Archive for the ‘இஸ்லாமியத் தமிழன்’ Category

சேஷாசல முதலியார் – சேஷாசலம் – பெரியார்தாசன் – “……………….” – சித்தார்த்தா – அப்துல்லாஹ் (1950-2013) காலமானார்!

ஓகஸ்ட் 19, 2013

சேஷாசல முதலியார் – சேஷாசலம் – பெரியார்தாசன் – “………………….” – சித்தார்த்தா – அப்துல்லாஹ் (1950-2013) காலமானார்!

Abdullah - in different poses

பெரியார்தாசன் என்கின்ற அப்துல்லா காலமானார்: பாரதிராஜாவின் `கருத்தம்மா’, `காதலர் தினம்’ உள்பட பல்வேறு தமிழ் திரைப் படங்களில் நடித்தவர் பெரியார்தாசன். இவர் சென்னை பச்சையப்பா கல்லூரியில் 38 ஆண்டுகள் பேராசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். 15-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த இவர் பட்டிமன்றம், கருத்தரங்குகளில் பங்கேற்று வந்தார். ம.தி.மு.க. நிர்வாகியான இவர் அந்த கட்சியின் உயர் நிலைக்குழு உறுப்பினராக இருந்தார். பெரியார்தாசன் வீடு திருவேற்காடு மகாலட்சுமி நகர் 6-வது தெருவில் உள்ளது. கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். கல்லீரல் கோளாறு காரணமாக குளோபல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று நள்ளிரவு 1.25 மணிக்கு மரணம் அடைந்தார். அவருக்கு வயது 63. அவரது உடல் திருவேற்காட்டில் உள்ள அவரது வீட்டில் பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது[1]. பெரியார்தாசனுக்கு வசந்தா (62) என்ற மனைவியும், வளவன் (35), சுரதா (35) என்ற 2 மகன்களும் உள்ளனர்[2].

Seshachalam-Periyardasan-Siddharth-Abdullah

அவருடையஆன்மாசாந்தியடையபிரார்த்தனை: “அவருடைய ஆன்மா சாந்தியடைய பிரார்த்தனை” என்று செய்யலாமா, கூடாதா என்று தெரியவில்லை. இருப்பினும், இந்தியப் பாரம்பரியப்படி, “அவருடைய ஆன்மா சாந்தியடையடைவதாக” என்று சொல்லிக் கொண்டு, அவரது குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்ளலாம். இணைதளங்களில் தேடியபோது, நக்கீரனில் வெளிவந்த கீழ்கண்ட செய்தி கண்களில் பட்டது. அது அப்படியே கொடுக்கப்படுகிறது. கதிரவன் என்பவர் அச்செய்தியைக் கொடுத்திருக்கிறார்.

Abdullah introduced as Periyarthasan in Dubai - hand bill

என்னநடந்ததுஇவர்கள்  (பெரியார்தாசன்மற்றும்மணிவண்ணன்) வாழ்க்கையில்?: வ்வப்போது சினிமாவில் நடித்து வந்த பெரியார்தாசன் அண்மையில் (2010) ஆத்திகரானார்.  அதுமட்டுமில்ல – இஸ்லாம் மதத்திற்கு மாறினார் (11-03-2010). இவர் மாதிரியே பெரியாரின் தீவிர பற்றாளர் மணிவண்ணன்.  இவர் இப்போது சாய்பாபா பக்கம் சாய்ந்திருக்கிறார். சென்னை பச்சையப்பன் கல்லூரியில் தத்துவ இயல்[3] பேராசிரியராக பணிபுரிந்த பெரியார்தாசனை பாரதிராஜா சினிமாவுக்கு கொண்டு வந்தார்.  நடிப்போடு ரியல் எஸ்டேட், மல்டி லெவல் மார்க்கெட்டிங்கிலும் கால் பதித்தார். கடந்த 2004ம் ஆண்டு அன்பு பாலா நடித்த அம்மா, அப்பா, செல்லம் படத்தின் படப்பிடிப்பு புதுச்சேரியில் நடந்தது.   இதற்காக சென்னையில் இருந்து நான், (பேட்டி எடுக்க) பெரியார்தாசன், நடிகை சபீதா ஆனந்த் (நடிக்க)  மூவரும் ஒரு காரில் புதுச்சேரி சென்றோம். அப்போது பெரியார்தாசன், தனது மகன் வ.சி.வளவன் திருமணம் அழைப்பிதழ் கொடுத்தார்.  அது ஒரு புத்தகமாகவே இருந்தது.    அந்த திருமண அழைப்பிதழில் பெரியாரின் படம் அச்சிடப்பட்டிருந்தது.  உள்ளே திருக்குறள் இன்பத்து பாலுக்கு பெரியார்தாசன் எழுதிய விளக்கவுரை.

Periyardasan marriage invitation card

ஏன்பெரியாரின்படத்தைதிருமணஅழைப்பிதழில்அச்சிட்டுள்ளேன்: ஏன் பெரியாரின் படத்தை திருமண அழைப்பிதழில் அச்சிட்டுள்ளேன் என்று நினைப்பீர்கள்? என்று அவராகவே கேட்டு அவராக விளக்கம் சொல்லிக்கொண்டு வந்தார். சேசாசலம் என்கிற என் பெயரையே பெரியார்தாசன்னு மாத்திக்கிட்டேன்னா பார்த்துக்குங்க…….என்று பெரியார் மீது தான் கொண்ட பற்று பற்றி,  கிழக்கு கடற்கரை சாலை நீலாங்கரையில் ஆரம்பித்து மரக்காணம் வரை சொல்லிக்கொண்டு வந்தார். நொங்கு கடை, இளநீர் கடைகளில் கார் நின்ற போது மட்டும் இடைவேளை. ஐந்து வருடங்களில் (2005-2010) அவர் வாழ்க்கையில் என்ன மாற்றம் நிகழ்ந்ததோ….தற்போது இறைவன் மீது நாட்டம் கொண்டிருக்கிறார்.  இஸ்லாம் மதத்திற்கு மாறியுள்ளார். இதே போல் பெரியாரின் தீவிர பற்றாளர் மணிவண்ணன்.   இதனால்தான் இவருக்கும் நடிகர் சத்யராஜூக்கும் நெருக்கம் அதிகமானது. இவர் இப்போது பெரியார் தொண்டர்களுக்கு அடுத்த அதிர்ச்சி கொடுத்திருக்கிறார்.  கடந்த சில வாரங்களுக்கு முன் மஹாராஷ்டிராவில் இருக்கும் சீரடி சாய்பாபா சன்னதிக்கு சென்று வந்திருக்கிறார்[4]. கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்யும் அளவிற்கு என்ன நடந்தது இவர்கள் வாழ்க்கையில்?

Periyardasan-explaining his position-about doubting him

2013ல்பெரியார்தாசன், மணிமண்ணன்காலமானது: ஜூன் 2013ல் தான் நாத்திகரான மணிவண்ணன் (31-07-1954 – 15-06-2013) காலமானார். கதிரவன் நக்கிரனில் எடுத்துக் காட்டியுள்ளபடி, மணிவண்ணன் “கடந்த சில வாரங்களுக்கு முன் மஹாராஷ்டிராவில் இருக்கும் சீரடி சாய்பாபா சன்னதிக்கு சென்று வந்திருக்கிறார்[5]” என்றிருந்தால், இந்த மூன்று ஆண்டுகளில் மணிவண்ணன் ஆதிகரானாரா, கடவுளை நம்ப ஆரம்பித்தாரா, என்பதெல்லாம் நமக்கு தெரியாது. ஆனால், அவரது நண்பர் இந்த மூன்று ஆண்டுகளாக முஸ்லிமாக இருந்திருக்கிறார். (பகுத்தறிவு, நாத்திகம் இவற்றையெல்லாம் மூட்டைக் கட்டிவிட்டு, பெரியாரையும் ஒதுக்கி விட்டு) கடவுளை நம்பியிருக்கிறார். திராவிடர்களுக்குக் குழப்பமாகத்தான் இருக்கும். ஊடகங்களும்[6] “பெரியார்தாசன் மரணம்” என்றுதான்[7] செய்திகளை[8] வெளியிட்டிருக்கிறார்கள்[9].

Periyar Sasan - Abdullah etc

இதயத்தில்விழுந்தஇடிபெரியார்தாசன்மறைவுக்குவைகோஇரங்கல்: இதயத்தில் விழுந்த இடி என்று பேராசிரியர் பெரியார்தாசன் மறைவுக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்[10]. அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், திராவிட இயக்கத்தின் கருத்துக் களஞ்சியக் கருவூலமான, என் ஆருயிர்ச் சகோதரர் அப்துல்லாஹ் பெரியார்தாசன், என்னையும், இயக்கத்தோழர்களையும் கண்ணீரில் துடிக்க வைத்து மறைந்து விட்டார். தந்தை பெரியாரை, மாணவப் பருவத்தில் தலைவராக ஏற்றுக்கொண்டு, சுயமரியாதை வீரராக, பகுத்தறிவு நெறியை மக்களிடம் பரப்ப, எழுத்தாலும், பேச்சாலும் அவர் ஆற்றிய பணிகள் ஈடு இணையற்றவை.

Periyardasan met Ajaya Malhothra

பொருளியல், தத்துவஇயல், உளவியல்பயின்றது: பச்சையப்பன் கல்லூரியில், பொருளியல் இளங்கலை, தத்துவ இயல் முதுகலை  பட்டங்களைப் பெற்று, இலண்டன் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் உளவியல் பயின்று, முனைவர் பட்டம் பெற்று, அமெரிக்காவின் கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தில் ஆறு ஆண்டுகள் பேராசிரியராகப் பணி ஆற்றி, 34 ஆண்டுகள் பச்சையப்பன் கல்லூரியில், மெய்ப்பொருள் இயல் பேராசிரியராகப் பணி ஆற்றினார். அண்ணல் டாக்டர் அம்பேத்கருடைய, அனைத்து நூல்களையும் பழுதறக் கற்று,  ஆய்ந்து அறிந்து, அதில் அவர் பெற்ற பாண்டித்யத்துக்கு நிகராக இன்னொருவரைச் சொல்ல முடியாது. அதைப்போலவே, தந்தை பெரியாரின் எழுத்துகளையும், உரைகளையும், முழுமையாகக் கற்று உணர்ந்தவர்; அறிவாசானின் நம்பிக்கையையும், அன்பையும் பெற்று, திராவிடர் கழகத்தில் கொள்கை பரப்புச் செயலாளராகவும் இயங்கியவர்.

periyar nagar poster -claimimg periyardasan instead of Abdullah

தமிழ்ஈழவிடுதலை, பௌத்தம், பாலிமொழிகற்றல்முதலியன: தமிழ் ஈழ விடுதலைக்காக அரும்பாடுபட்டவர். மூன்று தமிழர்களின் உயிர்களை, தூக்குக் கயிற்றில் இருந்து விடுவிக்க, நான் போராடிய காலத்தில், தாமாக முன்வந்து, தன்னை மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைத்துக் கொண்டு, கடந்த இரண்டு ஆண்டுகளாக, கழகத்தை மக்கள் மன்றத்தில் வலுப்படுத்திட, மேடை முழக்கத்தின் மூலமாக, அவர் ஆற்றி உள்ள பணிகள் அளப்பரியதாகும். புத்தரின் போதனைகளைப் பயில்வதற்காக, இலங்கைக்குச் சென்று, பாலி மொழியைக் கற்றுத் தேர்ச்சி பெற்றார். 56 நூல்களைத் தந்து உள்ள பெரியார்தாசன், அம்பேத்கர் தொகுத்த புத்தரும் அவர் தம்மமும் என்ற நூலை, தமிழில் மொழி ஆக்கம் செய்தார்.  அந்தநூல், தைவான் நாட்டில் மூன்று இலட்சம் படிகள் அச்சிடப்பட்டு, உலகெங்கும் பரப்பப்பட்டன.

Periyardasan died, Dinamalar

உடலைஎரியூட்டவும்வேண்டாம்; புதைக்கவும்வேண்டாம்: அவர் உடல் நலம் குன்றியபோது, ஜூலைத் திங்களில் அவரது இல்லம் சென்று சந்தித்து, பல மணி நேரம் உரையாடிக் கொண்டு இருந்தேன். இரண்டு நாள்களுக்கு முன்பு, ஆகஸ்ட் 16 ஆம் நாள், குளோபல் மருத்துவமனையில் அவரைச் சந்தித்தேன். மூன்று மணி நேரம் அவர் என்னிடம் மனம்விட்டுப் பேசிக்கொண்டு இருந்தார். அதுதான், அவர் கடைசியாகப் பேசியது என்று, அவரது பிள்ளைகள், நேற்று என்னிடம் தெரிவித்தனர். பேரறிஞர் அண்ணாவைக் கொத்திச் சென்ற புற்று நோய்தான், பெரியார்தாசனையும் நம்மிடம் இருந்து பறித்து விட்டது. ‘தான் இறந்தபிறகு, விழிகளை சங்கர நேத்ராலயா மருத்துவமனைக்குத் தந்து விடுங்கள்; உடலை எரியூட்டவும் வேண்டாம்; புதைக்கவும் வேண்டாம்; உடலை சென்னை மருத்துவக் கல்லூரி மாணவர்களது ஆராய்ச்சி படிப்புக்காகக் கொடுத்து விடுங்கள்’ என்று குடும்பத்தாரிடம் கூறியதற்கு ஏற்ப, அவ்விதமே அவரது உடல், சென்னை மருத்துவக் கல்லூரிக்கு வழங்கப்படுகிறது. இன்னும் பல ஆண்டுகள் வாழ்ந்து, திராவிட இயக்கத்துக்கும், தமிழ் இனத்துக்கும் அருந்தொண்டு ஆற்ற  இருந்த, எங்கள் கொள்கை வைரத்தை, சாவு கொடூரமாகக் கொண்டு போய் விட்டதே என்ற வேதனையில் தவிக்கிறேன். அவரை இழந்து ஆற்றொணாத் துயரத்தில் வாடும், அவரது குடும்பத்தினருக்கும், உற்றார் உறவினர்க்கும் எனது கண்ணீர் அஞ்சலியைத் தெரிவித்துக் கொள்கின்றேன் என்று தெரிவித்துள்ளார்[11].

வாழ்க்கைக்குறிப்பு: சேசாசலம் 1950ம் ஆண்டு வட ஆற்காடு மாவட்டத்தில் உள்ள அகரம் என்ற கிராமத்தில், சைவவேளாளர் குடும்பத்தில் பிறந்தார். சேசாசல முதலியாராக, இந்துமத நம்பிக்கையாளராக இருந்தார். 1980ல் பெரியாரின் தொடர்பினால், “பெரியார்தாசன்” ஆனார். திராவிட சித்தாந்தத்தில் ஊறியிருந்தாலும், பல நம்பிக்கைகளை ஆராய்ந்து கொண்டிருந்ததால், சில காலத்திற்கு கிருத்துவராகக் கூட இருந்தார் என்று சொல்லப்படுறது. பிறகு பௌத்தராகி, “சித்தார்த்” என்ற பெயரை வைத்திருந்தார். 2010ல் முஸ்லிம் ஆனார்.

காலம் பெயர் மதம் / நம்பிக்கை
c.1950-70 சேசாசல முதலியார் சைவம்/ இந்து
c.1970-80 சேசாசலம் பகுத்தறிவுவாதி
c.1980-2008 பெரியார்தாசன் நாத்திகம் / இந்துவிரோதம்
c.2008-10 சித்தார்த் பௌத்தம் / இந்துவிரோதம்
c.2010-13 அப்துல்லா இஸ்லாம் / கடவுள்-மதம் நம்பிக்கையாளர்

C = circa = approximately = நம்பிக்கை, மதநம்பிக்கை, கடவுள் நம்பிக்கையைப் பொறுத்த வரையிலும் நிலைமை மாறியுள்ளதால், இப்படி குறிப்பிடப் பட்டுள்ளது.

யார் மறைந்தது, எது கடந்தது, எது நின்றது?: சித்தாந்த கலவைகளினால், குழப்பங்களினால், நம்பிக்கைச் சிதறல்கள், மோதல்கள் இவற்றினால் உருவானவ போலிருந்தார் என்று அவரது வாழ்க்கைக் குறிப்புகள் காட்டுகிறது. ‘தான் இறந்தபிறகு, விழிகளை சங்கர நேத்ராலயா மருத்துவமனைக்குத் தந்து விடுங்கள்; உடலை எரியூட்டவும் வேண்டாம்; புதைக்கவும் வேண்டாம்; உடலை சென்னை மருத்துவக் கல்லூரி மாணவர்களது ஆராய்ச்சி படிப்புக்காகக் கொடுத்து விடுங்கள்’ என்று குடும்பத்தாரிடம் கூறியதிலிருந்து அத்தகைய போராட்டங்கள் வெளிப்படுகின்றன. 11-03-2010 முதல் 18/19-08-2013 அன்று வரை முஸ்லிமாக இருந்த அப்துல்லா இறந்தால், யார் இறந்தது என்று உலகம் சொல்லும்?

  • இந்துவாக இருந்த சேஷாசல முதலியார் இறந்தாரா?
  • நாத்திகன் சேஷாசலம்இறந்தாரா?
  • பெரியார்தாசன்  இறந்தாரா?
  • “……….” –இறந்தாரா?
  • சித்தார்த்தா என்ற பௌத்தர் –இறந்தாரா?
  • அப்துல்லாஹ் என்ற முஸ்லிம் இறந்தாரா?

இந்தியன் இந்தியனாக இருந்தாலே போதும் – மதம் மாறவேண்டிய அவசியம் இல்லை.

© வேதபிரகாஷ்

19-08-2013


[3] சைக்காலாஜி / மனோதத்துவம் என்றும் குறிப்பிடுகிறார்கள்.

[4] கதிரவன், என்னநடந்ததுஇவர்கள்  வாழ்க்கையில்?, நக்கீரன்,   http://cinema.nakkheeran.in/Talkies.aspx?T=360

[5] கதிரவன், என்னநடந்ததுஇவர்கள்  வாழ்க்கையில்?, நக்கீரன்,   http://cinema.nakkheeran.in/Talkies.aspx?T=360

[10] தினமணி, 19-08-2013

தமிழகத்தில் வெடிகுண்டு தயாரிப்பு, வெடிப்பொருட்கள் உபயோகம், வெடிகுண்டு கலாச்சாரம் (2)

ஒக்ரோபர் 29, 2011
தமிழகத்தில் வெடிகுண்டு தயாரிப்பு, வெடிப்பொருட்கள் உபயோகம், வெடிகுண்டு கலாச்சாரம் (2)
தமிழகத்தில் வெடிப்பொருட்கள், குண்டுகள் தயாரிக்கும் தொழிற்சாலைகள்: அருவங்காடு என்ற இடத்தில் இருக்கும் கார்டைட் நிறுவனம், இந்திய ராணுவத்திற்கு சப்ளை செய்கிறது[1]. தமிழக அரசு நிறுவனமான[2] “தமிழ்நாடு எக்ஸ்போலிசிவ் லிமிடெட்” என்ற தொழிற்சாலையில் ரசாயன வெடிகுண்டு வகைகள் தயாரிக்கப் படுகின்றன[3]. குறிப்பாக அத்தொழிற்சாலை உற்பத்தி செய்யும் ரசாயன வெடிமருந்து கலவைகளில் இவ்வகை – நைட்ரோ செல்லூலோஸ் வருகிறது. நைட்ரோ செல்லூலோஸ் வகைகளில் ( Emulsion Explosives)  மூன்று வகைகள் உள்ளன[4]
  1. Non-Permitted – அனுமதிக்கப்படாதவை
  2. Permitted – அனுமதிக்கப்பட்டவை
  3. Seismic – பூமியதிர்வு ஆராய்ச்சி முதலியவற்றிற்கு உபயோகப்படுத்தப்படுபவை.

பென்டா எரித்ரிடோல் டிரை நைட்ரேட் என்ற [PETN (Pentaerythritol Tri-Nitrate) explosive] வெடிவகைகளும் உபயோகப் படுத்தப் படுகின்றன[5]. சமீபத்தில் இந்த வெடி மருந்துகள் கொண்ட குண்டுகளைத்தான் தீவிரவாதிகள் உபயோகப் படுத்தியுள்ளனர். இத்தகைய ரசாயனப் பொருட்கள் உபயோகம், அவற்றை பயன்படுத்தக் கூடிய முறைகளை அறிந்தவர்கள் என்று தெரிகிறது. குறிப்பாக தீவிரவாதத்திற்கு அவற்றை மாற்றியமைத்து குண்டுவெடித்து நாசவேலை செய்யும் பின்னணியையும் காட்டுகிறது[6]. இவை மொத்தமாக நியமிக்கப்பட்ட விற்பனை ஏஜென்டுகள் மூலம் விற்க்கப்படுகின்றன[7] மற்றும் மாநில வாரியாக டீலர்களும் உள்ளனர்[8]. முன்பு சந்திரபாபு நாயுடு கார்கள் செல்லும்போது, நக்ஸலைட்டுகளால் இந்த வகை குண்டுகள் உபயோயோகிக்கப்பட்டன[9]. அப்பொழுது உற்பத்தி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. எனெவே, குவாரிகளுக்கு என்று வாங்கிச் செல்லும் வெடிமருந்துகள், குண்டுகள் முதலியவை தீவிரவாதிகளுக்குச் செல்கின்றன, அவர்கள் அவற்றை வெடிகுண்டுகளாக தயாரித்து, டைமர் முதலியவற்றுடன் உபயோகப் படுத்துகிறார்கள் என்று தெரிகிறது[10]. தமிழகத்தில் வெடித்துவரும் “பைப் வெடிகுண்டுகள்” குறிப்பிட்ட குழிவினரைக் காட்டுகிறது எனலாம்.

 

யாருக்கு தொடர்பு? – வழக்கை திசைத் திருப்பவா, உண்மையினை அறிந்து கொள்ளவா?  இப்பொழுதெல்லாம் போலீஸாரும், டாக்டர்களைப் போல ஆகிவிட்டார்கள், பதில் சொல்கிறார்கள் – “விசாரணை ஆரம்பிக்கப் பட்டுள்ளது. இது சம்பந்தப் பட்ட வல்லுனர்கள் அறிக்கை கொடுத்த பிறகு தான் மற்ற விவரங்கள் சொல்லமுடியும். நாங்கள் அதைப் பற்றி ஒன்றும் கூறாமுடியாது”, என்றா ரீதியில் பதில் அளிக்கின்றனர்.  போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், “நேற்று அதிகாலை 3.30 மணியளவில் வடஇந்தியரை போல காணப்பட்ட மர்ம நபர், பாலம் அருகே நடமாடி கொண்டிருந்ததாக போலீசுக்கு தகவல் கிடைத்துள்ளது[11]. வெடிகுண்டுகளை மணல் மூட்டைகளுக்கிடையே வைத்து பிரித்தபோது, அதில் 7 கிலோ எடையுள்ள, “ஹை பவர் ஜெலட்டின் ஜெல்’ வைக்கப்பட்டிருந்தது[12]; [தமிழன் டிவி எப்படி ஆர்.டி.எக்ஸ் வெடிமருந்து நிரப்பப்பட்டும் …….என்று வெளியிட்டுள்ளது என்று தெரியவில்லை[13]. ஆர்.டி.எக்ஸ் என்பது சைகிளோ-டிரை-எதிலமைன்-டிரைநைட்ரோ அமைன் (Cyclotrimethylenetrinitramine) என்பதாகும்] அதனுடன் டெட்டனேட்டர்களும் இணைக்கப்பட்டிருந்தன. அவை செயலிழக்க வைக்கப்பட்டன. “ஜெல் 90′ வகையைச் சேர்ந்த இந்த வெடி மருந்துகள் எங்கிருந்து வாங்கப்பட்டன என்பது குறித்து, விசாரணை நடக்கிறது. இந்த வகை வெடி மருந்து, அரசு வெடி மருந்து கிட்டங்கியில் மட்டுமே தயாரிக்கப்படுகிறது. இந்த சம்பவத்தில் நக்சலைட்கள், வடமாநில பயங்கரவாதிகள் அல்லது ஏதாவது அமைப்பைச் சேர்ந்தவர்கள் ஈடுபட்டிருக்கலாமா என, போலீசார் விசாரிக்கின்றனர். சம்பவ இடத்தில் மத்திய உளவுப்பிரிவு, கியூ, சிறப்பு புலனாய்வு பிரிவு உள்ளிட்ட பல்வேறு பிரிவு அதிகாரிகள் குவிந்தனர். முதற்கட்ட விசாரணையில் வெடிகுண்டு தயாரிப்பில் கை தேர்ந்தவர்களால் மட்டுமே இச்செயலில் ஈடுபட்டிருக்க முடியும் என போலீசார் சந்தேகிக்கின்றனர். அத்வானியின் கார் வரும்போது ஒருவர் பேட்டரியை இயக்கினால் வெடிக்கும் வகையில் குண்டு தயாரிக்கப்பட்டிருந்தது. தீவிரவாத அமைப்புகள் அல்லது நக்சலைட் இயக்கத்தினர் யாரும் இச்செயலில் ஈடுபட்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்[14].


ஆலம்பட்டியை தேர்வு செய்தது ஏன்? குறுகிய பாலம் என்பதனால், ஒரு வண்டி போகும் போது, எதிரில் வரும் வண்டி நின்று வழிவிட வேண்டும். அத்தகைய பாலத்தைத் தேர்ந்தெடுத்தது சந்தேகத்தையெழுப்புகிறது.

  • “இசட்’ பிரிவு பாதுகாப்பில் உள்ள தலைவர்கள் வரும் போது, அவர்கள் செல்லும் பாதையில், பாலங்கள் உட்பட முக்கிய கிராமங்களில் இரவு நேரத்தில் போலீஸ் பாதுகாப்பு போடப்படும். ஆனால், வெடிகுண்டு வைக்கப்பட்டிருந்த பாலத்தில் இரவு நேரத்திலும், நேற்று காலையிலும் கூட பாதுகாப்பிற்காக யாரும் நிறுத்தப்படவில்லை[15].
  • திருமங்கலம் – ராஜபாளையம் இடையே உள்ள ரோட்டில் இந்த ஆலம்பட்டி தரைப்பாலம் மட்டும் தான் குறுகியது. எனவே, யாரும் தப்பிவிடக் கூடாது என்பதற்காக வெடிகுண்டு வைத்தவர்கள் இப்பாலத்தை தேர்ந்தெடுத்துள்ளனர்.
  • போலீசார் கூறுகையில், “சக்தி வாய்ந்த இந்த வெடிகுண்டு வெடித்திருந்தால், பெரிய அளவில் சேதம் ஏற்பட்டிருக்கும். பைப்பிற்குள், 4 பிளாஸ்டிக் பைகளில், 4 அடிக்கு கருமருந்து அடைக்கப்பட்டிருந்தது. இந்த குண்டை, மொபைல் போன் மூலம் “ஆபரேட்’ செய்ய திட்டமிட்டிருக்கலாம்’ என்றனர்.
  •  பாலத்தின் அடியில் வெடிகுண்டு இருப்பது தெரிந்ததும், ஒரு மணி நேரம் இப்பாதையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
  • இச்சம்பவத்தால், அத்வானி ஆலம்பட்டி வழியாகச் செல்லாமல், விருதுநகர், சிவகாசி நான்கு வழிச்சாலை வழியாக ஸ்ரீவில்லிபுத்தூர் சென்றார்[16].


கோவையை தொடர்ந்து மதுரையிலும் குறி: அத்வானி, 1998ம் ஆண்டில் லோக்சபா தேர்தல் பிரசாரத்திற்காக கோவை வந்தபோது, தொடர் குண்டு வெடிப்பு நடந்ததில் பலர் பலியாகினர்; விமானம் தாமதமாக வந்ததால், அத்வானி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.இந்நிலையில், மதுரையில் நேற்று அவரை குறி வைத்தே குண்டு வைக்கப்பட்டுள்ளது. இரண்டு நாட்களாக இதற்கான வேலையில் மர்ம நபர்கள் ஈடுபட்டுள்ளனர். பயமுறுத்தவோ, எச்சரிக்கவோ அல்லாமல், தாக்குதல் நடத்தும் நோக்கிலேயே குண்டு வைக்கப்பட்டிருக்கலாம். இதற்காகவே ஆள் நடமாட்டம் அதிகம் இல்லாத இடத்தில், குறுகிய பாலத்தில் சதியை நிறைவேற்ற திட்டமிட்டுள்ளனர் என, போலீசார் கருதுகின்றனர்.மதுரை சிறையில் இருந்து விசாரணை கைதிகளை, ஆலம்பட்டி வழியாக தென்காசி கோர்ட்டிற்கு போலீசார் அழைத்துச் செல்வது வழக்கம். கைதிகளில் யாரையாவது கொலை செய்ய, இந்த குண்டுகள் வைக்கப்பட்டதா என்றும் விசாரணை நடக்கிறது. காரணம், இரு ஆண்டுகளுக்கு முன், மதுரை ரிங் ரோடு ஓடைப் பாலத்தின் அடியில், நெல்லையில் இருந்து வந்த கைதிகளை கொல்ல வைக்கப்பட்டிருந்த, “கூஜா வெடிகுண்டுகள்’ கைப்பற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.


தொடரும் மிரட்டல் – நகைச்சுவையாக மாற்றப்பட்ட குண்டுவெடிப்புகள் : மதுரைக்கு தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல் இருந்து வருகிறது. ஐந்து மாதங்களுக்கு முன், மாட்டுத்தாவணி எதிரே இருந்த டாஸ்மாக் கடையில் வெடிகுண்டு வெடித்தது. கடந்த செப்., 30ல் புதூர் அரசு பஸ் டெப்போவில் டைம் பாம் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது, அத்வானி செல்லும் பாதையில், சக்தி வாய்ந்த குண்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது. மிரட்டலுக்கு, பயமுறுத்தலுக்குக் கூட வெடிகுண்டுகளை உபயோகப் படுத்தப் படுகின்றன என்றால், அத்தகைய கொடூரம் மனங்களில் வேடிக்கையாக, விளையாட்டாக ஆகிவிட்டது போலும். அதற்கேற்ற முறையில், குண்டு வெடிப்பது எப்பது தமிழ் திரைப்படங்களில் “ஜோக்காகி” விட்டது. அது மனிதர்களைக் குரூரமாக கொல்ல உபயோகப்படுத்தப் படும் தீவிர வாதம் / பயங்கரவாதம் என்ற எண்ணத்திற்குப் பதிலாக “தமாஷாக” எடுத்துக் கொள்ளும் நிலையை தமிழ்த்திரைப்பட நகைச்சுவை மாற்றிவிட்டிருக்கிறது.


தேசதுரோகிகளின் முயற்சி:பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டியும், நிதர்சனமும்: “அத்வானி யாத்திரை வழியில் வெடிகுண்டு வைத்தது தேசதுரோகிகளின் முயற்சியாக இருக்க வேண்டும்,” என மாநில பா.ஜ., தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.அவர் தினமலர் நிருபரிடம் கூறியதாவது: “இச்செயல் கோழைத்தனமான ஒன்று. இதுபற்றி பா.ஜ., கவலை கொள்ளவில்லை. போலீசார் நடவடிக்கை எடுப்பர். அத்வானியின் யாத்திரை, ஊழல், லஞ்சம் மற்றும் கறுப்புப் பணத்திற்கு எதிரானது என அனைவரும் புரிந்து கொண்டுள்ளனர். யாத்திரை, யாருக்கும் எதிரானது அல்ல என தெரிந்த பிறகும், இத்தகைய முயற்சிகள் நடப்பது தேசதுரோகிகளின் முயற்சிகளாக தான் இருக்க முடியும். நாடு நன்றாக இருக்க வேண்டும், ஊழலை ஒழிக்க வேண்டும் என நினைப்பவர்கள், இத்தகைய செயல்களில் ஈடுபட மாட்டார்கள், என்றார். மூப்பனார் முதல் கருணாநிதி வரை இவர்கள் எப்பொழுதும் தாங்களே குண்டு வைத்துக் கொள்வர்கள்[17] என்று ஜோக் அடித்துள்ளதையும் நினைவு கூரத்தக்கது”. இதுவும் இன்றைய சூழ்நிலைகளில் முக்கியமாகிறது, ஏனெனில், இணியதள தாக்குதல்களில் மறைந்து தாக்கும் சூராதி சூரர்கள் இத்தகைய வாதத்தை வைத்து ஏமாற்றப் பார்க்கின்றனர் என்பதைவிட, உண்மையை மறைக்க பிரச்சார யுக்தியாக பயன்படுத்துகின்றனர். செய்த குற்றங்களோ, செத்தவர்களோ பொய்யில்லை. குறைந்த தண்டனைகள் பெற்று வெளியில் வந்துவிட்டதால், அவர்கள் புனிதர்கள் ஆகிவிட மாட்டார்கள், ஏனெனில் செத்தவர்களின் மனைவி-மக்களுக்கு, உறவினர்களுக்கு கொலையாளிகள் யார் என்று நன்றாகவே தெரியும். அவர்கள் நடமாடி வரும்போது, உலா வரும்போது, அப்போது பார்க்கும் போது கொலைகாரகள் போகிறார்கள் என்று தான் நினைப்பர்கள்.

   

“பவர் ஜெல்” வெடி மருந்து என்றால் என்ன?: பல்வேறு ரசாயனங்களில் இருந்து வெடி மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன[18]. அதுமட்டுமல்லாது வெடிகுண்டுகள் தயாரிப்பது பற்றி புத்தகங்களை வேறு வெளியிடுகிறார்கள். அல்-குவைதா, தலிபான் போன்ற குழுக்கள் ரசாயன படிப்புப் படித்த இளைஞர்களை வைத்துக் கொண்டு, குண்டுகளைத் தயாரிப்பது, வெடிப்பது பற்றிய கையேடுகளைத் தயாரித்து, தீவிரவாத இளைஞர்களுக்கு, புதிய தீவிரவாதிகளுக்குக் கொடுக்கிறார்கள். இவற்றில், “பவர் ஜெல் வெடி மருந்து’ ஒரு வகை. நைட்ரோகிளிசரின்[19], டி.என்.டி., அசிட்டோன் பெராக்சைடு, ஆர்.டி.எக்ஸ்., அல்லது நைட்ரோசெல்லுலரஸ் ஆகிய ரசாயன பொருட்களை அதிக அழுத்தத்தில் சிலிண்டர் அல்லது பைப்பில் அடைத்து, அதை திடீரென எரிய வைத்தால், அதிக சக்தி, வெப்பம் மற்றும் நெருப்பு வெளிப்படும். இது சில மீட்டர் சுற்றளவுக்கு சேதத்தை ஏற்படுத்தும்.வெடி மருந்தை வெடிக்கச் செய்வதற்கு, திரவ நைட்ரஜன் பயன்படுத்தப்படும். இதனால், இவ்வகை வெடிகுண்டுகள், “பவர் ஜெல்’ என அழைக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. ராணுவத்தில் மட்டுமல்லாது இவ்வகை வெடிகுண்டுகள் குவாரிகளிலும் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. அவ்வாறு அவை எளிதில் கிடைப்பதால், அவறையே வெடிகுண்டுகளாக தீவிரவாதிகள் பயன்படுத்துகின்றனர்.

வேதபிரகாஷ்

28-10-2011


[2] TEL, a Government of Tamilnadu Enterprise, has a comprehensive product range, which facilitates single window delivery of complete range of explosives and accessories to its customers.

[13] ஊழலுக்கு எதிராக நாடு முழுவதும் ரத ஊர்வலம் மேற்கொண்டுள்ள பா.ஜ.க.மூத்தத்தலைவர் அத்வானி நேற்று காலை ஊர்வலத்திற்கு தயாராகி இருந்த நிலையில் மதுரை-இராஜபாளையம் நெடுஞ்சாலையில் ஆலம்பட்டி என்ற கிராமத்தில் தரைப்பாலம் ஒன்றின் கீழ் வெடிகுண்டு இருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது.
அப்போது காவல்துறை அதிகாரிகள் விரைந்து சென்று ஆய்வு மேற்கொண்டதில் 6- அடி நீளமுள்ள குழாயில் ஆர்.டி.எக்ஸ் வெடிமருந்து நிரப்பப்பட்டும், 25-மீட்டர் நீளமுள்ள மின்கம்பியில் இணைக்கப்பட்டும் கிடந்த வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டது. http://tamilantelevision.com/news.php?Id=1319868919

[16] நன்றி – தினமலர்.

[17] காமராஜர் அரங்கத்தில் நடந்த மாநாட்டில் மூப்பனார், கருணாநிதி முதலியோர் அவ்வாறு வெளிப்படையாக கிண்டலடித்து, நக்கலாக பேசியபோது, பலர் அதை கேட்க நேர்ந்துள்ளது. அபொழுது தான் மூப்பனாரின் மீதிருந்த மதிப்பும் சரிந்தது. அடடா மூப்பனாரை போன்றவர்கள் கூட இவ்வாறு பேசுகிறார்களே என்று வியப்படைய நேர்ந்தது, வருத்தப்படவும் செய்தது.

பெரியார்தாசனை காண்காணிக்க வேண்டுமாம் – சொல்வது முஸ்லீம்கள்!

ஏப்ரல் 10, 2010

பெரியார்தாசனை காண்காணிக்க வேண்டுமாம் – சொல்வது முஸ்லீம்கள்!

இதெல்லாம் வேடிக்கையாகவே உள்ளது.

அதிரடியாக, பரபரப்புடன், அந்த ஆளை ரியாத்திற்கு அழைத்து வந்து சுன்னத் செய்து “முஸ்லீம்” என்று சொல்லி, மெக்கா-மெதினா தரிசனத்திற்கு அழைத்துச் சென்று………………….படங்கள் எல்லாம் எடுத்து காட்டி, இப்பொழுது “கண்காணிக்கப் படுவார்” என்றால் என்ன?

பெரியார்தாசனை கண்காணிக்கும் அதென்ன புதிய நிலைபாடு?

http://markaspost.wordpress.com/2010/04/10/பெரியார்தாசனை-கண்காணிக்/

பெரியார்தாசன் என்ன நோக்கில் இஸ்லாத்தை ஏற்றார் எனத் தெரியவில்லை! நாங்கள் அவரை கண்காணித்துக் கொண்டு இருக்கிறோம் என்ற தனி நபர் ஜமாஅத்தின் நிலைப்பாடு பற்றி மார்க்க அடிப்படையில் சரியா என்பதை அறிந்து கொள்ளும் முன் இதுபோன்ற விஷயங்களில் ஏற்கனவே அந்த ஜமாஅத்தின் நிலைப் பாடு என்ன? என்பதை பார்ப்போம்!

முதலாவதாக, இதுவரை இஸ்லாத்தை ஏற்ற அனைவருக்கும் இதே நிலைதான் எடுக்கப்பட்டதா?
தங்கள் ஜமாஅத்தில் வந்து இஸ்லாத்தை ஏற்றால் இந்த அளவு கோலைக் கொண்டுதான் அவர்களை அளந்தார்களா? கண்காணித்த பிறகுதான் அவர்கள் அறிமுகப்படுத்தப்பட்டர்களா?

அய்யம்பேட்டை சகோதரிகளை இப்படித்தான் கண்காணித்து அனைத்து ஊடகங்களில் எல்லாம் முன்னிலைப்படுத்தினார்களா? தவ்ஹீத் எழுச்சி மாநாட்டில் மேடை ஏறி உரை நிகழ்த்த அனுமதிக்கப்பட் டார்களா?

ஏ.ஆர். ரஹ்மானை மேடையேற்ற முடியுமா? என்றெல்லாம் கேட்கிறார்களே! ஏ.ஆர். ரஹ்மான் இன்றுதான் இஸ்லாத்தை ஏற்றார் என்றால் அவரையும் இதே நிலைபாடு கொண்டுதான் வரவேற்று அதன் பின் அவருக்கு மார்க்கத்தை எடுத் துச் சொல்ல வேண்டும்.

அவரது நிலை என்ன என்பது பற்றி நம்மிடத்தில் கேள்வி இல்லை. “அவர்களுக்காக நீர் விசாரிக்கப்பட மாட்டீர்” -(அல்குர்ஆன்) என அல்லாஹ் கூறுவதாலும், வந்தவர்களுக்கு நேர்வழியை எடுத்துச் சொல்லாமல் எட்டி நின்று கண்காணித்து “விழுந்த பின் தான் சுட்டிக் காட்டுவோம்’ என்பது என்ன நிலைபாடு?

மார்க்க அடிப்படையில் இஸ்லாத்தை ஏற்றவர்களின் உள்ளத்தைப் பிளந்து பார்க்கும் செயலைச் செய்யக் கூடாது என்பதை காலீத் பின் வலீத் (ரலீ) சம்பவத்திலும், உஸôமா (ரலி) சம்பவத்திலும் நாம் காண்கிறோம்.

நாளை அவர் வழிகெட்டு விட்டால்… என்ற கேள்வியே முதலில் தவறாகும். நபி (ஸல்) அவர்கள் காலத்தில் அவர்களிடத்திலே கலிமா சொல்லி இஸ்லாத்தை ஏற்ற எத்தனையோ பேர் இஸ்லாத்தை விட்டு வெளியேறிய சம்பவத்தை மிஃராஜின் போதும், பொய்த் தூதரை பின்பற்றிச் சென்ற சம்பவத்திலும் நாம் அறிந்திருக் கின்றோம்.

நபி (ஸல்) அவர்களின் காலத்திற் குப் பின்னும், அபுபக்கர் (ரலி) ஆட்சிக் காலத்தில் ஜகாத்தை மறுத்து ஒரு கூட்டமும், பொய்த் தூதர்களைப் பின்பற்றி ஒரு கூட்டமும் வழி தவறிச் சென்றது. உஸ்மான் (ரலி) காலத்தில் கார்ஜியாக்கள் என்று ஒரு பிரிவினர் வழிகெட்டுப் போனதை அறிந்திருக்கிறோம். இப்படி நபி (ஸல்) அவர்களால் உறுதிமொழி எடுத்த எத்தனையோ பேர் வழிகேட்டில் வீழ்ந்திருப்பதை அறிந்திருக்கிறோம்.

வழிகேடும், நேர்வழியும் நம் கையில் இல்லை. ஒருவர் சொர்கத்துக்குரிய காரியத்தை செய்து கொண்டே இருப்பார், இறுதி நேரத்தில் நரகத்திற்குரிய காரியத்தைச் செய்ய வைத்து அவரை அல்லாஹ் நரகத்திற்குரியவராக்குவான். ஒருவர் நரகத்திற்குரிய காரியத்தை செய்து கொண் டே இருப்பார், இறுதி நேரத்தில் சொர்க்கத்துக்குரிய காரியத்தை செய்ய வைத்து அவரை சொர்க் கத்திற்கு உரியவராக ஆக்குவான். (-புஹாரி)

நம்மில் எத்தனையோ பேர் வழிகேட்டில் இருந்து நேர்வழிக்கும், நேர்வழியில் இருந்து வழிகேட்டிற்கும் சென்றுள்ளதாக நீங்கள் கூறுகின்றீர்கள். ஏன்? ஆலிமான நீங்களே கூட இறை மறுப்புக் கொள்கைக்குச் சென்று நேர்வழிக்கு திரும்பி வந்ததாகக் கூறியுள்ளீர்கள்! இவ்வாறு இருக்கையில் இஸ்லாத்தை ஏற்ற ஒருவரின் உள்ளத்தை ஆராய மல் அவர்களை வரவேற்பதும், முக்கியத்துவம் அளிப்பதும் மார்க்க அடிப்படையில் தவறில்லையே!

புதிதாக இஸ்லாத்தை ஏற்ற முஹாஜிர்களுக்கு, அன்சாரிகளுக்கு இல்லாத முக்கியத்துவத்தை நபி (ஸல்) அளித்ததை நாம் ஹதீஸ்களில் பார்க்கிறோம். எந்த அளவுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது என்றால், “நீங்கள் நீதமாக நடக்கவில்லை, புதிதாக இஸ்லாத்தை ஏற்றவர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து எங்களை புறக்கணிக்கின்றீர்கள் என அன்சாரிகள் நபி (ஸல்) அவர்களைப் பார்த்து கேட்கும் அளவிற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.

மக்கா வெற்றியின்போது “அபூஸுஃப்யான் வீட்டில் தஞ்சமடைபவர்களுக்கு பாதுகாப்பு உத்தரவாதம்” வழங்குமளவுக்கு இஸ்லாத்தை ஏற்றவர்களுக்கு சிறப்பும், கனிமத்து பொருட்களில் கூடுதல் பங்கும் வழங்கப்பட்டிருக்கும்போது நாம் ஏன் இதிலிருந்து படிப்பினை பெறாமல் மற்றவர்கள் மேடையில் பேசியபின் நமது மேடையில் ஏறுவதா? என்றும், இது நமது ஜமாஅத் நிலைப்பாடு! என்றும் கூறி நபி (ஸல்) நிலைப்பாட்டை புறந்தள்ளுவது சரியாகுமா?

நாத்திகரான கோவை ராம கிருஷ்ணனும், இணை வைப்பாள ரான இந்து மக்கள் கட்சி அர்ஜுன் சம்பத்தும், தாங்களும் இந்த விஷயத்தில் ஒரே நேர்கோட்டில் இணைந்து “”அவரை கண்காணிக்கிறோம்” என ஒரே வார்த்தைகளை வெளிப்படுத்தி இருப்பதன் மூலம், உங்கள் சிந்தனை காவியாகவோ, கருப்பாகவோ மாறிவிடாமல் இறைவனிடம் பிரார்த்திக்கிறோம்.

தகவல் – மங்கோலியன்

நன்றி; www.intjonline.in மற்றும் சமுதாய மக்கள் ரிப்போர்ட்

அன்புடன்;சதாம் ஹுசைன்

ஆக இஸ்லாத்திற்கு மாறியவர்கள் பற்றி இந்த அளவிற்கு ஆராய்ச்சி நடத்துகிறார்கள் என்றால், “மாற்றப்பட்டவர்களின் நிலை” பற்றி முஸ்லீம்கள் ஆராய்ச்சி செய்தது / செய்யாதது என்ன? நன்றாக படித்து, ஒருநிலையில் தாங்கள் ஏதோ ஒரு காரணத்திற்காகத் தான் மதம் மாற்றப்பட்டுள்ளோம் என அறிந்தால், அவர்களும் தங்களது நிலைப்பாடு பற்றி சிந்திக்க ஆரம்பித்து விடுவார்களே?

இப்படி எல்லா மதம் மாறிய முஸ்லீம்களும் கண்காணிக்கப் படுவார்களா?

நம்பிக்கையின் மீது ஆதாரமாக மதம் மாறினாரா அல்லது மாற்றப் பட்டரா என்ற கேள்வியும் அதற்கான பதிலும் பெரியார்தாசன் நண்பர்களிடையே ஏற்கெனவே உள்ளன, அவை தாராளாமாகவே பேசப் பட்டன. “பணத்திற்காகத்தான்” மாறினார் என்பது முதல் குற்றச்சாட்டு. அந்நிலையில் “நம்பிக்கை” போய்விடுகிறது.

மனிதன் தான் எப்படியாவது விளக்கம் அளித்து தன்னுடைய செயலை நியாயப் படுத்திக் கொள்ளலாம். அந்நிலையில் படித்த சேஷாசலத்திற்கு /பெரியார்தாசனுக்கு /  ……………க்கு/ சித்தார்தா……னந்தாவிற்கு / அப்துல்லாவிற்கு எந்த பிரச்சினையும் இல்லை.

அதுமட்டுமல்ல, சிலர் அப்துல்லாவிற்கே அறிவுரை அளிக்க ஆரம்பித்து விட்டனர்:

ஐயா , பேராசிரியர் அவர்களே!

நீங்கள் இஸ்லாத்தில் இணந்தது எங்களுக்கு பெருமைதான் என்றாலும் என் மனதுக்குள் ஒரு பயம் நிலவி வருகிறது. இது சுன்னத், அது ஹராம், இதைச் செய்யவேண்டும், அதைச் செய்யக்கூடாது  என்று இலவச அறிவுரை சொல்ல சில அரைகுறை ஆலிம்கள் வருவார்கள். உங்களுக்கே தெரியாமல் உங்களை மூளைச்சலவை செய்வார்கள். நீங்கள் மனோவியல் பேராசிரியர் மட்டுமல்ல சிகிச்சையாளரும்கூட, எனவே குர்ஆனையும் ஹதீஸையும் ஆராய்ந்ததுபோல் அவர்கள் சொல்வதையும் ஆய்ந்து ஆராய்ந்து ஏற்றுக்கொள்ளுங்கள். இது ஒன்று.

மற்றொன்று, ‘இறைவன் ஒருவன்தான், அவனுக்கு இணைவைக்கக்கூடாது, அவனுக்கு இணையாக எதுவுமில்லை’ என்ற செய்தி நபிகளாருக்குப் பிறகு இந்திய துணைக்கண்டம் முதல் எல்லா நாடுகளுக்கும் பரப்பியவர்கள் ஒரு சிலர். அவர்கள் தங்கள் வாழ்நாள் முழுவதையும் இறை தியானத்தில் மூழ்கி மக்களின் வாழ்க்கை முறை, உணவு, நாகரீகம், பண்பாட்டுமுறை இவைகள் அனைத்தையும் மாற்றி நேர்வழிப் படுத்தியவர்கள். சுருக்கமாகச் சொன்னால் இறைவன் சொன்னதை, நபிகளார் சொன்னதை மக்களின் அறிவுக்குத் தகுந்தவாறு போதனை புரிந்தவர்கள். சூஃபிகள் என்றழைக்கப்படும் இவர்களை சிலர் தவறாகச் சித்தரிக்கிறார்கள் என்பதை உங்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறேன்.

http://abedheen.wordpress.com/2010/04/10/jaffer-periyardasan/

எதற்கு இவ்வளவு கட்டுப்பாடு?

பாவம், ஒருவேளை, விட்டால் ஓடிவிடுவாரோ என்னவோ?

முஸ்லீம்கள் மதம் மாற்றும் பிரச்சினை இன்னுமொரு கோணத்தில் செல்கின்றது என்பதனை அறியலாம்.

நாத்திகமும், ஆத்திகமும்: அகில இந்திய பகுத்தறிவாளர் மாநாடு: நம்பிக்கையாளர்களுக்கு சவால் – IV

ஜனவரி 16, 2010

அகில இந்திய பகுத்தறிவாளர் மாநாடு: நம்பிக்கையாளர்களுக்கு சவால் – IV

© வேதபிரகாஷ்

முன்பு இம்மாநாட்டின் நிகழ்வுகளை பத்திதுள்ளேன்[1]அகில இந்திய பகுத்தறிவாளர் மாநாடு: நம்பிக்கையாளர்களுக்கு சவால் – I to III! இதில் தீர்மானங்கள் சம்பந்தமான விவரங்கள் கொடுக்கப்படுகின்றன.

7வது பகுத்தறிவாளர் கழக மாநாட்டின் தீமானங்கள்!: இரண்டாவது நாளில் (27-12-2009, ஞாயிற்றுக் கிழமை) மாநாட்டின் தீர்மானங்கள் முதலில் வாசிக்கப்பட்டு, அதன் விவரங்கள் பின்னணி நரேந்திர நாயக்கினால் விளக்கப்பட்டன:

1. இந்திய அரசு மதத்தை அரசியலிலிருந்து பிரிக்க தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும். அதற்காக ஒரு சட்டவடிவை உண்டாக்கி, சட்டமாக்க வேண்டும்[2]. லிப்ரான் கமிஷன் அறிக்கையிலும் இக்கருத்து சொல்லப்பட்டிருக்கிறது[3].

2. விளம்பரங்களில் வரும் மூட நம்பிக்கைகள் நிறுத்தப்படவேண்டும். அதாவது விளம்பரங்கள் மூடநம்பிக்கைகள் பரப்ப உபயோகிக்கக்கூடாது[4].

3. பொது சிவில் சட்டத்தை (Uniform Civil Code) அமூலாக்க வேண்டும்[5]. ஏற்கெனவே இரண்டு உச்சநீதிமன்ற தீர்ப்புகள் இதனை வலியுறுத்துள்ளது.

4. அயல்நாட்டிலிருந்து ஊக்குவிக்கப்படும் தீவிரவாதம் ஒழிக்கப்படவேண்டும்[6]. அதுமட்டுமல்லாது, எல்லாவிதமான தீவிரவாதங்களும் ஒழிக்கப்படவேண்டும்.

5. அரசியல் நிர்ணயச் சட்டத்தின் சரத்து 31 (Art.31), முக்கியமாக சிறுபான்மையினருக்கு அளிக்கப்பட்டுள்ள சலுகை நீக்கப்படவேண்டும். எல்லாமதங்களின் உரிமைகளும் மதிக்கப்படவேண்டும் (Art.14) என்பதைவிட, சிறுபான்மையினரின் உரிமைகள் பாதுகாக்கப்படவேண்டும் என்று மாற்றவேண்டும்.

6. கொடுக்கப்படும் மான்யங்கள் (Subsidies) அறவே ஒழிக்கப்படவேண்டும்.

7. சிறப்புத் திருமண சட்டத்தினைத் திருத்தி (Special marriage Act), பதிவு செய்தல் என்பது எல்லா மதங்களுக்கும் கட்டாயமாக்கவேண்டும்[7].

8. பொது இடங்களில் மதசம்பந்தமான அடையாளங்கள் / சின்னங்கள் வைப்பது நீக்கப்படவேண்டும். அவ்வாறே வழிபடும் இடங்கள் உள்ளதும் நீக்கப்படவேண்டும்.

9. ஸ்ரீலங்கத் தமிழர்களின் மனித உரிமை மீறல்களை கண்டிக்கிறது[8].

10. போலி-விஞ்ஞானம் ரீதியில் / மூலமாக பரப்பப்படும் மூடநம்பிக்கைகளை அரசு உரிய முறையில் தடுக்க ஆவன செய்யவேண்டும்.

நாயக்கின் விளக்கம் இந்து-விரொதமாகத்தான் இருந்தது: ஒவ்வொரு தீர்மானம் முன்மொழியும் போது, நரேந்திர நாயக் விளக்கங்கொடுத்து, இது தெரிந்த விஷயம்தான், இதை நிறைவேற்றுவதில் எந்தப் பிரச்சினையும் இருக்காது என்று நினைக்கிறேன் / இல்லை என்ற ரீதியில் பேசினார். மூடநம்பிக்கை பற்றி விவாதிக்கும் போது, செக்யூலரிஸ பாணியில், இந்து-எதிர்ப்பாக இருந்தது ஆச்சரியமான இருந்தது. “அயல்நாட்டிலிருந்து ஊக்குவிக்கப்படும் தீவிரவாதம் ஒழிக்கப்படவேண்டும்”, என்றப்பொது, சில குரல்கள் எழுந்தன, உடனே அவர், “எல்லாவிதமான தீவிரவாதங்களும் ஒழிக்கப்படவேண்டும்” என்று சேர்த்துக் கொள்கிறேன் என்றார். அரசியல் நிர்ணயச் சட்டத்தின் சரத்து 31 பற்றிய விவாதம் வந்தபோது “சரண்டர்” ஆகிய நிலைதான் ஏற்பட்டது[9]. “பொது இடங்களில் மதசம்பந்தமான அடையாளங்கள் / சின்னங்கள் வைப்பது நீக்கப்படவேண்டும். அவ்வாறே வழிபடும் இடங்கள் உள்ளதும் நீக்கப்படவேண்டும்”, என்று சமீபத்தை தீர்ப்பின்படி, தீமானத்தை கொண்டுவந்தாலும், முஸ்லிம்கள், கிருத்துவர்கள் செய்துவரும் ஆக்கிரமிப்பு முதலியவைப் பற்றி மூச்சுவிடவில்லை. தெருக்களில் உள்ள கோவில்கள் உடனே அகற்றப்படவேண்டும் என்றுதான் பேசினார்[10]. “ஈழத் தமிழர்களின் மனித உரிமை மீறல்களை கண்டிக்கிறது” என்பதற்கும் எதிர்ப்பு இருந்தது. நாயக் அதனை, ஸ்ரீலங்கத் தமிழர்களின் மனித உரிமை மீறல்களை கண்டிக்கிறது”, என்று மாற்றிவிட்டார்!

ஐந்தாவது தீர்மானத்திற்கு எதிர்ப்பு: தீர்மானங்களை கூட்டமைப்பின் தென் மண்டலச் செயலாளர் வா.நேரு முன்மொழிந்தார். கூட்டமைப்பின் பிற அமைப்பின் சார்பாக அளிக்கப்பட்ட சிறுபான்-மையினரின் சிறப்பு உரிமைகளை அரச-மைப்புச் சட்டத்திலி-ருந்து நீக்க வேண்டுகோள் விடுத்த – தீர்மான முன்-வரைவின் மீது பகுத்தறிவாளர் கழகப் பொதுச் செயலாளர் வீ.குமரேசன் தனது எதிர்ப்பினை பதிவு செய்தார்[11]. சிறுபான்-மையினருக்கான சிறப்பு உரிமைகள் இந்நாட்டில் ஆண்டாண்டு காலமாக ஆதிக்கம் செலுத்தி வரும் இந்துமத அமைப்புகளின் செயல்களுக்கு ஒரு பாதுகாப்பாக, சமத்துவத்தைப் பேண வழிகோலும் வேறுபாட்டு உரிமையாக, மனிதநேயத்தைப் பேணும் உரிமையாக உள்ள நிலைமையினை விளக்கி, அந்த சிறப்பு உரிமைகள் மேலும் மேலும் சீர்மைப்படுத்தப்பட்ட வேண்டியதன் அவசியத்தை விளக்கிப் பேசினார். இத்தகைய வலிந்து ஆதரிக்கும் நிலையில், மற்ற மதத்தினர்க்கு இந்த அமைப்பில் யாரும் இல்லை போலயிருக்கிறது.

முஸ்லிம்களே இல்லாத மாநாட்டில் முஸ்லிம்களுக்கு ஆதரவாக இருந்த நாத்திகர்கள்: நம்பிக்கையில்லாதவர், மூடநம்பிக்கை எதிர்ப்பவர், கடவுட்மறுப்பு சித்தாந்திகள், நாத்திகவாதிகள், பகுத்தறிவு வாதிகள் என்றேல்லாம் சொல்லிக் கொண்டு கூடியிருந்த கூட்டத்தில் ஒரு முஸ்லிமும் இல்லதது ஆச்சரியமாகவே இருந்தது. ஆனால், மேலே குறிப்பிட்ட ஐந்தாவது தீர்மானத்திற்லு கருப்புச் சாடைகள் எதிர்ப்பு தெரிவித்தன. சிறுபான்மை-யினர் உரிமையினை பாதிக்கும் அந்த தீர்மான முன்வரைவினை நீக்குவ-தற்கு பகுத்தறிவாளர் கழகம் எடுத்து வைத்த வாதங்களை பொதுக்குழு உணர்ந்து முன்வரைவு நிலையிலேயே அதற்கு முடிவு கட்டப்பட்டு அது நீக்கப்பட்டுவிட்டது.

நாத்திகர்களும், போலி-நாத்திகர்களும்: இந்தி பேசும் நாத்திகர்களைக் கண்டு, குறிப்பாகக் கேட்டு நமது கருப்புச் சட்டைகள் முழித்தது, அதிர்ந்தது முதலியன பார்ப்பதற்கு வேடிக்கையாக இருந்தது. இந்த 7வது ரேஸனலிஸ்ட் மாநாட்டிலேயே, போலி, சாதாரண மற்றும் பாரபட்சமுள்ள, குழப்பவாத, சந்தர்ப்பவாத நாத்திகர்களை மற்றும் நாத்திகவாதிகளைக் காணமுடிகிறது. அவர்களுக்குள் உள்ள முரண்பாடுகளும் வெளிப்படுகின்றன:

1. இந்து-விரோத நாத்திகம்: இந்தியாவில் இந்துக்கள் அதிகமாக இருப்பதால், இந்துமதத்தை எதிர்க்கிறோம் அன்றாலும், அத்தகைய வாதம், 100% நாத்திகமாக இல்லாமல், இந்து-விரோதமாகவே இருக்கிறது. வட-இந்தியாவில் எடுபடுவதில்லை என்று இந்த மாநாட்டிலேயே ஒப்புக்கொள்கிறர்கள்.

2. கிருத்துமத சார்புள்ள நாத்திகம்: தம்மை நாத்திகர்கள் என்று சொல்லிக் கொண்டாலும், கிருத்துவ அடிப்படை நம்பிக்கைகளைப் பற்றி விமர்சிக்க மாட்டார்கள் (பாவத்தின் சித்தாந்தம், ஆண் உறவு இல்லாமல் குழந்தை பிறப்பது, சிலுவையில் மரித்தது, உயிர்த்தெழுந்தது, ஆகாயத்தில் சென்றது……………….முதலியன), குறைகூற மாட்டார்கள். பொதுவான விஷயங்களை பேசி, உள்ள எல்லா சமூக-சீரழிவுகளுக்கும் இந்துமதம்தான் காரணம், ஆகையால் இந்துமதம் ஒழிக்கப் படவேண்டும் என்றும் பேசுவர்.

3. முஸ்லிம் மத சார்புள்ள நாத்திகம்: தம்மை நாத்திகர்கள் என்று சொல்லிக் கொண்டாலும், முஸ்லிம் மற்றும் இஸ்லாம் பற்றி மூச்சுக்கூட விடமாட்டர்கள். அடிப்படை நம்பிக்கைகளைப் பற்றி விமர்சிக்க மாட்டார்கள். பொதுவான விஷயங்களை பேசி, உள்ள எல்லா சமூக-சீரழிவுகளுக்கும் இந்துமதம்தான் காரணம், ஆகையால் இந்துமதம் ஒழிக்கப் படவேண்டும் என்றும் பேசுவர்[12].

4. தியானம், யோகா முதலியவற்றவை எதிர்க்கும் நாத்திகம்: சமீபத்தில் இத்தகையவற்றிற்கு மேலைநாடுகளில் அங்கீகாரம் கிடைத்ததாலும், அதன் பலனால், மக்கள் பலர் அவற்றைக் கடைப்பிடிப்பதாலும், தங்களுக்கு பாதிப்பு என்ற முறையில் எதிர்க்கின்றனர். வேடிக்கையென்னவென்றால், அதையே கிருத்துவர்கள், முஸ்லிம்கள் செய்தால் எதிர்க்கமாட்டார்கள். ஏனனில் அவர்களும் ஆஸ்ரமங்கள் வைத்துக் கொண்டு அப்பய்ற்ச்சிகளை மற்றவர்களுக்கு அளிக்கிறார்கள்[13].

5. சோதிடத்தையும், வானவியலையும் குழப்பும் நாத்திகம்: வேண்டுமென்றே சோதிடத்தையும் வானியலையும் குழப்பி, இந்திய வானியலை தூஷிப்பார்கள். விஷயம் இல்லையென்றால், இன்னென்ன தேதிகளில் சூரியகிரகணம், சந்திரகிரகணம், கோள்கள் ஒரே கோட்டில் வருவது முதலியன சோதிட-பஞ்சாங்களில் குறிப்பிடமுடியாது. வானியல் என்பது ஆண்டாண்டு காலமான நிகழ்வுகளை உன்னிப்பாக பல இடங்களில் பார்ப்பது, குறித்து வைப்பது, தொகுப்பது மற்றும் அதன் மூலம் அத்தகைய நிகழ்வுகள் ஏற்படும் என்று கூறுவது. 108 ஆண்டுகளுக்கு ஒருமுறை கங்கண கிரகணம் ஏற்படும், கோள்கள் ஒரே கிரமமாக வரும் முதலியன சோதிடம் ஆகாது, மூடநம்பிக்கையாகாது. பிறகெப்படி, பஞ்சாங்கள் அவற்றைக் குறிப்பிடுகின்றன?

6. நாத்திகத்தையும், பகுத்தறிவையும் குழப்பும் நாத்திகம்: இது “திராவிடம்” பேசும் “தமிழர்களிடம்” அதிகம் காணப்படுகிறது. அம்பேத்கரிஸம் முதலியன பேசுபவரிடமும் காணப்படும். நாத்திகம் என்பது கடவுட்தன்மையினை அறவோடு மறுப்பது. பகுத்தறிவு என்பது ஓரளவிற்கு மனித அறிவிற்கு புரிகிண்ர அளவில் ஏற்றுக்கொள்வது. இரண்டும் ஒன்றல்ல.

7. மூடநம்பிக்கையை எதிர்க்கும் நாத்திகம்: மேகங்கள் திரண்டு வந்தால் மழை பெய்யும் போன்றவையும் மூடநம்பிக்கைதான். ஏனெனில் மழை பெய்யலாம், பெய்யாமலும் இருக்கலாம்[14]. மழைகாலத்தில் மழை வரும், வெயில் காலத்தில் வெயில் வரும் என்பதெல்லாம் இப்பொழுது மாறிவிட்டன. இது பூகோளக் கோளாறு / பிறழ்ச்சி. அதிக விளைச்சல் இருந்தால் விலை முறைந்துவிடும் முதலியனவும் மூடநம்பிக்கைதான். ஏனெனில் பலநேரங்களில் அவ்வாறு விலை குறைவதில்லை. அரசு வரிவிகிதங்களைக் குறைக்கின்றது, சலுகைகளை அள்ளிவீசுகிறது, இருப்பினும் இப்பொழுது கட்டிடப் பொருட்கள் விலை 2003லிருந்து ஏறுமுகமாகவே உள்ளன[15]. இப்படி பல உதாரணங்களைக் குறிப்பிட்டுச் சொல்லலாம். பங்குச் சந்தையைப் பற்றி கேட்கவே வேண்டாம்!

8. செக்யூலரிஸ நாத்திகம்: இது இந்தியாவிற்கே உரித்தானது. இந்த மூடநம்பிக்கை இங்கிருந்து இப்பொழுது உலகம் முழுவதும் பரவி வருகிறது எனலாம்.

9. நவநாகரிக நாத்திகம்: அதாவது, பெண்கள் “பெண்கள் கிளப்பிற்கு போவது” என்ற ரீதியில் உள்ள நாத்திகர்கள்! பெயரளவில் நாத்திகர்கள் எனலாம். திக, திமுக, பாமக மற்றும் அம்பேத்கரிஸம் முதலிய கோஷ்டிகளில் அதிகமாகக் காணலாம். இவர்களைப் பொறுத்தவரைக்கும் அவர்கள் குடும்பத்தில் ஆண்கள் நாத்திகர், பெண்கள் ஆத்திகர்!

10. விஞ்ஞானம் பேசும் நாத்திகம்: ஓரளவிற்கு விஞ்ஞானம் பேசினாலும், ஒரு நிலையில் அதிலும் மூடநம்பிக்கை வந்துவிடும்[16]. இப்பொழுது மரபணு மற்றும் இனங்களைப் பற்றியும், மொழிகள் உண்டானது, நியாண்டர்தால் குரங்கு எப்படி பாடியது, பேசியது, ஆடியது போன்ற ஆராய்ச்சிகளினின்று அத்தகைய விஞ்ஞான-நாத்திகத்தை அறியலாம்[17].

© வேதபிரகாஷ்

16-01-2009


[1] வேதபிரகாஷ், அகில இந்திய பகுத்தறிவாளர் மாநாடு: நம்பிக்கையாளர்களுக்கு சவால், விவரங்களுக்கு இங்கு பார்க்கவும்:

https://dravidianatheism2.wordpress.com/2009/12/26/அகிலஇந்தியபகுத்தறிவாளர/

வேதபிரகாஷ், திராவிட பொய்களும், திரிபுகளும், பிரச்சாரங்களும், மேலும் விவரங்களுக்கு:

https://dravidianatheism2.wordpress.com/page/2/ மற்றும் https://dravidianatheism2.wordpress.com/page/3/

[2] மும்பையில் அத்தகைய வரைசட்டத்தை சட்டசபையில் கொண்டுவந்ததாகவும், ஆனால் மாநில அரசு தாமதப் படுத்துவதாகவும் நாயக் தெரிவித்தார்.

[3] கமிஷனின் அறிக்கைகளை, இந்திய அரசொயல்வாதிகள் என்றுமே மதிப்பதில்லை. மேலும் இந்த லிப்ரான் கமிஷன், முகுக்க-முழுக்க அரச்சியல் நோக்கம் கொண்டது என்பது அப்பட்டமாகத் தெரிவதால், சட்டரிதியில் யாரும் அதை பெரிதாகக் கொள்ளவில்லை. இரண்டு-மூன்று நாட்களில் ஊடகங்களேஅடங்கிவிட்டன.

[4] சிவப்பாக கிரீம், ஆண்கள் அழகாகக் கிரீம், முலைகளை பெரிதாக்க கிரீம் முதலியவற்றை எதிர்க்காதது ஆச்சரியமே!

[5] Smt. Sarla Mudgal, President, Kalyani and others vs. Union of India and other, AIR 1995 Supreme Court 1531 மற்றும் John Vallamattom v. Union of India AIR 2003 SC 2902.

திகவினர்-கருப்புச்சட்டைகள் இதனை எதிர்க்காதது ஆச்சரியமே. ஒருவேளை அதைப் பற்றி சரியாக தெரிந்து கொள்ளவில்லையா அல்லத் அவர்களது முஸ்லிம் நண்பர்கள் அதைப் பற்றி சொல்லவில்லையா அல்லது அத்தகைய தீர்மானம் வரும் என்பதை எதிர்பார்க்கவில்லையா?

http://vedaprakash.indiainteracts.in/2009/03/15/islam-goes-hi-tech-whether-it-is-terrorism-or-divorce/

Mohammad Ahmed Khan v. Shah Bano Begum – AIR 1985 SC 945 –  இதுதான் ராஜிவ் காந்தி சட்டத்தை வளைத்து, முஸ்லிம் அடிப்படைவாதிகளுக்குத் துணைப்போய், ஒரு புதிய சட்டத்தை முகமதியர்க்லளுக்க்ய்=உ ஏற்படுத்தியது.

John Vallamattom v. Union of India AIR 2003 SC 2902 – சரளா முத்கல் வழக்கு அடுத்து உச்சநீதிமன்றத்தில், மறுபடியும் அரசாங்கத்திற்கு ஒரு பொது சிவில் சட்டத்தை எடுத்துவரவேண்டிய அவசியத்தை உணர்த்தியுள்ளது. ஆனால், நமது செக்யூலரிஸ அரசியல்வாதிகள் அமைதி காக்கின்றனர். மற்ற நேரங்களில் நீதிமன்ற தீர்ப்புபடித்தான் நடப்பொம் என்று முழக்கமிடும் வீரர்கள் இப்பொழுது ஊமையாகிவிடுகிண்ரனர். இதுதான் இந்தியாவில் சட்டத்தை, உச்சநீதிமன்றத் தீர்ப்புகளை மத்திக்கும் லட்சணம்!

இதை “சட்ட / நீதி நாத்திகம்” என்று கூட கூறலாம்!

[6] அயல்நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படுவது என்ன என்பது நாத்திகர்கள் பகுத்தறிவுவாதிகளுக்குத் தெரிந்திருப்பது சந்தோஷமான விஷயம்தான்.

[7] தமிழ்நாட்டில் அத்தகைய சட்டம் எடுத்து வந்துள்ளபோது, முஸ்லிம்கள் எதிர்த்துள்ளதை கருத்தில் கொள்ளவேண்டும்.

[8] திகவினர்-கருப்புச்சட்டைகள் இந்த விஷயத்தைக் கண்டுகொள்ளவே இல்லை. தமிழர்களுக்கு போராடுவோம், உயிர்விடுவோம் என்று பேசும் இவர்கள் அமைதியாக இருந்தனர். “ஈழம்” என்ற வார்த்தைக்கு வடமாநிலத்தவர் எதிர்ப்புத் தெரிவித்து அதை “ஸ்ரீலங்கா” என்று மாற்றியபோதும் கண்டுகொள்ளவில்லை.

[9] அவருக்குப் பிடிக்கவில்லை என்பது, அவர்முகபாவம் காட்டியது. இருப்பினும் நன்பர்களின் அழுத்ததால், சமரசம் செய்துகொண்டார் எனலாம்.

[10] மசூதி கட்ட நிலங்களை ஆக்கரமிப்பு செய்கின்றனர். பிறகு பட்டா வாங்கி சரிசெய்து கொள்கின்றனர். கிருத்துவர்களும் அதே வேலைத்தான் செய்து வருகின்றனர். அவர்கள் முதலில் சிலுவையை நட்டுவிடுவார்கள். பிறகு அதனைச் சுற்றி மேடைக் கட்ட்வார்கள். வரம் வாரம் தொழுகிறேன் என்று கூட்டம் கூட்டுவார்கள். பிறகு சுவர்கள், கூரை என வரும்………….அந்த இடத்தையே ஆக்கரமித்துவிடுவார்கள்.

[11] http://viduthalai.periyar.org.in/20091231/news19.html

[12] இப்பொழுது சிதம்பரத்தையும் இதில் சேர்த்துக் கொள்ளலாம். உள்துறை அமைச்சர் ஸ்தானத்தில் இருந்து கொண்டு, ஜிஹாத் சொல்லி பல குண்டுவெடிப்புகளை மேற்கொண்டு, அப்பாவி மக்களைக் கொன்று குவித்தபிறகும், ஜிஹாத் இல்லை என்று பேசும் போக்கு!

[13] இதைப் பற்றி தனியாகவே எழுதலாம். கேரளத்தில் மட்டுமல்லாது, இந்தியா முழுவதிலும் இப்பொழுது முஸ்லிம் சோதிடர்கள் அதிகமாகக் கிளம்பிவிட்டர்கள்! அரசு பேருந்துகளில் வேறு விளம்பரம் செய்து கொள்கிறார்கள்!

[14] சன், கலைஞர் டிவிகளில் ரமணர் உதிக்கும் முத்துகளைக் கேட்டு முடிவு செய்து கொள்ளலாம்.

[15] இரும்பைப் பொருத்த வரைக்கும் உற்பத்தியாளர்கள், ஆட்சியாளர்கள், அதிகாரிகள் முதலியோர் சேந்து கொள்ளையடிக்கின்றனர். பல அரசியல்வாதிகளே அத்தகைய இரும்பு தொழிற்சாலைகள் வைத்துக் கொண்டு கொள்ளையடிக்கிறார்கள்.

[16] சிவப்பாக கிரீம், ஆண்கள் அழகாகக் கிரீம், முலைகளை பெரிதாக்க கிரீம் முதலியவற்றை எதிர்க்காதது ஆச்சரியமே!

[17] மேனாட்டு விஞ்ஞானிகளிடன் இது அதிகமாகக் காணப்படுகிறது. விஞ்ஞான ரீதியில் ஆராய்ச்சி செய்தாலும், ஒரு நேரத்தில் தமது கிருத்துவமத அடிப்படைவாத்தில் மூழ்கி வேறுவிதமான விளக்கங்கள் கொடுப்பர், அதாவது பைபிளுக்கு எதிராக போகாமல், விளக்கம் கொடுப்பர்!

அசட்டு அஹமதுவும், கருவும் கருணாநிதியும்!

திசெம்பர் 24, 2009
அசட்டு அஹமதுவும், கருவும் கருணாநிதியும்!

செக்யூலரிஸம் பேசியோ, இஸ்லாம் பேசியோ விளக்கேற்ற மறுத்தது செக்யூலரிஸ நாட்டின் அமைச்சர் அஹமது!

அவர் மறந்தது தான் எல்லா இந்தியர்களுக்கும் இந்திய நிர்ணயச் சட்டத்தின் படி அமைச்சர் என்பதை!

அங்குதான் அவரது அசட்டுத்தனம் வெளிப்பட்டது!

செக்யூலரிஸத்தை மதிக்கும் / மித்திக்கும் போக்கையும் இந்தியர்கள் அடையாளம் கண்டு கொண்டனர்.

இந்த கருவைப் பற்றிப் பேசவே வேண்டாம்.

வயசானாலும், செக்யூலரிஸ விசயத்தில் பத்து அஹமதுக்களையும் மேலேயுள்ள நிலையில் உள்ளவர்.

அதில் ISO 9001, 10009 என்றெல்லாம் கொடுத்தாலும் தகும்!

அவர் சொல்கிறார், “ரயில் இன்ஜின் மத்திய அரசு என்று வைத்துக் கொண்டால், அதில் இணைக்கப்பட்டிருக்கும் பெட்டிகள் மாநில அரசுகள் மாதிரி. சில பெட்டிகளில் கோளாறு ஏற்பட்டுள்ளது“, என்றெல்லாம்!

இங்கு வரிசையாக நின்றுகொண்டு பச்சைக் கொடிகள் ஏந்தியுள்ளனர்?

ஏன் சிவப்புக் கொடிகள் கூடாது?

கொடிகளைக் கவிழ்த்து ஆட்டுகிறார்களே?

ஏன் தூக்கி ஆட்டக்கூடாது?

இன்று இப்படியெல்லாம் பேசும் தேசியம், இன்றும் அப்படி-இப்படி மாநில சுய ஆட்சி என்ற பிரிவினையும் பேசுகிறதே, ஏன்?

இத்தனை ஆண்டுகள் இந்தியாவில் வாழ்ந்தாலும், இந்தியாவைப் பற்றி தெரிந்தும் தெரியாமல் இருக்கின்றனறே, அம்மாதிரி நடிக்க்கின்றனறே, அதுவும் இந்த பழுத்த, முதிர்ந்த, பக்குவப்பட்ட நிலையில் அவ்வ்வாறு பேசுகின்றனறே, அதை என்னவென்பது?

மாநில அரசுகள் போன்றது ரயில் பெட்டிகள் : முதல்வர் கருணாநிதி பேச்சு
டிசம்பர் 23,2009,00:00  IST

http://www.dinamalar.com/fpnnewsdetail.asp?news_id=6030&ncat=&archive=1&showfrom=12/23/2009

Front page news and headlines todayசென்னை : “மாநில அரசுகள் போன்றது ரயில் பெட்டிகள். தமிழகத்தில் ரயில்வே திட்டங்களுக்கு போதிய நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். மேலும் பல புதிய ரயில்களும் இயக்க வேண்டும் ,’ என்று முதல்வர் கருணாநிதி மத்திய அரசை கேட்டுக் கொண்டார்.

சென்னை சென்ட்ரல் – மங்களூர் இடையே, வாரத்தில் மூன்று நாட்கள் இயக்கப்பட்டு வந்த மங்களூர் எக்ஸ்பிரஸ், வாரத்தில் ஆறு நாட்களுக்கும், ஜம்முதாவி – மதுரை இடையே வாரம் இருமுறை இயக்கப்பட்டு வந்த ஜம்முதாவி – மதுரை எக்ஸ்பிரஸ் திருநெல்வேலி வரை நீட்டிக்கப்பட்டும், திருநெல்வேலி – பிலாஸ்பூர் இடையே வாராந்திர ரயிலும், கன்னியாகுமரி – ராமேஸ்வரம் இடையே, வாரத்தில் மூன்று நாட்கள் அதிவேக விரைவு ரயில்களும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நடந்த விழாவில் கலந்து கொண்டு, இந்த ரயில்களை வீடியோ கான்பரன்சிங் மூலம் துவக்கி வைத்து முதல்வர் கருணாநிதி பேசியதாவது: இன்னும் பல ஊர்களுக்கு ரயில் போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்தி தருவதற்கு, புதிய ரயில்களை, பாதைகளை அமைத்து தரவேண்டும். ரயில் இன்ஜின் மத்திய அரசு என்று வைத்துக் கொண்டால், அதில் இணைக்கப்பட்டிருக்கும் பெட்டிகள் மாநில அரசுகள் மாதிரி. சில பெட்டிகளில் கோளாறு ஏற்பட்டுள்ளது. பெட்டிகள் கழண்டு போய்விடாமலும், பிரிந்து போய்விடாமலும் ஒற்றுமைப்படுத்தி இலகுவாக இழுத்துச் செல்ல வேண்டும். இல்லாவிட்டால் தேசிய நிலை இல்லாமல் போய்விடும். எனது சொந்த ஊரான திருக்குவளைக்கு, புதிய ரயில் பாதை அமைக்க திட்டம் உள்ளது. இதை, மத்திய ரயில்வே இணை அமைச்சர் அகமது விரைவாக செயல்படுத்த வேண்டும், என்றார்.

மதுரை: ஜம்முதாவி – நெல்லை வரை நீட்டிக்கப்பட்ட ரயிலை , மதுரையிலிருந்து தெற்கு ரயில்வே கோட்ட மேலாளர் அனில்சிங்கால் கொடி அசைத்து துவக்கி வைத்தார். இன்ஜினியர் தங்கராஜ், முதுநிலை தொழில்நுட்ப அலுவலர் அப்துல்கபர் பங்கேற்றனர். ஜம்முதாவி-திருநெல்வேலி எக்ஸ்பிரஸ் ரயில் (6788) ஞாயிறு மற்றும் வியாழக்கிழமைகளில் மதுரைக்கு பகல் 2.50 மணிக்கு வந்து சேரும். பகல் 3 மணிக்கு புறப்பட்டு மாலை 6.20 க்கு திருநெல்வேலி சென்று அடையும். திருநெல்வேலி- ஜம்முதாவி எக்ஸ்பிரஸ் ரயில் (6787) திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் திருநெல்வேலியிலிருந்து பகல் 3.45 க்கு புறப்பட்டு, மதுரைக்கு இரவு 7க்கு வந்து சேரும். இரவு 7.15 க்கு புறப்படும். இவை விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, வாஞ்சி மணியாச்சியில் நின்று செல்லும். ஜம்மு தாவியில் நாளை, திருநெல்வேலியில் டிச.,25 லிருந்து முறைப்படி இயக்கப்படும்.

நெல்லை: திருநெல் வேலி – பிலாஸ்பூர் ரயில் துவக்க விழா நெல்லை ரயில்வே ஸ்டேஷனில் நடந்தது. நெல்லை எம்.பி.,ராமசுப்பு, மதுரை மண்டல மூத்த வணிக அதிகாரி ஹோசியார்சந்த், மண்டல இன்ஜினியர் ராம்கிஷோர், நெல்லை நிலைய அதிகாரி கல்யாணி ஆகியோர் பங்கேற்றனர்.

இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டில் சபாபதி மோகனின் இந்து விரோத பேச்சு!

திசெம்பர் 15, 2009

இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடும், சபாபதி  மோகனின் இந்து விரோத பேச்சும்!

இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநில மாநாடு: இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநில மாநாடு சோழிங்க நல்லூரில் உள்ள முகமது சதக் கலை அறிவியல் கல்லூரியில் 13-12-2009 ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணிக்கு தொடங்கியது. இஸ்லாத்தின் பல பரிமாணங்கள் ஆய்வுக் கட்டுரைகள் மூலம் விவாதிக்கப் பட்டது. அவை அடங்கிய – 89 ஆய்வுக் கட்டுரைகள் – ஆய்வுத் தொகுப்பும் வெளியிடப் பட்டது.

இந்துவிரோத பேச்சு: அதில் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தர் சபாபதி மோகன் பேசிய பேச்சு இந்து விரோதமாக இருந்தது கண்டு சிலர் வியந்தனர். தான் ஒரு நாத்திகன் என்று சொல்லிக் கொண்டு அவர் பேசியவிதம் சரியாகயில்லை. வேடிக்கை என்னவென்றால் அத்தகைய நாத்திகம் பேசுபவர்கள் எப்படி முஸ்லீம்களுடன் ஒத்துப் போகின்றார்கள் என்பதுதான்? அத்தகைய முரண்பாடுகளைக் கவனிப்பவர்கள் நிச்சயமாகப் புரிந்து கொள்வார்கள், அத்தகைய நாத்திகவாதிகள் இந்து-விரோதிகளாக இருப்பதனால் தான் முஸ்லீம்கள் அவர்களை தங்களது மேடைகளில் இடம் கொடுத்துப் பாராட்டுகின்றனர். கிருத்துவர்களின் போக்கும் இதுமாதிரியே உள்ளது.

லுங்கி கட்டிய முஸ்லீம், சிலுவை போட்ட கிருத்துவன்: தனது தலைவர்கள் லுங்கி கட்டிய முஸ்லீமாக, சிலுவை போட்ட கிருத்துவனாக இருந்தனர் என்று சொல்லி இந்துக்களைத் தாக்கிப் பேசுவது பண்பற்ற முறையாகத் தோன்றியது. பிறகு எதற்கு “இந்து” என்று பல விண்ணப்பங்களில், ஆவணங்களில் தங்களைப் பதிவு செய்து கொள்ளவேண்டும்? இத்தகைய போலி நாத்திகர்கள் கோடிக்கணக்காக உள்ள இந்துக்களின் நம்பிக்கையை எடைபோடவும் தகுதியில்லை, விமர்சனிக்கவும் யோக்கியதை இல்லை.

இந்துக்களின் மூடநம்பிக்கை மற்றும் தீவிரவாதம்: திராவிட நாத்திகம் தமிழகத்தில் இருப்பதனால்தான் இந்துக்கள் இங்கு ஒன்றும் செய்யமுடியவில்லை. அப்படி அவர்கள் யாதாவது செய்தால், திராவிட சம்மட்டி அவர்களை அடக்கிவிடும், இந்துக்கள் ஏதோ மூடநம்பிக்கை உள்ளவர்கள் போலவும், அவர்களது தீவிரவாதம் அடக்கப்படவேண்டுமானால், அத்தகைய இஸ்லாமிய மாநாடுகள் எல்லா நகரங்களிலும் நடத்தப் படவேண்டும் என்றெல்லாம் பேசியது வியப்பாக இருந்தது.

“மதத்தால் முஸ்லீம், மொழியால் தமிழன்” என்றால் தமிழர்களில் இந்துக்கள் இல்லையா, அல்லது இந்துக்கள் தமிழர்களாக இல்லையா?: இவ்வாறு முஸ்லீம்கள் பேசி பெருமைக் கொள்ளும்போது, இவர்கள் மட்டும் எப்படி, நாங்கள் நாத்திகர்கள், தமிழர்கள் என்று கூறிக் கொள்ளமுடியும்? மதத்தால் இந்துக்கள், மொழியால் இந்துக்கள் என்றுள்ளவர்கள் என்ன இத்தகைய கூட்டாளிகளைவிட தாழ்ந்தவர்களா? யாரை ஏமாற்ற இத்தகைய வாசகங்கள்? இந்துக்கள் தமிழராக அல்லது தமிழர் இந்துக்களாக இருக்கமுடியாது என்று இப்படி மறைமுகமாக உணர்த்த இவர்களுக்கு என்ன யோக்கியதை இருக்கிறது? இப்படி பேசுவதற்கு ஒரு பல்கலைகழகத்திற்கு துணைவேந்தர் என்றிருக்கும் இவருக்கு வெட்கமாக இல்லை? ஏன் அவர் பல்கலையில் படிக்கும் மாணவர்கள் என்ன நினைப்பார்கள்?

உயர்ந்தவர் / தாழ்ந்தவர்: தேவையில்லாமல், இந்துக்கள் நடத்தும் விழாக்களில் அவர் கீழே உட்காரவேண்டும், ஆனால் இங்கு மற்றவர்களுடன் மேடையில் உட்கார சந்தர்ப்பம் கிடைத்தது என்று பேசியதில் பொருளே இல்லை. மேலே மேடையில் அன்று உட்கார்ந்திருந்தவர் எல்லோரும் பெரியவர்கள் / உயர்ந்தவர் இல்லை. கீழே பிளாஸ்டிக் நாற்காலிகளில் உட்கார்ந்திருந்தவர் எல்லோரும் சிறியவர் / தாழ்ந்தவர் இல்லை. சந்தர்ப்பம் கிடைத்ததால், மேடையில் உட்கார்ந்திருக்கின்றனர்!

பேசியதையே திரும்ப பேசுதல்: பேச்சின் முடிவில் 90 மலர்களின் பெயரைச் சொல்லி வாழ்த்தியதும் செயற்கையாக இருந்தது, ஏனெனில், அவர் எல்லா இடங்களிலும் அவ்வாறே பேசுவது சிலருக்குத் தான் தெரியும். அப்படியே “டப்பா அடுத்து வைத்ததினால்” அவ்வாறு கூறுகிறார்! உதாரணத்திற்கு, பாரதியார் பல்கலையில் அண்ணாதுரை நூற்றாண்டு நிறைவு விழா 07-10-2009 அன்று நடந்தபோது, அவ்விழாவில் 90 விதமான மலர்களின் பெயரை கூறி மாணவர்களை சபாபதி மோகன் வாழ்த்தினார்! இங்கும்  இன்று 13-12-2009, அதே பாட்டு பாடி பேச்சை முடித்துக் கொண்டார்!

யார் இந்த நபர்? “நான் உங்களில் (திமுக) ஒருவனாக இருப்பேன்” : சபாபதி மோகன் பேச்சு, பரபரப்பு (10-05-2008): பாளையங்கோட்டையில் திருநெல்வேலி மாவட்ட திமுக அவைத் தலைவர் சுப. சீதாராமன் எழுதிய “அதியமான் நெஞ்சமும் -அன்புத் தலைவர் உள்ளமும்’ நூல் வெளியீட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது.மாநில உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க. ஸ்டாலின் நூலை வெளியிட்டார். விழாவில் சட்டப் பேரவைத் தலைவர் இரா. ஆவுடையப்பன் உள்ளிட்ட திமுகவைச் சேர்ந்த மத்திய, மாநில அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், உள்ளாட்சி அமைப்புகளின் தலைவர்கள் ஏராளமான பேர் கலந்து கொண்டனர்.

திமுக கொடுத்த பதவி: வெளியீட்டு விழாவில், திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சபாபதி மோகன் கலந்து கொண்டு பேசினார். “ இந்த விழாவில் நான் கலந்து கொண்டதன் மூலம் என்றும் உங்களோடுதான் இருப்பேன் என்று கூறிக் கொள்கிறேன். கறுப்புசிவப்பு கரை வேட்டி கட்டியவனாக இல்லாவிட்டாலும் உங்களில் ஒருவனாக இருப்பேன்….இங்கு நான் துணைவேந்தராக பொறுப்பேற்ற பிறகு எனக்கு வீடு பார்ப்பது முதல் எல்லா பணிகளையும் கட்சி நிர்வாகிகள் செய்து வருகின்றனர். தலைவர் உள்ளம் எப்படிப்பட்டது என்பதற்கு நான் உட்கார்ந்திருக்கும் நாற்காலியை பார்த்தாலே தெரியும். அது எத்தனை பெரிய நாற்காலி என்பது எல்லோருக்கும் தெரியும். எனக்கு அந்த வாய்ப்பைத் தந்த தலைவரை வணங்குகிறேன்”.
அப்பதவியே சர்சைக்குரியது: சபாபதி மோகனுக்கு திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தர் பதவி கொடுத்ததற்கு பல சர்ச்சைகள் எழுந்த நிலையில் இந்த பேச்சு குறிப்பிடத்தக்கது. கட்சிமாறிகளுக்குப் பதவி கிடைத்ததால், விசுவாசம் பொங்க பேசி தனது பதவியைத் தக்கவைக்க வேலை செய்து வருகிறார். அதனால் கீழ்கண்டவாறு கருணாநிதி புராணம் பாடுகிறார்!

.ம.தி.மு.க.,வில் இருந்து தி.மு.க.,வுக்குத் தாவி பின்னர், நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை துணைவேந்தரான சபாபதி மோகன் பேச்சு: “தனது 14ம் வயதில் இந்தி எதிர்ப்பு போராட்டம், 16ம் வயதில் தமிழ் மாணவர்கள் சங்கம், 17ம் வயதில் அன்பழகனை அழைத்து சங்கம் சார்பில் மாநாடு, 29ம் வயதில் கல்லக்குடி ரயில் மறியல். மேலும், பல போராட்டங்களிலும் கருணாநிதி பங்கு பெற்றார். கடந்த 1958ம் ஆண்டில் சட்டசபையில் சேது சமுத்திரத் திட்டம் பற்றி பேசினார். 50 ஆண்டுகளுக்கு முன்னர் தனது பாட்டு மூலம் நதிகளை இணைத்தார்; தற்போது தனது 84ம் வயதில் நாட்டு நதிகளை இணைப்பது பற்றி பேசிக்கொண்டிருக்கிறார்”, என்றேல்லாம் பேசுகிறார்!

இந்துக்களுக்கு அடையாளம் இல்லையா? லுங்கி கட்டியவன் முஸ்லீம், சிலுவை போட்டவன் கிருத்துவன் என்றால் இந்து யார்? அவனது அடையாளம் என்ன என்பதுதானே கேட்கப்படுககறது? அதனால்தானே நெற்றியில் குங்குமம், விபூதி, திருமண், பொட்டு என வைத்தால் கேலியும் கிண்டலும் பேசப்படுகிறது? அதற்காகத் தானே கருணாநிதி தமது தொண்டர்களயும் பெயர்சொல்லி என்ன நெற்றியில் ரத்தமா என்று நக்கலாகக் கேட்கிறார்? அதுவே குல்லா போட்டு கஞ்சிக் குடிக்கும்போது அத்தகைய நக்கலும், கிண்டலும், கேலியும் வருவதில்லையே? வந்தாலும் அது இந்துக்களுக்கு எதிராகத் தானேத் திரும்புகின்றன?.

சமய நல்லிணக்க உணர்வு: “இம்மாநாடுகளால் சமய நல்லுணர்வு மலர்ந்திருக்கிறது”, என்று கூறுகிறார்கள்! எப்படி, இங்கு “சமயம்” என்றால் “சந்தர்ப்பம்” என்று பொருள் கொண்டு, இவ்வாறு முஸ்லிம்கள் மற்றும் இந்து-விரோதி திராவிட நாத்திகர்களின் “கூட்டு சமய” உணர்வு, பனப்பாங்கு, அவ்வாறானப் பேச்சுகள் நன்றாக மலர்ந்திருக்கிறது என்கிறார்களா? ஆகவே முஸ்லிம்கள் எந்த சமய, யாருடைய சமய நல்லுணர்வு மலரச் செய்கிறர்ர்கள் என்பதனைத் தெளீவு படுத்த வேண்டும்.

இலக்கியத்தால் மட்டுமே இதயங்களை இணைக்க முடியும்: இத்தகைய இந்து-விரோத பேச்சுகளால் எப்படி இதயங்களை இணைக்கப் போகிறர்கள்? திராவிட நாத்திகம் எப்படி இதற்கு உடன் போகும்? இப்பொழுது கூட இஸ்லாம் இல்லாத இலக்கியத்தை வெறுத்து, தூஷிக்கிறதே? அதாவது குறிப்பாக இந்து இலக்கியங்களை அவமதிப்புச் செய்கிறதே? பிறகென்ன இணக்கம்? புதிய முழக்கம்?

முஸ்லீம்களின் கவனத்திற்கு: ஏற்கெனவே ரம்ஜான் கஞ்சி விழாக்களை அரசியலாக்கி, இந்து விரோத விழாக்களாக மாற்றி உள்ளது அனைவரும் அறிவர். இந்துக்களுக்கும் அத்தகைய உண்ணாநோன்புகள் உண்டு ஆனால், அவர்கள் அப்பெயரில் நிறைய பட்சணங்கள் செய்து சாப்பிடுவர், ஆனால் முஸ்லீம்கள்தான் உண்மையாக 40 நாட்களும் உண்ணாநோன்பு கடைப் பிடிக்கின்றர் என்றெல்லாம் குல்லாப் போட்டுக் கொண்டு கஞ்சி குடித்துக் கொண்டே கருணாநிதி கேலி பேசியது அனைவருக்கும் ஞபகம் இருக்கிறது. இன்றைய வருடம் அந்த கேகிக்கூத்தை பேராசிரியர் என்று சொல்லிக் கொள்ளும் அன்பழகன் செய்தார்!

இதுப்போலத்தான், இந்த சபாபதி மோகனின் பேச்சு. ரம்ஜான் கஞ்சி குடிக்கும் விழாக்கள் மாதிரி இப்படி எல்லா முஸ்லிம் மேடைகளையும் “நான் நாத்திகன்” என்று சொல்லிக் கொண்டு இந்துக்களை விமர்சனிக்க தொடர்ந்து உபயோகிக்கப் பட்டால், பிறகு இதில் முஸ்லிம்களுக்கும் அத்தகைய நாத்திகர்களுக்கும் தொடர்பு உள்ளது மற்றும் அவர்கள் திட்டமிட்டே அவ்வாறான பேச்சுகளைப் பேசுகிறார்கள் என்று கொள்ளவேண்டியதாக உள்ளது.

நிச்சயமாக இப்போக்கு முஸ்லீம்களின் இந்து-விரோத மனப்பாங்கைத் தான் காட்டுகிறது. இப்படி வெறுப்பை, காழ்ப்பை, பகைமையை வளர்ப்பது நல்லதா என்று அவர்கள் சிந்தித்துப் பார்க்கவேண்டும்.