மோடி-பிஜேபி வேறு, வாஜ்பேயி-பிஜேபி வேறு – ராஜா-கனிமொழியை சிறைவைத்த காங்கிரஸ் – இக்கட்சிளுடன் திமுக கூட்டு கிடையாது – கருணாநிதி திமுகவினரிடம் கெஞ்சலாக அறிவிப்பு (2)!
திமுகவினரின் கருத்தைத் தொகுத்து, அதே நேரத்தில் தீர்ப்பளிக்கும் முறையில் கருணாநிதி பேசியது கவனிக்க வேண்டிய விசயமாக இருக்கிறது. காங்கிரஸைக் கடுமையாகத் தாக்கியிருக்கிறார்கள்[1], ஆனால், பிஜேபியுடன் கூட்டு வைத்துக் கொண்டால் நல்லது என்றும் பேசியிருக்கிறர்கள். தினகரன் அவரது பேச்சை வெளியிட்டுள்ளது[2]. பொதுவாக நக்கீரன் அம்மாதிரி வெளியிடும், ஆனால், இப்பொழுது சுருக்கத்தை வெளியிட்டுள்ளது[3]. கருணாநிதி செய்தியாளர்களிடம் வழக்கம் போல பதில் சொல்லி சமாளித்திருக்கிறார்[4]. பிஜேபியும் இல்லை, காங்கிரஸும் இல்லை எனும் போது, வேறு யாடுடன் கூட்டு என்பது விந்தையாக இருக்கிறது[5]. ஆங்கில ஊடகங்கள் மட்டும் திட்டவட்டமாக பிஜேபி அல்லது காங்கிரஸ் கூட, கூட்டு இல்லை என்று தெரிவித்திருப்பது நோக்கத்தக்கது[6]. இதனை நேற்று இரவே (15-12-2013) ஆங்கில ஊடகங்கள் வெளியிட்டு விட்டன.
ஒரு இயக்கத்தையே, ஒரு பெரிய ஊழல் சாம்ராஜ்யத்தில் சிக்கவைக்கும் முயற்சியில் ஈடுபட்டவர்கள் யார்யார் என்று எனக்கு இன்னமும் நன்றாகத் தெரியும்: “நீங்கள் இந்தப் பொதுக்குழு தீர்மானங்கள் மூலமாக அனுமதித்திருக்கின்ற அந்தக் குழுவிலே இடம் பெறுகிறவர்கள், அந்தக் குழு யாரிடத்திலே தன்னுடைய முடிவினைத் தெரிவிக்க விரும்புகிறதோ, அந்த முடிவைப் பற்றி யோசித்து, இறுதி முடிவு எடுக்க வேண்டிய இடத்திலே இருக்கின்ற நானும், அன்பழகனும், ஸ்டாலினும் அத்தனை பேரும் இவைகளை எல்லாம் மறந்து விட மாட்டோம். மறந்து விட்டு ஏமாந்து விடாதீர்கள்
என்று நீங்கள் சொன்னால், நான் உங்களுக்குச் சொல்கிற பதில், ஒரு முறை பட்டது போதும், தனிப்பட்ட ஒரு காயத்திற்காக நாங்கள் அழவில்லை. தனிப்பட்ட முறையில் எனக்கு ஏற்பட்ட காயம் அல்லது ராஜாவிற்கு ஏற்பட்ட காயத்திற்காக நாங்கள் வருத்தப்படவில்லை. அவைகளை நாங்கள் சமாளிக்க முடியும். ஆனால் ஒரு இயக்கத்தையே, ஒரு பெரிய ஊழல் சாம்ராஜ்யத்தில் சிக்க வைக்கும் முயற்சியில் ஈடுபட்டவர்கள் யார் யார் என்று எனக்கு இன்னமும் நன்றாகத் தெரியும். | திமுகவை ஊழலில் சிக்க வைத்தவர்களில் காங்கிரசில் குறிப்பாக உள்ளார்கள் என்றால், அந்த கூட்டாளிகளை, திமுக வெளிப்படுத்தலாமே? அந்த பிஜேபி வேறு, இந்த பிஜேபி வேறு எனும் போது, அந்த காங்கிரஸ்காரர்கள் வேறு, இந்த காங்கிரஸ்காரர்கள் வேறு, என்று இனம் கான வைக்கலாமே? ஏன் அவர்களை மறைத்து சாட வேண்டும்? துரோகிகளின் முகமூடிகளை கிழித்து எறியலாமே? இதுதானே தகுந்த சந்தர்ப்பம்? |
அதையெல்லாம் மறந்து விட்டு எப்படி அவர்களை நாங்கள் காப்பாற்றியிருக்கிறோம் என்பது காப்பாற்றப்பட்டவர்களுக்குத் தெரியும்.
இந்திய மீனவர்களைக் கூட பாதுகாக்க முடியாத நிலையிலே இருக்கிறோம்: “இதையெல்லாம் விட முக்கியமாக இலங்கைத் தமிழர் பிரச்சினையில் இன்றைய மத்திய காங்கிரஸ் அரசால் நாங்கள் எந்த அளவிற்கு ஏமாற்றப்பட்டோம் என்பதும், தொடர்ந்து தாக்கப்படுகின்ற இந்திய மீனவர்களைக் கூட பாதுகாக்க முடியாத நிலையிலே இருக்கிறோம் என்பதும் மறந்து விடக் கூடிய ஒன்றா என்ன? ஆகவே, உங்களுக்கு சொல்லிக் கொள்கிறேன். இவைகளை எல்லாம் மறந்து விட்டு நாங்கள் மீண்டும் காங்கிரசுடன் சேருவோம் என்று தயவுசெய்து நீங்கள் எண்ண வேண்டாம்[7].
இரண்டு கட்சிகள் விடப்பட்டு விட்டன – தனித்து நிற்போம்: “நம்மோடு அணி சேர எந்தக் கட்சியும் விரும்பாவிட்டாலும் கூட, நாம் அதற்காகக் கவலைப்படப் போவதில்லை. 75 இலட்சம் பேர் கட்சி உறுப்பினர்களாக இருக்கிறார்கள். அந்த 75 லட்சம் பேரும், அவருடைய வீட்டார், குடும்பத்தார், உற்றார் உறவினர்களை எல்லாம் சேர்த்துப் பார்த்தால் அந்த எண்ணிக்கை கோடிக்கணக்கில் வரும். அவைகளை எல்லாம் நாங்கள்
கணக்குப் பார்த்து, யாரும் அணி சேர வரா விட்டாலும் கூட, தனியாக நிற்போம். வந்தால், வந்தவரையிலே இலாபம் என்று வட்டிக் கணக்குப் பார்க்காமல், அவர்களுடைய தோழமை உணர்வுக்கு, எங்களோடு இருந்தால் நாட்டுக்கு நன்மை என்று கருதுகிறார்களே, அந்த நம்பிக்கைக்கு நாங்கள் தருகின்ற மதிப்பாக, அணி சேருவோம். ஆனால் யாரோடு அணி சேர்ந்தாலும், யாரோடு என்பதிலும் இரண்டு பேரும் இரண்டு கட்சிகள் நான் பேசும்போதே விடப்பட்டு விட்டன என்பதை நீங்கள் தெரிந்து கொண்டிருக்கிறீர்கள். | மிச்சம் இருக்கும் பெரியக் கட்சியான அதிமுகவுடன் கூட்டு என்பது பெரிய ஜோக்காகி விடும். அதேபோல, அதிமுக–கூட்டணியில் உள்ள கட்சிகளுடன் கூட்டு வைத்துக் கொள்ள முடியாது. பிறகு தமிழகத்தில் யாருடன் திமுக கூட்டு வைத்துக் கொள்ள முடியும்? இனி உதிரிப்பூக்களை வைத்துக் கொண்டு மாலைக் கட்டினால், அதில் வாசம் வருமா அல்லது மாலைதான் முழுமையடையுமா? |
அப்படிச் சேரும்போது, கட்சிகளோடு அணி சேருவது பற்றி அல்ல. தனித்து நிற்போம் என்று நான் சொன்னேன்”, இவ்வாறு கருணாநிதி பேசினார்[8].
‘கட்சியை விலை பேசி விடாதீர்கள்’: பொதுக்குழுவில் கருணாநிதி பேசியதாவது: “நாம் தனித்து நின்றாலும் கூட, ஓரிரு கட்சிகளின் துணையோடு மாத்திரம் தான் நிற்க முடியும் என்றாலும் கூட, நீங்கள் தான் வேட்பாளர்களாக அறிவிக்கப்படுவீர்கள். அப்படி அறிவிக்கப்பட்ட வேட்பாளர்கள், அந்த வேட்பாளருக்கு ஆதரவாக இருக்கின்ற தொண்டர்கள், தனி அணி அமைத்து விடக் கூடாது. அணி தேவை என்று நான் நம்புகிறேன், ஆனால் நீங்கள் அணி வேண்டும் என்றீர்களே, அதனால் நாங்கள் எங்கள் ஊரிலே, நீங்கள் யாரை நிறுத்துகிறீர்களோ, அவர் ஒரு அணி, அவரை எதிர்க்கின்ற நாங்கள் இன்னொரு
அணி என்று பல அணிகளாக ஆகி, எல்லா அணிகளும், பல உப நதிகள், ஒரு பெரு நதியிலே கலந்து அதை மகாநதியாக ஆக்குவதைப் போல, நீங்கள் ஆக்க வேண்டுமே தவிர, கிளைநதிகளாக ஆனால், அது வாய்க்கால்களாக மாறி விடும் என்பதை மறந்து விடாதீர்கள். அணி சேருகின்ற நேரத்தில், அந்த அணிகளுக்கு ஒத்துழைப்பு தர வேண்டும். | இனி வெற்றி பெற வாய்ப்பிலை என்று தெரிந்து விட்டால், திமுக எங்கு பிரிந்து விடுமோ என்று பயந்து விட்டார் போலும். பிஜேபியை ஆதரிக்கும் திமுக, எதிர்க்கும் திமுக என்று இரண்டாக பிரிந்து விட்டால் என்னாவது? எம்.பி ஆகலாம், மந்திரியாகலாம் என்ற ஆசை வந்தால், இதெல்லாம் சாத்தியம் தானே? |
அந்த அணிகளில் ஒன்றாக திமுக இருந்தால், அந்த திமுக வேட்பாளருக்கு அவர் எந்தத் தொகுதியிலே நின்றாலும், எந்தத் தொகுதியிலே போட்டியிட்டாலும், யாரை எதிர்த்துப் போட்டியிட்டாலும் நம்முடைய முழு பலமும், முழு சக்தியும், நம்முடைய முழுமையான ஆர்வம் அனைத்தும் அவருடைய வெற்றிக்கே தான் என்கிற அந்த நிலையில் நீங்கள் பாடுபட வேண்டும். அந்த வெற்றியை நீங்கள் குவித்து, அடுத்த பொதுக் குழுவில் உங்களுக்கெல்லாம் நானும், அன்பழகனும், ஸ்டாலினும் நன்றியை குவிக்கின்ற வாய்ப்பை தாருங்கள்.
நான் தலைவன் என்ற அந்த முறையிலே, அந்த தகுதியைக் கூட மறந்து விட்டு உங்களைக் கெஞ்சிக் கேட்கிறேன்: “இன்னும் சொல்லப் போனால், நான் தலைவன் என்ற அந்த முறையிலே, அந்த தகுதியைக் கூட மறந்து விட்டு உங்களைக் கெஞ்சிக் கேட்கிறேன். கழகத்தை, மாற்றாருக்கு விலை பேசி விடாதீர்கள்.
உங்கள் ஒற்றுமையை வீணாக்கி விடாதீர்கள். வேற்றுமையினால் ஒருவருக்கு ஒருவர் உள்ள தனிப்பட்ட விரோதங்களை எல்லாம், இந்த தமிழகத்தைக் காக்க வந்த இந்த இயக்கத்தின் மீது காட்டி, இயக்கத்தைப் பழி தீர்த்து விடாதீர்கள். கட்சியை கட்டிக் காக்க வேண்டிய பொறுப்பை ஏற்றுக் கொள்ளுங்கள். வெற்றி வரும், தோல்வி வரும், ஆனால் கட்சி நிலைக்கும். | கெஞ்சிக் கேட்டுக் கொள்ளும் அளவிற்கு முதிர்ந்த தலைவர் வந்து விட்டார் என்றால், தொண்டர்கள் வேறுவிதமாக நினைக்கிறார்கள் என்றாகிறது. ஸ்டாலின், அழகிரி என்று கோஷ்டிகள் வேறுவிதமாக முடிவெடுத்தாலும், திமுக பிரியத்தான் செய்யும். அதனால், பாவம், கெஞ்சியும் பார்க்கிறார். |
ஒரு கட்சியின் ஆற்றலை, அதனுடைய வாழ்வை, அதனுடைய வளத்தை நிர்ணயிப்பது தேர்தல் வெற்றி அல்ல. தேர்தல் என்பது வந்து போகின்ற ஒன்று.
அதே நேரத்தில் ஒரு தேர்தல், நமக்குச் சோதனை: ஆனால் அதே நேரத்தில் ஒரு தேர்தல், நமக்குச் சோதனை. என்ன சோதனை என்றால், நாம் எந்த அளவிற்கு ஒற்றுமையாக இருக்கிறோம், எந்த அளவிற்கு நாணயமாக இருக்கிறோம், எந்த அளவிற்கு ஒருவரையொருவர் காட்டிக் கொடுக்காமல் இருக்கிறோம், எந்த அளவிற்கு ஒருவரையொருவர் வீழ்த்தாமல் நல்ல எண்ணத்தோடு பழகிக் கொண்டிருக்கிறோம் என்பதை அளக்கும் கருவி. நாளைய தினம் எந்த அணியோ, எந்தக் கட்சியோடு
அணியோ, அந்த அணி உங்களால் முன்மொழியப்பட்ட, உங்களால் தீர்மானிக்கப்பட்ட, நீங்கள் வகுத்த தீர்மானங்களில் ஒன்றான திமுக.வின் தலைவரும், பொதுச் செயலாளரும் ஒரு குழுவை அமைத்து, அவர்கள் மூலமாக தேர்தல் உடன் பாட்டிற்கான சக்திகளை ஒன்று திரட்ட வேண்டுமென்று சொல்லியிருக்கிறீர்களே, அந்தச் சக்தியை நாங்கள் வீணாக்காமல் பாடுபடுவோம், பணியாற்றுவோம். | 2014 தேர்தல் திமுகவிற்கு சோதனை என்பது வேடிக்கையாக இருக்கிறது. 2014 தேர்தல், நிச்சயமாக மோடிக்கு சோதனை. ஏனெனில் வெற்றி பெறாவிட்டால், அவரது அவரது தேசிய அரசியல் முடங்கிவிடும். காங்கிரசுக்கு சோதனை, ஏனெனில், தோற்றுவிட்டால், இனி தலையெடுக்க முடியாது. ஆனால், திமுகவிற்கு ஏன் சோதனை காலம் வரவேண்டும் என்று தெரியவில்லை! |
அது எங்களுக்காக அல்ல, உங்களுக்காக, உங்களுடைய எதிர்கால சந்ததிகளின் வாழ்வுக்காக, தமிழுக்காக, தமிழர்களுக்காக, திராவிட இன உணர்வைக் கட்டிக் காப்பாற்றுவதற்காக என்பதை தெரிவித்து கொள்கிறேன்”, இவ்வாறு கருணாநிதி பேசினார்.
வேதபிரகாஷ்
© 16-12-2013
[2] தினகரன், பொதுக்குழுவில்கருணாநிதிதிட்டவட்டம் : காங்கிரஸ், பாரதியஜனதாவுடன்திமுககூட்டணிஇல்லை,மாற்றம் செய்த நேரம்:12/16/2013 1:53:01 AM.
[5] https://dravidianatheism2.wordpress.com/2013/12/16/no-electoral-alliance-with-either-bjp-or-congress-karunanidhi/
[6] http://www.dnaindia.com/india/report-dmk-won-t-ally-with-congress-or-bjp-for-2014-m-karunanidhi-1935704
[7]http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/article5463063.ece?homepage=true