மதங்களையும்,மதப்பிரிவுகளையும் நாத்திகர்கள் ஏன் எதிர்க்கின்றனர்?
ரஸ்ஸல் பிளாக்போர்ட்
http://viduthalai.periyar.org.in/20091226/spage05.html#
http://viduthalai.periyar.org.in/20091226/snews06.html
எதிர்பார்த்ததுபோல், மேற்கத்திய குடியாட்சி நாடுகளில் மட்டுமாவது 1970, 1990 -களில் மதத்தின் தாக்கம் மங்கிவிடவில்லை. மத அமைப்புகள் இன்னமும் கூட தீவிரமாகப் பிரச்-சாரம் செய்து அதிகார வர்க்கத்-தினரின் ஆதரவைத் திரட்டிக் கொண்-டிருப்-பதைக் காணலாம். கருக்கலைப்பு, குளோனிங் மருத்துவ ஆராய்ச்சி, கருத்தடுப்பு சாதனங்கள் ஆகியவற்றை இப்போதும் கூட இந்த மதமோ அந்த மதமோ ஏதோ ஒன்று எதிர்த்துக் கொண்டுதான் இருக்கின்-றது. பாது-காப்பான உடலுறவு என்பது கடவு-ளால் விதிக்கப்பட்ட நியதிக்கு விரோதமானது என்று கூறி, எய்ட்ஸ் நோய் தடுப்பு முறை-களுக்கும் மதம் குந்தகம் விளைவிக்-கிறது.
![]() |
சாவும் வராமல் தீர்க்க முடியாத நோய்களினால் தொடர்ந்து வேத-னைப்பட்டு, கேவலப்பட்டு வருபவர்-கள் கருணைக் கொலை செய்யப்-படு-வதையும் பெரும்பாலான மத அமைப்-புகள் கடுமையாக எதிர்க்கின்றன. மதச்சார்பற்றவை என்று கருதப்-படும் ஆஸ்திரேலியா போன்ற நாட்டு அரசு-கள் கூட ஒழுக்க நெறி பற்றி கிறித்துவ தேவாலயங்கள் மற்றும் அமைப்புகள் கொண்டுள்ள கவலை-கள், அக்கறைக்கு வெளிப்படை-யாகத் துணை போகின்-றன. என்றா-லும், அமெரிக்காவில் இந்த நிலை மிகமிக மோசமாக உள்ளது. 1970 மற்றும் 1980 களில் அமெரிக்க மத-வாத பிற்போக்கு சக்திகள் தங்களின் அமைப்புகளைப் பலப்படுத்துவதில் வியக்கத்தக்க பெரு வெற்றியைப் பெற்றன. நிதிவசதி நிறைந்த தகவல் தொடர்பு அமைப்புகள், சிந்தனை-யாளர்கள், அவர்களின் சொந்த பல்கலைக் கழகங்களையும் கூட அவை கொண்டிருந்தன. தற்போதைய நிலையைச் சற்று பாருங்கள். உல-கத்தை கடவுள் உருவாக்கினார் என்ற அவர்-களின் கதையை மறுக்கும் பொது அறிவி-யல் நிறுவனங்களை சீர்குலைக்க தந்-திரமான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்-டன. செல்வாக்கு மிகுந்த ஒரு தீவிர மதவாத இயக்கம் நாட்டை ஒரு கிறித்துவ மத நாடாக மாற்ற விரும்பு-கிறது. முந்தைய புஷ் அரசு நாட்டை அந்த பாதையில் வெகு தொலைவுக்கு அழைத்துச் சென்றுவிட்டது. புஷ்ஷைப் போலன்றி தாராள கருத்து கொண்ட ஒரு அதிபர் தேர்ந்தெடுக்கப்பட்டது வலதுசாரி மத அமைப்புகளிடையே ஒரு பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்-ளது. அமெரிக்காவில் நிலவும் மதவெறி உண்மையானது; அது வெளிப்-படுத்தப்-படும் பல வழிகளில் எந்தவித ரகசி-யமோ அல்லது தாராள மனப்பான்-மையோ கிடையாது.
மாறுபட்ட ஓர் உலகில், மத போத-னைகளின் யோக்கியதை பற்றி ஆராய்ச்சி மேற் கொள்வது பயனுள்ள-தாக இருக்கலாம். மதக் கோட்பாட்-டில் உறுதியளிக்கப் பட்டிருக்கும் ஒழுக்க நெறிக்கு வழிகாட்டுதல், பிரபஞ்ச இயக்கத்தைப் பற்றிய ஆழ்ந்த அறிவு, ஆன்மீக விடுதலை மற்றும் இது போன்ற-வற்றில், எதை ஒன்றையாவது நிறைவேற்ற முடியுமா என்று நாம் கேட்கக்கூடும். இந்தப் பிரச்சினைகள் எந்த வித விருப்பு, வெறுப்பும் இன்றி விவாதிக்கப்பட்டிருக்கலாம். மதத்தைக் குறை கூறும் நம்மில் சிலர் தேவால-யம், மசூதி மற்றும் இதர மத வழி-பாட்டுத் தலங்களின் செயல்பாடுகள் நாட்டின் ஆட்சி அதிகாரத்திலிருந்து பிரித்து வைக்கப்படவேண்டும் என்று வாதிடுவதுடன் மனநிறை வடைந்து விடக்கூடும். ஆனால், இழப்புக் கேடாக நாம் அத்தகைய ஓர் உலகில் வாழ-வில்லை.
உண்மையான இந்த உலகில், நாடுகள் மற்றும் அரசுகள் மதச்சார்-பற்று இருப்பது என்ற கருத்தை எதிர்ப்பதற்-கான அவர்களின் சொந்த காரணங்களை தேவாலயங்களின் மத அமைப்புகளும் கொண்டிருக்கின்றன. அவற்றில் சில, தனிப்பட்ட மனி-தனின் ஆன்மிக விடுதலையை, அர-சியலில் அதிகாரம் செலுத்துவது என்பதில் இருந்து துல்லியமாகப் பிரித்துக் காண்பதில்லை. . மதச்சார்-பின்மையின் நோக்கமும், அரசின் நோக்கமும், மத நோக்கம் மற்றும் தனிப்பட்டவர்களின் நோக்கத்-துடன் தொடர்பு அற்று சுதந்திரமாக இருப்-பவை என்ற கருத்தில் நம்பிக்கை அற்றவர்களாக அவர்கள் இருக்கக்-கூடும். உண்மையில் நிலவும் சமூகத்-தின் பன்முகத்தன்மையை அவர்களில் சிலர் ஏற்றுக் கொள்ளவில்லை என்-பது தெளிவாக தெரிகிறது. மாறாக, கட-வுளின் அருளால் தங்களின் கருத்துகள் உண்மையில் நிலை-பெறும் காலம் ஒன்று வரும் என்று அவர்கள் எதிர்பார்த்துக் காத்துக் கிடக்கின்றனர்.
![]() |
அரசியல் களத்தில் மதம் உரிமை கோரும்போது, அந்த அதிகாரத்தை மதம் எங்கிருந்து பெற்றது என்று நாத்திகர்கள் கேள்வி எழுப்புவதில் வியப்பேதுமில்லை; அது முற்றிலும் நியாயமானதே. மதஅமைப்புகளும் அதன் தலைவர்களும், ஒரு கடவுளின் சார்பாக தாங்கள் அந்த உரிமையைக் கோருவதாகக் கூறினால், கடவுளே அந்த உரிமையைக் கோருகிறதா அல்லது அதன் சார்பாக அந்த உரிமையை மதமும், தலைவர்-களும் கோருகின்றனரா என்று கேட்பதும் நியாயமானதே. இந்தக் கடவுள் உண்மையில் இருக்கிறாரா? அப்படியானால் அதற்கான அத்-தாட்சி என்ன? ஒரு வேளை அது போன்ற கட-வுள் இருக்கிறார் என்றாலும், அவரது விருப்பங்கள் ஏன் சட்டங்களாக மாற்-றப்பட வேண்டும்? எந்தக் கடவுளின் சார்பாகவும் இந்த உரிமையைத் தாங்கள் கோரவில்லை என்று மதத் தலைவர்கள் கூறுவார்-களே ஆனால், மற்ற எவரையும் விட அதிக அதிகாரம் பெற்றவர்களாக எப்படி அவர்கள் இருக்கிறார்கள்? அவர்களுக்கு அடிபணிய வேண்டிய அவசியம் என்ன? முட்டாள்தனமான கருத்து கொண்டவ மதவாதிகளுக்கு அதிகாரமும், செல்வாக்கும், சலுகை-களும் அளிக்கப் படும்போதெல்லாம், நாகரிக-மாக கேலியும் கிண்டலும் செய்வது மேலானது. என்றாலும், இத்தகைய நாகரிகத்திற்கும், ஒட்டு மொத்தமாக தங்களுக்குத் தாங்களே கட்டுப்பாட்டு விதித்துக் கொள்வ-தற்கும் இடையே ஒரு முக்கியமான வேறுபாடு உள்ளது. டார்வினின் உயிர்த் தோற்றத்தை மறுக்காத மிதவாதிகளின் மத நம்பிக்கைகளை நாகரிகமாகவும், நற்சிந்தனையுடனும் கூட விமர்சனம் செய்வதை ஊக்கு-விக்கக்கூடாது என்று சில அமெரிக்க நாத்திகர்கள் எண்ணு-வது வருந்தத்-தக்கது. நம்மைப் பற்றியும், நாம் வாழும் பிரபஞ்சத்தைப் பற்றியும் அறி-வியல் அடிப்படையிலான கண்டு-பிடிப்புகளை ஏற்றுக் கொள்ளும் நாத்திகர்களின் இத்தகைய அணுகு முறை-யிலான வாதங்களை நம்மால் வரவேற்க இயலவில்லை. இத்தகைய விட்டுக் கொடுக்கும் நாத்திகர்கள் அறிவியல் மீது, குறிப்பாக பொது பள்ளிகளில் டார்வினின் உயிர்-தோற்றம் பற்றி கற்பிப்பது பற்றி, மட்டுமே கவனம் செலுத்துகின்றனர். தங்களின் இந்த நிலைக்கு பொது-மக்களின் ஆதரவைப் பெறுவதற்காக, அமெரிக்காவில் ஏற்பட்ட பல்வேறு-பட்ட அறிவியல் அடிப்படையிலான மனித இயல் மாற்றங்களை அவை உள்ளவாறு ஏற்றுக் கொள்வதே அறி-வுடமை என்று கருதுகின்றனர். உயிர்த்தோற்றக் கோட்பாட்டினை அதிக எண்ணிக்கை கொண்ட அமெரிக்கர்களுக்குக் கற்பிக்க வேண்-டும் என்று விரும்பும் அவர்கள் அதனை நாத்திகத்துடன் இணைத்து பேசப்படுவதை மட்டும் ஏற்றுக் கொள்ள விரும்பவில்லை.
இதை ஒரு முறை நீங்கள் ஏற்றுக் கொண்டால், உங்களது அனைத்து வகையான பகுத்தறிவு மனப்பான்-மையும் காணாமல் போய்விடுகிறது. அதன் பின், உண்மை என்ன என்-பதை விட, மக்-களை எப்படி கவர்-வது என்ற நோக்-கத்தைக் கொண்-டதாகவே உங்களது அணுகுமுறை மாறிவிடும். கோடிக்கணக்-கான ஆண்டுகள் விலங்கினங்களாகத் துன்புற்ற பின் வளர்ச்சியை மனி-தர்கள் அடைந்துள்ளனர் என்ற உண்மையை ஏற்றுக் கொள்ளும்-போது, மக்களின் பாவத்தை மன்னிக்-கும் அன்பு கொண்ட ஒரு கடவுள் உள்ளார் என்ற மத-நம்பிக்கையைப் பெற்றிருப்பது எளி-தானதாகவும், பொருத்தமானதாகவும் இருக்காது என்று சுட்டிக் காட்டு-வதையும் அவர்கள் விரும்புவதில்லை. மதக் கருத்துகள் மீது உயிர்த்தோற்றக் கோட்-பாடு எத்தகைய பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பதைப் பற்றி கேட்கவும் அவர்கள் விரும்புவ-தில்லை. மற்றவர்களும் இதைப் போன்ற ஆபத்தானவற்றைப் பற்றிப் பேசுவதை அவர்கள் விரும்புவ-தில்லை.
ஆனால் இது ஒரு தவறான நிலைப்-பாடாகும். அறிவியல் கணக்-குப்படி உலகம் தோன்றி 4.6 பில்-லியன் ஆண்டுகள் ஆகின்றன என்-பதை ஏற்றுக் கொள்ளும் சிந்தனைத் திறம் கொண்ட மிதவாதக் கிறித்த-வர்கள் தங்கள் மதநம்பிக்கையைப் பற்றி உயிர்த்தோற்றக் கோட்பாடு ஆழ்ந்த கேள்விகளை எழுப்புவதைக் காணலாம். அவர்களிடமிருந்து இதை மறைக்க முயற்சிப்பது வீணானதும், அவர்களை அவமானப் படுத்துவதும் ஆகும். நமது பூமி 10,000 ஆண்டுகளுக்குள்தான் தோன்றியது என்பது போன்ற பல நம்பிக்கைகளைக் கொண்ட தீவிர மதவாதிகளைத் திருப்திபடுத்தி, அவர்களை அறிவியலுடன் நட்பு கொண்ட மதவாதிகளாக மாற்றும் முயற்சியும் வீணாணதே. அவர்-களைப் பொருத்தவரை, இந்த பூமியின் வயதும், ஒவ்வொரு உயிரின் தோற்றமும், அவர்களின் ஒருங்-கிணைந்த ஆன்மின நடைமுறையின் மய்யத்தில் இருக்கும் கோட்பாடு-களாகும்
எதுவும் பேசாமல் அமைதியாக இருப்பது என்ற கொள்கை சரியான வழியல்ல. நாத்திகர்கள் அதிகமாகப் பேசாமல் அடக்கமாக இருக்க வேண்-டும் என்று கூறப்படுவதையோ, ஆற்றல் மிகுந்த முறையில் விவாதிப்பதைத் தவிர்க்க வேண்டும் என்று கூறப்படு-வதையோ என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது. அவ்வாறு செய்தால் அறிவி-யலுடன் கூடிய ஆன்மிகத்தை ஆதரிக்-கும் போலி நாத்திகர்களுக்கு நாம் இடம் கொடுத்ததாக ஆகிவிடும்.
கடவுள் நம்பிக்கை நமக்கு இல்லை என்பதையும், இயற்கையை மீறிய அனைத்து வகை மதக்கோட்பாடு-களையும் நாம் ஏற்பதில்லை என்பதை-யும் விளக்கி நாம் பேசவேண்டிய நேர-மிது. மதங்கள் முற்றிலுமாக அழிக்கப்-பட்டு விடமுடியாது. நமது நோக்கமும் அதுவல்ல. என்றாலும் மதத்துடன் தொடர்புடைய பல மூடநம்பிக்கை-களை மக்களுக்கு நாம் எடுத்துக் கூற-வேண்டும். எந்த மதத்தினருக்கும் பகுத்தறிவு கிடையாது என்பதையும் கொடுமை, சோகம், அறியாமை மனித உரிமை மறுப்பு அல்லது மீறல் ஆகியவற்றை அனைத்து மதங்களும் வளர்க்கவே செய்கின்றன என்பதையும் நாத்திகர்களான நாம் தெளிவாக எடுத்துக் கூறத்தான் வேண்டும். மதத் தலைவர்கள் ஒழுக்க நெறியில் நமக்கு வழிகாட்டிகள் அல்ல. ஒழுக்கத்தைப் போதிக்கும் அதிகாரத்தை மதபோதகர்-களுக்கும், இமாம்களுக்கும், சாமியார் களுக்கும், கடவுள் மனிதர்களுக்கும் அளிக்கப்பட்டு இருப்பதை நாம் தட்டிக் கேட்கத்தான் வேண்டும்.
(நன்றி: ‘தி ஆஸ்திரேலியன் அதிஸ்ட்’ – நவம்பர் – டிசம்பர், 2009
மொழியாக்கம்: த.க.பாலகிருட்டிணன்)