஸ் படையுடன் நேற்று முன்தினம் இரவு குறிப்பிட்ட நடன கிளப்புகளில் அதிரடியாக புகுந்து சோதனை போட்டனர். சோதனையில் விதிமுறைகள் மீறப்பட்டது கண்டறியப்பட்டது. இதன்பேரில் போலீசார் குறிப்பிட்ட 2 நடன கிளப்புகளையும் மூடிவிட்டனர். நடன கிளப்புகளின் நிர்வாகிகள், ஊழியர்கள் மீது போலீசார் வழக்கு போட்டு கைது செய்தனர். பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். அழகிகள் எச்சரித்து அனுப்பப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீஸ் அதிகாரி
ஒருவர் கூறியதாவது:- உல்லாசத்துக்கு அழைப்பு: கலாசார நடனம் என்ற பெயரில் போலீஸ் அனுமதி வாங்கி விட்டு, விதிமுறைகளை மீறி `டிஸ்கோத்தே’ நடனம் ஆட அனுமதிப்பதாகவும், மது விருந்து நடப்பதாகவும், ரசிகர்களை அழகிகளோடு ஆட்டம் போட வைப்பதாகவும், புகார்கள் வந்தன. இதன்பேரில் சோதனை போடப்பட்டு, பால்ஸ் மற்றும் சுருதி பேலஸ் என்ற நடன கிளப்புகள் மூடப்பட்டுள்ளன. போலீஸ் சோதனை போட்ட போது 25 ரசிகர்கள் அழகிகளோடு ஆட்டம் போட்டுள்ளனர். ரசிகர்களிடம் தலா ரூ.150, ரூ.200 வீதம் டிக்கெட் பணம் வாங்கி உள்ளனர். தினமும் 2 காட்சிகள் நடத்தியுள்ளனர். இது பரவாயில்லை. ஆனால் ஆட்டம் முடிந்தவுடன் அழகிகளின் செல்போன் நம்பரை வாங்கிக்கொண்டு, அவர்களை ரசிகர்கள் உல்லாசத்துக்கு அழைப்பதாகவும் புகார்கள் வந்தன. இதனால்தான் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சென்னையில் கலாசார நடன கிளப்புகள் என்ற பெயரில் `டிஸ்கோத்தே’ நடனம் ஆட அனுமதிக்கும் கிளப்புகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்

விதிகளை மீறி மது கிண்ணத்துடன் ஆட்டம் போட்டதாகவும் புகார்: சென்னையில் `டிஸ்கோத்தே’ நடன கிளப்புகளில் அதிரடி சோதனைஅழகிகள் மீது ரூபாய் நோட்டுகளை வீசி ரசிகர்கள் கொண்டாட்டம் அம்பலம்சென்னை,மே.3-சென்னையில் கலாசார நடன கிளப்புகளில் அழகிகளுடன் ரசிகர்கள் மது கிண்ணத்துடன் ஆட்டம் போடுவதாகவும், ரூபாய் நோட்டுகளை வீசி ரசிகர்கள் அழகிகளுடன் கிளு,கிளுப்பு நடனம் ஆடுவதாகவும், வந்த புகாரின் பேரில் போலீசார் 2 நடன கிளப்புகளில் அதிரடியாக புகுந்து சோதனை நடத்தினார்கள்.திடுக்கிடும் புகார்கள்சென்னை திருவல்லிக்கேணி, அண்ணாசாலை போலீஸ் சரகங்களில் 2 இடங்களில் கலாசார நடன கிளப்புகள் உள்ளன. கடுமையான விதிமுறைகள் விதித்து போலீசார் இந்த நடன கிளப்புகளுக்கு போலீசார் அனுமதி வழங்கி இருந்தனர். ஆனால் விதிமுறைகளை மீறி இந்த நடன கிளப்புகளில் நடன நிகழ்ச்சிகள் நடப்பதாக போலீசாருக்கு நிறைய புகார்கள் வந்தன. போலீசார் வகுத்து கொடுத்த விதிமுறைகளில், இரவு 11 மணிக்கு மேல் நடன நிகழ்ச்சிகள் நடத்த கூடாது, ஆபாச நடனம் இடம்பெறக் கூடாது, மது விருந்து நடத்த கூடாது, அழகிகள் அருகில் ரசிகர்கள் செல்ல அனுமதிக்க கூடாது போன்றவை இடம்பெற்றிருந்தன.ஆனால் போலீஸ் வகுத்து கொடுத்த விதிகளை மீறி, மது கிண்ணத்துடன் ரசிகர்கள் அழகிகளுடன் ஆட்டம் போடுவதாகவும், அழகிகள் மீது ரூபாய் நோட்டுகளை அள்ளிவீசி ரசிகர்கள் களியாட்டம் நடத்துவதாகவும், புகார்கள் வந்தன. இதனால் அந்த கிளப்புகளில் சோதனை போட்டு நடவடிக்கை எடுக்கும்படி போலீசாருக்கு உத்தரவிடப்பட்டது.அதிரடி சோதனைஇதன்பேரில் திருவல்லிக்கேணி உதவி கமிஷனர் தமிழ்செல்வன், இன்ஸ்பெக்டர்கள் ராஜேந்திரகுமார், ராஜேந்திரன் ஆகியோர் போலீஸ் படையுடன் நேற்று முன்தினம் இரவு குறிப்பிட்ட நடன கிளப்புகளில் அதிரடியாக புகுந்து சோதனை போட்டனர். சோதனையில் விதிமுறைகள் மீறப்பட்டது கண்டறியப்பட்டது.இதன்பேரில் போலீசார் குறிப்பிட்ட 2 நடன கிளப்புகளையும் மூடிவிட்டனர். நடன கிளப்புகளின் நிர்வாகிகள், ஊழியர்கள் மீது போலீசார் வழக்கு போட்டு கைது செய்தனர். பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.அழகிகள் எச்சரித்து அனுப்பப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-உல்லாசத்துக்கு அழைப்புகலாசார நடனம் என்ற பெயரில் போலீஸ் அனுமதி வாங்கி விட்டு, விதிமுறைகளை மீறி `டிஸ்கோத்தே’ நடனம் ஆட அனுமதிப்பதாகவும், மது விருந்து நடப்பதாகவும், ரசிகர்களை அழகிகளோடு ஆட்டம் போட வைப்பதாகவும், புகார்கள் வந்தன. இதன்பேரில் சோதனை போடப்பட்டு, பால்ஸ் மற்றும் சுருதி பேலஸ் என்ற நடன கிளப்புகள் மூடப்பட்டுள்ளன. போலீஸ் சோதனை போட்ட போது 25 ரசிகர்கள் அழகிகளோடு ஆட்டம் போட்டுள்ளனர்.ரசிகர்களிடம் தலா ரூ.150, ரூ.200 வீதம் டிக்கெட் பணம் வாங்கி உள்ளனர். தினமும் 2 காட்சிகள் நடத்தியுள்ளனர். இது பரவாயில்லை. ஆனால் ஆட்டம் முடிந்தவுடன் அழகிகளின் செல்போன் நம்பரை வாங்கிக்கொண்டு, அவர்களை ரசிகர்கள் உல்லாசத்துக்கு அழைப்பதாகவும் புகார்கள் வந்தன. இதனால்தான் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சென்னையில் கலாசார நடன கிளப்புகள் என்ற பெயரில் `டிஸ்கோத்தே’ நடனம் ஆட அனுமதிக்கும் கிளப்புகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்

நான் ஆணே இல்லை, நாம் எப்படி செக்ஸில் ஈடுபட்டிருக்க முடியும்?

ஏப்ரல் 30, 2010

நான் ஆணே இல்லை, நாம் எப்படி செக்ஸில் ஈடுபட்டிருக்க முடியும்?

“நான் ஆணே இல்லை. ஆகவே எந்தவிதத்திலும் நான் பெண்களுடன் செக்ஸில் ஈடுபட்டிருக்க முடியாது. வேண்டுமானால், ஆண்மை பரிசோதனையை என்மீது பிரயோகம் செய்து பாருங்கள்” [“I’m not a man. There’s no way I could have indulged in sexual activities with women. Do a potency test on me”]. இப்படி சொன்னது நித்யானந்தா!

Nityananda-male-or-female

Nityananda-male-or-female

இருப்பினும் துப்பறியும் வீரர்கள் அதை நம்புவதாக இல்லையாம், ஏனெனில் பாஸ்போர்ட்டில் “ஆண்” என்றுதான் போட்டிருக்கிறது, “அலி” என்று போடவில்லை, என்று விசாரணையைத் தொடர்ந்துள்ளார்கள்!

குஷ்புவும், கற்பும், கே.ஜி.பாலகிருஷ்ணனும், மற்ற நீதிபதிகளும்!

ஏப்ரல் 28, 2010
எதிர்பார்த்தபடியே குஷ்பு மீதான வழக்குகள் தள்ளுபடி!

 

 

 

Maxim-Kushboo

Maxim-Kushboo

திருமணத்திற்கு முன்பு பெண்கள் உடலுறவு வைத்துக் கொள்வது தொடர்பில், பிரபல திரைப்பட நடிகை குஷ்பு தெரிவித்திருந்த கருத்துக்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த 22 வழக்குகளையும் இந்திய உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.

திருமணத்துக்கு முன்னர் பெண்கள் பாலியல் உறவு வைத்துக் கொள்வது தவறில்லை என்று அவர் கூறியிருந்தார். படித்த இளைஞர்கள் தமக்கு மனைவியாக வருபவர்கள் கன்னித் தன்மையுடன் இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது நியாமில்லை என்றும் குஷ்பு கருத்து வெளியிட்டிருந்தார். 2005 ஆம் ஆண்டு பத்திரிகை பேட்டி ஒன்றில் அவர் வெளியிட்டிருந்த இந்த கருத்துக்களுக்கு எதிராக அவர் மீது 22 வழக்குகள் தமிழ்நாட்டின் வெவ்வேறு நீதிமன்றங்களில் தொடுக்கப்பட்டிருந்தது. இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் பல்வேறு நீதிமன்றங்களில் குஷ்பு மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இதை எதிர்த்து குஷ்பு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை சென்னை உயர்நீதிமன்றம் நிராகரித்தது.

சென்னை உயர்நீத்மன்ற தீர்ப்பை எதிர்த்து இந்திய உச்சநீதிமன்றத்தில் குஷ்பு மேல்முறையீடு செய்தார். அந்த வழக்கில் தீர்பளித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், குஷ்புவின் மனுவை ஏற்று, இது தொடர்பாக அவர் மீது தாக்கல் செய்யப்பட்ட 22 வழக்குகளையும் தள்ளுபடி செய்து இன்று (புதன்கிழமை) உத்தரவிட்டனர்.

திருமணத்துக்கு முன்னர் பெண்கள் பாலியல் உறவு வைத்துக் கொள்வது தவறில்லை: கற்ப்புக்கரசி கண்ணகி பிறந்த நாட்டில், இப்படியொரு விவாதம் வந்து, அதற்கு தமிழனே தீர்ப்பும் அளித்திருப்பது, தமிழர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டிய விஷயம் தான்! பெண்களுக்கான திருமண வயது 21 என்று அரசு விளம்பரங்கள் எல்லாம் சொல்கின்றன. ஆகையால் இனி, 21 வயது வரை வயதுக்கு வந்த பெண்கள்

பாலியல் உறவு வைத்துக் கொண்டால் யாரும் கேட்க முடியாது. பெற்றோர்கள் கூட என்ன செய்யவேண்டும் என்பது புரியவில்லை!படித்த இளைஞர்கள் தமக்கு மனைவியாக வருபவர்கள் கன்னித் தன்மையுடன் இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது நியாமில்லை: படித்த இளைஞர்கள் என்ன அந்த அளவிற்கு கேடு கெட்டவர்களா என்று தெரியவில்லை. இல்லை, பெண்களும் அத்தகைய சோரம் போனவர்களாக இருந்து, தாலிக் கட்டிக் கொள்ளத் தயார் ஆகிறார்களா என்றும் தெரியவில்லை! அதாவது, ஒன்று பெண் வயதுக்கு வந்தவுடன் கல்யாணம் செய்து கொள்ளவேண்டும், இல்லையென்றால், கற்புள்ளதா இல்லையா என்ற ஆராய்ச்சியோ, சோதனயோ செய்யக் கூடாது!

முன்பு-குஷ்பு-நடித்த-கோலம்

முன்பு-குஷ்பு-நடித்த-கோலம்

நடிகை குஷ்பு ‘கற்பு’ வழக்கு : சுப்ரீம் கோர்ட் இன்று தீர்ப்பு
ஏப்ரல் 28,2010,00:00  IST

http://www.dinamalar.com/court_detail.asp?news_id=5728

சென்னை : தமிழ் பெண்களின் கற்பு குறித்து நடிகை குஷ்பு கருத்து தெரிவித்த வழக்கில், சுப்ரீம் கோர்ட்டில் இன்று தீர்ப்பு வழங்கப்படுகிறது.

பத்திரிகை ஒன்றிற்கு பேட்டியளித்த நடிகை குஷ்பு, தமிழ் பெண்களின் கற்பு குறித்து தனது கருத்தை தெரிவித்தார். இக்கருத்து, தமிழகத்தில் பெரும் சர்ச்சையாக வெடித்தது. கருத்து தெரிவித்த குஷ்புவை எதிர்த்து தமிழகத்தில் 20க்கும் மேற்பட்ட மாஜிஸ்திரேட் கோர்ட்களில் வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கில் மேட்டூர் மாஜிஸ்திரேட் கோர்ட்டில், குஷ்பு ஆஜரானார். வழக்கை ரத்து செய்யக் கோரி, சென்னை ஐகோர்ட்டில் அவர் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட், அதை ரத்து செய்ய மறுத்து விட்டது. இதை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்யப்பட்டது. சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் தலைமையிலான ‘பெஞ்ச்’ வழக்கை விசாரித்து வந்தது. பரபரப்பாக எதிர்பார்க்கப்படும் இவ்வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கப்படுகிறது.